என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா

மழலைச்செல்வங்கள் அங்கே
விளையாடிக்கொண்டிருந்தனர்… வயதானவர்களின் கேலி சிரிப்புகள் ஒருபக்கம்… காதலர்கள் ஒருபக்கம் என அந்தமாலை வேளையில் அந்தப் பூங்காவே நிறைந்திருந்தது. கதிரையில் தன் அன்னை கூறுவதை கேட்டு அமர்ந்திருந்தான் சித்….

” சித்.., எனக்கும் பரதம் என்றால் உயிர்,பள்ளியில் படிக்கும் போது
பள்ளி நடக்கும் டான்ஸ் காம்பெடிசனில் கலந்து நிறையப் பரிசெல்லாம் வாங்கிருக்கேன்…. சிறு வயதிலிருந்து முறையா நானும் என் தோழியும் இந்தப் பரதத்தை கத்துட்டு, வந்தோம்.. பள்ளியில்  நடக்கும் ஒவ்வொரு விழாவும் நாங்க கண்டிப்பா கலந்து கொள்வோம்.. எங்களுக்கு சொல்லி கொடுத்த குரு.. எங்க இரண்டுபேரையும் மேடையில் உங்க பரதத்தை அரங்கேற்றம் செய்லாம் சொன்னார்..

அவர்  மூலமாக நாங்களும் எங்கள் பரதத்தை அரங்கேற்றலாம் எண்ணிருந்தோம். ஆனால்… “என்று நிறுத்தியவள், கண்கள் கண்ணீரை சுரந்தது… தன் மகனிடம் அதை எப்படி கூறவதென்று அழுதவண்ணம் அமர்ந்திருந்தாள்.

” ஜானு… வேணாம் நீ சொல்ல வேணாம். நீ அழுகாத ப்ளீஸ் ஜானு”அவன் விழிநீர் விழ அவள் கண்ணீரை துடைத்தான்…

” அப்பா என்கிட்ட ஆடவேண்டாம் சொல்லிட்டார்.. ஆனா, என் தோழி ஆட நினைத்தாள்.. அவள் பரத்தை அரங்கேற்றம் செய்ய, அவங்க கேட்டதை அவளால் கொடுக்க முடியவில்லை.. அதுனால் அவளை ஆட முடியாம செய்தாங்க.. ஆட முடியாம போனதால் என் தோழி இறந்து போயிட்டா சித்… என்னை விட்டு போயிட்டா…  நீயும் சிவாளி போல தான்.. நானும் அவளும்.. சிறு வயதிலிருந்து உயிருக்கு உயிரா பழகின என் தோழி…

அவளோட உயிரை பறித்த பரதம் எனக்கும் வேணான்னு நான் முடிவெடுத்தேன் சித்… டான்ஸே வேணாம் வெறுத்தேன்… ஆனால் நீ டான்ஸ் ஆடுவதையும் டான்ஸ் மாஸ்டராக போறேன் சொன்னதும் எனக்குள் பயம் வந்தது, என் தோழியும் அவள் இறப்பும் தான் ஞாபகம் வந்தது.. அதான், உனக்கு டான்ஸ் வேணாம் சொல்லுறேன் சித்…

நீ காம்படிசன் சேருவேன் அடம்பிடிக்கும் போது.. அந்த காம்படிசன் கலந்து நீயும் ஏமாற்றப்படுவியோன்னு  பயந்து தான் வேணாம் சொன்னேன் சித்.. நான் உன்னை இழக்க தயாரா இல்லை .. எனக்கு நீ மட்டும் தான் இருக்க… ” என அழுதவள் தன் நெஞ்சோடு அணைத்துகொண்டான்… ஒரு வலிய கரம் அவர்கள் இருவரையும் அணைக்க ” நானும் உங்களுக்காக தான் இருக்கேன்.. ” என்றார் ரகு.

இருவரும் வராது நேரமானதால்… அவர்களை தேடிவந்தவர், அவர்கள் உள்ளே இருப்பதாக தெரிந்தவர் கூறகேட்டு உள்ளே சென்று, அவர்களை நெருங்க அவள் கூறிய அனைத்தையும் கேட்டறிந்தார்.

” ஜானுமா.. இனிமே டான்ஸ் பத்தி உன்கிட்ட பேசவே மாட்டேன்… எனக்கும் என் ஜானு ஹாப்பி தான் முக்கியம். அழுகாத ஜானு ” என கண்ணீரை துடைத்து, கீழே குதித்தவன் அவளை வீட்டிற்கு செல்ல அழைத்தான்.. மூவருமாக சிரித்து பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்தனர்.

அதன் பின் அவள் அவர்களோடு பொழுதை கழித்தாள். விடுப்பு எடுத்து.. அவன் படிக்க வைத்து, கொஞ்சம் நேரம் டீ.வி பார்க்க அவள் மடியிலே உறங்கி போக, அவனை தூக்கி மெத்தையில் கிடத்தினாள்..

தன் தந்தை ஏதோ யோசனையில் இருந்தவரை கண்டு அவர் அருகினில் வந்தவள்,…

” என்னப்பா… தூங்கலையா ? “

” தூக்கம் வரலைமா… நீ போய் தூங்குமா.. நான் பார்த்துகிறேன்…”

” எனக்கு தூக்கம் வரலைப்பா… நல்ல தூங்கிட்டேனா.. இப்ப துடைச்சு போட்டது போல சுத்தமா தூக்கம் இல்லை… உங்களுக்கு ஏன்பா தூக்கம் வரலை…?”

