உயிரோடு விளையாடு 27(2) The End

unnamed (1)-daafa07b

உயிரோடு விளையாடு 27(2) The End

  • anitha
  • December 5, 2020
  • 0 comments

சம்யுக்தாவின் முகத்தில் எதைக் கண்டனோ ஒரு கணம் கண் மூடி நின்ற செல்வம், ஆழந்த பெருமூச்சை விட்டுத் தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்.

சம்யுக்தாவின் கண்களில் இருந்த குழப்பம், ‘இத்தகைய கோபம் துவேஷம் ஏன் தன் மேல்?…’ நின்ற கேள்விக்கான விடை சொல்ல முடியாதவனாய் தயங்கி நின்ற செல்வம், தலை கோதி தூரே தெரிந்த வானத்தை வெறித்தான்.

ஏதோ தாங்க முடியாத துக்கத்தை தாங்குபவன் போல் நின்றிருந்தவனை கண்ட சம்யுக்தா தானே அறியாமல் ரெண்டு எட்டு அவனை ஆறுதல் படுத்த எடுத்து வைத்து, கடைசி நொடியில் தான் செய்ய முயன்ற செயலை நினைத்து அதிர்ந்து நின்றாள்.

‘யார் என்றே தெரியாதவன் கலங்கி நின்றால் உனக்கு என்ன சம்யு?… என்ன செய்யப் போகிறாய்?…’ என்று அதிர்ந்த இதயம் கேள்வி எழுப்ப, விழித்தவாறு நின்றாள் சம்யுக்தா.

செல்வத்தை நோக்கி நீண்ட கரங்கள் அந்தரத்தில் அப்படியே நிற்க, நீண்ட கரங்களைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சம்யுக்தா.

கண்களை ரெண்டு மூன்று முறை அழுந்த மூடித் திறந்தபிறகும் கூட நீண்ட கரங்கள், நீண்டது நீண்ட படியே இருக்க, சம்யுக்தாவின் வாய் திகைப்பில் தானாய் விரிய, அவளையும் அறியாமல் மிடறு விழுங்கினாள்.

நல்லவேளையாக அங்கிருந்தவர்கள் கவனம் முழுவதும் செல்வம்மேல் இருக்க, சம்யுக்தாவின் செயலையோ, செய்ய முயன்ற செயலின் வீரியம் கண்டு திகைத்து, ஸ்தம்பித்து நின்ற சம்யுக்தாவின் நிலையையோ மற்றவர்கள் கவனிக்கவில்லை.

‘முன்னே பின்னே தெரியாத ஒருத்தன், கம்ப்ளீட் எதற்கோ ஸ்ட்ரேஞ்சர் கலங்கி நிற்கிறான் என்றால், உடனே அவனை ஆறுதல் படுத்த உன் கரங்கள் ஏன் நீள்கிறது சம்யு?… என்ன ஆச்சு உனக்கு?… உனக்கு யாரிவன்?… முதல் முறையாகச் சந்திக்கும் ஒருவனை அணைக்க செல்கிறாயா?… என்ன ஆச்சு உனக்கு?….

அவன் உன்னை ஜென்ம விரோதியை முறைப்பது போல், விட்டால், ‘அடித்துத் துவைத்து காய வைக்க முடியவில்லையே!…’ என்று துடித்துக் கொண்டு இருக்கிறான். அவனை நோக்கி நீ ஏன் செல்கிறாய்?….’ என்று திகைப்புடன் கேள்விகளை அடுக்கிய மனசாட்சியின் கேள்விகளுக்குச் சத்தியமாய் சம்யுக்தாவிடம் பதிலே இல்லை.

அன்று ஆரம்பித்த அந்தத் திகைப்பு, குழப்பம், செல்வத்தின் கோபம், துவேஷம் எதனால் என்ற கேள்விக்கான விடை எத்தனை வருடங்கள் கிடைத்து கிடைக்குமோ!

அப்படி கிடைக்கும்போது எல்லாமுமே, தன் வாழ்க்கை உட்பட எல்லாமுமே மாறி இருக்க போகிறது என்று அந்த நொடி சம்யுக்தா அறியவில்லை.

எல்லாம் தெரிய வரும்போது சம்யுக்தா என்ற பெண் மன உணர்வுகள் என்னாகும்?

யார் என்றே தெரியாத செல்வம் வருந்துவது பொறுக்க முடியாமல், அவனை அணைத்து ஆறுதல் சொல்ல அடியெடுத்து வைத்து விட்டு, நீண்ட கரங்களை ஒரு வித ஸ்தம்பிப்புடன் பார்த்தவாறு உறைந்து போய் நின்றாள் சம்யுக்தா.

சம்யுக்தாவின் அந்த உறை நிலையை நல்லாவேலையாக மற்ற மூவரும் கவனிக்கவில்லை. அவர்கள் கவனம் முழுவதும் செல்வத்தின் மேல் தான் இருந்தது. அது சம்யுக்தா தன்னை சமாளித்து கொண்டு தன்னை மீட்டு கொள்ள உதவியது என்று கூடச் சொல்லலாம்.

இதைவிடக் கொடிய உயிருடன் போராடும் மருத்துவ நோயாளிகளைக் கையாளும் தொழிலில் இருப்பது கூட விரைவில் தன்னை சமாளித்து கொள்ள சம்யுக்தாவிற்கு பெரிதும் உதவியது என்று கூடச் சொல்லலாம்.

‘மனிதநேயம் தான் காரணம்.’ என்ற சமாதானம், அலறிய மனச்சாட்சியின் வாயை மூடியதும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

தான் செய்த மிகப் பெரிய கூத்தைவிட, அவர்கள் மூவரும் செல்வதை சமாதானம் செய்யும் கூத்து மிகப் பெரியதாய் இருந்ததும் காரணமாய் இருக்கலாம்.

உண்மை தெரிந்த விதியோ தனக்கு தானே சிரித்து கொண்டிருந்தது.

“செல்வம்!… நீ டென்ஷன் ஆகாதே!… கூல் டவுன்…” என்றான் ஈஸ்வர் செல்வத்தின் தோளில் தட்டி.

“ரிலாக்ஸ் ஈஸ்வர்!… ரிலாக்ஸ் மேன்!…”என்றான் செல்வம் மீண்டும் நக்கலாக.

