என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா 3

அகன்ற வானில் ஆங்காங்கே ஜொலிக்கும் நட்சத்திரமும் தனித்திருக்கும்  நிலவையும் கொண்டு தன்னை அலங்கரிந்தது அந்த இரவு.

ப்ர்த்டே பார்ட்டியை முடித்துவிட்டு சித்துவும் ரகுவும்  தன் இல்லம் திரும்பினர்.  நிசப்தமாய் இருந்த வீட்டில் காலடியை மெதுவாக எடுத்துவைத்து உள்ளே நுழைந்தனர்.

ஜானு, தன்னறையில் உறங்கிக் கொண்டிருந்தாள்.. ரகுவிடம் சொல்லிக்கொண்டு தன் அன்னையுடன் உறங்கச் சென்றான். தனது ஆடையை மாற்ற கழட்டியவன் அதிலிருந்த ஆர்.ஜேவின் கையெழுத்தை தடவி, அதை ஜானு கண்ணில் படாதவாறே தனக்கென பிடித்தவைகளை எல்லாம்  ஒரு சூட்கேஸ்ஸில் பதுக்கி வைப்பது அவனது வழக்கம் . அந்த டீ சர்ட்டையும் அவ்வாறே, சத்தம் எழுப்பிடாது மெதுவாகத் திறந்து உள்ளே வைத்துவிட்டு, தன் அன்னையின் நெஞ்சில் படுத்துக்கொண்டான்.. அவளும் அவனை அணைத்து கொண்டு உறங்கினாள்.

மறுநாள் வானம் விடியலைத் தழுவியது… சீக்கிரமாக எழுந்தவர் வாக்கிங் சென்று பாலும் பேப்பரை வாங்கி வைத்து தனக்கும் ஜானுவிற்கும் காஃபி கலந்தார். அவள் எழுந்து காலைக் கடன்களை முடித்து காஃபியைப் பருகிவிட்டுச் சமைக்கச் சென்றாள். சமையலறையில் அவளுக்கு உதவியவர். சித்துவின் யூனிபார்மை ஐயன் பண்ணிவைத்தார். ஸ்ஸூவிற்குப் பாலிஸ் இட்டு வைப்பதென அவனுக்காக அத்தனை வேலையும் அவரே பார்ப்பார்.

ஜானுவிற்கு ட்யூட்டி மாறி மாறி வரும், ஒருவாரம் இரவு எட்டிலிருந்து பகல் எட்டு வரைக்கும் இருக்கும் மறுவாரம் காலை எட்டிலிருந்து இரவு எட்டு வரைக்கும் இருக்கும் தேவைபட்டால் ஞாயிறும் பணிக்குச் செல்வாள்.

இரவில் வேலைக்குச் சென்றாள் ரகுவே சமைப்பார். பகல் வேலை என்றால் ஜானுவே சமைத்து விடுவாள்..

” சித் கண்ணா…! எழுந்திரி ஸ்கூல் போகணும் ”  தன் பேரனை எழுப்பும் கடமையில் இறங்கினார் ரகு.

இரண்டு நாள் கழித்து பள்ளி போகணும் என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்.. திங்கள் காலை மட்டும் அத்தனை தீய சக்திகளும்  குடிக்கொண்டு ஆட்டிப் படைத்து, எழ விடாமல் சூனியம் வைத்திடும்..

” ரகு, டென்மினிட்ஸ் ப்ளீஸ்…! ” என முனங்கியவாறே உறக்கத்திலிருந்தான்.

” சித்.. வேக் அப் பாய்… மண்டே மார்னிங் இதே வேலை தான் உனக்கு. கேட் அப் கேட் அப்…”  ரகுவின் மெல்லிய குரலில் கலையாத உறக்கம் ஜானுவின் அதட்டலில்  கலைந்து கண்ணை கசக்கிக் கொண்டு அமர்ந்தான்.

” ரகு, ஐ ஹேட் மண்டே மார்னீங்… ” டவலை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.  ” அப்ப உனக்கு மட்டும் மண்டே ஆபடர் நூன் ஸ்கூல் வைக்க சொல்லுவோமா சித்.. ” என விளையாட்டாகக் கேட்டார்.

” எஸ் ரகு. நான் ப்ரின்சிபால் இருந்தா அந்த ரூல்ஸை தான் பர்ஸ்ட் ஸ்கூலுக்கு போடுவேன் ” என்றான் உள்ளிருந்தவாறே…

” சித்.. ப்ரின்சிபால் ஆக பர்ஸ்ட் நீ படிக்கணும், அதுக்கு நீ மண்டே மார்னிங்  ஸ்கூல் போய் தான் ஆகணும். உன்னால அந்த மண்டே மார்னிங் ஸ்கிப் பண்ணவே முடியாது சித் ”  என்றாள் பதிலுக்கு.

” பேசாம, ரகுவ ஸ்கூல் ப்ரின்சிபால் ஆக்கிடலாம் ஜானு. ஐ ஸ்க்ப் மண்டே மார்னிங்..” என்று கத்தினான்.

” உன் தாத்தா, ஸ்கூல் ப்ரின்சிபாலா இருந்தால், அங்க நீ மட்டும் தான்டா ஸ்டுடெண்ட்டாஇருப்ப, வேற யாரும் அந்த ஸ்கூலுக்கு வர மாட்டாங்க..”  என்றாள். ‘ அடப்பாவிகளா…! இதுங்க இரண்டுக்கும் என்ன இழுக்கலேன்னா பொழுது விடியாது போல….’  என்று புலம்பிக் கொண்டு  தன் வேலையைத் தொடர்ந்தார்..

சித்துவிற்கு  மதியம் உணவை டிபனில்  பேக் பண்ணியவள், வாஸ்ஸிங் மிஷினில் நேற்று அணிந்த ஆடையைத் துவைக்க போட்டாள்.

கண்ணாடி முன்னாடி நின்றவாறே, ஸ்லோமோசனில் ஆடை அணிந்து கொண்டுருந்தான் ” சித் பார்ஸ்ட். நாங்க எல்லா வேலையும் முடிச்சுட்டோம்.. நீ  தான் இன்னும் ரெடியாகல, இவ்வளவு ஸ்லோவா கிளம்பின்னா லேட்டு தான் ஸ்கூல்லுக்கு போகணும். சீக்கிரமா கிளம்பேன்… ” அவள் சலித்துக் கொள்ள,

” ஜானு…. பீலிங் லேசி ”  என்றான் முகத்தை சுருக்கி.

” வாட்… ” என   அவனை இழுத்து தயாராக்கினாள் ”  வாய் எப்படி பேசுற சித்… இரண்டுநாள் உன் இஷ்டம் போல தானே இருந்த, மண்டே மார்னிங் மட்டும் என்ன தான் ஆகுமோ…?”

” இரண்டுநாள் லீவு ஜானு.. ஐ என்ஜாய்ட் இட்.. பட் டூடே மண்டே, ஸ்கூல் டே… ” என முகத்தைத் தொங்கப் போட்டான்..

” உங்க கிரேஸி மிஸ் இதுக்கெல்லாம். அட்வைஸ் தரலையா…? லீவு எப்படி என்ஜாய் பண்றீயோ, ஸ்கூல் டேஸ்ஸையும் என்ஜாய் பண்ணனும் சித். திரும்பி இந்த அழகான நாட்களுக்கு, நம்மளால போக முடியாது சித். கிடைச்ச நாட்கள சந்தோசமா ஏத்துக்கிட்டு ஒரு மெமரபில் டேஸ்ஸா மாத்தணும். என் சித் குட்டி சார்மிங் , ஸ்மார்ட் , ஆக்டிவ் பாய்.. இப்படி லேசியா ஸ்கூல் போகலாமா, ஹேர்ல்ஸ் என்ன நினைப்பாங்க என் சித்துவை… ”  என்றதும் சிரித்துவிட்டான். அவனிடம் பேசிக்கொண்டே அவனை தயாராக்கினாள்.

அவனுக்கு உணவை ஊட்ட அவனாகவே ஷாக்க்ஷையும் ஸ்ஸூவையும் போட்டான்… ” சித்…. நேத்து போட்டிருந்த ஷ்ர்ட்  எங்க காணோம் ? ”

திரு திருவென முழித்தவன்.. ” ஜானு நல்ல பாரு நேத்து நான் போட்ட ட்ரஷ்ஷோட தான் இருக்கும்… நீ எல்லாத்தையும் மொத்தமா போட்டதால பார்க்காம விட்டிருப்ப… ” எனச் சமாளித்தான்..

