உள்ளத்தின் காதல் நீங்காதடி-17

காதல்-17

காதலில் கரைந்த நிமிடங்களே, வாழ்வில் நான் அனுபவித்த மிக இனிமையான அதிலும் இம்சையான தருணங்கள்,இனிமையையும், இம்சையையும்  ஒன்றாய் தரவல்லது இந்த காதல்.

******

அந்த புலர்ந்தும் புலராத காலையின் கவிதையில் தன் காதலியின் அழகில் சொக்கி போய் கிடந்தவன் அவளை இன்ச் இன்ச்சாக ரசிக்க, வானமே அவனது பார்வையில் வெட்கி சிவந்துக்கொண்டிருக்க.

அவனது இம்சையோ, கனவில் டூயட் பாடிக்கொண்டிருந்தாள். ( அது உதய்யோடு என்று நீங்கள் நினைத்தால் ஐ எம் சாரி) இயற்கையிலே பெண்களின் உலகம் மிகவும் வண்ணமையமானது, பகலில் பல இம்சைகள், ஸ்ட்ரெஸின் இடையில் இதுவும் ஒருவகை ரிலாக்சேஷன் தான், கேட்காமல் கொல்லாமல் சிலர் அதில் வந்து மறைவர், அது அந்த நாளில் அவர்களை நினைத்ததின் வெளிப்பாடாக இருக்கலாம், அல்லது நமக்கு மிகவும் பிடித்தவராக கூட இருக்கலாம், இங்கு மீராவின் கனவை அலங்கரித்தவர் ஒரு ஆணழகன்(அப்படித்தான் அவனை சொல்லணுமாம் மக்களே, பட் யூ சீ நேக்கு அவனை பிடிக்கவே பிடிக்காது, அவன் தான் இப்போ டிரென்டு சோ நம்மளும் போவோம்)

உதய் தன்னை காக்க இருக்கிறான் என்ற நம்பிக்கையில் நீண்ட நாட்களுக்கு பின் அவள் அமைதியாய் ஆழந்த உறக்கத்தை தழுவியிருந்தாள், அவளது இறுக்கங்கள் கூட சற்றே மறைந்திருந்தது, அந்த ஆணழகன் அவளது கனவில் தோன்றியதன் வெளிபாடு அவளின் முகத்தில் பல உணர்வுகள் தோன்றி மறைய, அதை தன் அதிநவீன இரண்டு கேமராக்கல் கொண்டு கலர் படம் எடுத்து கொண்டவன் மூளை என்னும் போட்டோ ஆல்பத்தில் இன்றைய தேதியை எழுதி வரிசையாக அடுக்க ஆரம்பித்தான்.

அவன் அவளை உற்று நோக்கியதாலோ, இல்லை அவளுடைய கனவில் வந்த நபர் இறுதியில் வேறு பல பெண்களை நாடி சென்று விட்டதாலோ என்னவோ,முகத்தை சுருக்கியவள் தன் கண்களை திறந்ததும் முதலில் கண்டது உதய்யைத்தான்.

ஏனோ அவளது வாய் “இந்த பாசங்களே இப்படித்தான்” என்று முணுமுணுத்தது (எத்தனை நாளைக்கு இந்த பசங்களே இதை சொல்லுவாங்க ஃபார் அ சேன்ஜ் ஹி…ஹி…)

அது தவறாமல் உதய்யை சென்றடைய கடுப்பானவன் “ஏய்,என்னடி நக்கலா? இப்போ எதுக்கு நீ பாவபட்ட பசங்க இனத்தை திட்டிக்கிட்டு இருக்க?” என்றான் புரியாமல்.

அவனை முடிந்த மட்டும் முறைத்தவள் “ம்…வேண்டுதல். போயா போ காலையிலே கடுப்பை கிளப்பிகிட்டு” என்றாள்.

“ஏய், இப்போ சொல்ல போறியா இல்லையா?” என்று அவன் பொறுமையை கை விட்டவனாக. உதய்யிற்கு மீராவின் மனதில் உள்ளதை அறிய ஆவல் அதனால் அவன் அப்படி கேட்டது, ஆனால், ‘இதை ஏன்டா கேட்டோம்’ என்று அவனை நினைக்க வைக்காமல் விடமாட்டாள் இந்த ராட்சஷி.