‘என்னங்கடா நடக்குது இங்கே!… இவன் என்னவோ அவனை டென்ஷன் ஆகாதே கூல் என்கிறான். இவன் அவனை ரிலாக்ஸ் என்கிறான். இவனுங்க ரெண்டு பேரும் இத்தனை ட்ராமா போடும் அளவிற்கு இங்கே என்ன நடந்தது?…’ என்று சம்யுக்தா குழப்பத்துடன் இருவரையும் பார்த்தாள்.

‘ரிலாக்ஸ்!…’ என்ற வார்த்தையை ஈஸ்வரிடம் செல்வம் சொல்ல, அதைக் கேட்ட சம்யுக்தாவின் நிம்மதி போனது என்னவோ உண்மை.

சம்யுக்தா அறியாமல் நண்பர்கள் இருவரும் பார்வையாலேயே எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘என்ன நடக்கிறது இங்கே!….’என்று சம்யுக்தா தனக்கு முன் நடக்கும் மௌன நாடகம் புரியாமல் குழம்பி நிற்க, மீண்டும் செல்வத்தின் பார்வை சம்யுக்தாவை நோக்கித் திரும்பியது.

தலையைச் சரித்து சம்யுக்தாவை பார்த்தவன், “சோ அட் லாஸ்ட்… தி பேமஸ் டாக்டர் சம்யுக்தா பல்தேவ் குப்தாவை நேரில் சந்திக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்திருக்கிறது…” என்றான்.

அதில் துளி கூடச் சந்தோசம் இல்லையென்பதையும், தன் பெயரைச் சொல்லும்போது அதில் நக்கல், ஏளனம் மட்டுமே இருப்பதை சம்யுக்தா புரிந்து கொண்டாள்.

‘இவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை…. ஏன்?….’ என்ற விடை தெரியா கேள்வி ஒன்று சம்யுக்தாவின் மனதில் எழுந்தது.

“இளவரசியார்/ஸ்வீட் சார்மிங் பிரின்சஸ், பல்தேவ் குப்தாவின் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் ஏக போக வாரிசு, செல்ல மகள் பேசக் கூட யோசிப்பாங்க போலிருக்கே!…” என்றான் செல்வம்.

செல்வத்தின் ஏளனமான வார்த்தையில் குழம்பி, தன்னை ஏன் அத்தனை மட்டமாகப் பேசுகிறான் என்பது புரியாமல் குழம்பி நின்ற சம்யுக்தா ஒன்றும் புரியாதவளாய் செல்வத்தின் முகத்தை நில ஒளியில் பார்த்து நின்றாள்.

ஏனோ எதிரே அரக்கன் மாதிரி நிற்கும் அவன், புதியவன் என்ற எண்ணமே தனக்கு தோன்றாததை சம்யுக்தா வியப்புடன், ஒரு விதமான திடுக்கிடலுடன் உணர்ந்தாள்.

பல வருடம் உடன் பழகிய உணர்வு செல்வத்திடம் ஏற்படுவதையும் சம்யுக்தாவால் விளக்க முடியவில்லை.

‘பல வருடம் பார்த்துப் பழகிய முகம்போல் எனக்கு ஏன் தோன்றுகிறது… இப்போ தானே இவனைப் பார்க்கிறேன். யார் இவன்… ஒரே சமயத்தில் இவன்மேல் மரியாதையும், பயமும் ஒன்றாய் ஏன் எழுகிறது…இது என்ன மாதிரியான உணர்வு?…’

ஒரே நாளில் தொடர்ச்சியாகப் பல சம்பவங்கள், பல உணர்வுகள் ஒரே சமயத்தில் சம்யுக்தாவை திணற வைக்க, செல்வம் எழுப்பிய மன உணர்வு எத்தைகையது என்பது புரியவில்லை.

தவறு செய்து விட்டு, பெற்றோர் முன் கையும் களவுமாய் சிக்கும் குழந்தைபோல், டீச்சர் முன் நிற்கும் மாணவிபோல், அதிகாரி முன் நிற்கும் குற்றவாளிபோல் ஒரு வித அவஸ்தையோடு நின்றாள் சம்யுக்தா.

“நான் டாக்டர் சம்யுக்தா தான்… ஆனால் நீங்கச் சொன்ன பேமஸ், இளவரசி எல்லாம் நான் இல்லைங்க… நைஸ் டு மீட் யு சார்…” என்று சம்யுக்தா தன் கரத்தை நீட்ட, நக்கலாகச் சிரித்த செல்வம்,

“வெரி வெரி… நாட் நைஸ் டு மீட் யு ப்ரின்செஸ்…” என்றான் செல்வம், சம்யுக்தா நீட்டிய கையைப் பற்றி வரவேற்பாய் குலுக்காமல்.

நெருங்கி நின்ற செல்வம் கோப விழி பார்வையை சந்திக்க முடியாமல், அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகளைக் கணிக்க முடியாமல், மிடறு விழுங்கியவாறு நின்றாள் சம்யுக்தா.

கைகளை மார்பின் குறுக்கே கட்டி, கால்களை அகல விரித்துச் செல்வம் நின்ற தோரணையே சம்யுக்தாவை திணறடித்து கொண்டிருந்தது.

“செல்வம்!….” என்ற ஈஸ்வரின் குரல் சம்யுக்தாவின் அருகில் போக முயன்ற செல்வத்தைத் தடுத்து நிறுத்த, ஈஸ்வர் கரங்கள் செல்வத்தின் தோளில் ஆழ பதிந்தது.

முறைப்புடன் திரும்பிய செல்வம், ஈஸ்வர் கண்களில் எதைக் கண்டனோ, பெருமூச்சு விட்டுத் தன்னை சமாளித்து கொண்டு முக திருப்பி, பின்னால் நகர அதுவரை பிடித்து இருந்த மூச்சை தன்னையும் அறியாமல் வெளியிட்டாள் சம்யுக்தா.

‘இப்போ என்ன நடந்தது?….’ என்று கேட்டால் சத்தியமாய் சம்யுக்தாவிற்கு அதை விவரிக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

கனத்த மௌனம் அங்குத் தேவை இல்லாத விருந்தாளியாக இருக்க, அதைக் கலைத்தது ஈஸ்வரின் குரல்.

“டாக்டர் சம்யுக்தா!… மீட் செல்வம்… நீங்க இப்போ பயன்படுத்திய மொபைல் செயலி இவன் உருவாக்கியது தான்… ஒரு விதத்தில் உங்களைக் காப்பாற்ற என்னை, உங்களிடம் அனுப்பி வைத்ததும் இவன் தான்.