” எல்லாம் உன்னை பத்தி நினைச்சு தாம்மா.. நான் உங்க கூட இல்லாம உங்களுக்கு என்ன ஆச்சு, ஏதாச்சுன்னு தெரிஞ்சுக்காம… உங்களை பத்தி முழுசா தெரிஞ்சுகாமல்.. என் வேலை முக்கியம் நாடு முக்கியம் இருந்துடேன்மா… இப்போ என் பொண்டாட்டிய இழந்து, என் பொண்ணை நல்ல இடத்தில கரைசேர்க்காம ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்தும் பிரோஜனமில்லாம வாழ்ந்திருக்கேனே… நான் எதுக்குமா இருக்கேன் எனக்கே தெரியலைமா…? “

” அப்பா.. என்ன பேசுறீங்க நீங்க.. ஏன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நீங்க காரணம் இல்லைப்பா… என் தலையெழுத்து அப்படி அமைந்தது. அந்த பழிய உங்கமேல ஏன் சுமந்துகிறீங்க… ?”

” இல்லம்மா…. எவ்வளவு நீ பாதிக்கப்பட்டிருக்க. அப்பாவா நான் உன்கூட இல்லாம , தைரியம் சொல்லி கொடுக்காக வளர்த்துடேன்மா..  எந்த வயசில உங்க கூட இருந்து உங்க தவறை சரிசெய்து உங்களை வழிநடத்தனும் அந்த நேரத்தில நான் இல்லாம போனது.. உனக்குள்ள இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளிவர முடியாம தவிக்க நானும் ஒரு காரணம் தான்மா… “

” அப்பா…. “

” ஸ்ருதிக்கு என்னாச்சு… அவ ஏன் தற்கொலை பண்ணனும் சொல்லு ஜானுமா…? “

” அப்பா.. சித்து கிட்ட என்னால முழுமையா சொல்ல முடியலைப்பா அவ… அவ.. ” என அழுதவள், “அப்பா…. ஸ்கூல் பரதம் க்ளாஸ் நாங்க நல்ல ஆடுவதை பார்த்து அந்த மேடம் அம்மாகிட்டையும் ஸ்ருதி அம்மாகிட்டையும் சொன்னாங்க. நாங்க இரண்டுபேரும் வெளிய டான்ஸ் க்ளாஸ் அனுப்பினாங்க. நாங்க இருவரும் சேர்ந்து தான்பா போனோம்.

நாங்க நல்ல ஆடுறதை பார்த்து அவங்க அரங்கேற்றம் பண்ணுங்கன்னு எங்களுக்கு ஆசை காட்டினாங்க நானும் அவளும் வீட்டுல சொன்னோம்.

அப்ப நீங்க என்னை, எக்ஜாம்க்கு மட்டும் கான்சன்டெரசன் பண்ண சொன்னீங்க… இதெல்லாம் வேணான்னு சொன்னீங்க.. அதுனால நான் வேணான்னு சொல்லிட்டேன்..

ஸ்ருதி அப்பா, அவளுடைய பரதத்தை அரங்கேற்றம் பண்ண ஆசை பட்டார். எங்க குரு மூலமாகவே  அரங்கேற்றத்து ஏற்பாடு செய்ய அவங்களே ஆட்கள் வைத்திருக்கோம் சொன்னாங்க.. அவங்க பேச்சு கேட்டு அவரும் காசை நிறையாகொட்டி கொடுத்தார் பா… கடைசியா அரங்கேற்றம் செய்ய. மேடையில் ப்ராக்டிஸ் பண்ண வேண்டிருக்கு  பத்துநாள் அவளை அரங்கேற்றம் நடக்க இருக்க அந்த மண்டபத்தில் வர சொல்லிருந்தார் குரு…

இவளும் பத்துநாள் போயிட்டு இருக்க. அங்க அந்த மண்டபத்தில்  இருந்த மேனேஜர் அவளுக்கு” என நிறுத்தியவள்.” செக்ஸ் டார்சார் கொடுக்க ஆரம்பித்தார்ப்பா… அவ மேல் கைவைப்பதும், அவர் நடனத்தை சரி செய்றேன் உடல் அங்க அங்க வைக்கறதுமா… அவளுக்கு டார்சர் கொடுக்க ஆரம்பித்தார்.. குருகிட்ட சொல்லிருக்கா.. உனக்கு அரங்கேற்றம் செய்யனும்ன்னா இதெல்லாம் பொறுத்துகோன்னு சொல்லிட்டாங்கப்பா.

கடைசி இரண்டு நாளைக்கு முன்னாடி அவளிடம் அவரே… என்னோட ஒருநாள்….”என தந்தையிடம் திக்கி திணறியவள். “கூட இருக்க சொன்னார்ப்பா.அவ மறுக்க உன்னால அரங்கேற்றம் பண்ண முடியாம போயிடும் மிரட்டினார்.. அவ பயந்து வீட்டுல சொல்லாம லெட்டர் எழுதிவைத்து தற்கொலை செய்துடா… ஆனா அவ லெட்டர்ல எல்லாத்தையும் எழுதிவைத்து போனதால எங்க குருவையும் அந்தாளையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவனுக்கு தண்டனை கிடைத்தாலும் இழந்தது என் ஸ்ருதிப்பா… கடைசியா  என்கிட்ட சொன்னா எனக்கு அப்ப புரியலை..

” நாம எதற்கும் ஆசை பட கூடாதுடி.. அப்படியே ஆசை பட்டாலும் அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டும்  சொன்னாள்… ஆனா அவ கொடுத்து பெரிய விலைப்பா…. ” என கதறி அழுதாள்.