“நீயே நியாயத்தை சொல்லு, நான் கூப்பிடாமையே வந்தான், நல்லா பேசினான், சிரிச்சான், டேன்ஸ் கூட ஆடினான், ஆனா கடைசில போய்ட்டான்” என்று அவள் முகத்தை தொங்க போட.

தலையும் புரியாமல்,வாலும் புரியாமல் முழித்தவன் ‘ஒருவேளை நம்மள சொல்றாளோ’ என்று யோசிக்கும்போதே அவள் கூறினாள் “வீ டீ கே,லெட்ஸ் பிரேக் அப்” என்று.

இதை கேட்ட உதய்யின் நிலையோ சொல்லவா வேணும் “ஏய்,எவன்டி அவன்?”என்று கத்தியிருந்தான்.

அவள் விளையாட்டாய் தான் சொன்னது,இருந்தும் உதய்யின் ஆர்வத்தை பார்த்து அவனுடன் விளையாட நினைத்தவள்,அவனிடம் வம்பளக்க நினைத்தாள் (இந்த பொண்ணுங்களே இப்படித்தான்,பாவம் பசங்கப்பா, கழுவி ஊத்துவது என்றால் ரெண்டு பக்கமும் ஊத்திடனும் நோ ஓர வஞ்சனை,பிகாஸ் ஆல் ஆர் சமம்)

“என் லவ்வர்ருரு…”என்று அவள் இழுத்த இழுப்பில் கடுப்பின் உச்சிக்கே சென்றவன்.

அவளின் கரம் பற்றி இழுத்தான் அதில் அவள் அவன் மீது மோதி நிற்க”மறியாதையா உண்மையை சொல்லு,தேவையில்லாம என்னை டென்ஷன் ஆக்காத”என்றான்.

“தோடா,நான் தான் டென்ஷன் ஆக்குறேனாக்கும்,யோவ்,இதான்யா உண்மை”என்றாள் கடுப்புடன்.

அவளை அவன் கூர்மையாய் பார்க்க அதன் வீச்சு தாங்காமல் “விஜய் தேவர் கொண்டா”என்றாள்.

“அது யாரு?”என்று அவன் கேட்க கொதித்துவிட்டாள். 

“என்னது யாரா? எவ்ளோ பெரிய ஹீரோ தெரியுமா? எவ்ளோ அழகு தெரியுமா? எவ்ளோ ஹேண்ட்சம் தெரியுமா?”அவள் அடுக்க. (டேய் கொண்டா மவனே,உன்னை கழுவி கழுவி ஊத்தும் அதே வாயால என்னைய பாராட்ட வச்சுட்டீயே டா பாடி சோடா)

அவள் ஹீரோ என்று சொன்னதும் தான் மனது அமைதியாக, இதுக்கா இவ்ளோ டென்ஷன் ஆனோம்னு அசுவாசப்பட்டவன் “அதுக்கு என்ன இப்போ?”என்றான் தோள்களை குலுக்கி.

“அதுக்கு என்னவா?ஏன் தான் இந்த பசங்களுக்கு இன்னொரு பையனை புகழ்ந்தா பிடிக்கவே மாட்டுதோ,பொண்ணுங்க மாதிரி உங்களுக்கு பரந்த மனசே கிடையாது”என்று அவள் அலுத்துக்கொள்ள (ஏதே,பொண்ணுங்களுக்கு பரந்த மனசா,மவளே,அவன் மட்டும் உன்கிட்ட வந்து என் கனவுல த்ரிஷா வந்துச்சுன்னு சொன்னான்னு வை அவனை கொத்து பரோட்டா போட்டுற மாட்ட,இது என்னாங்கடா லாஜிக்கு).