கவசம் செக்யூரிட்டி நிறுவனம் கேள்வி பட்டு இருக்கீங்களா?… இந்தியா முழுக்க vvip பாதுகாப்பிற்க்கு இருக்கும் தனியார் நிறுவனம். அது இவனுக்குச் சொந்தமானது தான்.” என்றான் ஈஸ்வர்.

“ஓஹ்!….” என்ற சம்யுக்தா வியப்புடன் தன் பார்வையை செல்வத்தின் மேல் மீண்டும் திருப்பினாள்.

‘கவசம் பாதுக்காப்பு நிறுவனம் என்பது ராணுவமே காவலுக்கு நிற்பதற்கு சமம்’ என்று செல்வத்தின் நிறுவன பாதுகாப்பை ஏற்றத் தோழி சொல்லக் கேட்டு இருக்கிறாள்.

சில பல ஆயிரங்களில் ஆரம்பித்து, லட்சம், கோடி வரை ஆளுக்கு ஏற்றவாறு பாதுக்காப்பு பேக்கேஜ் வழங்கும், தனியார் பாதுகாப்பில் புகுந்து விளையாடும் நிறுவனம் அது.

லட்சக்கணக்கான பணியாளர்கள், ஹை டெக் பாதுக்காப்பு அம்சங்கள் என்று வெளிநாட்டு தனியார் பாதுக்காப்பு போல் செயல்படும் டாப் லெவல் நிறுவனத்தின் முதலாளி, ஒன்றும் இல்லாதவன் போல் அத்தனை சிம்பிள் ஆக இருப்பது சம்யுக்தாவை திகைக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

“ஓஹ் யெஸ்… உங்க முகம் ரொம்ப பழகிய முகம்போல் இருக்கே என்று யோசித்து கொண்டிருந்தேன்…. இப்போ தான் புரியுது. நீங்க எங்க ஹோச்பிடலுக்கு அந்தச் செயலி டெமோக்கு வந்திருந்தீங்க இல்லையா?… நீங்க நடத்திய அந்தச் செல்ப் டிபென்ஸ் மீட்டிங்கில் நானும் கலந்துட்டேன்… இட் வாஸ் சச் ய யூஸ்புல் கிளாஸ் சார்…” என்றாள் சம்யுக்தா.

சம்யுக்தா பேசியதில் இருந்த ஏதோ ஒன்று செல்வத்தை அசைத்துப் பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அது என்ன என்று காலம் சம்யுக்தாவிற்கு புரிய வைக்குமா?.

மீண்டும் அங்குக் கனத்த மென்மை நிலவ, செல்வம் ஈஸ்வர் பார்வைகளை பரிமாறிக் கொள்ள, ‘டேய் வேணாம்…அழுதுடுவேன்…போதும்…இப்படியொரு சின்னப் புள்ளையை ஹாரர் படத்தில் வரும் பேய் முறைச்சு பார்ப்பது மாதிரி பார்த்து ஜன்னியே வர வச்சுடுவானுங்க போலிருக்கே!….சப்பா!… மிடில… கண்ணைக் கட்டுதே!… லவ்வர்ஸ் கூட இப்படி பார்த்துக்க மாட்டாங்க. எதுக்கு இவனுங்க ரெண்டு பெரும் இப்படி லுக்ஸ் விட்டுட்டு இருக்கானுங்க?… அப்படி சொல்லக் கூடாத எதைச் சொன்னோம்… பாராட்டியது ஒரு குற்றமாயா?…’ என்று மீண்டும் சம்யுக்தா தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாய் நின்றாள்.

“தேங்க் யு பார் தி காம்ப்ளிமென்ட் பிரின்செஸ்.” என்றான் செல்வம்.

ஆனால், அவன் குரலில் அதற்கான சந்தோசம், மகிழ்ச்சி துளியும் இல்லை என்பதை சம்யுக்தாவால் நன்கு உணர முடிந்தது.

“நீங்கச் செய்தது உண்மையில் மிகப் பெரிய உதவி சார். உங்க செயலி நிச்சயம் பெண்களுக்கு ஒரு அரண் தான். இது நிச்சயம் சமூகத்தில் பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பை நிச்சயம் கொடுக்கும். எங்கிருந்தோ உதவி வருவதற்கு பதில் எந்தப் பெண், எந்த இடத்தில ஆபத்தில் இருக்கிறாளோ இடத்தில் உள்ள பொது மக்களே அந்தப் பெண்ணிற்கு உதவி செய்ய முன் வருவது என்ற ஐடியா சிம்ப்ளி மார்வெல்ஸ். நிச்சயம் 5 ஸ்டார் ரேட்டிங் அண்ட் மை வியூஸ் பிலேஸ்டோரில்/playstore அண்ட் என் சமூக வலைத்தளத்தில் கொடுப்பேன் சார். வெல் டன்.” என்றாள் சம்யுக்தா மனமார்ந்த பாராட்டுகளுடன்.

“வாட் டு டூ… படிப்பு, வேலை, எமெர்ஜென்சி என்று வெளியே பெண்கள் இரவிலும் செல்ல வேண்டியது இப்பொழுதெல்லாம் கட்டாயமாகி விட்டது. வேலைக்கு, படிப்பு விஷயமாய் வெளியே போகும்போது இரவு தாமதமாவதும் உண்டு. அது மாதிரிப் பெண்களுக்கு உதவ தான் இந்தச் செயலி வடிவமைத்தோம்.

பட் பாருங்க பிரின்செஸ் சில லூசுங்க, பைத்தியக்கார, முழுக்க முழுக்க கிராக், லூசு, நட் போல்ட் கழண்ட, மேல் மாடி காலியான தேறாத மெண்டல் பெண்கள் இருக்காங்க பாருங்க…. அதுங்களுக்கு ராணுவமே வந்தாலும் போதாது. அதுங்க மேல் மாடி காலியாய் இருக்கும்போது என்ன செய்வது?” என்ற செல்வத்தின் குரலில் இருந்தது ஏளனமே.

‘இவன் என்ன சொல்கிறான்?’ என்ற குழப்பமாய் சம்யுக்தா செல்வத்தைப் பார்க்க, செல்வத்தின் பார்வையே சொல்லாமல் சொன்னது அவன் மேலே சொன்ன, ‘பைத்தியம், மேல் மாடி காலியான பெண்’ சம்யுக்தா தான் என்று.

“பைத்தியம் மட்டும் இல்லை பிரின்செஸ். சிலதுங்க பணத்தால் ஸ்பாய்லட் டு தி கோர்/spoiled to the core …. திருந்தாத ஜென்மங்கள். கர்வம், ஈகோ, ஆணவம், எல்லாம் தனக்கு தெரியும் என்று ஆடும் ஜந்துக்களை எல்லாம் தண்ணீர் தெளித்து விட்டுட வேண்டியது தான்.” என்றான் செல்வம் மீண்டும்.

