உனக்காக ஏதும் செய்வேன்

1662455813139-54b4f6c2

அத்தியாயம் – 5

 

காலையில் அகத்தியனின் நண்பன் பிரசாத் அவனைக் காண வீட்டிற்கு வந்திருந்தான்.

“எப்படி இருக்கீங்க இன்ஸ்பெக்டர் சார்?” என்ற குரலில் திரும்பியவன், அவனை பார்த்து வரவேற்பாக சிரித்தான்.

“எனக்கு என்னடா நான் நல்லாதான் இருக்கேன். நீ எப்படி இருக்க?” என பலநாட்கள் கழித்து பார்த்த நண்பனை கட்டியணைத்து கேட்க, பதிலுக்கு அணைத்தவன் அவன் தோளில் தட்டி,

“ம்ம்… நானும் நல்லாதான் இருக்கேன்… பார்த்துட்டு கண்டு புடிச்சிட்டே! நான் கூட என்ன மறந்துருப்பனு நெனச்சேன்.” எனவும்,

“ஏன்டா அப்டி சொல்ற?” என ஒரு மாதிரி வினவ,

நடந்த பிரச்சனைக்குப் பின் அவன் பிரசாத்திற்க்கு போன் செய்து பேசவே இல்லை.

அகத்தியன், “நீ தான் என்ன மறந்துட்ட கல்யாணத்துக்கு கூட வரல.” என அவன் கூறியது புரியாமல் குற்றம் கூற, அதை ஏன் பேசவேண்டும் என நினைத்தவனும்,

“டேய்… முக்கியமான வேலை வந்ததால… உன் மேரேஜ்க்கு ஒன் வீக் முன்ன அமெரிக்கா போக வேண்டியதா போச்சுடா. திரும்பி வர ரெண்டு மாசம் ஆகிடுச்சு. இங்க வந்ததும் சில நாள்ல உன்ன பார்க்க ஓடோடி வந்துருக்கேன் அகி.” என குறும்பாக சொன்னான்.

அவன் கூறிய தோரணையில் அகத்தியன் வாய்விட்டு சிரித்துவிட்டான்.

சமையல் அறையில் இருந்து வெளியே வந்த கீர்த்தி வீட்டிற்கு வந்த நபரை வரவேற்பதை கூட மறந்து அவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆம்…  ஆச்சர்யம், அதிசயம் எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.

அவன் அதிகம் சிரிக்க மாட்டான். அதுவும் திருமணத்திற்கு பின் அவன் அவளிடம் சிரித்தென்ன பேசுவது… இப்போதுதான் கொஞ்சம் பேசவே ஆரம்பித்திருக்கிறான்.

வந்தவனோ கீர்த்தியின் பார்வையை கவனித்துவிட்டு, “டேய் பாருடா உன் வொய்ஃப் என்ன வாங்கனு ஒரு வார்த்தைக் கூட சொல்லாம, உன்ன எப்படி சைட்டடிச்சிட்டு இருகாங்க.” என அவனுக்கு மட்டும் கேட்குமாறு கிண்டல் செய்தான்.

அவன் திரும்பி பார்த்ததும், அவள் பார்வை டக்கென இயல்பானது.

‘உடனே அப்படி பார்த்தேனா அப்படின்ற மாதிரி முக பாவனையை மாற்றிடுவளே. இவன் பார்க்கற மாதிரி பாத்துட்டு இப்போ ஒன்னுமே தெரியாத பாப்பா மாறி நிக்கறத பாரு.’ என மனதில் அவளுக்கு அர்ச்சனை செய்தவன்,

“டேய் சும்மா இருடா. அவ சாதாரணமா தான் பாக்கறா.” என்றுவிட்டு அவளை ‘இங்கு வா.’ என கண்ணால் அழைக்க, அவளும் வந்தாள்.

“ஓ… கண்ணாலயே தான் பேசிக்கவீங்களா?” என அவன் மீண்டும் வார, அகதியனுக்கோ லைட்டாக வெட்கமே வந்துவிட்டது.