பொதுவாகவே மீராவிற்கும் வீ டீ கே, வை பிடிக்காது, அவளது கல்லூரியில் குறிப்பாக மீனாவிற்கு அவன் என்றாள் உயிரோ உயிர் அவள் இவன் புராண கதையை பாடி பாடி இவள் இரத்த கண்ணீரே வடித்திருக்கிறாள்,ஆனால் இவள் பெரிதாக யாரையும் கண்டுக்கொண்டது கிடையாது,இந்த மீனா அவளது பைக்,மொபைல் லாக் ஸ்க்ரீன்,ஹோம் ஸ்க்ரீன்,கேலரி,வாட்ஸ் அப் டீபி,ஸ்டேட்ஸ் என்று அவன் படத்தை ட்ரெய்னு விட்டதின் உபயம் அவனை திட்டியே மனதில் ஒரு ஓரத்தில் பதிந்துவிட்டான் போல்.

அவளை அவன் மென்மையாக பார்க்க அதற்கு அவள் அவனை முறைக்க இப்பொழுது ஒன்று மூளையை தாக்க நெளிந்தவள் “வந்து,ரெஸ்ட் ரூம் போகனும்”என்றாள்.

அப்பொழுது தான் அவனுக்கு அது உரைக்க,”கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மா,முடியுமா?”என்றான் அக்கறையாக.

“ம்…ம்…”என்று அவள் குனிந்து தலை ஆட்ட.

‘அதை அவளுக்கு முடியல போல்’என்று அவன் நினைக்க(அரே பக்கி அது பேரு வெக்கம் டா வெண்ண மவனே…)

அந்த பக்கம் நடமாட்டம் தெரிய அங்கு விரைந்தனர்.

அங்கு நடக்க போகும் கூத்து தெரியாமல்…

************

மித்ரன் நிதானத்திற்கு வந்திருந்தான்,ஆத்திர காரணுக்கு புத்தி மட்டு தானே,தங்கை மேல் உயிரையே வைத்திருக்கும் தானுமா யோசிக்காமல் அவளை அவதூறாக பேசியது.

மனது வலித்தது மித்ரனுக்கு , தன் தாயை கண்டான், அவரது முகத்தில் ஒரு தீவிரம் அவர் இம்முறை அழுகவில்லை, திடகாத்ரமாக தான் இருந்தார், அவசரமாய் கிளம்பிக்கொண்டிருந்தார்.

அவன் கேள்வியாய் தாயை பாரக்க அவனின் பார்வையை உணர்நதவர் போல் “என் பொண்ணை தேடி போறேன்”என்றார்.

“ஒரு நிமிஷம்மா, நான் கிளம்பிட்டு வரேன்”என்றான்.

“எதுக்கு?”என்றார் அந்த தாய்.

“ம்மா…”என்றான் அவன் அதிர்ந்து.

“என்னடா அம்மா? அவ உன் தங்கை அவளுக்காக உன் கனவையே விட்டுறேன்னு நீ சொன்னப்போ எனக்கு பெருமையா இருந்துச்சு,எனக்கு அப்றம் அவளை நீ விட்டிடமாட்டேன்னு அவ்ளோ நம்பிக்கையில இருந்தேன்,அதை எல்லாம் உடைச்சிட்ட டா நீ,அவளை பத்தி உனக்கு தெரியாதா? நீ எப்டி அவளை சந்தேகபடலாம்?”என்றார் குற்றம் சுமத்தும் பார்வையால்.

“………”

“எவனோ ஒரு பரதேசி,ஏதோ சொன்னான்னு உன்கூட பொறந்தவள நீயே சந்தேகபடுறியே? அவ அப்படி பண்ற ஆளான்னு உனக்கு தெரியாதா? அப்றம் என்னடா நீ அண்ணே? நாளைக்கு வேற ஒருத்தன் வருவான், ஏன் உனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வருவா? அவ உன் தங்கச்சியை வெளியே அனுப்புனு சொன்னா செய்வ தானே?”என்று அவர் கேள்வி கேட்க.

“அப்படிலாம் இல்ல ம்மா”என்றான் அமைதியாக.

