இம்சைகள் – 5
தங்கள் சொந்தங்களை எல்லாம் விட்டுப் பிரிந்து.. இவர்கள் சென்னை வந்ததற்கான காரணம் பற்றி பரி கேட்க… அந்நாளைய நினைவின் தாக்கம் தெரிந்தது தாமரையின் முகத்தில். காெஞ்ச நேரம் கைவிரல்களையே பார்த்திருந்தவள் தாெடர்ந்தாள்.
“எங்களுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் கடந்துருக்கும்… அப்போதும் உங்க தாத்தாக்கு உங்க அப்பா கிட்ட ஒரு ஒட்டுதலே வரலை. இது எங்களுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. நானும் அதை மாத்த எவ்வளவோ முயற்சி செஞ்சேன். பலன் கிடைக்கல… சரி என்னைக்காவது காலம் மாறும்னு இருந்தோம்.” என்றாள் ஒரு பெருமூச்சுடன்.
” ஒரு நாள் என்னாச்சு… நம்ம தோப்புல வரவு செலவு கணக்கை எல்லாம் பார்த்த போது, உங்கப்பாக்கு அங்க நடக்குற பணக் கையாடல் எல்லாம் தெரிய வந்தது. இதை செய்யுறது யாருன்னு தேடினப்பாே, அது அங்க பெரிய பொறுப்புல இருக்குற என்னோட ஒன்னு விட்ட சித்தப்பா பசுபதிங்கறவர்னும் கண்டுபிடிச்சுட்டாரு” என அவர்கள் பிரிந்து வரக் காரணமாய் இருந்த அந்த நிகழ்வைச் சொல்ல ஆரம்பித்தாள் தாமரை.
ஒருநாள் மதியம் சந்திரன் இதனைப் பசுபதியிடம் பட்டீஸ்வரன் முன்னால் வைத்து கேட்டார்.
“அதையெல்லாம் உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று பதில் வந்தது பசுபதியிடமிருந்து.
மாப்பிள்ளை என்னும் மறியாதையை பட்டீஸ்வரனே கொடுக்காததை அறிந்த இளக்காரமாே அவர் பேச்சில்!
தான் செய்த கையாடலை சந்திரன் கண்டுபிடித்து நிற்க வைத்துக் கேட்டுவிட்டாரே என்ற ஆதங்கம் பசுபதிக்கு.
“என்னங்க மாமா இப்படிப் பேசுறீங்க… பணம் கணக்கு இடிக்குதே… அதுக்கு ஏதாவது விளக்கம் இருக்கானு தானே கேக்குறேன்” என்றார் சந்திரன் பசுபதியிடம்.
“அதுதான் உன்கிட்ட ஏன் சொல்லணும்னு கேட்கறேன். நேத்து வந்த பையன் இன்னைக்கு இங்க அதிகாரத்தை எடுத்துக்கிட்டயா… உனக்கு இந்த ஜமீன் பத்தி என்ன தெரியும்? நெலம் சாெத்துன்னு எதையாவது பார்த்திருந்தா தெரியும். உங்க பரம்பரைல தான் எதுவும் இல்லயே.” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே சந்திரன் அவர் சட்டையைப் பற்றி இருந்தார்.
“விடுங்க மாப்பிள்ளை அவர” என்றார் பட்டீஸ்வரன்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பட்டீஸ்வரன் இப்போது மட்டும் பேச… அவரைத் திரும்பிப் பார்த்தார் சந்திரன்.
பின் கையை இருக மூடியவர், எதுவும் பேசாமல் கணக்கு நோட்டைப் போட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினார்.
அவர் அறையின் வாசலைத் தாண்டிய சமயம், சந்திரனது கைகளைப் பற்றி மீண்டும் உள்ளே அழைத்து வந்தாள் தாமரை.
“அப்பா இவரை முதலில் இங்கிருந்து பாேகச் சொல்லுங்க” என்றாள் பசுபதியையே பார்த்தபடி.
அப்போது அவ்வளவு பேசிய பசுபதி இப்போது எதுவும் பேசாமல் வெளியேறினார்.
தன் தந்தையிடம் திரும்பிய தாமரை, “என்னப்பா இதெல்லாம்… இவர் என்ன தப்பு செஞ்சாரு .. என்னைக் கல்யாணம் பண்ணதைத் தவிர??”
“அதில்லைமா… என்னதான் இருந்தாலும் அவரு உன் சித்தப்பா”
“இவரு உங்க மாப்பிள்ளைப்பா… உங்க பொண்ணோட வாழ்க்கை இது. ஒரு வெளி ஆள் முன்னால நீங்க இவரை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது”
“தாமரை….” என்று சந்திரன் அழைக்க…
“இருங்க … நான் ரொம்ப நாளா கேக்கணும்னு நெனச்சத எங்கப்பாகிட்ட கேட்டே ஆகணும்” என்று தொடர்ந்தாள்.
“இப்போனு மட்டும் இல்லப்பா. இத்தனை வருஷமா நீங்க இவருக்கு மாப்பிள்ளைங்கற மறியாதையைக் கொடுத்திருக்கீங்களா?
ஒரு பொண்ணுக்கு மறியாதை அவ புருஷனுக்கு கிடைக்கிற மறியாதைல தான் இருக்கு”
இந்த நேரத்தில் அங்கு வந்திருந்த குணா, “தாமரை .. போதும்.. பாே…அப்புறம் பேசிக்கலாம்” என்று தாமரையை அனுப்ப முயன்றார்.
“இல்லண்ணா.. நான் இப்பவே கேட்டாகணும்.
‘சொல்லுங்கப்பா.. உங்களுக்கு உங்க கெளரவம் தான் பெருசு இல்ல? இத்தனை நாளா இவர் இதை எல்லாம் சகிச்சுக்கிட்டு இங்க இருக்காருனா அது எம்மேல உள்ள பாசம். அதை இதுக்கு மேலயும் நான் சோதிக்கக் கூடாது. இதை எல்லாம் பார்க்கும் போது நான் உங்க பொண்ணு இல்லையோனு எனக்கு தோணுது.”
தாமரையின் வார்த்தைகள் எல்லை மீறிய சமயம், “போங்கறேன்னில்ல..” என்ற குணாவின் கை தாமரையின் கன்னத்தில் இறங்கி இருந்தது.
“குணா…” என பட்டீஸ்வரனும்
“மச்சான்…!!!” என சந்திரனும் பதறிவிட்டனர்.
தாமரை கன்னத்தைப் பிடித்துக்காெண்டே திகைத்துப்பார்க்க,
அப்போது தான், தான் செய்த காரியத்தை உணர்ந்தார் குணா.
“அய்யோ… என்னை மன்னிச்சுடும்மா…. உன் வார்த்தைகள கேட்டு என்னையும் அறியாம…” என குணா ஏதாே சொல்ல வர…
அவரைக் கையை நீட்டி தடுத்தவள்,
“போக தானேண்ணா சொன்ன?? போறேண்ணா… இந்த வீட்ட விட்டே போய்டறேன். நீயும் இவங்க கூட சேர்ந்துட்ட இல்ல…
‘நம்ம ஜமீனைப் பத்தி ரெண்டு விஷயத்துக்கு பெருமையா பேசுவாங்க. ஒன்னு கெளரவம், இன்னொன்னு வைராக்கியம். நீங்க கெளரவத்தை எடுத்துக்கிட்டீங்க.. நான் வைராக்கியத்தை எடுத்துக்கறேன். நான் இனி இங்க வரவே மாட்டேன். யாரும் எங்களைத் தேடி வரக் கூடாது. இது எம்மேல சத்தியம்.” என்று விட்டு சந்திரனை இழுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைத் தூக்கும்போது,
“அத்த எங்க பாேற? நானும் வரேன்” என அவரது சேலையைப் பிடித்தாள் மது.
கண்கள் கலங்க “பரி மாதிரி உன்னையும் கூட்டிட்டு பாேக எனக்கு உரிமை இல்லடா.. ” என்று அவள் தலையைத்தடவி கன்னத்தில் ஒரு முத்தம் வைத்துவிட்டு எழுந்தாள்.
போகும் போது யார் தடுத்தும் கேட்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறி மெட்ராஸ் வந்து 18 வருடங்கள் உருண்டாேடி விட்டன.
அப்படி வருகையில்… சந்திரன் குடும்பத்திற்கு சொந்தமாக மிஞ்சியிருந்த நிலங்களில் சிலவற்றை விற்றுவிட்டு.. அந்த பணத்தைக் கொண்டு தான் சென்னையில் தங்கள் வாழ்வையும் தொழிலையும் தொடங்கினர்.
“அதுக்கப்புறம் நீங்க அங்க போனதே இல்லையாம்மா? தாத்தா, மாமா இவங்களை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கலையா?” என ஆதி வினவ,
“அப்பாே அங்க இருந்து வந்ததுக்கப்புறம் அவங்க எப்படி இருக்காங்க, என்ன பண்றாங்கனு எல்லாம் நாங்க தெரிஞ்சுக்கிட்டதே இல்ல. எல்லோரும் நல்லா இருப்பாங்கன்ற நம்பிக்கை தான்.
அந்தஸ்து பணம் இது எல்லாத்துக்கும் மதிப்பு கொடுக்குறவங்களுக்கு, நாம நம்மல நிரூபிச்சுக் காட்டணும்… காட்டிட்டு தான் அவங்க முன்னால போகணும்கிற எண்ணம் மட்டும் தான் இருந்தது. அது தான் கடந்த பதினெட்டு வருஷமா அங்க பாேகாம எங்களை தடுத்துச்சு… அதனால, உங்கப்பா எது செஞ்சாலும் நான் துணையா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அவர் தாங்கிக்கிட்ட அவமானங்கள் எல்லாம் எனக்காக மட்டும் தான?!” என்று கண்களில் நீர் நிறைய சந்திரனை பெருமையாகப் பார்த்தாள் தாமரை.
பெற்றவர்கள் சந்தித்த வேதனையை எண்ணி பரிக்கும் கண்களில் நீர் துளிர்த்தது. யாரும் அறியாவண்ணம் கண்களை மூடித்திறந்து மறைத்தாள்.
ஆதிக்கு தன் பெற்றவர்களின் காதலை எண்ணி மெய் சிலிர்த்தது. ‘சே… என்ன லவ் டா… காதலிச்சா இப்படி காதலிக்கணும்’ என்று ஓடியது அவன் மனதில்.
“அது மட்டும் இல்லாம… ஜமீன் பரம்பரை… காசு பணம் கொண்டவங்க என்கிற நினைப்பு… உங்க மனசுல வந்திடக் கூடாதுங்கறதுனால தான் உங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சப்பவும் உங்க கிட்ட சொல்லல…” என்றாள் தாமரை.
தாயின் கைகளை லேசாக அழுத்தினாள் பரி. அது ‘புரிகிறது’ என்பதைச் சொல்லியது.
“சரி நாம எப்ப கிளம்பலாம்… என்னென்ன ஷாப்பிங் பண்ணணும்… எல்லாம் ப்லான் பண்ணனும்” என உற்சாகமானாள் பரி.
“சரி நீங்க ப்லான் பண்ணுங்க… நான் நீங்க ஊருக்கு போய்ட்டு ரிடர்ன் வந்த வாட்டி வரேன்” என நைசாக நகர்ந்தான் சிவா.
எட்டி அவன் காலரைப் பிடித்து நிப்பாட்டிய ஆதி, “எங்கடா ராசா எஸ்கேப் ஆகுற?? நீயும் தான் வர பூந்துறைக்கு” என்றான்.
“நீங்க பாேய்ட்டு வாங்கண்ணா… நான் எதுக்கு… யூ என்ஜாய்… எனக்கு என் பைலட் டிரைனிங் இருக்கு”
“நீ தான் டா எங்க என்டர்டெய்ன்மென்ட் பேக்கேஜ்.. உன்ன மிஸ் பண்ணிட்டு பாேவோமா??” என்றாள் பரி.
“அதுவுமில்லாம, உன் டிரைனிங் முடிஞ்சது எங்களுக்கு தெரியும். இன்டர்வியூக்கு இன்னும் 2 மாசம் இருக்கு. சோ… வீட்டுக்கு போய் உன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு சமத்து பையனா வர… Dot…” என முடித்துவிட்டான் ஆதி.
‘ஹையாே… ப்ரீத்தி வேர outing போலாம், movie போலாம்னு எல்லாம் சொல்லிருந்தாளே’ எனத் தலையில் கை வைத்து உட்கார்ந்தான் சிவா.
ஆளாளுக்கு ஒவ்வொரு மனநிலையில் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். தாமரை, சந்திரன் இருவருக்கும் பதற்றமான மனநிலை என்றால், ஆதிக்கு உள்ளே பரவசம் பொங்கியது. மாமன் மகள் பைங்கிளியைப் பார்க்கப் பாேகும் பரவசம்.
பரி ‘பட்டூ… இரு வந்து உன்ன ஒரு கைப் பாக்குறேன்… ஜீவா … டேய் பட்டிக்காட்டு பண்ணையாரே.. நீ என்ன சின்ன வயசுல பண்ணதுக்கெல்லாம் இம்சை பண்ணி உன்ன சாவடிக்கிறேன் பாரு…’ என கருவிக் கொண்டாள்.
பார்ப்போம் … இவள் இம்சித்து அலற வைப்பாளா? இல்லை இவளே அலறுவாளா? என்பதை…
– இம்சைகள் தொடரும்…