உடையாத வெண்ணிலவே 6

பரபரப்பாக இருந்தது, அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு.

எப்போதும் நிசப்தமாக இருக்கும் அந்த அறை இன்று மட்டும் பேரிரைச்சலாய்.

நெற்றியில் விழுந்த கேள்வி கோடுகளோடு அங்கே வந்த மான்யா, அருகிலிருந்த நர்ஸ் ப்ரீத்தியிடம் என்னவென்று கேட்க அவரிடமோ பலத்த  பெருமூச்சு.

“என்னத்த சொல்றது. நம்ம டாக்டர் ஷ்யாமோட அம்மா இருக்காங்களே, அவங்க ஒரு பைத்தியம். யாராவது வெள்ளை ட்ரெஸ் போட்டிருந்தா தன்னை மெண்டல் ஹாஸ்பிட்டலிலே கூட்டிட்டுப் போய் சேர்க்கப் போறாங்கனு நினைச்சு சப்தம் போடுவாங்கனு கேள்விப்பட்டு இருக்கேன். அதான் எந்த டாக்டரையும் பக்கத்துல விடாம இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றாங்க ஐ.சி.யூக்குள்ளே” என்றவர் சொல்லி முடிக்கும் போது மான்யாவின் விழிகள் கவலையாய் அந்த அறையை ஏறிட்டது.

அதே நேரம் இறுகிய முகத்துடன் அந்த மருத்துவமனையின் சீஃப் டாக்டர் வெங்கட்ராம், கதவை திறந்து வெளியே வந்தார். அவர் கையில் ஊசி கிழித்ததன் விளைவாய் உதிரத்திட்டுகள்.

அதைக் கண்டு பதறிய மீரா, “சார் உங்க கையிலே ப்ளீட்டிங் அதிகமா இருக்கு” என்று சொல்லியபடியே ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள்.

கை நீட்டி மறுத்தவர், “இதை அப்புறமா பார்த்துக்கலாம். பேஷன்ட் கான்ஷியஸ்க்கு வந்துட்டாங்க.  ட்ரிப்ஸ் சேன்ஞ் பண்ணனும். பட் ஷீ இஸ் நாட் அலோவிங் மீ. முதலிலே அவங்களை கவனிங்க” என்று கூறியவர் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி ஆராய்ச்சியாய் ஒரு பார்வை வீசினார்.

அந்த பார்வை இறுதியில் மான்யாவின் மீது மட்டும் ஒரு கணம் அதிகமாய் பதிந்து மீண்டது.

“மிஸ். மான்யா, அவங்களுக்கு நீங்க போய் ட்ரிப் போடுங்க” என்று சொல்ல மான்யாவோ , “நானா?” என்றாள் தயக்கமாக.

“யெஸ். நீங்க மட்டும் தான் இங்கே இருக்கிற ஸ்டாஃப்ஸ்லே மெடிக்கல் கோட் அன்ட் யூனிஃபார்ம் போடாம இருக்கீங்க. சோ யூ கோ” என்றார் கட்டளையாக.

ஒரு நொடி தயங்கியவள் பின்பு வேகமாக அந்த ஐ.சி.யூ விற்குள் நுழைந்தாள்.

அதே நேரம் பெருமூச்சு வாங்கியபடி அங்கே ஓடி வந்து நின்றான் ஷ்யாம் சித்தார்த்.

சர்ஜரியை முடித்துவிட்டு வெளியே வந்தவனின் காதுகளில் மீனாட்சி விழித்துவிட்டார் என்ற செய்தி விழ வேகமாக ஓடி வந்தான்.

ஆனால் இவன் வருவதற்குள் இங்கே நிலைமை கைமீறிப் போய்விட்டது.

வெங்கட்ராமின் கையிலிருந்த காயத்தைப் பார்த்தவன் சங்கடத்துடன் தலை குனிந்தான்.

“சாரி டாக்டர். அம்மா வைலண்ட்டா பிஹேவ் பண்ணதுக்கு ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி” வருத்தமாக சொன்னவனை நோக்கி கோபமாய் ஒரு பார்வை வீசிவிட்டு அங்கிருந்து அகன்றார் அவர்.

சென்ற அவரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் வேகமாக தனது வெள்ளை கோட்டை கழற்றிவிட்டு ஐ.சி.யூ அறைக்குள் நுழைந்தான்.

அங்கே கண்ட காட்சியைக் கண்டு அவன் விழிகளில் வியப்பின் விரிவு.

