என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா

நாளைந்து ஐந்து மாடிக்கொண்ட அப்பெரிய  கட்டிடத்தின் முன் ரகுவும், சித்துவும் நின்றிருந்தனர்…  உள்ளே நுழைந்த இருவரும் லிப்ட்டிற்குள் நுழைந்து மூன்றாம் தளத்தின் பொத்தானை அழுத்தினார்

மூன்றாம் தளத்தில் வந்து நிற்க.. இருவரும் அந்த தளத்தில் உள்ள ஆர்.ஜே டான்ஸ் ஸ்கூல் என்று பெரியதாய் எழுதப்பட்டிருந்தற்குள்ளே நுழைந்தனர்….

உள்ளே பல குழந்தைகள் நடனமாடிக்கொண்டிருக்க.. தன்னிலை மறந்து அவர்களையே பார்த்து நின்றான் சித்…

” எஸ் யார் வேணும் உங்களுக்கு ? ” என்று அங்கிருக்கும் டான்ஸ் மாஸ்டர் விஷ்வா… வந்தான்

” நான் ரகு.. இது என் பேரன் சித்தார்த்.. எங்களை  ஆர்.ஜே சார் வரச்சொன்னார் அதற்காக தான் இங்க வந்தோம்… ” என்றதும் இருவரையும் பார்த்தவன், அவர்களை அமரச்சொல்லிவிட்டு உள்ளே சென்றான்… சித் ரகுவிடம் அமர்ந்திடாமல் அவர்கள் ஆடுவதை பார்த்தவாறே நின்றிருந்தான்…. ரகுதான் ப்ரின்சிபேசினதை நினைத்துகொண்டிருந்தார்.

” இங்க பாருங்க ரகு சார்.. எங்களுக்கு லாபமும்… பள்ளிக்கு பெயர் கிடைப்பதை பற்றி தான் நாங்க யோசிப்போம்… சித்துவால, எங்களுக்கு கண்டிப்ப  லாபம் கிடைக்கும் நிறைய மாணவர்கள் எங்க பள்ளிக்கு வருவாங்க… “

” நாங்க உங்களை நம்பி அனுப்பிறதே நல்ல கல்வி பிள்ளைகளுக்கு கொடுப்பீங்கன்னு தான் ஆனா நீங்க அவங்களை ஒரு லாபமா பார்க்கிறீங்க… “

” சார்.. உங்களால நல்ல கல்வி நாங்க கொடுக்கலைன்னு சொல்ல முடியுமா ? முடியாது.. இந்த சுட்டு வட்டாரத்திலே எங்க பள்ளி தான் ஸ்டேன்டர் இருக்குன்னு எல்லாரும் பேசுறாங்க.. அது எங்களுடைய உழைப்பு அதுக்கு தகுந்த மாதிரி நாங்க லாபத்தை  எதிர்பார்க்கிறதுல எங்களுக்கு தப்பா தெரியலை சார்… முடிவே கேட்கிறோம் சித் எங்க பள்ளிக்காக ஆடுவானா ? மாட்டானா ?… அவன் ஆடினால் இங்க இருக்கட்டும் இல்லை டி.சி வாங்கிட்டு போயிட்டே இருங்க… ஒரு மாணவனை இழக்கிறதுனால என் பள்ளி  தரம் குறைந்து போகிடாது… எங்க பள்ளிக்கு என்ன லாபமோ அத பத்தி தான் நாங்க யோசிப்பேன்..

உங்களுக்கு இரண்டு நாள் டைம் யாரை நீங்க கன்வீன்ஸ் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது….  ஆனா சித் டான்ஸ் ஆட ஒத்துக்கிட்டா அவனுக்கு தேவையானதை பள்ளி செய்யும்.. இல்லைன்னா வேற பள்ளியில் சேர்த்துகோங்க…. ” என்றார்.

இதற்குமேல் அவரிடம் என்ன வாதாட, கல்வி என்றைக்கு விலைக்கு போனதோ,அன்றே நியாயங்கள் செத்து போனபின், இப்படியும் சிலர் பள்ளிக்காக உழைக்க, மற்றவர்களின் விறுவெறுப்புகளை மதிக்காது இருக்கத்தான் செய்கின்றனர்.

” சார் சார்.. ” என கலைத்தான் விஷ்வா” சொல்லுப்பா… ” என்றார்.

” சார்.. வந்திட்டு இருக்கார் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… உங்களுக்கு காபி வேணுமா டீ வேணுமா சார்… ?”

” இல்லப்பா எதுவும் வேணாம்… ” என்றார்.
” இருங்க சார்… ” என்றவர் கையில் கூல்டீரிங்க்ஸை கொடுத்தான். வாங்கியவர் தன் பேரனிடம் கொடுக்க அழைத்தார், ஆனால் அவனின் கவனமோ அங்கே ஆடும் குழந்தைகளிடமே இருந்தது… அவர் அழைக்க சிறு அசைவு கூட இல்லை.

‘ என்னத்தான் மனத்திற்கு பிடித்த ஒன்றை வேண்டாம் என்றாலும், மனம் அதை வேண்டி நிற்க தான் செய்யும் அதற்கு கடிவாளமிட, பெரியவர்களாலே முடியாது என்னுபட்சத்தில் அச்சிறுவன் என்ன தான் செய்வான்.. அவனை பார்த்தவாறே அமர்ந்தவர், மீண்டும் யோசனை முன்னே நடந்தவைகளில் நின்றது.,

இனி பேசி ப்ரியோஜனம் இல்லை என்று வெளியே வந்தார்.. அவர்களுக்காக காத்திருந்தனர் சித்தும் , க்ரேஸியும்

” அப்பா… என்னப்பா சொன்னாங்க ? நீங்க பேசி புரியவைச்சுட்டீங்களா ? “

” இல்லம்மா அவர்தான் எனக்கு நிறைய புரியவைத்தார்  ” என்று நடந்தை கூற.. இதில் பாதிக்க படுவதோ சித் மட்டுமே… ஒன்று டான்ஸ் வேண்டாம் என்றால் பள்ளி மாற்றம் படும்… அதனால் இழப்பு சித்திற்குதான்.., அப்படியே ஆட சம்மதித்தால் ஜானு வை மீறியது போல ஆகும்… பெரியவர்களே முடிவெடுக்க திணறும் போது சிறுவன் என்ன செய்வான்?