“ஓஹ் …அப்படியா செல்வம்…நீங்கச் சொல்வது மாதிரியும் பெண்கள் இருக்காங்களா என்ன?” என்றாள் எமி போலி வியப்புடன்.

‘இவங்க ரெண்டு பேரும் என்னை எதுக்கு டார்கெட் செய்யறாங்க?’ என்ற எண்ணம் மனதிற்குள் எழச் சம்யுக்தா செல்வம், எமி முக பாவத்தைக் கூர்மையாகக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“ஓஹ் உனக்குத் தெரியாது இல்லையா எமி… அப்பன்காரன் வெளிநாட்டிலிருந்து சம்பாதிச்சுட்டு இருப்பான். வீட்டில் நல்லது கேட்டது சொல்லித் தர யாரும் இல்லாமல் வளர்வாங்க. சோ, எல்லாம் தனக்கு தெரியும் என்ற மெண்டாலிட்டி வந்துடும்.” என்றான் செல்வம்.

“அப்படியா ப்ரோ… இந்தப் பைத்தியங்க வேற என்ன எல்லாம் செய்யும் சொல்லுங்க…” என்றான் ரிஷி.

“ எக்ஸாம்பிள் வேணுமா… பார்ட்டி நடக்கும் இடம் வீட்டை விட்டு வெகுதூரம் இருக்கும்… இருந்தாலும் கிளம்பி வருவங்க. அதுவும் இரவு ஏழு, எட்டு மணிக்கு மேலே அத்துவான காட்டில் ஒதுக்குபுறமான ரிசார்டடுக்கு. சொந்த கார் எடுத்து வரமாட்டாங்க. ஓசியில் எவனாவது ட்ராப் செய்யறேன் என்று சொன்னால் கேப் கூடப் புக் செய்யாம வருவாங்க.

அப்படியே வந்தாலும் துணைக்கு யாராவது நம்பிக்கையான தோழமைகளுடன் வர வேண்டும் என்ற அறிவே இருக்காது. அப்படியே வந்தாலும் அந்தப் பிரெண்ட் கிளம்பி போனபிறகு கூட, நாம இருக்கும் இடம் எப்படி பட்டது என்று கூடத் தெரியாமல் உலா எல்லாம் போவாங்க.” என்ற செல்வத்தின் பார்வை கூர் வாளாய் சம்யுக்தாவை துளைத்தது.

“ட்ரு ப்ரோ. நேரம் காலம் எல்லாம் தெரியாது. உடுத்தும் உடை எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியாது. ஜன்னல் வச்ச ஜாக்கெட், டோர் வைத்த புடவை, லோ ஹிப் என்று ட்ரெஸ் செய்தால் வேற என்ன நடக்கும்…” என்றான் ரிஷி அலட்சியமாக.

செல்வம், ரிஷி, எமி மூவரும் குற்றம் சாட்டுவது போல் என்றுமே சம்யு, ஹேமா நடந்தது இல்லை. பார்ட்டி, விழாக்களைத் தவிர்த்து விடுவார்கள்.

பார்ட்டி, பப், ஆண் நண்பர்கள், அவுட்டிங் என்பதில் எல்லாம் பெண்கள் இருவருக்கும் விருப்பமும் இருந்தது இல்லை. நேரமும் அவர்களுக்குக் கிடைத்து இல்லை. தவிர்க்கவே முடியாத ஒன்றிரெண்டு இதுபோல் விழாக்களில் தான் இவர்களைப் பார்க்க முடியும்.

செல்வம் குற்றம் சாட்டிய அளவிற்கு சம்யுக்தா பணத்தால், ‘spoiled to the core’ வகை பெண் கிடையாது. இந்த விஷயத்தில் சம்யுக்தா அப்படியே மாலினி தான். பிழைக்கத் தெரியாத வெகுளி பெண். மனிதரைப் பணத்தால் எடை போடாத, மணத்திற்காகப் பழகும் ரகம்.

‘பணம் என்னடா பணம்
குணம் தானடா நிரந்திரம்….’ என்று என்றோ முன்னோர்கள் சொல்லி விட்டார்கள் தான்.

ஆனால் அதை நிஜத்தில் கடை பிடிக்கும் சம்யு, ஹேமா, மாலினி போன்றவர்கள் காண கிடைக்காத வைரத்திற்க்கு சமம் தான்.

ஆனால், செல்வத்திற்கு இது தெரிய வாய்ப்பில்லை. அவனின் அளவு கோலாய் அங்கு மாலினி இல்லை. இருந்தது பல்தேவ். பல்தேவின் மகளாகச் சம்யு, அவனுக்கு spoiled to the core. அவ்வளவு தான்.

சேற்றிலும் தாமரை முளைக்கும், குப்பையிலும் வைரம் கிடைக்கும் என்று அவனுக்கு யார் சொல்வது.

பணத்திற்கோ, தவறான எந்த வழிக்கும் சம்யுக்தா, ஹேமா இருவரும் சென்றது இல்லை. மாலினி அவர்களை அப்படி வளர்க்கவும் இல்லை.

இன்று தான் எல்லாமே மாறிச் சம்யுக்தா மிகப் பெரிய ஆபத்தில் சிக்கும் நிலை ஆகி விட்டது. ஹேமாவுடனே கிளம்பி இருக்க வேண்டும் என்று லட்சம், கோடி முறையாகத் தன்னையே நொந்து கொண்டு தான் இருந்தாள்.

சில சமயங்களில் இதுபோல் நடப்பவையும் நம்மையும் மீறி நடந்து விடுவது தவிர்க்க முடியாத ஒன்று தான்.

தன் மேல் தவறு இருப்பதை உணர்ந்ததால் சம்யுக்தா, செல்வம், எமி, ரிஷியின் குற்றச்சாட்டுகளை மௌனமாய் ஏற்றவாறு நின்றாள் என்று தான் சொல்ல வேண்டும்.

இகழ்வது போல் பேசினாலும் செல்வம் பேச்சில் இருந்தது நிஜ அக்கறை.

