“அது தெரியுதுங்க அதுல என்ன எழுதியிருக்கு னு கேட்டேன்…?”,
“வார்த்தை, தமிழ் னு மொக்கை யா எதுனா சொன்னீங்க னா கடுப்பாயிருவேன் சூர்யா”,
நாம நினச்சதையே சொல்லிட்டாளே, இப்ப என்னத்த சொல்லி சமாளிக்க.
பேர் வேற சொல்றா ரொம்ப கோபமா இருக்கா போல….என திருதிருவென விழித்தான்.
“கேள்விக்கு பதில்”,
“பதில்…. ஆன்…. ஆமால….
இப்போவாச்சம் நியாபக படுத்தினியே நேத்தே ஒரு க்வெஸ்டின் கு பதில் ரிஃபர் பண்ணனும் னு நியாபகப்படுத்த சொன்னேன். சரி விடு நீ மறந்துட்ட நான் உன்ன மன்னிச்சுட்டேன்.
நான் போய் இப்போவாது பார்க்குறேன்.”, என நகர பார்க்க,
அவன் வழியை மறித்தவள்,
“பேச்ச மாத்தி எஸ்கேப் ஆகாதீங்க.”,
“மகா…..”, என்றான் சலித்தவாறு,
அவன் அப்படி செய்ததும் அவள் முகம் வாடியது.
“எனக்கு பதில் சொல்ல உங்களுக்கு இவ்வளவு சலிப்பா இருக்காங்க….?
நான் உங்கள ரொம்ப டார்ச்சர் பண்றனா….?
இத பார்த்து விளக்கம் கேட்க எனக்கு உரிமை இல்லயா….?”
என அடுத்த அட்டெக் செய்தாள்.
இவ ஒரு முடிவா தான் இருக்கா போல. விளக்கம் கொடுக்காம
நகர மாட்ட என முடிவு செய்தவன்
விளையாட்டை விடுத்து,
“அத பார்த்து நீயே கண்டுபிடிச்சுடுப்பியே.
ஸோ கேக்க வந்தத நேரா கேளு.”,
என்றான் கோபமாக ,
“இப்போ எதுக்கு
கோபப் படுறீங்க?
இத நான் பார்த்துட்டேன் னா?
இல்ல பார்த்துட்டு கேள்வி கேட்கறேன் னா….?”,
என அவளும் காட்டமாக வினவினாள்.
“பைத்தியம் மாதிரி பேசாத மகா. நான் அப்படி நினைச்சு தான் கோபப்பட்டேனா….?
அத பார்த்துட்டு நான் என்னவோ தப்பு செஞ்சிட்டு வந்த மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு கோபமா கேட்டதால தான் நான் கோபப் பட்டேன் னு
உனக்கு தெரியும்.”
“நான் எப்ப நீங்க தப்பு
செஞ்சீங்க னு சொன்னேன்?”,
“சொல்லலனாலும் உன் முகத்தை பார்த்தாலே தெரியுது டி”, என்றதும் அவள் முகத்தை திருப்ப,
சற்று நிதானித்தவன்,
“என் மேல அவ்வளவு நம்பிக்கை உனக்கு….!”
“இப்பலாம் நீ ஏன் இப்படி மாறிட்ட?”,என வருத்தமாக வினவினான்.
“நான் லாம் மாறலங்க.
நீங்கதான் மாறிட்டீங்க.
முன்ன நான் இப்படி கேள்வி கேட்டா பொசஸீவ் நெஸ் னு சொல்வீங்க.
இப்போ சந்தேகம் னு சொல்றீங்க. அவ்வளவு தான் வித்தியாசம்….”,
“நீ சந்தேக படற னு நான் சொல்லல மகா. ஏன் இத இவ்வளவு சீரியஸ் ஆ கேட்கற…?
