காதல்-23
என்னை நான் ரசிக்க கற்றுக்கொண்டேன்,எனக்கே தெரியாத எனது அழகை அவன் ரசித்தப்போது,அவன் பார்வையில் என் காதல் கர்வம் கொண்டது.
********
காதல்-23
உதய் கூறியது அனைத்தும் கேட்டப்பின் மீராவிற்கு ஒரு தெளிவு பிறந்தது அது உண்மையே, ஆனால் அவளின் அந்த கேள்வி, அதற்கான விளக்கம் உதய்யிடத்திலிருந்து ஏன் இன்னும் வரவில்லை. அவன் அதை நம்மிடம் சொல்ல பிரியப்படவில்லையா?
இப்பொழுது அதை பற்றி பேசுவதா வேண்டாமா? அவளுக்கு தலையே வலித்தது, அதை தெரிந்துக்கொள்ளாமல் எப்படி இதற்கு சம்மத்திக்க? ஒருவேளை தான் தவறாக எதுவும் நினைத்துவிட்டோமோ? பல கேள்விகள் மீராவை குடைந்தது.
அவளின் அமைதி உதய்யை யோசிக்க செய்தது, ‘அவளுக்கு நாம எல்லாத்தையும் சொல்லிட்டோம் இருந்தும் ஏன் இவ்ளோ தயக்கம்? எதையாவது கேட்கணும்னு நினைக்குறாளா?’ அவன் மனது அவனோடு பேசியது.
“மீரா, எதாவது கேக்கணுமா?” என்றான் உதய்.
அவள் இதை கவனிக்கவில்லை, அவளை பற்றி உலுக்கினான்.
“ஹம், என்ன?” என்றாள்.
“உனக்கு எதாவது கேட்கணுமா?” என்றான்.
“அப்படிலாம் ஒன்னுமில்லை” என்றாள் புன்னகையுடன்.
“ஷ்யூர்?”
“எஸ் ஷ்யூர்” என்றாள் முன்னே நடந்து.
அவளோடு சேர்ந்து நடந்தான் உதய். சிறிது நேர மௌனம், ஏனோ கடல் அலை இன்று அவளது மனதிற்கு பேரழகாய் தெரிந்தது.
அழகு ஆபத்தானது என்பது எத்தனை உண்மை, அதற்கு சிறந்த உதாரணம் இந்த கடல், எத்தனை அழகாய் அமைதியாய் இருக்கிறது, ஆனால் பொங்கி எழுந்தால்? யாராலும் தாங்கிக்கொள்ள இயலாதே, கடலும் பெண் போல் உள்ளதாகவே எனக்கு தோன்றும், பெண் பொறுமைசாலி ஆனால் அவள் தன் கோபத்தை காட்டினால்.
உதய்யோடான இந்த நடையை ரசித்தாள் மீரா, உதய்யும் அப்படியே, ஆனால் அவன் மனது ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தது.
‘அந்த விசயத்தை மீராவிடம் கூறுவதா, வேண்டாமா? அந்த தருணத்தில்தான் நான் மீரா மேல் உள்ள காதலை புரிஞ்சுகிட்டேன் அதை எப்படி சொல்லாமல் விட, ஆனால் அது சந்தோஷமான விஷயமா இருந்தா சொல்லலாம், அது அப்படி இல்லையே அத சொல்றதுனால எனக்கு கடந்த காலம் ஞாபகம் வரும், அவளுக்கு அது வலியைதான் கொடுக்கும் அதுனால சொல்லாம விடுறதே சரி’
‘இன்னைக்குத்தான் மீரா முகத்துல சந்தோஷம் எட்டி பாக்குது அதை கெடுக்கவேணாம், அந்த விஷயத்தை மறந்து வாழ்வதே சிறந்தது, முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்’ என்று தீர்க்கமாய் முடிவெடுத்தவன் நிம்மதி அடைந்தான்.
