என்னுயிர் குறும்பா

குறும்பா 27

அந்த மாபெரும் ஜர்ஜ்ஜில் அனைவரும் சூழ   அங்கே ஃபாதர் முன் வினோத்தும் க்ர்ஸ்டியும் மணமக்களாக இருந்தனர்… இருவரும் பாதரியாரின் சொற்படியே சொல்லிக்கொண்டிருக்க.  கொஞ்சம் தள்ளிநின்ற க்ரேஸிக்கும் க்ரேஸியின் தாய்க்கும் ஆனந்த கண்ணீர் சுரந்து கொண்டிருந்தது.

தன் தமக்கைக்கு வெகுநாட்களாய்  தள்ளிசென்ற கல்யாணம் யோகம் இன்று கூட, இருவருக்கும் மகிழ்ச்சியே, ஆனந்த கண்ணீரை வடித்தனர்.

தன் சொந்தங்களில் பார்த்த  மாப்பிள்ளை ஏதோ காரணத்தில் தட்டி செல்ல. அந்த கடவுளின் பெரும் ஆசியாய் வினோத் கிடைத்தான்.

யாருமற்ற வினோத்தை வளர்த்து படிக்க வைத்தது பாதிரியார் தான்…. அவர் மூலம் வரன் கிட்ட மனத்தோடே ஏற்றுகொண்டனர்  க்ரேஸியின் குடும்பம்… இருவருக்கும் கல்யாணம் இனிதாய் முடிய அருகே இருந்த சிறு மண்டபத்தில் கல்யாண விருந்து போடப்பட்டிருந்தது.

பீட்டரே அனைத்து வேலைகளையும் முன்னின்று பார்த்துக்கொண்டிருந்தான். க்ரேஸியின் அழைப்பிற்கு இணங்க அங்கே ஆர்.ஜேவும் ஜானு,ரகு சித்தோடவும் வந்திருந்தனர்.

மண்டபமே கொஞ்ச சொந்த பந்தங்களே இருந்தனர்… ஆண்கள் பக்க இருக்கையில் ஆர்.ஜேவும் ரகுவும் ஏன் சித்துகூட, ஆர்.ஜேவின் மடியில் அமர்ந்திருந்தான்.

இருவரையும் பார்க்க பார்க்க அவளுக்கு மூச்சு முட்டியது, சித்து எதையோ கேட்க அதுக்கு ஆர்.ஜே எதையோ சொல்லிக்கொண்டிருக்க, உரிமையாய் அவனது போனை   எடுத்து பார்க்க, அவனேதோ சொல்லி கிண்டல் செய்ய, இவனும் சிரித்துகொண்டு பதிலளிக்க, தன் அன்னையோடு வந்ததை மறந்தான் சித்..

இருவரையும் பார்த்தவாறே அவள் இருக்க , ஆர்.ஜே பார்வை அவளை தழுவும் போது குனிந்து கொள்வாள்.

அவனது பார்வையில் இன்னும் அந்த முடிவை கேட்டு கேள்வியாய் இருக்க, பதில் சொல்ல திறனின்றி போனாள் ஜானு.

அவன் கூறிவிட்டு சென்றதும், அவளால் இயல்பாகவே இருக்க முடியவில்லை, அங்கிருந்து தன்னை சமன் செய்து வருவதற்குள்ளே போதும் என்றானது, சித்து ஆர்.ஜேவை பார்த்த சந்தோசத்தில் வர,இவளோ பெரும் குழப்பத்தில் சிக்கி தவித்த சிறு பறவையாய் மனதோடு வாதாடி தோற்று நொந்து போய் வீடு திரும்பினாள்.

ரகு இருவரையும்
வரவேற்றார்,…. ” என் பேரா ! உன் மாஸ்டர் என்ன சொன்னார், என் வரலையாமா ? “

” ரகு அவருக்கு வேலையிருந்ததுனால வரமுடியலையாம் அடுத்த லெவல் காம்பெடிசனுக்கு வருவராம்… ஒ.கே ரகு நான் சிவாளிக்கூட சைக்கிலிங் போறேன்… ” என்று வெளியே ஓடிவிட்டான்.