அவன் முகத்தை பார்த்து பிரசாத்திற்க்கு அத்தனை சந்தோஷம் ஏற்பட்டது.

அவனும் இதே ஊர்தான். சாப்ட்வேர் நிறுவனதில் வேலையில் உள்ளான். இருவருமே ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தான்.

அகத்தியானோ, “போலீஸ் ஆக எதற்கு என்ஜினீயர் படிக்க வேண்டும்?” என கேட்க, அவன் அப்பா ‘படித்தே ஆக வேண்டும்’ எனவும் சரி என படித்தான்.

பின் ‘அது சம்மந்தாமான வேலைக்கு செல்.’ எனவும் ‘முடியவே முடியாது.’ என மறுத்தவன்,

டி.என்.யு.எஸ்.ஆர்.பி நடத்தும் எஸ்.ஐ தேர்விற்க்கு படித்து, முதல் முறையே பாஸ்ஸாகி தாலுக் எஸ்.ஐ ஆக ஆறு வருடம் பணியாற்றியவன், முதல்வர் அளித்த சிறப்பு ப்ரோமோஷன் மூலம் இப்போது இன்ஸ்பெக்டராக உள்ளான்.

( SI to Inspector promotion கிடைக்க 10 to 12 years ஆகும். பட் கதைக்காக CM special ah 6 இயர்ஸ்ல ப்ரோமோஷன் கொடுத்தார்னு போட்ருக்கேன் drs. அப்படி கண்டிப்பா பண்ண முடியுமா னு தெர்ல… Story க்காக.)

அவன் அப்பா ‘இந்த வேலையில் நல்லது செய்வதுலாம் கடினம் வேண்டாம் உன் கோபத்துக்கு பிரச்னையை இழுத்துட்டு வந்தராத.’ என முதலில் மறுக்க,

‘என்னால் முடிந்ததை நான் செய்வேன். என் முடிவில் மாற்றம் இல்லை.’ என பிடிவாதமாக இருக்கவும் அவனுக்கு அதில் உள்ள ஈடுபாட்டையும், விருப்பதையும் கண்டவர் ‘உன் இஷ்டம்’ என்றுவிட்டார்.

அவன் வேலையில் சேர்ந்தபின் தான் அவனுக்கு காக்கி யூனிபார்ம் மீது இருந்த காதலே அவருக்கு புரிந்தது.

தாலுக் எஸ்.ஐ ஆக இருப்பது மிக கடினமான வேலை.

எப்போத டூயூட்டி வரும் என கூற இயலாது. ஒரு வருடத்திற்கு ஒருமுறை டிரான்ஸ்பர் ஆகிக்கொண்டே இருக்கும்.

சட்ட ஒழுங்கு, பந்தோபஸ்து, கோவில் திருவிழா பாதுகாப்பு, ட்ராபிக் என நிறைய விஷயத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சார்ஜ் ஷீட் போடும் அளவு அதிகாரம் கொண்ட ஆரம்ப பதவி இது தான்.

முதலில் ஒன் இயர் ட்ரைனிங் முடிந்து வேலையில் சேர்ந்தவனுக்கு, வேலை மிக கடினமாகவே இருந்தது.

ஆனால் காக்கி மீது கொண்ட பற்றினால் முதலில் விழி பிதுங்கினாலும், பின் அனைத்தையும் நன்றாக சமாளித்தவன் நேர்மையாக தன் கடமையை செய்தான்.

சில சமயங்களில் நினைத்ததை செய்ய முடியாத இடத்தில் கடந்து வரவேண்டியதாகதான் இருந்தது.

இதுதான் நிதர்சனம் அல்லவா!

பலர் லஞ்சம் வாங்கும் இடத்தில், நேர்மையாக இருப்பதே கேலிக்கு உள்ளாகும்.

அப்படியிருக்க… சிங்கம் படம் போல ‘ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்.’ டயலாக்கெல்லாம் சாத்தியப்படாது.

சாமி பட சீயான் போல வளைந்து கொடுக்க வேண்டிவரும்.

