ப்ரீத்தியை கண்டு பெரிதாய் சிரித்த அந்த பெண்மணி ,”Mērē ḍ’̔aihaṭara(என் பெண்கள்) “என்று பின்னால் பதுங்கி பதுங்கி ,பயந்து பயந்து வந்த பெண்களை அறிமுகம் செய்தார் தேவையே இல்லாமல்.
ட்ரெயின் ஏறும் யாராவது இப்படி தான் “என் பெண் ,என் பெண் “என்று ஊருக்கே தண்டோரா போடுவார்களா என்ன ?
“நான் பஞ்சாபி அல்லா .நங்களுக்கு பஞ்சாபி அறியல்ல. நிங்கள் இங்கிலிஷ் அரியமோ “என்று ப்ரீத்தி சட்டென்று மலையாளத்தில் பேச,காஜல் அதிர்ந்து விழித்தாள். அவள் கை பிடித்து அழுத்த காஜலும் உஷாராகி விட்டாள் .
ப்ரீத்தியின் காதருகே சாய்ந்த காஜல் ,”உனக்கு மலையாளம் தெரியுமா ?’என்றாள் ஆங்கிலத்தில் .
“மலையாளத்தை எனக்கு தெரியும்.மலையாளத்திற்கு தான் என்னை தெரியாது .”என்றவளின் பேச்சை கேட்டு விழித்த காஜலை கண்ட ப்ரீத்தி ,”எத்தனை மோகன்லால் ,மம்முட்டி படத்தை subtitle போட்டு பார்த்து இருப்பேன்.கொஞ்சமாவது யூஸ் ஆகாதா என்ன? “என்றவள் கண் அடிக்க காஜல் மீண்டும் விழித்தாள் .
“நோ இங்கிலிஷ் .நோ நோ ” அவர்கள் எதிரே அமர்ந்து ,”மீ தமிழ் ..தமிழ்நாட்டில் இருந்து வாரேன் “என்றார் தமிழில் .
“எந்தா ?எனிக் மனசிலாகில்லா “(எனக்கு புரியலை )”என்ற ப்ரீத்தி ,”நோ தமிழ் ….”என்றவள் சைகை காட்டினாள் .
“எதுக்குடீ இப்படி மலையாளத்தை கொலை செய்துட்டு இருக்கே !”என்றாள் காஜல் -அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் .
“வெயிட் கரோஜி .படம் இனிமே தான் ஓடும் .”என்றாள் ப்ரீத்தி புன்னகையுடன் .
“யப்பா சனியங்க ரெண்டுத்துக்கும் தமிழ் தெரியாது .ஏய் பிள்ளைகளா! வாயை மூடிட்டு ஒழுங்காய் வரணும் .இல்லை துளைச்சி எடுத்துடுவேன் .அந்த ரமா பெண்ணுக்கு என்ன ஆச்சி நினைப்பு இருக்குல்ல .சொல்றதை ஒழுங்கா கேட்டு நடந்தா உடம்பில் உசுரு இருக்கும் “என்று தமிழில் அதட்டி விட்டு தன் போன் எடுத்து , யாருக்கோ டயல் செய்தார் .
