குறும்பா
எனக்கு ஏன் தந்தை ? இல்லை என்பதிலிருந்து யார் எனக்கு தந்தை ?என்று தன் மனதிலுள்ள
வேதனையினால் அத்தனை கேள்விகளையும் கேட்டு முடித்தான். ஜானு அழுகையோடு அப்படியே அமர்ந்துவிட்டாள் அவனது கேள்விகள், அவ்வாறு இருந்தது.
” சித், என்னடா கேட்டுட்டு இருக்க என் பொண்ணுகிட்ட…? அவ தானே உன்னை வளர்த்தா, பார்த்துகிட்டா இப்ப அப்பா யார் ? அப்பா எங்க ? கேட்டா என்ன அர்த்தம் சித்…?
” ரகு.. நான் கேட்டது தப்பா ? என் க்ளாஸ்ல எல்லாருக்கும் அப்பா இருக்காங்க. அவங்களும் மதரோட தான் இன்னைக்கு பி.டி. ஏக்கு வந்தாங்க… நான் மட்டும் ஜானுவோட வந்தேன். ஏன் ரகு ? இன்னைக்கு வைஷூ, கூட மாமா அத்தையோடத்தான் வந்தாள், சூர்யா, சிவாளியும் கூட, ஏன் எனக்கு அப்பா இல்ல ? என்னை விட்டு எங்க போயிருக்காங்க. எனக்கு அப்பா இருக்காங்களா ? இல்லையா? இருந்தா அவர் பெயர் என்ன ? ” என மீண்டும் கேட்டான்.
ரகு ஜானுவைப் பார்த்தார்.. அவள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவன் முதல் முதலாக பேச ஆரம்பிக்கும் போது கூட வைஷூ அழைக்கும் “அப்பா” வார்த்தையைக் கேட்டுதான் இவனழைக்க ஆரம்பித்தான்.
இதுவரை யாரேன, பார்த்திடாது, அவ்வுறவை கேட்டு நிற்கும் பிள்ளைக்கு தாய்தான் காட்ட வேண்டும் இதான் உன் தந்தை என்று.. ஆனால், இதுவரை அப்படி ஒரு நபரை காட்டாத தாயிடம். இன்று சமூகத்தால் கண்டறியப்பட்ட அவ்வுறவை கேட்டு நிற்கும் தன் பேரனிடம் பதில் சொல்வது தன் கடமையல்ல என்று அமைதியானார்.
” சொல்லு ரகு ஏன் அப்பா நம்ம கூட இல்லை..? ஜானுக்கு கூட அப்பாவா நீ இருக்கும் போது… எனக்கு ஏன் அப்பா இல்லை… ” மீண்டும் கேள்வி கேட்டு நிற்கும் தன் மகனுக்கு பதில் சொல்லி புரியவைப்பது ஒரு தாயின்னுடைய கடமையே என்று விலகி நின்ற ரகுவை பார்த்தாள் ஜானு.
” என்னை பார்க்கிறதினால எதுவுமாகிடாது ஜானு… நீ தான் சொன்ன என் மகனுக்கு நான் புரியவைப்பேன். இது உன் கடமை. நீஅவனுக்கு பதில் சொல்லி ஆகணும் நான் வரேன்.. ” என்று கிளம்பிவிட்டார்.
” சித்… இங்க வா. ” என்றவள் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.
” சித்… உனக்கு நான், உன் தாத்தா, மாமா, வெங்கி அங்கிள், வைஷூ,சிவாளி, சக்தி ஆன்ட்டின்னு எல்லாரும் இருக்கும் போது, ஏன் நீ அப்பாவ தேடுற…? இத்தனை உறவுகள் உனக்கு போதாதா…?”