‘ இப்படி வலிய சென்று ஆபத்தில் சிக்கி கொண்டாயே!…’ என்ற வேதனை,
‘நாங்கள் வந்திருக்கவில்லையென்றால் உன் நிலை?…’ என்ற ஆதங்கம் என்பதை சம்யுக்தா ஏனோ உணர்ந்து கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

மூவரும் ரவுண்டு கட்டி என்று சொன்னால் கூட மிகையல்ல தான். ரவுண்டு கட்டி திட்டித் தீர்க்க, சம்யுக்தாவிற்கு ஏனோ அது அவர்கள் மூவரும், தன் மேல் காட்டும் பாசமாய் ஏனோ தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

ஆனால், கடைசியாய் ரிஷி பேசியது சம்யுக்தாவின் கோபத்தை கிளறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதுவரை தவறு செய்து விட்ட குழந்தை, பெற்றோர் முன் நிற்பது போல் அவர்கள் திட்டை எல்லாம் ஏற்றவாறு நின்ற சம்யுக்தா ரிஷியின் பேச்சில் அப்படியே மாறிப் போனாள்.

பேசிக் கொண்டே போன ரிஷி, சம்யுக்தாவின் கண்கள் கோபத்தில் ஜொலித்த ஜொலிப்பில் திகைத்து அப்படியே பேச்சை நிறுத்தினான். சம்யுக்தாவின் இந்தக் காளி அவதாரத்தை ஈஸ்வர், செல்வம், எமி, ரிஷி எதிர்பார்த்திருக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சம்யுக்தா வாயைத் திறந்து பேசிய போதோ அங்கே பல லட்சம் இடிகள் முழுங்கும் பிரம்மை தான் அவர்களுக்கு ஏற்பட்டது.

Keerthy Suresh Fan Page (@97Kalaivani) | Twitter

ஒன் மினிட் ரிஷி. நேரம், காலம், உடை தான் ஒரு பெண்ணுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என்று நீங்கள் சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வக்கிரத்திற்கு நேரம், காலம், உடை, வயது எல்லாம் இருக்கிறதா என்ன?

உடை எப்படி இருந்தாலும், எந்த நேரமாய் இருந்தாலும், இடமாய் இருந்தாலும் அது வீடாய் இருந்தாலும் குற்றம் செய்யணும் என்று நினைப்பவன் குற்றம் செய்யத் தான் செய்வான்.இல்லைன்னு சொல்லிடு பார்க்கலாம்.

இந்த மாதிரி மைண்ட் செட் உள்ளவங்க எல்லாம் தெருவில் குலைக்கும் நாய்க்கும், சாக்கடையில் உள்ள புழுக்களும் சமம். இவனுங்களுக்கு பயந்து பெண் என்பவள் வெளியவே வரக் கூடாது என்று சொல்வீர்களா என்ன?.

நான் அணிந்து இருக்கும் உடை கழுத்து முதல், கால் வரை மூடித் தான் இருக்கிறது. என்னை ஏன்டா துரத்தினாங்க?

என்னை விடுங்க…. விளையாடப் போன குழந்தைகளை, இயற்கை உபாதைக்குப் போன குழந்தையை எல்லாம் தூக்கி போய் நாசம் செய்தார்களே அந்தக் குழந்தைங்க உடை என்ன செய்தது. அவங்க உடையும் தவறு என்று சொல்வீங்களா?

வக்கிரம் பிடித்த மனதிற்கு அந்த நொடி தேவை உடல். அது உடை, வயது, பாலினம், இடம் என்று எதையும் பார்க்காது. யாரின் மனைவி, மகள், தாய், சகோதரி என்று எதுவுமே வக்கிரம் பிடித்த, சதை வெறி கொண்டு அலையும் மிருங்கங்களுக்கு தெரியாது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் மேல் பழி போடுவதை முதலில் நிறுத்துங்க. வெட்கி தலை குனிய வேண்டியது அந்தத் தெரு நாய்ங்க தான். பாதிக்கப்பட்ட நான் இல்லை.

என் அனுமதி இல்லாமல் என்னை அடைய நினைத்த அந்த மிருகங்கள் தான் குற்றவாளிங்க. நான் இருக்க கூடாத இடத்தில் இருக்க கூடாத நேரத்தில் இருந்தேன். அது என் குற்றம் தான்.

ஆனால் அப்படி இருந்தால், இப்படி தான் நடப்பார்கள் என்று குற்றவாளிகளுக்குச் சப்பை கட்டு கட்டுவதையோ, குற்றம் முழுவதும் என் உடை, நான் இருக்கும் இடம், இங்கே எனக்கு என்ன வேலை என்று திசை திருப்பாதீர்கள். என்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க நினைத்தவர்கள் குற்றவாளிகள். நானோ, என் உடையோ, நான் இருக்கும் பொழுதோ, இடமோ இல்லை.

Stop blaming victims/ பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்.

உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்க. இல்லையென்றால் எல்லாத்தையும் மூடிட்டு போங்க. அதை விட்டு இப்படி கிராக் மாதிரி உளறி வைத்தீங்க உளறுவதற்கு வாய் இருக்காது.” என்று சம்யுக்தா முடித்தபோது அங்கே இருந்த நால்வரும் அவள் கோபாக்கினியை பார்த்து மிடறு விழுங்கினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மிகச் சுலபமான குற்றசாட்டு பாதிக்கப்படுபவர்களின் மேலேயே குற்றத்தைத் திருப்புவது.

‘ஆண்’ அவன் அப்படி தான் இருப்பான். உன்னை யார் வெளியே வரச் சொன்னது?

உன் உடை இப்படி இருந்தால் இப்படி தான் நடப்பார்கள்.

இரவில் வெளியே வந்தால், உன் வேலையாக நீ சமூக வளை தளத்தில் இருந்தாலும் தொட்டு, தடவி, உரசி பார்ப்பார்கள் தான்.

நீ பாதுகாப்பாய் இருக்க வேண்டியது உன் கடமை.

முள்ளின் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும் பாதிப்பு என்னவோ சேலைக்கு தான் என்று உயர்ந்த தத்துவங்கள் வெளியே வரும்.

காதலிக்கிறேன் என்று பெயர் செய்து, தன் தேவை தீர்ந்த பிறகு, எங்க அப்பன், எங்க ஆத்தா, எங்க வீட்டு நாய் குட்டி என்று கதை அளப்பவனை எல்லாம் விட்டுடுங்க. அவன் சொல்வதை நம்பி ஏமாறும் பெண்கள் எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று வந்தால் அவங்களை கடிச்சி குதறுங்க.