“அண்ணாத்தே! நான் தான்.ஹாஹாங் அந்த அம்ரிதசுரஸ் ட்ரெயின் புடிச்சுட்டேன். தேங்க்ஸ் அண்ணாத்தை.இது வரை எந்த பிரச்னையும் இல்லை.யாருக்கும் எந்த சந்தேகமும் வரலை. அதான் இங்கே ரெண்டு பொண்ணுங்க, குழந்தை கூட இருக்குங்க. பார்க்க அப்பிராணியா இருக்குங்க. அவங்க கூட வரது தான் அண்ணாத்தை எனக்கு பந்தோபஸ்து. யாருக்கும் என் மேல் சந்தேகம் வராது .உன் தோஸ்த்துக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிக்கோ.புதுசா பொண்ணுங்க கூட இருக்கு. எல்லாம் 15-16குள்ள தான். எல்லாம் ஸ்கூல் பொண்ணுங்க தான் .புது ரோஸுங்க. பணத்தை கொஞ்சம் அதிகமா வாங்கி கொடு. எவ்வளவு பேருக்கு மால் வெட்டணும். சரிங்க அண்ணாத்தை. உங்களை நம்பாம…சரிங்க .கருப்பு சட்டை ,வெள்ளை பேண்ட்,வெள்ளை தொப்பியா?.ஏன் அண்ணாத்தை இது பழுசா இருக்கே டெக்கினிக்கு .சரி சரி கோச்சுக்காதா. ஆமா ஆமா படத்தை அனுப்பினா போலீஸ்காரன் மூக்குல வேர்த்துடும். பழசுனாலும் இதுக்கு மவுசு தான். அதான் அண்ணாத்தை இத்தனை ஊரு போலீஸா ராசா கணக்கா அய்யமாறு சமாளிக்கறாரு. சரிங்க அண்ணாத்தை .வசிப்புடறேன் .”என்ற அவர் பேச்சை குழந்தைகளை கவனிப்பது போல் கவனித்த இரு பெண்களுக்கும் அடிவயிறு கலங்கியது .
இது என்ன விதமான கூட்டம் ?அந்த குண்டோதரி பேசியதில் இருந்து அந்த பெண்களை யாருக்கோ விற்க போகிறாள் என்பது உறுதி. இவள் தமிழ்நாட்டில் இருந்து அந்த பெண்களை எப்படியோ இவ்வளவு தூரம் அழைத்து வந்து இருக்கிறாள். ஆனால் இவர்களை விற்கவா ,வேறு ஏதாவதா ?
“என்னடி இது .ஹியூமன் ட்ராபிக்கிங் போல் இருக்கே !”என்றாள் காஜல் தூங்குவது போல் ப்ரீத்தி மேல் சாய்ந்து .
“இல்லை காஜல்.இது வேற .அந்த பெண்களை கவனி .பல நாள் பட்னி போல் இருக்கு.கை,கால் ,முகம் எல்லாம் வத்தி போய் எலும்பு கூட்டுக்கு டிரஸ் போட்ட மாதிரி இருக்குங்க .ஆனால் உடம்பை பாரு என்னவோ குஷ்பூக்கு ஜெரோஸ் காபி மாதிரி குண்டாய் இருக்கு .மூன்றாவது பெண் டிரஸ் கணுக்காலுக்கு மேல் ஏறி இருக்கு பாரு .கால் முழுவதும் சூடு வைக்க பட்ட தடம். இது பவுடர் மேட்டர் .சின்ன பிள்ளைங்க உடம்பில் பாக்கெட் வைத்து கட்டி கடத்துவது .உள்ளே பாக்கெட் ,வெளியே டிரஸ் .யாருக்கும் சந்தேகம் வராது . என்றாள் ப்ரீத்தி ஆங்கிலத்தில் அந்த பெண்மணி தண்ணீர் குடிக்க பையினை திறந்த போது அதில் உள் இருந்த பொருட்களின் மேல் பார்வை ஒட்டிய ப்ரீத்தி காஜலுக்கு கண் ஜாடை காட்டினாள் .
“என்னடீ இது ஒரே சாப்பாடு ஐட்டமா மா இருக்கு ?”என்றாள் காஜல் .
“ அவங்க கொண்டு வந்த பையினை கவனி யாரு அத்தனை லேஸ்/lays ,இளநீர் ,கேக் ,தேங்காய்,கோக் பாட்டில் ,சப்பாத்தி ,வாழைப்பழம் ,கஸ்டர்டு பவுடர் ,முழு வேர்க்கடலை ,அண்ணாச்சி பழம் எல்லாம் யார் எடுத்துட்டு வருவா ?அவங்க உருவத்திற்கும் அவங்க போட்டு இருக்கும் ஹை ஹீல்ஸ் எப்படி இருக்கு பாரு . எல்லாம் போதை மருந்துபா. இந்த அம்மா முகத்தை பார்த்தா பெரிய படிப்ஸ் மாதிரியா இருக்கு ?புக் உள்ளே கூட அதான் இருக்கும் .வெவேறு வடிவில் கடத்துவாங்க. எங்க குரூப் இது மாதிரி போதை ,குடிக்கு அடிமையானவர்களுக்கு வெளியே தெரியாமல் கவுன்செல்லிங் கொடுப்போம் .அங்கே மீட்டிங் அட்டென்ட் செய்ய வந்த வெளிநாட்டு போலீஸ் மெக்ஸிகோ,ஆப்கான் ,பாகிஸ்தான் ,சீனா,ஆப்பிரிக்காவில் எப்படி எல்லாம் கடத்தறாங்க ,எப்படி எல்லாம் மக்கள் தினமும் சாப்பிடும் உணவு பொருட்களில் மறைத்து எடுத்து வராங்க என்ற டாக்குமெண்ட்ரி பிலிம் காண்பித்தார் .ரியல் லைப் ஹார்ட்கோர் கிரிமினல்ஸ்(hardcore criminals ) டாக்குமெண்ட்ரி அது .பில்லியன் கணக்கில் பணம் புழங்கும் இருட்டு உலகம் அது . “என்றாள் ப்ரீத்தி
“நீ சொல்வதை நம்ப முடியவில்லை .இதை எல்லாம் பெற்றோர்கள் கவனிப்பது இல்லை என்றா சொல்றே ?”என்றாள் காஜல் -அவள் கரங்கள் உறங்கி கொண்டு இருந்த இரு பிள்ளைகளின் மேல் படிந்தது எதில் இருந்தோ அவர்களை காப்பது போல்
“கவனிப்பதாய் இருந்தால் இந்தியாவில் இந்த மாசம் மட்டும் 2700 கோடி மதிப்பிலான பொருட்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பிடித்ததாய் எப்படி நியூஸ் வர முடியும் ?வாங்க டிமாண்ட் அதிகம் இருக்கு .அதான் உள்ளே அவ்வளவு மதிப்பில் பொருட்களை உள்ளே கொண்டு வந்துட்டே இருக்காங்க .where there is demand there will be more supply . சோ இங்கே டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது .இப்போ எல்லாம் இவர்களின் டார்கெட் பள்ளி ,கல்லூரி செல்லும் பசங்க தான் .ஒரு ஜெனெரேஷன் அழித்து விட்டால் அதன் எதிரொலி அடுத்த தலைமுறைக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் இல்லையா?இது நார்க்கோ terrorism .அப்போ குறைபாடுள்ள பிள்ளைகள் நிறைய பிறக்கும் .அது மெடிக்கல் மாபியா.பெண்களை ,குழந்தைகளை இதற்கு பழகி விட்டால் பணத்திற்காக அவர்களை விற்றால் அது sexual மாபியா,அதையே படம் பிடித்து சதை வெறி பிடித்த மிருகங்கள் பார்க்க விற்கும் போர்னோகிராபி என்று என்று இதன் கரங்கள் மெடூசா மாதிரி எல்லா பக்கமும் நீளும் .வீட்டுக்கே ஹாம் டெலிவரி கூட உண்டாம்.” என்றாள் ப்ரீத்தி.
“நீ சொல்வதை நம்பவே முடியலை ப்ரீத்தி. ஏதோ கதை கேட்பதை போல் தான் இருக்கிறது. பள்ளி ,கல்லுரி செல்லும் பிள்ளைகளா இப்படி. நோ ப்ரீத்தி. ஏதோ தவறாய் புரிந்துட்டு பேசறே. ஆப்கான் ,சீனா இது போல் இடத்தில் சொல்லு சின்ன பிள்ளைகள் கூட அதை எல்லாம் யூஸ் செய்வாங்க. இங்கே நம்ம இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் சான்ஸ் இல்லை .”என்றாள் காஜல் திகைப்புடன்
“அப்பாவியா இரு காஜல் அதற்குன்னு முட்டாளாய் இருக்காதே . இதோ உன்னை போல் ஸ்டேட்மென்ட் விட்ட பெற்றோர்கள் ,’என் பிள்ளையை பத்தி எனக்கு தெரியும் ‘என்று சொன்ன பலர் தான் இன்று எங்களின் போதை மறுவாழ்வு மையத்திலும் ,கவுன்செலிங் அறைகளிலும் உயிரோடு நரகத்தில் தினமும் செத்து செத்து பிழைத்த கொண்டு இருக்கிறார்கள் .வெளியே தெரியாமல் வயிற்று வலி ,ஆக்ஸிடென்ட் என்று மறைக்கப்பட்ட மரணங்கள் இங்கே ஏராளம் .எழுப்ப பட்ட கல்லறைகள் ஏராளம். அதான் தெருவுக்கு நாலு பள்ளி ,கல்லூரி,ஹாஸ்டல் அருகே நிக்கிறாங்களே . எத்தனையோ பள்ளிகளில் பெற்றோர்கள் ட்ராப் செய்து விட்டு போன பிறகு ,உடை மாற்றி கொண்டு வெளியே சுத்தி மாட்டிய சம்பவங்கள் எல்லாம் உண்டு .இது மாதிரி ஏதோ சாகசம் செய்வதாய் ,உண்மை ,தெய்வீக காதல் என்று நம்பி தன்னையே இழப்பதும் ,போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதும் இப்பொழுது எல்லாம் சர்வ சாதாரணம் .ஒவ்வொரு கதையும் அத்தனை வேதனையா இருந்தது காஜல் .எல்லாம் டீன் ஏஜ் குழந்தைங்க .” என்ற ப்ரீத்தியின் குரலில் மனிதர்களின் வக்கிரங்களை கண்கூடாய் பார்த்த வேதனை அப்பட்டமாய் இருந்தது .
இதோ அடுத்த சான்று அவர்கள் கண்முன்னே .பிஞ்சுகள் விஷத்தினை சுமக்கும் அரவங்களாய் மாற்றி இருக்கும் அரக்க ஜென்மங்களின் சதிராடத்திற்கு மௌன சாட்சிகளாய் இதோ இருவர் .
கண்ணிற்கு முன் மூன்று பெண் பிள்ளைகளின் வாழ்வு ,உயிர் ,மானம் என்று பணயத்தில் இருக்கும் victims/பாதிக்கப்பட்ட இவர்கள் .இவர்களை வெளியே விட்டால் இவர்களே மற்றவர்கள் வாழ்வினை அழிக்கும் perpetrators /குற்றம் புரிபவர் என்று இருமுனை கத்தி ப்ரீத்தியை நோக்கி நீண்டு இருந்தது.
“இப்போ என்னடி செய்யறது !எனக்கு பயமாய் இருக்கே !இருக்கும் பிரச்சனை போதாது என்று இது வேறா எனக்கு ?”என்ற காஜல் விட்டால் அழுது விடுவாள் போல் இருந்தாள் .
“”யாமிருக்க பயமேன் காஜல் ?”என்றாள் ப்ரீத்தி .
“தாயே !அதான் என் பயமே …நீ இருப்பே …உன்னை நம்பினா நான் இருப்பேனா ?’என்றாள் காஜல் அதற்குள் அவளின் குணம் புரிந்து வைத்து இருந்ததால் .
“நான் பார்த்துகிறேன் காஜல் .நீ எதற்கும் கவலை படாதே .”என்ற ப்ரீத்தி தன் மொபைல் எடுத்து “URGENT பஞ்சாப் போலீஸ் கமிஷனர் ,பதிண்டா SSP நம்பர் வேண்டும் CANT ATTEND கால் நௌ .ஜஸ்ட் மெஸேஜ் ..”என்று அவளின் “அக்னி தாரகைகள்” குழுவில் இருந்த ACP ராஜேஸ்வரி -ருத்ராமாறன் மனைவிக்கு (என்ன தவம் செய்தேன் ACP ) வாட்ஸாப்ப் மெசேஜ் அனுப்ப ,பத்து நிமிடத்தில் மெசேஜ் வந்தது.
