காதல்-8
உள்ளத்தை மாற்றிக்கொண்டேன் உனக்கே தெரியாமல்.உயிருடன் இருக்கும்வரை அது முடியாது போலவே,எனினும் சாகும் அளவுக்கு என் காதல் கோழை அல்ல,வாழ்ந்து பார்க்க துணிவும் இல்லை…
மறுநாளின் விடியலில் மீரா படுக்கையைவிட்டு எழுந்தவளாக, தனது அறையை விட்டு வெளியே வந்தவள், “அம்மா ஒரு ஹார்லிக்ஸ்”என்றாள் உரக்க. கிட்சனிலிருந்து வெளியே எட்டிப்பார்த்த அவளது தாயார் கையில் கரண்டியோடு அவளை முறைக்க அதை தூசு போல் தள்ளியவள்.
“எப்படி முறைக்கனும் சொல்லிக்கொடுன்னு இப்போ நான் உன்கிட்ட கேட்கவேயில்லையே, அதுக்கு ஏன் இப்போ டெமோ காட்டுற மம்மி”என்று அவள் பழைய குறும்பை காட்ட.
அதில் கடுப்பானவரோ “கேட்படி கேட்ப, இதுவும் கேட்ப, இன்னமும் கேட்ப, “என்றவரை இடைமறித்தவள்.
“இப்போதைக்கு ஹார்லிக்ஸ் போதும் மம்மி”என்று அவள் மொக்கை போட.
தன் தலையில் அவர் தானே அடித்துக்கொள்ள, அதை தூசு போல் ஊதியவள்.
“இப்போ அடிச்சு என்ன பிரயோஜனம் இதை பெக்கறதுக்கு முன்னே இல்ல யோசிச்சிருக்கனும்?”என்று அவரை வார.
கரண்டியோடு அவர் கொலைவெறியுடன் தன்னை நோக்கி வரவும் உடனே
“அம்மா…அம்மா நீ எங்க அம்மா… உன்ன விட்டா எனக்காரு அம்மா?”என்று அவசரமாய் ஒரு கச்சேரியை ஆரம்பிக்க.
இடிப்பில் கைவைத்து அவளை நேர்ப்பார்வை பார்த்த அவளது தாயார் ‘ஆ…அப்றம்’என்ற ரீதியில் அவளை பார்க்க.
‘என்ன பர்பாமென்ஸ் பத்தலையோ’ என்று மனதோடு நினைத்தவள் “தாயே, ஒரே ஒரு ஹார்லிக்ஸ் போட்டுதரும்படி தாழ்மையுடன்,மரியாதையுடன், கெஞ்சலுடன் தங்களை வேண்டி விரும்பு கேட்டுக்கொள்வது
உங்கள் மகள்.”
என்று அவள் முடிக்க.
“நீ நாற்பது மொழில கேட்டாலும் பல்லு விலக்காம உனக்கு பச்ச தண்ணீ கூட என் கையால கிடைக்காது நியாபகம் வெச்சுக்கோ”என்று அவர் முடிக்க.
“எப்படிம்மா கண்டுப்பிடிக்கிற, எனக்கு புரியல… எப்படி முடியுது?”என்று அவள் வியக்க.
“நான் பெத்த மாடு ஒரு சோம்பேறி மாடுன்னு எனக்கு தெரியாதாடி?”என்று அவர் முடிக்க.
இப்பொழுது முறைப்பது இவளது முறையாகியது.
“இப்போ நீ எதுக்கு மாடு ,சே,சே மகளே, டெமோ காட்டுற” என்று அவர் மேலும் வார.
‘இதுக்கு மேல நின்னா டேமேஜ் ஹெவி ஆகிடும் மீரா,விடு ஜூட்’ என்று மறைந்திருந்தாள் மீரா.