“அப்போ எப்படி கேட்க?”,
“சரி அப்படி கூட கேட்கலாம் அதுல ஒரு நியாயம் இருக்கு. அது என்ன பார்வை….? அதே சொல்லுது நீ என்ன நினைக்கற னு”,
“என்ன சொல்லுது? இவ்வளவு சொன்னீங்களே அதையும் சேர்த்து சொல்லிடுங்க”, என,
“நீதான பார்க்கற உனக்கு தெரியாதா என்ன….? வேணும்னா அடுத்த டைம் அப்படி பாரு நான் ஃபோட்டோ எடுத்து காட்றேன். நீயே கண்டுபுடிச்சிக்க”, என்றான் காட்டமாக.
பின் “சரி சரி விடு எதுக்கு இதெல்லாம் பேசிக்கிட்டு….ஸ்ட்ரெய்ட் ஆ கேட்க வந்தத கேளு”,
நான் தேவையில்லாதத பேசற மாதியே சொல்ல வேண்டியது என சினம் கொண்டாளும் அதை புறம் தள்ளியவள் ஸ்ட்ரெய்ட் ஆ தான கேட்கிறேன் என,
“யார் இந்த லவ் லெட்டர் அ உங்களுக்கு கொடுத்தா?
அதை ஏன் இன்னும் தூக்கி போடாம உங்க பேக் ல வச்சிருக்கீங்க?
ஏன் இத எங்கிட்ட சொல்லல?”,
என அழுத்தமாக கேட்டாள்.
“காலேஜ் ல ஒரு பொண்ணு தான் தந்துச்சு. தூக்கி போட மறந்துட்டேன் மகா. இதலாம் ஒரு விஷயமா னு நெனச்சு தான் உங்கிட்ட சொல்லல….போதுமா உன் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டேன்.”, என கூறிவிட்டு திரும்ப,
அவள் தேம்பிய சத்தம் கேட்டு அவளருகே சென்றவன்,
“எதுக்கு டி இப்ப அழுவுற.
உன் கேள்விக்கு தான் பதில் சொல்லிட்டேன் ல அப்புறம் என்ன?”,என பல்லைக் கடித்து கொண்டு வினவினான்.
காலங்காத்தால அழுதுகிட்டு….என்னமோ இவள நான் கொடுமை பண்ற மாதிரி….ச்சே சின்னப்புள்ளத்தனமாவே இருக்காளே என நொந்து கொண்டான்.
“என்ன இப்படி பொறுப்பே இல்லாம பதில் சொல்றீங்க?”,
என தேம்பிய படி வினவ,
“அழுவாத மகா குழந்த மாதிரி. எனக்கு செம்மை யா டென்சன் ஆகுது.”, என கோபமாக கூற,
கண்ணீரை வேகமாக துடைத்தவள் தன்னை அமைதிபடுத்திக் கொண்டு,
“சரி இப்போ சொல்லுங்க ஏன் இப்படி பொறுப்பே இல்லாம பேசறீங்க”,
“என்னத்தடி இப்ப நான் பொறுப்பில்லாம பேசனேன்.
நேரா தான் சொல்லித் தொலையேன்” ,என சூடாக வினவினான்.
எல்லாத்தையும் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி
நேரா சொல்லு நேரா சொல்லு னு சொல்ல வேண்டியது என மனதுக்குள் நொடித்தவள்,
“உங்க பேக் ல யா….ரோ
ஒரு பொண்ணு கொடுத்த
லவ் லெட்டர் அ பார்த்துட்டு
உங்க பொண்டாட்டி….!
வந்து கேள்வி கேட்டா நீங்க
தூக்கிபோட மறந்துட்டேன்.
இதலாம் ஒரு விஷயமானு தான் சொல்லலனு அசால்ட் ஆ பதில் சொன்னா அது பொறுப்பா பேசற மாதிரியா இருக்கு?”, என ஆதங்கமாக வினவினாள்.
அந்த யாரே லயும்
பொண்டாட்டி லயும் அவள் அழுத்தம் கொடுத்து பேசியதைக் கண்டு, சினத்தை விடுத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தவன், அவள் கேட்ட கேள்வியின் நியாயத்தை உணர்ந்தான்.
