அத்தியாயம் 6
ஒரு வாரம் விரைவாக கடந்திருக்க அன்று விடுமுறை ஆதலால் எல்லோரும் வீட்டில் இருந்தனர். அன்று மாலை ரிஷியிடம் சத்யாவுடனான திருமணத்தை பற்றி பேசிவிட முடிவெடுத்த இருந்தனர் பெரியவர்கள் நால்வரும். அன்று மாலை அபி மட்டும் ஹால் ஷோபாவில் அமர்ந்து லாப்டாபிள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான்.
அதை கண்ட வசுமதி, “என்ன அபி நீ மட்டும் தனியா இருக்க? பவியும் அம்முவும் எங்க?” என்று கேட்டப்படி அவன் அருகில் அமர்ந்தார். அவரை தொடர்ந்து மித்ரெஷ், நந்தகுமார் தேவகியும் ஒருவர் பின் ஒருவாராய் அங்கே வர.
“அவங்க ரெண்டு பெரும் ஏதோ புதுசா டிஷ் ட்ரை பண்றேன்னு கிச்சன்ல சண்டை போட்டுட்டு இருக்காங்க. ரொம்ப நேரமா சத்தம் மட்டும் தான் வருதே தவிர டிஷ் வந்த பாட்டை காணோம்.” என்று சொல்ல மற்ற அனைவரும் சிரித்தனர்.
“ரிஷி எங்கே ?” என்று மித்ரெஷ் கேட்க.
“அண்ணா ஸ்டுடியோல ஏதோ வேலை பார்த்துட்டு இருக்காரு.” என்றான் அபி.
“என்னடா இது அண்ணனும் தம்பியும் லீவு நாளில் கூட வேலை வேலைன்னு. நீ முதலில் இந்த லேப்டாப்பை முடி வைச்சுட்டு போய் உன் அண்ணனையும் கூட்டிட்டு வா எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாம். போ” என்று அவன் கையில் இருந்த லேப்டாப்பை பறித்துக்கொண்டு வசுமதி விரட்ட.
“அய்யோ அம்மா, ஒரு முக்கியமான மெயில் அனுப்பனும் லேப்டாப்பை கோடுங்க.” என்று அபி தன் லேப்டாப்பை அன்னையிடம் இருந்து வாங்க முயல, வசுமதியோ அதை அவனிடம் தர மறுத்து, “மெயில் எல்லாம் அப்பறம் அனுபிக்கலாம். இப்போ போய் உன் அண்ணனை கூட்டிட்டு வா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்றார்.
“என்ன முக்கியமான விஷயம்??” என்று அபி கேட்க.
“அபி சும்மா கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்கமா போ போய் ரிஷியை கூட்டிட்டு வா.” என்று மித்ரெஷ் சற்று அழுத்தமாய் சொல்ல.
“சரி இருங்க போறேன்.” என்ற அபி எழுந்து ரிஷியை அழைத்துவர சென்றான்.
நால்வர் முகத்தையும் ஆராச்சியாய் பார்த்துவிட்டு மாடி ஏறியவனின் மனதில், ‘அப்படி என்ன விஷயமா இருக்கும்?. ஒருவேளை ரிஷி கல்யாணத்தை பற்றி பேச போராங்களோ??.. அய்யய்யோ அப்படி இருந்தா வனி என்னை ஒரு வழி பண்ணிவிடுவளே. என்ன பன்றது? இன்னும் அண்ணியை பற்றி வேற ஒரு தகவலும் இல்ல. என்ன பன்றதுன்னு ஒண்ணும் புரியல’ என்று தனக்குள்ளே புழம்பியவன், வீட்டின் முதல் தளத்தில் அமைக்க பட்டு இருந்த தன் அண்ணனின் ஸ்டுடியோ அறைக்குள் நுழைந்தான்.
அபி சென்றதும், “ஹாய் ஆண்ட்டி உள்ளே வரலாமா??” என்ற குரல் கேட்டு வாசலை பார்த்தவர்கள் அதிர்ந்து சோபாவில் இருந்து எழுந்து நின்றார்கள்.
