என்னுயிர் குறும்பா

குறும்பா

தனது பிரம்மாண்டத்தை நிலைநாட்டினான், அந்த காலை வேளையில் கதிரவனவன்….

உள்ளே ஜானு, சமைத்துகொண்டிருக்க. ரகு, சித்துவை தயார் செய்துகொண்டிருந்தார்.. என்றும் திங்கள் அவனுக்கு கசந்திருக்க… இன்று இனிப்பை உண்டது போல முகமெங்கும் பூரிப்போடு மகிழ்ச்சியோடு கிளம்பினான்…

” என்ன சித்… மண்டே மார்னிங் நீ கிளம்பவே கஷ்டபடுவ, எங்களையும் கஷ்டபடுத்துவ இப்ப சந்தோசமா கிளம்புறீயா… வாட் ஹாப்பன் சித்… “

” ரகு… நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன், ஜானு என்னை காம்பெடிசனுக்கு ஆட ஒத்துக்கிட்டா, அது மட்டுமில்லை, எனக்கு அங்க எங்கரேஜ் பண்றேன் சொல்லிருக்கா… அப்புறம் இன்னைக்கு என் டான்ஸ் பத்தி ஸ்கூல் சொல்லுவாங்க,.. அப்புறம் ஈவினிங் க்ளாஸ்… ரொம்ப ஹாப்பியா இருக்கேன் ரகு.. ” என அவர் கன்னத்திலும் முத்தமிட்டான்..

” பார்ரா… நான் கேட்டா கூட சிலுப்பிட்டு போவ, இப்ப என்ன நீயா கொடுக்கிற, இதான் எக்ஸைட்மேன்டா சித்து கண்ணா, எப்பையும் இதே போல சந்தோசமா இருக்கன்னும்டா.. ” உச்சி முகர்ந்தவர் அவனை தூக்கி கொண்டு வெளியே வந்தார்..

” ஜானுமா, ரெடியா ? “

” ஆங்,.. ரெடிப்பா இதோ வரேன்… ” என்று சித்தினுடைய டிபன் பாக்ஸ், ஹாட்பாக்ஸ் என டைனிங் டேபிளில் அடுக்கிவைத்தாள்..

” சித்… வா சாப்பிட ” தட்டை வைத்து இரு தோசை அடுக்கினாள்..

” ஜானு, ஊட்டிவிடுறீயா ? ” என ஆசையாய் கேட்க, அவன் முன்னே அமர்ந்தவள், ஊட்டினாள்..

” என்னப்பா உங்க பேரன் ரொம்ப சந்தோசமா இருக்கான் போல… “

” ஆமா, நானும் கூட , அவன் ஆசை பட்டதும் கிடைச்சிருச்சு,நாங்க மறைத்து மருகிட்டே இருந்த விசயம் இப்ப, இல்லாம நிம்மதியா நாங்க இருக்கோம் மா… நீயும் ஒத்துகிட்டீயா அதான்.. ரொம்ப ஹாப்பியா இருக்கோம்.. இனி ஐயாவை கையில பிடிக்க முடியாது, என்ன பேராண்டி.. “

வாயில் தோசைவைத்து கொண்டு தலையாட்டிக்கொண்டான்… சாப்பிட்டு முடிக்க, தன் ஆடையால் அவன் வாயை துடைத்துவிட்டவள்.. கன்னத்தில் இதழ் பதிக்க அவனும் முத்தமிட்டான்…

” சித்.. ப்ராமிஸ்ஸை மறக்கக் கூடாது… டான்ஸ் முக்கியம் அதே போல படிப்பு முக்கியம்… “

” எஸ் ஜானு நான் மறக்க மாட்டேன்.. டான்ஸ் போலவே நல்ல படிச்சு மார்க்கும் எடுப்பேன்.., ப்ராமிஸ்.. ” என்றவனை மேலும் முத்தமிட்டாள்…

” லவ் யூ ஜானு, பாய்… ” என்றவன் ரகுவோடு செல்ல… வாஸ்ஸிங்மிசினில் துணியை போட்டு வீட்டை சுத்தம் செய்து அனைத்து வேலை முடித்து அமர்ந்தவள். நெற்று சித்துவுடன் இருந்த இரவை  யோசித்தாள்..