சில நிமிடங்களுக்கு முன்பு வரை பேரலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மீனாட்சியம்மாள், இப்போதோ நிச்சலனமாக மான்யாவை வெறித்தபடி படுத்திருந்தார்.

“அம்மா நீங்க எதுவும் கவலைப்படாதீங்க. சீக்கிரமா உங்களுக்கு சரியாகிடும். ஆம்புலன்ஸ் சவுண்டு கேட்டு பயப்படாதீங்க. அவங்க உங்களை கூட்டிட்டு போக வரலை சரியா” என்று சொல்லியபடியே ட்ரிப்ஸ் போட்ட அவரது விரல்களை வருடிவிட்டாள்.

மான்யாவின் வார்த்தைகளைக் கேட்டு அவர் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
நிர்மலமாய் மான்யாவையே வெறித்தபடி இருந்தது அந்த முகம்.

அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த்த ஷ்யாம் நிம்மதி பெருமூச்சோடு தன் தாயருகே வந்தான்.

அவரது தலையை வாஞ்சையாக வருடிக் கொடுத்தவன், “நான் இங்கே தான்மா இருக்கேன். பயப்படாம கண்ணை மூடி தூங்குங்க” என்று சொல்லியபடி அவரது கண் இமைகளை மூடினான்.

அவரும் அவன் செயலுக்கு கட்டுப்பட்டது போல கண்களை இறுக மூடிக் கொள்ள மெல்ல உறக்கத்தின் பிடிக்கு ஆட்பட்டார்.

அவர் தூங்கியதை உறுதி செய்து கொண்டவன் வேகமாக எழுந்து நின்று மான்யாவையும்  வெளியே வருமாறு கண்ணசைத்தான்.

“மிஸ் மான்யா. நீங்க தான் இனி என் அம்மாவை மானிட்டர் பண்ணனும். டூ யூ கெட் தட்” என்று சொல்ல அவள் மறுத்து தலையசைத்தாள்.

“நோ ஐ யம் நாட் கெட் இட். நான் ஒரு சர்ஜன். எமெர்ஜென்சி பேஷன்ட்ஸ் அப்புறம் சர்ஜரிகாக வரவங்களுக்கு தான் நான் தேவைப்படுவேன். பட் இவங்களுக்கு  கன்டிஷன் ஸ்டேபிலா இருக்கும் போது என்னோட அவசியம் இங்கே என்ன இருக்கு? நர்ஸையே மானிட்டர் பண்ண சொல்லலாமே” என்றாள் கேள்வியாக.

“ஹலோ நீ இன்னும் சர்ஜனில்லை. வெறும் இன்டெர்ன் தான். அதை முதலிலே நியாபகம் வெச்சுக்கோ. இங்கே நான் சொல்றதை தான் நீ செய்யனும், விருப்பமிருந்தாலும் இல்லைனாலும்” என்றான் முடிவாக.

“மிஸ்டர் ஷ்யாம். நான் இங்கே இன்டெர்ன் தான் அடிமை இல்லை. நீங்க சொல்ற எல்லாத்தையும் கேள்வி கேட்காம அப்படியே என்னாலே ஏத்துக்க முடியாது”  மறுத்து பேசியவளைக் கண்டு அவன் நிதானம் தப்பியது.

“ஹே நீ சொல்றதை கேட்கவே மாட்டியா?”  அவளைப் பார்த்து கத்தியவன் மீண்டும் திட்ட வாயெடுக்கும் போது, அங்கே அவசரமாக வந்த மீரா, “சார் ஒரு எமெர்ஜென்சி கேஸ்” என்றாள்.

உடனே கழற்றி வைத்திருந்த கோர்டை எடுத்து மாட்டியவன் மான்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக எமெர்ஜென்சி ரூமிற்கு சென்றான்.

அவள் பின்னாலேயே மான்யாவும் தொடர்ந்து வந்தாள்.

வேகமாக அவளிடம் திரும்பியவன், “மிஸ் மான்யா. நான் உங்களை அங்கே மானிட்டர் பண்ண சொன்னேன்” என்றான் பல்லைக் கடித்து கொண்டே.

“அவங்க முழிக்கிற வரை நான் எமெர்ஜென்சி ரூம்லே இருக்கேன்” முடிவாக உரைத்தவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் வேகமாக அந்த பேஷன்டின் முன்பு வந்து நின்றான்.

நாற்பதுகளின் தொடக்கத்திலிருந்தார் அவர். அந்த முகத்திலோ தாங்க மாட்டாத வலியின் வீரியம்.

“பேஷன்ட் நேம் என்ன?” என்று  கேட்டபடியே,  வலியில் கதறியவரின் பல்ஸை சரிபார்த்தான்.