” என்னாச்சு ஜானுமா ஏன் இப்படி சோகமா வந்திருக்க? ஆர்.ஜே தம்பி என்ன சொன்னார்… மறுபடியும் உங்களுக்குள்ள எதுவும் பிரச்சினையா  ? சொல்லுமா ஏன்மா இப்படி இருக்க…?” என்றதும் அப்பா என்று கட்டிக்கொண்டு அழுதாள்.

அவளது தலையை வருடியவர், முதலில் கொஞ்சநேரம் அழவே விட்டார்… ” ஜானுமா, என்ன நடந்தது சொல்லு, உன் அழுகைக்கு என்ன காரணம். அழுதது போதும்டா அப்பாகிட்ட சொல்லேன்.. “

” அப்பா… ஆர்.ஜே இன்னைக்கு  ” என்று அனைத்தையும் கூறி அழுதாள்..

” இதுக்கு ஏன்மா அழுகிற, அவரோட ஆசை சொல்லிட்டார்  இதுக்கும் மேல ஏன் தயங்கிற ஜானுமா, நீ கேட்டது சித்துக்கு ஒரு நல்ல தகப்பன், அது ஏன் ஆர்.ஜேவா இருக்க கூடாது… ?”

” என்னப்பா நீங்களும் சுயநலமாவே யோசிக்கிறீங்க, இதுல ஆர்.ஜேவோட லைப் இருக்கு அதை நினைக்க மாட்டிங்களா, சித்துக்கு அப்பாவா இருந்துட்டா போதுமா, அவருக்குன்னு சந்தோசம், சுக துக்கம் இருக்காதா, என்னப்பா நீங்களும்.. “

” ஏன்மா, அவரோட சுக துக்கத்தை நீ ஏன் பகிர்ந்திட கூடாது.., எதுக்கு இந்த காண்டாராட் மேரேஜ். ஒருத்தருக்கொருத்தர் மனமொத்து பண்ணிகிறது தான்மா கல்யாணம், இதென்னமா காண்டார்ட் மேரேஜ், நீதான்மா யோசிக்கனும், ஏன் அந்த வாழ்க்கையிலிருந்து வெளிவர மாட்டிக்கிற, ஈஷ்வரை போல ஆர்.ஜே சுயநலவாதி இல்ல, சித்துக்காக காண்டார்ட் மேரேஜ் பண்ணா நினைக்கும் போதும் நீ ஏன் சித்துக்காக யோசிக்க கூடாது…  முதல்ல சித்துகாக சேருங்க அப்புறம் நீங்களே உங்களுக்காக மாறுவீங்க ஜானு… “

” அப்பா  என்னால முடியலைப்பா, இன்னொரு வாழ்க்கை என் மனசு ஏத்துக்கும் தோணலைப்பா, பயமா இருக்கு… “

” எதுக்கு பயம்? இதோ சித் டான்ஸ்ஆட வேணாம் சொன்ன, இப்ப அந்த பயம் போய் அவன் ஆடுறதை ரசிக்கலையா அதுபோல தான்டா, வாழ்க்கையும் பயமிருக்க தான் செய்யும் கடந்துவாடா.. உனக்காக இன்னொரு வாய்ப்பு வந்திருக்க. உங்களுக்குள்ள மனசுவிட்டு பேசுங்க டா சரியாகிடும், இப்பையும்  அப்பா போர்ஸ் பண்ணல நீ யோசிச்சு சொல்லு டைம் எடுத்துகோ ஆனால் காலம் போனதுக்கு அப்புறம் யோசிக்கிறது வேஸ்ட் டா.. யோசி  ” என்று சென்றுவிட்டார்.

நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காதது போல அதன் பயணத்தை தொடர்ந்துகொண்டே இருக்க, இந்த விசயம் ஜகதீஸ் காதில் எட்டியது. அவன் ஆர்.ஜேவை பார்த்து பேச  சென்றான்..