” அப்பா….இப்போ என்ன பண்றது ? “

” தெரியலைமா…. இப்ப ஜானுக்காக யோசிக்கிறதா?இல்லை சித்துக்காக யோசிக்கிறதா…? ஜானுக்காக யோசித்தால், சித்துக்கு பள்ளி மாற்றிதான் ஆகனும், உன்னை போல அவனை புருஞ்சுகிற டீச்சர் கிடைக்கமாட்டாங்க, இதுனால சித் டான்ஸ் இழந்து உன்னையும் இழந்து ரொம்ப கஷ்டபடுவான்.. அவனை யாருமே புருஞ்சக்க மாட்டாங்க…?

சரி, ஆட ஒத்துகிட்ட. ஜானுவ சமாளிக்கிறது கஷ்டம்.. என்னம்மா முடிவு எடுக்க..? ” என நொந்து போனார் ரகு.

” அப்பா… எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலைப்பா…. ஆனால் சித்துக்கு இரண்டுமே கிடைக்கனும், அவன் இங்க இருக்கன்னும், டான்ஸ் ஆடனும். ஜானுவும் ஒத்துக்கனும். நாம யோசிப்போம்ப்பா.. தீர்வு இல்லாத ப்ரச்சனையே இல்லை… ” என்றவள், ஆர்.ஜே கூறியது ஞாபகம் வர, ” அப்பா…, என் லவ்வர் பீட்டர், ஆர்.ஜே சார்கிட்ட தான் பி. ஏ வா இருக்கான். அன்று சர்சில் நடந்தை கூறினாள்.. நீங்க வேணா போய் பார்த்து பேசுங்களேன்பா கண்டிப்ப எதாவது வழிகிடைக்கும் என்று க்ரேஸி சொன்னதுக்கு ஏற்ப இங்க வந்திருந்தனர் .

” ஹாய்… ஐ யம் சஞ்சய் யூ… ” என்று ஒரு சிறுவன் நட்புகரம் நீட்ட, ” ஐ யம் சித்தார்த்.. ” என்றவன் கைகொடுத்தான்.

” நீ இங்க ஜாயின் பண்ண வந்திருக்கியா ? ” என ஆர்வமாக கேட்க, அவன் இல்லை என இடத்து வலதுபுறமாக ஆட்டினான்.

” எஸ், சஞ்சய், இனி சித்து நம்ம டான்ஸ்  ஸ்கூல் ஜாயின் பண்ண போறான்., ” என குரல் வந்த திசையை நோக்கி இருவரும் திரும்ப.. அங்கே ஆர்.ஜேவும் பீட்டரும் நின்றிருந்தனர்.

தன் தாத்தா கையை பற்றியவாறே.. ஆர்.ஜேவை விழிவிரித்து பார்த்தான். முதல் முறையாக பார்த்தவன், அதன் பின் அவனது புகைப்படங்கள் கிடைத்தால் எடுத்து வைத்து கொள்வது… சிவாளி கம்யூட்டரில் ஆர்.ஜே புகைப்படங்களை பார்த்து அதில் சிலதை ப்ரிண்டவுட் எடுத்து இன்னும் அந்த பெட்டில் வைத்து கொள்வதென இருந்தான்.. அவனை போல ஆடிபார்ப்பது அதுவும் சிவாளி வீட்டில் தான்.. அவன் யாரென அறிந்திடும் முன்பே அவன் மேல ஒருவித பாசம் வந்தது

தனது இருகைகளை நீட்டி  ” சித்.. ”  என்று அழைக்க… அந்த அழைப்பு ஏனோ அவனுக்கு இதுவரை தன் தந்தையென ஒருவர் இவ்வாறு  அழைத்திட மாட்டாரா என ஏங்கியவனுக்கு அந்த அழைப்பு பாசத்திற்கான அன்பிற்கான அழைப்பாக தெரிய ஓடியவன் அவன் கைகளில் தஞ்சமானான்., அவளை அப்படியே தூக்கியவன் இருகன்னத்திலும் இதழ் பதித்து… ” எப்படி இருக்கீங்க சித்… என்னை யாருன்னு தெரியுதா ? “

இன்னும் அவனுக்கு மலைப்பாக இருக்க. அவன் கைகளில் தானிருக்கோமா ? என்ற ஆச்சரியம் இன்னும் அவனை நம்ப முடியாமல் இருக்கவைத்தது.

” நீங்கன்னா அவன் உயிர்.., உங்க டான்ஸையும், உங்க போட்டோவை பார்த்து, இப்ப உங்களை பார்த்ததும் ஸ்டக் ஆகி நிக்கிறான் தம்பி… நீங்க சைன் போட்ட ட்ரஸ்ஸைகூட இன்னும் துவைக்காம பத்திரமா வைச்சிருக்கான்… “

” நிஜமாவா,.., நானும் அதை பத்திரமா தான் வச்சிருக்கேன்.. ஏன் சித்து உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா ? ” என அவன் வாயால் கேட்க ஆர்வம் கொள்ள, ” ஆமா… ஆர்.ஜே அங்கிள் யூ ஆர் மை இன்ஷ்பிரேன்.. ” என்றதும் இன்ஷ்பிரேசனில் ஆனந்தம் கொண்டவன், அங்கிள் முற்றிலும் வடிந்தது. ரகுவை அமரச்சொல்லிவிட்டு அவர் பக்கத்தில் தன் மடியில் சித்தை வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

‘அங்கிள்ன்னா மாமாதானே,அப்ப நான் ஜானுக்கு அண்ணன் முறையில வேணும்… நோ.. நோ.. இதை ஆரம்பித்திலே கட் பண்ணுமே.. இல்லை பின்னாடி நம்ம சித்து அப்பான்னு சொல்ல கஷ்டபடுவான்… ‘ என்றவன் நினைக்க ‘ ஆர்.ஜே சார் உங்களை இன்னும்  ஜானு ஏத்துக்கவில்லை… இது அப்பாவா அழைக்க கஷ்டபடுவாராம்ல ஓவர்ய்யா இதெல்லாம் ‘

‘ இருந்துட்டு போட்டும் நீ… க்ளோஸ் பண்ணிட்டு போ… ‘ என அதனை அடக்கியவன், ” சித்… என்னை ஆர்.ஜேன்னே கூப்பிடு ஏன்னா நானும் நீயும் ஃப்ரண்ட்ஸ் ஓ.கேவா… “

தன் தாத்தாவை பார்க்க அவரும் சரியென்று சொல்ல.. ” ஓ.கே ஆர்.ஜே…” என்றான். அதற்கு ஒரு முத்தம் வைத்தவன்.. ” சார் பெரிய தியாகியாமே கேள்வி பட்டேன்…” என்றதும் ரகு தலைகுனிந்தவர்,” என்னப்பா பண்ண இவனுக்கு இருக்கிறது ஜானவும் நானும் தான்.. டான்ஸே வேணான்னு அடம்பிடிக்கிறவ  கிட்ட நாங்க என்ன பேச…? அவளும் அதிலே மாறாம இருக்கிறா…”

” அங்கிள் கேட்கிறேன் தப்பா நினைக்காதீங்க.. ஜானு… “என்றவன் நிறுத்திடாமல் மேடம் சேர்த்து “ஜானுமேடமுக்கு என்ன தான் பிரச்சனை இவன் டான்ஸ் ஆடுறதில்…”

” அது வந்துப்பா,. ” என தயங்கியவர் அனைத்தையும் கூறிமுடித்தார்.