அவளை அணைத்தவர்… அழாதமா, எனக்கும் உன் மேல கோபம் வந்தது சித்தை ஏன் இவ ஆட விட மாட்கிறான்னு, இப்ப புரியுதுமா உன் பயம்… நம்ம சித் பையனா போனது ஒருவிதத்தில நல்லதோன்னு தோணுது..

எனக்கு இன்னும் கூட ஸ்ருதியோட அப்பா நிலைமையை நினைச்சு பார்க்கவே முடியலைமா.. தன் பெண்ணோட ஆசையை நிறைவேற்ற   அவர் எவ்வளவு கனவுகள் கண்டாரோ, அரங்கேற்றத்தில் தன் பெண்ணை  எத்தனை பேர் பாராட்டுவாங்க எவ்வளவு பெருமையா தன்னை நினைத்திருப்பார்… இப்படி சுக்குநூறா ஆக்கிட்டானே அந்த பாவி. எனக்கும் இன்னும் பதபதைக்குதுமா உன்னையும் நான் விட்டிருந்தா… “

” அம்மாவும் அதான்பா பயந்தாங்க… இதுபோல என்ன நடந்தாலும் என்கிட்ட சொல்லு சொன்னாங்க…. அப்படியொரு குருவையும் என் தோழிய காவு வாங்கின பரதத்தை வெறுத்தேன்பா… டான்ஸ் எனக்கு பிடிக்காம போனதற்கு அதான் காரணம்.. எங்க இதே போல் ஒரு சூழ்நிலையில் என் பையனுக்கு வர கூடாதுன்னு தான்பா ஆரம்பத்திலிருந்தே தடுத்தேன்.. எனக்கு மட்டும் என் சித்தோட ஆசையை நிறைவேத்த ஆசை இருக்காதா ஒரு இழப்பே போதும்பா… ” என அழுதாள்..

” போதும்டா அழுகாத… சித்துவும் நானும் உன்னை புருஞ்சுகாம கஷ்ட படுத்திட்டோம் சாரிமா.இனி அவன் டான்ஸ் ஆட மாட்டான். நீ நிம்மதி இரு.. இதையே நினைச்சுட்டு இருக்காம போய் தூங்குமா…”

கணத்த இதயத்தோடே அவர்களின் இரவு கழிந்தது.. சித் இனி டான்ஸை பற்றி நினைத்து பார்க்கவே கூடாதென்று முடிவெடுக்க, மகளை கஷ்டபடுத்திட கூடாதென்று  சித்துவிடம் டான்ஸை பற்றி பேசவோ அந்த காம்பெடிசன் பற்றி பேச கூடாது என்றே நினைத்து வைக்க… விதியோ வேறு விதமாய் விளையாட தொடங்கியது.

” பட்டீ… உனக்கு தூக்கம் வருதா….” என தன் நண்பனை சுரண்டினான் சூர்யா.

” எஸ் பட்டீ… எனக்கும் வருது..ஏன் பட்டீ சாப்பிட்டதும் சைன்ஸ் ப்ரீயட் வச்சு டார்சர் பண்ணுது இந்த டீச்சர்…?”

” பட்டீ.. லன்ஞ்க்கு அடுத்த  ப்ரியட், இருந்தாலும் மார்னிங் இருந்தாலும் இந்த டார்சர் நம்மலை தூங்க தான் வைக்குது பட்டீ… ” என கொட்டாவி விட்டத்தை கண்டுவிட்டார் சைன்ஸ் டார்சர்.

” மாட்டுனீயா பட்டீ… ” என வாயில் கைவைத்து சித் சிரிக்க..

” சித் ஆண்ட் சூர்யா கெட் அவுட்” என்றதும் விட்டாலும் போதுமென்று இருவரும் வெளியே வந்து விட்டனர்.

” பட்டீ… எஸ்கேப் ஆகிடோம், அந்த டார்சர் கிட்ட இருந்து… நாம தான் சித் ஆவுட்ஸ்டேன்டிங் ஸ்டூடன்ஸ்… ” என்றான்.

” சூர்யா… இன்னும் டார்சர் உள்ள தான் இருக்கு அமைதியா இரு… ” என்றதும்.

” மிஸ்.. சித்தும் சூர்யாவும் பேசிட்டு இருக்காங்க ” ஸ்ரவன் அவர்களை மாட்டிவிட தொண்டை வத்தி பாடம் எடுக்க, அவன் அவ்வாறு கூற கோபம் வரவே, ” ஸ்ரவன் க்ளாஸ்ஸை கவனிக்காம வெளிய அவங்களை கவனிச்சிட்டு இருக்கீயா கெட்டவுட் ..” என்றார் அவனையும்

அவனும் வெளியே வர,  ” பட்டீ… பார்த்தீயா டாப்பரையே வெளியனுப்பிட்டாங்க…. “

” பட்டீ… ஸ்ரவன் நம்ம இரண்டு பேரையும் மாட்டிவிட டரை பண்ணி  பாவம் அவனே மாட்டிகொண்டு வெளியே வந்துட்டான்… ” என இருவரும் கேலி பேச… சித்தை அடிக்க வர, அங்கே வந்த மிஸ் ஸ்ரவனை திட்டுவிட்டு செல்ல, மேலும் அவர்கள் மேல் கோபம் கொண்டு நின்றான்.

வகுப்பு முடிய, இருவரையும் உள்ளே அனுப்பியவர் ஸரவனுக்கு இம்போசிசன் கொடுத்துவிட்டு சென்றார்.

சூர்யாவும் சித்துவும் ஹைபை போட்டு கொண்டனர்… அவனை முறைத்துகொண்டே இம்போசிசனை எழுதினான்.

” சித்… வா உன்னை ப்ரின்சிபால் கூப்பிடுறாங்க.. ” என ப்யூன் வரவே அவன் சென்றான்.