ஜானுவை பார்த்தவன், ” சிவாளி கேட்டதும், வைஷூ கேட்டதும் நோ சொல்லாத அப்பா போல நான் கேட்டதும் நோ சொல்லாத அப்பா எனக்கு வேணும் ஜானு. சக்தி ஆன்ட்டி எத்தனை முறை திட்டினாலும் சிவாளிக்காக பேசுற அவ அப்பா போல எனக்கு வேணும்…? ”
” சித்… நான் உனக்கு வேணாமா? உனக்கு அப்பா இருந்தா போதுமா ? ”
” ஜானு… நீ என் அம்மா, எனக்கு நீயும் வேணும். ஆனா, அப்பாவும் வேணும் ஜானு. சிவாளிக்கு, வைஷூக்கும் இரண்டு பேரும் தான் இருக்காங்க”
” என்னை சொல்லிட்டு நீ கம்பேர் பண்ற சித்… அவங்கள போல நாம இல்லை. உனக்கு அப்பான்னு ஒருத்தர் இல்லை சித், உனக்கு அம்மா மட்டும் தான்.. நம்ம உலகத்தில நீயும் நானும் தான் அதுல அப்பான்னு ஒருத்தர் இல்லை. உனக்கான தேவைகள், ஆசைகளை நிறைவேத்த நான் இருக்கேன்… அப்பா தான் இதையெல்லாம் செய்வாங்க நினைக்காத. உனக்காக செய்ய நான் இருக்கேன். நான் மட்டும் தான் இருப்பேன்” என்றாள் அழுத்தமாக
” ஜானு… அப்ப வர போற டான்ஸ் காம்பெடிசன்னு கலந்துக்கணும் என்னோட ஆசை நீ நிறைவேத்துவீயா ? நான் அதில கலந்துக்க எனக்கு ப்ரமிசன் கொடுப்பீயா ஜானு…”
” சித்… நமக்கு எது தேவையோ அதை பத்தி மட்டும் யோசி… இன்னைக்கு அந்த மிஸ் உன்னை இன்ஸ்லட் பண்ணிருக்காங்க. சோ அவங்க முன்னாடி நீ படிச்சு காட்ட வேண்டாமா..? டிஸ்பலீன் நடந்துக்க வேணாமா… ஏன் தேவையில்லாம டான்ஸ் பத்தி யோசிக்கிற…? உனக்கு டான்ஸ் வேணாம் சித். படிப்பில கான்சன்டேரேட் பண்ணு…”
” ஜானு… என் ஆசைய நிறைவேத்த நீ இருக்கன்னு சொல்லிட்டு இப்ப நீயே வேணாம் சொல்லுற இதுக்கு தான் நான் அப்பாவ கேட்டேன்… ”
” போதும் சித்… அப்பா… அப்பான்னு அப்படின்னு ஒர்த்தர் இல்லை, இங்க பாரு. இன்னொரு முறை அப்பா வை பத்தியோ இல்லை டான்ஸ் பத்தியோ நீ பேசவே கூடாது…. ” என அவள் கத்த, அவள் மடியில் இருந்து இறங்கியவன், அறைக்குள் சென்று அழுது கொண்டே படுத்துவிட்டான்.. தலையில் கையில் வைத்துகொண்டு அமர்ந்துவிட்டாள்.
அன்று மதியம் சமையலை புறக்கணித்தான் சித்.. ரகு எவ்வளவு கெஞ்சியும் வராது அமர்ந்துகொண்டான். அவளும் பிடிவாதமாய் இருந்தாள். இரவும் அவ்வாறே இருந்தான், சிவாளி விளையாட அழைத்த போதும் கூட வர மறுத்து விட்டான். வெங்கியிடம் சிவாளி அவன் அழுவதை கூற, அவனும் வந்துவிட்டான்.
” என்னாச்சு ஜானு.. ஏன் சித் இப்படி இருக்கான்? மறுபடியும் உங்களுக்கு என்ன பிரச்சனை ? ” அவள் அமைதியாக இருந்தாள்..
” ஜானு… என் கூடவா ” என்று அவளை அழைத்து கொண்டு வெளியே போனான்.
ரகு சித்வின் அருகில் அமர்ந்தார்.
” சொல்லு ஜானு… என்ன பிரச்சனை உனக்கும் உன் பிள்ளைக்கும்…? ”
” வெங்கி… அவன் அப்பாவ கேட்டு நிக்கிறான். நான் என்ன சொல்லுவேன்…? இதுல டான்ஸ் காம்பெடிசனுக்கு போக பெர்மிசன் கொடுக்கணுமா ? அப்பா இருந்தா ஆசை நிறைவேத்திருப்பாராம். உன்னையும் ஜகாவையும் கம்பார் பண்றான்…”
” எஸ்…. ஹீஸ் இஸ் ரைட் ஜானு. அவன் கேட்கிற என்ன தப்பு இருக்கு…? அவனோட தேவைகளை உன்கிட்ட தானே கேட்க முடியும் ஜானு. அவனுடைய கோபம், அழுகை, ஆனந்தம், சந்தோசம், ஆசை காட்டுற இடத்தில நீ இருக்கும் போது. நீ செய்து தான் ஆகனும். ஏன் நீ ஆசை பட்டதை உங்க அப்பா செய்யலையா….? அவனுக்கு நீ செய்யாதனால அப்பா இருந்தா செய்திருப்பாரோன்னு எண்ணம் வந்திருக்கு, அத நீ எப்படி தப்புன்னு சொல்லமுடியும்…?”