எப்படி பார்த்தாலும் உங்க லாஜிக் படி காதலித்து ஏமாந்தாலும் சரி, பாலியல் வன்கொடுமைக்கு, பலாத்காரத்துக்கு ஆளானாலும் சரி அந்தக் குற்றம் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்மீது தான். குறிப்பாகப் பெண்கள்மீது தான் இல்லையா?…

பெண்ணின் கற்பு, பெண்மை என்பது சேலை போன்றது இல்லை என்பதையோ, பெண்ணின் அனுமதி இல்லாமல் வன்கொடுமைக்கு இல்லத்தில், வெளியே ஆளாகும் பாதிக்கப்பட்டவர்களின் குற்றம் இல்லை இது என்பதை இந்தச் சமூகம் என்று உணர போகிறது.

பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க ரெண்டு பேரும். சமூகத்தில் நல்ல நிலையில் இருபவங்க மாதிரி தான் இருக்கீங்க. ஆனால் உங்க ரெண்டு பேரின் புத்தி ஏன் இப்படி சாக்கடை மாதிரி தேங்கி நாறிக் கிடக்கிறது.

78% பெண்கள் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு, வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை. வெளியே தெரியாதது இன்னும் எத்தனை சதவீதமோ?…. இத்தனை சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அங்கே பிரச்சனை இடம், உடை, நேரம், காலம், வயது, பாலினம் இல்லை என்று ஏன் உங்களுக்குப் புரியவில்லை.

ஆனாலும், நம்மில் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதில்லை. அதற்காகப் பாதிக்கப்பட்டவர்களின் மேலேயே பழிபோடுவதோ அல்லது, ‘அது நடந்ததா அப்படியென்றால் அது உன் குற்றம் என்று விரல் நீட்டுவதை’ மட்டுமே உங்களால் முடியும் என்றால் உங்க குறுகிய மனதை மறு ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

உங்களைப் போலத் தான் பலர் துணை நிற்பதில்லை. கூடத் துணையாகக் கூட நீங்க நிற்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஏனென்றால் இதில் என் தவறு என்ன , அவர்கள் குற்றம் என்ன என்பதிலும், எது கற்பு, எது பெண்மை என்பதிலும் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன் ரிஷி.

ஆனால், என்னைப் போல், என்னைவிட மிகக் கொடூரமாய் பாதிக்கப் பட்டவர்கள் உலகில் பலர் உண்டு. அவர்களுக்கு எல்லாம் இந்தத் தெளிவு, தைரியம், மன துணிவு இருக்குமா என்று தெரியாது. அவர்களிடமாவது இப்படி எல்லாம் பேசி வைக்காதீங்க.

உண்மையில் அது ஒருபோதும் எங்கள் தவறு அல்ல. ஆனால் அது மறைக்கப்பட்ட, பேசப்படாத வரை, இது போன்ற கோரமைகள் தொடர்ந்து எங்காவது ஒருவருக்கு நடந்து கொண்டு தான் இருக்கும்.

இப்படியொரு குற்றம் நடக்கிறது என்றால் ஏற்கனவே மனதளவில், உடல் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பவரின் மனநிலையை பற்றி யோசிக்காமல் இப்படியெல்லாம் பேசும் உங்கள் சிந்தனை திறனை என்னவென்று சொல்வது என்று கூடத் தெரியவில்லை.

வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல்கள் எப்படி பட்டதாக இருந்தாலும் நாம் நினைப்பதை விட அதிகமாகப் பாதிக்கிறது என்பதே உண்மை.

சுயம் என்பதையே ஒருவர் இழக்கிறார் என்பது எத்தனை பெரிய கொடுமை என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நடத்தையை மாற்றுகிறது.
நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறது,
சுயமரியாதையை குறைக்கிறது.
இது சில இடங்களைத் தவிர்க்கவும், எங்கள் தோற்றத்தை மறுபரிசீலனை செய்யவும், பாதுகாப்பாகத் தனியாக வெளியே செல்வதை கூட முற்றிலும் மாற்றி விடக் கூடியது.

வெளியே கால் எடுத்து வைக்கக் கூடப் பயந்து, தங்கள் நிழலைக் கண்டே நடுங்கி, யாரிடமும் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல், யாரை நம்புவது, யாரை கண்டு விலகுவது, எங்கே வெளியே சொன்னால் களங்கம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று நொடிதோறும் செத்து செத்து பிழைக்கும் நிலையின் வலியென்ன என்று வார்த்தைகள் , எத்தனை மொழிகள் கொண்டு சொன்னாலும் அந்தச் சூழ்நிலையில் இல்லாத மூன்றாம் நபருக்கு உணர வைப்பது கஷ்டம்.

இந்தக் கொடுமை எல்லாம் தங்களுக்கு நடக்க வேண்டும் என்று எந்தப் பெண்ணாவது விரும்பி ஒரு இடத்திற்கு செல்வாளா என்று சற்று கூட உங்கள் யோசனை செல்லாதா?

அப்படியொரு பெண் வெளியே வருகிறாள் என்றால் அது எதற்காக வேண்டும் என்றால் இருக்கட்டும், துணையாய் நிற்க வேண்டியது இந்தச் சமூகத்தின், சமூகம் என்று நாம் அழைக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கடமை. நான்கு சுவற்றுக்குள் பூட்டி வைப்பது அல்ல.

எங்கே, எந்த நேரத்தில், எந்த நிலையில் ஒரு பெண் இருந்தாலும், அந்தப் பெண்மைக்கு துணையாய் நிற்பதே ஆண்மை என்று சொல்லிக் கொடுத்து வளர்க்காத குடும்பங்கள் தான் தலை குனிய வேண்டுமே தவிர, பாதிக்கப் பட்டவர்கள் இல்லை.

சதை வெறிக்கு, மனித வக்கிரத்திற்கு வயது, பாலினம், இடம் பொருள், ஆடை எல்லாம் தடை இல்லை. தலை குனிய வேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.” என்று சம்யுக்தா சாட்டையை சுழற்ற, சிறு வயதில் இப்படியொரு மனித வக்கிரத்திற்கு இரையாகி சிதைந்திருந்த எமி, ரிஷி இருவரும் கால் மடங்கி தரையில் சரிந்தார்கள் .

Ireland abuse survivors say Pope must face up to Church's past sins - maltawinds.com    Viet Nam Human Rights: Warnings: Child sexual abuse is on the rise in Vietnam - Join to stop!