” ஹேய் ஹாய் மச்சான் எப்படி இருக்க பார்த்து ரொம்ப நாளாகுது.. ” என்றான் ஆர்.ஜே.

” சார் தான் ரொம்ப பிசி. உங்கள பார்க்க அப்பாய்மென்ட் வாங்க வேண்டியதா இருக்கு… “

” டேய் என்ன சார் மோருன்னு, நமக்குள்ள என்னடா ஜகா… என் ப்ரண்ட்ஸ் ஆன்ட் பேமிலிக்கு நான் எப்பையும் ஆர்.ஜேதான் அப்பாய்மென்ட் போட்டு பார்க்கனும் இல்லடா..”

” சார் தான் என்னை ப்ரண்ட் லிஸ்ட் இருந்து தூக்கிட்டீங்களே… “

” டேய், ஏன்டா இப்படி பேசுற, நான்
உன்னை எப்போ லிஸ்ட் இருந்து எடுத்தேன். லூசுதனமா பேசாதடா.. “

” அப்ப ஏன்டா ஜானு விசயத்தை என்கிட்ட இருந்து மறச்ச,  நண்பனா நினைச்சா சொல்லிருப்பேல போடா.. “

” டேய் கொஞ்சம் பயம் தான்டா, எங்க ஏன்டா என் தங்கச்சி லவ் பண்றேன்னு சண்ட போட்டா அதான்  சத்தியம் எனக்கு தெரியாது மச்சான் அவ உன் தங்கச்சின்னு, நான் காதலிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும் சாரிடா.. “

” டேய் எனக்கு சந்தோசம் தான்டா.நீ எங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா கிடைக்க, ஆனா ஜானு, சித் பாஸ்ட் லைப் சொல்ல தான்டா வந்தேன். அவளை ஏத்துகிறேன் சொன்னாலும் அவ பாஸ்ட்டை தெரிஞ்சகனுமே…”

” டேய் எனக்கு அவ பாஸ்ட் பிரச்சனை இல்லடா. அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா, போதும் அப்படியே அவ பாஸ்ட் தெரிஞ்சகனும்ன்னாலும் அவளே சொல்லுட்டும், அவளை எப்படியாவாது சம்மதிக்க வைங்கடா. அந்த மிளகாய் ரொம்ப பண்றாடா…”

” மிளகாவா ? “

” ஆமா, உன் தங்கச்சி தான் எப்ப பாரு ஹாட் வே கத்திட்டே ஏறிஞ்சு ஏறிஞ்சு விழுகிற அதான் அப்படி வைச்சேன்…  உன் தங்கச்சி கட்டிட்டு என்ன பாடு பட போறேனோ தெரியல மச்சான்.. “

” வெல்கம் டூ அவர் சங்கம் மச்சான், எத்தனை நாளைக்கு தான் நீயும் சிங்கிள்ன்னு டிமிக்கி கொடுப்ப, என் தங்கச்சி கட்டிட்டு சீக்கிரமா வந்து சேரு… “

” அடபாவி இதுக்காகவே உன் தங்கச்சிய கட்டிவைப்ப போல… “

” அஃப்கோர்ஸ் மச்சான், நம்ம கேங்குல, உன்னை மட்டும் நிம்மதி இருக்க விட்டுவோமா.. “

” நல்லவன் டா நீ.. உங்க குடும்பமே இப்படிதானாடா… “

” ஹாஹா… என்ன பண்றது, சரி மச்சான் வொர்க் இருக்கு இன்னொரு நாள் பேசலாம்,.” ஜகதீஸ் அவனிடம் விடைபெற.. ‘ உன்னை தவிற எல்லாரும் சம்மதம் சொல்லியாச்சு, நீ மட்டும் ஏன்டி  இப்படி இருக்க…?’ என புலம்பிக்கொண்டான்… அந்த நாளும் வர போகிறதென்று அறியாமல்…