மீராவிற்கும் மகிழ்வே ‘ஆனால் அன்று தான் பார்த்தது, அதை உதய் நம்மகிட்ட சொல்ல வேண்டாம்னு நினைக்குறான், ஆனால் ஏன்? இதை எப்படி தெரிந்துக்கொள்ள, என்னால அவன்கிட்ட இதை பத்தி கண்டிப்பா கேக்கமுடியாது அப்போ’ அவள் யோசித்தாள்.
“ம்கும்… என்ன பலமான யோசனை, காலம் முழுக்க எப்படி என்கூட குப்பை கொட்ட போறியோன்னா?” என்றான் அவளை வம்பிழுக்க.
“அது… உங்க… கிட்ட… ஒன்னு கேப்பேன் உண்மையை மட்டும் தான் சொல்லணும்” என்றாள்.
“என்ன மேடம் இப்பவே மிரட்டுறீங்க?”
“ம்ப்ச்… விளையாடாதீங்க, இது கொஞ்சம் சீரியஸ்” என்றாள்.
“சரி. . . சொல்லு ஜிலேபி” என்றான்.
அந்த வார்த்தையிலையே வாயில் போட்ட ஜிலேபியாய் கரைந்தவள் அவன் கண்களின் பாஷையில் கிறங்கினாள், அவளை அசைத்து புன்முறுவல் செய்தான் உதய்.
தலையை தட்டிக்கொண்டவள் அழகாய் சிவந்தாள். அவளை அணைக்க துடித்த கைகளை அடக்கியவன்.
“என்னனு சொல்லு” என்று ஊக்கமளிக்க.
“அது… உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிச்சு தானே இந்த கல்யாணம்…?” என்றாள்.
அந்த கேள்வியில் கடுப்பானவன் “போடி… எதாவது சொல்லிடபோறேன், இவளுக்காக ஒன்னொன்னும் பாத்து பாத்து பண்றேன் என்னய பாத்தா உனக்கு எப்படி தெரியுது?” என்றான்.
“அதுக்கில்லை, இது சிம்பத்தி அந்த மாதிரி எதுவும்?” அவள் தடுமாற.
“அட யார்ரா இவ, சிம்பத்தியாம் இவங்க வாழ்க்கையையே பறிகொடுத்திட்டு இருக்காங்க நான் இவங்களுக்கு வாழ்க்கை கொடுகிறேன்.” என்றான்.
“விளையாடாதீங்க ப்ளீஸ், நான் அதுக்கு கேக்கலை என்ன பாக்கும்போது எப்போ பாத்தாலும் மொறச்சுட்டே இருந்தீங்க அதான்” என்றாள்.
“மேடம் மட்டும் என்ன பண்ணுனீங்க என்ன பாத்ததும் என்னா நடிப்பு, என்ன தெரியாத மாதிரியே நடிச்சீங்க, அதோட நீ சொல்லாம போன கோபம் வேற எனக்கு, அதான்” என்றான் பாதி உண்மையை மறைத்து.
“ம்ம், இந்த கல்யாணத்துல உங்களுக்கு இஷ்டம் தானே? முழு மனசோட” என்றாள்.
அவளின் இந்த கேள்விகள் ஏன் என்று உதய்யிற்கு புரியவே இல்லை, ‘அவனுக்கு தெரிந்தவரை அவன் ஒவ்வொரு நிகழ்விலும் மீரா மீது அக்கறை செலுத்தியிருந்தானே, அது அவளுக்கு நம்பிக்கை அளிக்கவில்லையா?’ அவளின் இடது கரத்தை மென்மையாக பற்றியவன்.
அவனிடம் யார் கூறுவது அவன் மறைக்க நினைப்பதை அவனவள் அறிவாள் என்பதை, தெரிந்திருந்தால் கூறியிருப்பானோ, பின்நாளில் விதியை வென்றிருப்பானோ.