” ஹேய்,… சித் கமான் மை பாய்…. ஒரு ஹாப்பீ நீயூஸ் சித்” என்றதும்
அவன் திரு திருவென முழித்து நின்றான்..

” சித்.. நீ காம்பெடிசனில் அடுத்த லெவலுக்கு வந்துட்ட சித்… வர சட்டர்டே  நீ கண்டிப்பா உன் தாத்தாவோட வந்திடு போன தடவை போல ஆடாம நின்றிடாதே.. இந்த முறை நல்ல முறையாக ஆடி நீ டீ.வி ஷோவில் கலந்துக்கனும் சரியா  ” என அவர் உற்சாகமாக கூறிக்கொண்டிருந்தார்.

” சார்… நான் டான்ஸ் ஷோவில் கலந்துக்க போறதில்லை… எங்க மம்மிக்கு  டான்ஸ் இஸ்டமில்லை என்னை கலந்துக்க கூடாதுன்னு சொல்லிடாங்க. அதனால் நான் கலந்துக்க மாட்டேன் சார்… “

” சித்… என்ன பேசுற நீ? இது உனக்கு கிடைச்ச மிக பெரிய வாய்ப்பு. அத தவற விட போறீயா… உன்கிட்ட பேச போறதில்லை இன்னைக்கு உன் தாத்தா வருவார் தானே அவர்கிட்ட நான் பேசிக்கிறேன் நீ போ.. ” என கோபம் கொள்ள அமைதியாக வகுப்பறைக்கு திரும்பினான்.

மாலையில் ரகுவரவே க்ரேஸி அவரிடம் அனைத்தையும் கூற… அவருக்கு கோபமே வந்தது… ” அப்பா… பொறுமையா பேசுங்கப்பா சித்தோட லைஃப் பா… “

” என்ன மனுசன் மா இவன்… தனக்கும் தன் பள்ளிக்கும் பெருமை சேரணும் ஆட்களை சேர்க்க, இப்படி விருப்பம் இல்லைன்னு சொன்ன பிறகும் வற்புறுத்திறான்… இவனையெல்லாம் எவன் ஹெட்மாஸ்டரா தேர்ந்தெடுத்தது, எனக்கு வர கோபதுக்கு… “

” அப்பா… கோபப்படாதீங்க, அவருக்கு புரியிறது போல சொல்லுங்கப்பா.., “

” அவனுக்காமா புரிய போகுது… ” என்றவரை கோபத்தை குறைத்து கொண்டு அவரை காண சென்றார்..

” வாங்க மிஸ்டர் ரகுநந்தன்.. உட்காருங்க,.. ” என்றார்.. ” இருக்கட்டும் சார்.. நீ எதுக்கு சார் வர சொன்னீங்க…? ” 

” சித்.. ஏதோ சொல்லுறான்.. எங்க மம்மிக்கு பிடிக்கலை. கலந்துக்க போவதில்லை.. என்ன சார் இது… ? அவன் ஆடுறதனால அவங்களுக்கு பெருமை தானே சார்… தன் மகன் டான்ஸ் ஷோ ஆடபோகிறான் தெரிஞ்சா சந்தோசபடாம என்ன சார் இது பிடிக்கலைன்னு கலந்துக்க வேண்டாம் சொல்லுறாங்க.. நீ பேசி புரியவைங்க சார்…”

” நான் பேசி புரியவைக்க வேண்டியது என் பொண்ணுகிட்ட இல்லை உன்கிட்ட தான்.. சித்துக்கு டான்ஸ் பிடிக்கும். ஏன் அவன் நல்ல ஆடுவான் தான்.. அதுக்கு எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொன்னதுக்கு அப்புறம் ஏன் சார் எங்களை வற்புறுத்துறீங்க…? என் பொண்ணுக்கு இதுல விருப்பம் இல்லை சார் அவன் ஆட மாட்டான்… நீங்க வேற பையன் வைத்து உங்க வேலை பார்த்துகோங்க சார்.. ” என்றார்

” ஹலோ சார்.. சித் அடுத்த லெவல் ஸ்லேகசனுக்கு வந்துட்டான்.இனி நான் எந்த பையனை நான் தேர்ந்தெடுக்க. அடுத்த லெவலுக்கு போனதுக்கு அப்புறம் ஆட மாட்டான் சொன்னால் என்ன அர்த்தம்…? சித் ஆடியே ஆகனும் சார்”

” என்ன சார் எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லியும் ஆட சொல்லுறீங்க… “

” சார்…. எங்களுக்கு வேற வழி இல்லை.. சித்துவால எங்களுக்கும் உங்களுக்கு லாபம் தானே சார் அதை ஏன் புருஞ்சுக்க மாட்டிக்கிறீங்க…?”

” சார் நீங்க தான் புருஞ்சுக்க மாட்டிக்கிறீங்க… எங்க பிள்ளை வைச்சு லாபம் பார்க்கிறதை பத்தி பேசுறீங்க… என்ன சார்.. இங்க நாங்க படிக்கத்தானே அனுப்பிறோம்.. நீங்க என்ன சார் லாபம் பார்க்கிறதை பத்தி பேசுறீங்க…?”

“ஆமா, எங்களுக்கு எது முக்கியமோ அத பத்தி தானே பேசமுடியும்… சித் டான்ஸ் ஆடுவானாக்? மாட்டானா… ?அவன் ஆடுனா இந்த ஸ்கூல் இருக்கட்டும். இல்லை டீ.சி வாங்கிட்டு போங்க  ” என்றதும் அதிர்ந்து நின்றார்..