வாசலில் சத்யாவும் கிருஷ்ணாவும் நின்று இருந்தனர்.
இன் நேரத்தில் இவர்களை சற்றும் எதிர் பார்க்காத மித்ரெஷும் வசுமதியும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நொடி திகைத்து நின்ற பின் முதலில் சுதரித்த வசுமதி தான் இருவரையும் உள்ளே வரவேற்றார்.
இருவரும் புன்னகையுடனே உள்ளே வர அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல், “ஜனனிம்மா!!!!”, என்று கண்ணீர் குரலில் அழைத்த தேவகி பாய்ந்து சென்று சத்யாவை இறுக அணைத்துக்கொண்டார்.
வசுமதியை பார்த்த வாறே உள்ளே வந்த சத்யா, தேவகியின் செய்யலில் குழம்பி நிற்க. கிருஷ்ணாவும் அவரை புரியாமல் பார்த்தான்.
தேவகி 4 வருடங்கள் கழித்து தன் மகள் திரும்ப தன்னிடமே வந்து விட்ட மகிழ்ச்சியில், அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு, “எப்படிடாம்மா இருக்க?. அம்மா கிட்ட சொல்லாம எங்க போன? அம்மா மேல ஏதாவது கோபமா?? அப்படின்னா என் கூட சண்டை போட்டு இருக்கலாமே இப்படியா தவிக்க விட்டுட்டு போறது.?” என்று அவளை பதில் சொல்ல விடாமல் கேள்விகளை கேட்டுக்கொண்டே போக. அவள் அருகில் வந்த நந்தகுமார் கலங்கிய கண்களுடன் சத்யாவின் தலையை அன்புடன் தடவி கொடுத்தார்.
இவர்களின் செயளில் இம்மையும் புரியாமல் மறுமையும் புரியாமல் திகைத்து நின்ற சத்யா, மெல்லிய குரலில் “நான் சத்யா”, என்று சொல்ல வந்த நேரம் “ஜான்!!!!!!” என்ற குரலை கேட்டு திரும்பி பார்க்க. அப்போது தான் தேவகியின் குரல் கேட்டு வெளியே வந்தனர் பாவனாவும் அமிர்தாவும். சத்யாவை கண்டதும் பாவனா வேகமாய் அவள் அருகில் ஓடி வந்தாள்.
தன் முன்னே கண்ணீருடன் நிற்பவளை சத்யா புரியாமல் பார்க்க, “ஏன் டி இப்படி பண்ணின??” என்று கேட்டு அடுத்தநொடி அவள் கன்னத்தில் இடியென இறங்கியது பாவனாவின் கரம். இதை சற்றும் எதிர் பார்க்காத சத்யா தடுமாறி பின் அருகில் இருந்த கிருஷ்ணவின் கையை பற்றி தன்னை நிலை படுத்திக்கொண்டாள்.
பாவனாவின் செயளில் அதிர்ந்த பெற்றோர்கள் பாவனாவை அதட்ட.
“பவியை எதுக்கு மாமா அதட்டிறீங்க? அவ எந்த தப்பும் பண்ணலையே?.” என்ற கம்பீர குரலை கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க. கண்கள் கோபத்தில் சிவக்க, இறுகிய முகத்துடன் சத்யாவையே எரித்து விடுவது போல பார்த்தபடி படி இறங்கி வந்தான் ரிஷி. அவன் பின்னோடு வந்த அபியின் முகத்தில் கோபம், குழப்பம், அதிர்ச்சி, ஆச்சர்யம். என கலவனையான உணர்வுகள்.
வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே அனைவரின் செயல்களுக்கும் கோபத்துக்கும் காரணம் புரியாமல் நின்ற சத்யாவுக்கு இப்போது ரிஷியின் அனல் கக்கும் பார்வை கண்டு உள்ளுக்குள் ஒரு வித பயம் பரவியது. அவள் கைகள் தன்னை அறியாமலே கிருஷ்ணவின் கையை இன்னும் இறுக பற்றி கொண்டது. இதை கண்ட ரிஷியின் கண்கள் மேலும் கோபத்தில் சிவக்க, ‘எவ்வளோ திமிர் இருந்தா என் முன்னாடியே இன்னொருந்தன் கையை பிடிச்சுட்டு நிற்ப. உன்னை…..’ என்று கறுவியபடி, அழுத்தமான கால் அடியோடு அவள் முன்னே வந்து நின்றவனின் பார்வை அவள் கரத்தில் படிய. அடுத்த நொடி தன்னை அறியாமலே சட்டென்று தன் கரத்தை கிருஷ்ணவின் பிடியில் இருந்து விலக்கி கொண்டாள் பெண்ணவள்.
அவள் செயலில் சற்று சமாதானமானவன் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்து, “இங்க எதுக்கு வந்த?” என்று இறுகிய குரலில் கேட்டான்.
என்ன பதில் சொல்லவது என்று புரியாமல் சத்யா விழிக்க, “ஸார்…” என்று பேச ஆரம்பித்த கிருஷ்ணாவை முறைத்த ரிஷி, “நான் உங்களை கேட்கல்லை மிஸ்டர். இவங்க கிட்ட தான் கேட்டேன். இவங்க பதில் சொல்லட்டும்.” என்று சொல்லிவிட்டு சத்யாவை பார்த்தான். அவன் கூறிய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தாள் சத்யா.
இந்த வீட்டுக்குள் நுழந்தத்தில் இருந்து இங்கு இருபவர்களின் செயலுக்கான காரணம் புரியாமல் குழம்பி நிற்பவள், அவன் கேள்விக்கு என்னவென பதில் சொல்வாள். ஆனாலும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
வீட்டுக்குள் நுழைந்த உடனே ‘ஜனனிம்மா’ என்ற பாசமா அழைப்பை கேட்டதும் அவள் மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு தோன்ற தான் செய்தது. அதை தொடர்ந்து நந்தகுமார் அன்போடு அவள் தலை கொதியது பொது அந்த ஸ்பரிசம் அவளை ஏதோ செய்வதை போல் உணர்ந்தாள்.
அவள் மனதில், ‘இவர்களுக்கும் தனக்கும் என்ன சம்மந்தம்?. இவர்களது ‘ஜனனிம்மா’ ‘ஜான்’ என்ற அன்பான உரிமையான அழைப்பு, இந்த கனிவான வருடல், எல்லாம் ஏன் என் மனதை ஏதோ செய்கிறது? இவர்கள் கண்ணீர் கண்டு ஏன் என் மனம் வலிக்கிறது? என்ற அடுக்கு அடுக்காய் கேள்வி தோன்ற, அவளுக்கு லேசாக தலை வலிப்பது போல இருந்தது. அவள் கை தானாய் உயர்ந்து தலையை பிடித்துக்கொண்டது.
அவள் செயலை கண்ட கிருஷ்ணா பதறி நிலமையை சீர் செய்யும் பொருட்டு ரிஷியின் முறைப்பை பொறுபடுத்தாமல் அவனை நேர் பார்வை பார்த்தபடி, “ஸார், நாங்க இங்க மிஸ்டர் அபியோட மேரேஜ்க்கு வர முடியாம போனதுனாளா அவரை பார்த்து விஷ் பண்ண வந்தோம். அவளோதான். நீங்க வேற யாரோன்னு நினைச்சுக்கிட்டு எங்க கிட்ட பேசிட்டு இருக்கீங்க. நான் வம்சி கிருஷ்ணா. இவங்க என் அத்தை பொண்ணு சத்யா. உங்க அம்மாவோட ஃப்ரெண்ட் ஸ்ரீயோட பொண்ணு.” என்று சொன்னவன் சத்யாவின் தோல் மீது கை போட்டு மெல்ல தட்டி கொடுத்து அவளை அமைதி படுத்த முயன்றான்.
