உணர்வை உரசி பார்க்காதே! 09

eipngMQ3778-dd53370b
  • 🌹அத்தியாயம் 09

சிறிது நேரம் யோசித்தவன், அதனை மறுத்து, “கண்ணகி பண்ணது தப்பு. நான் பண்றது தப்பில்ல.” என்றான்.

“ஒரு பொய்ய எப்படி எல்லாம் சொல்லணும்னு யோசிச்சு ரெடி பண்ணி சொல்ல போறீங்க. அதானே?” அவளுக்கும் கோபம் சற்று அதிகமானது. 

“ஹாஹா…” என்று சிரித்து விட்டு, “உங்க அக்காக்கு எதும் நடக்ககூடாதுன்னு நெனைக்கிற பார்த்தியா, நீ அங்க இருக்க. கண்ணகி அந்த மன்னன எரிச்சிருக்கணும் இல்ல, அந்த மன்னனோட மனைவிய எரிச்சிருக்கணும். அதைவிட்டுட்டு மதுரையே எரிக்கிற அதிகாரத்த யாரு குடுத்தா, கண்ணகி என்ன கடவுளா?” அவன் கூறுவதில் நியாயம் உண்டு. மன்னன் செய்த தவறுக்கு ஊர் வாழ் மக்கள் மாண்டு போனர். மக்கள் என்ன குற்றம் செய்தனர்? தப்பு செய்யாதவர்கள் எதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்?

“ஆமா கண்ணகி கடவுள்தான்!” என்று உறுதியாய் நின்றாள்.  பத்தினி தெய்வத்தின் மீது வீண் பழி சுமத்துவதை அவளால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

“யாரு சொன்னா? மதுரைய எரிச்சதுக்கு அப்பறம்தான் கண்ணகி கடவுள் ஆனாங்க. அது வரைக்கும் கண்ணகி சாதாரண பொண்ணுதான்.” விகுஷ்கி வக்கீல் என்பதால் சிறு உரையாடலிலும் அவன் வீரியத்தை வெளிப்படுத்த மறாவாதிருந்தான். 

“அதே மாதிரி, என்னைய பழிவாங்கிட்டா மட்டும் நீங்க பாசமலர் பார்ட் டூவ் சிவாஜி ஆகிற முடியாது!” 

“உன்னைய நான் பழிவாங்குறதால நான் ஒண்ணும் சிவாஜி இல்ல. எப்பவும் என் தங்கச்சிக்கு அண்ணன் விகுஷ்கிதான்.” என்று சட்டை காலரை உயர்த்தி விட்டான். 

“பின்னாடி ரொம்ப வருத்த படுவீங்க விகுஷ்கி!” என்று  உரத்த குரலில் எச்சரித்தாள்.

அவன் முதுகை திரும்பி பார்த்துவிட்டு, “பின்னாடி பிரச்சனை வந்தா டாக்டர்க்கிட்ட போய் மருந்து போட்டுக்கிறேன். நீ அதெல்லாம் நினைச்சி ஃபீல் பண்ணாத, ச்சில்!” 

“கண்ணகி வழக்குரைய தப்பான பேசுனதுக்கு அனுபவிப்பீங்க. கூடிய சீக்கிரமே!” என்று சாபம் விடுவதை போல் கூறினான்.  

“இவ பெரிய பத்தினி சாபம் விட்டதும் பலிக்கிறதுக்கு. சரிதான் போ டீ!” என்று எகத்தாளமாய் கூறினான். அத்தோடு மகிழுந்தின் சத்தம் கேட்க, கடைக்கு சென்றவர்கள் வீடு திரும்பினர்கள். 

“விகுஷ்கி ப்ளீஸ்! அம்மா அப்பா வராங்க. இதை பத்தி எதும் பேச வேணாம்.” என்று கையெடுத்து கும்பிட்டாள்.

“உன்னைய பார்த்தா யாருக்கும் உண்மையா இருக்க மாதிரி தெரியலயே, எல்லா விஷயத்தையும் மறச்சே பழகிப்போயிருச்சுல்ல.”