“குரங்கே !என்ன செஞ்சி மாட்டி இருக்கே ?”என்று
“நான் இல்லை தெய்வமே …மாட்டி விட போறேன் …இந்த கமிஷ்னரும் ,SSPயும் நல்லவங்களா ?”என்றாள் ப்ரீத்தி .
“வந்தேன் போலி போட்டுடுவேன் .”என்றாள் ராஜீ .
“விஷயம் சீரியஸ் .மூன்று பெண்களின் உயிர்,மானம் உன் கையில் .ஏற்கனவே இதில் பெரிய இடம் பல பேர் பஞ்சாப் “DRUG ரிங் “சமந்த பட்டு இருப்பதாய் படித்த நியாபகம் .கசாப்பு கடைக்காரனிடமே ஆட்டினை கொடுக்கும் நிலை ஆகி விட போகிறது .அதற்கு தான் கேட்டேன் .”என்றாள் ப்ரீத்தி மெசேஜ்ஜில் .
“இவங்க ரெண்டு பேரும் சோ GENUINE PERSON .போதை மருந்துக்கு எதிராக போராடுவதில் இவங்களை அடித்து கொள்ள ஆளே இல்லை .புதுசா “ஆன்டி DRUG SQUAD “ஸ்பெஷல் ஆஃபீஸ்ர் ஒருவரின் தலைமையில் அமைத்து உள்ளார்கள் .உன் நியூஸ் 100% உண்மை என்றால் இவர்களிடம் பேசி ,அந்த அதிகாரியை உன்னை காண்டாக்ட் செய்ய சொல்றேன் .அவங்க ஏதவாது இன்ஸ்ட்ருக்ஷன் கொடுப்பாங்க .”என்றது வந்த மெசேஜ்
“டூ இட் .டைம் இஸ் ரன்னிங் அவுட்.”என்றாள் ப்ரீத்தி பதிலுக்கு ,தான் வரும் ட்ரெயின் நம்பர் ,பெட்டி IDயோடு இந்த மூவரையும் சந்தேகம் வராமல் போட்டோ எடுத்து ராஜிக்கு அனுப்பி வைத்தாள் .
அடுத்த இருபது நிமிடம் ஏதோ ஒரு திரில்லர் ,சஸ்பென்ஸ் படம் பார்ப்பது போன்ற மனநிலையில் காஜலுக்கு கழிந்தது .ப்ரீத்தி வழக்கம் போல் முகத்தில் எதையும் காட்டாமல் டூப்பில் “ஜஸ்ட் for laughs -gags “என்ற ரியாலிட்டி காமெடி ஷோ வைத்து கேகபேக்கவென சிறிது காஜலுக்கு பிபி ,ஹார்ட் அட்டாக் -என்று ஏத்தி ஏத்தி ஏத்தி அவ நெஞ்சில் தீயை ஏத்தி கொண்டு இருந்தாள்.
அதே சமயம் பதிந்தாவில் தன் வீட்டினை புரட்டி போட்டு கொண்டு இருந்தான் அர்ஜுன் ப்ரீத்தியின் வரவிற்காக .வீடு முற்றிலும் சுத்தம் செய்ய பட்டு பள பளவென்று மின்னி கொண்டு இருந்தது .இரவு அவள் வருவதற்கு காலை முதலே அங்கு இருந்தவர்களை படுத்தி எடுத்து கொண்டு இருந்தான் மாலை அவளுக்கான விருந்திற்காக தன் வயலில் இருந்து ஆர்கானிக் காய் கறிகளை ,அனைத்து பறப்பன ,நீந்துவன ,மெய்வன எல்லாம் லைன் கட்டி எடுத்து வந்து குவித்து கொண்டு இருந்தான் .