பல்லை துலக்கியவள் சேர்ந்தே அனைத்து இதர கடைமைகளையும் முடித்துவிட்டு வந்துவிட,
அந்த வீட்டின் இரு பிள்ளை செல்வங்களும் சந்தித்துக்கொண்டன யுத்தக்களத்தில்(ஆம் டைனிங் டேபிளில், அவர்களின் ஃபோரோ சூடான தோசைக்காக) அம்மா சூடசூட நெய் மிதக்க தோசை வார்ப்பார் அதை இருவரும் போட்டிப்போட்டு சாப்பிடுவர்.அனுராதா இவனுக்கொன்று,அவளுக்கொன்றாகவே வைப்பார்.
ஆனால் நம் மீராவோ, முதலில் தன்னுடையதை உண்டுவிட்டு தன் அண்ணனுடையதை பிடிங்கி கொள்வாள்,நம் சேட்டைக்காரியிடமிருந்து அவன் தோசை பாதுகாக்க அவன் படும் பாடு இருக்கே.( வெளியில்தான் அப்படி காட்டிக்கொள்வான் உண்மையில் அவனுக்கு அது மகிழ்வையே தரும்)
அடி தடி இல்லாத இன்று ஒரு அளவுக்கு சுமூகமாகவே காலை உணவு முடிய,மீராவே ஆரம்பித்தாள்
“ஆமா,எப்போ நம்ம சென்னை கிளம்புறோம்”என்ற அவளது கேள்வியில் தாயும், தமையனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
**********
இங்கே,உதய்யோ,தன்னவளின் வருகைக்காக காத்திருந்தான்,காத்திருப்பு இருவகை,
1.காதலோடு காத்திருப்பு,சுகமான காத்திருப்பு, நொடிகள் யுகங்களாய் கழியும் காத்திருப்பு.
2.கலவரமான காத்திருப்பு,பயத்தோடு காத்திருப்பு,நொடிகள் யாவும் காற்றை போல் கடக்கும் காத்திருப்பு.
இதில் நம் கதாநாயகனோ முதல் வகை,”காதலாக,(அன்பாக என்பதே சரி),அவன் ஒன்றை புரிந்துக்கொள்ளவில்லை,அவளை கண்டுகொண்ட பிறகும் அவனுக்கு ஏன் இந்த ஆர்வம்?அவளை காண ஏன் துடிக்கிறோம்? போன்றவற்றை அலசி ஆராய்திருந்தால் கண்டுக்கொண்டிருப்பான். அது தான் நடக்கவில்லையே.
தன் கைகடிக்காரத்தை பல முறை கடிந்துக்கொண்டான் வேகமாக நகரச்சொல்லி,’நீ சொன்னா நான் கேட்பேனா?’என்று அவனுக்கு பலிப்பு காட்டிய கடிக்காரமோ, ‘எத்தனை பேரை பாத்திருப்பேன்’என்று அவனை வாரி,மெதுவாகவே ஊர்ந்தது.
பல முறை தன் வலிய கரங்களால் தன் தலை கேசத்தை கோதியவனோ,கடந்த காலத்தில் மிதந்தான்,கண்களில் மின்னல் மின்ன அவளுடனான தன்னை எண்ணி பார்த்தான் சிறு வயது முதல் தற்போது வரை.
ஒருவரை பற்றிய மகிழ்ச்சியை நினைக்கையில் துன்பமும் அல்லவா சேர்ந்து வருகிறது.
தன் குடும்பத்தாலும்,தன் தம்பியாலும் அந்த சிறுமி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பாள், அவள் துடித்திருப்பாள்,அவள் துவன்டிருப்பாள்,அவள் வாழ்வையே அல்லவா வெறுத்திருப்பாள்.
கண்களில் கண்ணீரோடு,அந்த சிறு வயதில் அவள் அன்று தன்னை இடித்து விட்டு சென்ற நிலையை எண்ணுகையில் இவனுக்கு இன்றும் மனம் வலித்தது.உயிரை கூறு போடும் வலி.ஏன் இந்த வலி அவளுக்கு இல்லையா?
அந்த சம்பவத்திற்கு பிறகு,அவளை பல நாட்கள்,பல வருடங்களாக இவனது மொத்த குடும்பமும் தேடியும் கிடைக்கவேயில்லையே,காலத்திற்கும் அழியாத துன்பத்தை மொத்த குடும்பத்திற்கும் அளித்துவிட்டு அல்லவா சென்று விட்டாள்.அந்த குற்ற உணர்வால் தானே தன் தம்பியும் கடல் கடந்து சென்று விட்டான்.