” இறந்த போனவங்களையே நினைச்சுட்டு தன் மகனோட ஆசை மறுக்கிறது ரொம்ப தப்பு அங்கிள்.. இந்த சின்ன பையன் கனவு , ஆசை வைச்சிருக்க கூடாதா…? என்னைக்கோ நடந்தை இன்னும் நினைவில் வைத்து அதுபோல ஆயிடுமோன்னு பயந்தா சரி வருமா? இந்த சின்ன வயசில தன் கனவு , ஆசை இழக்கணும் தலையெழுத்தா…. அதெல்லாம் வேணாம் .. நீங்க நான் சொல்லுறதை கேளுங்க சித் கண்டிப்பா டான்ஸ் ஆடுவான், இந்த காம்படிசனில் கலந்துப்பான்”உறுதியாக சொன்னான்.

” வேணாம் ஆர்.ஜே, ஜானு பாவம். அவளை  ஹர்ட் பண்ண வேணாம். நான் டான்ஸ் ஆடவில்லை… “

” உனக்கு ஜானுவா ரொம்ப பிடிக்குமா சித்…? “

” ஜானு மை சோல்.,.. ஆர்.ஜே, ஜானுக்காக என்னவேணா செய்வேன்..” என்றான்.. ” நீயுமாடா?” என்று நினைத்துக்கொண்டவன்., ” அப்ப நீ தானே ஜானுவ இந்த பயத்தில இருந்து வெளிய கொண்டு வரனும்., ”
இருவரும் புரியாமல் பார்க்க,

” ஜானு மேடத்தோட, பயத்தை ஏன் அதே டான்ஸ் வைத்த போக்கிட கூடாது…. தன் தோழியை இழந்திருக்காங்க, தன் மகனை இழக்க கூடாதுன்னு பயப்பிடுறாங்கன்னு அப்படியே விட்டால் இதே பயத்தை காட்டியே எதையும் பண்ணவே விடமாட்டாங்க.. முதல்ல  அவங்களை நாம பயத்தில இருந்து வெளிய கொண்டு வரனும்.. அதற்கு நீ டான்ஸ் ஆடனும்… நீ டான்ஸ் ஆடுறதுனால, உன் ஜானுவோட பயம் போகும்.. வேற ஸ்கூலுக்கு போகமாட்ட, க்ரேஸி மிஸ் கூடவும் இருக்கலாம் ”  என்றான்.

அவன் ரகுவை பார்க்க, ரகுவிற்கோ அவன் சொல்வது சரியென்று பட்டது, ஜானுவை மாத்திட இதுவே சரியான வழி என எண்ணியவர்… ” தம்பி… நீங்க    சொல்லுறது சரிதான்… சித் டான்ஸ் ஆடனும், எனக்கு என் ஜானுவும் மாறனும்.., நீங்க சொல்லுங்க தம்பி அப்படியே செய்றேன்… ” என்றார்.

” சித்… உனக்கு ஓ.கேவா,.. ” என்றான்.

” நான் டான்ஸ் ஆடுறது தெரிஞ்சு ஜானு என்மேல கோபப்பட்டு பேசாம போனா  என்ன பண்றது ஆர்.ஜே…? ஐ கேனாட் பேர் திஸ்… பயமா இருக்கு.. ” என்றவன் முகம் சோகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

” எத்தனை நாளைக்கு அப்படி இருப்பாங்க சித்.. இங்க பாரு, அவங்களை மாத்த, கண்டிப்பா கஷ்டபட்டுதான் ஆகணும்.. பயந்தா உன் அம்மாவை மாத்தவே முடியாது… நான் உன் கூட எப்பையும் இருப்பேன், உனக்காக நான் உன் அம்மாகிட்ட பேசுவேன்.. நான் விலகி நிற்க போறதில்லை சித்… உனக்கு ஒ.கே வா.. “

சித் அவனது கண்களை கண்டவன், அதில் தெரிந்த நம்பிக்கை… அவனை ஒத்துக்க வைத்தது, தலையை அசைத்தான் ” குட் சித்… ” அவனது நெற்றியில் இதழ் பதித்து,

” உன் ஆசை எல்லாம் கண்டிப்பா நான் நிறைவேற்றுவேன் சித்… தினமும் நீ டான்ஸ் கிளாஸ்க்கு வா… ” என்றதும்

“என்னால எப்படி ஆர்.ஜே வர முடியும், ஜானு கிட்ட என்ன சொல்லி டான்ஸ் கிளாஸ்க்கு வர… அவகிட்ட நான் பொய் சொன்ன கண்டுபிடிச்சிடுவாளே… “

‘ பொய் சொல்ல கூட தெரியாத நல்லவனா டா நீ..,
உன்னை என் பிள்ளைன்னு சொல்லிக்க சேம் சேம் இருக்கேடா.. ‘ என்றவன்.. ” இட்ஸ் ஒ.கே சித். நான் சொல்வதுபோல சொல்லு கண்டிப்பா ஜானு உன்னை ட்ரஸ்ட் பண்ணுவாங்க.. ஒ.கே.. இனி உன் கான்சன்டேரசன் டான்ஸ் இருக்கணும்… நெக்ஸ்ட் சடர்டே மறக்காம் ஆடிசனுக்கு வந்திடு… என்னால வர முடியாது.. உனக்கு ஹேல்ப்க்கு விஷ்வா வருவான் ” என்றவன் அவனிடம் தன் கையை நீட்ட அவனது கையில் அடித்தவன், அவனை தாவி அணைத்துகொண்டான் சித். கன்னத்தில் முத்தமொன்றையும் பதித்தான்… ஆர்.ஜே அவனை இறுக்க அணைத்துகொண்டான்.

” டர்ஸ் மீ சித், ஐ யம் ஆல்வேஸ் வித் யூ.. ” என கேசத்தை கலைக்க, ” தாங்கியூ ஆர்.ஜே.. ” என்றான்..

” ம்க்கூம்… இனி நீ தாங்கியூ சொல்லகூடாது… அதுக்கு பதில இப்ப கொடுத்தது போலவே ஒரு கிஸ் கொடுக்கனும் டீல்… “

” டீல்..  ”  என தலைசாய்த்து தன் அழகிய சிரிப்பை உதிர்த்தான்.