அதான அவள் கோபமா தான கேட்பா…. அத தூக்கி போடாம இருந்தது உன் தப்புடா.
இதுல அசால்ட்டா வேற பதில் சொல்லியிருக்க. நம்ம மேல தான் தப்பு என புரிந்து சமாதனமாக பேச ஆரம்பித்தான்.
******
“மகா…. நான் பொறுப்பில்லாம பேசலடி ஏதோ சாதாரணமா சொன்னேன். சரி தப்புதான் விடு.
நீ அப்படி பார்த்தியா அதான் நான் அசால்ட்டா பேசி உன்ன கடுப்பேத்திட்டேன்.”, என சரணடைந்தான்.
“கல்யாணம் ஆனவங்களுக்கு யாராச்சும் லவ் லெட்டர் கொடுப்பாங்களா….?”, என கடுங்கோபமாக வினவ,
“இங்க பாரு நமக்கு கல்யாணம் ஆன விஷயம் அந்த பொண்ணுக்கு எப்படி தெரியும் சொல்லு….? அது பக்கமா தான நடந்துச்சு.” ,
“……”
“மேலும் நானே அந்த பொண்ணு கிட்ட,
இப்படி தான் உன் க்லாஸ் க்கு பாடம் நடத்த வர லெக்சர் கிட்ட பேசுவியா….?
ஒழுங்கா படிக்கற வேலைய பாரு.
மோர் ஓவர் ஐ அம் மேரீட்.
ஸோ இந்த மாதிரி மறுபடி எங்கிட்ட பேசனா எச்.ஓ.டி கிட்ட சொல்லிடுவேன் னு வார்ன் பண்ணிட்டேன்.”
“அந்த பொண்ணும் சாரி சொல்லி இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் சார் னு சொல்லிடுச்சு. அப்போ அந்த வழியா ஒரு ஒரு ஸ்டாஃப் வரவும் கைல இருக்க லெட்டர் யும் அந்த பொண்ணையும் பார்த்து எதாவது தப்பா நினச்சிக்க போறாங்க னு தான் பேக் ல போட்டேன்.
அப்புறம் ஏதோ டென்ஷன் ல மறந்துட்டேன்.
இத சொன்னா நீ
கோபப்படுவியோ னு தான் பிரச்சனையே முடிஞ்ச அப்புறம் ஏன் சொல்லிகிட்டு னு விட்டுட்டேன்”,என விளக்கமாக கூறி முடித்தான்.
அவன் கூறியதை கேட்டதும் அவன் பக்க நியாயம் உணர்ந்தவள்,
“ஓ…. அதான் எங்கிட்ட சொல்லலையா….என இழுத்தாள்,
“சாரிங்க நீங்க என்கிட்ட மறைக்கறீங்க னு தான் கோபப்பட்டு பேசிட்டேன். “,என முகத்தை சோகமாக வைத்து கொண்டு கூற,
“இல்ல மகா என் மேலயும் தப்பு இருக்கு. நீ கேட்ட உடனே நான் எக்ஸ்பிளெய்ன் பண்ணிருக்கனும். நான் பாரு ஏதோ டென்ஷன் ல அசால்ட்டா பதில் சொல்லிட்டேன் சாரி”, என
“விடுங்கள்…. பரவால்லாம்”,
“ம்….”, என்றவன் டைம் பார்க்க,
“டைம் ஆச்சு பாரு. நான் போய் புறப்படுறேன். நீயும் போய் வேலைய கவனி. இன்னைக்கு உனக்கு ஸ்கூல் லீவ் தான அதான் சாவகாசமா நான் காலேஜ் லேட் ஆ போயி அங்க திட்டு வாங்கனும் னு பிளான் பண்ணி சண்டைக்கு வந்தியா?”, என குறும்புடன் வினவ,
“அப்படிலாம் இல்லங்க”,
என பாவமாக கூறவும்,
“சும்மா சொன்னேன் டி”, என கூறி கண்ணடித்தவன் அவள் தலையை வருடி விட்டு குளிக்க சென்றான்.
