UTHTHARAVINDRI MUTHTHAMIDU 1

download (25)-636a8b7a

உத்தரவின்றி முத்தமிடு 1

வெள்ளை நிற சட்டையும்,காக்கி நிற பேண்ட்டும் கச்சிதமாய் பொருந்திருக்க. இயல்பாகவே அவனுடன் இருக்கும் கம்பீரத்துடன், தன் மனம் கவர்ந்த தன்னவளை பெண் பார்க்க போகிறோம் என்கின்ற பூரிப்பில் அழகு கூடிருக்க ஆணழகனாய் திகழ்ந்தான் ஆரி அர்ஜுனன் .
வாசலிலேயே அவர்களை எதிர் கொண்டு வரவேற்றது அவனது வருங்கால மாமியார் சாவித்ரி தான் . பிறகு அனைவரும் உள்ளே செல்ல யாத்ராவின் தந்தை வைகுண்டராஜன்,

“வாங்க மாப்பிள்ளை, வாங்க சம்பந்தி” என்று வரவேற்று அமர வைத்தார் .

இது கீழறையில் இருந்த யாத்ராவுக்கு தெளிவாகக் கேட்டது,

‘அவ்வளவு சொல்லியும் வந்துட்டான்னா! நான் பிடிக்கலைன்னு சொல்லியும் வந்திருக்கான் ரவுடி பையன் ரவுடி பையன்’ என கருவிக் கொண்டாலும், பெண்ணவளுக்கு ஆணவனை என்னும் பொழுது அவனது நினைவுகள் அவளை எவ்வளவு அச்சுறுத்தினாலும், அவளது மனதின் ஓரம் அவளையும் அறியாமல் அவன் மீது விளங்க முடியாத ஒருவித உணர்வு சில நொடி வந்து போகும் மின்னலை போல நொடி பொழுது வந்து மின்னி மறைந்தது.

அறிமுகப்படலம், பேச்சு வார்த்தையெல்லாம் ஒருவாறாக முடிய, அனைவரும் சபைக்கு பெண்ணை அழைத்தனர்.

யாத்ராவின் வருகைக்காக மிக ஆர்வமாக காத்திருந்த அர்ஜுனன், அறைக்கதவை திறந்துகொண்டு தேவதை போல நடந்துவந்த தன்னவளை கண்டதும் அவனது இதயம் வேகமாக துடிக்க விழிகளில் காதல் வழிந்தோட பார்வையாலே அவளை பருகினான்.

நீல நிறத்தில் அங்கம் எங்கும் தங்க நகைகள் சூடி அழகு பதுமையாக வந்தவளை கண்டும் அந்த காவலனின் இரும்பு இதயம் துடிக்காமல் இருக்குமா என்ன?? துடித்தது! காவலனும் காதலன் ஆனான் ! இரும்பிலும் மலர் மலர்ந்தது!

பாவையவளின் பிறை நுதலில் அழகாய் துயில் கொண்டிருந்த முடிக்கற்றை, சுண்டி இழுக்கும் காந்த விழிகள், விழிகளை சிங்காரித்த மயிலின் விரிந்த தோகைகளை போல அகன்று நீண்டிருந்த இமைகள், நுனியில் சிவந்திருந்த அளவான நாசி, ஆரி அர்ஜுனனின் இரும்பு இதயத்தை திருடிய ஒற்றைக்கல் பதித்த வெள்ளை நிற மூக்குத்தி ஆணவனின் திமிரை அடக்கும் அமிர்தம் சிந்தும் செவ்விதழ்கள். அவனவளின் அழகு மேனியுடன் ஒட்டி உறவாடிய பட்டுப் புடவை, என அழகுச் சிலையென காட்சியளித்தவளை உச்சி முதல் பாதம் வரை அர்ஜுனனின் விழிகள் தனக்கே தனக்கான உரிமையுடன் தழுவிச் சென்றன.

அவள் அவனை மிரட்சியுடன் பார்க்க, அவள் மேனி முழுவதும் கண்களாலேயே பயணித்த அர்ஜுனன் அவள் அவனை பார்த்து முறைக்கவும் யாரும் பார்ப்பதற்குள் கண் சிமிட்ட, மிரண்டு போனவள் சட்டென்று தலை குனித்துக்கொண்டாள் .