“ஜிலேபி… எனக்கு பொய்யா விதவிதமா உன்னை இம்ப்ரஸ் பண்ண தெரியாது, ஏன்னா நான் அதுல கொஞ்சம் வீக், ஆனா உன்ன காதலிக்குறதுல நான் எந்த விதத்துலையும் பலவீனமானவன் கிடையாது”
மீரா அவனை ஆச்சரியமாக பார்த்தாள் அதில் புன்னகைத்தவன், “எனக்கு உன்ன பிடிக்கும், ரொம்ப பிடிக்கும், உன்னை மட்டுமே பிடிக்கும். நீ என்ன விட்டு போனதும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஆனா நீ எப்படி போகலாம்னு கொஞ்ச நாள் உன்மேல இருந்த கோபத்துல கொஞ்ச நாள் உன்ன மறந்துதான் இருந்தேன்”
“உன்ன மறக்கவிடாம பண்ணிணதுக்கு முக்கிய பங்கு உன் வீட்டுக்கு இருக்கு, நம்ம தெருவுக்கு இருக்கு, நீ எனக்காக கொடுத்த பரிசுக்கு இருக்கு, ஒவ்வொரு தடவை இதெல்லாம் நான் பாக்கும்போதும் அதுல நீ மட்டுமே தெரிஞ்ச, அப்டித்தான் என் மனசுக்குள்ள உன்மேல காதல் வந்துச்சு போல, அந்த காதல நான் உணர்ந்த நொடி, நீ வேணும்னு என் உயிரோட ஒவ்வொரு செல்லும் துடிச்சிது, உன்னை பாக்கணும்னு ஏங்குச்சு” என்றான் புன்னகையுடன். (ஆனால் காதல் வந்த தருணத்தை மறைத்தவனாக)
அவளது உதடுகளும் மென்மையாய் நகைக்க அதை ரசித்தவன் தொடர்ந்தான்.
“ஆமாம் மீரா, என்னைக்கு உன்ன மதுரைல பாத்தேன்னோ அன்னைக்கே நான் முழுசா காலி, உன்ன கண்டுபிடிச்சுட்டேன், இனிமே உன்ன விட்டு நகரவே கூடாதுனு நினைச்சேன், உங்கூட ஒரு வாழ்க்கையே வாழ்ந்திட்டேன் தெரியுமா?” என்றான் ரசனையுடன் பின், “நீ மதுரையை விட்டுட்டு போய்ட்ட இத்தனை வருசம் கழிச்சி கிடச்ச உன்ன தொலைச்சுட்டேன்னு எவ்ளோ ஃபீல் பண்ணினேன் தெரியுமா?” அதில் உண்மையான வருத்தம் தெரிந்தது.
அவனின் வருத்தம் அவளை தாக்கியது அதை மாற்ற நினைத்தாள்.
“ஆமாம் மறந்துட்டேன், ஏன் என்னை தெரியாத மாதிரி நடிச்சீங்க, அன்னைக்கு என்னை எவ்ளோ டார்ச்சர் பண்ணுனீங்க” என்றாள் அவனை இலகுவாக்க.
உண்மை தான் அவளை தெரியாத மாதிரி நடித்தான் ஆனால் அதுக்கான காரணத்தை இப்போ அவனால் சொல்ல முடியாதே, அதனால் “நீ தான்னா அதுனு எனக்கு ஒரு கன்ஃபர்மேஷன் தேவைப்பட்டுச்சு, உன் ஐடி யை பார்த்ததும் தெளிவாகிடுச்சு.” என்றான் மகிழ்வுடன்.
“ஆஹான், அப்போ வேணும்னே என்னைய நடக்க வச்சிருகீங்க, எவ்ளோ கொழுப்பு” என்று அவனை முறைக்க.
“ஆமா, மேடம் அப்படியே நடந்து தான் போனீங்க, பொய் சொல்லாத” என்றான் அவளை கண்டுக்கொண்டவனாக.