அந்த அழகிய இரவில் மிதமாக வீசிய காற்றோடு அவர்களது கவலைகள் மறந்து கண்ணீர் கரைந்து. தன் மகனை தன்னோடு அணைத்து.தனக்குள் பொதிந்து அமர்ந்திருந்தாள் ஜானு. “

” சாரி சித்,.. அம்மா உன்னை ரொம்பவே ஹெர்ட் பண்ணிடேன். உன்னை எல்லாரும் முன்னாடி அடிக்கவேற செய்துட்டேன்… ஐ யம் சாரி சித். அம்மாமேல கோபமா ! “

” நான் உன்கிட்ட மறைத்திருக்க கூடாது ஜானு. உன்கிட்ட சொல்லிருக்கனும், அந்த ப்ரின்சி தாத்தாகிட்ட, நான் கண்டிப்பா ஆடனும், இல்லைன்னா டீ.சி கொடுத்திடுவேன் சொல்லிட்டார்.. எனக்கு வேற ஸ்கூல் போக இஷ்டமில்லை, அப்புறம் உன்னை எதிர்த்து டான்ஸ் ஆடவும் முடியவில்லை.. ஆர்.ஜே தான் உன்னோட பயத்தை போக்க நீ டான்ஸ் ஆடு சித்,சொன்னார். அதான் நானும் உன்கிட்ட மறைத்து டான்ஸ் ஆடுனேன்… சாரி ஜானு.. ” என்றான்.

” போதும் இனி நம்ம இரண்டு பேரும் சாரி சொல்லிக்க வேணாம். இனி என் சித்தோட ஆசைக்கு ஜானு, தடையா இருக்க மாட்டா.. அவன் ஆசைய நிறைவேற்ற கூட இருப்பா.. “

” ஜானு… என் டான்ஸ் பார்ப்பீயா ? என்னைய எங்கரேஜ் பண்ணுவீயா ? “

” கண்டிப்பா சித்… உன் இஷ்டபடி நீ என்னா ஆகனும் ஆசைபடுறீயோ அதுக்கு இந்த ஜானு கூட,இருந்து சப்போர்ட் பண்ணுவா.. ஆனா நீ இந்த ஜானுக்காக படிக்கன்னும் படிப்பீயா ? “

” படிப்பேன் ஜானு, கண்டிப்பா நிறைய மார்க் எடுப்பேன்… ப்ராமிஸ். ” என்றான். ” நெற்றியில் இதழ் பதித்து அணைத்துகொள்ள, இருவரும் அமைதியாக இருந்தனர்..

” சித், இன்னொரு விசயம் உன்கிட்ட ஒன்னும் சொல்லனும் “

” சொல்லு ஜானு… “

சற்று தயங்கியவள்… ” ஆர்.ஜே உன் அப்பா இல்லை சித், நீ அவரை அப்பாவா நினைக்க வேண்டாம் உனக்கு எப்பையும் அம்மா, அப்பாவா நான் இருப்பேன்.. நீ உன் மனசுல
எதையும் நினைச்சுக்காத சித்… ” என்றாள், எங்கே தன் மகன் இதை தாங்கிட மாட்டானோ எண்ணி பயந்து தடுமாறி அவள் கூற, முகத்தில் அதிர்ச்சிக்கான எந்த தடயமின்றி அவனிருக்க,

” ஜானு… அன்னைக்கே ஆர்.ஜே எல்லாத்தையும் சொல்லிட்டார்… ” என்றதும் ஐயம் கொண்டவள். ” என்ன சொன்னார்.. “

அன்று…

அவனை அழைத்துக்கொண்டு காரில் வந்துகொண்டிருக்கும் போது, ஆர்.ஜேவின் மடியில் அமர்ந்திருந்தான்..