குறும்பு தொடரும்…

மழலைச்செல்வங்கள் அங்கே
விளையாடிக்கொண்டிருந்தனர்… வயதானவர்களின் கேலி சிரிப்புகள் ஒருபக்கம்… காதலர்கள் ஒருபக்கம் என அந்தமாலை வேளையில் அந்தப் பூங்காவே நிறைந்திருந்தது. கதிரையில் தன் அன்னை கூறுவதை கேட்டு அமர்ந்திருந்தான் சித்….

” சித்.., எனக்கும் பரதம் என்றால் உயிர்,பள்ளியில் படிக்கும் போது
பள்ளி நடக்கும் டான்ஸ் காம்பெடிசனில் கலந்து நிறையப் பரிசெல்லாம் வாங்கிருக்கேன்…. சிறு வயதிலிருந்து முறையா நானும் என் தோழியும் இந்தப் பரதத்தை கத்துட்டு, வந்தோம்.. பள்ளியில்  நடக்கும் ஒவ்வொரு விழாவும் நாங்க கண்டிப்பா கலந்து கொள்வோம்.. எங்களுக்கு சொல்லி கொடுத்த குரு.. எங்க இரண்டுபேரையும் மேடையில் உங்க பரதத்தை அரங்கேற்றம் செய்லாம் சொன்னார்..

அவர்  மூலமாக நாங்களும் எங்கள் பரதத்தை அரங்கேற்றலாம் எண்ணிருந்தோம். ஆனால்… “என்று நிறுத்தியவள், கண்கள் கண்ணீரை சுரந்தது… தன் மகனிடம் அதை எப்படி கூறவதென்று அழுதவண்ணம் அமர்ந்திருந்தாள்.

” ஜானு… வேணாம் நீ சொல்ல வேணாம். நீ அழுகாத ப்ளீஸ் ஜானு”அவன் விழிநீர் விழ அவள் கண்ணீரை துடைத்தான்…

” அப்பா என்கிட்ட ஆடவேண்டாம் சொல்லிட்டார்.. ஆனா, என் தோழி ஆட நினைத்தாள்.. அவள் பரத்தை அரங்கேற்றம் செய்ய, அவங்க கேட்டதை அவளால் கொடுக்க முடியவில்லை.. அதுனால் அவளை ஆட முடியாம செய்தாங்க.. ஆட முடியாம போனதால் என் தோழி இறந்து போயிட்டா சித்… என்னை விட்டு போயிட்டா…  நீயும் சிவாளி போல தான்.. நானும் அவளும்.. சிறு வயதிலிருந்து உயிருக்கு உயிரா பழகின என் தோழி…

அவளோட உயிரை பறித்த பரதம் எனக்கும் வேணான்னு நான் முடிவெடுத்தேன் சித்… டான்ஸே வேணாம் வெறுத்தேன்… ஆனால் நீ டான்ஸ் ஆடுவதையும் டான்ஸ் மாஸ்டராக போறேன் சொன்னதும் எனக்குள் பயம் வந்தது, என் தோழியும் அவள் இறப்பும் தான் ஞாபகம் வந்தது.. அதான், உனக்கு டான்ஸ் வேணாம் சொல்லுறேன் சித்…

நீ காம்படிசன் சேருவேன் அடம்பிடிக்கும் போது.. அந்த காம்படிசன் கலந்து நீயும் ஏமாற்றப்படுவியோன்னு  பயந்து தான் வேணாம் சொன்னேன் சித்.. நான் உன்னை இழக்க தயாரா இல்லை .. எனக்கு நீ மட்டும் தான் இருக்க… ” என அழுதவள் தன் நெஞ்சோடு அணைத்துகொண்டான்… ஒரு வலிய கரம் அவர்கள் இருவரையும் அணைக்க ” நானும் உங்களுக்காக தான் இருக்கேன்.. ” என்றார் ரகு.

இருவரும் வராது நேரமானதால்… அவர்களை தேடிவந்தவர், அவர்கள் உள்ளே இருப்பதாக தெரிந்தவர் கூறகேட்டு உள்ளே சென்று, அவர்களை நெருங்க அவள் கூறிய அனைத்தையும் கேட்டறிந்தார்.

” ஜானுமா.. இனிமே டான்ஸ் பத்தி உன்கிட்ட பேசவே மாட்டேன்… எனக்கும் என் ஜானு ஹாப்பி தான் முக்கியம். அழுகாத ஜானு ” என கண்ணீரை துடைத்து, கீழே குதித்தவன் அவளை வீட்டிற்கு செல்ல அழைத்தான்.. மூவருமாக சிரித்து பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்தனர்.

அதன் பின் அவள் அவர்களோடு பொழுதை கழித்தாள். விடுப்பு எடுத்து.. அவன் படிக்க வைத்து, கொஞ்சம் நேரம் டீ.வி பார்க்க அவள் மடியிலே உறங்கி போக, அவனை தூக்கி மெத்தையில் கிடத்தினாள்..

தன் தந்தை ஏதோ யோசனையில் இருந்தவரை கண்டு அவர் அருகினில் வந்தவள்,…

” என்னப்பா… தூங்கலையா ? ”

” தூக்கம் வரலைமா… நீ போய் தூங்குமா.. நான் பார்த்துகிறேன்…”

” எனக்கு தூக்கம் வரலைப்பா… நல்ல தூங்கிட்டேனா.. இப்ப துடைச்சு போட்டது போல சுத்தமா தூக்கம் இல்லை… உங்களுக்கு ஏன்பா தூக்கம் வரலை…?”