” என்ன வெங்கி அவனுக்கு சப்போர்ட் பண்ற…? நீ என் ப்ரண்ட் தானே. உனக்கு என்ன பத்தி தெரியும் தானே… !என் வாழ்க்கை நடந்தவையும் அதுனால ஏற்பட்ட பாதிப்பையும் பார்த்து எப்படி என்னைய சம்மதிக்க சொல்லுற…?என் நிலமை சித்துக்கும் வந்தால் அவன் வெக்ஸாயிடுவான். ஒருவிசயம் வேணான்னு சொன்னா எத்தனை பாதிப்புகள் இருக்கும்ன்னு யோசித்து தானே சொல்லுறோம். அதையேன் கேட்க மாட்டிகிறீங்க.
” ஜானு… ஸ்கூல்ல, எந்த டீசரும் புக்கை வாசித்து விட்டு அப்படியே போகமாட்டாங்க, அதுக்கான காரணங்ளை அர்த்தங்களையும் சொல்லி புரியவைப்பாங்க…. ஏன் மேலோட்டமா சொல்றது எதுவுமே பதியாதுன்னு அவங்க மனசு அப்படி. நீ வேணாம் சொல்லற சரி, உரிய காரணத்தை சொல்லிச் சொல்லு அவன் புருஞ்சுப்பான்…”
” என்ன வெங்கி என்ன சொல்ல சொல்லுற… ? சித்துக்கு புரியவைக்க இதுக்கான வயச இல்லை… நான் சொல்லி அவன் மனசு விட்டிட கூடாதுன்னு நினைக்கிறேன்”
” படிக்கிற பாடத்தை புரிந்துகொள்றவங்கனால இது முடியாதா? “
” வெங்கி.. ”
” நீ முடிவு எடுத்துதான் ஆகனும் ஜானு. ஒன்னு ஏன் வேணான்னு சொல்லுற காரணத்தை சொல்லு. இல்லை அவனோட ஆசை நிறைவேத்து. உனக்கு நடந்தது தான் அவனுக்கும் நடக்கும்ன்னு இல்லை ஜானு.. அப்புறம் இன்னும் உனக்கு லைஃப் இருக்கு.
உன்னால இன்னொரு லைஃப் அக்சப்ட் பண்ண முடியும்.. அவனுக்கு ஒரு அப்பா கிடைக்க நீ மனசுவைச்சாத்தான் முடியும். ஒரு குழந்தை, இருக்கிற உறவை விட்டு வேற உறவைத் தேட ஆரம்பிக்க காரணம் அந்த உறவுகளிலிடமிருந்து அவங்க எதிர்பார்க்கிறது கிடைக்கலைன்னு தான்… உன் மேல வெறுப்பு வராம பார்த்துக்க ஜானு…” என்றான். அமைதியாக நின்றாள்.
அவர்கள் வருவதற்குள் சித்தை சமாதானம் செய்து உணவைக் கொடுத்து உறங்க வைத்துவிட்டார்.
” அப்பா…. சித் சாப்பிட்டானா ? ”
” ம்ம்… ” என்றவர் அவளை அழைக்காமலே சாப்பிட அமர்ந்து தன் உணவை போட்டுகொண்டு சாப்பிட்டார். அவளும் அமர, அவளை பார்க்காது சாப்பிட்டு எழுந்தார். அவளிடம் பேசாது அறைக்குச் செல்ல..” அப்பா என்மேல கோபமா… ? ” என்று கேட்டாள்.
” கோபமா இருந்த மட்டும் இங்க எதுவும் மாறிடுமா ? ஏதோ எனக்கு அடைக்கலம் கொடுத்திருக்க, அதுக்கு தகுந்தது போல இருக்கேன் அவ்வளவு தான்… ”
” அப்பா…. ”
” ம்ம்… அப்பா தான்.. ஆனா, அந்த உறவுக்கு மதிப்பில்லை உன்கிட்ட. என் பேரன் இந்த வயசில இவ்வளவு மன வேதனை பட நீ தான் காரணம் நீ மட்டும் தான் காரணம். நடந்த ஒரு விசயத்தை அனுபவமா தான் எடுக்கணும் அதையே முடிவா எடுத்து வாழ கூடாது…
இன்னும் அவன் கேள்விக்கு நீ பதில் சொல்லல.. எப்படி சொல்லுறேன் நானும் பார்க்கிறேன்… ?” என்றவர் பட்டென்று கதவை சாத்தி விட்டார். அழுகையைத் தவிர அவளுக்கு எதை செய்வதென்று பிடிப்படவில்லை.
