உனக்காக ஏதும் செய்வேன்

1662455813139-f96702bb

அத்தியாயம் – 8

 

எழுந்ததிலிருந்து தன் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் மனைவியைக் கண்டு ‘வேணும்னே பண்றாளா? இல்லை எதேச்சையா நடக்குதா?’ எனக் குழம்பியவன்,

‘எலி பொந்துக்குள்ள போன எலி கணக்கா கிட்சன்னுக்கு உள்ள இருந்து வெளியவே வர மாட்டறா.’ என மனதுக்குள் திட்டியவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

கீர்த்தியோ ‘எதுக்கு இப்போ இவரு இப்படி பார்த்துட்டு இருக்காரு?’ என சற்று படபடப்பாக உணர்ந்தாள்.

நேற்று கணவன் டியூட்டி முடிந்து வீடு வந்த பின்தான் அவன் பார்வையின் வித்தியாசத்தை கவனித்தாள்.

அவன் அவளை இப்படி பார்த்து கொண்டிருப்பது மனதுக்கு இதமான உணர்வை கொடுத்தாலும், சற்று பதற்றத்தையும், வெட்கத்தையும் சேர்த்து கொடுக்க, அவன் கண்களில் சிக்காமல் போக்கு காட்டினாள்.

மேலும் தானும் இப்படி பார்க்கும்போது கண்டுகொண்டாரா? எனவும் அவளுக்கே தெரியாமல் மனதுக்குள் தோன்றியதோ!

நெருங்கினால் விலகுவதும்,  விலகினால் நெருங்குவதும்தானே இயல்பு. அது தான் அவர்களிடையே நடந்து கொண்டிருந்தது.

அவனோ குழப்பம் தீராவிடினும், நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பும்போது சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவனுக்கு தலையசைத்துவிட்டு உள்ளே வந்தவள், தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டு அங்கிருந்த அவனின் புகைப்படத்திடம்,

“எதுக்கு இப்போ இப்படி பார்த்துட்டு இருக்கீங்க இன்ஸ்பெக்டர் சார்?”

“திடிர்னு போய்ட்டு வரேன்னு சொல்றீங்க?”

“எப்படி வந்தது இந்த மாற்றம்?”

“எதும் ஞானப்பழம் கீது சாப்டீங்களா?”

என சிரித்தவாறு கேள்விகளை தொடுத்துக் கொண்டிருந்தவள் மனதில் மகிழ்ச்சி மட்டும் தூக்கலாகவே இருந்தது.

»»»»

வகுப்பாசிரியர் இல்லாத வகுப்பு சந்தைக்கடைக்கே டஃப் கொடுக்கும் என்பதை மெய்பிக்கும் வகையில் அனைவரும் சத்தமாக வாயடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த சந்தைகடைக்குள்… இல்லையில்லை… வகுப்பிற்குள் சூர்யா வரவும் சற்று அமைதியானவர்கள்,

“குட் மார்னிங் சார்…” என்று எழுந்து நின்று கூட்டதோடு கோவிந்தா போட,

“குட் மார்னிங் டு ஆல். உட்காருங்க.” என்றவன் அட்டெண்டன்ஸ் எடுத்த பின் பாடம் நடத்த ஆரம்பித்தான்.

அன்றைய வகுப்பில் ஒரு யூனிட் முடியும் தருவாயில் இருந்த அந்த தலைப்பு, சற்று கடினமாக இருந்ததால் பலருக்கு புரியவில்லை என்று கூறினர்.

அவன் மீண்டும் விளக்க, இப்போது பரவலாமாக புரிந்தது போலும்.

இருப்பினும் அவன் மீண்டும் அதை நன்றாக விளக்க முற்படும் சமயம், ஒலித்த மணியோசையில் அவனின் பாடம் நடத்தும் அவகாசம் முடிந்தது என்பதால், “எதும் டவுட் இருந்தா ஒட்டுகா வந்து ஸ்டாப் ரூம்ல கேளுங்க.” என்றான்.