” எல்லாம் உன்னை பத்தி நினைச்சு தாம்மா.. நான் உங்க கூட இல்லாம உங்களுக்கு என்ன ஆச்சு, ஏதாச்சுன்னு தெரிஞ்சுக்காம… உங்களை பத்தி முழுசா தெரிஞ்சுகாமல்.. என் வேலை முக்கியம் நாடு முக்கியம் இருந்துடேன்மா… இப்போ என் பொண்டாட்டிய இழந்து, என் பொண்ணை நல்ல இடத்தில கரைசேர்க்காம ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்தும் பிரோஜனமில்லாம வாழ்ந்திருக்கேனே… நான் எதுக்குமா இருக்கேன் எனக்கே தெரியலைமா…? ”

” அப்பா.. என்ன பேசுறீங்க நீங்க.. ஏன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நீங்க காரணம் இல்லைப்பா… என் தலையெழுத்து அப்படி அமைந்தது. அந்த பழிய உங்கமேல ஏன் சுமந்துகிறீங்க… ?”

” இல்லம்மா…. எவ்வளவு நீ பாதிக்கப்பட்டிருக்க. அப்பாவா நான் உன்கூட இல்லாம , தைரியம் சொல்லி கொடுக்காக வளர்த்துடேன்மா..  எந்த வயசில உங்க கூட இருந்து உங்க தவறை சரிசெய்து உங்களை வழிநடத்தனும் அந்த நேரத்தில நான் இல்லாம போனது.. உனக்குள்ள இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளிவர முடியாம தவிக்க நானும் ஒரு காரணம் தான்மா… ”

” அப்பா…. ”

” ஸ்ருதிக்கு என்னாச்சு… அவ ஏன் தற்கொலை பண்ணனும் சொல்லு ஜானுமா…? ”

” அப்பா.. சித்து கிட்ட என்னால முழுமையா சொல்ல முடியலைப்பா அவ… அவ.. ” என அழுதவள், “அப்பா…. ஸ்கூல் பரதம் க்ளாஸ் நாங்க நல்ல ஆடுவதை பார்த்து அந்த மேடம் அம்மாகிட்டையும் ஸ்ருதி அம்மாகிட்டையும் சொன்னாங்க. நாங்க இரண்டுபேரும் வெளிய டான்ஸ் க்ளாஸ் அனுப்பினாங்க. நாங்க இருவரும் சேர்ந்து தான்பா போனோம்.

நாங்க நல்ல ஆடுறதை பார்த்து அவங்க அரங்கேற்றம் பண்ணுங்கன்னு எங்களுக்கு ஆசை காட்டினாங்க நானும் அவளும் வீட்டுல சொன்னோம்.

அப்ப நீங்க என்னை, எக்ஜாம்க்கு மட்டும் கான்சன்டெரசன் பண்ண சொன்னீங்க… இதெல்லாம் வேணான்னு சொன்னீங்க.. அதுனால நான் வேணான்னு சொல்லிட்டேன்..

ஸ்ருதி அப்பா, அவளுடைய பரதத்தை அரங்கேற்றம் பண்ண ஆசை பட்டார். எங்க குரு மூலமாகவே  அரங்கேற்றத்து ஏற்பாடு செய்ய அவங்களே ஆட்கள் வைத்திருக்கோம் சொன்னாங்க.. அவங்க பேச்சு கேட்டு அவரும் காசை நிறையாகொட்டி கொடுத்தார் பா… கடைசியா அரங்கேற்றம் செய்ய. மேடையில் ப்ராக்டிஸ் பண்ண வேண்டிருக்கு  பத்துநாள் அவளை அரங்கேற்றம் நடக்க இருக்க அந்த மண்டபத்தில் வர சொல்லிருந்தார் குரு…

இவளும் பத்துநாள் போயிட்டு இருக்க. அங்க அந்த மண்டபத்தில்  இருந்த மேனேஜர் அவளுக்கு” என நிறுத்தியவள்.” செக்ஸ் டார்சார் கொடுக்க ஆரம்பித்தார்ப்பா… அவ மேல் கைவைப்பதும், அவர் நடனத்தை சரி செய்றேன் உடல் அங்க அங்க வைக்கறதுமா… அவளுக்கு டார்சர் கொடுக்க ஆரம்பித்தார்.. குருகிட்ட சொல்லிருக்கா.. உனக்கு அரங்கேற்றம் செய்யனும்ன்னா இதெல்லாம் பொறுத்துகோன்னு சொல்லிட்டாங்கப்பா.

கடைசி இரண்டு நாளைக்கு முன்னாடி அவளிடம் அவரே… என்னோட ஒருநாள்….”என தந்தையிடம் திக்கி திணறியவள். “கூட இருக்க சொன்னார்ப்பா.அவ மறுக்க உன்னால அரங்கேற்றம் பண்ண முடியாம போயிடும் மிரட்டினார்.. அவ பயந்து வீட்டுல சொல்லாம லெட்டர் எழுதிவைத்து தற்கொலை செய்துடா… ஆனா அவ லெட்டர்ல எல்லாத்தையும் எழுதிவைத்து போனதால எங்க குருவையும் அந்தாளையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவனுக்கு தண்டனை கிடைத்தாலும் இழந்தது என் ஸ்ருதிப்பா… கடைசியா  என்கிட்ட சொன்னா எனக்கு அப்ப புரியலை..

” நாம எதற்கும் ஆசை பட கூடாதுடி.. அப்படியே ஆசை பட்டாலும் அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டும்  சொன்னாள்… ஆனா அவ கொடுத்து பெரிய விலைப்பா…. ” என கதறி அழுதாள்.

