அத்தியாயம் 4
ரிசப்ஷன் ஹாலில் இருந்து வந்த ரிஷிக்கு தன்னை சமன் செய்ய தனிமை தேவைப்பட்டது. யார் கண்ணிலும் படாமல் இருக்க அந்த காரிடோரின் கடைசியில் இருந்த கதவை திறந்துக் கொண்டு அந்த சிறிய பால்கனியில் வந்து நின்றான். அங்கு வந்ததும் தான் உணர்ந்தான் இதே இடத்தில் தான் அவன் அவளை முதல் முறை சந்தித்ததை. இப்போதும் அவனவளின் ஸ்பரிசத்தையும் வாசத்தையும் உணர்ந்தவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
4 வருடங்கள் முன்…….
ரிஷி பொறுப்பேற்று தொழிலை நன்றாக கவனித்துக்கொல்வதை கண்ட மித்ரெஷ், சிறிது காலம் ஓய்வெடுக்க விரும்பி தன் மனைவியுடன் வேர்ல்டு டூர் செல்ல முடிவெடுத்தார். அதை தன் பிள்ளைகளிடம் சொல்ல ரிஷியும் அபியும் சந்தோசமாய் சம்மதிக்க, அமிர்தவோ தானும் வருவதாக அடம் பிடித்தாள். மித்ரெஷும் மனைவி மகளுடன் டூருக்கு கிளம்பியிருந்தார்.
அந்த ஆண்டு ‘மிவா பெர்ஃப்யூம்ஸ் & கஸ்மெட்டிக்ஸ்யின் புதிய அறிமுகமான ‘ஸ்னோ ட்ராப் & ப்ளாக் ஆர்கிட் சீரிஸ்’ என்னும் பெர்ஃப்யூம் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
ஐரோப்பாவில் குளிர் காலம் முடிந்து வசந்த காலத்தின் ஆரம்பத்தை அறிவிக்கும் விதமாக பூக்கும் இந்த ‘ஸ்னோ ட்ராப்’ என்னும் பூ தூய்மையையும், புதிய ஆரம்பத்தின் நம்பிக்கையையும் குறிப்பதாய் இருக்க. அதன் வாசனையும் மிருதுவாய், குளிர்ச்சியாய், புது மலரின் புத்துணர்ச்சியை தருவதாய் இருந்ததினால் இந்த பெர்ஃப்யூம் பெண்களை வெகுவாக ஈர்த்திருந்தது.
அதே போல ஆசியா மற்றும் தெற்கு அமெரிக்காவில், ஆளுமையையும் அதிகாரத்தையும் குறிக்கும் விதமாக பூக்கும் ப்ளாக் ஆர்கிட் மலரின் வாசமும், சாக்லேட் மணமும் கலந்து தயாரிக்கப்பட்டிருந்த பெர்ஃப்யூம் ஆண்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்த இரண்டு பெர்ஃப்யூமின் விற்பனையும் அவர்கள் நிர்ணயத்திருந்த இலக்கை விட அதிகமாகவே இருக்க இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான் ரிஷி.
ரிஷி பார்ட்டிக்கு கிளம்பி கொண்டு இருந்த சமயம், “அண்ணா ரெடியா?” என்று கேட்டுக் கொண்டே அவன் அறைக்குள் வந்த அபி, “டாட் உங்க கூட பேசனுமாம்,” என்றபடி கையில் இருந்த மொபைலை ரிஷியிடம் கொடுத்தான்.
வீடியோ காலில் இருந்த தந்தையிடம், “ஹலோ அப்பா…. எப்படி இருக்கீங்க??” என்று கேட்டான் ரிஷி.
“நாங்க நல்லா இருக்கோம். கங்க்ராட்ஸ் மை பாய். உன்னோட இந்த சீரிஸும் செம ரீச். ஐ அம் பிரௌட் ஆஃப் யு” என்று சொன்ன மித்ரெஷின் முகத்திலும் குரலிலும் பெருமையே நிறைந்து இருந்தது.
தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கு ஏற்ப, ரிஷி தொழிலை பொறுப்பேற்றுக் கொண்ட இந்த 3 வருடங்களில் அதன் வளர்ச்சி இரு மடங்காக உயர்ந்து இருந்தது. அதற்கு அவனது புத்திசாலிதானமும், சாதூரியமும், அடுத்தவரை கவரும் யுக்தியுமே முக்கியமான காரணமாய் அமைய அவன் முயற்சிகள் அனைத்துமே வெற்றியை ருசித்தது.
சிறு புன்னகையுடனே தந்தையின் வாழ்த்தை ஏற்றுக்கொண்ட ரிஷி, “தாங்க்ஸ் அப்பா. உங்க டிரிப் எப்படி போகுது?”. என்று கேட்க.
“ஆல் குட் ரிஷி.”
“அம்மாவும் அம்முவும் என்ன பன்றாங்க?”. “இங்க தான் இருக்காங்க இரு தரேன் என்றவர் வசுமதியிடம் ஃபோனை கொடுத்தார். பின் அன்னை தங்கையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பார்ட்டிக்கு கிளம்பினார்கள் அண்ணன் தம்பி இருவரும்.
தன் மொத்த வாழ்க்கையையும் புரட்டி போட ஒருத்தி தனக்காக இங்கு காத்திருக்கிறாள் என்று அறியாமல் தன் தம்பியுடன் ஹோட்டலுக்குள் நுழைந்த ரிஷி பார்ட்டி ஹால் நோக்கி சென்றான்.
மிதமான விளக்கு ஒளி பார்ட்டி ஹாலை நிறைத்திருக்க. வரிசையாக போடப்பட்டு இருந்த வட்ட வடிவ மேஜைகளை சுற்றி ஊழியர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பார்ட்டி ஹாலுக்குள் ரிஷியும் அபியும் நுழைய, அங்கே இருந்த ஊழியர்கள் அனைவரும் இருவரையும் சூழ்ந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைத்தையும் புன்னகையுடனே ஏற்றுக்கொண்ட ரிஷி அங்கே அமைக்கப்பட்டு இருந்த சிறு மேடையில் ஏறி, “குட் ஈவினிங் டூ ஆல். இந்த பார்ட்டி எதுக்குன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். இந்த வருஷம் நம்ப கம்பெனி லாஞ்ச் பண்ணின ‘ஸ்னோ ட்ராப் & ப்ளாக் ஆர்கிட் பெர்ஃப்யூம் சீரிஸ் இஸ் எ கிராண்ட் சக்ஸஸ். இன்ஃபாக்ட் இது நம்ப பிரீவியஸ் ரெகார்ட்ஸ் எல்லாத்தையும் பிரேக் பண்ணி நம்ப எதிர்பார்த்தை விட ஹையஸ்ட் சேல்ஸ் ரீச் பண்ணி இருக்கு. சோ நவ் ஐ தேங்க் யு ஆல் ஃபார் யுவர் சப்போர்ட் அண்ட் ஹார்ட்வோர்க். மை ஸ்பெஷல் தாங்க்ஸ் அண்ட் கங்ராஜூலேஷன் டூ தி ரிசர்ச் டீம் அண்ட் டூ தி அட்வர்டைசிங் பார்ட்னர், மை ஃப்ரெண்ட் சந்தோஷ் அண்ட் டீம். தேங்க் யு வெரி மச். ஒன் மோர் குட் நியூஸ்…. நீங்க எல்லாரும் தான் இந்த சக்ஸஸ்க்கு காரணம். சோ இந்த பிராஃபிட்டிலும் உங்க எல்லாருக்கும் ஷேர் உண்டு.” என்று அவன் சொல்லி முடிக்க அங்கே இருந்த அனைவரும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். அவர்களின் மகிழ்ச்சியை கண்டு சிரித்தவன் “ஓகே கய்ஸ் லெட்ஸ் என்ஜாய் தி பார்ட்டி.” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினான்.