“குமார்” என்று பதிலளித்தாள் ப்ரீத்தி.

அவர் வயிற்றில் கை வைத்து பரிசோதித்தவன் அவருக்கு எங்கெங்கே வலி இருக்கிறது என்று கேட்டறிந்த முகத்திலோ யோசனை கோடுகள்.

“உள்ளே ப்ளீடிங் ஆகுதுனு நினைக்கிறேன். உடனே சிடி ஸ்கேன் எடுங்க.மே பி ஸ்மால் பவுல் ரிசெக்ஷன் சர்ஜரி தேவைப்படலாம்” என்றான் நர்ஸ் ப்ரீத்தியிடம்.

அதைக் கேட்டவரோ, “ஐயோ சர்ஜரியா! என்கிட்டே அதுக்கு எல்லாம் காசு இல்லையே. ப்ளீஸ் ஏதாவது மாத்திரை மருந்து கொடுத்து இந்த வலியை சரி பண்ணிடுங்களேன்” என்று கண்ணீரோடு கெஞ்சியவரைக் கண்டு மான்யாவின் விழிகளில் லேசாக கலக்கம்.

“சார், நீங்க அதை நினைச்சு வொரி பண்ணாதீங்க. ஃபர்ஸ்ட் சிடி ஸ்கேன் ரிசல்ட் வரட்டும். அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்” என்று மான்யா இங்கே பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கே எமர்ஜென்சி என்று இன்னொரு குரல் ஒலித்தது.

திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் சட்டென ரசாயான மாற்றம்.

“ராம் பிரசாத்” என்றான் அதிர்வாக.

“அப்பாவுக்கு ரெண்டு நாளா வயிறு வலி இருந்திருக்கு பட் எங்கே கிட்ட சொல்லாம பெயின் கில்லர் எடுத்து இருந்து இருக்கார். ஆனால் இப்போ வயிறு வலி தாங்காம கீழே விழுந்துட்டார். ப்ளீஸ் அவரைக் காப்பாத்துங்க” என ராம்பிரசாத் சொல்லிக் கொண்டிருக்க

“டோன்ட் வொர்ரி ராம். உங்க அப்பாவைக் காப்பாத்த வேண்டியது எங்க பொறுப்பு” என்று ஆதரவாக சொன்னவன் மீராவை அழைத்து, “இவரோட சி.டி ரிசல்ட்ஸ் உடனே வேணும். க்விக்” என்றான் அவசரமாக.

அதே நேரம் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டிருந்த குமாரின் சி.டி ரிசல்டோடு வந்த ப்ரீத்தியிடம், “யாரு இந்த ராம் பிரசாத்?” என்று குழப்பமாக கேட்டாள் மான்யா.

“இந்த ஹாஸ்பிட்டலோட ஒன் ஆஃப் தி ஸ்பான்சர்” என்று இவளிடம் சொல்லிவிட்டு ஷ்யாமிடம் சென்று ரிப்போர்ட்டை கொடுத்தாள்.

அவன் கணித்தது போலவே உள்ளே இன்டெர்னல் ப்ளீடிங் ஆகியிருப்பதாக ஆய்வு முடிவு சொன்னது.

“ஹீ நீட் லார்ஜ் பவுல் ரிசெக்ஷன் சர்ஜரி. ஆப்பரேட்டிங் ரூமை ரெடி பண்ண சொல்லி அகிலுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க” என்று இவன் உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் போதே ராம் பிரசாத்தின் சிடி ரிசல்ட்டை மீரா கொண்டு வந்தார்.

அதில் அவருக்கு அப்பென்டிசிஸ் அபாயகட்டத்தில் இருப்பது தெரிய வர புருவம் சுருக்கினான்.
ஒரே நேரத்தில் இரண்டு எமெர்ஜென்சி கேஸ். ஆனால் இருப்பதோ ஒரே ஒரு ஆப்பரேட்டிங் ரூம்.

ஏற்கெனவே இருக்கும் இன்னொரு ஆப்பரேட்டிங் ரூமில் விஷ்வக்கின் தலைமையில் சர்ஜரி நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது யாருக்கு முதலில் ஆப்பரேஷன் செய்வது என்று தீவிரமாக யோசித்தவன் ஒரு முடிவோடு விஷ்வக்கிற்கு அழைத்தான்.

சர்ஜரியில் ஆழ்ந்திருந்த விஷ்வக்கின் அலைப்பேசி ஒலிக்க நர்ஸிடம் யார் என்று கண்களால் கேட்டான்.