“அம்மா !அவங்களுக்கு எந்த ரூம் அம்மா ஏற்பாடு செய்து இருக்கீங்க ?’என்றான் அர்ஜுன்
” எவங்களுக்கு?’என்றார் ராஷ்மி எதுவும் அறியாதவர் போல் .
“அதான் மா அவங்க …ப்ரீத்தி …அவங்களுக்கு “என்று சொல்வதற்குள் ஆயிரம் முறை தன் தலை கோதி தடுமாறிய மகனை பார்க்க அவருக்கு அத்தனை பிடித்தமாய் இருந்தது .
ஆண்களின் தடுமாற்றம் ,வெட்கம் கூட அழகு தான் .அதிலும் அவர் மகனின் முகத்தில் தென்பட்ட உணர்ச்சி கலவைகளுக்கு அந்த தாய் ரசிகையாகி போனார் .
“ரொம்ப பிடிச்சி இருக்காடா ?’என்றார் ராஷ்மி அவன் தலை கோதி .
“அது எல்லாம் இல்லை .பெரியவங்க கொண்டு வந்த சம்பந்தம் “என்று மழுப்பி விட்டு ,புன்னகையுடன் அங்கிருந்து அவன் நகர்ந்து விட ,”என்னமா விசாரணை எல்லாம் பலமாய் இருக்கு “என்றபடி வந்த தீப் தன் அன்னையை பின்னால் இருந்து அணைத்து கொண்டான் .
“உன் அண்ணனுக்கு முத்தி போச்சு .அதை தான் விசாரித்து கொண்டு இருந்தேன் .”என்றவர் ,”ரொம்ப நாளைக்கு பிறகு அவன் பாடி நேத்து தான் கேட்டேன் .அமர் !இது நல்ல படியா முடியும் தானே .”என்றார் தன் தம்பியின் கையை பிடித்து கொண்டு .
“அக்கா !நான் எதுக்கு இருக்கேன் .ப்ரீத்தி தான் இந்த வீட்டின் மருமகள் .”என்றார் .அமர்நாத் .
“தீப் !மேல மூன்றாவது மாடியில் அவன் ரூமிற்கு அட்டாச் ரூம் தான் ப்ரீத்திக்கு ஏற்பாடு செய்து இருக்கேன் .அவனிடம் சொல்லி விடு கண்ணா .ஏதாவ்து ஆல்டர் செய்யணும் என்று கூட நினைப்பான் .ஹே குரு! எல்லாம் நல்ல படியா முடியட்டும் “என்று வேண்டியவர் தன் வேலைகளை பார்க்க சென்றார் .
வெளியில் தோட்டத்தில் நின்று வயல்களுக்கு நடுவே இருந்த தன் அலுவலக அறையை சுத்தம் செய்ய ஆட்களை அனுப்பி கொண்டு இருந்தான் அர்ஜுன். அவனை பொறுத்த வரை ஆபீஸ், கோடௌன் ,ஸ்டார் ரூம் ,எல்லாம் ஒரே இடம் தான். மரத்திற்கு கீழ் ,இயற்கை அன்னையின் மடியில் தான் அவன் அலுவலகம் . ஒரு நாற்காலி,டேபிள் இது தான் அவன் ஆபீஸ் மண்ணோடு மண்ணின் மைந்தனாய் இருக்கும் அவனுக்கு எதுக்கு AC ஆபீஸ் எல்லாம் .தரை தான் அவன் சிம்மாசனம் வயல் தான் அவன் தர்பார் .லோட் ஏற்றும் லாரி தான் அவன் ரதம் .நாற்றங்கால் தான் அவன் செங்கோல் .
