உள்ளத்தின் காதல் நீங்காதடி-25

காதல்-25.

முதல் காதல் ஒருவனை வாழ்வின் அடுத்துக்கட்டத்திற்கு உயர்த்த உதவும்,வலிகளின் மருந்தாகவும் சில சமயத்தில் வலியின் வேராகவும் இருக்கும், இந்த காதல் மனிதனை மனிதனாய் நிலையாய் வாழவைக்கும் சக்தி…சரிதானே.

இரவின் தனிமையில், நிலாவிற்கு இணையான அழகோடு வான் பார்த்து நின்றிருத்தவளின் கண்கள் அவளின் மனதின் வலியை கண்ணீராய் வெளியேற்ற முயற்சித்தது. 

மீராவின் மனதில் பல குழப்பம், அந்த குழப்பத்தின் வெற்றியே அவளது தற்போதைய நிலை, ஏன் இத்தனை கஷ்டம் உதய்யிடம் கூறுவதற்கு ஒரு நிமிடம் ஆகாது அவனின் பதில் அவளுக்கு சாதகமாய் வரும் என்று நினைக்கமுடியாதே, அதை தாங்கும் சக்தியோ, வலிமையோ அவளிடம் நிச்சயம் இல்லை. 

மனதில் எழுந்த பல குழப்பத்துடன் நின்றிருந்தவளை கவனித்தான் உதய், உண்மையில் அவன் உறங்கவில்லை, அவளை கண்கானித்தான், அவளின் நிலை இவனை மிகவும் வருத்தியது,  இறுதியில் ஒரு முடிவெடுத்தவன் உறங்கிவிட்டான். 

இரவின் குளுமை ஏற ஏற மீராவிற்கு உடல் நடுக்கம்வர, அமைதியாய் வந்து உறங்கிவிட்டாள், அவனின் அருகாமையை அவள் ரசிக்கவே செய்தால், அவன் விழித்திருக்கும் வேலையில் அவன் கண் பார்க்க பயந்தவள் இப்பொழுது அவனை காதலுடன் ரசிக்கிறாள். 

பொன் சுடர் கதிர்களை அழகாய் பரப்பி, தன் வருகையை உணர்த்திய கதிரவன், அன்றைய நாளின் துவக்கத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருக என்று கூறியவராக தன் பணியை துவங்கினார். 

அதிகாலையில் எழுந்து நம்மவளுக்குத்தான் பழக்கமே இல்லையே, இரவு தாமதமாய் உறங்கியதாலும் அவள் நன்றாகவே இழுத்து போர்த்தி தூங்க, முதலில் விழித்த உதய்யோ அவளது களைந்த முகத்தை ரசித்தவனாக பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் மீது தெளித்தான். 

அதை சுவடே செய்யாமல் கைகளால் துடைத்தவள் தூக்கத்தை தொடர, மென்மையாய் நகைத்தவன் அவளின் நெற்றியில் தவழ்ந்த முடியை ஒதுக்கி,  மொத்த தண்ணீரையும் முகத்தில் 

கவிழ்த்தான். 

அதில் அரண்டு எழுந்தவள் உதய்யை முறைத்தவளாக திட்டதுவங்கினாள். 

“ஹே, இப்போ எதுக்கு தண்ணி ஊத்தின எரும”

“நீ தானே எருமை மாதிரி தூங்கின”

“சோ, தூங்கினதுக்கா தண்ணி ஊத்தின, எழுப்பி விட்ருக்கலாமே”

“ஆமா மேடம், எழுந்துட்டு தான் மறுவேலை பாப்பீங்க”

“இனிமே இப்படிலாம் தண்ணி ஊத்துற வேலை வச்சுக்காத”

“சரி பாப்போம், போ போய் காஃபி எடுத்திட்டு வா” என்றான் தோரனையாக. 

“உனக்கு எதுக்கு நான் எடுத்துட்டு வரணும், நீ என்ன…” என்று தொடங்கியவள் பிரேக் அடித்தார் போன்று நின்றாள், அவளுக்கு இப்பொழுது தான் அனைத்தும் உரைத்தது. கூடவே, அவளின் கவலையும். 

அமைதியாய் எழுந்தவள் குளியலறை நோக்கி நகர்ந்துவிட்டாள்,  உதய்யிற்கு தான் தலை வலித்தது, இத்தனை நேரம் சரிக்கு சரியாய் வாயாடியவள் எங்கே என்று, அதன் பின் குளித்து முடித்து வந்தவள் டாப்ஸ்,  லெகின்ஸ் சகிதம் கிட்சனை நோக்கி நகர்ந்தவள்,  அடுத்த ஐந்தாவது நிமிடம் ரூமில் இருந்தாள். 

அவளது முகமே வெளியே நடந்ததை எடுத்துரைத்தது, மீராவின் பெற்றோரையும் அவர்களின் சொந்த வீட்டிற்கே வர கூறியிருந்தான் உதய், அதுவே அவர்களுக்கும் சரியாய் பட, மீரா மாமியார் வீடு வரவும் பின்னோடு வந்திருந்தனர். பக்கத்திலிருந்து மகளை பார்க்க கசக்குமா என்ன. 

அனுராதா இன்நேரம் வந்திருப்பார், இவளது ஆடையை காட்டி மீராவை திட்டியிருப்பார் அதான் ஓடி வந்திருக்கிறாள் என்பதை சரியாக ஊகித்தவன், வேணும் என்றே கட்டிலில் படுத்து கண்களையும் மூடிக்கொண்டான். 

மீராவிடமிருந்தது அனைத்துமே புது புடவைகள் தான் அதிலிருந்த ப்ளையின் ரெட் கலர் சேலையுடன், க்ரீன் கலர் வர்க்டு ப்ளவ்ஸை எடுத்தவள் அவனிடம் விரைந்தாள். 

அவன் நன்றாக தூங்குவது போல் பாசாங்கு செய்ய, ‘இப்போ என்ன பண்றது, இதை கட்டணுமே’

அவள் மனது யோசிக்க ‘தூங்கதானே செய்றான்’ என்ற ஒரு நம்பிக்கையில் அவள் புடவையை கட்ட துவங்க அவனுக்கு முதுகை காட்டி நின்றவளின் அழகிலே அவளின் மொத்த அழகை காண எழுந்த ஆவலை அடக்கி அவன் பொறுமை காக்க. 

அவனை சோதிக்கவென அந்த வெல்வெட் சேரி பீலீட்ஸ் வராமல் சதி செய்ய வெகு நேரமாய் அவள் முயற்சியை ரசித்தவனின் உடல் வேறு தீயாய் தகிக்க, அவளோடு அவன் கலந்திட துடித்த நொடியில் அவன் ஆண்மை இட்ட கட்டளையில் அவளின் இடுப்பை வளைத்தவனின் ஸ்பரிசத்தில் தூக்கி வாரிப்போட கழுத்தை மட்டும் திருப்பி அவனை பார்த்தவள் அவனின் பார்வை மாற்றத்தில் பயந்தவளாக முகத்தை முன்னே திருப்பினாள். 

அவளின் கழுத்து வளைவில் முகம் நுழைத்தவனின் சூடான மூச்சுகாற்று அவனை விட வேகமாய் முன்னேற தன்னுள் எழும் உணர்விற்கு பெயர் கூட தெரியாத காதல் பாடத்தில் மிகவும் பின் தங்கிய மாணவியாக அவள் இருக்க. 

அவளது நடுங்கிய உடலை கண்டவன் தன்னை சற்று கட்டுபடுத்தியவனாக அவளது சேலையை எடுத்து அழகாய் கட்டிவிட துவங்கினான். அவனது அருகாமையில் வேர்க்க துவங்கிய வியர்வை முத்துக்கள் அவள் நெற்றியில் கண்ணாடியாய் மின்ன கலைந்த ஓவியமானவளை ஆட்கொள்ள துடித்தவனுக்கு தன்னை கட்டுப்படுத்த பெரும்பாடானது. 

தாம்பத்யம் காதல் வாழ்வின் உண்மையான அங்கிகாரம், அதை பெற ஒரு மனைவியின் முழு சம்மதம், மன திருப்தியும் வேண்டும் என்று நினைக்கும் அக்மார்க் கணவன் நம்மவன். 

ஆகையால் தன்னை கட்டுபடுத்திக்கொண்டவன், அவளுக்கு அழகாய் சேலையை உடுத்திவிட, ஒரு மனைவியாய் இந்த தருணத்தில் வெட்கத்தால் தன்னால் சிவக்ககூட முடியாததை நினைத்து அவளுக்கும் வேதனை அதிகமானது. 

அவன் சேலையை உடுத்திவிட்ட பின் தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு தான் இத்தனை அழகா என்ற சந்தேகம் தோன்றியதே உண்மை. பெண்ணின் அழகின் செழிமையை அப்பட்டமாய் காட்ட  சேலை ஒன்றே போதுமானது. அவளின் செழித்த அழகை ஒரு பெருமூச்சுடனும், உரிமையுடனும் ரசித்து முடித்தவனோ, அவளை தன்னை நோக்கி திருப்பினான். அதில் அவள் அரண்டு விழிக்கையிலே. 

“ஹம்…இனிமே நீ சேரியே கட்டு நான் கூட இருக்கும்போது மட்டும்” என்றவன் அவளது கண்ணத்தை வருடிவிட்டு குளியலறையில் புகுந்தான். 

அவன் சென்று சிறிது நேரம் பின்னும் பிரம்மை பிடித்து நின்றவள், நினைவு வந்தவளாக கீழே சென்றாள். 

அவள் வருவதை பார்த்த ராதா அவளின் ஆடையில் திருப்தியுற்றவராக நிற்க . 

 

அவளுக்காக காத்திருந்த மீனாவோ அவளை தனியே அழைத்து சென்றவள் “என்னாச்சு” என்று கேட்க. 

“ஒன்னுமில்லை” என்றவளின் வார்த்தையில் அவளை முறைத்தவள். 

“சரி, நான் ஊருக்கு கிளம்புறேன்”  என்று நடக்க அவளை நிறுத்தியவள். 

“ஏன்டி!” என்றாள் சோர்வாக. 

“பின்ன, எல்லா பிரச்சனையையும் தனியா சமாளிக்க பழகிடிங்க, நா வேற எதுக்கு தண்டமா, நான் கிளம்புறேன்” என்றாள். 

“ப்ளீஸ் டி, என்ன புரிஞ்சுக்கோ, உன்கிட்ட சொல்லாம யாருட்ட சொல்ல போறேன், கொஞ்சம் டைம் கொடு, இன்னும் ஒரு டூ டேய்ஸ் இருந்திட்டு போ, ப்ளீஸ்” என்றாள். 

அவளின் மன்றாடல் இவளை வருத்த “சரி, ஆனா நீ சீக்கிரம் என்ன பிரச்சனைனு என்ட்ட சொல்லணும்” என்றாள். 

இவர்களின் உரையாடலை தள்ளி நின்று கவனித்த அனுராதா “மீரா” என்று அவளை அழைத்தார். அவரிடம் விரைந்தவளை கூர்ந்து கவனித்தவருக்கு ஏதோ புரிந்தது,  காலை முதல் முகத்தை சோகமாகத்தான் வைத்திருக்கிறாள், அவளது கவலை என்னவென்று மட்டும் அவருக்கு புரியவேயில்லை ‘இத்தனை நாள் எங்களை பிரிய போறா அந்த கவலை என்று நினைத்தார், ஆனால் இப்போதுதான் அவர் இங்கேயே வந்துவிட்டாரே அப்றம்  ஏன் இந்த தயக்கம், இந்த ஒன்றரை மாதத்தில் என்ன தான் நடந்தது, கேட்டாலும் சொல்ல மாட்டா, சரி அவ போக்குலையே விடுவோம்’ என்று நினைத்துக்கொண்டவர் மகளை அன்பாக அணைத்துக்கொண்டார். 

“மீரா, நீ சின்ன பொண்ணில்ல இனிமே நீ பொறுப்பா இருக்கணும், நம்ம வீடு மாதிரி இங்க பண்ணிட்டு இருக்ககூடாது, சீக்கிரம் எழுந்து பழகு, கொஞ்ச நாளைக்கு சேரியை உடுத்திக்கோ” என்று கூற. 

ஏனோ, உதய் கூறிய ‘நீ கொஞ்ச நாள் சேரியை கட்டு, என்முன்னாடி மட்டும்’ என்றவனது குரலே அவளை மீண்டும் மீண்டும் தீண்ட தாயின் முன் முகம் சிவந்தாள். 

அவளின் முகத்தை கண்டவர் சற்றே தெளிந்தவராக “அண்ணிக்கு வேண்டிய ஹெல்ப்லாம் பண்ணு” என்று மகளை அனுப்பி வைத்தார். 

மீனாட்சி காஃபியை அவளிடம் கொடுத்தவராக “இந்தா மீரா இதை போய் உதய்க்கு கொடு மா” என்றார். 

அதை அமைதியாய் பெற்றுக்கொண்டவள் அவர்களது அறைக்கு சென்றாள், மீனாட்சிக்கும் அவளின் முகம் சரியில்லை என்பது புரிந்தது,  ஆனால் தன் மகன் மேல் அவருக்கு அத்தனை நம்பிக்கை,  மீராவை அவன் மாற்றிவிடுவான் என்று. 

ஆனால் அது அத்தனை சுலபம் இல்லை என்பது புரியும்போது. 

***************

அங்கு மீனா அவளது அன்னைக்கு அழைக்கவென்று மொட்டை மாடியை அடைந்தவள் அங்கு சஞ்சையும் இருப்பதை கண்டவள் மறுபடியும் கீழே போக திரும்ப அவளை நிறுத்தியது சஞ்சய்யின் குரல். 

“என்கிட்ட பேச வந்துட்டு அப்டியே போறீங்க”அதகல் வெகுண்டவள், 

“ஏது , நான் உங்ககிட்ட பேச வந்தேன்னு உங்ககிட்ட எப்போ சொன்னேன்”

“நீங்க பேசவரலையா, சரி வாங்க நா உங்ககிட்ட பேச தான் காலையில இருந்து இங்க உக்காந்திருக்கேன்” என்றான். 

 ‘ஆளை பாரு, ஏன் உங்க கிட்ட பேசணும்னு டேரக்ட்டா சொல்ல மாட்டானாம், இவனுக்கு என்னதான் வேணும், ஏன் வம்பு பண்ணிட்டு இருக்கான், சரி தெளிவா பேசிடலாம்’ என்று முடிவெடுத்தவள் அவனிடம் விரைந்தாள். 

“பேச வந்ததுக்கு தாங்க்ஸ்”

“சொல்ல வந்ததை மட்டும் சொல்லுங்க” என்றாள் வெடுக்கென்று.

“ஹம்…அண்ணணுக்கு கல்யாணம் முடிஞ்சது, அடுத்து…” அவன் அவள் முகம் நோக்கி நிறுத்த,

“ம்…” என்று அவள் ஊக்க.

“இல்ல… மானாஷாக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் எனக்கு”

“சரி, அதுக்கு என்ன?”

“அதுனால நீங்க ஒரு இரண்டு வருசம் வெய்ட் பண்ணணும்”

“இல்ல புரில, அதுக்கு நான் ஏன் வெய்ட் பண்ணணும்?”

“அச்சோ, அப்போ முடியாதா சரி, வாங்க முதல்ல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் நாம, அப்றம் கிராண்டா பண்ணிக்கலாம்” என்றவனின் வாக்கியம் அவளை கொதிக்க செய்ய. 

“ஏங்க… உங்களுக்கென்ன மண்டைல ஏதாவது பிரச்சனையா, நா ஏதாவது சொல்லிட போறேன், எதுக்கு இப்படி உளறீட்டு இருக்கீங்க” என்று அவள் அவனை தாளிக்க. 

“ஹம்…முடிஞ்சதா, இங்க பாரு மீனா, எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன், அவ்ளோதான் உனக்கு எதாவது ஆள் இருக்குமோன்னு ஒரு டவுட் அதான் இப்படி பேசுனேன்”

அவள் ஞே என்று முழிக்க “ஏன் இப்படி முழிக்கிற உனக்கு ஆள் இருந்திருந்தா சாரி, ஐ யம் ஆல்ரெடி கமிடட்னு முடிச்சிருப்ப, ஆல்ரெடி ரீலேஷன்ஷிப்ல இருந்தா இதை கேட்டு நிச்சயம் கோபம் வந்திருக்காது ஆனா நீ கோபபட்டு திட்டுனியே சோ, நீ சிங்கில் தான்”

அவள் அவனை முறைக்க அவனே தொடர்ந்தான் “நா உன்ன ஃபோர்ஸ் பண்ணல, யோசிச்சு சொல்லு, பட் ஐ வில் ட்ரை டூ இம்ப்ரஸ் யூ, டோன்ட் பர்கெட் தட் யூ ஆர் மை டார்கேட்” என்றவன் அவளை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டே சென்றான். 

மீனாதான் அங்கயே யோசித்துவிட்டு நின்றுவிட்டாள். மீனாவும் மீராவிற்கு இணையான குறும்பாளினி தான் ஆனால் அவள் சற்று பயந்தவள் குறிப்பாக இந்த காதல் கத்தரிக்காயில் எல்லாம் அவளுக்கு பெரிதாய் நம்பிக்கை இல்லை, இப்பொழுது மீராவின் காதலால் சற்று அதை பற்றி ஒரு நல்லெண்ணம் வந்தது உண்மை, அதுவும் காணாமல் போயிருந்தது மீராவின் இந்த திடீர் மாற்றத்தால். 

மீனாவின் காதலை பெறுவதற்கு சஞ்சயும், மீராவின் நம்பிக்கையை பெறுவதற்கு உதய்யும் தலைகீழாய் தண்ணீர் குடிக்க கூட நேரலாம் யார் கண்டது?

*************

திருமணத்திற்கு மறுநாள் உதய்யிற்கு வந்த அவசர வேலையால் அவன் உடனே டெல்லி கிளம்பும்படி ஆணை வர,  கடமையின் முன் மீராவின் ஒதுக்கம் கூட அவனுக்கு பின் தள்ளப்பட கிளம்பி சென்றவன் தான்,  ஒரு வாரம் கழித்து இன்று தான் வருகிறான். 

பகலில் எப்படியோ சமாளிப்பவள் இரவில் அவனின் அறையில் அவனுடைய பொருட்களுடன் அவனது ஞாபகம் அவளை இம்சிக்க, அவளது அன்னை வீட்டிலே தங்கிக்கொண்டாள், உதய்யும் இல்லாததால் இதற்கு அவர்கள் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஒரு வாரம் கழித்து அவன் வரும்போது  இவள் “நான் போகலை” என்று அடம்பிடிக்க, ராதா தான் அவளை திட்டி, அதட்டி, கொஞ்சி அனுப்பி வைத்திருக்கிறார். 

உதய் வீட்டை அடைய நல்லிரவு ஆகியிருந்தது, முன்னரே தான் வர லேட்டாகும் என்பதை உறைத்தவன் அவர்களை உறங்க பணித்தான். இது வழக்கம் என்பதால் அவர்களும் உறங்க சென்றனர். 