” சித்.. நான் சொன்னா கேட்பீயா ? “

” ம் ” என அவன் நெஞ்சில் சாய்ந்தவாறே கேட்க இருந்தான்.. ” நான் உன் அப்பா இல்லை சித்.. நீ அப்ப இருந்த நிலையில் என்னால இல்லை சொல்ல முடியவில்லை அதான் அப்பான்னு சொன்னேன்… ஆனால், உன்னை என்னோட பிள்ளையாக தான் பார்க்கிறேன் சித்.. உனக்காக நான் அனைத்தையும் செய்வேன்… எப்பையும் உன் கூட இருக்க முடியாது, ஆனால் உனக்கு ஒரு பிரச்சினை, நல்லது கெட்டதோ நானிருப்பேன், நீ ஜெயிக்க நான் உதவியா இருப்பேன்… நீ எதையும் போட்டு குழப்பிக்கொள்ளாத, ஜானுகூட பேசாம இருக்காத, உனக்கெல்லாம் அவங்க தான்.. அவங்க உனக்காக தான் வாழ்றாங்க.. இன்னைக்கு நடந்த விசயங்கள் அனைத்தையும் மறந்து எப்பையும் போல மை ஸ்மார்ட் சித்துவா இருக்கனும் ஓ,கே வா.. ” என்றாலும் தலையாட்டி வைத்தான், ஒரு ஏமாற்றம் இருக்க கண்கள் இருவருக்கும் கலங்கிதான் இருந்தது..

அத்தனையும் ஒப்புவிக்க, ஆர்.ஜேவை நினைக்கலானான்.. மகனை வைத்து தன்னை அடைய நினைத்து தன்னை கல்யாணம் செய்ய தூண்டிருக்கலாம்.. ஆனால் அவன் அவ்வாறின்றி உண்மை அவனிடம் நோகாமல் கூறியிருக்கிறான்.. முதல் முறையாக அவன் மேல் எண்ணம் மையல் கொண்டது…

” ஜானு ” என ரகு அழைக்க நினைவிற்கு வந்தாள்…

” அப்பா, வந்துடீங்களா வாங்க சாப்பிடலாம்.. “

” வாமா.. ” அழைத்தவரும் மாறி மாறி பரிமாறிக்கொண்டு சாப்பிட்டனர்.. அவள் முகத்தை அவர் ஆராய அவனோ அன்றைய நிகழ்வையே அசைபோட்டுகொண்டே இருந்தாள்..

” ஜானுமா… “

” அப்பா… “

“அப்பாகிட்ட எதையும் மறைக்க மாட்டன்னு, நினைச்சேன். ஆனா இவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்கு ஒன்னையும் சொல்லனும் உனக்கு தோணலையா ? “

” அப்பா… “

” ஆர்.ஜே வந்து உன்னை கல்யாணம் பண்ணிகிறேன் கேட்டுருக்கிறார். நீ மறுத்துருக்க… ஏன் மா இதை எங்கிட்ட மறைச்ச,.. “

” அப்பா… நான் சொல்ல கூடாதுன்னு இல்லை.. இத சொன்னா நீங்க நிச்சயமா அவர்கிட்ட பேசுவீங்க… அதான்பா சொல்லல. எனக்கு நீங்க சித் போதும்பா.. வேற யாரும் வேணா.. “

” நான் எதுவும் சொல்லல, உன் வாழ்க்கை உன் இஷ்டம் டா.. ஏற்கனவே எங்க இஷ்டத்துக்கு உன்னை இழுத்து அதுனால கிடைத்தெல்லாம் போதும்.. இனி உன் முடிவுக்கு கட்டு படுறேன்.. ஆனா ஒன்னு ஆர்.ஜே தம்பி நல்லவரா இருக்கார். நீ ஆசை பட்ட படியே சித்துக்கு ஒரு நல்ல தந்தையாக இருப்பார் மா… அதுக்காக எல்லாம் உன்னை நான் கன்வீன்ஸ் பண்ணமாட்டேன் மா. இப்பையும் உன் இஷ்டம் தான்.. ” என்று எழுந்து கொண்டார்..