நீ அத வச்சு இன்னொரு டைம் சண்டைக்கு வந்ததாலும் வருவ ஏன் அத வச்சிக்கிட்டு கொடு”, என ஷூ போட்டவாறே வினவ,
“அதுலாம் ஒன்னும் வேணாம்.
நான் அத கிழிச்சு குப்பை ல போட்டறேன். குப்பைத்தொட்டி அங்க இருக்கு. டைம் ஆகும் நீங்க கிளம்புங்க”, என,
அவளை புரியாமல் பார்த்தான்.
இங்க இருக்க குப்பை தொட்டியில போடறத எதோ பக்கத்து தெருவில இருக்க கணக்கா பேசறாளே….
என்னவா இருக்கும்? என யோசித்தவன் டக்கென்று விஷயம் ஸ்ட்ரைக் ஆக, அவளை கேலியாக நோக்கினான்.
அவன் பார்வையிலேயே அவன் விஷயத்தை கண்டுபிடித்து விட்டான் என்பதை உணர்ந்தவள் அசடு வழிய ஈ என சிரித்தாள்.
சற்று நேரத்திற்கு முன் :
குளித்து விட்டு வந்தவன்
“என்னடி எதோ கருகின வாசன வருது. எப்பவும் போல தோசை சுடறியா? “, என வினவ,
அவனை முறைத்தவள்,
“உங்களுக்கு என் சமையல கிண்டல் பண்ணலனா தூக்கமே வராதே. அதெல்லாம் ஒன்னும் கருகல.
டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்பற வழிய பாருங்க”, என நகர்ந்து சென்றதன் நோக்கம் புரிந்தது.
ஏதோ ஒரு நினைப்பில் சமைத்தவள் பின் அந்த லெட்டரை உடனே அழிக்க நினைக்க அதை
கொளுத்தி விட்டாள்.
அந்த வாசனை தான் அவன் என்ன என கேட்க ஒன்றுமில்லை என சமாளித்தாள்.
அவளை காதலுடன் நோக்கியவன் அவள் தோளில் கை போட்டு கொண்டு,
“ஏன் இப்படி?”, என சிரித்து கொண்டே கேட்க,
“பின்ன…. உங்களுக்கு நான் மட்டும் தான் லவ் லெட்டர்லாம் கொடுப்பேன்.
நான் உங்கள முதல்ல
ஒன் சைட் ஆ லவ் பண்ணப்பவே உங்கட்ட யாராச்சும் தேவையில்லாம பேசனாவே எனக்கு பிடிக்காது. இப்போ நான் உங்க பொண்டாட்டியாக்கும்….!”, என குழந்தை போல முகத்தை வைத்து கொண்டு கூற,
அதை இரசித்தவன்,
“மகா உனக்கு ஏன் என்ன இவ்வளவு பிடிக்குது?”,என வினவினான்.
அவனுக்கு நிகராக காதலாக அவனை பார்த்தவள்,
“பிடிக்காததுக்கு தான் காரணம் இருக்கும். பிடிக்கறத்துக்கு காரணமே பிடிக்குதுங்கறது மட்டும் தான் ங்க”, என்றாள் மென்மையான குரலில் வழக்கம் போல,
புன்சிரிப்புடன் தலையசைத்து நடந்தவன் எப்போதும் போல அந்த பதிலை மனதுக்குள் இரசித்தவாறு சென்றான்.
அவளும் அவனின் கம்பீரமான நடையை இரசித்தவாறு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
காலையில் போட்ட சண்டை இவங்களுக்கு இதே வேலையா போச்சு என தலையில் அடித்து கொண்டு தேனோஸ் போட்ட
ஸ்னாப் இல் வேனிஷ் ஆனவர்களை போல கரைந்து மறைந்து போனது.
தொடரும்….
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss