உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் – 17

 

எங்கள் வீட்டுக்கு இரண்டு லட்சுமிகள் வந்திருக்கிறார்கள் என்பதை அந்த வீட்டின் வாசலில் கொட்டியிருந்த ஆலம் கரைத்த நீர் தம்பட்ட மடிக்க, இரு நிலவுப் பெண்களும் ஒரே நேரத்தில் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்து இதுவரை அந்த வீட்டில் இருந்த இருளை விரட்டி அடித்தனர். அகல்யா தன் புது மருமகளை விட, தனது வருங்கால அண்ணியை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார். ரம்யாவோ வீட்டில் மதி நுழையும் போது அவர் கையைப் பிடித்தவர் அதன் பின் கையை விடவே இல்லை. இரு பெண்களும் இப்படி என்றால் அபிநந்தன் தம்பி ரகுநந்தன் வார்த்தைக்கு வார்த்தை மதியை அண்ணி அண்ணி என்று உரிமையோடு அழைக்க மதிக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 

“ஏன் நீங்க என்ன அண்ணின்னு கூப்புடுறீங்க”? என்று புரியாமல் மதி கேட்க.

 

“நீங்க நந்து அண்ணாவ கல்யாணம்” என்று ரகு வாய் தவறி உலறத் தொடங்க, அனைவரும் அதிர்ந்து விட நிலாவுக்கு நெஞ்சே அடைத்துக் கொண்டது. “ஆத்தாடி இந்த சித்தப்பா முதலுக்கே மோசமாக்கிடுவாரு போல இருக்கே. ரம்யா அத்த ஏதாவது பண்ணுங்க, அட்ஜஸ்ட் அட்ஜஸ்ட்” என்று நிலா கையாட்ட “இரு டி வரேன்” என்ற ரம்யா.

 

“அது… அது வந்து அண்ணி, அய்யோ டக்குன்னு ஒன்னும் வரமாட்டேங்குது. ஹான், நீங்க… நீங்க நிலா அம்மா இல்ல. நிலா எங்க மருமக இல்ல. அப்ப அவ ரகு அண்ணாக்கு மக முறை இல்ல. அதனால நீங்க அண்ணி முறை இல்ல. அதைத் தான் ரகு அண்ணா சொல்றாங்க” என்று ரம்யா வாய்க்கு வந்ததைச் சொல்லி வைக்க மதியோ குழப்பமாக ரகு, ரம்யாவை பார்த்தவர் “ஓஓஓ அப்டியா? சரிங்க” என்று அமைதியாக விட ரம்யா திரும்பி ரகுவை முறைக்க “சாரிடா, ரொம்ப சாரி” என்று கண்களைச் சுருக்கி கெஞ்சினார்.

 

“ஒரு நிமிஷத்தில நாங்க ஒரு மாசம் உக்காந்து போட்ட ப்ளானை ஊத்தி மூடப் பாத்தியேடா? நல்லவனே, நீ தயவு செஞ்சு கொஞ்ச நேரம் இல்ல கொஞ்ச நாளைக்கு மௌன விரதம் இரு. இல்லாட்டி மதிக்கும், எனக்கும் கல்யாணம் முடியுற வரை உன் பொண்டாட்டியக் கூட்டிட்டு செகண்ட் ஹனிமூன் போய்டு வாடா” என்று அபி தம்பி காதை கடித்து துப்ப.

 

“அதெல்லாம் முடியாது, இந்த நல்ல காரியத்தில என்னோட பங்கு இருக்கணும்னு என் அடி நெஞ்சு பிரண்டுது நந்து. நா இங்க இருந்தே தான் தீருவேன்”

 

“டேய் அது கல்யாணத்துல தின்னது செரிக்காம நெஞ்சுல இருக்கும்டா. போய் ஜெலுசில் குடிச்சின்ன சரியாகிடும். அதைவிட்டு என் வாழ்கையில கும்மியடிக்காதடா. மீ பாவம்டா. இத்தனை வருஷம் கழிச்சு என்னோட மதி எனக்குத் திரும்பக் கெடச்சிருக்கா. நீ கண்டதையும் உலறிக் கொட்டி அவள விரட்டிடாத. ப்ளீஸ் ஹெல்ப் மீ” என்று கெஞ்ச, “சரி பிரதர் உனக்காக இல்லாட்டியும் மதி அண்ணிக்காக நா என்னோட வாய்யோட ஜிப்பை இழுத்து மூடிக்கிறேன்” என்று வாயை மூடிக்கொள்ள “நன்றிடா உடன்பிறப்பே” என்று நந்தன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

 

“மதி அண்ணி வாங்க உங்க ரூமை காட்டறேன்” என்று மதியை அழைக்க, “இருக்கட்டும் ரம்யா நா கொஞ்ச நேரம் இங்க உங்க கூட இருக்கேன்”.

 

“இல்ல அண்ணி, நீங்க பாக்க ரொம்ப சோர்வா தெரியுறீங்க. ரூம்க்கு போய்ட்டு கொஞ்சம் ஃபர்ஷ் அப் பண்ணிட்டு வரலாம் வாங்க” என்று மதியை அழைக்க அபிநந்தன், “ரம்யா நீ இரும்மா. நீயும் ரொம்ப டயர்டா இருப்ப. நா அவங்களைக் கூட்டிட்டுப் போய் அவங்க ரூம்மை காட்டுறேன்” என்ற தமையனைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்த ரம்யா “ஆமாமாம் எனக்குக் கொஞ்சம் கால் வலிக்குது தான். நீயே அண்ணிய கூட்டிப் போய் அவங்க ரூமைக் காட்டு” என்று கண்சிமிட்ட நந்தன் முகத்தில் வெட்கத்தின் சாயல். “ரொம்ப பேசாத ரம்யா. பாரு, இன்னும் புதுப் பொண்ணு, மாப்பிள்ளைக்கு பாலும், பழமும் கூட நீங்க தரல. நல்லா இருக்கு உங்க லட்சணம். வாய் பேசாம ஒழுங்கா அந்த வேலையைப் பாருங்க” என்ற நந்தனை துருவ் கையெழுத்துப் கும்பிட்டவன்…

 

“தெய்வமே இப்ப வாச்சும் எங்க ரெண்டு பேர் ஞாபகம் உங்களுக்கு வந்துச்சே. நாங்களும் அப்ப புடிச்சு பாக்குறோம். ஒருத்தரும் எங்கள கண்டுக்கவே மாட்றீங்க. ஒரு புதுக் கல்யாண ஜோடின்ற மரியாதையே இல்ல. பால், பழம் வேணாம். ஒரு வாய் பச்சஸதண்ணியாச்சும் யாராவது தந்தீங்களா?” என்று துருவ் அங்கலாய்த்துக் கொள்ள.”

 

“ஏன்டா டேய்? உனக்கு இந்த வீட்ல கிச்சன் எங்க இருக்குன்னு தெரியாதா? தண்ணி வேணும்னா எழுந்து போய்க் குடிப்பியா அதைவிட்டு சும்மா பேசிட்டு. போடா போய் தண்ணி குடிச்சிட்டு, அப்படியே நிலாக்கும் குடிக்க எதும் எடுத்துட்டு வந்து குடுடா. பாவம் புள்ள முகம் வாடி இருக்கு” என்ற தன் அம்மாவை முறைத்த துருவ், “யூ டூ மம்மி, முகில் இவங்க எல்லாரும் என்னை இன்சல்ட் பண்ணிட்டாங்க. இனி ஒரு நிமிஷம் நா இங்க இருக்க மாட்டேன். வா நம்ம கோவமா, நம்ம ரூம்க்குப் போலாம்” என்று மனைவி கையைப் பிடித்து இழுக்க.

 

“டேய் போறதுனா நீ போடா. அவள எங்க கூப்புடுற”? என்று அகல்யா கேட்க.

 

“இதென்ன கேள்வி என் பொண்டாட்டி, நா கூட்டிட்டுப் போறேன். உங்களுக்கு என்னவாம்? நீ வா முகில் நம்ம போலாம்.”

 

“டேய் டேய், நீ என்ன ப்ளான் பண்றனு எங்களுக்கு நல்லா புரியுதுடா. நீ ஏன் இப்ப இப்டி கஷ்டப்பட்டுக் கோவத்த வர வச்சுத் தம் கட்டிட்டு நடிக்கிறனு தெரியும். நீ என்ன செஞ்சாலும் இப்ப நிலா, அச்சோ இல்ல இல்ல அண்ணிய உன்னோட தனியா அனுப்ப மாட்டோம். உங்க ஃபர்ஸ்ட் நைட்க்கு இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் டேட் ஃபிக்ஸ் பண்ணி இருக்கு. அதுவரைக்கும் உங்க ரெண்டு பேரையும் தனியா எங்கயும் விடவே மாட்டேன். இது அந்தப் பூமரத்து பிச்சாத்த மேல சத்தியம்” என்று கார்த்திக் உறுதியாக சொல்ல…

 

“அது யாரு டா பூமரத்துப் பிச்சாத்தா?” என்று ரம்யா கேட்ட.

 

“அது என் எக்ஸ் கேர்ள் ப்ரெண்ட்டோட குல சாமி நேம் மம்மி. நீ கண்டுக்காத” என்று கார்த்திக் கண்ணடிக்க, அதைக் கண்டுக்க வேண்டியவள் அதை கவனமாகக் கண்டு கொண்டாள்.

 

துருவ், கார்த்திக் அருகில் வந்தவன் “ஓய் ப்ரோ? வொய் மீ? எதுக்கு இந்தக் கொலவெறி?”

 

“இருக்காதா பின்ன, நீயாச்சும் வருஷக்கணக்கா லவ் பண்ணி சில பல சில்மிஷம், சில பல முத்தங்கள் அப்டி இப்டின்னு ஏதாவது செஞ்சிருப்ப. ஆனா, நா? இத்தன நாள் இந்த யாழி பிசாசு என்னை லவ் பண்ணலயேனு பொலம்பிட்டு திரிஞ்சேன். இப்ப அவளும் என்ன லவ் பண்றான்னு தெரிஞ்சு போச்சு. தெரிஞ்சு என்ன யூஸ்? காதல் தெரிஞ்ச நாளே சண்டையப் போட்டு நா மண்ட காஞ்சு போய்க் கெடக்குறேன். உனக்குக் குதூகலம் கேக்குதா? நா என் யாழி கிட்ட ஒரு வார்த்தை பேச முடியாம தவிக்கும் போது நீ அண்ணியோட ரொமான்ஸ் பண்ணா எனக்கு எரியுமா எரியாதா”? என்றவனை மேலும் கீழும் பார்த்த துருவ் “நீ எல்லாம் நல்லா வருவடா. ஒரு தம்பியா உன்னால என்ன முடியுமோ அத சிறப்பா செஞ்சிட்ட. இதுவரை இந்த யாழினி பிசாசு மட்டும் தான் எனக்கும் நிலாவுக்கும் நடுவுல வேதாளம் மாதிரி தொங்கிட்டு திரிஞ்சுது. இப்ப நீயும் பேயோட, பிசாசா சேந்துட்ட. நடத்துங்கடா நடந்துங்க. ஆனா, ஒன்னு யாழி, உனக்கு லவ்வராகுறதுக்கு முன்னையே எனக்கு அவ ப்ரண்டுடா. அவகிட்ட உன்னைப் பத்தி வத்தி வைக்கல நான் முகில்நிலா புருஷன் இல்லடா” என்று வீரவசனம் பேசி விட்டுச் செல்ல கார்த்திக் அடிவயிறு கலக்கியது. “டேய் டேய் அண்ணா அப்டி எதும் செஞ்சிடாத, நா பாவம்” என்று மெதுவாகச் சொல்ல, “அதை நீ உன் எக்ஸ் கேர்ள்பிரண்ட் குலசாமி மேல சத்தியம் பண்றதுக்கு முன்ன யோச்சிருக்கணும் தம்பி. திரும்பிப் பார். முழுசா சந்திரமுகியா மாறி இருக்க உன் யாழினியைப் பார்” என்ற துருவ் நகர்ந்து விட யாழினி, பார்வையில் கார்த்திக் பாப்கார்னாய் வெடித்துக் கொண்டிருந்தான்.

 

நந்தன், மதியை அழைத்துக் கொண்டு மாடியில் மதிக்காக ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ரூமுக்குச் செல்ல மதி அறையின் வாசலை நெருங்க, “மதி” என்று மென்மையாக நந்தன் அழைக்க மதிக்கு உள்ளுக்குள் மழைச்சாரல் நனைந்தது போல் இதமாக இருந்தது. எத்தனை வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால், இன்று அந்தக் காந்தக் குரலில் அவன் மதி என்று அழைத்ததும் வழக்கம் போல் மதி மயக்கி நின்றாள் அபியின் இதய ரதி. தன்னவளின் மோன நிலையை சில நிமிடங்கள் விழிகளால் பார்த்து ரசித்த நந்தன் “உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லனா?, இது தான் என்னோட ரூம்” என்று தன் கரத்தைத் தன் அறையை நோக்கி நீட்ட அதில் தான் அந்த ரூம்மை பார்க்கணும் என்று நந்தன் ஆசைப்படுவது மதிக்குப் புரிய “நா இருக்கப் போற ரூம்க்கு பக்கத்து ரூம் தான் உன்னோடதா அபி”? என்று அவள் ஆவலாகக் கேட்க மதியின் “அபி” என்ற‌ அழைப்பில் மனது குதூகலித்த நந்தன் ‘ஆமா மதி இதுவரை அது என்னோட ரூம். இன்னும் கொஞ்ச நாள்ல அது நம்மளோட ரூம்’ என்று மனதுக்குள் சொன்னவர், “வா வந்து பாரேன்” என்று உரிமையோடு அவர் கையைப் பிடித்துத் தன் அறைக்குக் கூட்டிச் சென்றார். 

 

அந்த அறையைப் பார்த்த மதி ஆச்சரியத்தில் விழிவிரிய, வாய்பிளந்து நிற்க, நந்தன் அவளின் முக மாற்றம் ஏன் என்று புரிந்து அவள் முக மாற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

 

தான் கடந்து வந்த காலத்தில் எந்தக் காலச்சுவடை மதி தேடி புரட்டி பார்த்துக் கொண்டிருக்கிறரோ, அதே காலச்சுவட்டின் பக்கத்தைத் தான் அபியும் ரசனையோடு புரட்டிக் கொண்டிருந்தார்.

 

அபி, மதியின் காதல் கவிதை வரிகள் போல் அழகும், அர்த்தமும் சேர்ந்து இணைந்திருந்த காலத்தில் மதி ஒருமுறை அவர்கள் கல்யாணம் முடிந்த பிறகு அவர்கள் இருவரும் இருக்கப் போகும் அறையை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு பெரிய லிஸ்ட்டே சொல்லி இருந்தார். அதில் ஒரு இம்மியளவும் கூட மாறாது தன் அறையை வடிவமைத்து இருந்தார் அபிநந்தன்.

 

கண்களில் காலம் தந்த ஏக்கம் நிறைந்து வழிய மற்றவர் அதைக் கண்ணீர் என்பர். நான் அதை என்னவன் எனது பாவம் தீர எனக்குத் தந்த கங்கை நீர் என்பேன். இப்போது மதியின் கண்களிலும் கங்கை தான். ஆனால், பாவம் தீர்க்கும் கங்கை அல்ல. இது ஆனந்தக் கங்கை.

 

‘எப்படிபட்ட காதலுக்கு உடமைபட்டவள் நான்’ என்ற நினைப்பே மதிநிலாவுக்குக் கர்வத்தைக் கொடுத்து கண்களில் கர்வம் கலந்த கண்ணீருடன் திரும்பிப் பார்க்க கதவில் ஒரு பக்கமாகச் சாய்ந்து கைகட்டி, ஒரு மந்தகாச சிரிப்போடு மதியை பார்த்துக் கொண்டிருந்த நந்தனை “ஏன் அபி? எதுக்கு இப்படி? ஏன் எனக்காக உன் வாழ்க்கையை”? என்றவர் கேள்வி வார்த்தைகளில் வரவில்லை. அவள் விழிப்பார்வையில் அத்தனை கேள்விகளையும் கேட்டார் மதிநிலா.

 

“ப்ச்ச்” என்று தோளைக் குலுக்கிய நந்தன், “இதே கேள்விய நா உன்கிட்ட கேட்டா அதுக்கு உன்னோட பதில் என்னவோ அதுதான் மதி என்னோட பதிலும்… “தோணல” என்று அவர் கண்ணை மூடித்திறக்க அந்தத் “தோணல” என்ற ஒரு வார்த்தை மதியின் இத்தனை வருட காயத்தையும், கவலையையும் கரைத்து விட்டது. மதி காதல் மீது, அவள் காதலன் மீது, அவள் அபி மீது வைத்த நம்பிக்கை பொய்யாகவில்லை. இன்றும் அவன் என்னவன். என்றும் இது மாறாது என்று அறிந்த அந்த நொடி அவளுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. தன்னவனைக் கட்டிக் கொண்டு சத்தம் போட்டு கத்தி அழவேண்டும் என்று மட்டும் தான் தோன்றியது மதிநிலாவுக்கு.

 

இந்தக் கவிதை காதலர்கள் இங்கு அவங்க காதலை மெல்ல அசை போடட்டும். நம்ம இந்த இளம் காதலர்களோட கல்யாணம் எப்டி நடந்தது? ரம்யா கேட்டது என்ன? இங்க நடந்தது என்ன? துருவ், நந்தனோட தங்கச்சி பையனா? அப்ப நந்தன் குடும்பம்? நிலாவுக்கும் துருவ்வுக்கும் கல்யாணம் எப்டி நடந்துச்சு? எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு வந்துடுவோம்.

 

லெட்ஸ் கோ பேக் டூ துருவ் நிலாவை சப்புன்னு அறைஞ்ச மொமெண்ட்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!