உள்ளத்தின் காதல் நீங்காதடி-2

IMG-20211101-WA0013-fc683a28

காதல்- “காதலைத் தேட வேண்டாம். அது முன்னறிவிப்பின்றி நம்மிடம் வரும். அதன் வருகையை இதயம் உரக்க சொல்லும். காதல் கவிதைகள் வரையும். காதல் கலங்கும். காதல் குழம்பும். காதல் ஓரளவுக்கு புரியும். மனக்கதவுகளை மூடாமல், காத்திருங்கள். காதல் உங்கள் வசம். உள்ளம் காதல் வசம்.”

காதல்-2

கமிஷனர் அலுவலகம் வந்தடைந்தவனோ, நேராக அவரின் அறைக்கு முன்சென்று, அனுமதி கேட்டான்.

“மே ஐ கம்மின் சார்?”

“உள்ள வா உதய்!”

“குட் மார்னிங் சார்”

“எ வெரி குட் மார்னிங் உதய், பிளீஸ் டேக் யுவர் சீட்”

“சொல்லுங்க சார்”

“நீ ஒரு வாரம் மதுரைக்கு போய்ட்டு வரணும்பா!”

“ஓகே சார். பட் எதுக்கு”?

“அங்க ஒரு வாரம் சர்வதேச மாநாடு நடக்க போகுது. சோ, அதுக்கான பாதுகாப்பு பொறுப்பை நான் உங்கிட்ட தரேன் உதய் “

“ஓகே சார்”

“பொதுமக்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு, இந்த மாதிரி எல்லாம்தான் அங்க சொல்லப் போறாங்க “

“சரிங்க சார். எப்போ கிளம்பனும்?”

“நாளைக்கு”

“சரிங்க சார். அப்போ நான் போய்ட்டு வந்துறேன்”

“அங்க போய் நீ தங்குறதுக்கு எல்லாத்துக்கும் லோக்கல் இன்ஸ்பெக்டர் உதவி செய்வார். அவர் நம்பர் உனக்கு நான் அனுப்புறேன்”!

“சரிங்க சார். அப்போ நான் கிளம்புறேன்”!

உதய், தனது கடமைகளை நேர்த்தியாகச் செய்யும் விதமும், குற்றங்களைக் குறைக்க அவன் சொல்லும் வழிகளும், போலீஸ் வேலையின் மேல் அவனுக்கு இருக்கும் பற்றையும், இத்தனை வருடங்களில் பார்த்து, அவன்மேல் இவருக்கு நல்ல ஒரு மதிப்பு உண்டு என்றும் சொல்லலாம்.

**********

மதுரை…

“ரொம்ப போர் அடிக்குதே! என்ன பண்ணலாம்? அம்மாவைக் கொஞ்சம் வம்பிழுப்போம்!”

“அம்மா… அம்மா… அம்மா… இங்க வாயேன்?

“ஏன்டி இப்படி கத்துற? என்ன வேணும்”!

“அம்மா அந்த டீவியையும், மின்விசிறியையும் கொஞ்சம் போட்டுட்டு போ மா! ஈஈஈஈஈஈ”

“எனக்குனு வந்து பொறந்திருக்குது பாரு, எருமை”!

“மம்மி அதுக்கு நான்தான் பீல் பண்ணணும்!”

“நீ ஏன்டி பீல் பண்ற”!

“பின்ன என்ன? என் லெவலுக்கு நான் எங்க எப்போ எப்படி இருக்க வேண்டியது தெரியுமா? அநியாயமா இப்படி உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்”

“ஓஹோ! என்னங்க உங்க லெவலு?”

“ஒரு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பானு”

“நிறுத்து! நிறுத்து! என்னடி கண்டங்களின் பெயர்களைச் சொல்லிட்டு இருக்கே!”

“ஆமா மீ. அந்த மாதிரி ஒரு இடத்துல பிறந்திருக்க வேண்டியது”

“ஆமா ஆமா! பிரிட்டீஷ் இளவரசர் சார்ல்ஸுக்கு மகளா பிறந்த உன்னை நாங்க கடத்திட்டு வந்து வளக்குறோம்!”

“அதான, நான் அப்போவே நினைச்சேன். அந்த மாதிரிதான் ஏதாவது இருக்கும்னு! என்னை எதுக்கு அங்க இருந்து கடத்திட்டு வந்தீங்க?”

“ம்ம்… நீ ரொம்ப அழுக்கா இருந்த. அதான், அழகு படுத்தலாம்னு தூக்கிட்டு வந்துட்டேன்”

“மீ அது அழுக்கு இல்ல மீ அழகு. உண்மையைச் சொல். என்னை எங்க இருந்து கடத்திட்டு வந்த?”