இங்கே ஒரே கைத்தட்டல் தான், மேடையில் நின்ற சித்துவிற்கு ப்ர்ன்சிப்பால் பெருமையாக பேசி பாராட்டிட, அவனை மண்ணிலே இல்லை… பறந்துகொண்டிருந்தான்..

பின் பிரேயர் முடிய வகுப்பிற்கு வர.அங்கையும் க்ரேஸி மிஸ் சொல்லி தனியாக கைத்தட்டல் வாங்கினான்..

” சித்… ஐ யம் ரியலி ப்ரோவுட்,ஆப் யூ மை சைல்ட்… அருமையா ஆடுனாய்.. எல்லாம் கடவுளோட ப்ளஸ்னால தான் உன்அம்மா உன் டான்ஸ் அக்சப்ட், பண்ணிட்டாங்க.. நீ எந்த தயக்கமும் வேணாம் ஹாப்பீயா காம்பெடிசன்னில் கான்சன்டெரேட், பண்ணு அப்புறம் படிப்புலையும் தான் சித்.. “

” கண்டிப்பா மேம்..  நல்லா படிச்சு, ரேங்க் ஹோல்டர் வருவேன்.. ” என்றதும் ஸ்ரவன் எழுந்து சிரித்தவன்.. ” மேம்.. இவன் ரேங்க் ஹோல்டர் வருவானா.. ஹாஹா முதல் இவன் பாஸ் மார்க் வாங்கிறதே பெருச இதுல ரேங்க் ஹோல்டர் ஐயோ காமெடி பண்ணாத சித்..” என தலையில் அடித்துகொண்டு சிரித்தான்..

” ஸடாப் ஸரவன்… ஏன் சித்துனால முடியாதுங்கறீயா ? அவனால முடியும் வாங்கி காட்டுவான்.என்ன சித் ? “

” கண்டிப்ப க்ரேஸிமிஸ்.. என் ஜானுக்காக உங்களுக்காக கண்டிப்பா நான் ரேங்க் ஹோல்டர் வருவேன்.. இட்ஸ் ஸ்லேசன்ஜ் ஸ்ரவன்.”

” குட் சித்… போய் உன் ப்ளெஸ் உட்கார்.. ” என்றாள்.” ஸரவனுக்கோ பொறாமைஅனைவரும் அவனை பாராட்டியதில், அதிலும் அவன் ரேங்க் ஹோல்டரில் வருவேன் என்றதும் அவனை தாழ்த்தவே அவன் அவ்வாறு பேசினான்…

” பட்டீ.. நீ பேசினது உண்மையா ? ரேங்க் ஹோல்டர் வந்திடுவியா… “

” ஏன் பட்டீ நான் வர கூடாதா.. நான் வருவேன், நான் இனி ஒழுங்க படிக்க போறேன் பட்டீ.. நீயும் என்கூட படி, நாம நல்ல மார்க் எடுக்கனும்.. “

” எஸ் சித்… நானும் உங்களுக்கு ஹேல்ப் பண்றேன்.. நாம நல்ல படித்து ஸ்ரவனை ஜெயிக்கனும்… “

வைஷூ, “ஏன் சித் இப்படி ஒரு சேலன்ஜ் போட்ட… “

” ஏன் வைஷூ உனக்கு பிடிக்கலையா.. நான் ரேங்க் ஹோல்டர் வர மாட்டேனா “

” அப்படி இல்ல சித்.. நீ ரேங்க் ஹோல்டர் வந்தா.. அபி என்னை தான் திட்டுவா.. பர்ஸ்ட் சிவாளி வைத்து, நீயும் வந்தா உன்னை வைத்தும் படிக்க சொல்லி டார்சர்ல பண்ணுவா.. “

” யா.. வைஷூ… எங்க அம்மாவும்…. ” என இருவரும் ஹைபை போட்டுகொள்ள..