“எமி!…”
“ரிஷி!…” என்று ஈஸ்வர், செல்வம் இருவரும் தரையில் கண்ணீரில் கதறி கொண்டிருந்த இருவரிடமும் ஓடி அணைத்து கொள்ள, அவர்களின் அந்தக் கறுப்பு பக்கம் அந்த நொடி தெரியாத சம்யுக்தாவோ,
‘அப்படி என்ன சொல்லி விட்டோம்!… எதற்கு இவர்கள் இப்படி துடிக்கிறார்கள்?’ என்பது புரியாதவளாய் திகைத்து நின்றாள்.

ஒன்றுமே அறியாத சிறு வயதில், உடை, பாலினம், நேரம் காலம் என்று எதுவுமே குற்றமாய் சுட்டி காட்ட முடியாத குழந்தை பருவத்தில் இவர்களுக்கு ஏன் அந்தக் கொடூரம் நடந்தது.

‘இதற்கும் ஏதோ ஒரு வகையில் தாங்கள் தான் காரணமோ’ என்று உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருந்தார்கள் எமி, ரிஷி இருவரும் என்று தான் சொல்ல வேண்டும்.

குற்றம் செய்தவர்கள் யாரோ.

ஆனால் வாழ்வின் அந்தக் கடைசி நொடி வரை சிலுவை சுமப்பது பாதிக்கப்பட்ட இந்த இரு குழந்தைகள் தானே!.

ஆனால், ‘இது இவர்கள் சுமக்க வேண்டிய சிலுவை இல்லை’ என்று சம்யுக்தா ஆணித்தரமாய் சொல்ல, அங்கே அவர்களின் மனம் தங்கள் தளைகளிலிருந்து மீண்டது என்று தான் சொல்ல வேண்டுமோ!
.
Victim is just a victim.he/she doesn’t need to justify themselves to anyone/ பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்பட்டவர் மட்டுமே. அவர் / அவள் தங்களை யாரிடமும் நியாயப்படுத்தத் தேவையில்லை.

No one has the right to criticize or judge a victim/ பாதிக்கப்பட்டவரை விமர்சிக்கவோ தீர்ப்பளிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை.

இதைக் குடும்பங்கள், சமூகங்கள் உணரும் நாள் என்றோ அன்று தான் பதிப்பட்டவர்கள் கழுவில் ஏற்றப்படுவது நிறுத்தப்படும்.

சம்யுக்தாவை மட்டம் தட்டுவதை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு ரிஷி, எமி வாயை விட்டு இருந்தார்கள்.

இன்று சம்யுக்தா இருந்த நிலையில், இன்னும் சொல்லப் போனால் குற்றுயிர் என்ற நிலையில் வன்கொடுமையால், மனித வக்கிரத்தால் சிதைக்கப்பட்டு இருந்ததை ஏனோ மறந்திருந்தார்கள் அந்த நொடி.

உள்ளுக்குள் இருந்தே அரிக்கும் கரையான் போல், நடந்த குற்றத்திற்கு ஏதோ ஒரு வகையில் தங்கள் சொல், செயல், உடை தான் காரணமோ என்று எண்ணியெண்ணி மருகாத நாளே இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

எத்தனையோ உறங்கா இரவுகள்.

வாழ்வை முடித்துக் கொள்ளலாமா தாங்கள் கலங்க பட்டு விட்டோமோ என்ற எண்ணம் அவர்களை உயிரோடு சிதைத்து கொண்டு இருந்தது.

ஐந்து நிமிட உடல் சுக தேவை எமி, ரிஷி போன்ற குழந்தைகளுக்கு வாழ்நாள் நரகத்தை காட்டி தான் விடுகிறது.

எத்தனையோ கவுன்செலிங், ஈஸ்வர், செல்வத்தின் அன்பு மீட்டு இருந்தாலும், இன்று சம்யுக்தா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவர்களைப் பிணைத்து இருந்த சங்கலியை உடைத்து அவர்களை மன சிறையிலிருந்து மீட்டது.

யாரை குறை சொல்ல முயன்றார்களோ அந்தச் சம்யுக்தாவே எமி, ரிஷியின் குரலாய் மாறிப் போனது தான் விந்தை.

காலம் அப்படி தான்.

யாரின் மீட்சி, யாரின் வாழ்வு யாரால் திசை திரும்பும் என்று சொல்ல முடியாத விறுவிறுப்பான புதிர்.

எமி, ரிஷியின் கதறல் அந்தப் பார்க்கிங் ஏரியாவை நிறைக்க, கதறி கண்ணீர் வடித்தவர்களுக்கு துணையாய், ஆறுதலாய், அந்த நொடி தேவையான தோளாய் மாறியிருந்தார்கள் ஈஸ்வரும், செல்வமும்.

“ஒண்ணும் இல்லை… திஸ் டூ வில் பாஸ். அழக் கூடாது… கடந்து வாங்க…” என்ற ஆறுதல் வார்த்தைகள் அங்கே அழுகையை கேவலாக மாற்றி இருக்க, அந்தக் கண்ணீருக்கு சாட்சியாக மட்டுமே சம்யுக்தவால் இருக்க முடிந்தது.

ரிஷியை அணைத்தவாறு கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் சம்யுக்தாவை பார்த்த ஈஸ்வர் முகத்தில் மெல்லிய புன்முறுவல் விரிய, நிலவொளியில் வாய் அசைப்பில் அவன் சொன்ன, “தேங்க் யு” என்ற வார்த்தை சம்யுக்தாவின் முகத்தில் பதில் புன்னகையை வரவழைக்க, ஈஸ்வர் நன்றியை ஏற்கும் விதமாய் மெல்லிய தலையசைப்பு பதிலாய் கொடுத்தாள்.

சற்று நேரத்தில்எமி, ரிஷி தங்களை சமாளித்து கொள்ள, ஈஸ்வர், “ரிஷி இங்கே, இந்த இடத்தில் லைட் வேலை செய்யலை பாரு. ரிசார்ட் அட்மின் கிட்டே போய்ச் சொல்லு.” என்றவன்,

“எமி டியர்… மிட் நைட் ஆகிடுச்சுயா. ரொம்ப பசிக்குது. அப்படியே ரெஸ்டாரெண்ட் பக்கமாய் லுக் விட்டு வயத்துக்கு போட ஏதாவது கிடைக்குதான்னு பார்த்து, அப்படியே அள்ளிட்டு வா.” என்று எமி, ரிஷிக்கு வேலை கொடுத்து அவர்கள் கவனத்தை திசை திருப்பினான் ஈஸ்வர்.

ஈஸ்வர் சொன்னதை செய்ய ரெண்டடி எடுத்து வைத்தவர்கள், ஒரு கணம் அப்படியே நின்று என்ன நினைத்தார்களோ சம்யுக்தாவிடம் திரும்பி வந்தார்கள்.