“இப்போ புரியுது அர்ஜுனா, காதல் கல்யாணமே வேண்டாம்ன்னு இருந்த நீ, எப்படி யாத்ரா மேல இவ்வளவு லவ்வா இருக்கன்னு, தேவதைய யாருக்கு தான் புடிக்காது, உண்மையாவே ரொம்ப அழகா இருக்காங்க டா” என அர்ஜுனனின் நண்பன் மாறனின் மனைவியும் அர்ஜுனனின் கல்லூரி கால தோழியுமான  பாரதி கூறி முடிக்கவும் ,

“நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணை தான் பார்த்திருக்க அர்ஜுனா சிலை மாதிரி அழகா இருக்கா டா ” என ஆரியின் தாய் ஜானகியும் தன் வருங்கால மருமகளின் அழகை ஆராதித்தார் .

அர்ஜுனன் மற்றும் அவனது தந்தை வைத்தீஸ்வரன் யாத்ராவின் தந்தை வைகுண்டராஜனுடன் நட்பாக பேசிக்கொண்டிருக்க , ஜானகி தன் வருங்கால மருமகளை தன் அருகில் அழைத்து அமரவைத்து அன்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஆரியின் நண்பன் மாறன் அனைவரின் சம்பாஷணைக்கிடையில் சிறு செருமலுடன்,

“பெரியவங்க நீங்களே பேசிட்டு இருந்தா எப்படி? மாப்பிளைக்கு பொண்ணு கூட ஏதோ கொஞ்சம் தனியா பேசணுமாம். வீட்ல இருந்து கிளம்பும் பொழுதே சொல்லிட்டான்” என கூறி ஆரியை பார்த்து கண்ணடிக்க,

இதைக் கேட்டு ஆரி அர்ஜுனன் ‘நான் எப்போ டா சொன்னேன்’ என்பது போல நண்பனை பார்க்க அவனை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தான் மாறன் .

இதுக்காக தான் காத்திருந்த யாத்ராவோ,

‘ஹப்பா நல்ல வேலை இவனே சொல்லிட்டான். இப்போ தான் இவன் உருப்படியா ஒரு காரியம் பண்ணியிருக்கான் இதுக்காக தான் நான் காத்துகிட்டு இருந்தேன். அவன் வாயாலையே என்னை வேண்டாம்ன்னு சொல்ல வைக்கிறேன், எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி காட்டுறேன்’ என தனக்குள் எண்ணியவள், நமட்டு சிரிப்புடன் எழுந்து மாடியில் இருக்கும் தன் அறைக்குள் சென்றாள்.

ஆரியோ “நண்பேன்டா” என யாருமறியாமல் தன் நண்பனை புகழ்ந்து விட்டு அங்கிருந்து எழுந்து சென்றான் .

பெண்ணவளின் மென்னடையில் சற்று விலகிய சேலை மறைந்திருந்த அவளது பொன்னிடையை தெளிவாய் காட்டி, பின்னிருந்து வந்தவனின் உணர்வகளை தன் பக்கம் இழுக்க தன்னை மறந்து தன்னவளின் அழகை ரசித்த அர்ஜுனன். யாத்ரா அறையின் கதவை திறப்பதற்குள் பின்னால் இருந்து அவளது பொன்னிடையில் தன் ஐவிரல் பதித்தபடி தன் மார்போடு சாய்த்து இறுக்கமாக அணைத்தவன் அதிர்ச்சியில் உறைந்திருந்தவளின் காதில் தன் மூச்சு காற்று தீண்ட,

“அழகி டி நீ” என கிசுகிசுத்தபடி அவள் மென் இடையில் விலகி இருந்த சேலையை சரி செய்து அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தினான். அவளோ அவனது இந்த திடீர் செய்கையில் சர்வமும் அடங்கிப்போக முகத்தில் புது ரெத்தம் பாய பேச்சு மூச்சின்றி நிற்க அவனோ,

“நான் அழகா இருக்கேன்னு எனக்கு தெரியும் கண்ணம்மா, உனக்கு வேணும்ன்னா நான் இங்கையே இப்படியே நிக்கிறேன் நீ என்னை பார்த்துட்டே இரு, எனக்கு ஓகே தான் அம்முக்குட்டி” என்று கேலிச்சிரிப்புடன் தன் மார்புக்கு குறுக்கே கைகட்டியபடி நிற்க.

