உள்ளத்தின் காதல் நீங்காதடி-7

காதல்-7
காதலுக்கு பல எதிரிகள் உண்டு. உண்மையைச் சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் எதிரிகள் மட்டுமே கூட இருக்கும் சந்தர்ப்பங்கள் கூட அமையும். அதை அனைத்தையும் காதல் என்ற ஒரே ஆயுதத்தால் வீழ்த்துவதால்தான் காதலை அத்துனை புனிதமானதாகவும், பலசாலியாகவும் கருதப்படுகிறதோ?

#####

தெளிவான முடிவு எடுத்தவுடன் தனது வீட்டை நோக்கிப் பயணத்தைத் தொடக்கிய மீராவிற்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி அவளின் தெளிவான முடிவைப் பாதிக்குமா?

மிகுந்த கலையிழந்த தோற்றத்தில் வந்து நின்ற மகளைப் பார்த்துத் தாயின் எண்ணமோ வலி அதிகம் போல என்று அவளின் நலனையே சுற்றி வட்டமிட, அதில் புதிதாக முளைத்த இந்தப் பிரச்சணையை எப்படி சொல்ல என்று அவர் மௌனம் சாதிக்க, என்றுமில்லாத திருநாளாக இந்த நேரத்தில் தன் தமையன் வீட்டில் இருப்பதை கண்டவளும், தற்பொழுது தானிருந்த மனநிலையில் அவனிடம் வம்பு வழக்க வேண்டாமென்று எண்ணினாளோ அல்லது தன்னால் அதைச் செய்ய முடியாதென்று நினைத்தாளோ, வரவழைக்கப்பட்ட புன்னகையை சிந்தி தனதறைக்கு செல்ல முற்பட, தங்கையின் திடீர் மாற்றம் அவனைக் கவலைக்குள்ளாக்கியது.

என்ன என்று அவன் தன் தாயிடம் கண்ணால் வினவ அவரோ, ‘ஒன்னுமில்லை’ என்று ஜாடை செய்ய, சிறிது தெளிந்தவன், ‘நேரத்தைக் கடுத்துவதால் பயனில்லை. சொல்லவேண்டியதை சொல்லித்தானே ஆக வேண்டும்’ என்று ஒரு முடிவெடுத்தவனாக, “மீராம்மா” என்றான், பாசத்தையும் கண்டிப்பையும் சம அளவில் தேக்கிவைத்தப்படி.

சோர்வுடனே வந்தவளும் “சொல்லுண்ணா”என்றாள் அமைதியாக.

“ஏன்டா ஒரு மாதிரி இருக்க? எதுவும் பிரச்சணையா?” என்று அவன் பரிவுடன் கேட்க, அவனது கேள்வியிலேயே, ‘இதோ நான் வந்துடுவேன்’ என்று பயமுறுத்திய கண்ணீரை தனக்குளேயே அடக்கி, “ஒன்னுமில்லைண்ணா… கால் வலி” என்றாள் சமாளிக்கும் பொருட்டு.

மீரா சற்றே குறும்பான பெண்தான். ஆனால் பொறுப்பில்லாதவள் கிடையாது. பாசமானவள். புத்திசாலியானவள். ஆனால் அவளின் பயத்தை மட்டும் இன்றுவரையில் அவளால் விடமுடியவில்லை, அந்த ஒரு விடயத்தில் மட்டும்.

அவளது வேதனை மனதை வாட்டினாலும் சொல்லவேண்டிய நிற்பந்ததில் உள்ளவனோ வேறு வழி இல்லாது ஆரம்பித்தான். “எனக்கு டிராஸ்பர் கிடச்சிருக்கு”என்ற பீடிகையுடன்.

சலித்துக்கொண்டவள் “எங்க?”என்றாள் அசட்டையாக.

ஒரு நிமிடம் தயங்கியவன், “சென்னை”என்றான் அழுத்தமாக.

அந்தப் பெயரைக் கேட்டதுமே தூக்கி வாரிப் போட, “இல்…ல முடி…யாது”என்றாள் குரல் நடுங்க.

“மீரா!!!!” என்று அவன் அதட்ட, அடிப்பட்ட பார்வையை அவனை நோக்கி இவள் செலுத்த, சற்றே தன்னை அடக்கியவன், “இன்னும் எத்தனை வருஷத்திற்கு அதையே நினைச்சுட்டு இருப்ப? ஏன்டா இப்படி? உன்ன அப்பா எவ்ளோ தைரியமான பொண்ணா வளத்திருக்காரு? அறியாத வயசுல நடந்ததை இன்னும் நினைச்சிட்டு….”என்று அவன் அவளுக்குப் புரியவைக்க முயல,

“வயசுல என்ன இருக்கு. பட்ட அவமானமும், நடந்த அசிங்கமும் மறக்குமா? அதற்கு நான் மரணிக்க வேண்டுமே!” என்று அவள் உணர்ச்சியின் பிடியில் பேச.

“மீரா!!!!” என்று அவள் அன்னையும், தமையனும் மிரட்ட, கண்களில் கண்ணீரோடு அவர்களைச் சந்தித்தவள், “ப்ளீஸ் என்னால முடியவே முடியாத ஒரு விஷயத்தை மட்டும் பண்ண சொல்லாதீங்க” என்று அவள் கண்களில் கண்ணீரோடு கூற, செல்ல மகளின் கண்ணீரையும், குறும்பு தங்கையின் கலங்கிய விழிநீரையும் பார்க்கத் திரானியற்றவர்களாகத் தற்போது அந்த விடயத்தை ஒத்திவைத்தனர்.

அவர்கள் அமைதியாகவும், தனதறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டவளின் நிலையோ, “ஏன் அந்தச் சம்பவம் நடக்கணும்? அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நிம்மதியாய் சந்தோஷமாய் வாழ்ந்திருப்போமே!”என்ற கதறமட்டுமே முடிந்தது அவளால்.

யாருடைய வாழ்வு? இவளுக்கு நேர்ந்த அவமானம் என்ன? யார் இவளை வேதனைப்படுத்தியது?போன்ற விடை தெரியா கேள்விகளுடன் இவளுடன் நாமும் பயணிப்போம். என்றாவது ஒருநாள் விடை தெரியும் என்ற நம்பிக்கையோடு!

************

அன்றைய இரவு. படுக்கையில் விழுந்த உதயின் நினைவுகளில் அவள். அவள் மட்டுமே! அவளது அழகிய முகம், நடை, உடை பாவனைகளில் அன்றே ஈர்க்கப்பட்டவன் இன்றைய உதய்.

ஆனால் அவனுடைய மனதோ கேள்வி எழுப்பியது அவனிடம், “அவள் ஏன் தன்னிடம் பேசவில்லை. தன்னை ஏன் தெரியாதது போல் காட்டிக்கொண்டாள். குறைந்தபட்சம் அறிமுகம் செய்திருக்கலாமே’ என்று பலவகையாக.

தன்னை திட்டியது வேறு நினைவில் ஆட, ‘ஒரு வேலை நம்மலை மறந்துட்டாளோ?’என்று ஒரு முடிவை எடுக்க முற்பட்டவன் உடனே தடுமாறினான். ‘இல்லையே. என்னைப் பார்த்த நேரம் அவ கண்ணுல ஒரு மின்னல் வந்ததே!’ என்று அதையும் கணக்கிட்டது.

எனவே, ‘நம்மேல் கோபமாக இருக்கிறாள் போல. இத்தனை நாட்கள் அவளைச் சந்திக்காம இருந்தோம்ல’ என்று ஒருவாறு சமாதானம் ஆனவன், நாளைக்கும் அவளுக்காகக் காத்திருக்க முடிவு செய்தான்.

காத்திருப்பு… அன்றாடம் ஒரே மாதிரி நகறும் நிமிட முள்ளும், மணி முள்ளும் இன்று மட்டும் மெதுவாய் நகறும் மாயை உண்டாக்கி, அவனது பொறுமைக்கு தேர்வு வைக்க, அவனோ “தேர்வாவது மண்ணாவது நீ மட்டும் இப்போ வேகமா நகறல்ல அவ்ளோதான்” என்று கடிக்காரத்துடன் வாக்குவாதத்தில் இருந்தான்.

உண்மைதானே! காதல் வந்தால் இப்படித்தானோ? தன்னைத்தானே இரசிக்கவைக்கும். தன்னைத்தானே அதட்டிக்கொள்ளும். தன்னைத்தானே சுயமதீப்பீடு செய்துக்கொள்ளும். இதை வரை இரசித்திடாத பொருளை இரசிக்கவைக்கும். மொத்தத்தில் இந்தக் காதல் கொஞ்சம் பொல்லாததுதான்.

காதலை போற்றத்தான் கோடியில் புரல்கின்றனரே. நாம் கொஞ்சமே கொஞ்சம் தூற்றுவோமே! தன் வாழ்வின் எந்தப் பெண்ணையுமே விரும்பாத ஒருவன், ஏறெடுத்தும் பார்க்காதவன், மீராவிடம் மட்டும் தன் பிடித்தத்தை, விருப்பத்தை வேண்டி நிற்கிறானே? இது காதல் என்று அவன் உணர்ந்திருப்பானா? அவன் இன்று மீராவிடம் உதிர்த்த உரிமையான வார்த்தைகள் ஒரு காதலன் அல்லது கணவன் மட்டுமே உதிர்க்கும் வார்த்தைல்லவா? எனில் அறிந்திருப்பானா அவனது அவளின் மீதான காதலை?

***********

இரவு உணவையும் எடுத்துக்க வராது இருந்த செல்ல மகளின் நிலை அந்தத் தாயை வாட்ட, அவரும் வெறும் வயிற்றுடன் படுக்கச்சென்று விடவே, அழுதழுது ஒரு கட்டத்தில் தூங்கிபோனவள் தாயின் நினைவு வந்தவளாக மணியைப் பார்க்க அது நடுநிசி இரண்டை காட்ட,”ஓ காட்” என்று அந்த நேரத்திலும் கடவுளை இம்சித்தவள், “அம்மா கண்டிப்பா சாப்பிட்ருக்க மாட்டாங்க, ஷிட்” என்று தன்னையே திட்டிக் கொண்டவள், அவசரமாய் வெளியே சென்று பார்க்க, உணவு மேசையில் வைத்த உணவு அப்படியே மூடி இருந்ததை பார்த்தவள், தன் அண்ணணும் உண்ணாதது தெரிய வர, மௌனமாய் கலங்கினாள் அந்த வாயாடி.

‘தனக்கு எப்பேர்பட்ட குடும்பத்தைத் தந்திருக்கிறான் இறைவன் ‘என்று அவருக்கு அவசரமாய் ஒரு ஐசை வைத்தவள், மேசையிலிருந்த தட்டையும் கரண்டியையும் எடுத்தவள், அதை ‘டப் டப்’ என்று தட்டினாள்.

அந்தச் சத்தத்தில் முதலில் விழித்துக்கொண்ட அவளது அன்னை அவளைக் கேள்வியாகப் பார்க்க, அதைக் கிடப்பில் போட்டவள், மறுமுறை அதை ஓங்கி தட்ட அவள் தமையன் அவசரமாய் ஓடிவந்தான்.

“ஏய் குரங்குகுட்டி, எதுக்கு இந்நேரத்துல சத்தம் போட்டுட்டு இருக்க?” என்று கடிய, “இருங்க அதே குரங்கிலிருந்து வந்த குட்டி பதில் சொல்றேன்!” என்று அவள் அவனை வாருவதாக நினைத்து அவளது அன்னையை வார, அவர்களைப் பெற்றெடுத்த புண்ணியவதியோ, ‘நான் சிவனேன்னு தானேடா நின்னுட்டு இருக்கேன், யாரு வம்புக்காவது போனேனா?’ என்று ரீதியில் அவர் நிற்க, கடுப்பான மித்ரனோ, “அடியே ஏன் இப்படி ஆவியைவிட மோசமான பாவி மாதிரி பண்ணீட்டு இருக்க” என்றான் கடுப்பாக.

“ஏன் சொல்லமாட்ட? நல்லா சட்டி நிறைய திண்ணுட்டு தூங்கபோனல்ல, என் மேல யாருக்குமே அக்கறையில்ல” என்று அவள் கண்ணைக் கசக்க, “ஏன் கையில்ல? உனக்குப் பசிச்சா போட்டுத் திங்கவேணாடிதானே? ஆறு மாச பாப்பாவா நீ? உனக்கு ஊட்டிவிட்டுட்டு நாங்க சாப்பிடுறதுக்கு?”என்று அவன் அவளை வார, “டேய் பர்பாமன்ஸ் பண்ண விடுடா அண்ணா”என்று அவள் கத்த, “அடச்சீ அந்தக் கருமத்தைப் பார்க்ககூடாதுன்னுதானே இவ்ளோவும் பேசிட்டு இருக்கேன்” என்றான் அவளை இன்னும் வெறுப்பேற்ற எண்ணி.

“அவமானம்” என்று அவள் போலியாக வருந்த, “ஏய், என்னனு சொல்லு. காலையில வேலை வெட்டிக்கு போறதா இல்லையா நான்லாம்?” என்று அவன் கடிய, “ஒன்னுமில்ல எனக்குப் பசிக்குது” என்றாள் முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு.

தாயும் தமையனும் ஒருவரின் முகத்தை மாற்றி மாற்றிப் பார்க்கத் தமையனோ “ஏய் குட்டி சாத்தானே! பசிச்சா போட்டுத் திங்க வேண்டிதானே” என்றான்.

“யூ சி அப்படித்தான் முதலில் நினைத்தேன். பட், அப்றம் வேண்டாம்னு முடிவு பண்ணீட்டேன்”என்றாள்.

“ஏன்?” என்று அவன் கேள்வியாக நிறுத்த, “சாப்பாடு சமைச்சு வைச்சு எப்டியும் ஆறு மணி நேரம் இருக்கும். நல்லா இருக்குமா தெரியாது? சோ…” என்று அவள் இழுக்க, மித்ரன் அவளை முறைக்க, மேலும் தொடர்ந்தாள்.

“உன் வாயுல கொஞ்சத்தை போட்டு உனக்கு ஒன்னும் ஆகலைன்னா அப்றம் சாப்பிடலாம்னு…” என்று அவள் இழுக்கவும்.

கரண்டியை கையில் எடுத்த மித்ரன் அவளை விரட்ட, சிரித்துவிட்டார் ராதா.

சற்று நேரம் ஓடிப் பிடித்து விளையாடியவர்கள் சோபாவில் அமர “அப்போ அம்மாவை ஏன் எழுப்பின?” என்று மித்ரன் கேட்ட கேள்வியில் குறும்பாக நகைத்தவள், “இது என்ன கேள்வி? சோறு கெட்டு போயிருந்தா வேறு சோறு செய்ய அம்மா வேணுமில்லையா!”என்று அவள் நகைக்க, அவளது காதைத் திருகியிருந்தார் அனுராதா.

“ஏன்டி அடங்கவே மாட்டியா?” என்று அவர் அதட்ட, “அம்மா பசிக்குது மா” என்று அவள் தப்பிக்கும் மார்க்கம் கண்டுபிடித்து அதைச் சரியாக உபயோகப்படுத்த, “இரு பிரிட்ஜூல பழைய குழம்பு இருக்கு. சூடு பண்ணி தர்றேன்” என்று அவர் அவளை வம்பிழுக்க, அதிர்ந்தவளோ, “இல்ல இல்ல மா… எனக்குப் பசி போய்டுச்சு. நான் சொல்ல மறந்துட்டேன். இப்போதான் பத்து பாக்கெட் பிஸ்கெட்டை பாலுல முக்கிச் சாப்ட்டேன். எனக்குப் போதும் நீங்களே சாப்டுங்க”என்று அவள் இழித்து வைக்க, இம்முறை சிரிப்பது இவர்களின் முறை ஆகிற்று.

அப்படியே சிரித்து முடித்து மூவரும் சாப்பிட்டு முடிக்க, இன்று சற்று அதிகமாகவே உண்டிருந்தனர், எல்லாம் நம் மீராவின் கைவரிசையிலும் வாய்வரிசையிலும்.

உண்டு முடித்ததும் மீரா “ஓகே காய்ஸ், இட்ஸ் டைம் டூ ஸ்லீப். ஐ ஹாவ் லாட்ஸ் ஆப் வர்க் டூமாரோ!” என்று அவள் அடுக்கிக்கொண்டே போக, “ஹேய் முப்பது நாளு இங்க்ளீஸீ பேசாம போறியா இல்ல வாயிக்குள்ள கத்திய விட்டுச் சுத்தவா”என்று மித்ரன் விரட்ட, “போறாங்க போறாங்க” என்று அவள் கிளம்பி அவளது அறைக்குச் சென்றதும், மிதரன் அவளது தாயிடம் “அம்மா, நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்”என்று ஆரம்பித்தான்.

“சொல்லுப்பா” என்று அவள் ஊக்கவிக்க, “நான் வேலையை விட்டுறேன்” என்றான் உறுதியுடன்.

அவர் ஏதோ கேட்கப் போகையில் “இல்லம்மா அதான் சரி. நமக்கு இருக்குறது ரெண்டே வழி. நான் அங்க போய் இருக்கிறது. இல்ல மீராவை இங்க ஹாஸ்டல்ல விடுறது. நான் அங்க போய் ரூம் எடுத்து ஸ்டே பண்ணலாம்தான். இங்க உங்களைத் தனியா விடுறதுல எனக்கு விருப்பம் இல்லை” என்று அவன் முடிக்க.

“ஏன்பா அப்படி சொல்ற. நீ சின்னப் பிள்ளையா இருந்ததுல இருந்து நான் உங்களைப் பாத்துக்கலையா? இந்த அம்மாவால முடியாதுன்னு எதுவும் இல்ல” என்று அவர் முடிக்க.

“நான் உங்களைப் பலவீனமானவங்கனு சொல்லலமா. அப்போ நான் சிறியவன். ஆனா இப்போ உங்கள பாத்துக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கு. அப்போ நீங்கப் பட்டதே போதும்மா” என்றான் அவன் வேதனையுடன். “மீராவை ஹாஸ்ட்டல்ல விட்டுட்டு நம்ம ரெண்டு பேருமே நிம்மதியா இருக்கமாட்டோம்”என்றான் மேலும்.

“வேண்டாம்ப்பா நாம யாரும் பிரிய வேண்டாம். இனியும் ஒருத்தரை பிரிந்து என்னால இருக்க முடியாது. உங்கப்பா கூட இல்லாத ஒரு குறையே போதும் எனக்கு. உன் தங்கச்சிய ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கிர வரை அவ எனகூடவே இருக்கணும். உன் முடிவு நீ எடு”என்று அவர் எழுந்து சென்றுவிட, இதையெல்லாம் மறைந்து நின்று கேட்டுக்கொண்டிருந்த மீராவின் நிலைதான் மிகந்த வேதனையில்!

‘தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் மூவரே தன் வாழ்நாள் முழுமைக்கும் போதும். தனக்கென்ற ஒரு துணை வேண்டவே வேண்டாம். எனக்காக அவனது கனவையே தியாகம் செய்ய நினைக்கும் அண்ணணுக்கு தன்னால் செய்ய முடிந்ததை செய்வதில் எதுவும் கெடாது’ என்று ஒரு முடிவைத் தீர்க்கமாக எடுத்தாள்.

அந்த முடிவினால் ஏற்பட போகும் பக்கவிளைவுகளை அறிந்திருந்தால் அன்றே தடுத்திருப்பாளோ? இதைதான் விதியின் விளையாட்டு என்கின்றனரோ? விதி யாரை விட்டது. முதலில் அவளது முடிவுதான் என்னவாக இருக்கும்?

தொடரும்…