“ஹே, எப்படி கண்டுபிடிச்சீங்க, நீங்க அங்கயே தானே நின்னீங்க” என்றாள் அவனை புரியாது பார்த்து.
“உன்னை பத்தி எனக்கு தெரியாதா?” அவளின் கண்ணோடு கண் கலந்து.
அதில் மயங்கியவள் “சரி, அப்றம் ரெஜிஸ்டர் ஆபிசுல…”
“என்ன சரி, போயினு, அது தான் எல்லாத்துக்கும் தெரிஞ்ச கதை தானே”.
“அப்போ கூட நீங்க என்ன மொறச்சுட்டுதான் இருந்தீங்க” என்றாள்.
“மொறச்சேனா” அவன் அவளை லைவ்வில் முறைக்க.
“இல்லையா பின்ன” என்றாள் அப்பாவியாக.
“ஜோக்ஸ் அபார்ட்” என்ற உதய்யே தொடர்ந்தான்,
“உன்னை சேரில பாத்துட்டு அன்னைக்கு…”
“தெரியும்… தெரியும்”என்றாள் அவள் வெட்கத்துடன்.
“உனக்கு எப்படி தெரியும்?” உதய் மிரட்ட.
“அதான் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி பாத்தீங்களே” என்றாள் மீரா.
“அடிப்பாவி அப்போ முழிச்சிட்டு தான் இருந்தியா” என்றான்.
“ஹம்…” என்றாள் தலையை குனிந்து.
“கேடி” என்றான் அவளை ரசித்து.
பின் உதய் ஞாபகம் வந்தவனாக “நீ ஏன் என்ன தெரியாத மாதிரி நடந்துகிட்ட, அப்றம் நான் உன்ன ஒவ்வொரு டைம் சந்திச்ச போதும் உன்னோட மிக்ஸட் ஃபீலிங்க்ஸை நான் பாத்தேன், அது ஏன்?” என்று தன் கேள்வியை கேட்டான் உதய்.
இந்த கேள்வியை மீரா எதிர்பார்த்தாள் தான் அவனே அதை மறைக்க நினைக்கையில் அவள் அதை கிளற நினைக்கவில்லை, அப்பொழுது இருந்த மீராவிற்கு உதய் மீது கடும் கோபம் இருந்தது, இன்று இருக்கும் மீராவிற்கு அது இல்லை, அவன் அப்படி செய்ததிற்கு ஏதோ காரணம் இருக்கும், இப்போ அதை நான் கேட்டா, அவனை சந்தேகப்பட்டு கேட்டதா ஆகிடும், வேணாம் என் உதய் மேல் எனக்கு இப்போ முழு நம்பிக்கை இருக்கு, சின்ன வயசுலையே எனக்காக அத்தனை செய்தவன் என்னவன், நிச்சயம் என்மேல் அவன் உயிரையே வைத்திருக்கிறான், அவன் காதல் மட்டும் போதும் எனக்கு, அவன் கடந்த வாழ்வு எனக்கு எதற்கு? தெளிவான முடிவு, முகமும் தெளிவடைந்தது.
“அது… நான் தான்னு சொன்னா நீங்க என் கூட போசுவீங்களோ இல்லையோன்னு ஒரு டவுட் அதான்” என்றாள் மீரா.
“ஆமா இவ ஒருத்தி, பேசாம எங்க போக போறேன், நீயே சொல்லியிருந்தா நல்லா நாலு வார்த்தை கேட்டுட்டு பேசியிருப்பேன் கண்டிப்பா” என்றான் உறுதியுடன்.
“ஆமா, பேசலான்னா, எப்போ பாத்தாலும் இஞ்சி திண்ண ஒன்னு மாதிரி, உர்ருனு முறைச்சுட்டே இருந்திட்டு” என்றாள் அவள்.
“நீ அதை மட்டுமா பாத்த, அப்றம் அதே கண்கள் உன்னை ரசிச்சதையும் பாத்தியே, நீயே தானே சொன்ன இதையும்” என்றான் அவளை மடக்கி.