“சாரி.” என்றனர் இருவரும் கோரஸாக.

மிக அழகான, உங்களைப் புரிந்து கொண்டேன் என்ற புன்னகை சம்யுக்தா முகத்தில் உதயமாக, எமி சட்டென்று சம்யுக்தாவை இழுத்து அணைத்து கொண்டாள்.

ஏன், எதற்கென்று சம்யுக்தாவிற்கு புரியவில்லையென்றாலும், சம்யுக்தாவின் கரங்கள் ஆறுதலாய் எமியை அணைத்து கொண்டது.

அணைத்த வேகத்திலேயே சம்யுக்தாவை விட்டு விலகிய எமி அங்கிருந்து விரைவாக அகல, அவளைப் பின் தொடர்ந்து சென்றான் ரிஷி.

“செல்வம்… இவங்க பிரெண்ட் டாக்டர் ஹேமா வந்துட்டு இருப்பாங்க. இங்கே இருக்கோம் என்று சொல்லிடு. போலீஸ் வந்துடுச்சான்னு பாரு…” என்று செல்வத்தை அங்கிருந்து அடுத்து அகற்றினான் ஈஸ்வர்.

ஈஸ்வரை மறுத்துப் பேசாத செல்வம், சட்டென்று சம்யுக்தாவின் இரு கரத்தில் ஒன்றை பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை அவள் தலைமேல் வைத்து, “தேங்க்ஸ் சம்யு. தேங்க் யு சோ மச் மா.” என்றவன் அடுத்த நொடி அங்கிருந்து வெகுவேகமாய் எட்டுக்கள் வைத்து விலகிச் சென்றான்.

‘இவர்கள் அந்த அளவிற்கு கெட்டவங்க இல்லையோ… வாட் எவர்.’ என்று அங்கு நடந்த நாடகம் புரியாமல் தலையைக் குலுக்கி கொண்டாள் சம்யுக்தா.

தன் எண்ணங்களில் மூழ்கி இருந்தவளை கலைத்தது ஈஸ்வரின் குரல்.

“தேங்க்ஸ் சோ மச் சம்யுக்தா.” என்றான் ஈஸ்வர்.

குரலில் அத்தனை பரிதவிப்பு. கண்கள் தேங்கி இருந்த கண்ணீரில் பளபளத்து கொண்டிருந்தது.

காரணம் புரியாவிட்டாலும், வார்த்தைகள் அங்கே தோற்றாலும் ஈஸ்வர் மனநிலையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது சம்யுக்தாவால்.

புரிந்தது அது மட்டும் அல்ல. ஈஸ்வர் என்ற அந்த மனிதனுக்கு தன் நண்பர்கள்மேல் இருந்த அளவிட முடியாத பாசமும் தான்.

“நான் எதையுமே செய்யலை. அவங்க ரெண்டு பேரும் சொன்னது எனக்குத் தவறாய் பட்டுச்சு. எனக்குத் தோன்றியதை சொன்னேன் ஈஸ்வர். அவ்வளவு தான். அதுக்கு எதுக்கு இத்தனை சென்டி என்று தான் புரியலை. அவங்க ரெண்டு பேரும் ஒகே தானே… அவங்க மனம் கஷ்ட ப்படுத்தவோ, அவங்களை ஹர்ட் செய்யணும் என்றோ நான் எதையும் சொல்லலை. அவங்க பாய்ண்ட் ஆப் வியூ எனக்கு ஏற்பாக இல்லை. அதைத் தான் எடுத்துச் சொன்னேன்.”என்றாள் சம்யுக்தா குழப்பத்துடன்.

“நோ நோ டோன்ட் ஸ்ட்ரெஸ் யுவர் ஸெல்ப். நீ சரியாகத் தான் பேசினே. அவங்களை பற்றிக் கவலை வேண்டாம். தே ஆர் டப். உன் பேச்சில் இருந்த உண்மை அவங்களை எமோஷனல் ஆகிடுச்சு. ஹே ரிலாக்ஸ். இட்ஸ் நத்திங். ஏன் இப்படி உன் பேச்சு அவங்களை இப்படி எமோஷனல் ஆக்கியது என்று என்றாவது ஒரு நாள் உன்னிடம் சொல்லும் நாள் வரலாம் சம்யுக்தா.

நீ இன்று செய்து இருப்பது எத்தனை பெரிய உதவி என்று உனக்கே தெரியாது என்று சொல்ல வேண்டும். சில சமயம் தேவைப்படுவது இது போன்ற ஆறுதலான வார்த்தைகள் தான். தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன்.” என்றவனின் பார்வை மட்டும் அங்கிருந்து சென்று கொண்டிருந்த செல்வம் , எமி , ரிஷியின் மேல் தான் இருந்தது.

‘ஸ்ட்ரேஞ் பீப்பிள்.’ என்ற எண்ணமே சம்யுக்தாவின் மனதில் எழுந்தது.

“ஈஸ்வர். இப் யு டோன்ட் மைண்ட். ஷால் வீ மூவ் பிரம் ஹியர்?. இருட்டில் ரொம்ப நேரம் நிற்க ஒரு மாதிரி இருக்கு.ரிசெப்சன் ஏரியாவுக்கு போய்டலாமா?” என்றாள் சம்யுக்தா.

“ஓஹ் சாரி. ரியல்லி சாரி. இங்கேயே நின்னு பேசிட்டு இருக்கேன் பாருங்க. நான் ஒரு இடியட். வாங்க போகலாம்.” என்று கைக்காட்டியவன் சம்யுக்தா முன் செல்லக் காவலாய் பின் தொடர்ந்தான்.

சம்யுக்தா ரெண்டடி தான் மட்டுமே தான் இருந்த இடத்திலிருந்து முன்னே எடுத்து வைத்திருப்பாள். அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் ஒரு வலிய ஆண் கரம் பின்னிருந்து அவளை அணைத்து பின்னால் இழுக்க, வலிய மார்ப்பொன்றின் மேல் மோதி நின்றாள்.

அடுத்த நொடி அந்தக் கார் பார்க்கிங்கில் எதிரொலித்தது சம்யுக்தாவின் மெல்லிய அலறல்.

அலறிய சம்யுக்தாவின் வாயை மூடியது ஒரு ஆண் கரம்.

Nicole Jacobs appointed as domestic abuse commissioner - EasternEye

The END

ரெண்டாம் பாகத்தில் சதிராடுவோம்.

உயிரோடு சதிராடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!