“சரி உண்மையையே சொல்லிறேன்”

“நம்ம பழைய வீட்டு பக்கத்துல, ஒரு குப்பதொட்டி இருக்கும்ல…”

“வேணம் மீ விட்டுரு…”

“இருடி மிச்சத்தையும் சொல்லிறேன்”

“வேணாம் மீ, நீ ஒன்னும் சொல்ல வேணாம். போய் உன் வேலைய பாரு”.

“முடியாது. நான் சொல்லுவேன்!”

“வேணா…”!

“எனக்கு வேணும்”

“வலிக்குது”

“அதுக்கு?”

“அழுதுருவேன்”

“அது! என்கிட்ட உன் சேட்டையெல்லாம் காட்டாத. ஏன்னா நான் உன்னைப் பெத்தவ??

“ம்ஹீம்”

“என்னடி ம்ஹீம்?”

“ஒன்னும் இல்லைங்க் ம்மாங்க, போய் வேலைய பாருங்க ம்மாங்க்”

“எனக்குத் தெரியும் அம்மாங்க,போடி அங்குட்டு” என்றார்,அவளின் தாய் அவளை போலவே.

இப்படியாக மீரா அவளது அம்மாவை வம்பிழுக்கலாம் என்று சென்று, அவளே மொக்கை வாங்கும் படலங்கள், இப்படியாகப் பல இருக்க, அந்த நாளிற்கான மொக்கை படலம் இனிதே முடிந்திருக்க, சிரித்து மகிழும் அவளது உதடுகள், உதய்யின் மதுரை வரவால் மாறிவிடுமா? விதி என்ன கணக்கு போட்டு வைத்திருக்கோ? அது அதற்கு மட்டுமே தெரிந்த ஒன்று!

***********

கமிஷனரைச் சந்தித்து விட்டு வந்தவனுக்கோ, மனதிற்குள் பல பூகம்பங்கள். அன்றைய நாளின் தாக்கம், மறக்கக்கூடிய நிகழ்வா அது? செய்யக் கூடாத பாவத்தை அல்லவா செய்துவிட்டான்? இனி அதிலிருந்து தப்பிக்கதான் அவனால் முடியுமா?

கோபம், வருத்தம், இயலாமை, வெறுப்பு இப்படி பல பெயர்களை, அவனின் இந்நிலைக்கு கொடுத்தாலும், அதில் எது அவனின் இன்றைய நிலை என்பதை அவனே அறியமாட்டான்.

சாதாரணமாக உதிக்கும் ஒரு நாள், ஒருவனின் வாழ்வை தலைகீழாக மாற்றும் வல்லமை பெற்றதா என்று கேட்டால், நிச்சயமாக ஆம் என்பதே அவனின் பதில். ஒரு நாள்… சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு சில மணித்துளிகளே!

அவன், இதுதான் எனக்கானது என்று  உண்மையான அன்பை வைத்திருக்க, அதுவோ இவனிடம் நாடகமாடி அவனை ஏமாற்றி சென்றுவிட்ட மணித்துளிகள். வாழ்க்கையில் முதன்முதலில் அவனது மனம் உடைந்த அந்த மணித்துளிகளை, அவனால் தன் வாழ்வின் கடைசி மூச்சு வரை மறக்க முடியுமா என்ன?

ஒரு பொருளோ, உயிருள்ள மனிதனோ நமக்கு மிகவும் பிடித்து, அது இனி நமக்கு மட்டும் தானென நம்பி கொண்டிருக்கையில், அது நம்மை விட்டுப் போகும் அந்த வலி, அதுவே உயிர்வலி. சிலருக்கு அது துக்கத்தைக் கொடுக்கும், சிலருக்கு கோபத்தைக் கொடுக்கும், சிலருக்கு வஞ்சத்தைக் கொடுக்கும். இவனுக்கு என்ன கொடுத்தது? விடை, காலத்தின் கைகளில்!

மதுரையில் எதுவோ நடக்க போகிறது என்று மட்டும் அவன் மனது உறுத்தி கொண்டே இருந்தது. அவனுக்கு மதுரையில் என்ன காத்து கொண்டிருக்கிறது?

*********

மதிய உணவைச் சாப்பிட அமர்ந்த மீரா, “அம்மா பசிக்குது, அம்மா சோறு, அம்மா குழம்பு, அம்மா பொரியல்” என்று அவள் அம்மாவின் பெயரை ஏலம் விட்டுக்கொண்டிருந்தாள்.