இருவரையும் பார்க்க தந்தை மகன் போலவே தெரிந்தது ரகுவிற்கு, இது போல் ஒரு தந்தை சித்திற்கு கிடைத்திட கூடாதா… சித்தை அணைத்து அவனைக்கு துணையாக நட்பாய் பழகும் ஒரு தந்தையை தானே அவனும் ஏங்குகிறான்…. அவர்களை பார்க்க அப்படி தெரிய கண்கலங்கி போனார் ரகு.

” அங்கிள்.. நீங்க எதற்கும் கவலை படாதீங்க..இனி சித்துகூட நான் எப்பையும் இருப்பேன்.. உங்க பொண்ணையும் மாற்றி, சித்தோட ஆசையும் நிறைவேற்றலாம். நீங்க கவலைபடாம போங்க  ” என்றான்.

அவன் கை பற்றி  ”  உங்களுக்கு  எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியலை தம்பி… ?” என்று கண்கலங்க,

” என்ன அங்கிள் இதுக்கு போய் கண்கலங்கிட்டு.. ஜகதீஸ் என்னோட நல்ல  ஃப்ரண்ட் அங்கிள்.. அவனோட அப்பா நீங்க உங்களுக்கு பண்ணாமையா…! ரிலாக்ஸ் அங்கிள் வீட்டுக்கு போங்க.. சித் நீயும் தைரியமா எதையும் பேஸ் பண்ணு ஜானுவையும்,. ” என்றான்.

இருவரும் செல்ல, ஒருமுறை அவனை திரும்பி பார்த்துவிட்டு சென்றான் சித்.

‘ சித்தும், அங்கிளும் நமக்கு பிரச்சனை இல்லை… நமக்கு பிரச்சனை எல்லாம் அந்த மிளகாய் தான்., அவளை எப்படி சமாதானம் பண்ணி சித் டான்ஸ் ஒத்துக்கவைச்சு, என்னை கல்யாணம் பண்ணி ஒத்துக்க வைக்க.. இதெல்லாம் நடக்கிறதுக்குள்ளையும் நமக்கு வயசு ஐம்பதை தாண்டிடுமோ… இறைவா ! ப்ளீஸ் ஹேல்ப் மீ.. ‘ என்றான்

இருவரும் வீடு வர.. அங்கே அவள் தயாராகி கொண்டிருந்தாள் வேலைக்கு செல்ல.

” ஆமா, தாத்தாவும் பேரனும் எங்க போயிட்டு வரீங்க.. எவ்வளவு நேரம் ஆச்சு… “

” இல்லம்மா.. க்ரேஸி பார்த்து பேசி அவ வீட்டுக்கு போயிட்டு வந்தோமா.. ” என்றதும் ரகுவை சித் பார்க்க கண்ணடித்தார்.

” எதுக்கு பா, அவங்க வீட்டுக்கு போனீங்க ? “

” அதுவாமா… சித்திற்கு டூசன் சேர்ப்பதை பத்தியும், அவங்க வீடு தெரிஞ்சா கூட்டிட்டு போய்விட்டுட்டு கூட்டி வர வீட்டை தெரிஞ்சுக்க போனோம்மா… “

” எதுக்குப்பா ட்யூசனேல்லாம் நானாதான் சொல்லித்தரேனே.. “

” நீ சொல்லி தர தான்மா…  இந்த மரமண்டைக்கு தான் ஏதுவும் ஏறலையே… ” என்றவரை பார்த்து முறைத்தான் சித்.

‘ யோவ் கிழவா இதான் சாக்குன்னு என்ன மரமண்டைன்னு திட்டுறீயா ஜானு போகட்டும் அப்ப இருக்குயா உனக்கு.. ” என கறுவிக் கொண்டான்.

” அந்த பொண்ணு க்ரேஸி கிட்டையும் படிக்கட்டும், நீயும் சொல்லிக்கொடுமா.. அப்படியாவது,ஒழுங்க படிக்கிறானான்னு பார்ப்போம்… டான்ஸ் தான் வேணாம், படிப்பிலையாவது நல்ல படியா வரட்டுமே.. அதுனால இரண்டு மணிநேரம் அங்கையும் இங்க ஒரு மணிநேரம் படிக்கட்டும்… என்ன நான் சொல்லுறது…?”

” சரிப்பா.. அவன் நல்ல படிச்சாவே போதும்ப்பா…  நீங்க பார்த்துகோங்க நான் வேலைக்கு போறேன்.  சித், யூனிபார்ம் மாத்திட்டு, ஒழுங்க உட்கார்ந்து படி நாளையிலிருந்து டூசன் போற உன் க்ரேஸி மிஸ் பெயரையும் என்பெயரையும் காப்பாத்து வரட்டுமா ? ” என அவன் நெற்றியில் முத்தமிட்டு சென்றாள்.

அவள் சென்றதும், கதவை தாழிட்டவர். ஷோபாவில் அமர்ந்தார் அவர் முன்னே முறைத்து நின்றான்.

” ரகு.. எப்படி நீ என்னை மரமண்டை சொல்லலாம்… நான் எவ்வளவு ப்ரேவ் தெரியுமா…? “

” அப்புறம் ஏன்டா படிப்பு உன் மண்டையில ஏறல… நீ ப்ரேவ் ஆ,..? “

” பின்ன இல்லையா… சரி சொல்லு, படிக்கிற பாடத்தை மனப்பாடம் பண்ண சொல்லுறாங்க. ஆனா, ஏன் மண்டையில ஏறலையான்னு கேட்கிறாங்க…? இப்ப நாங்க மண்டையில ஏத்தனுமா ? மனப்பாடம் பண்ணணுமா ? ” என்றதும்..

” உன்னை சொன்ன நான் தான்டா, மரமண்டை அதுனால என்னை விட்டுடு… ” என்றவர் எழுந்து செல்ல ” இன்னைக்கு நைட் எனக்கிட்ட தான் நீ தூங்கணும் விடமாட்டேன்  ” என்று தன்னறைக்கு சென்றான்.

இங்கோ ஆர்.ஜே கையின் கட்டை பிரிக்க, மீண்டும் அதே மருத்துவமணைக்கு செல்ல, அவனை கண்ட, அவள், ‘ ஐயோ இவனா ! ” என்று ஓடி போய் ஒளிந்துகொண்டாள். அவள் அவனை    பார்த்ததையும் பார்த்தவன் அமைதியாக கட்டை பிரிக்கச்சென்றான்.