ஞாயிறும் வந்தது, ரகுவும் சித்துவும் ஜானுவிடம் பேசிக்கொள்ளவே இல்லை. சிவாளி வீட்டிற்கு அவனும், வைஷூ வீட்டிற்கு இவரும் சென்றிடா அவளுக்கு தனிமையே கிடைத்தது.
ஆர்.ஜேவை காண அவன் வீட்டிற்கு புகழ்பெற்ற அலைவரிசையில் இருந்து வந்திருந்தனர்.
” பாஸ், உங்களை பார்க்க **** இந்த சேனலிருந்து வந்திருக்காங்க”
” எதுக்கு பீட்டர், வந்திருக்காங்க…? “
” பாஸ் அவங்க டான்ஸ்ஷோ நடத்தப் போறாங்களாம். உங்களை நடுவராக அழைக்க கூப்பிட்டு இருக்காங்க பாஸ்…”
” ஜட்ஜாவா…! இது என்னடா ? இது எனக்கு சரியா வருமாடா…°”
” பாஸ்… இதுமூலமா இந்தச் சேனலுக்கும் டி.ஆர்.பி ரெட் ஏறும் பாஸ். நீங்களும் நல்ல சம்பாரிக்கலாம் பாஸ் ”
” சம்பாரிக்கிறத விடுடா… பிரச்சனை இல்லை. இதுனால பட வாய்ப்பு வராம போயிட போகுது.. ”
” அதெல்லாம் போகாது பாஸ்… நீங்க வந்து அமௌண்ட், பேசுங்க.. இன்னும் செலக்சன் ஆரம்பிக்கல பாஸ் இப்பதான் உங்ககிட்ட கேட்டு வந்திருக்காங்க இனிதான் சொல்லுவாங்க பாஸ்… ”
” ஏன் பீட்டர்.. இது குழந்தைக்கான டான்ஸ் ப்ரோகிராம் தானே…! ஏன் இந்த காம்பெடிசன் நம்ம பசங்களை அனுப்பக் கூடாது…? ”
” அனுப்பலாம் பாஸ். ஆனால் சிக்கல் வரும்.. ” என்று அவன் கூற,” என்ன சிக்கல்… ?”
” பாஸ் நம்ம பசங்க அனுப்பிட்டு, நாமலே ஜட்ஜா இருக்கிறது சரி இல்லை பாஸ்”
” அதுக்காக… இது எவ்வளவு பெரிய வாய்ப்பு. பீட்டர் சீக்கிரமா ஷ்யாம்கிட்ட இத சொல்லி ஒரு ஆனொன்ஸ்மென்ட் கொடுக்கச் சொல்லு… ” என்றவன் அவர்களிடம் பேசிவிட்டு, வரேன் என்று சொன்னவன் இதர சந்தேகங்களை கேட்டு மற்ற விசயங்களை பேசி முடித்தான்.
இருவரும் ஜானுவிடம் பேசிநாளானது .. மூவரின் முகமும் சோகத்தில் இருந்தது. அதே முகத்தோடு பள்ளிக்குச் சென்றான் சித்… ரகுவோ வீடுவந்தவர், அவளிடம் பேசாமல் அறையில் அடைந்துகொண்டார்.
முகம் பார்த்து குழந்தைகளின் நிலையை அறிந்து கொள்வதில் ஆசிரியரும் இரண்டாம் தாய்தான்… ஒரு குழந்தையின் செயலை வைத்தே அவர்களது மாற்றம் எளிதில் தெரிந்திடும்.
தினமும் சிரிக்கும் குழந்தை ஒருநாள் அழுதால்.. அழைத்து கேட்பது ஆசிரியரின் கடமையே அவ்வாறு க்ரெஸி, சித்திடம் கேட்க மாணவர்களை கண்டு கூற மறுத்தவன், மாலையில் அனைவரும் சென்றபின். அவனை அழைத்து கேட்க, அனைத்தையும் கூறினான்.. அவனை வாஞ்சயாக அணைத்தவள்..
” சித்… இந்த உலகத்தில நமக்கு நல்லது நினைக்கிற ஜீவன்னா அது அம்மாதான். அவங்க உன் ஆசைக்கு தடை சொல்லாறாங்கன்னா, அதுக்கு பின்னாடி கண்டிப்பா ரீசன் இருக்கும். அது உனக்கு புரிய வைக்க முடியாம இருக்காங்க. உன்னைய கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைக்கிறாங்க..”