அவனது பேச்சில் முதலில் புரியாமல் விழித்தவள், பின்பு அவனது கேலி உணர்ந்து அவனை தீப்பார்வை பார்த்து,

“அம்முக்குட்டி ஆமை குட்டின்னு லூசு பையன் லூசு பையன்” என்று முணுமுணுத்தவள், கதவை திருந்து உள்ளே செல்ல ஆரியோ அவளது தீப்பார்வையை தனது சிறு புன்னகையால் தட்டிவிட்டுவிட்டு தன்னவளின் அழகை தன் விழிகளினாலே அள்ளிப் அள்ளிப்பருகினான், ஆனால் அவனது காந்த விழிகளில் கொட்டிக்கிடந்த காதலில் தவறாய் கூட சிறு கபடம் தெரியவில்லை .

அர்ஜுனன் உள்ளே நுழைந்ததும் அவனை முறைத்தபடி யாத்ரா கதவை சாற்றி தாழிட்டதில் குழப்பமடைந்த அர்ஜுனன்,

‘கதவை லாக் பண்ணிட்டு இருக்கா இவளுக்கு என்னை பார்த்தாலே புடிக்காதுன்னு புலம்புவா இப்போ ஏன் லாக் எல்லாம் பண்ணிட்டு இருக்கா, இவ பார்வையே சரியில்லையே’ என்று தன் மனதிற்குள் எண்ணியவன், யாத்ராவை புருவம் சுருக்கி பார்க்க யாத்ராவோ,

“டார்லிங் மறைஞ்சி இருந்தது போதும் வெளிய வாங்க” என ஆரியை பார்த்து ஏளனமாக நகைத்தபடி கூறினாள்.

அப்பொழுது அறைக்கு உள்ளே இருந்து ஒருவன் தயங்கியபடி வெளியே வர, வேகமாக சென்று அவனது கையை பிடித்து தன் பக்கம் இழுத்தவள்,

“வாங்க கார்த்திக் வாங்க, ஏன் வெட்கப்படுறீங்க ?” என்று வலுக்கட்டாயமாக அந்த புதியவன் கார்த்திக்குடன் கரம்கோர்த்து ,

” நான் அவ்வளவு சொல்லியும் நீங்க நம்பலை பாருங்க அதான் என் காதலனை நான் கூட்டிட்டு வந்துட்டேன், இப்போவது நம்புறீங்களா, தயவு செஞ்சி கல்யாணத்தை நிப்பாட்டுங்க ஆரி. எனக்கு உங்க மேல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை” என்றாள் திடமாக. ஆனால் இதற்கெல்லாம் கொஞ்சமும் அசராத அர்ஜுனனோ,

“ஓ இது தான் உன் காதலனா” என நாடியை நீவியபடி அவர்களை பார்க்க, அவனது பார்வை கார்த்திக்குடன் கை கோர்த்தபடி நின்ற யாத்ரா மேல் படிந்து மீண்டும் கார்த்திக்கிடம் மீண்டது.

“ஆமா” என யாத்ராவும் விடாமல் அழுத்தமாக கூறினாள்.