தலையில் அடித்துகொண்ட சிவாளி.. ” சித்… இவங்க இப்படி பீல் பண்றாங்கன்னு, உன் ஸ்லேன்ஜ் பின் வாங்காத… நீ ரேங்க் ஹோல்டர் வரனும்… ” என்றதும்..

” ஸ்யூர் சிவாளி… நாம நாலு பேரும் அடுத்து வர டெஸ்ட் படிச்சே ஆகனும்.. நோ மோர் காம்பரமைஸ் பட்டீஸ்.. ” என்றான்..

அதே போல் வந்த நாட்களெல்லாம் இனிமையாகவே சென்றது… டான்ஸ் ப்ராக்டீஸ் முடித்து சித்.. தனியாக அமர்ந்து எதையோ மும்மரமாக செய்துகொண்டிருந்தான்.

ஆர்.ஜே அவனை, நோக்கி வந்தவன்.. ” என்ன சித் பண்ற.. ” என அருகில் அமர, ” ஆர்.ஜே நாளைக்கு ஜானுவோட பிறந்தநாள் அதான் நான்.. அவளுக்கு நானே ஸ்பெசலா ப்ர்த்டே கார்ட் ரெடிபண்றேன் என்றவன்…

” அப்படியா… எங்க அந்த கார்ட்டை காட்டு ” வாங்கி பார்க்க ஆச்சரியமாக இருந்தது…

வண்ண அட்டையில், வேஸ்ட்டாக போட பட்டிருந்த பட்டன்கள், சேலையில் உதிர்ந்த ஜிமிக்கள், சில பஞ்சுகள், சில மாத்திரைகளுக்கு வாட்டர் கலர் மூலமாக வண்ணங்கள் இட்டி அதை அழகாய் வடிவமைத்து அதில் ஹாப்பி ப்ரேத்டே ஜானு எழுதாய் எழுதி சிறு சிறு அழகான பூக்கள் ஆங்காங்கே ஓட்டி தயார் செய்திருந்தான்.. “

” உனக்குள்ள இவ்வளவு திறமை இருக்கா சித்.. வாவ் ! எவ்வளவு அருமையா இருக்கு தெரியுமா ? ஜானு ரொம்ப கொடுத்து வச்சவ, உன்னை போல பிள்ளை கிடைக்க.. நான் விஷ் பண்னேன் சொல்லிரு சித்.. இந்தா ” அவனிடம் கொடுக்க..

” நாளைக்கு நாங்க ஈவினிங் கோயிலுக்கு போவோம் நீயும் வரீயா ஆர்.ஜே… நீ, நான்,ஜானு போலாம்… ” என்றதும் அவனுக்கு ஒருநிமிடம் கற்பனையாய் குடும்பமாக செல்வதாக தோன்றியது.. “

” நாளைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு.. நீ போயிட்டு வா சித்… அம்மாக்கூடா என்ஜாய் பண்ணு… ” என்றான்…

அன்று அவளை பார்த்தது தான். அதன் பின் அவள் பக்கம் அவன் செல்லவே இல்லை.. பிடிக்கலை என்ற பின் அவளை தொந்தரவு செய்வது தவறு
என ஒதுங்கிவிட்டாலும், மனதளவில் நொந்து தான் போயிருந்தான், அவளை மறக்க நினைக்கவில்லை, நினைக்க நினைக்க தன்னை மறைந்து கிடந்தான்.. தன்னை ஒருவர் பிடிக்கவில்லை என்றதும், மனதானது அதன் காரணத்தை கேட்டு பாடாய் படுத்துவது போலத்தான், இவனுக்கு.. அவனது சந்தோசங்கள் அவளால் முற்றிலும் போனது… உறங்கியே நாட்கள் ஆனது…

அழகாய் காலை மலர… ஜகதீஸ் வந்திருந்தான் தன் தங்கைக்கு வாழ்த்து சொல்லி விட்டு கிப்ட் கொடுத்து விட்டு சென்றான்…  தன் தந்தையின் காலில் விழுந்து வணக்கினாள்.. அவரும் அசிர்வதித்து அவளுக்காய் கேசரி செய்து ஊட்டிவிட்டார்…

தான் செய்த ப்ர்த்டே ஹார்ட்டை அவளுக்கு கொடுத்து ” ஹாப்பி ப்ர்த்டே ஜானு  ” என்றான் சந்தோசமாய் வாங்கி பார்த்தவளின் கண்கள் விரிந்திருந்தது….