” ஏன் மிஸ் இதுவே அப்பா இருந்தா என் ஆசை கேட்டுருப்பார்ல…? எனக்கு மட்டும் ஏன் அப்பா இல்ல மிஸ் எல்லாருக்கும் இருக்காங்க ?”
” இல்ல சித்… எனக்கு அப்பா இல்லை. ” என்றாள்.. அவளைப் பார்த்தவன்… ” சித்.. எல்லாருக்கும் அப்பா அம்மா… இரண்டு பேரும் இருக்கலாம். அப்பா மட்டும் இருக்கலாம். இல்ல அம்மா மட்டும் இருக்கலாம்.. அது அவங்கமேல தப்பில்ல, கடவுளோட ப்ளான் யாரு யாருக்கு என்ன கொடுக்கணுமோ அத கொடுத்திருக்கார்.
சித், நீ அம்மா பெயரை போட்டு கூப்பிட ஃபீல் பண்றீயே அந்த அம்மா யாரு தெரியுமா? அவங்க பெயர் உன் பின்னாடி இருக்க உனக்கு பெருமை தான். ” என்று அவளது போனை எடுத்து கருவில் குழந்தை உருவானதிலிருந்து பிறக்கும் வரும் அனிமேசன் வீடியோவை அவனுக்குக் காட்டினாள்.
பெற்றெடுக்கும் போது தாயவள் அனுபவிக்கும் வலியையும் போட்டுக் காட்ட பயந்திருந்தான்.
” சித் பயப்பிடாத… உன் உயிரை பாதுகாத்து உனக்கு உடல் , கை, கால் கொடுத்து உன்னை நைன் மன்தஸ் தன்னுடைய உடல்ல பத்திரமா வைத்து.. எவ்வளவு வலி கொண்டு உன்னை இந்த உலகத்திற்கு கொண்டுவந்த அந்த அம்மா பெயரை பின்னாடி போட்டு கூப்பிட, உனக்கு சையா இருக்கா…? இருபத்தினாலு மணிநேரமும் உனக்காக நல்லதே யோசிக்கிறவங்க, அம்மா தான். இப்ப அவங்க வேணான்னு சொல்லுறது கூட உன் நல்லதுக்கு தான்..
உன் ஆசையை கேட்கலைன்னு அவங்க மேல கோபடுற, ஆனால் அவங்க உன்மேல கோபப்பட்டு உனக்கு செய்வேண்டியத செய்யாம இருக்காங்களா சித்… ?அவங்கதான் நமக்கு கடவுள். சீ காட் இன் ஹர். அவங்க மேல கோபப்படாத, அவங்க பெயரோட அழைக்கிறதுனால நீ பெருமை தான் படனும் சித்.
நீ இந்த உலகத்தை காண எவ்வளவு வலியை அனுபவித்தாங்கன்னு பார்த்தே, இந்த வீடியோல. உனக்காக அவங்களுக்கு பிடிச்சதை கூட தியாகம் செய்றது தாய்.. உன் ஆசை நிறைவேறலைன்னு நீ ஃபீல் பண்ற ஆனால் அவங்களுடைய ஆசையெல்லாம் மறச்சு தான் உனக்கு அம்மான்னு இருக்காங்க. அவங்க ஆசை தான் முக்கியம் இருந்தா உன் ஜானு உனக்கு அம்மாவ இருந்திருக்கமாட்டாங்க சித் புரிஞ்சுகோ.. ” என்றவள் சொல்ல தெளிவானான்.. பின்,ரகு வர அவரோடு சென்றவன். பூக்கடையில் ரகுவிடம் கேட்டு பூவொன்றை வாங்கியவன். வீட்டுக்கு வந்து தன் தாயின் முன் நீட்டி மண்டியிட்டு அமர ஜானு ஆச்சரியமாக பார்த்தாள்.
ஒரு பெண்ணின் பிரசவ வலியை கணவன் கண்டால், கோர்ட் வாசலை மிதிக்க வேண்டியதில்லை என்பது போல. ஒருமகனி(ளி)டமோ தன் தாயின் பிரசவ வலியை காண நேர்ந்தால் முதியோர்வாசலை மிதிக்க அவசியமில்லை ..
குறும்பு தொடரும்…எனக்கு ஏன் தந்தை ? இல்லை என்பதிலிருந்து யார் எனக்கு தந்தை ?என்று தன் மனதிலுள்ள

குறும்பு தொடரும்…