“இருடி வரேன்”

“தாயே எனக்குப் பசிக்கின்றது, தாம் தம் கரங்கள் கொண்டு உணவு அளிக்கும் அந்தச் சௌபாக்கியத்தை எனக்குத் தந்தருள்க!” என்று சங்கதமிழில் பேசிக் கொண்டிருக்க,

“வந்து எனக்கு எதுவும் உதவி பண்ணுறாளா பாரு? வாய் மட்டும் பேசுவா!”

“பசி இருந்தா நான் நானா இருக்க மாட்டேன்னு உனக்குத் தெரியாதா?அதோட நான் பசியா இருக்கும்போது வேலை செய்யுறது இல்ல”

“ஆமா, இல்லனா மட்டும் வேலை செஞ்சு கிழிச்சிடுவ!”

“சோ மம்மி, திஸ் இஸ் நாட் அ கிளாஸ் ரூம் டூ டீச்! கேன் யூ பிளீஸ் செர்வ் மீ வித் சம் புட்ஸ், ஐ எம் ஹங்ரி!

“என்னடி சொன்ன இப்போ ?”

“வெல் திஸ் இஸ் நோன் அஸ் இங்க்லிஷ்!”

“அது தெரியுது. அப்புறம்?”

“அப்புறம் என்ன? சோறுதான் சோத்த போடுமா. இன்னிக்கு என்ன சாம்பாரா?”

“ஆமா”

“அப்போ கறிக்குழம்பு?”

“அடியேய், இன்னைக்கு வெள்ளி கிழமைடி!”

“இந்த வெள்ளிகிழமை என் ரூட்ல ஓவரா கிராஸ் ஆகுது. நான் மட்டும் சி.எம் ஆனேன், இந்த வெள்ளி கிழமைய எல்லா கேலண்டர்ல இருந்தும் தூக்கிடுவேன்!”

“ஆமா உன்னதான் தேடிக்கிட்டு இருக்காங்க. பேசாம திண்ணுடி!”

“திண்ணா? வர வர உங்க வார்த்தையெல்லாம் ரொம்ப கெட்டுபோச்சு “

“ஆமா ஆமா”

அவளது சேட்டைகளெல்லாம் அன்று ஏன் அத்தனை தூரம் சென்றது என்பதை அவளும் அறியவில்லை. இனி சிரிக்கவே முடியாது என்று அவளது உள்ளுணர்வு அவளிற்கு சொல்லியதோ என்னவோ?

*********

சிந்தனையில் ஆழ்ந்து இருந்தவனை கலைத்தது, அவனது தொலைப்பேசி. எடுத்துப் பார்த்தான். அவனின் பள்ளி நண்பன் சதீஷ் அழைத்திருந்தான்.

“சொல்லு டா மச்சான்?” -உதய்

“எப்படி டா இருக்கே?”

“இருக்கேன்டா உயிரோட”

“ஏன்டா அப்டி சொல்ற?”

“வேற என்னடா சொல்லச் சொல்ற?”

“மச்சான் ப்ளீஸ்டா சில் “

“முடியல டா என்னால. ஒரு ரோபோவா வாழ்ந்திட்டு இருக்கேன்”

“புரியுது மச்சான், மறக்க முயற்சி பண்ணுடா. ஐஞ்சு வருசம் ஆச்சுடா, அது நடந்து முடிஞ்சு”

“மறக்கணுமா? அதுக்கு நான் செத்துபோகனும்டா”

“போதும் நிறுத்துடா. இப்படிலாம் பேசாதடா”

“விடுடா அத, நீ சொல்லு!”

“ஒரு குட் நியூஸ். நான் அப்பா ஆகப் போறேன்”

“ஏன்டா வெண்ண, இதுதான நீ முதலில் சொல்லி இருக்கனும்? எப்போ சொல்றான் பாரு! வாழ்த்துக்கள் மச்சான்! கீதாக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லிடு”

“சரி மச்சான், வீட்டுக்கு வாடா “

“இல்லடா ஒன் வீக் மதுரை பிளான். நெக்ஸ்ட் வீக் வரேன்டா”

“சரிடா, பாய் டா”

“பாய் மச்சான்”

நண்பனின் நற்செய்தியைக் கேட்டவனால், என்ன தடுத்தும், தனக்கும் ஒரு கல்யாணம் நடந்திருந்தால், தனக்கும் இந்நேரம் ஒரு பிள்ளை பிறந்திருக்கும் என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தனது எண்ணப்போக்கை உணர்ந்தவன், தலையை ஆட்டித் தன்னை நிகழ்விற்கு கொண்டுவந்தவன், மதுரைக்கு செல்ல ஆயத்தம் ஆனான்

***********

“அம்மா….”