“உங்க புத்தி எல்லாம் எனக்கில்ல. வக்கீல் சார்.” என மீத்யுகா திமிருடன் கூறினாள்.

மீத்யுகாவை அவளது தாய் சத்தமிட்டவாறு வீட்டின் கதவை தட்ட, கதவு தட்டும் சத்தம் கேட்ட உடனே, விகுஷ்கி அவளை அவனருகே இழுத்து, மார்புக்கு குறுக்கே அவன் கைகளால் அவளை இறுக்கி அணைத்து, அவன் முகத்தை அவள் கழுத்தில் புதைக்க ஆரம்பித்தான். 

எதிர்பாரா அவன் செய்கையில் திக்கு திணறி அவன் அணைப்பிலிருந்து விடுபட முயற்சித்தாள். அவனுடைய அணல்களோ அவன் பிடியில் சிக்க வைத்து அவள் உணர்வை உரசி பார்த்தது. அவன் அணல்கள் பரவிய அவள் மென்மை தேகம் புல்லரித்து போனது. 

கதவு தட்ட தட்ட பதிலின்றி இருக்க, லட்சுமி கதவை திறந்தார். கதவை திறந்த அடுத்த கணமே வாயை பிளந்து நிற்க, “வீட்டுக்குள்ள போகாம ஏன்மா வாய பொளந்து நிக்கிற?” என்று உமேஷ்வரி வினவினார்.

எச்சிலை விழுங்கிய லட்சுமி, “அது வந்துமா…” என்றிட, வீட்டை எட்டி பார்த்த உமேஷ்வரியோ, “ஐயோ!” என்று கதவை சாற்றினார். அவர் கண்ட காட்சி அப்படி இருந்தது.

“உனக்கு என்னவாம், நீயும் வீட்டுக்குள்ள போகாம ஐயோனு கத்துற?” என்று பரவை முனியம்மா பாட்டி வினவினார். 

“சின்னஞ்சிறுசுங்க. அவங்க கதவ திறக்கும் வரைக்கும் பொறுத்திருந்திருக்கணும். அவசரப்பட்டு கதவ திறந்திருக்கக்கூடாது.” உமேஷ்வரி, விகுஷ்கி அவளை கட்டியணைக்கும் காட்சியை பார்த்திருந்தார். 

“சரி சரி கொஞ்ச நேரம் வெளிய நிப்போம். எனக்கு வெளிய நிக்கிறது என்ன புதுசா?” என்று உமேஷ்வரியும் நமசிவாயமும் காதல் கொண்டதை நினைவூட்டினார் பாட்டி.

“போங்க அத்தை!” என்றார் உமேஷ்வரி, நமசிவாயம் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றார். 

லட்சுமிக்கோ பயம் மீத்யுகா வீட்டினர் எல்லோரும் லட்சுமியை திட்டி விடுவார்களென்று. 

உள்ளே என்னதான் நடக்கிறது? கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டதும் விகுஷ்கி அவளை நீள்சாய்வு இருக்கையில், “போடீ!” என்று தள்ளிவிட்டான். 

“சீக்கிரமா உன் அப்பன் ஆத்தாளா கிளம்ப சொல்லு, புரிஞ்சிதா?” என்று பற்களை கடித்து கொண்டே சொன்னான். 

அவன் செய்கையில் இலயித்து போயிருந்தாள். ஒரு நிமிடம் அவள் முகத்தையும் கழுத்தையும் விரல்களால் தொட்டு தொட்டுப் பார்த்தாள். நடந்ததெல்லாம் நினைக்கும் போது மீத்யுகாவை மெய் சிலிர்க்க வைத்தது. 

ஏன் இவ்வாறு செய்கிறான், சித்திரவதை என்கிற பெயரில் சில்மிஷம் அல்லவா செய்கிறான். என்பது புரியாத புதிர்தான் அவளுக்கு. தன்னை நிதானப்படுத்தி விட்டு மெதுவாக எழுந்து சென்று கதவை திறந்தாள். 

“உள்ள வாங்கம்மா.” என்று தணிந்த குரலில் கூற, தாய் அதை புரிந்து கொண்டதுபோல் எதுவும் கூறாமல் உள்ள நுழைந்தனர். 