ஆனாலும் அவன் எந்தளவு முடியுமோ அந்தளவு உண்மையாகவும் நேர்மையாகவும் அவன் கடமையை ஆற்றினான். ஆற்றுகிறான். ஆற்றுவான்.

எங்கு அமைதியாக இருக்க வேண்டும், முடிந்த அளவு பகைத்து கொள்ளாமல் எவ்வாறு சில நல்ல விஷயங்களை செய்ய முடியும் என்பதையும் கற்று தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க,

அப்போது முக்கிய மத்திய அரசின் அரசியல் பிரமுகர் ஒருவர் தமிழ்நாட்டின் ஒரு கோவில் திருவிழாவிற்கு வரவும் பாதுகாப்பிற்காக அவனும் செல்ல, அங்கு சில தீவிரவாத கும்பலால் ஏற்படவிற்கும் குண்டுவெடிப்பை எப்படியோ கண்டுபிடித்தான்.

தன் உயிரை பணயம் வைத்து அதை தடுக்க, அப்போது அவனை அவர்கள் சுட, என நிலைமை மோசமான போதும்… அந்த அசம்பாவிதத்தை தடுத்துவிட்டான்.

அதன் பொருட்டு அவனை பலரும் புகழ தொலைக்காட்சி ஊடகங்களிலும் அவன் வீரச் செயல் பாராட்டப்பட்டது.

நேரடியாக மருத்துவமனைக்கே வந்து முதல்வர் பார்த்துவிட்டு சென்றார். மேலும் அவனுக்கு இன்ஸ்பெக்டர்ராக ஸ்பெஷல் ப்ரோமோஷன்னும் கொடுத்தார்.

அந்த பிரமுகர் மற்றும் எத்தனை பொதுமக்கள் உயிரை ரிஸ்க் எடுத்து காப்பாற்றி உள்ளான். ஏதும் அசம்பாவிதம் நடந்திருந்தால் ஆட்சிக்கே கெட்டப் பெயர் அல்லவா!

பணிக்கு சேர்ந்த முதலில் அவன் படும் கஷ்டத்தையும், ஓய்வில்லாத வேலையையும் கண்டவருக்கு அவனைக் கண்டு எதற்கு இந்த சிரமம் என்று  தோன்றிய போதிலும் அவன் பொறுப்புணர்வை நினைத்து மகிழவும் செய்தார்.

அந்த நிகழ்வுக்கு பின் ஹாஸ்பிலில் அவன் இருக்கும்போது அவருக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.

மகனை பாராட்டுவது, மற்றவர்கள் புகழ்வதைக் கண்டு பெருமையாக இருந்தாலும், அவன் நலனை எண்ணி கவலைக் கொண்டது அவன் குடும்பம்.

அவனிடம் மீண்டும் பேசி பார்க்க அவன் ‘என்னை எனக்கு பாதுகாத்துக் கொள்ள தெரியும்.’ என உறுதியாக பேசவும் மனதில் உள்ள கவலையை முடிந்த மட்டும் மறைத்தவர் அமைதியாகிவிட்டார்.

அதன்பின் அவன் முடிவை என்றுமே அவர் மறுத்து பேசியதில்லை.

அந்த சம்பவத்துக்கு பின் பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாததாலும், அவன் பாதுகப்பாக இருந்து கொள்ளவான் என்ற நம்பிக்கையும் வர நிம்மதியுற்றார்.

சில மாதங்கள் கழித்து அவர் கல்யாண பேச்சை எடுக்க அவன் திருமணத்தை தள்ளி போட்டுகொண்டே வரவும், அவனை கண்டித்தவர் இருபத்தொன்பது வயதாகிவிட்டது என அதட்டி, கெஞ்சி, கோபப்பட்டு, வருத்தப்பட்டு என பல விஷயத்திற்கு அப்புறம் பெண் பார்க்க சம்மதிக்க வைத்தார்.