கிருஷ்ணா சொன்னதை கேட்டதும் சுற்றி இருந்த அனைவரின் மனதில் வேவேறு உணர்வுகள் தோன்றின. அபியும் பாவனாவும் குழபமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள. தேவகியும் நந்தகுமாரும் சத்யாவையே ஏக்கமாய் பார்த்தபடி நின்று இருந்தனர். மித்ரெஷ் வசுமதி அமிர்தா மூவரும் சத்யாவின் முகத்தையே ஆராய்ச்சியாய் பார்த்துக்கொண்டு இருக்க.
ரிஷியோ ஒரு நொடி புருவம் சுருக்கி சத்யாவை பார்த்தவன், கிருஷ்ணா சத்யாவின் தோள் மீது கை போடவும் ஆத்திரதின் உச்சதிற்கே சென்றான். கோபத்தில் “இவளா மாதிரி ஒரு கேடு கேட்ட திரோகியோட வாழ்த்து என் தம்பிக்கும் அவன் மனைவிக்கும் தேவையில்லை. முதலில் ரெண்டு பெரும் வெளியே போங்க.” என்றான்.
ரிஷியின் இந்த வார்த்தையில் சுற்றி இருந்த அனைவரும் அதிர்ந்து ரிஷியை பார்க்க. அதுவரை தன் மனதில் தோன்றிய உணர்வுகளுக்கு காரணம் புரியாமல் தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டு இருந்த சத்யா ரிஷி தன்னை திரோகி என்றதும் விலுக்கென நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது.
“ரிஷி!!!!!! கோபத்தில் என்ன பேசுறோம்ன்னு புரியாமல் உளராத” என்று மித்ரெஷ் கண்டிக்க.
“நான் புரிஞ்சு தான் அப்பா பேசுறேன். இன்ஃபாக்ட் இவளா பத்தி நல்லா புரிஞ்சதுனால தான் இப்படி பேசுறேன். இதோ பன்றது எல்லாம் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நிற்கிறாளே இவ ஒரு சுயநலவாதி அப்பா. இன்னும் சொல்ல போன பச்ச திரோகி.” என்று அவள் முகத்தை பார்த்துக்கொண்டே வார்த்தைகளை கடித்து துப்பினான்.
இப்போது தான் முதல் முறை பார்க்கும் ஒருவன் தன் மேல சொல்லும் அடுக்கடுக்கான குற்றசட்டை தாங்க முடியாமல் கண்களில் நீரோடு அவனை பார்த்தவளின் தலை வலி இப்போது இன்னும் அதிகமானது. அது அவள் முகத்தில் பிரதிபலிக்கவும் நொடியில் கிருஷ்ணா அதை கண்டுகொண்டான்.
ரிஷியின் குற்றசாட்டில் கிருஷ்ணாவுக்கு கோபம் வந்தாலும், இப்போது சத்யாவை அமைதி படுத்துவதே முதன்மையாக தோன்ற அவள் தோள் வலைத்திருந்த கையால் அவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டான். இது வழக்கமாக எப்போதும் தனக்கு தலை வலி வரும் பொது கிருஷ்ணா தன்னை அமைதி படுத்த செய்யும் செயல் தான் என்பதினால் சத்யாவும் அவனோடு ஆறுதலாக ஒன்றிக்கொண்டாள். ஆனால் இதை கண்ட ரிஷியின் கோபம் இன்னும் அதிகமானது.
“பொதும்ப்பா, என் பெண்ணை பற்றி இப்படி எல்லாம் பேசாத. அவ அப்படி கிடையாது”. என்று நந்தகுமார் பரிந்துக்கொண்டு வர.
“கேட்டியா? என்ன சொன்னாருன்னு கேட்டியா??? நீ இவங்களை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போன பிறகும் உன்னை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேன்றார். இதுதான் இவங்களோட பாசம். ஆனா நீ….. பதிலுக்கு என்ன பண்ணின?? ம்ம? அன்னைக்கு ஹார்ட் அட்டாக் வந்து உன் நந்துப்பா ஹாஸ்பிடல் சீரியஸா இருக்காருன்னு நான் போனில் சொன்ன பொது நீ என்ன சொன்ன?? ஹ்ம்ம… சொல்லு என்ன சொன்ன?” என்று கோபத்தில் கர்ஜிக்க.