குறும்பு தொடரும்….நாளைந்து ஐந்து மாடிக்கொண்ட அப்பெரிய  கட்டிடத்தின் முன் ரகுவும், சித்துவும் நின்றிருந்தனர்…  உள்ளே நுழைந்த இருவரும் லிப்ட்டிற்குள் நுழைந்து மூன்றாம் தளத்தின் பொத்தானை அழுத்தினார்

மூன்றாம் தளத்தில் வந்து நிற்க.. இருவரும் அந்த தளத்தில் உள்ள ஆர்.ஜே டான்ஸ் ஸ்கூல் என்று பெரியதாய் எழுதப்பட்டிருந்தற்குள்ளே நுழைந்தனர்….

உள்ளே பல குழந்தைகள் நடனமாடிக்கொண்டிருக்க.. தன்னிலை மறந்து அவர்களையே பார்த்து நின்றான் சித்…

” எஸ் யார் வேணும் உங்களுக்கு ? ” என்று அங்கிருக்கும் டான்ஸ் மாஸ்டர் விஷ்வா… வந்தான்

” நான் ரகு.. இது என் பேரன் சித்தார்த்.. எங்களை  ஆர்.ஜே சார் வரச்சொன்னார் அதற்காக தான் இங்க வந்தோம்… ” என்றதும் இருவரையும் பார்த்தவன், அவர்களை அமரச்சொல்லிவிட்டு உள்ளே சென்றான்… சித் ரகுவிடம் அமர்ந்திடாமல் அவர்கள் ஆடுவதை பார்த்தவாறே நின்றிருந்தான்…. ரகுதான் ப்ரின்சிபேசினதை நினைத்துகொண்டிருந்தார்.

” இங்க பாருங்க ரகு சார்.. எங்களுக்கு லாபமும்… பள்ளிக்கு பெயர் கிடைப்பதை பற்றி தான் நாங்க யோசிப்போம்… சித்துவால, எங்களுக்கு கண்டிப்ப  லாபம் கிடைக்கும் நிறைய மாணவர்கள் எங்க பள்ளிக்கு வருவாங்க… ”

” நாங்க உங்களை நம்பி அனுப்பிறதே நல்ல கல்வி பிள்ளைகளுக்கு கொடுப்பீங்கன்னு தான் ஆனா நீங்க அவங்களை ஒரு லாபமா பார்க்கிறீங்க… ”

” சார்.. உங்களால நல்ல கல்வி நாங்க கொடுக்கலைன்னு சொல்ல முடியுமா ? முடியாது.. இந்த சுட்டு வட்டாரத்திலே எங்க பள்ளி தான் ஸ்டேன்டர் இருக்குன்னு எல்லாரும் பேசுறாங்க.. அது எங்களுடைய உழைப்பு அதுக்கு தகுந்த மாதிரி நாங்க லாபத்தை  எதிர்பார்க்கிறதுல எங்களுக்கு தப்பா தெரியலை சார்… முடிவே கேட்கிறோம் சித் எங்க பள்ளிக்காக ஆடுவானா ? மாட்டானா ?… அவன் ஆடினால் இங்க இருக்கட்டும் இல்லை டி.சி வாங்கிட்டு போயிட்டே இருங்க… ஒரு மாணவனை இழக்கிறதுனால என் பள்ளி  தரம் குறைந்து போகிடாது… எங்க பள்ளிக்கு என்ன லாபமோ அத பத்தி தான் நாங்க யோசிப்பேன்..

உங்களுக்கு இரண்டு நாள் டைம் யாரை நீங்க கன்வீன்ஸ் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது….  ஆனா சித் டான்ஸ் ஆட ஒத்துக்கிட்டா அவனுக்கு தேவையானதை பள்ளி செய்யும்.. இல்லைன்னா வேற பள்ளியில் சேர்த்துகோங்க…. ” என்றார்.

இதற்குமேல் அவரிடம் என்ன வாதாட, கல்வி என்றைக்கு விலைக்கு போனதோ,அன்றே நியாயங்கள் செத்து போனபின், இப்படியும் சிலர் பள்ளிக்காக உழைக்க, மற்றவர்களின் விறுவெறுப்புகளை மதிக்காது இருக்கத்தான் செய்கின்றனர்.

” சார் சார்.. ” என கலைத்தான் விஷ்வா” சொல்லுப்பா… ” என்றார்.

” சார்.. வந்திட்டு இருக்கார் நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… உங்களுக்கு காபி வேணுமா டீ வேணுமா சார்… ?”

” இல்லப்பா எதுவும் வேணாம்… ” என்றார்.
” இருங்க சார்… ” என்றவர் கையில் கூல்டீரிங்க்ஸை கொடுத்தான். வாங்கியவர் தன் பேரனிடம் கொடுக்க அழைத்தார், ஆனால் அவனின் கவனமோ அங்கே ஆடும் குழந்தைகளிடமே இருந்தது… அவர் அழைக்க சிறு அசைவு கூட இல்லை.

‘ என்னத்தான் மனத்திற்கு பிடித்த ஒன்றை வேண்டாம் என்றாலும், மனம் அதை வேண்டி நிற்க தான் செய்யும் அதற்கு கடிவாளமிட, பெரியவர்களாலே முடியாது என்னுபட்சத்தில் அச்சிறுவன் என்ன தான் செய்வான்.. அவனை பார்த்தவாறே அமர்ந்தவர், மீண்டும் யோசனை முன்னே நடந்தவைகளில் நின்றது.,

இனி பேசி ப்ரியோஜனம் இல்லை என்று வெளியே வந்தார்.. அவர்களுக்காக காத்திருந்தனர் சித்தும் , க்ரேஸியும்

” அப்பா… என்னப்பா சொன்னாங்க ? நீங்க பேசி புரியவைச்சுட்டீங்களா ? ”

” இல்லம்மா அவர்தான் எனக்கு நிறைய புரியவைத்தார்  ” என்று நடந்தை கூற.. இதில் பாதிக்க படுவதோ சித் மட்டுமே… ஒன்று டான்ஸ் வேண்டாம் என்றால் பள்ளி மாற்றம் படும்… அதனால் இழப்பு சித்திற்குதான்.., அப்படியே ஆட சம்மதித்தால் ஜானு வை மீறியது போல ஆகும்… பெரியவர்களே முடிவெடுக்க திணறும் போது சிறுவன் என்ன செய்வான்?