“ஹம்… நல்ல பார்வைதான், அதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று அவள் வாயிற்குள் முனங்க.
“என்ன பண்றது நான் ஒரு நயன்டீஸ் கிட் ஒருவேளை டூ கேவா இருந்தா, உன்னை இவ்ளோ பக்கத்துல வச்சு பாத்துகிட்டு மட்டும் இருப்பேனா… இந்நேரம்…” அவன் கண்களின் மொழியை அறியாதவள் இல்லையே அவள்.
“ச்சீ… பேச்சை மாத்தாதீங்க, ஒலுங்கா சொல்ல வந்ததை சொல்லுங்க” என்றாள் முகம் சிவக்க.
“அது தான் மை பொண்டாட்டி, இனிமே நீ தான் மை பொண்டாட்டி, அதுக்கு இனிமேல் இல்ல ஃபார்மாலிட்டி, நான் உன்ன தூக்கிட்டேன் விளங்கு மாட்டி” என்றான்.
“போலீஸூன்னு ஃப்ரூவ் பண்றீங்களா?” என்றாள் நன்றாக நகைத்து.
“அப்கோர்ஸ், போலீஸ்காரன் டி, உன் புருஷன்” என்றவனது பார்வை அவளை வருட.
“போதும்… போதும், நான் வீட்டுக்கு போனும், அப்பாவோட இருக்கணும்” என்றாள்.
“இந்த கரிசனம் என்மீதும் இருக்கட்டும், நீ உங்க அப்பாவை மட்டும் பிரிஞ்சு இத்தனை வருஷம் இல்ல, அவரோடவாவது மொபைல்ல பேசிட்டு தானே இருந்த” என்றான் முகத்தை பாவமாய் வைத்து.
“ஹம்… பாக்கலாம்… பாக்கலாம்” என்றாள் அவனை பார்த்து கண்ணடித்து, பின், அவன் கைகளோடு தன் கைகளை கோர்த்துக்கொண்டாள்.
“தரண் கடல் அலைல நடந்துட்டு வரலாமா?” என்றாள் கண்களை சுருக்கி.
அவளின் தரண் என்ற அழைப்பு எத்தனை நாட்களுக்கு பின் அழைக்கிறாள் அதிலே மயங்கி போனான் மீராவின் தரண். “இனி மேடம் சொல்றது மட்டுமே நடக்கும், வாங்க மேடம்” என்றவன் அவளோடு இணைந்து நடந்தான்.
கால்களை உரசி சென்ற அலைகளை அன்புடன் ஏற்றாள் மீரா, அவளுக்கு அந்த இடமே அத்தனை இதத்தை கொடுத்தது. உதய்யும் மீராவிற்கு இணையான மகிழ்வில் இருந்தான்.
“மீரா…”
“சொல்லுங்க”
“எனக்கு ஒரு பாட்டு தோனுது பாடவா?”
“நீங்க எப்போ பாட கத்துக்கிட்டீங்க”
“மனசுக்கு பிடிச்சவங்களுக்காக பாடுறதுக்கு பாட்டு கிளாஸ் போகணும்னு அவசியம் இல்ல, நான் எவ்ளோ மொக்கையா பாடினாலும் அதை நீ ரசிக்கத்தான் செய்வ பாக்குறியா?”
அவள் தலையை ஆட்ட
“ஏன் விரல் இடுக்குல ஊ விரல் கிடக்கணும்
நசுங்குற அளவுக்கு இருக்கி நா பிடிக்கணும்
நான் கண்ண திறக்கையில் உன்முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கென்ன பிடிக்கணும்.
கடல் அல போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நானில்லடி.