“ஏன் உன் காதலன் சார் பேச மாட்டாங்களா”என்ற அர்ஜுனனின் பார்வை கார்த்திகை துளைத்தெடுக்க, கார்த்திக்கின் கால்கள் தானாக நடுங்கவும், கார்த்திக்கை முறைத்தவள் ஆரியிடம்,

” இப்படி நீங்க முறைச்சு முறைச்சு பார்த்தா யார் தான் உங்க கிட்ட பேசுவா ” என்றாள் வெடுக்கென்று.
அப்பொழுது அர்ஜுனனோ,

“ஓ அப்போ பாசமா பேசிட்டா போச்சு ” என்றவன் தன் முதுகில் சொருகி இருந்த பிஸ்டலை எடுத்தது தான் தாமதம் அதற்குள் யாத்ராவின் தற்காலிக காதலன் சட்டென்று கீழே விழுந்து ஆரியின் கால்களை பற்றி,

“சார் எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் மோஹனாவை தான் லவ் பண்றேன், நான் யாத்ராவோட ஃப்ரண்ட் மட்டும் தான். அன்னைக்கு எங்க கூட இன்னொரு பொண்ணு இருந்தாளே மோஹனா அவ கூட தான் கல்யாணம், மோஹனா கூட இப்போ உள்ள தான் ஒளிஞ்சிட்டு இருக்கா” என்றதும் யாத்ரா கோபத்தில் பல்லை கடிக்க உள்ளே இருந்து யாத்ராவின் தோழி கார்த்திக்கை எண்ணி தலையில் அடித்தபடி வெளியே வர, ஆரியின் பார்வை பெண்கள் இருவரையும் பார்த்துவிட்டு கீழே தன் கால்களை பிடித்து கொண்டு கிடந்த கார்த்திக்கிடம் மீளவும் பதறியன்,

“சார் சத்தியமா தான் சொல்றேன். யாத்ரா தான் நடிக்க கூப்பிட்டா உதவி பண்ணலாம்ன்னு வந்தேன். ஆனா நீங்க தான் மாப்பிள்ளைன்னு சொல்லவே இல்லை மத்தபடி நான் அவளை லவ் எல்லாம் பண்ணலை என்னை எதுவும் பண்ணிராதீங்க” என அனைத்தையும் உளறி கொட்ட, இவர்களின் சிறுபிள்ளை தனமான விளையாட்டையும் பயத்தில் அவர்கள் முகம் வியர்க்க நின்றிருந்த விதத்தையும் பார்த்த அர்ஜுனன் உள்ளுக்குள் சிரித்து கொண்டு வெளியே கோபமாக முகத்தை வைத்து கொண்டு,

“என் மூடு மாறுவதற்குள்ள கிளம்புடா” என போலியாக மிரட்ட, கார்த்திக் மோஹனாவை அழைத்து கொண்டு தப்பித்தால் போதும் வெளியேற, மோஹனாவோ போக வேண்டாம் என பாவமாக கண்களாலே செய்கை செய்யும் தன் தோழியை பார்த்தபடி வேறு வழியின்றி கீழே சென்றாள். யாத்ரா தான் அர்ஜுனனிடம் சிக்கிக்கொண்டதில் தன் திட்டம் எல்லாம் வீணாய் போன கவலையுடன் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடி நிற்க,

“அவன் உன் லவ்வரா” யாத்ராவின் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி கேட்டான் அர்ஜுனன் .

“ஆமா” அவளோ வேண்டுமென்றே தன் பற்களை கடித்தபடி கூறினாள்.

“ஓ அப்படியா” என தன் புருவத்தை உயர்த்தியவன், அவளை நோக்கி அடியெடுத்து வந்தபடி கேட்டான் .

“அப்படித்தான் எனக்கு உங்களை பிடிக்கல, இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம், உங்களை வெறுக்கிறேன், உங்க வேலைய வெறுக்குறேன், மொத்தத்துல உங்களை சுத்தமா நான் வெறுக்கிறேன்” என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி, தன் மூக்கு நுனி சிவக்க, படபடவென கோபமாக யாத்ரா பொரிந்து தள்ள, ஆரியோ தன் கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு சிறு புன்னகையுடன் அவளையே பார்த்து கொண்டிருக்க, அவனது சிரித்த முகம் கண்டு எரிச்சலடைந்தவள்,

“இவ்வளவு சொல்றேன் சிரிக்கிறீங்க போலீஸ் என்கிற திமிர், இப்போ சொல்றேன் நீங்க எனக்கு வேண்டாம் ஆரி, மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க நான் செத்து” என அவள் சொல்லி முடிப்பதற்குள், அவளை நோக்கி தன் கரத்தை ஓங்கியவன்,