க்ரேஸி அழைக்க நினைவுக்கு வந்தாள்,  ” வாங்க ஜானு போட்டோ எடுக்கலாம்…  ” என்று மேடையில் அழைத்து சென்றாள்.. மணப்பெண் பக்கத்தில் க்ரேஸி பீட்டர் நிற்க,பீட்டரோடு இணைந்தார் ரகு..
மணமகன் பக்கத்தில் சித்தை தூக்கி வைத்து நின்றான், ஜானு தந்தை அருகே நிற்க, போட்டோகிராபரோ இந்த பக்கம் வந்து நிற்க சொல்ல, தயங்கிகொண்டே ஆர்.ஜேவின் பக்கத்தில் நின்றாள்.

வீடியோ மட்டும் போட்டோ எடுக்க, அவளுக்கு மூச்சு முட்டியது… நிற்க கஷ்டபட்டுக்கொண்டிருந்தாள், அவனுக்கு அவளது அவஸ்தைகள் புரியாமல் இல்லை, அவளுக்காக தள்ளி நிற்க, சேர்ந்து நிற்குமாறு அவர் சொல்ல வேறு வழியின்றி நின்றாள். அழகான புகைப்படமாய் அமைந்தது, பின் சாப்பிட்டு சித்தை அழைத்து வீடுவந்தாள்.

நாட்கள் செல்ல செல்ல, நிம்மதியாக பறிக்க விதி விளையாட ஆரம்பித்தது..
மீடியாவின் கையில் சிக்கியது, ஆர்.ஜே மற்றும் ஜானு சண்டையிட்ட நிகழுவு.. எப்படி கசிந்தது என்றே தெரியவில்லை, சிறு தீப்பொறி பட்டு காடெங்கும் பரவும் காட்டுதீயை போல, அவர்களது உறவுப்பற்றிய செய்திகள் பரவ ஆரம்பித்தது..

அன்று ஜெர்ஷியிடம் தப்பிக்க, சொன்ன பொய்யை இன்று உண்மையாக மாற்றினர் மீடியாக்காரர்கள்… ஜானுதான் ஆர்.ஜேவின் மனைவி என்றும். சித்தார்த் மகனென்று சித்தரிக்கபட்டனர், நீயூஸ், பேப்பர் என்று கசிந்தது அவர்களது சண்டை…
இதை அறிந்த பீட்டரோ வேகமாக வந்தான் ஆர்.ஜேவிடம்.. ” பாஸ்… ஒரு புது பிரச்சனை.”

” டேய் இருக்க பிரச்சனை இன்னும் தீரலை. இன்னுமா, என்ன ப்ரச்சனைடா…?”

” பாஸ், நீ போட்டீங்களை ஒரு போஸ்ட், எனக்கு கல்யாணம் ஆகி டிவோர்ஸ் ஆச்சுன்னு எனக்கு ஒரு மகன் இருக்கான்னு… “

” ஆமா அது எப்பையோ போட்டது.. அதுல என்ன பிரச்னை? “

” அதான் பிரச்சனையே.. நீங்க சித்துக்காக சண்ட போட்ட வீடியோவா லீக்காகி, இப்ப ஜானு தான் உங்க ஓய்ப், சித்தார்த் தான் உங்க சன், அன்னைக்கு நடந்தது கூட குடும்பப்பிரச்சனை தான்.. ” நீயூஸ் பேப்பரிலும் போட்டாங்க பாஸ்.. “

தலையில் கைவைத்து அமர்ந்தவன், ” என்னாடா இந்த மீடியாக்காரங்க இன்னுமாடா, இந்த விசயத்தை மறக்கல… “

” உங்க விசயத்தை மட்டும் மறக்கவே மாட்டாங்க போல பாஸ்.. “

” டேய் ! இந்த நியூஸ் ஜானுக்கு தெரிந்தா ? ஏன் நிலமை, சும்மாவே கத்துவாடா, இப்ப என்ன ஆட்டம் ஆடுவாளோ ? “

” பாஸ், உங்க அம்மாவ மறந்துடீங்க, “

”  எங்கம்மாக்கு தெரியும் டா… அதுனால அவங்க கத்துனாலும் பிரச்சனை இல்லை, இப்ப இருக்கிறதெல்லாம் ஜானுவ பத்தி தான்… வா, அந்த மீடியா காரன் கிட்ட சண்டை போட்டு வருவோம் ” என்று அவனை அழைத்து சென்றவன்..