அவளை அணைத்தவர்… அழாதமா, எனக்கும் உன் மேல கோபம் வந்தது சித்தை ஏன் இவ ஆட விட மாட்கிறான்னு, இப்ப புரியுதுமா உன் பயம்… நம்ம சித் பையனா போனது ஒருவிதத்தில நல்லதோன்னு தோணுது..

எனக்கு இன்னும் கூட ஸ்ருதியோட அப்பா நிலைமையை நினைச்சு பார்க்கவே முடியலைமா.. தன் பெண்ணோட ஆசையை நிறைவேற்ற   அவர் எவ்வளவு கனவுகள் கண்டாரோ, அரங்கேற்றத்தில் தன் பெண்ணை  எத்தனை பேர் பாராட்டுவாங்க எவ்வளவு பெருமையா தன்னை நினைத்திருப்பார்… இப்படி சுக்குநூறா ஆக்கிட்டானே அந்த பாவி. எனக்கும் இன்னும் பதபதைக்குதுமா உன்னையும் நான் விட்டிருந்தா… ”

” அம்மாவும் அதான்பா பயந்தாங்க… இதுபோல என்ன நடந்தாலும் என்கிட்ட சொல்லு சொன்னாங்க…. அப்படியொரு குருவையும் என் தோழிய காவு வாங்கின பரதத்தை வெறுத்தேன்பா… டான்ஸ் எனக்கு பிடிக்காம போனதற்கு அதான் காரணம்.. எங்க இதே போல் ஒரு சூழ்நிலையில் என் பையனுக்கு வர கூடாதுன்னு தான்பா ஆரம்பத்திலிருந்தே தடுத்தேன்.. எனக்கு மட்டும் என் சித்தோட ஆசையை நிறைவேத்த ஆசை இருக்காதா ஒரு இழப்பே போதும்பா… ” என அழுதாள்..

” போதும்டா அழுகாத… சித்துவும் நானும் உன்னை புருஞ்சுகாம கஷ்ட படுத்திட்டோம் சாரிமா.இனி அவன் டான்ஸ் ஆட மாட்டான். நீ நிம்மதி இரு.. இதையே நினைச்சுட்டு இருக்காம போய் தூங்குமா…”

கணத்த இதயத்தோடே அவர்களின் இரவு கழிந்தது.. சித் இனி டான்ஸை பற்றி நினைத்து பார்க்கவே கூடாதென்று முடிவெடுக்க, மகளை கஷ்டபடுத்திட கூடாதென்று  சித்துவிடம் டான்ஸை பற்றி பேசவோ அந்த காம்பெடிசன் பற்றி பேச கூடாது என்றே நினைத்து வைக்க… விதியோ வேறு விதமாய் விளையாட தொடங்கியது.

” பட்டீ… உனக்கு தூக்கம் வருதா….” என தன் நண்பனை சுரண்டினான் சூர்யா.

” எஸ் பட்டீ… எனக்கும் வருது..ஏன் பட்டீ சாப்பிட்டதும் சைன்ஸ் ப்ரீயட் வச்சு டார்சர் பண்ணுது இந்த டீச்சர்…?”

” பட்டீ.. லன்ஞ்க்கு அடுத்த  ப்ரியட், இருந்தாலும் மார்னிங் இருந்தாலும் இந்த டார்சர் நம்மலை தூங்க தான் வைக்குது பட்டீ… ” என கொட்டாவி விட்டத்தை கண்டுவிட்டார் சைன்ஸ் டார்சர்.

” மாட்டுனீயா பட்டீ… ” என வாயில் கைவைத்து சித் சிரிக்க..

” சித் ஆண்ட் சூர்யா கெட் அவுட்” என்றதும் விட்டாலும் போதுமென்று இருவரும் வெளியே வந்து விட்டனர்.

” பட்டீ… எஸ்கேப் ஆகிடோம், அந்த டார்சர் கிட்ட இருந்து… நாம தான் சித் ஆவுட்ஸ்டேன்டிங் ஸ்டூடன்ஸ்… ” என்றான்.

” சூர்யா… இன்னும் டார்சர் உள்ள தான் இருக்கு அமைதியா இரு… ” என்றதும்.

” மிஸ்.. சித்தும் சூர்யாவும் பேசிட்டு இருக்காங்க ” ஸ்ரவன் அவர்களை மாட்டிவிட தொண்டை வத்தி பாடம் எடுக்க, அவன் அவ்வாறு கூற கோபம் வரவே, ” ஸ்ரவன் க்ளாஸ்ஸை கவனிக்காம வெளிய அவங்களை கவனிச்சிட்டு இருக்கீயா கெட்டவுட் ..” என்றார் அவனையும்

அவனும் வெளியே வர,  ” பட்டீ… பார்த்தீயா டாப்பரையே வெளியனுப்பிட்டாங்க…. ”

” பட்டீ… ஸ்ரவன் நம்ம இரண்டு பேரையும் மாட்டிவிட டரை பண்ணி  பாவம் அவனே மாட்டிகொண்டு வெளியே வந்துட்டான்… ” என இருவரும் கேலி பேச… சித்தை அடிக்க வர, அங்கே வந்த மிஸ் ஸ்ரவனை திட்டுவிட்டு செல்ல, மேலும் அவர்கள் மேல் கோபம் கொண்டு நின்றான்.

வகுப்பு முடிய, இருவரையும் உள்ளே அனுப்பியவர் ஸரவனுக்கு இம்போசிசன் கொடுத்துவிட்டு சென்றார்.

சூர்யாவும் சித்துவும் ஹைபை போட்டு கொண்டனர்… அவனை முறைத்துகொண்டே இம்போசிசனை எழுதினான்.

” சித்… வா உன்னை ப்ரின்சிபால் கூப்பிடுறாங்க.. ” என ப்யூன் வரவே அவன் சென்றான்.