“அடிங் நானும் பார்த்துட்டே இருக்கேன் வாய் நீளுது பிச்சிருவேன் பிச்சி, என்ன வார்த்தை பேசுற நீ” என ஆரி சற்று கோபமாக சீற, பதிலுக்கு அவனை முறைத்தவள், வேண்டுமென்றே மீண்டும்,

“ஆமா நீங்க கோபப்பட்டாலும் நான் அப்படி தான் சொல்லுவேன், என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க நான் செ..” என இந்த முறை அவள் தொடங்குவதற்குள், நொடி பொழுதில் நூலளவு இடைவெளி கூட இல்லாது யாத்ராவை நெருங்கி அவளின் துடிக்கின்ற இதழை தன் இதழுகுள் அடக்கிக்கொள்ள, அவள் சொல்ல வந்த வார்த்தைகள் அத்தனையும் அவன் இதழுக்குள் அடங்கி போக. முதலில் சில நொடிகள் துடித்து அவனிடம் இருந்து விடுபட எண்ணியவள், நொடிகள் போக போக அவனிடம் தானும் அடங்கிப்போனாள்.

வேகமாய் முரட்டுத்தனமாய் ஒருவித கோபத்துடன் ஆரம்பித்த முத்தம், நொடிகள் நகர நகர நிதானமாய் மென்மையாய் தொடர்ந்தது , அவளுக்கு மூச்சுக்காற்றுக்கான அவசியம் ஏற்படவே அவளிடம் இருந்து விலகியவன்,

“என்கிட்ட பேசும் பொழுது கவனமா பேசு” என அர்ஜுனன் அவளை தன் ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை விடுக்க, அவளோ,

“ஐ ஹேட் யு” என அவன் நெஞ்சை பிடித்து தள்ளியபடி கண்கள் கலங்க கூற, அவளது நிறைந்த விழிகளை கண்டு மனம் இளகியவன் மெதுவாக அவளை நெருங்கி, மென்மையாக அவளது கேசத்தை வருட அவளோ மீண்டும் அவனது நெஞ்சில் தன் கரம் வைத்து தள்ள பார்க்க அசையாமல் நின்றவன், தன் மார்பை தீண்டிய அவளது மென்கரங்களை பிடித்து அதில் அழுந்த முத்தம் ஒன்றை பதித்து அவள் முறைத்து பார்க்க அவளது உச்சந்தலையிலும் இதழ் பதிக்கவும், யாத்ரா கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, அவன் கொடுத்த இதழ் தீண்டல் அவளுக்கும் அந்த நேரம் தேவையாக தான் இருந்தது போல அவனது சபரிசத்தை உணர்ந்ததும் அவள் அப்படியே அமைதியாகிவிட்டாள்.

ஆரி வாஞ்சையுடன் அவளது கேசம் கோதி உச்சியில் இதழ் பதித்த நொடி யாத்ராவால் ஆரியிடம் நிராகரிப்பை காட்ட முடியவில்லை அதே நேரம் அவன் தொடுகைக்கு உருகி குலையும் தன் மனதை எண்ணி பெண்ணவள் மிகுந்த ஆத்திரம் கொண்டாள். யாத்ராவின் கடந்த கால காயங்களுக்கு அவனது ஸ்பரிசமும் நெருக்கமும் இதம் அளித்ததை அவள் வேண்டுமானால் உணராமல் இருக்கலாம். ஆனால் அவளது காயத்தை போக்கும் மருந்தும் அவனே, அது போல அவனது கோபத்தீயை தனிக்கும் தென்றலும் அவளே.