அந்த செய்தியை போட்ட மீடியாவிடம் சண்டையிட்டு வந்தான்.. பெரும் வாக்குவததத்திற்கு பின்னே சமாதானம்.. ஆனால், அது பொய்யென்று வதந்தி என்று மாற்று செய்தி போடுவதாக கூறி சமாதானம் செய்யவே சண்டை கைவிட்டு வந்தான்..

இருந்தாலும் அவனிடத்தில் பதற்றம், ஜானுவிற்கு தெரிந்தால், தன்னை தவறாக எண்ணிக்கொள்வாளா, என்ன நினைப்பாளென்று அடிவயிற்றில் பயவுருண்டை மேல் வந்து சென்றது.

வீட்டில், ரகு மற்றும் ஜானு இருக்க, அவளுக்கு போன் வந்தது,…

“ஹலோ யாரு… “

” நான் ரக்ஷா, உன் ப்ரண்டு பேசுறேன்டி… “

” ஹாய் ரக்ஷா எப்படி இருக்க விட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க…?” என சில பல நலம் விசாரிப்புகள் முடிய, ” ஹேய் ஜானு, உன் ஹஸ்பண்ட் தான் ஆர்.ஜேவா, டிவோர்ஸ் பண்ணிடீயா. ஏன்டி இப்படி பண்ண, நீ டிவோர்ஸ் பண்ணிட்டன்னு, ப்ரண்ட்ஸ் சொல்லி தெரியும். ஆனா ஆர்.ஜே தான் உன் ஹஸ்பண்டா. “

” ஆர்.ஜே ஹஸ்பண்ட் யாருடி உனக்கு சொன்னா, நான் டிவோர்ஸ் பண்ணது உண்மைதான். ஆனா, ஆர்.ஜே என் ஹஸ்பெண்ட் இல்லை.. உனக்கு அப்டி யாரு சொன்னா ? “

” நீயூஸ் பேப்பர்ல பாருடி, நீயூஸ் கூட வந்துச்சு நீ பார்க்கலையா… “

” வாட்… நீ போன வை ரக்ஷா நான் பார்த்துகிறேன்… ” இன்றைய செய்தித்தாளை  பார்த்தாள்..

” என்னம்மா பார்க்க, நானும் இன்னைக்கு பேப்பர் படிக்கலைம்மா, படிச்சிட்டு கொடுமா.. ” என்றவரிடம்.. ” அப்ப இங்க பாருங்க…” என செய்தியை காட்டினாள்..
அதை படித்தவர் அதிர்ந்தார்..

” என்னப்பா என்னை போய் அவர் மனைவினும் , சித்தார்த்தை அவர் புள்ளைன்னு போட்டு, டிவோர்ஸ் ஆயிருக்குன்னு சொல்லிருக்காங்க, இது எப்படி ப்பா அவருக்கும் எனக்கும் சம்பந்தம்… ?” என கேட்க, ” வா, ஆர்.ஜே தம்பிக்கிட்டையே கேட்போம்.. ” என்றவளையும் அழைத்து  டான்ஸ்க்ளாஸ் சென்றார்..

அங்கே தலையில் பிடித்து அமர்ந்திருந்தான் ஆர்.ஜே… ” பாஸ், உங்க மேல தப்பில்லை , நீங்க ஏன் பயப்பிடனும்…?”