விகுஷ்கி, மீத்யுகாவை அவன் காலடியில் விழ வைப்பதற்காக செய்யும் சில்மிஷமெல்லாம் தாய் தந்தை முன் நாடகமாடுவதாக எண்ணினாள். ஆனால் அவனுடைய திட்டம் அவளுக்கு புரியவில்லை.

சில்மிஷத்தை சின்னாபின்னமாக செய்து வேறு ஆணிடம் நெருங்க விடமால் இவனுடைய காலை சுத்த வைப்பதே அவனின் நோக்கமாக இருந்தது. 

“அம்மா சாப்பிட வாங்க” என்று அவள் அழைக்க, “தம்பி சாப்பிட்டாங்களா?” என்று உமேஷ்வரி அக்கரையுடன் வினவினார். 

“இல்லமா. அவரு அப்பறமா சாப்பிடுவாரு.” 

“இல்ல இல்ல. இப்போவே ரூமுக்கு சாப்பாட கொண்டுபோயி குடு. பக்கத்துலயே இருந்து கவனிச்சுக்கோ. தாயில்லாத பிள்ளை, தாயுக்கு தாயா, தாரத்துக்கு தாரமா இருந்து பார்த்துக்கோ.” என்றார் உமேஷ்வரி.

“சரி மா.” என்பதை தவிர மீத்யுகாவால் வேற எதுவும் கூறமுடியவில்லை. தாயென்ற ரீதியில் இருவரையும் இன்னும் இன்னும் அன்பில் திழைந்து வாழவேண்டும் என்பதே அவர் அவா.

“ஊருக்கு வாரத பத்தி தம்பிக்கிட்ட பேசுனியா?” 

“இல்ல மா.” என அவன் விகத்தனத்தையும் வியாக்கியானத்தையும் தாயிடம் கூறி எப்படி புரிய வைக்க முடியும். 

சித்திரவதை என்று அவன் நடத்திய சில்மிஷ நாடகத்திற்கு, விகுஷ்கி இப்படியான வார்த்தைகளை கூறினான் என்றால், உமேஷ்வரி அதனை ஏற்றுக்கொள்வாரா?

“நீ கேக்க மாட்ட, உங்க அப்பாவ விட்டு நானே கேக்க சொல்றேன்.” 

“வேணாம்மா. நானே கேக்குறேன்.” என்றவளின் குரல் தாழ்ந்து கொண்டே சென்றது. 

“நீ போயி தம்பிக்கு சாப்பாடு வக்கிற வழிய பாரு. நான் மத்ததெல்லாம் பார்த்துக்கிறேன்.” 

வேறு பதிலின்றி உணவை எடுத்துக்கொண்டு அவனது அறைக்குள் சென்றாள். தைரியம் நிறைந்தவளை எப்படி மாற்றிவிட்டான் இந்த விகுஷ்கி! 

உணவை மேசையில் வைத்துவிட்டு, “அப்பா வந்து உங்க கிட்ட எதாவது பேசுனாங்கன்னா கோபமா பேசாதீங்க. உங்களுக்கு எதும் வேலைன்னு சொல்லி சமாளிச்சிருங்க. ப்ளீஸ்!” என்று அடிபணிந்து நின்றாள்.

“ஐய்யோ! என்னமா நடிக்கிற? அடுத்த ஆஸ்கார் அவார்ட் கண்டிப்பா உனக்குதான்.” 

‘யாரு, நானா, நீங்களா?’

“இவ்ளோ நேரம் என்னைய எதிர்த்து எதிர்த்து திமிரா பேசிட்டு, இப்போ, உனக்கு ஒரு தேவை வந்ததும் வாங்க போங்கனு பேசுறதென்ன இதுலையும் காலைல ஏண்ணா நோண்ணா வேற, உன்னைய எல்லாம் ஏதாவது பண்ணணும் டீ, அப்போதான் என் வெறி அடங்கும்.” என்று வாயில் இரு விரல்களை வைத்து தேய்த்தவாறு, “ஏதாவது பண்ணுமே!” என்று ஆழ்ந்த சிந்தனைக்குள் சென்றது அவன் மூளை.