அதன் பிறகு அங்கிருந்தவர்கள் தங்களுக்கு தேவைக்கு ஏற்ப மதுபானங்கள், கூல்ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொண்டு வெற்றியை கொண்டாட துவங்கிவிட. ரிஷி தன் நண்பன் சந்தோஷிடம் வந்தான்.
“ஹாய் மச்சான்… எப்படி இருக்க??”
“நல்லா இருக்கேன் மச்சி.” என்றான் சந்தோஷ்.
“அம்மா எப்படி இருக்காங்க?” ரிஷி கேட்க.
“அவங்களும் நல்லா இருக்காங்க. உன்னை ரொம்ப விசாரிச்சாங்க. வேலை விஷயமா கோவை வர ப்ளான் இருக்குன்னு சொன்ன இல்ல எப்போ வரேன்னு கேட்டாங்க.”
“வரணும் டா. என்னோட நெக்ஸ்ட் ஆர்டிகில்காக முதுமலை வரணும்ன்னு இருத்தேன். அதுக்குள்ள இந்த ப்ராடக்ட் லாஞ்ச்ல பிஸி ஆகிட்டேன். இங்க இன்னும் கொஞ்சம் ஓர்க் இருக்கு அது முடிஞ்ச உடனே அபியை பார்க்க சொல்லிட்டு வரேன்.”
“ஓகே மச்சி. எப்போ வரேன்னு சொல்லு நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்.” என்றான் சந்தோஷ்.
“ஓகே டா.” என்றவன், “ஆமா எங்க உன்னோட கிரியேட்டிவ் ஹெட்? ஆளையே காணோம் அவங்களையும் கூட்டிட்டு வர சொன்னேன் இல்ல. இந்த ப்ராடக்ட் இவ்வளோ ரீச் ஆனதுக்கு முக்கிய காரணமே அவங்க ஐடியா தான். சும்மா சொல்லக்கூடாது மச்சி உன் ஸ்டாஃப் செம டாலென்டட். எங்க அவங்க” என்று கேட்க.
“ஜானையா கேட்கற? நீ வரத்துக்கு கொஞ்சம் முன்னாடி தான் வெளியே போனாள். இப்போ வந்துருவா. அவளுக்கு இந்த மாதிரி பார்ட்டி எல்லாம் புடிக்காது. நான் தான் கம்பெல் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.” என்று சந்தோஷ் சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரிஷியின் ஃபோன் சிணுங்கியது. எடுத்து பார்த்தவன், நண்பனிடம் “மச்சி இம்பார்டண்ட் கால். பேசிட்டு வரேன். நீ அதுவரை பார்ட்டியை என்ஜாய் பண்ணு.” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
போனில் பேசிக்கொண்டே நடந்தவன், தனிமை தேடி காரிடோரின் கடைசியில் இருந்த கதவை திறந்துக் கொண்டு அந்த சிறிய பால்கனியில் வந்து நின்றான். அது ஹோட்டலின் பின்புறம் என்பதினாலும் சுற்றி இருந்த அடர்ந்த மரங்களினாலும் அங்கு வெளிச்சம் சிறிதும் இருக்கவில்லை. அத்தோடு அந்த சிறிய பால்கனியில் சுற்றிலும் அலங்கார செடிகள் வைக்கப்பட்டு இருக்க. ஒருவர் நிற்க மட்டுமே அங்கு இடம் இருந்தது.
ரிஷி பேசிவிட்டு வைக்கும் நேரம் யாரோ அவன் பின்னாடி வந்து நிற்பதை உணர்த்து, சட்டென்று திரும்பியவன் அருகில் ஒரு பெண் நிற்பதை பார்த்து புருவம் சுருக்கினான். “எக்ஸ்க்…” என்று அவன் அவளிடம் பேச எத்தனித்த நேரம், அவள் இதழ் மீது ஒற்றை விரலை வைத்து, “ஷ்ஷ்ஷு…. சத்தம் போடாதீங்க” என்று சொல்லியவளோ திரும்பி அந்த கண்ணாடி கதவின் வெளியே பார்த்தாள். யார் இவள் என்று யோசித்த ரிஷி அவள் முகம் பார்க்க முயற்சிக்க. அவனுக்கோ இருட்டில் உருவம் மட்டுமே தெரிந்ததே தவிர முகம் தெரியவில்லை.