“என்ன பண்றீங்க ஆரி. எனக்கு உங்களை புடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்கேன் ” என அவனது ஸ்பரிசத்திற்கு உருகும் தன்னை எண்ணி கோபம் கொண்டவள், அவனிடம் இருந்து தள்ளி சென்று ஜன்னல் கம்பிகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நின்றுகொள்ள, தன் கண்களை அழுத்தமாக மூடி திறந்த அர்ஜுனன்,

“சரி யாத்ரா உனக்கு பிடிக்கலனா இந்த கல்யாணத்தை நீயே நிறுத்திடு”என யாத்ராவின் முகத்தை ஆராய்ந்தபடி கூறினான். அவளுக்கோ

ஆத்திரமாய் வந்தது,
“என்ன காமெடி பண்றீங்களா???நான் சொன்னா என் வீட்டுல கேட்க மாட்டேங்குறாங்கன்னுதானே உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன்.” என கோபமூச்சுடன் கூறவும்,

அர்ஜுனனின் கண்கள் பளிச்சிட்டது, ‘ஓகோ அதான் விஷயமா, இனி இருக்குடி உனக்கு’ என உற்சாகமாக நினைத்துக் கொண்டவன்,

“ஓ அப்ப என் வாயலயே இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லணும்ன்னு சொல்றியா” என கேட்டகவும் அவனை நெருங்கியவள்,

“ஆமா ப்ளீஸ் ஆரி”கெஞ்சினாள்.

” ம்ம்ம் உனக்கு வேண்டாம்ன்னா சரி கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்” என்றவன், யாத்ராவின் கரம் பிடித்து தன் பக்கம் இழுத்து அவளது முகத்தில் தன் விரல்களால் கோலமிட .

“என்ன பண்றீங்க ஆரி” அவனது செய்கையில் இதயம் படபடக்க அவளது குரல் உள்ளே சென்றது.

“நீ கல்யாணம் தானே வேண்டாம்ன்னு சொன்ன” தன் பணியை தொடர்ந்தபடி வம்பாக பேசினான் .

“எதுவும் வேண்டாம் போதுமா”காட்டமாக கூறினாள்.

“ம்ம்ம்ஹூம் போதா…தே ” என ராகம் போட்டவன்,

“நான் கொடுத்ததை திருப்பி குடு, நீ சொன்னதை பத்தி நான்  யோசிக்கிறேன்” என்று ஆரி விஷமமாய் சிரிக்க ,

” ———————— ” மௌனமாய் முறைத்தாள் .

” உனக்கு ஆரம்பிக்க முடியலைன்னா சொல்லு நான் ஸ்டார்ட் பண்றேன் ” என்று அர்ஜுனன் அவளை நெருங்க வேகமாக அவனிடம் இருந்து விலகியவள்,

“ப்ளீஸ் கல்யாணத்தை நிப்பாட்டுங்க” உறுதியாக கூறினாள் .

“ம்ம்ம்ம் அது முடியாதே டார்லிங் எனக்கு தான் உன்னை ரொம்ப புடிச்சிருக்கே அவ்வளவு லவ் பண்றேன் உனக்கு தெரியலையா? உன்னை பார்த்ததுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுது அப்படியிருக்கும்போது நான் ஏன் இப்படி சொல்லப் போறேன். உனக்கு வேணாம்ன்னா நீ போய் ‘நோ’ சொல்லு, இப்போவே போய் சொல்லு, வேணும்ன்னா நான் அன்றைக்கு உன்னை கிஸ் பண்ணினேனே அதை சொல்லி நிப்பாட்டு இல்லாட்டி இப்போ குடுத்தேனே அதுவும் லிப் டூ லிப் கிஸ். இதை சொல்லி நிப்பாட்டு ” என வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்றியபடி உல்லாசமாகக் கூறிக் கொண்டே அவளது கட்டிலில் சென்று ஹாயாக அமர்ந்து கொள்ள இவளுக்கு தான் ஆத்திரமாக வந்தது.