‘அடப்பாவி! கரடி மூஞ்சிக்கு வாத்து வாய செட் பண்ண மாதிரி இருந்துகிட்டு, இவ்ளோ நேரம் நீ போட்ட நாடகத்த நான் சகிச்சிட்டு இருந்தா, ஏதோ நான் ஸ்கிரிப்ட் எழுதி வச்சு பேசுனா மாதிரி சொல்லுறானே! உள்ள ஒரு மூஞ்ஞ வச்சிக்கிட்டு வெளிய வேற மூஞ்ஞ செட் பண்ணிட்டு சுத்துறான். இவனெல்லாம் நம்ம ரியல் கேரக்டர கேவலமா பேச வச்சிட்டோமே! யோவ் வக்கீல் வண்டு முருகா, உனக்கு இருக்குயா நாட்டு வெடி. 

எப்பவும் உன் பக்கமே காத்து வீசாது. திசை மாறி என் பக்கமும் காத்து வீசும்’ என்று  மார்புக்கு குறுக்கே கையை கட்டுவது போல் மனதிற்குள் அவளை உயர்வாய் எண்ணினாள்.  

“சாப்பாடு ஆறுது சீக்கிரம் சாப்பிடுங்க.” என்று தனிந்த குரலில் கூறினான். 

“உனக்கு இப்போ பனிஷ்மண்ட், எனக்கு சாப்பாடு ஊட்டி விடணும்.” 

“ஹா…!” 

“வாய ரொம்பத் திறக்காத கொசு போயிரும்.” 

“எ.. என்னால அதெல்லாம் முடியாது. 

வேணும்னா உங்க கால்ல விழுறேன்.” 

‘மாட்டிக்காத டீ. அப்பறம் உன்னைய வச்சு செய்வான்.’ என்றது அவளகம்.

“கால விழுறதெல்லாம் எனக்கு போரடிச்சு போச்சு. சாப்பாடு ஆறுது சீக்கிரம் ஊட்டி விடு”  ஆக இவனுடைய சில்மிஷத்திற்கு அளவற்று போனதே! 

“நான் சாப்பாடு ஊட்டி விடுவேன் அப்பறம் நீங்க என்னைய திட்டுவீங்க. அதான் யோசிக்கிறேன்.”

‘ஷபா! இவன் கிட்ட இருந்து தப்பிக்க ஒரு ஐடியா கிடச்சுட்டு.’ என்று எண்ணியவள் நிம்மதி ஆனாள்.

“ஊட்டிவிட நான்தானே சொன்னேன். அப்பறம் எப்படி நானே உன்னைய திட்டுவேன்?” 

“நான் ஊட்டிவிட்டுருவேன். பட் உங்கள நினைக்கும்போது பாவமா இருக்கு. அதான் யோசிக்கிறேன்.” 

“அதான் யோசிக்கிறே, அதான் யோசிக்கிறே, என்னத்த யோசிக்கிற, எதை யோசிக்கிற சொல்லு? என்னைய பாவமா நெனைக்கிற அளவுக்கு அவ்ளோ நல்ல மனசா உனக்கு?” 

“இல்ல நான் மார்னிங்க் ஃபிஷ் சாப்பிட்டேன். நிறைய தடவை சோப்பு போட்டு கைய கழுவிட்டேன். 

பட் அந்த வாசம் மட்டும் போகவே மாட்டீங்குது. அதே கையாள ஊட்டிவிட்டா அந்த ஸ்மெல் வரும். உங்களுக்கு ஓகேன்னா நான் ஊட்டி விடுறேன்.” 

“என்னது மீனா, உவ்வே! இன்னும் அந்த கருமமெல்லாம் திங்குறியா?” 

“ஆமாங்க. வேணுமானா என் கைய ஸ்மெல் பண்ணி பாருங்க.” 

“வேணாம் வேணாம். நானே என் கையால அள்ளி சாப்பிட்டுக்கிறேன். கருமம் உன்னைய எல்லாம் கட்டி மேய்கணும்னு என் தலையெழுத்து” 

“அப்படி சொல்லாதீங்க. அது நீங்களா தேடிக்கிட்ட விதி.” 