முழு யூனிட் முடிந்த பின் அடுத்த நாள் டெஸ்ட் கண்டிப்பாக உள்ளது என ஏற்கனவே கூறி இருந்தமையால்,

“அதுல டவுட் இருந்தா க்ளீயர் பண்ணிக்கோங்க. நாளைக்கு புரியலனு சொன்னா கிளாஸ்க்கு வெளியதான் நிற்கனும்.” என்றவன் ஸ்டாப் ரூம் நோக்கி சென்றுவிட்டான்.

மாணவர்களோ ‘எல்லாமேதான் சார் டவுட்.’ என வாய்க்குள் முணுமுணுத்தனர். 

அங்கிருந்த பலரும் அவன் கூறியதைக் கேட்டு என்ன பண்ணவென டென்ஷனில் இருக்க ஒருத்தியோ சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் ப்ரீத்தி.

»»»»

மதியம் சாப்பிட்டுவிட்டு அமந்திருந்தவன் தன்னுடன் வேலை செய்யும் சக ஆசிரியனும் தோழனுமான தினேஷிடம் பேசிக்கொண்டிருக்க அப்போது, “மே ஐ கம் இன் சார்.” என்ற குரல் கேட்டதும் திரும்பியவன்,

“எஸ்… கம் இன்.” என்றான் எந்த உணர்வையும் காட்டாத முகத்துடன்.

இது மட்டும்தான் இப்போது இந்த காலேஜ் வர அவனுக்கு தயக்கம் கொள்ள காரணமாக இருந்தது.

ஒரு பத்து நாட்களாக அவன் உடன் பணியாற்றும் ஒரு ஆசிரியர் ஹெல்த் இஸ்யூவால் லீவ் எடுத்திருந்ததால், சூர்யா இரு கிளாஸை கம்பைன் செய்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

முதலில் அவள் இந்த காலேஜிற்க்கு வந்து சேர்ந்தது தெரிந்தாலும் அவள் வகுப்பிற்கு போகாத காரணத்தாலும், அன்று தான் பேசிய பேச்சிற்கு தன்னிடம் பேசமாட்டாள் என்ற நினைப்பாலும் அவளை கண்டுகொள்ளாதது போல சாதாரணமாகவே இருந்தான்.

முதலில் அமைதியாக இருந்தவளைக் கண்டு நிம்மதியுற்றவன் இயல்பாக இருக்க,

சில நாட்களுக்கு முன் பஸ்ஸிற்க்காக காத்திருக்கும்போது அவள் பேசவரவும் பட்டென எடுத்தெறிந்து பேச வராமல் திணறிப் போனான்.

அவர்களை பக்கத்தில் நின்றிருந்த பெண் ஐஸ்வர்யா (1st எபி பொண்ணு) ஒருமாதிரி பார்க்க, அவள் என்ன நினைத்திருப்பாள் என கணித்த ப்ரீத்தியோ முகத்தை சுழித்தவாறு சற்று அழுத்தமாக, “அவர் **********

****************” என,

“ஓஹ்…” என்றவள் அவள் பஸ் வரவும் மன்னிப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ப்ரீத்தியின் கோபப் பார்வையில் பயந்து டக்கென ஓடிவிட்டாள்.

அவள் கூறியதை கேட்டு உள்ளம் வலித்தாலும், அவள் அந்த பெண்ணை பார்த்த பார்வையில் உள்ளுக்குள் சிரித்தவன் அவள் பேச ஆரம்பிக்கும் முன் உடனே பஸ் வர அதை நோக்கி சென்றுவிட்டான்.

இவளோ ‘ச்சே… ஒரு வார்த்தை கூட பேசலையே! இதுக்கா இந்த காலேஜுக்கு வந்தோம். எத்தனை நாள்னு நானும் பார்க்கறேன்.’ என அவனை வசை பாடியவள் பஸ் ஸ்டாப்பில் ஒரு ஓரமாக நிறுத்தி வைத்திருந்த தன் ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டாள்.

அன்று அப்செட்டுக்கு இதும் ஒரு காரணம். மகா கேட்கும்போது கூறாமல்விட்டது.