ஆனால் இனிமேல் அப்படி இருக்க முடியாதே !ஆறு மாதம் வேலைக்கு என்று வரும் பெண்ணிற்கு ஒரு ரூம் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றால் அவள் தன்னை பற்றி என்ன நினைப்பாள் ?நீண்ட அந்த கோடௌன்னில் இருந்த அரிசி ,கோதுமை ,காய்கறிகள் ,அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் எல்லாம் ஒரு புறம் அடுக்க பட்டு ,தரையில் போட்டு சாப்பிடும் அளவு சுத்தம் செய்ய பட்டது
ரெண்டாவது மாடியில் இருந்த கோப்புகள் ,அட்டை பெட்டிகள் எல்லாம் அப்புற படுத்த பட்டு ,அந்த அறையில் சுத்தப்படுத்திய பின்னர் அங்கு ஒரு AC போடப்பட்டது .அந்த அறை மூன்றே மணி நேரத்தில் ஷெல்ப் ,புது டேபிள் ,நாற்காலி ,கேபினட்,மாடி பூங்கா ,வாட்டர் பில்டர் ,சின்ன அடுப்பு ,பிரிட்ஜ் ,ரெஸ்ட் ரூம் எல்லாம் தயார் படுத்த பட்டது .
ப்ரீதிக்காக தயார் ஆன அந்த அலுவலகத்தை திருப்தியுடன் பார்த்தவன் ,தன் வீட்டிற்கு திரும்ப ,தீப்பும் அமர்நாத்தும் ப்ரீத்தி அறை பற்றி சொல்ல ,தயங்கி தயங்கி அவள் அறைக்குள் சென்றவன்,அங்கு என்ன என்ன ஆல்டர் செய்ய வேண்டும் என்று கூட நின்ற பணியாளர்களுக்கு மளமள வென்று உத்தரவு இட ,தீப்பும் அமர்நாத்தும் வாய் அடைத்து நின்றனர் .
ப்ரீத்தி அர்ஜுன் அறைக்கு நடுவே இருந்தது ஒரு கதவு மட்டுமே. ரெண்டுமே அந்த தளத்தின் ஒரு பக்கத்தை ரெண்டாய் பிரித்து கட்ட பட்டு இருந்த அறை .ஐடென்டிக்கல் ரூம் என்பார்களே அதை போன்ற அமைப்பு அது .
ரெண்டு ரூமிற்கும் ஒரே பால் கனி செடி கொடிகளுடன் ,சோபா ,நாற்காலி போடப்பட்டு மாலை,இரவு நேரங்களை இனிமையாக்கும் வண்ணம் அமைக்க பட்டு இருந்தது .அவன் அறையை இன்னொரு பக்கத்தை திறந்து சென்றால் அங்கு ஒரு தோட்டம் நீச்சல் குளத்துடன் அமைக்க பட்டு இருந்தது .
ப்ரீத்திக்கு பிடிக்கும் என்று அவனுக்கு என்ன எல்லாம் தோன்றியதோ அதை எல்லாம் அமைத்தவன், ஒரு புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினான் .
அவன் புன்னகையை பார்த்து மகிழ்ந்த தீப்பும் ,அமரும் அவன் திரும்பிய போது ஹை பைவ் கொடுத்து கொண்டனர் .
சிரித்து கொண்டே அங்கு இருந்து கிளம்பிய அவர்கள் முகம் சட்டென்று சிரிப்பை துளைத்தது .
“அண்ணா !Ḵẖatarā(ஆபத்து )”என்று தீப் அலற ,அவன் எதை சொல்கிறான் என்று புரியாமல் நின்ற அர்ஜுனின் மூக்கினுள் வந்து சேர்ந்தது அந்த பெர்பியும் மணம் .
அதை நுகர்ந்த உடன் அர்ஜுன் முகம் அஷ்டகோணல் ஆக அவன் முகம் எரிச்சலை அப்பி கொண்டது .
அவன் முகத்தை எரிச்சல் அடைய செய்த அந்த பெர்பியும் வாசத்திற்கு சொந்தக்காரி , அவர்கள் மூவரும் நின்ற தளத்திற்கு மாடி படி ஏறி இடுப்பை நாலு வளை வளைத்து ,உடலை நான்கு குலுக்கு குலுக்கி கேட் வாக் என்ற பெயரில் பார்ப்பவரின் மனதில் ஒரு சின்ன மினி உலைக்களமே ஏற்படுத்தி கொண்டு வந்தாள் .
பயணம் தொடரும்…