” அப்பா….இப்போ என்ன பண்றது ? ”

” தெரியலைமா…. இப்ப ஜானுக்காக யோசிக்கிறதா?இல்லை சித்துக்காக யோசிக்கிறதா…? ஜானுக்காக யோசித்தால், சித்துக்கு பள்ளி மாற்றிதான் ஆகனும், உன்னை போல அவனை புருஞ்சுகிற டீச்சர் கிடைக்கமாட்டாங்க, இதுனால சித் டான்ஸ் இழந்து உன்னையும் இழந்து ரொம்ப கஷ்டபடுவான்.. அவனை யாருமே புருஞ்சக்க மாட்டாங்க…?

சரி, ஆட ஒத்துகிட்ட. ஜானுவ சமாளிக்கிறது கஷ்டம்.. என்னம்மா முடிவு எடுக்க..? ” என நொந்து போனார் ரகு.

” அப்பா… எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலைப்பா…. ஆனால் சித்துக்கு இரண்டுமே கிடைக்கனும், அவன் இங்க இருக்கன்னும், டான்ஸ் ஆடனும். ஜானுவும் ஒத்துக்கனும். நாம யோசிப்போம்ப்பா.. தீர்வு இல்லாத ப்ரச்சனையே இல்லை… ” என்றவள், ஆர்.ஜே கூறியது ஞாபகம் வர, ” அப்பா…, என் லவ்வர் பீட்டர், ஆர்.ஜே சார்கிட்ட தான் பி. ஏ வா இருக்கான். அன்று சர்சில் நடந்தை கூறினாள்.. நீங்க வேணா போய் பார்த்து பேசுங்களேன்பா கண்டிப்ப எதாவது வழிகிடைக்கும் என்று க்ரேஸி சொன்னதுக்கு ஏற்ப இங்க வந்திருந்தனர் .

” ஹாய்… ஐ யம் சஞ்சய் யூ… ” என்று ஒரு சிறுவன் நட்புகரம் நீட்ட, ” ஐ யம் சித்தார்த்.. ” என்றவன் கைகொடுத்தான்.

” நீ இங்க ஜாயின் பண்ண வந்திருக்கியா ? ” என ஆர்வமாக கேட்க, அவன் இல்லை என இடத்து வலதுபுறமாக ஆட்டினான்.

” எஸ், சஞ்சய், இனி சித்து நம்ம டான்ஸ்  ஸ்கூல் ஜாயின் பண்ண போறான்., ” என குரல் வந்த திசையை நோக்கி இருவரும் திரும்ப.. அங்கே ஆர்.ஜேவும் பீட்டரும் நின்றிருந்தனர்.

தன் தாத்தா கையை பற்றியவாறே.. ஆர்.ஜேவை விழிவிரித்து பார்த்தான். முதல் முறையாக பார்த்தவன், அதன் பின் அவனது புகைப்படங்கள் கிடைத்தால் எடுத்து வைத்து கொள்வது… சிவாளி கம்யூட்டரில் ஆர்.ஜே புகைப்படங்களை பார்த்து அதில் சிலதை ப்ரிண்டவுட் எடுத்து இன்னும் அந்த பெட்டில் வைத்து கொள்வதென இருந்தான்.. அவனை போல ஆடிபார்ப்பது அதுவும் சிவாளி வீட்டில் தான்.. அவன் யாரென அறிந்திடும் முன்பே அவன் மேல ஒருவித பாசம் வந்தது

தனது இருகைகளை நீட்டி  ” சித்.. ”  என்று அழைக்க… அந்த அழைப்பு ஏனோ அவனுக்கு இதுவரை தன் தந்தையென ஒருவர் இவ்வாறு  அழைத்திட மாட்டாரா என ஏங்கியவனுக்கு அந்த அழைப்பு பாசத்திற்கான அன்பிற்கான அழைப்பாக தெரிய ஓடியவன் அவன் கைகளில் தஞ்சமானான்., அவளை அப்படியே தூக்கியவன் இருகன்னத்திலும் இதழ் பதித்து… ” எப்படி இருக்கீங்க சித்… என்னை யாருன்னு தெரியுதா ? ”

இன்னும் அவனுக்கு மலைப்பாக இருக்க. அவன் கைகளில் தானிருக்கோமா ? என்ற ஆச்சரியம் இன்னும் அவனை நம்ப முடியாமல் இருக்கவைத்தது.

” நீங்கன்னா அவன் உயிர்.., உங்க டான்ஸையும், உங்க போட்டோவை பார்த்து, இப்ப உங்களை பார்த்ததும் ஸ்டக் ஆகி நிக்கிறான் தம்பி… நீங்க சைன் போட்ட ட்ரஸ்ஸைகூட இன்னும் துவைக்காம பத்திரமா வைச்சிருக்கான்… ”

” நிஜமாவா,.., நானும் அதை பத்திரமா தான் வச்சிருக்கேன்.. ஏன் சித்து உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா ? ” என அவன் வாயால் கேட்க ஆர்வம் கொள்ள, ” ஆமா… ஆர்.ஜே அங்கிள் யூ ஆர் மை இன்ஷ்பிரேன்.. ” என்றதும் இன்ஷ்பிரேசனில் ஆனந்தம் கொண்டவன், அங்கிள் முற்றிலும் வடிந்தது. ரகுவை அமரச்சொல்லிவிட்டு அவர் பக்கத்தில் தன் மடியில் சித்தை வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

‘அங்கிள்ன்னா மாமாதானே,அப்ப நான் ஜானுக்கு அண்ணன் முறையில வேணும்… நோ.. நோ.. இதை ஆரம்பித்திலே கட் பண்ணுமே.. இல்லை பின்னாடி நம்ம சித்து அப்பான்னு சொல்ல கஷ்டபடுவான்… ‘ என்றவன் நினைக்க ‘ ஆர்.ஜே சார் உங்களை இன்னும்  ஜானு ஏத்துக்கவில்லை… இது அப்பாவா அழைக்க கஷ்டபடுவாராம்ல ஓவர்ய்யா இதெல்லாம் ‘

‘ இருந்துட்டு போட்டும் நீ… க்ளோஸ் பண்ணிட்டு போ… ‘ என அதனை அடக்கியவன், ” சித்… என்னை ஆர்.ஜேன்னே கூப்பிடு ஏன்னா நானும் நீயும் ஃப்ரண்ட்ஸ் ஓ.கேவா… ”

தன் தாத்தாவை பார்க்க அவரும் சரியென்று சொல்ல.. ” ஓ.கே ஆர்.ஜே…” என்றான். அதற்கு ஒரு முத்தம் வைத்தவன்.. ” சார் பெரிய தியாகியாமே கேள்வி பட்டேன்…” என்றதும் ரகு தலைகுனிந்தவர்,” என்னப்பா பண்ண இவனுக்கு இருக்கிறது ஜானவும் நானும் தான்.. டான்ஸே வேணான்னு அடம்பிடிக்கிறவ  கிட்ட நாங்க என்ன பேச…? அவளும் அதிலே மாறாம இருக்கிறா…”

” அங்கிள் கேட்கிறேன் தப்பா நினைக்காதீங்க.. ஜானு… “என்றவன் நிறுத்திடாமல் மேடம் சேர்த்து “ஜானுமேடமுக்கு என்ன தான் பிரச்சனை இவன் டான்ஸ் ஆடுறதில்…”

” அது வந்துப்பா,. ” என தயங்கியவர் அனைத்தையும் கூறிமுடித்தார்.