மீரா உறக்கம் வராமல் பால்கெனியில் நின்றிருந்தாள், கதவை திறந்துக்கொண்டு வந்தவன் பெட்டில் தன்னவள் இல்லாததை கண்டு வருந்தினான். இந்த ஒரு வாரமாக அவளிடம் பேச கூட முடியாத அளவு இரவு பகல் வேலையாக அவனிருக்க, இன்று அழைத்தவனுக்கு அவளது ஃபோன் ஸ்விட்ச் ஆப் என்று வரவே, அன்னைக்கு அழைத்தவன் தனது வருகையை உறைத்து. பின், மீரா அவள் தாயகம் இருப்பதையும் அறிந்திருந்தான். அவன் வருவது தெரிந்தால் வந்துவிடுவாள் என்று அவன் காதல் மனம் நினைக்க இப்பொழுது மனது பெரும் அடி வாங்கியது. 

‘அவ வரலை போல அவங்க அம்மா வீட்டுல தான் இருக்காளோ’ என்று நினைத்தவனுக்கு  ‘தன் காதல் எங்கு தவறிழைத்தது’ என்று மட்டும் புரியவேயில்லை. 

இத்தனை நேரம் மீராவை காணும் ஆவளால் சோர்வை மறந்து வந்திருந்தவனுக்கு மொத்த சோர்வும் சேர்ந்துக்கொள்ள,  குளியலறைக்கு போக திரும்பியவன்,  பால்கெனியில் லைட் எரிவதை உணர்ந்தவனின் மனது எதையும் நினைக்கும் முன் அதை தடுத்தவன்,  அங்குவிரைந்தான். 

மெலிதான பிங்க் நிற சாட்டின் நைட் வியருடன் ஒற்றை நிலவாய் உலகத்தின் நிலாவிடம் கண்களால் பேசிக்கொண்டிருந்தவளை மெதுவாய் நெறுங்கியவன். “மீரா” என்று அவளை மென்மையாய் பின்னாலிருந்து அணைக்க. 

அவனின் அணைப்பில் அவள் உடல் விரைக்க அவளின் கண்ணீர் அவனது கைகளை தொட, பதறியவன் அவளை முன்னே திருப்பினான். 

அவனது முகத்தை நிமிர்ந்து கூட பாராமல் அவள் தலை தாழத்த அவளது நாடியை பிடித்து தன்னை நோக்க செய்தவன் அவளது கண்களை நேராய் சந்தித்தான். 

அவளது கண்ணங்களில் நேர்கோடாய் வழிந்திருந்த கண்ணீரை சற்று அழுத்ததுடன் துடைத்தவன் அவளை நோக்கி அனல் பார்வையை அளித்தான். 

அதில் மிரண்டவள் அவனை விட்டு விலக நினைக்க அவளது முயற்சியில் தடுத்தவன் “மீரா” என்றான் கோபத்தை குரலில் அடக்கி. 

அவனது கோபத்தை அறிந்தவள் அவனை நோக்க அவளது பார்வையை சந்தித்தவன். 

“என்ன பிரச்சனை உனக்கு?” என்றான் அழுத்ததுடன். 

அவள் மிரண்ட பார்வையையே தர பொறுமையை கை விட்டவனாக “இங்க பாரு, இன்னைக்கு எனக்கு தெரிஞ்சே ஆகனும்” என்றான் பிடிவாதத்துடன். 

அவள் அமைதிகாக்க அவள் இருதோள்களையும் இறுக பற்றியவன் “சொல்லு” என்றான் அந்த இருளில் அது நாலாபக்கமும் எதிர் ஒலித்தது. அதில் நடுங்கியவள். 

“என…க்கு இ…து வேண்…டா…ம்” என்றாள் திக்கி. 

அதில் அதிர்ந்தவன் “எது வேண்டாம்?” என்றான் குரலில் அத்தனை கோபத்தையும் அடக்கி. 

“நீ…ங்க” என்று அவள் முடிக்க, அதில் அவளை உதறியவன் வெடுக்கென்று வெளியே சென்றுவிட்டான். 

அவன் பற்றியிருந்த தோள்கள் எரிய துவங்க கண்கள் கலங்க அதே இடத்தில் சரிந்தாள் மீரா. 

என்ன நடக்கும்?

_தொடரும்_