சத்யா மௌனமாய் கண்களில் நீரோடு அவன் முகத்தை பார்த்தபடி நின்றாள்.
அதற்க்கு மேல் பொறுக்க முடியாமல், ரிஷியின் அருகில் வந்த பாவனா, “பாஸ் பிளீஸ் அவ என்ன வேணா சொல்லி இருக்கட்டும். அது எல்லாம் விட்டு தள்ளுங்க. இப்போ தான் திரும்பி வந்துட்டாலே மத்தது எல்லாம் பொறுமையா பேசிக்கலாம்.
பிளீஸ் இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்.” என்றாள்.
இதுவரை சத்யாவின் மீது இருந்து பார்வையை விலகாமல் இருந்தவன் ஒரு நொடி திரும்பி பாவனாவை பார்த்துவிட்டு, மீண்டும் சத்யாவை பார்த்தபடி, “இவ என்ன சொன்னான்னு தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட பவி.” என்றான்.
அப்போது தான் அன்று மருத்துவமனையில், “இவங்க அன்பிற்கும் பாசதிற்கும் அவள் கொஞ்சமும் திகுதி இல்லாதவள்.” என்று ரிஷி சொன்னது நியாபகம் வர, “என்ன அண்ணா சொன்னாங்க?” என்று கேட்டான் அபி.
கிருஷ்ணாவின் கை அணைப்பில் இன்னும் நின்று இருபவளின் மீது ஆத்திரம் எழ, அவளை பார்த்துக்கொண்டே. “இப்போது எனக்கு அவர்கள் தேவை முடிஞ்சு போச்சு. இனி அவர் இருந்தாலும் செத்தாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று சொல்லி கட் பண்ணிவிட்டாள் டா அபி, இந்த சுயநலவாதி.” என்று ரிஷி சொல்ல சுற்றி இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டார்கள். கிருஷ்ணா உட்பட. நந்தகுமார் நெஞ்சை பிடித்துக்கொண்டு சோபாவில் சரிந்தார். அனைவரும் பதறி அவரிடம் விரைந்தனர். கிருஷ்ணாவும் சத்யாவை விட்டுவிட்டு நந்தகுமாரிடம் விரைந்தான்.
“நின்ற இடத்தில் அசையாமல் நின்றது ரிஷி சத்யா மட்டுமே.
ரிஷி அவளை பார்த்துக்கொண்டே நிற்க. அவளுக்கோ ரிஷி சொன்னதை கேட்டதும் தன் தலையில் யாரோ சம்பட்டியால் அடித்தது போன்ற வலியை உணர்ந்தாள். அவள் இதயம் வேகமாய் துடித்துக்கொண்டு இருந்தது. கலவையான குரல்கள் அவள் காதில் எதிரொலித்தது. தலை வெடித்து விடும் போல வலிக்க துவங்கியது. இரு கைகளாலும் தலையை பற்றி கொண்டாள். வலி அதிகமாகி கொண்டே போனது.
நந்தகுமாரின் அருகில் வந்த கிருஷ்ணா, அவரை அசுவாச படுத்த முயன்றான். சற்று நேரத்தில் தன்னை மீட்டுக்கொண்ட நந்தகுமார் நிமிர்ந்து சத்யாவை பார்த்தார்.
கோபமாக சத்யாவின் அருகில் வந்த பாவனா, “நீயா அப்படி சொன்ன?? ஏன் ஜான்?? ஏன் அப்படி சொன்ன?” என்று நம்பாத குரலில் கேட்க.
அவள் அமைதியாக இருந்தாள்.
“உன்னதாண்டி கேட்கிறேன் பதில் சொல்லு???” என்று கேட்டு அவள் தோல் பற்றி உலுக்க. வேரோடிந்த மரமாய் மயங்கி சரிந்தாள் சத்யா.
******************************