” இறந்த போனவங்களையே நினைச்சுட்டு தன் மகனோட ஆசை மறுக்கிறது ரொம்ப தப்பு அங்கிள்.. இந்த சின்ன பையன் கனவு , ஆசை வைச்சிருக்க கூடாதா…? என்னைக்கோ நடந்தை இன்னும் நினைவில் வைத்து அதுபோல ஆயிடுமோன்னு பயந்தா சரி வருமா? இந்த சின்ன வயசில தன் கனவு , ஆசை இழக்கணும் தலையெழுத்தா…. அதெல்லாம் வேணாம் .. நீங்க நான் சொல்லுறதை கேளுங்க சித் கண்டிப்பா டான்ஸ் ஆடுவான், இந்த காம்படிசனில் கலந்துப்பான்”உறுதியாக சொன்னான்.

” வேணாம் ஆர்.ஜே, ஜானு பாவம். அவளை  ஹர்ட் பண்ண வேணாம். நான் டான்ஸ் ஆடவில்லை… ”

” உனக்கு ஜானுவா ரொம்ப பிடிக்குமா சித்…? ”

” ஜானு மை சோல்.,.. ஆர்.ஜே, ஜானுக்காக என்னவேணா செய்வேன்..” என்றான்.. ” நீயுமாடா?” என்று நினைத்துக்கொண்டவன்., ” அப்ப நீ தானே ஜானுவ இந்த பயத்தில இருந்து வெளிய கொண்டு வரனும்., ”
இருவரும் புரியாமல் பார்க்க,

” ஜானு மேடத்தோட, பயத்தை ஏன் அதே டான்ஸ் வைத்த போக்கிட கூடாது…. தன் தோழியை இழந்திருக்காங்க, தன் மகனை இழக்க கூடாதுன்னு பயப்பிடுறாங்கன்னு அப்படியே விட்டால் இதே பயத்தை காட்டியே எதையும் பண்ணவே விடமாட்டாங்க.. முதல்ல  அவங்களை நாம பயத்தில இருந்து வெளிய கொண்டு வரனும்.. அதற்கு நீ டான்ஸ் ஆடனும்… நீ டான்ஸ் ஆடுறதுனால, உன் ஜானுவோட பயம் போகும்.. வேற ஸ்கூலுக்கு போகமாட்ட, க்ரேஸி மிஸ் கூடவும் இருக்கலாம் ”  என்றான்.

அவன் ரகுவை பார்க்க, ரகுவிற்கோ அவன் சொல்வது சரியென்று பட்டது, ஜானுவை மாத்திட இதுவே சரியான வழி என எண்ணியவர்… ” தம்பி… நீங்க    சொல்லுறது சரிதான்… சித் டான்ஸ் ஆடனும், எனக்கு என் ஜானுவும் மாறனும்.., நீங்க சொல்லுங்க தம்பி அப்படியே செய்றேன்… ” என்றார்.

” சித்… உனக்கு ஓ.கேவா,.. ” என்றான்.

” நான் டான்ஸ் ஆடுறது தெரிஞ்சு ஜானு என்மேல கோபப்பட்டு பேசாம போனா  என்ன பண்றது ஆர்.ஜே…? ஐ கேனாட் பேர் திஸ்… பயமா இருக்கு.. ” என்றவன் முகம் சோகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

” எத்தனை நாளைக்கு அப்படி இருப்பாங்க சித்.. இங்க பாரு, அவங்களை மாத்த, கண்டிப்பா கஷ்டபட்டுதான் ஆகணும்.. பயந்தா உன் அம்மாவை மாத்தவே முடியாது… நான் உன் கூட எப்பையும் இருப்பேன், உனக்காக நான் உன் அம்மாகிட்ட பேசுவேன்.. நான் விலகி நிற்க போறதில்லை சித்… உனக்கு ஒ.கே வா.. ”

சித் அவனது கண்களை கண்டவன், அதில் தெரிந்த நம்பிக்கை… அவனை ஒத்துக்க வைத்தது, தலையை அசைத்தான் ” குட் சித்… ” அவனது நெற்றியில் இதழ் பதித்து,

” உன் ஆசை எல்லாம் கண்டிப்பா நான் நிறைவேற்றுவேன் சித்… தினமும் நீ டான்ஸ் கிளாஸ்க்கு வா… ” என்றதும்

“என்னால எப்படி ஆர்.ஜே வர முடியும், ஜானு கிட்ட என்ன சொல்லி டான்ஸ் கிளாஸ்க்கு வர… அவகிட்ட நான் பொய் சொன்ன கண்டுபிடிச்சிடுவாளே… ”

‘ பொய் சொல்ல கூட தெரியாத நல்லவனா டா நீ..,
உன்னை என் பிள்ளைன்னு சொல்லிக்க சேம் சேம் இருக்கேடா.. ‘ என்றவன்.. ” இட்ஸ் ஒ.கே சித். நான் சொல்வதுபோல சொல்லு கண்டிப்பா ஜானு உன்னை ட்ரஸ்ட் பண்ணுவாங்க.. ஒ.கே.. இனி உன் கான்சன்டேரசன் டான்ஸ் இருக்கணும்… நெக்ஸ்ட் சடர்டே மறக்காம் ஆடிசனுக்கு வந்திடு… என்னால வர முடியாது.. உனக்கு ஹேல்ப்க்கு விஷ்வா வருவான் ” என்றவன் அவனிடம் தன் கையை நீட்ட அவனது கையில் அடித்தவன், அவனை தாவி அணைத்துகொண்டான் சித். கன்னத்தில் முத்தமொன்றையும் பதித்தான்… ஆர்.ஜே அவனை இறுக்க அணைத்துகொண்டான்.

” டர்ஸ் மீ சித், ஐ யம் ஆல்வேஸ் வித் யூ.. ” என கேசத்தை கலைக்க, ” தாங்கியூ ஆர்.ஜே.. ” என்றான்..

” ம்க்கூம்… இனி நீ தாங்கியூ சொல்லகூடாது… அதுக்கு பதில இப்ப கொடுத்தது போலவே ஒரு கிஸ் கொடுக்கனும் டீல்… ”

” டீல்..  ”  என தலைசாய்த்து தன் அழகிய சிரிப்பை உதிர்த்தான்.