கடல் மண்ண போல் உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வர நான் இருப்பேனடி”
“எத்தனை அழகான வரிகள் இல்லையா மீரா, காதலை சொல்ல இதை விட பெரிய வார்த்தைகள் தேவையில்ல, இந்த பாடலை எழுதின விக்னேஷ் சிவன் என்ன மாதிரி காதலன்ல”
“ஆமா உதய், உண்மை தான், பொண்ணுங்க இதை தான் எதிர்பாப்பாங்க, பொண்ணுங்க உலகம் வண்ணமயமானது, அவங்க நிறைய ஆசை படுவாங்க அதுல ஒன்னு, ரெண்டு நடந்தாலே ரொம்ப சந்தோஷமும் ஆகிடுவாங்க.
அவங்களோட பெரிய எதிர்பார்ப்பு என்ன தெரியுமா? பெரியகிப்டோ இல்ல ஸர்ப்ரைஸோ இல்ல, அவங்க பிறந்த நாள் அன்னைக்கு சரியா பண்ணிரெண்டு மணிக்கு கணவனிடமிருந்து வர வாழ்த்து, திருமண நாள் அன்னைக்கு இந்த நாள் தான் உன்னை எனக்கு கொடுத்துச்சு அதுக்கு ஒரு நன்றி இப்படி சொன்னாலே போதும் அவுங்க முழு திருப்தி அடஞ்சிருவாங்க”
“ஒத்துக்கறேன், அப்போ எனக்கு செலவு மிச்சம்” என்றான் அவளை பார்த்து.
“எதுக்கு?” என்றாள் மீரா.
“பின்ன என்ன செல்லம் நீயே சொல்லிட்ட வாழ்த்து மட்டும் போதும்னு, மாமேன் கரெக்டா பண்ணிரண்டுக்கு விஷ் பண்ணிடுறேன் சரியா வேற எதுவும் கேட்ககூடாது” என்றான் கண்ணடித்து.
“அடிங்க… ஆசை தோசை நினைப்ப நினைப்ப மவனே பெரிய கிப்ட் வரலை நீ சட்னி சொல்லிட்டேன்” என்றாள் அவனை முறைத்து.
“ஏய் இப்போ தான்டி பக்கம் பக்கமா பேசினா”
“அது உண்மைதான் என்ன ஒரு ஐம்பது சதவீதம் தான் பேலண்ஸ் ஐம்பது சதவீதம் கேர்ல்ஸூக்கு கிப்ட் அண்ட் ஸ்ரப்ரைஸ் வேணும்” என்றாள்.
“அவுங்களை பத்தி எனகென்ன பா, ஏ செல்லம் விஷ் மட்டும் தான் கேட்டா, வேணும்னா விஷ் ஓட ஒரு உம்மா குடுத்திடுறேன், அது வெஜ்ஜா இருந்தாலும் ஓகே நான் வெஜ்னாலும் டபுள் ஓகே” என்றான் அவள் உதட்டை நோக்கி.
“உன்னை போடா பிஸ்னாரி” என்றவளின் வார்த்தைகளில் மயங்கியவன்.
“சரி, அப்போ எத்தனை கிஸ் வேணும் நீயே பிசுனாரின்னு சொல்லிட்ட அதுனால கணக்கே இல்லாம கொடுத்திருறேன்” என்று அவன் அவளை தன்னை நோக்கி இழுக்க.
“அடிங்க…” என்று அவனை அவள் விரட்டினாள், அவன் ஓடினான்.
இந்த ஓட்டம் பார்க்கவே அத்தனை அழகாய் இருந்தது, இனி வாழ்க்கை முழுக்க அவன் ஓட போகிறான் மீரா துரத்தபோகிறாள், மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமே.
அவர்களோட வாழ்வும் இதே போல் மகிழ்வுடன் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
(கடவுள்-சாரி அதுக்கு இன்னும் நாள் இருக்கு…)
அடுத்த பதிவில் டும் டும் டும்…
உதய் சரண்
வெட்ஸ்
மீரா
ஆல் ஆர் வெல்கம். . . ❤️
காதல் தொடரும்.