அவளை பார்க்கும்போது சில விஷயங்கள் ஞாபகம் வரும். கண்களில் தோன்றும் பாசத்தை அவளிடம்… மறைப்பதைப் போல ப்ரீத்தியிடம் எளிதாக மறைக்க இயலாதென அவனுக்குத்தான் முன்பே தெரியுமே.

இருப்பினும் முடிந்த மட்டும் முகத்தை இயல்பாகவே வைத்திருந்தான்.

“ஒரு சின்ன டவுட் அ….” என அவள் ஆரம்பிக்க அவன் முறைப்பில், “சார்.” என்றாள்.

பெருமூச்சுவிட்டவன் பாடத்தில் அவள் கேட்ட சந்தேகத்தை விளக்கினான்.

அவளுடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர். சில நிமிடங்களில் அவர்களுக்கு புரியும்படி விளக்கியவன், அடுத்து நின்றிருந்த பசங்களிடமும் விளக்கினான்.

பொதுவாக சூர்யா நன்றாக பேசி பாடம் நடத்தும் ஆசியர்தான். ஆனால் சொன்னதைக் கேட்கவில்லையென்றால் கண்டபடி திட்டிவிடுவான்.

அதனாலே அனைவரும் அவன் கண்டிப்பாக செய்ய வேண்டும் என சொல்லும் விஷயங்களை முடிந்த மட்டும் கடைபிடிப்பர்.

அதில் யூனிட் முடிந்த பின் வரும் டெஸ்ட் உள்ளடங்கும். பக்கத்து கிளாஸ்ஸாக இருந்த போதும், அவர்களும் அவன் கிளாஸிற்கு வருவதால் அந்த டெஸ்ட் எழுதும்படி ஆனது.

அவர்களுக்கு வரும் ஆசிரியரும் இதே போல டெஸ்ட் வைப்பார் என்பதால் அவர்களுக்கு அதில் பெரிதாக பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் வகுப்பாசிரியர் இவ்வளவு கண்டிப்பு அல்ல.

அதனாலே நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட வந்து சந்தேகம் கேட்டனர்.

பெரும்பாலும் இன்று நடத்திய தலைப்பில் கிட்டதட்ட அனைவரும் சந்தேகம் கேட்க, யோசித்தவன் ‘இன்று நடத்தியது மட்டும் டெஸ்ட்டிற்க்கு வேண்டாம். மீதியை நல்லா படிச்சிட்டு வாங்க.’ என கிளாஸ்ஸிற்கு சென்று கூறிவிட்டு வந்தான்… அங்கிருந்த ஆசியாரிடம் ஒரு நிமிடம் என பெர்மிஸ்ஸன் வாங்கி.

இதனால்தான் சூர்யாவை  மாணவர்களுக்கு பிடிக்கும்.

என்னதான் நன்றாக பேசினாலும் கண்டிப்பு இருக்கும். அதே சமயம் மாணவர்களுக்காகவும் யோசிப்பான்.

சிலர் அதைக்கேட்டு குஷியாகினர். சிலர் அதையும் வேண்டாமென்று கூறினால் பரவாயில்லையே என ஆசைப்பட்டனர். சிலரோ அவன் கூறியதை கேட்டனரா என சந்தேகம்தான். ஆயினும் பிறகு பிரண்ட்ஸிடம்  கேட்டுக்கொள்வர்.

அன்றைய நாளுக்குப் பின் அந்த ராஜ்ஜுடன் பேசி டென்ஷன் ஆகும்படி அவன் நடந்து கொள்வதில்லை. சூர்யாவும் அதை மறந்துவிட்டு அனைவரிடமும் எப்போதும் போலதான் நடந்து கொண்டான்.

பலரின் முகம் அவன் கூறியதை கேட்டு மகிழ்ச்சி உற்றதைக் கண்டவன், மனதுக்குள் சிரித்துக்கொண்டே அடுத்து தான் பாடம் எடுக்க வேண்டிய வகுப்பிற்கு வேகமாக நடை போட்டான்.

 

தொடரும்…