“நான் உங்களை புடிக்கலைன்னு சொல்றேன் ஆரி அப்படி என்னை என்கிட்ட இருக்குன்னு என் மேல பைத்தியமா சுத்துறீங்க”

“அப்படி கேளு கண்ணம்மா” என்றவன் யாத்ராவின் கரம் பிடித்து இழுக்க அவன் இழுத்த வேகத்தில் அவளோ எதிர் பாராத விதமாக அவன் மீதே சாய, தன் மார்பில் சாய்ந்தவளை தன் நெஞ்சோடு அழுத்தமாக பிடித்து தன்னுடன் இன்னும் இறுக்கமாக அணைத்தபடி கட்டிலில் சரிந்தவன்,

“எல்லாரும் அர்ஜுனன்னு சொல்லும் பொழுது இந்த உதடு மட்டும் ஆரின்னு உரிமையா சொல்லுதே, இந்த உதட்டுக்கும், அது சொல்ற ஆரி என்கிற சொல்லுக்கும், நான் இந்த அர்ஜுனன் உன் ஆரி என்னைக்கும் அடிமை ” என அவளது மென் இதழை தன் பார்வையால் வருடியபடி கூறியவன் அவளது சிவந்த மூக்கு நுனியை தட்டிவிட்டபடி மென் சிரிப்புடன் மீண்டும் ஒரு முத்தப்போருக்கு திட்டம் தீட்ட, சுதாரித்து கொண்டவள் சற்றெட்ன்று அவனிடம் இருந்து விலக , அவனது இதழ்கள் தவறுதலாக அவளது கழுத்து வளைவில் உரசியதில் அவள் தேகம் சில்லிட்டு போனது.

தன் நெஞ்சோடு படர்ந்திருந்தவளை அப்படியே கீழே சரித்தவன் அவளது இருக்கரங்களையும் அவளது தலைக்குமேல் தூக்கி சிறைவைத்து, தன் வெப்பமான மூச்சுக் காற்று தன்னவள் மேல் படும் நெருக்கத்தில் இருந்தான் .

இவ்வளவு நேரமும் மனதில் ஒருவித பயம் இருந்தாலும் தைரியமாக அவனை எதிர் கொண்டவள், அவனது இந்த அதிரடியான செய்கையில் இதயம் தாறுமாறாய் எகிறி துடிக்க, அவனது இதழ் அளித்த ஸ்பரிசத்தில் ஒரு வித காதல் போதை தாக்க, மெல்ல கிரங்கியவள் தன் கண்களை மூடினாள் .

தீராத காதல் தீயாக பாய அர்ஜுனனின் உணர்வுகள் தனலாய் கொதித்தது, தனக்குள் எரியும் தாபத்தீயை முத்தத்தால் அணைத்திட துணிந்தவனின் இதழ்கள் முதலில் மையம் கொண்டது அவளது கழுத்து வளைவில் தான், உன் காதலை இதுவரை ஏற்காத பெண்ணிடம் உனது இது போன்ற நெருக்கமான அணுகுமுறை மிகவும் தவறு என அவனது மூளை அவன் மீது குற்றம் சுமத்தினாலும் அவள் மீது அவள் ஒருவள் மீது மட்டும் அளவில்லாத காதலில் சிறைப்பட்டவன் என்ன செய்வான்? அவள் மீது அவன் கொண்ட காதல் அவனது கட்டுபாடுகளை உடைத்தெறிய செய்ய, தன் மொத்த உணர்வுகளையும் சேர்த்து வைத்து அழுத்தமான முத்தத்தை அவளது நீண்ட கழுத்தில் பதித்தான்.

‘ஆரி ப்ளீஸ்’ கெஞ்சினாள். அவளுக்கு மட்டும் கேட்க்கும் குரலில்.

ஒற்றை முத்தத்தில் ஆரம்பித்த கணக்கு நெற்றி கண்கள் என்று கூடிக்கொண்டே போக , முத்தமிட்டு தன் தாபத்தீயை அணைத்திட எண்ணியதால் தனக்குள் நிகழ்ந்த அதிர்வை அவனே அறிவான்.

இறுதியாக அவன் விழிகள் அவளது இதழை நோக்க, முதல் நாள் போலவே இன்றும் அச்சத்தில் அதரங்கள் துடிக்க இருந்தவளை கண்டு, அர்ஜுனனின் மனம் தளம் போட, அவளது இதழை அணைத்துவிடவே துணிந்தவன் தேகம் நடுங்க அவள் கிடந்ததை பார்த்து பின்பு என்ன நினைத்தானோ தன்னை கட்டுப்படுத்தியவன். அவளது தவிப்பை ரசித்தவாறே அவள் விழி திறக்கும் நிமிடத்திற்காகக் காத்திருந்தான்.