“ஷ்யாம் சார்” என்ற பதிலைக் கேட்டதும் “ஸ்பீக்கர்லே போடுங்க” என்று சொல்லியபடியே சர்ஜரியைத் தொடர்ந்தான்.

“விஷ்வக், உன் சர்ஜரி முடிய எவ்வளவு நேரம் ஆகும்?” என்றவனின் கேள்விக்கு

“இன்னும் அரை மணி நேரத்திலே முடிஞ்சுடும்” என்று பதில் கிடைக்க ஷ்யாமின் முகம் எதையோ கணக்கு போட்டது.

“ஓகே. அப்போ அந்த சர்ஜரி முடிஞ்சதும், லார்ஜ் பவுல் சர்ஜரிக்கு ரெடியாகு. மான்யாவை உன் அசிஸ்டென்டா வெச்சுக்கோ” என்று பேசி முடித்தவன் சீஃப் டாக்டருக்கும் அழைத்துப் பேசிவிட்டு மான்யாவை தன் அறைக்கு அழைத்தான்.

“யூ டேக் கேர் திஸ் பேஷன்ட். விஷ்வக் சர்ஜரி முடிச்சுட்டு வந்ததும் நீ அசிஸ்ட் பண்ணு” என்று அவளின் முன்பே அந்த சிடி ரிசல்ட்டை வைத்துவிட்டு,

“நான் அப்பென்டிக்ஸ் சர்ஜரி முடிச்சுட்டு வரேன்” என்று சொன்னபடியே எழுந்து நின்றவனின் மீது மான்யாவின் பார்வை வெறுப்பாய் ஊர்ந்தது.

ஏழை உயிரை காப்பாற்றாமல் பணக்கார உயிரை காப்பாற்ற இத்தனை அவசரமா இவனுக்கு?

முதலில் வந்து அனுமதிக்கப்பட்ட பேஷன்டிற்கு முக்கியத்துவம் தராமல் அடுத்து வந்த பேஷன்டிற்கு ட்ரீட்மென்ட் தர தயாரானவனை வெட்டும் பார்வைப் பார்த்தாள்.

“மிஸ்டர் ஷ்யாம். ஃபர்ஸ்ட் வந்து அட்மிட் ஆன பேஷன்ட்டை பார்க்காம ஒரு வி.ஐ.பிக்கு முக்கியத்துவம் தரது இஸ் நாட் ஃபேர். காசு இருக்கிறவனுக்கு முதல் சர்ஜரி. காசு இல்லாதவனுக்கு இரண்டாவது சர்ஜரியா?” என்றாள் கண்களில் வெறுப்பு மின்ன.

“இங்கே முதலிலே வந்தவங்களுக்கு தான் முதலிலே ட்ரீட்மெண்ட் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை. யாருக்கு முதலிலே ஆப்பரேஷன் தேவைப்படுதோ அவங்களுக்கு தான் என்னாலே முதலிலே பண்ண முடியும்” என்று சொன்னபடியே சர்ஜரிக்கான பச்சை அங்கியை எடுத்து மாட்டினான்.

“அந்த வி.ஐ.பி அப்பென்டிக்ஸ் பேஷன்ட்டை விட இவர் தான் ரொம்ப சீரியஸா இருக்கார். ஹீ நீட் அர்ஜென்ட் ஆப்பரேஷன்”

“மிஸ். மான்யா உங்களுக்கு திரும்ப திரும்ப நீங்க ஒரு இன்டெர்னு நான் நியாபகப்படுத்த வேண்டியதா இருக்கு. டோன்ட் க்ராஸ் யுவர் லிமிட்ஸ். நான் சொன்ன வேலையை பாரு போ” என்று சொன்னபடியே தன் கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவினான்.

“ஷ்யாம் உங்களோட பணலாபத்துகாக ஓரு அப்பாவி உயிரை கொன்னுடாதீங்க. அப்பென்டிக்ஸ் கம்பேர் பண்ணும் போது இன்டெர்னல் ப்ளீடிங் தான் ரிஸ்க்” என்றவளின் மீது ஷ்யாமின் பார்வை கூர்மையாய் விழுந்தது.

“எதை வெச்சு அந்த அப்பென்டிக்ஸ் பேஷன்ட் க்ரிட்டிகல் இல்லைனு சொல்ற” என்று கேட்டபடியே சர்ஜிக்கல் மாஸ்க்கை மாட்டிய நேரம் கதவைத் தட்டிக் கொண்டு மீரா வந்தாள்.