அதன் பின் அவள் கிடைத்துவிட்டதாக எண்ணி அவன் செய்த முட்டாள் தனம் தானே எத்தனை?
நேற்றிலிருந்து குளிர்ச்சியை தத்தெடுத்திருந்த அவனது கண்கள் இம்முறை அக்னியாய் சூட்டெரிக்க துவங்கியது. நெற்றிகண் அக்னி க்கொண்டு வதம் செய்யும் அளவு அதில் அக்னி.
வண்டியின் ஹாரன் ஒலியில் நிகழ் காலத்திற்கு வந்தவன்.மணி இந்த முறை சரியாக நேற்றைய தன்னவளின் வருகையின் நேரத்தை குறிக்க.அவள் நேற்று வந்த வழியையே பார்த்துக்கொண்டிந்தான்.சரியாக அதே நேரம்.
“பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென”
என்று அங்கிருந்த ஒரு கடையில் பாடல் ஒலிக்க சிரித்துக்கொண்டான் “கடவுள் நமக்கு சூழ்நிலை பாடல் போடுவதாக எண்ணி’
ஆனால் கடவுளோ,’இன்னைக்கு பூரா நீ நின்னாலும் கால் வலி மட்டும் தான் வரும்,அவ வர மாட்டா’என்று நினைத்து சிரித்துக்கொண்டார்.
பின்ன என்னப்பா ஓயாமயா மீட்டிங் சீன் கொடுப்பாங்க,போ ,போய் வேலையை பாரு.
**********
அவளின் கேள்வியில் அதிர்ந்த இருவரும் “என்ன சொல்ற?”என்றனர் கோரசாக.
“என்ன சொல்றேனா? எப்போ சென்னை கிளம்புறோம்? சொன்ன தானே எல்லாத்தையும் நான் எடுத்து வைக்க முடியும்!”என்று அவள் முடிக்க.
“அது…இல்ல…”என்று அவள் தாய் தடுமாற அவர் கையை பிடித்த மித்ரன் கண்களால் அவரை அமைதிப்படுத்தி.
குரலை கடுமையாக்கியவனோ,”மீரா,ஆர் யூ ஸ்யூர்? நல்லா யோசிச்சுக்கோ,உன்னால அது முடியுமா?”என்ற அவனுடைய கேள்விக்கு.
“கண்டிப்பா முடியும் அண்ணா”என்றாள் தீர்க்கமாக.
“யோசிச்சு சொல்லு டா”மித்ரன்.
“நல்லா யோசிச்சுட்டு தான் அண்ணா சொல்றேன்,வண்டியில போய் எதாச்சும் விபத்து ஏற்பட்டிருந்தால் அதுக்கு அப்றம் நான் வண்டியே ஓட்ட மாட்டேன்னு சொல்றது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்,அதுபோல தான் எனக்கு நடந்தது ஏன் நடந்தது? எதுக்கு நடந்தது? எந்த காரணத்தால் நடந்தது என்பது பற்றியெல்லாம் இனி நான் யோசிக்க போறதில்லை”.
அங்கு மொளனம் மட்டுமே
அவளே தொடர்ந்தாள் “வாழ்க்கை ஒரு அழகான பயணம் அதில் நமக்கு பிடிச்சது மட்டும் தான் நடக்கும்னு நம்புறது பெரிய முட்டாள்தனம், சில நேரம் ,சில சமயம் கசப்பான சம்பவங்கள் நடக்கலாம், நாம் விரும்பாதது நடக்கலாம்,நமக்கு தேவையே படாத சம்பவங்கள் கூட நடக்கலாம்,மகிழ்வை ஒருவன் கொண்டாடுவது போலவே, துன்பத்தையும் தூர போடலாமே,உடனே எதுவும் முடியாது காலம் தன் கடமையை செய்யும், அறிந்தும் அறியாமலும் நான் இருந்த வயசுல எனக்கு ஒன்னு நடந்தது,அதையே நான் ஏன் இன்னும் பிடிச்சு தொங்கிட்டு இருக்கணும்,தவறு செய்தவர்கள் மகிழ்ச்சியா,ஆனந்தமாக இருக்க நான் ஏன் ஓடி ஒளியனும்?”