முதலில் பெண்ணை பார்த்து பிடிக்கவில்லை எனக்கூற அவன் வர, அங்கு கீர்த்தியைக் கண்டவன் உடனே திருமணத்திற்கு சம்மதித்தான்.

ஏனோ அவனுக்கு அவளை பார்த்ததும் பிடித்துவிட்டது. அவள்தான் தன் மனைவி என முடிவே செய்துவிட்டான்.

திருமணமும் சந்தோஷமாகவே ஆரம்பித்தது. ஆனால் திருமணத்தின் தேதி சில காரணங்களால் ஐந்து மாதங்கள் தள்ளிப் போக, அப்போது அவனுக்குத் தெரிந்த சில விடயங்கள் அவனுக்கு கோபத்தை கொடுத்தது.

எவ்வளவும் முயன்றும் அனைத்தும் அவன் நினைத்ததற்கு எதிராகவே செல்ல, திருமணம் முடியும்போது நடந்த பிரச்சனைகள் என்னென்ன…

அன்றைய நிகழ்வு அனைத்தும் பிரசாத் அவன் குடும்பத்தார் மூலம் அறிந்தமையால், அகத்தியன் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பனா? அல்லது பிரச்சனை இருக்குமா? என ஒரு நல்ல நண்பனாக கவலையில் வந்தவன், அவனின் பழைய பேச்சையும், அவர்களின் கண்ணாலே பேசிக் கொள்ளும் முறையையும் கண்டு நிம்மதியுற்றான்.

ஆனால் அவர்கள்,

தாமரை மேலே நீர்த்துத்துளி போல தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

என பாட்டு படும் அளவு இருந்தவர்கள் இப்போது ஏதோ பரவலமாக இருக்கிறார்கள் என யார் சொல்ல?

அவனின் குணம் அறிந்திருந்ததால் அவனுக்கு கீர்த்தி மீது ஏதும் அதீத வெறுப்பு இல்லை என்பதே அவனுக்கு நிம்மதியாக இருந்ததோ!

“இவன் என் பிரன்ட் பிரசாத்.”என மனைவிக்கு அறிமுகப்படுத்த,

“வணக்கம் சிஸ்டர் எப்படி இருக்கீங்க?” என இயல்பாக பேசினான்.

“ம்ம்… நல்லாருக்கேன் ண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?” என அவளும் இயல்பாக பதிலுக்கு வினவ,

“ம்ம்… நான் எப்பவும் போல நல்லா… இருக்கேன் ம்மா. என் பிரண்ட் உங்கள நல்லா பாத்துக்கரானா? பிரச்னைனா சொல்லுங்க இன்ஸ்பெக்டர்னுலாம் பயம் வேண்டாம். நாம எஸ்.பி ட்டயே சொல்லி அவன் மேல கம்பளைண்ட் பண்ணி உள்ள தள்ளிரலாம்.” என,

அவனின் அந்த நகைச்சுவையான பேச்சில் சற்று அதிர்ந்தாலும், புன்னகைத்தவள் அகத்தியனை பார்க்க அவனோ,

“அடப்பவி என்னையே உள்ள தள்ளுவியா?” சிரித்துக்கொண்டே அவன் முதுகில் ரெண்டு போட்டான்.

அவளுக்கு அந்த புது அண்ணாவிற்க்கு நன்றிதான் தெரிவிக்க வேண்டும் என தோன்றியது.

அகத்தியன் ரொம்ப ரிசர்வ்டு டைப். பொதுவாக அதிகம் பேசமாட்டான். அவன் நன்றாக பேசும் நபரில், அவன் நண்பன் பிரசாத் ஒருவன்.

கணவன் இவ்வளவு இயல்பாக கிண்டல் செய்வதை ஏற்று சிரித்து பேசி கொண்டிருப்பது அவளுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

‘சிடுமூஞ்சுக்கு கொஞ்சம் சிரிக்கவும் தெரியுது.’ என நினைத்துக் கொண்டாள்.

மேலும் சிறிது நேரம் பேசியவன் தனக்கு திருமணம் என அகத்தியனுக்கு அதைக்கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது.