“என்னடி”

“நான் வெளியில போய்ட்டு வரேன்”

“எங்கடி போற?”

“ஷாப்பிங் போறேன்!”

“எதுக்குடி”?

“எதுக்குனா நாளை மறுநாள், காலேஜ் ரீ ஓபன் மறந்துட்டியா?”

“அதுக்கு என்ன?”

“டிரஸ் வாங்க போறேன் மம்மி”

“இப்போதானடி ரெண்டு செட் எடுத்த?”

“ஆமா. ஆனா பாரு, வாரத்துக்கு ஏழு நாள். அதுல ஆறு நாள் காலேஜ் இருக்கு. சோ இன்னும் நாலு டிரஸ் வேணும். சோ, போய் எடுத்துட்டு வரேன் !”

“ஏன்? இதுக்கு முன்னாடி எடுத்த டிரஸை எல்லாம் காக்கா தூக்கிட்டு போய்டுச்சா?”

“அதுலாம் ஏற்கனவே போட்டுட்டேன்!”

“ஆமா இவ பெரிய துபாய் ரிட்டனு, ஒரு தடவை போட்ட டிரஸை மறுபடியும் போட மாட்டா?”

“துபாயா? நல்லா தேறிட்ட மீ!”

“சரி யாரு கூடப் போற?”

“ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ” எனப் பாடி கொண்டே வந்தாள் மீனா.

சிறு வயது முதலே மீராவும், மீனாவும் இணைபிரியா தோழிகள். இருவரின் பெயரும் மீ, மீ என்று ஆரம்பிக்குது. இனிமே நீயும் நானும் பிரண்ட்ஸ் என்று கூறியவளோ ஐந்து வயது மீரா என்பது வேறு கதை!

“வாடி மீனு!”

“வணக்கமுங்க அம்மாங், பிரசாதம் எடுத்துக்கோங்க!”

“எதுக்குடி இது?”

“உங்களுக்காக ஒரு வேண்டுதல் பண்ணுனேங்க, அம்மாங்க!”

“எனக்காகவா? எனக்காக என்னடி வேண்டிக்கிட்ட?”

“வேற என்ன?என் தோழி மீரா ஓட அம்மா, ஓயாம கத்திக்கிட்டே இருக்காங்க. பொசுக்குனு போய்ட போறாங்க. அவுங்க அப்படி போகக் கூடாதுனு ஒரு வேண்டுதல்ங்க அம்மாங்க”

“அடி பாதகத்தி! ஏன்டி இப்படி?”

“என்னங்க அம்மாங்க? நீங்க நல்லா இருக்கனும்னுதானே அம்மாங்க வேண்டிகிட்டேன்?”

“அத இப்படியாடி வேண்டுவ?”

“ஆமா அம்மாங்”?

“எனக்குனு வந்து சேந்திருக்குதுங்க பாரு”

“அம்மா”

“என்னடி”?

“தாயை போல் பிள்ளை நூலைப் போலச் சேலைனு, சொல்லுவாங்க அம்மா”

“………”

“முறைக்காதீங்க அம்மா, அது தானே உண்மை?”

“என்னடி வேணும் உனக்கு?”

“சிம்பிள், வெளிய போகனும் அம்மா”

“போய்த் தொலைங்க… பாத்து போய்ட்டு வாங்கடி”

“ஆ…”

“காசு இருக்குல?இல்ல வேணுமா?”

“இருக்கு மீ”

“பாத்து ரோட் கிராஸ் பண்ணுங்க!”

“சரி மீ”

“ரெண்டு பேரும் ஒன்னாவே இருங்க!”

“சரி மீ”

“எட்டு மணிக்கு முன்னாடி வீட்டுல இருக்கணும்!”

“ஐயோ மீ அதுக்கு மொதல்ல நாங்க இங்க இருந்து கிளம்பனும்?”

“சரி சரி போய்ட்டு வாங்க”

பொதுவாகச் சொல்வார்கள், எந்நேரமும் இப்படி கலகலனு இருக்குறவங்களுக்குள்ள சொல்ல முடியாத அளவு துக்கம் இருக்குமாம்? மீராவின் வாழ்விலும் அது இருக்குமோ? இல்லை வேறு காரணமாக இருக்குமோ?

உதய்யின் வாழ்வில் நடந்தது என்ன?அவன் இத்தனை விரக்தியாய் பேசுவதற்கான காரணமும்தான் என்ன? இருவரின் முதல் சந்திப்பு, அது முதல் சந்திப்புதானா? இல்லை நூறாவது சந்திப்பாகக் கூட இருக்கலாம். யார் அறிவாரோ?

காதல் தொடரும்…

*******