“வேணாம் பா,நான் பாத்துகிறேன், என் பொண்ண, இனியும் உன்ன நம்பி என் பொண்ண விட நான் தயாரில்ல,அவளை பெத்து , வளர்த்த எனக்கு அவளை ஒரு நல்லவன் கையில பிடிச்சு கொடுத்திட்டு போக தெரியும், நான் பாத்துகிறேன், இனி உன்னை யாரும் எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம். நீ உன் வேலையை பாரு, என் பொண்ணை நான் பாத்துக்கிறேன்”என்று முடிவாக உறைத்தவர்.வீட்டை விட்டு கிளம்ப…செய்வதறியாது நின்றான் மித்ரன்.

அனுராதாவின் இந்த பரிமானம் மிகவும் புதிது,கண்டிப்பான,அன்பான அமைதியான ஒரு பெண்ணாய் இருந்தவர் தன் மகளுக்கு என்றதும் புயலாய் மாறிவிட்டார்,அந்த புயல் அனைவரையும் அடித்து விழ்த்தும் வல்லமை கொண்டது.

தன் மகன் என்றும் பாராமல் அவனை விலாசி எடுத்துவிட்டார்,இது ஒரு தாயின் போராட்டம்,தன் வளர்ப்பு தப்பாகாது,தன் மகள் தவறு செய்ய மாட்டாள், என்று உறுதியாய் நம்பி இதோ  தன் மகளை மீட்டெடுக்க புறப்பட்டுவிட்டார் ஒரு போராளியாக.

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை…

***************

ஆட்கள் நடமாட்டம் வந்த இடத்தை நோக்கி விரைந்தனர் உதய்யும்,மீராவும்.

அங்கு வந்த நால்வரை பார்த்ததும் உதய் அவர்களிடம் விரைந்தான்,மீராவோ “ஐ நாலு பெருசுங்க”என்று கத்த அவளது வாயை அடைத்தவன்.

“வாயை மூட்றீ கொரங்கு”என்று பொத்த இதை கவனித்த பெருசுங்க அவனை சந்தேகமாய் பார்க்க.

“அது வந்துங்கய்யா,நாங்க பாதுகாப்புகாக தான் இந்த ஊருக்கு வந்தோம்”என்று சொல்ல.

அதிலிருந்த ஒரு ஐயா வாயை திறக்க அவரை பார்த்த மீரா ‘பெரிய மீசை,இந்த கேங்குல இவர்தான் பெரிய மீசை வச்சிருக்காரு சோ,இன்று முதல் இவர் பிக் மீசே’என்று பெயர் வைக்க.

அந்த பிக் மீசே, “ஆமாம்ப்பா,அந்த ரௌடிங்க ஏதோ காதல் ஜோடியை பத்தி விசாரிச்சிட்டு இருந்தாங்க”என்க.

அவர்கள் நினைத்தது சுபியையும்,கதிரையும் சொல்லியிருப்பார்கள் என்று அதனால் அதை சாதாரணமாக எடுத்தவர்கள் ,”ஆமாங்கய்யா,நாங்க தான் அது “என்க.

“ஓஹோ,புரிஞ்சது,புரிஞ்சது”என்று நாலும் கோரசாய் இழுக்க.

‘இழுவையே சரியில்லையே’மீரா மைண்ட் வாய்ஸ்.

“இப்போ நாங்க ஊருக்கு போகணும் அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்”என்றான்.

“என்ன அவசரம் போகலாம்,எங்க ஊருக்கு வந்திருக்கீங்க,நாங்க உடனே எப்படி அனுப்புவோம்”என்றார் பெரிய மீசே.

“இல்லங்கய்யா,கொஞ்சம் அவசரம்”என்றான் உதய்.

“தம்பி இருப்பா,அவனுக இங்க தான் தேடிட்டு இருக்கானுக,எப்படியோ சமாளிச்சு ஊருக்குள்ள விடல,கொஞ்சம் நேரம் இங்கன இருங்க,அப்றம் கிளம்புவீங்களாம்”என்று அவர் கூற வருவது நியாயமாய் பட சரி என்று தலையை ஆட்டினான் உதய்.

அவனுக்கென்ன மீராவோடு இருக்க கசக்குமா என்ன? மீராதான் அவனை முறைத்தபடியே இருந்தாள்.