“இப்படி ஓடி ஓடி நான் என்ன சாதிக்க போறேன்,மாறாக கண்களில் நிமர்வை கொடுத்து உருத்து விழிக்க போறேன், நீ என்னை பாதிக்க மாட்டாய் என்று”அவள் நீண்ட விளக்கம் ஒன்று கொடுக்க.அவளை குழப்பமாக பார்த்த இருவரையும் கண்டவள்
“புரியுது இத்தனை நாளா இவன் ஏன் பயந்துட்டு இருந்தான்னு யோசிக்குறீங்க, என் மேல் நீங்க ரெண்டு பேரும் வெச்சிருக்கிற பிரியம் எனக்காக நீங்க,அப்பாவும் எவ்ளோவோ பண்ணியிருக்கீங்க எல்லாத்தையும் விட்டுட்டு எனக்காக இந்த ஊருக்கு வந்தீங்க,அதுக்கு அப்றம் நீங்க அங்க போகவும் இல்லை,எனக்கு தெரியும் மா உங்களோட ஒரு மிக முக்கியமான உறவு ஒன்னு சென்னைல இருக்கு,ஆனா எனக்காக தான் நீங்க அவங்களையும் பார்க்க போகவேயில்லை இப்படி எல்லாம் எனக்காக பண்ணின உங்களுகாக இந்த முறை நான் செய்ய போறேன்”
“அது இல்ல மீரா…”என்று அவள் தாய் தொடங்க அவரை தடுத்தவள்.
“இதில் என் சுயநலமும் அடங்கியே இருக்கு மா,நீங்க எல்லாரும் என்னைய இப்படி பார்க்கத்தானே ஆசை பட்டீங்க?அதை நான் இப்போ நிறைவேற்றப்போறேன்,நிச்சயம் இந்த முறை நான் பயந்து ஓடி வர மாட்டேன் மா”என்று அவள் அழுத்தமாக முடிக்க.
அவளது தாயும் தமையனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட பின் மித்ரன் கூறினான்,
“அப்படினா சரி,தயாரா இரு ரெண்டு நாள்ல கிளம்பலாம்”என்றான் மித்ரன்.
“சரி”என்று அவள் சென்று விட.கலவரத்தோடு நின்ற தாயிடம் வந்தவன்.
“அவளை நம்மளே பலவீனப்படுத்தவேண்டாம் மா,நாம கூடவே இருப்போம்”என்று அவன் ஊக்கமளிக்க.அதன் பின் சற்று சமாதானம் ஆனார்.
தனதறைக்கு வந்தவள்,”எல்லாம் முடிஞ்சு போச்சு,மறுபடியும் அதை ஆரம்பிக்க வேண்டாம்,அது எல்லாம் என் வாழ்வின் தீயினால் அழிக்கப்பட்ட பக்கங்கள்,அழிந்தது அழிந்தது தான்”என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
அழிக்கப்பட்ட பக்கங்களில் உதயும் இருக்கின்றானா? ஏன் அதை அவள் அழிக்க வேண்டும்? அதுவும் தீயினால்? சென்னைக்கு போகவே பயம்கொண்ட மீரா இன்று தன் பயத்தை விடுத்து வீரத்தை தத்தெடுத்துக்கொண்டு செல்ல நினைக்கிறாள், இவளது திடீர் முடிவிற்கு பின் என்ன காரணம் இருக்கும்?,அங்கு நடக்கப்போகும் விபரீதம் புரியாமல்,தெரியாமல் போக ஏன் சம்மதித்தாள்? அதை தெரிந்த விதியோ, “உன்னை இத்தனை வருடங்கள் சென்னைக்கு வராமல் காத்துவிட்டேன்,இனி என்னால் முடியாது”என்று அவளுக்கு உதவ மறுத்துவிட்டது. விதி வலியது.
காதல் தொடரும்…
Leave a Reply