” ஹேய்,… சித் கமான் மை பாய்…. ஒரு ஹாப்பீ நீயூஸ் சித்” என்றதும்
அவன் திரு திருவென முழித்து நின்றான்..

” சித்.. நீ காம்பெடிசனில் அடுத்த லெவலுக்கு வந்துட்ட சித்… வர சட்டர்டே  நீ கண்டிப்பா உன் தாத்தாவோட வந்திடு போன தடவை போல ஆடாம நின்றிடாதே.. இந்த முறை நல்ல முறையாக ஆடி நீ டீ.வி ஷோவில் கலந்துக்கனும் சரியா  ” என அவர் உற்சாகமாக கூறிக்கொண்டிருந்தார்.

” சார்… நான் டான்ஸ் ஷோவில் கலந்துக்க போறதில்லை… எங்க மம்மிக்கு  டான்ஸ் இஸ்டமில்லை என்னை கலந்துக்க கூடாதுன்னு சொல்லிடாங்க. அதனால் நான் கலந்துக்க மாட்டேன் சார்… ”

” சித்… என்ன பேசுற நீ? இது உனக்கு கிடைச்ச மிக பெரிய வாய்ப்பு. அத தவற விட போறீயா… உன்கிட்ட பேச போறதில்லை இன்னைக்கு உன் தாத்தா வருவார் தானே அவர்கிட்ட நான் பேசிக்கிறேன் நீ போ.. ” என கோபம் கொள்ள அமைதியாக வகுப்பறைக்கு திரும்பினான்.

மாலையில் ரகுவரவே க்ரேஸி அவரிடம் அனைத்தையும் கூற… அவருக்கு கோபமே வந்தது… ” அப்பா… பொறுமையா பேசுங்கப்பா சித்தோட லைஃப் பா… ”

” என்ன மனுசன் மா இவன்… தனக்கும் தன் பள்ளிக்கும் பெருமை சேரணும் ஆட்களை சேர்க்க, இப்படி விருப்பம் இல்லைன்னு சொன்ன பிறகும் வற்புறுத்திறான்… இவனையெல்லாம் எவன் ஹெட்மாஸ்டரா தேர்ந்தெடுத்தது, எனக்கு வர கோபதுக்கு… ”

” அப்பா… கோபப்படாதீங்க, அவருக்கு புரியிறது போல சொல்லுங்கப்பா.., ”

” அவனுக்காமா புரிய போகுது… ” என்றவரை கோபத்தை குறைத்து கொண்டு அவரை காண சென்றார்..

” வாங்க மிஸ்டர் ரகுநந்தன்.. உட்காருங்க,.. ” என்றார்.. ” இருக்கட்டும் சார்.. நீ எதுக்கு சார் வர சொன்னீங்க…? ” 

” சித்.. ஏதோ சொல்லுறான்.. எங்க மம்மிக்கு பிடிக்கலை. கலந்துக்க போவதில்லை.. என்ன சார் இது… ? அவன் ஆடுறதனால அவங்களுக்கு பெருமை தானே சார்… தன் மகன் டான்ஸ் ஷோ ஆடபோகிறான் தெரிஞ்சா சந்தோசபடாம என்ன சார் இது பிடிக்கலைன்னு கலந்துக்க வேண்டாம் சொல்லுறாங்க.. நீ பேசி புரியவைங்க சார்…”

” நான் பேசி புரியவைக்க வேண்டியது என் பொண்ணுகிட்ட இல்லை உன்கிட்ட தான்.. சித்துக்கு டான்ஸ் பிடிக்கும். ஏன் அவன் நல்ல ஆடுவான் தான்.. அதுக்கு எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொன்னதுக்கு அப்புறம் ஏன் சார் எங்களை வற்புறுத்துறீங்க…? என் பொண்ணுக்கு இதுல விருப்பம் இல்லை சார் அவன் ஆட மாட்டான்… நீங்க வேற பையன் வைத்து உங்க வேலை பார்த்துகோங்க சார்.. ” என்றார்

” ஹலோ சார்.. சித் அடுத்த லெவல் ஸ்லேகசனுக்கு வந்துட்டான்.இனி நான் எந்த பையனை நான் தேர்ந்தெடுக்க. அடுத்த லெவலுக்கு போனதுக்கு அப்புறம் ஆட மாட்டான் சொன்னால் என்ன அர்த்தம்…? சித் ஆடியே ஆகனும் சார்”

” என்ன சார் எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லியும் ஆட சொல்லுறீங்க… ”

” சார்…. எங்களுக்கு வேற வழி இல்லை.. சித்துவால எங்களுக்கும் உங்களுக்கு லாபம் தானே சார் அதை ஏன் புருஞ்சுக்க மாட்டிக்கிறீங்க…?”

” சார் நீங்க தான் புருஞ்சுக்க மாட்டிக்கிறீங்க… எங்க பிள்ளை வைச்சு லாபம் பார்க்கிறதை பத்தி பேசுறீங்க… என்ன சார்.. இங்க நாங்க படிக்கத்தானே அனுப்பிறோம்.. நீங்க என்ன சார் லாபம் பார்க்கிறதை பத்தி பேசுறீங்க…?”

“ஆமா, எங்களுக்கு எது முக்கியமோ அத பத்தி தானே பேசமுடியும்… சித் டான்ஸ் ஆடுவானாக்? மாட்டானா… ?அவன் ஆடுனா இந்த ஸ்கூல் இருக்கட்டும். இல்லை டீ.சி வாங்கிட்டு போங்க  ” என்றதும் அதிர்ந்து நின்றார்..

குறும்பு தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!