‘இவள்தான் உன் மனைவி.’ என சிறு வயதிலே அவனிடம் பெற்றோர் கூறி இருந்த அவன் அத்தை மகளை பற்றி கொஞ்ச நஞ்சமா காலேஜ் படிக்கும்போது அகத்தியனிடம் பேசியுள்ளான். ஆதலால்தான் அந்த சந்தோஷம் அவனுக்கு.

கல்யாணத்திற்கு கண்டிப்பாக வருமாறு பத்திரிக்கை வைத்து சொல்லிவிட்டு தயானந்தன் (அகத்தியன் தந்தை) வந்ததும் சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு கிளம்ப எத்தனிக்க, அவனை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தனர் இருவரும். 

பின் அவள் சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள். அவன் ரெடியாக அவர்கள் அறைக்குள் சென்றுவிட்டான்.

பிரசாத் நினைத்தது போல அவர்கள் அன்பான கணவன் மனைவியாக வாழ்வர்களா?

»»»»

ஸ்கூலில்…

க்ளாஸிற்க்கு உள்ளே மகா நுழைந்ததும் அங்கு இருந்த மழலையர் அனைவரும், “குட்… மார்னிங்… மிஸ்.” என இழுத்து ராகம் பாடியபடி எழுந்து நிற்க,

அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே தலை அசைத்தவள், “குட் மார்னிங் டூ ஆல். ஸிட்.” எனவும், குழந்தைகள் அவர்களுக்கென இருந்த குட்டியான அந்த பெஞ்ச்சில் அமர்ந்தனர்.

“நேத்து நான் சொன்ன ஹோம் வொர்க் பண்ணிட்டீங்களா?”

“எஸ் மிஸ்.” என மீண்டும் கோரஸ்ஸான பதில்.

“ஓகே… எழுதனதை இங்க டேபிள்ள கொண்டு வந்து வைங்க.” என கூறியவள், ஒவ்வொன்றையும் எடுத்து கரெக்ட் செய்து கொண்டிருந்தாள்.

ஒரு நோட்டை திருத்தி முடித்தவள் அடுத்ததை எடுக்க, அந்த நோட்டில் இருந்த கையெழுத்தும் முன்பு இருந்த நோட்டின் கையெழுத்தும் ஒன்றுபோல இருந்தது.

பெயரைப் பார்க்க அந்த வகுப்பில் உள்ள ஒரு அண்ணன் தங்கை பெயர்தான். அவர்கள் இருவரும் ட்வின்ஸ் ஆதலால் ஒரே வகுப்பில் படித்தனர்.

“அனு, கவின் இங்க வாங்க.” என அழைக்க , இருவரும் ‘கண்டுபிடிச்சுட்டாங்களா?’ பயந்தவாறே மெதுவாக வந்தனர்.

“அனு ஏன் உனக்கு அவன் எழுதி கொடுத்துருக்கான்?” நீ ஏன்ம்மா எழுதல?” என மென்னையாக சற்று கண்டிப்புடன் கேட்க,

கரெக்டாக கொடுத்ததை எழுதியவர்கள், ஒட்டுக்காக வைத்ததுதான் தவறாகிவிட்டது.

மண்டை மேல இருந்த கொண்டையை மறந்த கணக்காய்.

தனித்தனியாக இருந்திருந்தால் கண்டுபிடித்துருப்பாளோ என்னவோ? ஒட்டுகாக நோட்டை பார்த்தும் நன்றாக புரிந்தது அது இரண்டும் கவினின் கையெழுத்து என.

‘தான் ஒன்றும் அவ்வளவு ஸ்ட்ரிக்ட் இல்லையே, ஏன் இப்படி அவன வச்சி எழுதிட்டு வரனும்?அவளே எழுதலனு சொல்லிருந்தாலும் நார்மல்லா மிரட்டாம பேசி படிக்க, எழுத வெச்சரலாம்.’