“சார் இன்டெர்னல் ப்ளீடிங் பேஷன்ட் இறந்துட்டாங்க” என்று வருத்தமாக சொல்லிவிட்டு சென்றவளது வார்த்தைக் கேட்டு இருவரும் ஒரு சேர ஸ்தம்பித்து நின்றனர்.

‘என் கிட்டே காசில்லை. ஏதாவது மாத்திரை கொடுத்து எப்படியாவது வலியை மட்டும் குறைங்க’ கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் ரீங்காரமிட்டது.

காசு!

இந்த காசிற்காக தானே இந்த ஏழையின் உயிரைப் பறித்துவிட்டு அந்த பணக்காரனின் உயிரை காப்பாற்ற கிளம்பிக் கொண்டிருக்கிறான்.

அவன் மீது அவள் வைத்திருந்த சீனியர் சர்ஜன் என்ற கொஞ்ச நஞ்சம் மரியாதையும் காற்றில் பறந்துப் போக அவனை வெறுப்பாக பார்த்தாள்.

“சீ உன் ஹாஸ்பிட்டல் லாபத்துக்காக ஒரு உயிரைக் கொன்னுட்டியே ஷ்யாம்” என்ற குரலைக் கேட்டும் அவன் அசையவில்லை. வேகமாக சர்ஜரி அறையை நோக்கி செல்ல முயன்றான்.

“நீங்க தாமதப்படுத்துனதாலே ஒரு உயிர் போச்சுன்ற குற்றவுணர்வு கொஞ்சம் கூட இல்லாம பணக்காரனை காப்பாத்த இவ்வளவு அவசரமா போறியே. நீ எல்லாம் மனுஷனே இல்லை. அரக்கன்” என்றவளைப் பார்த்து இதழ் சுழித்து சிரித்தான்.

“ஆமாம் அரக்கன் தான். இந்த அரக்கன் எந்த விளிம்புக்கும் போவான். உன் சீட்டை மறுபடியும் கிழிக்க கூட தயங்க மாட்டான்.சோ பீ கேர்ஃபுல். முட்டாள் சர்ஜன்” என்றவனின் இதழ்கள் அவளைப் பார்த்து மீண்டும் ஒரு சிரிப்பு சிரித்தது.

அந்த சிரிப்பு!

அவளை இன்னும் வெறுப்பேற்றியது, வெறியேற்றியது.

“உன்னோட பாவக்கணக்காலே தான் உன் அம்மா இப்படி இருக்காங்கனு தோணுது ஷ்யாம்” என்றவளது வார்த்தையைக் கேட்டவனின் இதழ்கள் சட்டென கடுமையுற வேகமாக திரும்பியவனின் கண்களிலோ ரௌத்திரம்.

“நீ இங்கே செய்யுற ஒவ்வொரு தப்புக்கும் அங்கே உங்கம்மா தண்டனை அனுபவிச்சுட்டு இருக்காங்க. அடுத்த தடவை இதே மாதிரி பண லாபத்துக்காக ஒரு பாவம் பண்ணினா உன் அம்மாவுக்கு தான் ஏதாவது ஆபத்தா முடியும்” என்று ஆற்றாமையில் பேசிக் கொண்டிருந்தவளின் குரல்வளையை சட்டென்று இறுக்கிப் பிடித்தான் ஷ்யாம் சித்தார்த்.

“என்னைப் பத்தியும் என் அம்மாவையும் பத்தி பேசுற உரிமை உனக்கு யாரு கொடுத்தா? அடுத்த தடவை இப்படி பேசுனா உன்னை கொன்னுப் போட்டுடுவேன்” என்று மேலும் அவள் தொண்டையை இறுக்க முதலில் ஸ்தம்பித்து நின்றவள் பின்பு வேகமாக   அவனின் தொண்டையைப் பிடித்து நெருக்க தொடங்கினாள்.

இருவரது அழுத்தமும் நொடிக்கு நொடி கூடி கொண்ட போன நேரம் அங்கே ஒரு குட்டி ஒரு நிழலுருவம் விழுந்தது.

அங்கே கண்ட காட்சியைப் பார்த்து திகைத்த அந்த குட்டி கண்கள், “அப்பா” என்றழைக்க சட்டென கைப்பிடியை தளர்த்தி வேகமாக திரும்பினான் ஷ்யாம். மான்யா வலித்த தன் தொண்டையை இருமிக் கொண்டே நிமிர்ந்துப் பார்த்தாள்.

விழிகளில் மிரட்சியுடன் எதிரே ஆறு வயது ஆரனாஷி!