இருவரையும் பார்க்க தந்தை மகன் போலவே தெரிந்தது ரகுவிற்கு, இது போல் ஒரு தந்தை சித்திற்கு கிடைத்திட கூடாதா… சித்தை அணைத்து அவனைக்கு துணையாக நட்பாய் பழகும் ஒரு தந்தையை தானே அவனும் ஏங்குகிறான்…. அவர்களை பார்க்க அப்படி தெரிய கண்கலங்கி போனார் ரகு.

” அங்கிள்.. நீங்க எதற்கும் கவலை படாதீங்க..இனி சித்துகூட நான் எப்பையும் இருப்பேன்.. உங்க பொண்ணையும் மாற்றி, சித்தோட ஆசையும் நிறைவேற்றலாம். நீங்க கவலைபடாம போங்க  ” என்றான்.

அவன் கை பற்றி  ”  உங்களுக்கு  எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியலை தம்பி… ?” என்று கண்கலங்க,

” என்ன அங்கிள் இதுக்கு போய் கண்கலங்கிட்டு.. ஜகதீஸ் என்னோட நல்ல  ஃப்ரண்ட் அங்கிள்.. அவனோட அப்பா நீங்க உங்களுக்கு பண்ணாமையா…! ரிலாக்ஸ் அங்கிள் வீட்டுக்கு போங்க.. சித் நீயும் தைரியமா எதையும் பேஸ் பண்ணு ஜானுவையும்,. ” என்றான்.

இருவரும் செல்ல, ஒருமுறை அவனை திரும்பி பார்த்துவிட்டு சென்றான் சித்.

‘ சித்தும், அங்கிளும் நமக்கு பிரச்சனை இல்லை… நமக்கு பிரச்சனை எல்லாம் அந்த மிளகாய் தான்., அவளை எப்படி சமாதானம் பண்ணி சித் டான்ஸ் ஒத்துக்கவைச்சு, என்னை கல்யாணம் பண்ணி ஒத்துக்க வைக்க.. இதெல்லாம் நடக்கிறதுக்குள்ளையும் நமக்கு வயசு ஐம்பதை தாண்டிடுமோ… இறைவா ! ப்ளீஸ் ஹேல்ப் மீ.. ‘ என்றான்

இருவரும் வீடு வர.. அங்கே அவள் தயாராகி கொண்டிருந்தாள் வேலைக்கு செல்ல.

” ஆமா, தாத்தாவும் பேரனும் எங்க போயிட்டு வரீங்க.. எவ்வளவு நேரம் ஆச்சு… ”

” இல்லம்மா.. க்ரேஸி பார்த்து பேசி அவ வீட்டுக்கு போயிட்டு வந்தோமா.. ” என்றதும் ரகுவை சித் பார்க்க கண்ணடித்தார்.

” எதுக்கு பா, அவங்க வீட்டுக்கு போனீங்க ? ”

” அதுவாமா… சித்திற்கு டூசன் சேர்ப்பதை பத்தியும், அவங்க வீடு தெரிஞ்சா கூட்டிட்டு போய்விட்டுட்டு கூட்டி வர வீட்டை தெரிஞ்சுக்க போனோம்மா… ”

” எதுக்குப்பா ட்யூசனேல்லாம் நானாதான் சொல்லித்தரேனே.. ”

” நீ சொல்லி தர தான்மா…  இந்த மரமண்டைக்கு தான் ஏதுவும் ஏறலையே… ” என்றவரை பார்த்து முறைத்தான் சித்.

‘ யோவ் கிழவா இதான் சாக்குன்னு என்ன மரமண்டைன்னு திட்டுறீயா ஜானு போகட்டும் அப்ப இருக்குயா உனக்கு.. ” என கறுவிக் கொண்டான்.

” அந்த பொண்ணு க்ரேஸி கிட்டையும் படிக்கட்டும், நீயும் சொல்லிக்கொடுமா.. அப்படியாவது,ஒழுங்க படிக்கிறானான்னு பார்ப்போம்… டான்ஸ் தான் வேணாம், படிப்பிலையாவது நல்ல படியா வரட்டுமே.. அதுனால இரண்டு மணிநேரம் அங்கையும் இங்க ஒரு மணிநேரம் படிக்கட்டும்… என்ன நான் சொல்லுறது…?”

” சரிப்பா.. அவன் நல்ல படிச்சாவே போதும்ப்பா…  நீங்க பார்த்துகோங்க நான் வேலைக்கு போறேன்.  சித், யூனிபார்ம் மாத்திட்டு, ஒழுங்க உட்கார்ந்து படி நாளையிலிருந்து டூசன் போற உன் க்ரேஸி மிஸ் பெயரையும் என்பெயரையும் காப்பாத்து வரட்டுமா ? ” என அவன் நெற்றியில் முத்தமிட்டு சென்றாள்.

அவள் சென்றதும், கதவை தாழிட்டவர். ஷோபாவில் அமர்ந்தார் அவர் முன்னே முறைத்து நின்றான்.

” ரகு.. எப்படி நீ என்னை மரமண்டை சொல்லலாம்… நான் எவ்வளவு ப்ரேவ் தெரியுமா…? ”

” அப்புறம் ஏன்டா படிப்பு உன் மண்டையில ஏறல… நீ ப்ரேவ் ஆ,..? ”

” பின்ன இல்லையா… சரி சொல்லு, படிக்கிற பாடத்தை மனப்பாடம் பண்ண சொல்லுறாங்க. ஆனா, ஏன் மண்டையில ஏறலையான்னு கேட்கிறாங்க…? இப்ப நாங்க மண்டையில ஏத்தனுமா ? மனப்பாடம் பண்ணணுமா ? ” என்றதும்..

” உன்னை சொன்ன நான் தான்டா, மரமண்டை அதுனால என்னை விட்டுடு… ” என்றவர் எழுந்து செல்ல ” இன்னைக்கு நைட் எனக்கிட்ட தான் நீ தூங்கணும் விடமாட்டேன்  ” என்று தன்னறைக்கு சென்றான்.

இங்கோ ஆர்.ஜே கையின் கட்டை பிரிக்க, மீண்டும் அதே மருத்துவமணைக்கு செல்ல, அவனை கண்ட, அவள், ‘ ஐயோ இவனா ! ” என்று ஓடி போய் ஒளிந்துகொண்டாள். அவள் அவனை    பார்த்ததையும் பார்த்தவன் அமைதியாக கட்டை பிரிக்கச்சென்றான்.

குறும்பு தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!