‘ஆனா இது என்ன அவன் எழுதனத இவ எழுதனதா கொடுக்கறது. பேட் ஹாபிட். இதே பழக்கம் ஆகிடும். இனிமேல் இப்படி பண்ணக் கூடாது.’ என சொல்லவே அவர்களை அழைத்தது.

“மிஸ் நான்தான் அவக்கிட்ட கேட்டு வாங்கி எழுதி கொடுத்தேன். அவ வேணாம்னுதான் சொன்னா.” என தன் தங்கைக்கு சப்போர்ட்டாக மகாவிடம் பதில் சொன்னான்.

அவனிடம் இதழ்கள் தானாக விரியா அவனிடம், “ஓகே. நீ ஏன் அவளுக்காக எழுதன?” என அவர்களின் பயத்தை போக்க புன்னகையுடன் கேட்டாள்.

“அது அவளுக்கு ஃபின்ங்கர்ல அடிபட்டுடுச்சு மிஸ். நீங்க ஹோம் வொர்க் கண்டிப்பா பண்ணிருக்கனும்னு யெஸ்டர்டே சொன்னீங்கல… அம்மாவும் ஹோம் வோர்க் பண்ணிட்டமானு செக் பண்ணும்போது இல்லனா அடிப்பாங்க.

அதான் நான் எழுதி கொடுத்தேன். அவள திட்டிடாதீங்க மிஸ்.” என… அந்த பிஞ்சுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு அத்தனை அழகாக புலப்பட்டது.

அதைக் கண்டவள் முகத்தில் சில மாற்றங்கள் தோன்றினாலும், சட்டென இயல்புக்கு வந்தவள்,

அனுவின் கையை பார்த்தாள். அதில் ஆள்காட்டி விரலில் பேன்டேஜ் இருந்தது. இதுவரை அவள் கையை பின்னால் வைத்திருந்ததால் தெரியவில்லை.

மெதுவாக அந்த விரலை பிடித்து பாரத்தவள், “எப்படி அடிபட்டுச்சு அனு?” என மென்மையாக கேட்டாள்.

“அது…. மிஸ் நான் விளையாடும் போது கீழே விழுந்துட்டேன். அப்போ கைய கீழ வைச்சனா அதுனால விரல் அப்புறம் ரொம்ப வலிச்சது மிஸ்.” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.

“அப்புறம் ஏன் இன்னைக்கு ஸ்கூல் வந்த அனு? லீவ் போட்ருக்கலாம்ல?”

“அம்மா அதுலாம் ஒன்னும் ஆகாது. லீவ் போடக் கூடாது ஸ்கூல் போனு சொல்லிட்டாங்க மிஸ்.” என விட்டால் அழுதுவிடுவேன் என்பதுபோல கூற,

‘நாலாவது படிக்கற குழந்தை ஒரு நாள் லீவ் போட்டா என்ன ஆகிடப்போகுது?’

‘அவங்க ரொம்ப கண்டிப்பு போல… பேரண்ட்ஸ் மீட்டிங்கில் அவர்களிடம் பேச வேண்டும்.’ என முடிவெடுத்தவள்,

“சரி ஓகே… போய் உட்காருங்க. இனி கவனமா விளையாடனும். அன்ட் அப்படிலாம் கை வலியோட எழுத வேணாம். அம்மாட்ட உடம்பு சரியில்லாம ஹோம் வோர்க் பண்ணலனா ஒன்னும் சொல்ல மாட்டாங்கனு சொல்லுங்க. இப்படி மறுபடி பண்ணக் கூடாது ஓகேயா?” என வினவ,

அதுவரை அவர்கள் மிஸ் திட்டாமல் இருந்ததே அவர்களின் பயத்தை குறைத்திருக்க அவள் இவ்வாறு கூறவும் ,

“ஓகே மிஸ். இனி இப்படி பண்ண மாட்டோம்.” என புன்னகையுடன் கூறிவிட்டு அவர்களின் பெஞ்ச்சிற்கு சென்றனர்.

அவளும் அடுத்த நோட்டை திருத்த ஆரம்பித்தாள்.

 

தொடரும்…