” வாவ் ! சித், கூஸ்பம்பஸ் டா… லவ் யூ  சித்.. ” என தூக்கி கொஞ்சினாள்..

” ஜானு… ரகு கால் விழுந்த என் கால் விழுக மாட்டீயா நான் ப்ளஸ் பண்றேன்.. “

” ஓ… சித் உன்காலை விழுகிறேன்… ஆனா அதுக்கு அடுத்து நீ வளர மாட்டியே சித்து.. அப்புறம் உன்னால வெங்கி அங்கிள்  காலிங் பெல்லையும் அடிக்க முடியாது… “

” ஏன் ஏன் ஜானு..”

” பெரியவங்க சின்னவங்க கால் விழுக கூடாது சித்.. விழுந்த சின்னவங்க வளரவே மாட்டாங்க…, என்னப்பா… “

” ஆமாடா சித்… உண்மையா ஜானு உன் கால் விழுந்த இப்படியே நீ இருக்க வேண்டியது தான்.. ஜானு நீ கால் விழுகுமா… ” என்றார் சிரிக்காது சொன்னார்..

” இட்ஸ். ஓ.கே ஜானுமா.. என் ப்ளஸ் எப்பையும் உனக்கு இருக்கு கால் விழுகனும் இல்ல… நோ ப்ராபலம்.. “

” வாலு… ”  அவனை தூக்கி சுத்தினாள்…

வழக்கம் போலவே பள்ளிக்கு சென்றவன், க்ரேஸி மிஸ்க்கும், ப்ரண்டுஸூக்கும் கேசரி கொடுத்தான்..  மாலை இருவருமாக கோயிலுக்கு சென்றனர்.. ரகுவிற்கு தன் நண்பனை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்றார்..

இருவரும் கோயிலுக்கு வந்திருந்தனர்…

அவள் அர்ச்சனைக்காக பொருட்களை வாங்க…. சித் வேடிக்கை பார்த்தவன்… அவனை கண்டதும் ஓடிச்சென்றான்…

பொருட்களை வாங்கியவள்,சித்துவை அழைக்க அருகில் இல்லாததும் தேட ஆரம்பித்தாள்… யாரோ முதுகாட்டி ஒருவன் தூக்கி வைத்திருக்க,சித் என்று அழைத்து வர, திரும்ப அங்கே ஆர்.ஜே தான் நின்றிருந்தான்….

அவள் அழுகு ஆஸ் கலர் வித் ரோஸ் பாடரில் காட்டன் புடவை கட்டி..சிறு  முடி கீற்றை எடுத்து குத்தி மீதி கூந்தலை விரித்திருந்தாள்… மையிடாத கண்கள். நெற்றியில் சிறு பொட்டு கழுத்தில் சிறு செயினேன, ஒப்பனைகளின்றி அவனுக்கு அழகாய் காட்சியளித்தாள் வெகுநாட்களுக்கு பிறகு இதயம் நன்றாகவே துடித்தது.

” ஆர்.ஜே நான் கூப்பிடத்துக்கு வர மாட்டேன் வேலை இருக்குன்னு சொன்ன இப்ப ஏன் வந்த ? ” சித் கேள்வி கேட்க தயங்கி அவளை பார்த்தான்.. மீண்டும் அவர்களது பார்வை நேர்கோட்டில் நின்றது..

குறும்பு தொடரும்…தனது பிரம்மாண்டத்தை நிலைநாட்டினான், அந்த காலை வேளையில் கதிரவனவன்….

குறும்பு தொடரும்…