அந்த ஊரில் ஒரு சிறிய வீட்டில் அவர்களை ஓய்வெடுக்க சொல்லி விட,அவரின் தொலைபேசியை எடுத்து அவள் மித்ரனுக்கு அழைக்க போகையில் அதை தடுத்தவனாக உதய்.

“வேண்டாம் மீரா,அந்த ஆளு உன் அண்ணண் நம்பரை கண்காணிக்க நிறைய வாய்பிருக்கு,ஏற்கனவே நாம இங்க தான் இருக்கோம்னு ஒரு டவுட்ல தேடுறாங்க,இந்த கால் போனா அவுங்க கண்டுபிடிச்சிடுவாங்க”என்று அவன் அந்த முயற்சியை முறியடிக்க.அது சிறிதே நியாயமாய் பட மண்டையை ஆட்டிவிட்டாள்.

************

இன்றைக்கு குணசேகரனிடமிருந்து அழைப்பு வந்தது,ஏனோ தெரியவில்லை அவருக்கு ஏதோ ஒரு விதமாக நேற்றையிலிருந்தே இருக்கே, இன்று அழைத்துவிட்டிருந்தார்.

தூரத்தில் இருந்து தன் அன்பானவர்களின் நலன் பேணுதல் எத்தனை கொடுமை,பிள்ளைக்கு காய்ச்சல் என்று கூறினால் நம்மால் பக்கத்திலிருந்து பார்க்க முடியவில்லையே என்று ஏங்கி தவிக்கும் தந்தைமார்கள் இங்கு எத்தனை கோடி பேர் குறிப்பாக அண்டை நாடுகளில் வேலை செய்யும் தந்தையர்கள்.

குழந்தையின் பிறந்த நாளைக்கு அசையாய் கேக் ஊட்டிவிட ஏங்கும் கைகளை கட்டுபடுத்தி தன் உணர்வுகளை அடக்கி வாழ்வது கொடுமையன்றோ!

இதை விட கொடுமை வேலை முடிந்தவுடன் அப்பா என்று காலை கட்டிக்கொள்ள குழந்தை தொலைவில் அல்லவா இருக்கிறது.அதன் ஸ்பரிசம் உணராமல்,அதன் சின்ன சின்ன செய்கையை ரசிக்க முடியாமல்,அவர்கள் வளரும்போது அவர்களோடு சேர்ந்து தானும் வளரமுடியாத ஏக்கம், இப்பொழுது தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது தான்,இவை இல்லாத காலத்தில் வெறும் நினைவுகளை மட்டும் சுமந்தும் வாழ்ந்த அந்த நாட்கள் கொடுமையானதோ, இந்த  விதி சாபத்தை வழங்கியதோ இல்லை சதி செய்ததோ?

மகனோ,மகளோ ஆசையாய் கேட்ட பொருளை வாங்கி அதை அனுப்பிவைத்துவிட்டு,அதை காணும் போது அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை காண கொடுத்து வைக்காத சாபம்.

அப்படி எதற்கு இந்த வாழ்க்கை,எல்லாம் அவர்களுக்காக தான்,அவர்களை நன்றாக வாழ வைக்க,அவர்களின் ஆசையை நிறைவேற்ற.

இப்படி வாழ்வையே தியாகித்து,அற்பணித்து வாழும் வெளிநாட்டு தமிழ் தந்தைகளுக்கு இந்த பதிவு சமர்பணம்.

(முக்கியமாக என் அண்ணண் @kalaivanan great anna)

குணசேகரின் மனது படபடவென அடித்துக்கொண்டது,யாருக்கு என்ன என்று புரியாத நிலையில் ஊருக்கு அழைத்தவரின் நிலையோ மிகவும் கவலைகிடம்

அழைப்பை ஏற்கவா? வேண்டாமா? மித்ரனுக்கு என்ன செய்வதென்று புரியாத நிலை.

அவரிடம் உறைக்கலாம் என்று ஒருவாரு முடிவெடுத்தவன்,அந்த போனை எடுத்து விஷயத்தை பகிர்ந்திருந்தான்.