அவள் செயலை புரியாமல் பார்த்த ரிஷி மெல்லிய குரலில், “மிஸ் எனி ப்ராப்ளம்??” என்று கேட்டான்.
அவளோ எந்த பதிலும் சொல்லாமல் வெளியே பார்த்தபடி இருக்க. ‘அப்படி எண்ணத்தை பார்க்கிறாள்” என்று யோசித்த ரிஷி, அவள் அருகில் வந்து நின்று வெளியே பார்த்தான். இருட்டில் இருந்த இவர்களால் வெளியே நடப்பதை தெளிவாக பார்க்க முடிந்தது. ஆனால் வெளியில் இருப்பவர்களுக்கு இருட்டில் நின்று இருந்த இவர்கள் தெரியவில்லை. ரிஷி பார்த்த போது ஹோட்டல் ஊழியரும், இன்னும் சில கஸ்டமர்ஸ் தான் இருந்தனர். அவனுக்கு வித்தியாசமாய் ஒன்றும் தெரியவில்லை. ‘என்ன ஆச்சு மேடம்’, என்று கேட்ட படி அருகில் இருந்தவளை பார்த்தான். அவளோ பதில் ஏதும் சொல்லாமல் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டபடி, பால்கனியின் கைப்பிடியில் சாய போனவளின் காலை அருகில் இருந்த பூந்தோட்டி இடறிவிட, அப்படியே பின்னால் சரிந்தவளை பார்த்து பதறிய ரிஷி, “ஏய்ய்….” என்றபடி அவள் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்தான். அவளோ பயத்தில் அவள் தொளை இறுக்க பற்றிக்கொண்டாள். இருவருக்கும் இடையில் நூல் அளவே இடைவெளி இருக்க, ஒருவரின் மூச்சு காற்று மற்றவர் மீது படும் நெருக்கத்தில் இருவரும் நின்று இருந்தனர். அவள் கண்கள் மூடி தன்னை ஆசுவசப்படுத்திக்கொண்டு இருந்த போது தான் ரிஷி அதை உணர்ந்தான். அவள் மீது இருந்து வந்த வாசம் அவனுக்கு மிகவும் பிடித்தமான காட்டு பூவின் வாசம் என்பதை.
ஒரு பெர்ஃப்யூம் கம்பெனியின் சொந்தக்காரனான அவன் பல பெர்ஃப்யூம் வாசத்தை முகர்ந்து இருக்கிறான். ஆனால் இவளின் இந்த வாசம் அவன் இது வரை யாரிடமும் கண்டதில்லை. இது அவன் மிகவும் விரும்பி ரசிக்கும் இயற்கையின் வாசம். அவனுக்கு பிடித்தமான காட்டின், காட்டுப் பூவின் வாசம் இது. அவள் வாசத்தில் மயங்கியவன் தன்னை மறந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க சென்ற நேரம் அவனது ஃபோன் ஒலி எழுப்பி அவனை நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது.
ஆழ்ந்த மூச்சிழுத்து தன்னை நிலைப்படுத்தியவன் ஃபோனை எடுத்து பார்க்க, மித்ரெஷ் தான் அழைத்திருந்தார்.
அழைப்பை ஏற்று, “சொல்லுங்க அப்பா. இங்க வெளியே தான் இருக்கேன். இப்போ வந்துறேன்.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன், இரு கைகளாலும் தலையை அழுந்த கோதிக்கொண்டு ரிசப்ஷன் ஹாலுக்கு சென்றான். அதன் பிறகு ரிசப்ஷன் முடிந்து அனைவரும் வீடு வர இரவு வெகு நேரமாகி இருக்க, வீட்டுக்கு வந்துமே அனைவரும் அசதியில் தத்தம் அறையில் தஞ்சம் புகுந்துகொண்டார்கள்.
**********************