” என் மேல தப்பில்வைன்னு அவ நம்பனுமே பீட்டர், வந்து தையத்தக்கான்னு குதிப்பா… எல்லாரையும் என்னால சமாளிக்க முடியும் பீட்டர், உங்க அண்ணிய ம்க்கூம் முடியாது…”

” சார், சித்தோட தாத்தா, அம்மா வந்திருக்காங்க… “

” வர சொல்லு விஷ்வா… ” என்று அவன் கூறினாலும் குரலில் நடுக்கம் இருந்தது அவனது மிளகாய் என்ன காட்டு காட்ட போறாளோ என்றே

” வாங்க சார், வாங்க ஜானு.. ” என தலைகுனிந்து நிற்க…

” என்ன தம்பி நடக்குது. எதுக்கு இப்படி எழுதிருக்காங்க உங்களுக்கு ஜானுக்கும் என்ன சம்பந்தம், ஏன் டிவோர்ஸ் ஆனதா  போட்டிருக்காங்க… “

” சார் சார்… நீங்க பொறுமையாக இருங்க ஆக்ஸ்வலா என்ன நடந்துன்ன.. ” என அனைத்தையும் ஜெர்ஸியிலிருந்து,அந்த போஸ்ட் வரை சொன்னவன், அடுத்த அங்கு நடந்த சண்டையையும் மீடியாவிடம் பேசியதை சொல்லி முடித்தான்.

” சாரி ஜானு. நான் இத எனக்கு சாதகமா பண்ணேன் நினைச்சுடாத எனக்கே இன்னைக்கு தான் விசயம் தெரியும்… ப்ளீஸ் ஜானு என்னை நம்பு” என்றான்.

” தம்பி. உங்க மேல தப்பில்லைன்னாலும் ஜானுகிட்ட எல்லாரும் கேட்க ஆரம்பிப்பாங்களே, அமைதியா வாழ்ந்துட்டு இருந்தோம். இதுனால எங்க நிம்மதி போயிடுமே தம்பி.. இதை சித் எப்படி எடுத்துப்பான் தெரியலையே.. அவனையும் பாதிக்குமே… “

” அப்பா… இதுக்கு யாரையும் குற்ற சொல்ல முடியாது, ஆர்.ஜே சார் என்ன பண்ணுவார். விடுங்க, எது நடக்கனும் இருக்கோ அதான் நடக்கும், விடுங்கப்பா அதான் மீடியாகிட்ட பேசிடாரே, இதுக்கு மேல யாராவது கேட்டா கடந்து போகவேண்டியது தான். எவ்வளவு பேரோட வாய அடைக்க, விடுங்க, சித்துக்கு எல்லாம் தெரியும் அதையும் சார் க்ளியர் பண்ணிடார்… இதுக்கு மேல பேச ஒன்னில்லப்பா…”

” சாரி, ஆர்.ஜே சார்… அன்னைக்கு சண்ட போடாம இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது, எங்களால உங்களுக்கு அடுத்தது கஷ்டம்  சாரி சார் ” என்று கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்க..

” ஜானு, அப்படியெல்லாம் இல்லை, மன்னிப்பு கேட்கனும் அவசியம் இல்லை. மீடியா காரனுக்கு தேவ நீயூஸ் டி.ஆர்.பி ஏத்தனும் பிரபலமானவங்க குடும்ப விசயங்களை போட்டு ஏத்திகிறான் விடுங்க…”

இருவரும் அக்கிருந்து சங்கடத்தோடே கிளம்பினர்கள்.., அன்றைய சூழ்நிலை அமைதியாக கழிய அடுத்த நாளிலே பூதகரமாக வெடித்தது பள்ளியில்…

குறும்பு தொடரும்…அந்த மாபெரும் ஜர்ஜ்ஜில் அனைவரும் சூழ   அங்கே ஃபாதர் முன் வினோத்தும் க்ர்ஸ்டியும் மணமக்களாக இருந்தனர்… இருவரும் பாதரியாரின் சொற்படியே சொல்லிக்கொண்டிருக்க.  கொஞ்சம் தள்ளிநின்ற க்ரேஸிக்கும் க்ரேஸியின் தாய்க்கும் ஆனந்த கண்ணீர் சுரந்து கொண்டிருந்தது.

குறும்பு தொடரும்…