இந்த பக்கம் சொன்ன தகவலை ஜீரணிக்க முடியாமல் கலங்கினார் அந்த தந்தை.

********

இங்கு உதய்க்கும்,மீராவிற்கும் ஏக போக விருந்து சமைத்து பரிமாறப்பட்டது,அவர்கள் புதுசா வந்ததால் இந்த கவனிப்பு போல என்று நினைத்துக்கொண்டனர்.

அங்குள்ளவர்கள் இவர்களை புதுமண தம்பதியாய் நினைத்து அன்று அந்தி சாயும் பொழுது வரை நன்றாகவே கவனித்தனர்.

இதற்கு மேல் முடியாது என்ற பட்சத்தில் உடனடியாக எதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்த உதய் தனது திட்டத்தை செயலாற்றினான்.

அதன்படி முதலில் சுபியை தொடர்பு கொண்டு தன்னை கொலை செய்ய முயல்வதாக ஒரு வீடியோ பதிவை எடுத்து அதை அனைத்து ஊடகங்களிலும் பகிரப்பட்டது, பின் இதற்கு யார் காரணம் சுபியின் தந்தையா? எனும் கோணத்தில் அவர்களே அதை பெரிதாக ஆக்கிவிட கொதித்து போனவர்.

எங்கே தான் இத்தனை வருடம் சேர்த்து வைத்த பெயர் போய்விடுமோ என்று சுதாரித்தவர் மீடியாவிடம் உருக்கமாக “என் மகள் ஒரே மகள் அவளை நான் கொலை செய்ய போறேனா? எனக்கு என் மகள் விருப்பங்களே என்றும் முக்கியம்,அதை நானே தடுப்பேனா? என் மகளுக்கு எதோ ஒரு பயம் அதான் இப்படி பண்ணீட்டா,இல்லைன்ன என்கிட்ட சொல்லியிருப்பா,இது வேற யாரோட சதி என் மகள் என்னிடம் வரசொல்லுங்க அவளை நான் பாதுகாப்பேன்”என்று அவர் உருக்கமாய் பேசியதில் அனைவரும் நம்பினர்.

இது தானே அவனுடைய திட்டமும் தன் பெயருக்கு ஒன்னு என்றால் அதை அவர் ஏற்க மாட்டார் என்று அவன் நம்பினான்,அது நடந்துவிட்டது அடுத்ததாக ஒரு போலி அடியாட்களை ஏற்பாடு செய்து சுபியின் தந்தை தான் சுபியையும்,கதிரையும் கொலை செய்ய சொல்வதாகவும்,மற்றும் உதய்யையும் மீராவையும் கொலை மிரட்டல் விடுவதாகவும் போலியாக ஒரு வாக்குமூல வீடியோவை தயார் செய்து அதை அவருக்கு அனுப்பி ஒழுங்காக இல்லையென்றால் அனைத்து மீடியாவையும் இது சென்றடையும் என்று மிரட்டி தற்போதைக்கு அவரை அடக்கிவைத்துவிட்டான்.

ஓர் அளவுக்கு பிரச்சனை முடிந்தது,அவர்கள் கிளம்ப தயாராக இருட்டிவிட்டிருந்தது,அவர்கள் நாளை கிளம்ப சொல்ல முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாள் மீரா.

வேறு வழி இல்லாமல் அவர்கள் கிளம்ப”சீக்கிரம் புள்ள குட்டியோட சந்தோஷமா வாங்க”என்று அவர்கள் வாழ்த்த, அப்பொழுது தான் பொறி தட்டியது மீராவிற்கு,காலையிலிருந்து கிடைத்த விருந்துக்கும்,கொண்டாட்டதிற்கும் விடை தெரிய அதற்கும் அவள் உதய்யையே முறைத்து வைத்தாள்.

அந்த வாழ்த்தை பெற்றுக்கொண்ட உதய் முகம்கொள்ள புன்னகையுடன் அவளை பார்த்து கண்ணடிக்க.

“போடாங்…”என்று அவனை அவள் ஒரு நல்ல வார்த்தையில் திட்ட ஒரே கூத்துதான்.

_தொடரும்_