சில நிமிடங்கள் பார்த்தவள், தனக்கு எதுவும் நேராதது உணர்ந்து ஆச்சரியமாக விழி விரித்தவாறே ஆரியை பார்க்க,
விழியும் இதழும் சேர்ந்து சிரிக்க தன் கண்களில் நிரம்பிவழியும் காதலுடன் கண்களாலேயே தன்னைச் கைது செய்துவிடுபவன் போல தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களில் தெரிந்த எல்லையில்லாத காதலில் ஒரு நொடி சலனப்பட்டு போனாள் யாத்ரா.

அப்பொழுது தன் பார்வையை விட்டு அகலாது இருந்த தன்னவளின் விழிகளுடன் தன் விழி கலந்து உறவாடியவாறே,

“என்ன? மறுபடியும் லிப் கிஸ் அடிச்சிருவேன்னு பயந்துட்டியா, அந்த பயம் எப்பவும் இருக்கணும்.” என சீண்ட, தன்னை மீட்டெடுத்தவள் அவனை கோபப் பார்வை பார்த்து கட்டிலில் இருந்து எழுந்து நிற்க, அவளை பார்த்து கண்ணடித்து சிரித்த ஆரி,

“அப்புறம் கண்ணம்மா மாமாவையே நினைச்சுகிட்டு இருக்காம சீக்கிரமா கீழ வா, இல்லைனா எல்லாரும் மேல வந்திற போறாங்க” என்றவன் கோபத்தில் சிவந்து துடித்த அவளது மூக்கின் நுனியை தட்டிவிட்டபடி வெளியேற,

யாத்ராவோ அவன் வெளியேறியதும் கதவை வேகமாக அடைத்து தாழிட்டவள் அப்படியே கதவில் சாய்ந்து கண்களை மூடி கொண்டாள், பெண்ணவளின் மனதிற்குள் ஆயிரம் உணர்ச்சிகள் பூகம்பமாக உருவெடுத்து அவளை புரட்டி போட்டுக்கொண்டிருக்க, அதே நேரம் யாத்ராவின் தந்தை வைகுண்டராஜனோ தன் மனைவி சாவித்ரியிடம் ,

“ஏய் நாம ஒன்னும் அவசரப்படலையே, எனக்கென்னவோ யாத்ராவுக்கு விருப்பம் இல்லாம அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண வேண்டாம்ன்னு தோணுது” என்று சொல்ல தன் கணவனின் கவலையை உணர்ந்த சாவித்ரி,

“நீங்க ஒண்ணும் கவலை படாதீங்க பா, அர்ஜுனன் தம்பி ரொம்ப நல்ல பையனா தெரியுறாரு அவங்க வீடு ஆளுங்களும் நல்லவங்களா தெரியுறாங்க மாப்பிள்ளை கண்டிப்பா நம்ம பெண்ணுடைய மனசைப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி பொறுமையா நடந்துக்குவாரு. எனக்கென்னமோ அவரை தவிர வேற யாராலயும் நம்ம யாத்ராவோட மனசை மாத்தி சந்தோஷமா வச்சுக்க முடியும்ன்னு தோணல. எனக்கு இப்ப இருக்குற பயம்லாம், எங்க இப்ப தனியா பேச போயிருக்கற யாத்ரா மாப்பிள்ளைக்கிட்ட எதுவும் எக்குத்தப்பா பேசிட கூடாதேன்னுதான்.” என சாவித்ரி சிறு பயத்துடன் கூறவும் ,அர்ஜுனன் மாடியிலிருந்து இறங்கி வரவும் சரியாக இருக்க, இருவரும் அர்ஜுனனை பார்க்க, அவன் முகத்தில் இருந்த தெளிவு சாவித்ரிக்கும் வைகுண்டராஜனுக்கும் நிம்மதியை கொடுத்தது .

தொடரும்