அவளை பார்த்து விரக்தியாய் சிரித்துவிட்டு, “அது உன் அக்கா செஞ்ச சதி!” என்று கூறிவிட்டு, உணவில் கவனம் செலுத்தினான். 

“அப்பா வந்து எதும் கேட்டா..” என்று அவள் தடுமாறினாள்.

“உன் அப்பன் நாசமாபோன நமசிவாயம் வந்து எதும் கேட்டா, உன் அக்கா பேரு  நாசமாகாத மாதிரி பேசுறேன். நீ போய் வேற வேலை இருந்தா பாரு. இந்த ரூமுலயே நிக்காத. உன் முகத்த பார்க்கவே புடிக்கல.”  இவன் வார்த்தைகளை கேட்டு உதட்டை சுளித்து கொண்டு நகர்ந்தாள். 

“சஷ்டி சீக்கிரமா வீட்டுக்கு வந்துருமா. இவ தொல்லை தாங்க முடியல.” என்று தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டான். 

அவள் கீழே இறங்குவதை பார்த்து நமசிவாயம், “என்னமா மாப்பிள்ளை சாப்பிட்டாரா?” 

“சாப்பிட்டு இருக்காருப்பா, நீங்க எதும் பேசுறதுன்னா போய் பேசுங்கப்பா.” என்று கூறிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். 

நமசிவாயம் உள்ளே சென்று கதவை மூடும் வரை காத்திருந்தாள். இருவரும் அறைக்குள் சென்று இருப்பதை பார்த்து விட்டு, அவர்கள் பேசுவதை கேட்பதற்காக அறையின் வாசலில் நின்றாள். 

“மாப்பிள்ளை, கல்யாணமாகி ஒரு வாரமாகிருச்சு. பொண்ணு வீட்டுல விருந்து வைக்கணும். அப்பறம் எங்க ஊரு கோவில்ல கண்ணகி அம்மனுக்கு திருவிழா செய்றாங்க. ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். நீங்களும் வந்து ஒரு வாரம் இருக்கீங்களா?” என்று நமசிவாயம் பண்பாய் வினவினார். 

“என்ன மாமா இப்படி கேட்டீங்க, கண்ணகி அம்மன ரொம்ப புடிக்கும். பத்தினி தெய்வமாச்சே! நாங்களும் வாரோம் மாமா உங்க கூடவே” என்று விளம்பினான் அவன். 

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த மீத்யுகா, ‘அடிங்கொய்யாலே! எங்கிட்ட வியாக்கியானம் பேசிட்டு, அப்பா கிட்ட நல்லவன் மாதிரி பேசுறியா! இருடா அப்பறமா புடிக்கிறேன் உன்னைய.’ 

அறையின் உள்ளே, “சரிப்பா நீ சாப்பிடு அப்பறமா வரேன்.” என்றிட மீத்யுகா வேகமாக கீழே இறங்கினாள். 

“சரி மாமா, அப்படியே மீத்யுகாவ ரூமூக்கு வரச் சொல்லுங்க மாமா. டிரஸ் எல்லாம் பேக் பண்ணணும்.” 

“சரிப்பா, நான் சொல்றேன். நீ சாப்பிடு.” 

நமசிவாயம், மீத்யுகாவை கண்டு விகுஷ்கி அறைக்கு அழைத்ததாக கூறினார். எதற்கு அழைத்தார் என்று கூறவில்லை. எதற்கு அழைத்தான் என்று யோசிக்கும் போதே வெறுத்து போனது மீத்யுகாவிற்கு. அவனுடன் வாழ்வதே போரட்டாம்தான். 

தந்தை அவனுடன் பேசியதற்கு ஏதும் குற்றம் கடிவானோ? அதை வேறு சமாளிக்க வேண்டுமே, என்கிற சிந்தனை மேலோங்கியது. 

மெதுவாக கதவை திறந்தாள், “ஏன், என்னைய கூப்பிட்டீங்க?” 

***

உணர்வுகள் தொடரும்…