அவளுக்கே அவள் மேல் சந்தேகம் வந்தது ‘  ஒருவேளை போட்டிருப்பேனோ…! ‘ என எண்ணியவள் அடுத்த வேலையைக் கவனிக்கலானாள்.

பெருமூச்சை விட்டவன். ஜானுவிடம் சொல்லிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினான்….

இருவரும் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

” சித்…  அந்த ஷ்ர்ட் அவ்வளவு ஸ்பேஷலா…? பத்திர படுத்தி வைக்கிற அளவுக்கு என்ன இருக்கு அதுல… ?”

” ரகு, யூ சா தெட்…! ”

” எஸ்… சொல்லு, ஏன் மறைச்சு வச்ச ? “

” ரகு…. அந்த ஸ்ர்ட்ல நான் முதல் முறையா ஒரு டான்ஸ்மாஸ்டர் கிட்ட வாங்கின ஆட்டோகிராப் இருக்கு. அதை பார்த்தால் ஜானு திட்டுவா…  இல்லை வாஷ் பண்ணி அதை அழிச்சுடுவா…! அதான் பத்திரமா வைச்சேன் ” 

” அது அவ்வளவு ஸ்பேஷலா, அவர, நீ ஃபர்ஸ்ட் டைம் தானே பார்க்கிற…! இவ்வளவு இம்பார்ட்டன்ட் கொடுக்கிற…?” எனவும்

” ரகு, நான் அவர ஃபர்ஷ்ட் டைம் தான் பார்த்தேன்… பட் அவர பார்க்க எனக்கு சம்திங் ஸ்பேஷல் போல இருந்தது. எனக்கு அப்படிதான் தோணுச்சு…” என்றவனை புதிதாய் பார்த்தார்.

பள்ளியம் வர்ற, அவனை உள்ளே விட்டு விட்டுக் கிளம்பினார். இவனும் கையசைத்துவிட்டு, சென்றான்.

” ஏய் கௌரி…! என் பிள்ளை துணிடி பார்த்து துவைக்கணும் சரியா” என அத்தனை துணியையும் அள்ளிக் கொண்டு போட்டார்.

” சரிங்கம்மா…” என ஒவ்வொரு துணியாக பார்த்தவளுக்கு கண்ணில் பட்டதோ, அந்த கையெழுத்தான்.

” மா… இங்க பாருங்க தம்பி சட்டையில ஏதோ எழுதிருக்கு…”

அவரிடம் அதை நீட்ட, ” என்னடி எழுதிருக்கு…”என அவர் வாங்கிப் பார்க்க,

” சி.த்.தா.ர்.த்…,” என  குண்டு குண்டாக, அவனைப் போல அழகான சிறுபிள்ளையின் கையெழுத்தைக் காண உதட்டில் புன்னகை தழுவியது.

” என்னங்க என்னங்க இங்க வாங்களேன்..உங்க புள்ள சட்டையில என்ன இருக்கு பாருங்களேன்…” தன் கணவனை அழைக்க,

” என்ன சீதா, என்ன இருக்கு ? எதாவது பொண்ணோட  லிப்ஸ்ட்டிக் தடமா இருக்கும். அதெல்லாம்  என்னை போய் பார்க்க சொல்லுறீயே…! காலையில கடுப்பேத்தாதடி” என வந்தவரை எரித்தார் சீதா.

” அவன் சட்டையில லிபிஸ்டிக் தடம் இருந்தால் உங்களுக்கு ஏன் மிஸ்டர் ராமன் கடுப்பு வருது…? ” இடையில் கைவைத்தவாறே  சன்னமாக கேட்க.. ‘ ஐயோ மாட்டிகிட்டியே ராமா… !’ என ஏற்கெனவே திருட்டு முழியைக் கொண்டவர் மேலும் முழித்தார்.

” அது.. அது.. சீதா.. ” என இழுக்க,

” இங்க பாருங்க… ” என அவரிடம் நீட்டினார். அவரும்  அதை வாசித்துவிட்டு, “யாரோ குழந்தை டி ஆட்டோகிராப் போட்டிருக்கு.. நேத்து ப்ர்த்டே பார்ட்டி போனானே! அங்க யாருகிட்டையாவது கையெழுத்து வாங்கிருப்பான்… நான் என்னமோ ஏதோ நினைச்சுடேன்”  என பெருமூச்சை விட்டார்.

” என் புள்ள அப்படியெல்லாம் கிடையாது ” அதைப் பிடிங்கிக் கொண்டு அவனது அறைக்குச் செல்ல,

” அதுனால தான் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கான் உன் புள்ள…!” என  கூறியவரை முறைத்துவிட்டு அறை கதவைத் திறந்தார்.

இன்னும் இருள் நீங்காது, இருட்டாக அவ்வறை இருக்க, ” ம்ம்.. என்னத்த சொல்ல இந்நேரம் இவனுக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்தா…! இந்த வேலை எல்லாம் அவள் செய்திருப்பாள்.  இப்ப பாருங்க இன்னும் இவன் இருட்டுலே இருக்கான்” என திறையை விளக்கினாள்.

” இன்னும் இவன் வாழ்க்கைல  திறையை விளக்க ஆள் இல்லையோ என்னவோ..! ”

” ராஜூ.. ராஜூ. எழுந்திரிடா மணியாச்சு எழுந்திரிடா “அவனை எழுப்ப,

மெல்ல கண்விழித்து ” குட்மார்னிங் மா… குட்மார்னிங் நைனா…”  என்றவன் தன் அன்னையின் மடியில் தலைவைத்தான்.

” ராஜூ… என்னடா இது…?”

” எதுமா…? ”  என வாங்கிப் பார்க்க. சித்துவின் நினைப்பில் சிரித்தவன். மெல்ல அதை வருடினான். அவர்களுக்கு அது புதிதாக தெரிந்தது.

” ராஜூ…!”

” மா.. இது ஒரு சின்ன பையன் கையெழுத்து மா….”

” அது தெரியிது ராஜூ.. ஆனா, யாரு அவன் எதுக்கு உன் ஸ்ர்ட்ல  போடணும்? ”

” நேத்து போன ப்ர்த்டே பங்சன்ல. பார்த்தேன், பெயர் சித்தார்த் மா. சூப்பரா டான்ஸ் ஆடுனான். அவனைப் பார்க்க என்னையே சின்ன பிள்ளைல பார்த்தது போல இருந்ததுமா. அதான், அவன் கிட்ட கையெழுத்து வாங்கினேன்….” என்றவன் அதை வாங்கி வைத்துக் கொண்டான்..

” டேய் ராஜூ, இந்நேரம் நீ கல்யாணம் பண்ணிருந்தால், நீ பார்த்த பையன போல உனக்கும் ஒரு பையன் இருந்திருக்கும் டா..

உன் ப்ரண்ட்கே இரண்டு குழந்தை இருக்கு.ஆனா,  நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீயே டா.”

” இன்னும் நாலு வருசத்தில உன் புள்ள அரை கிழவனா ஆகப் போறான் சீதா..” என்றவர்

மீண்டும் ஒரு முறைப்பைப் பெற்றார்.

” மா… என்ன பார்த்தால் கிழவன் மாதிரி இருக்கா…?  ” என எகிறினான்.

” டேய், அப்படி இல்லடா… அந்த அந்த வயசுல அது அது நடக்கணும்டா. இந்நேரம் நீ இரண்டு பிள்ளைக்கு அப்பான்னா இருந்திருப்படா…”

” மா.. அதான் உங்க கிட்ட அந்தப் பொறுப்பை எப்பையோ ஒப்படைச்சிட்டேன்.

நீ பார்க்கிற பொண்ணையே கல்யாணம் பண்ணிகிறேன் சொல்லிட்டேனே மா…!”

” டேய்.. பொண்ணு நான் தான்டா பார்க்கிறேன்… ஆனா, வேணா சொல்றது யாருடா நீயா  ?  நானா ?  ”

” நான் என்ன பண்ணுவேன்… என்னைய பிடிச்ச பெண்ணுக்கு, எனக்கு பிடிக்கல, எனக்கு பிடிச்ச பெண்களுக்கு என் வேலை பிடிக்கல, சினிமா காரனுக்கு பொண்ணு தரமாட்டிக்கிறானுங்க… நீ என்னடான்னா, சினிமாகாரியே வேணாம் சொல்லுற நான் என்ன தான் பண்ண…?”

” அதுனால தான்  மகனே நீ கல்யாணம் ஆகாம இருக்க…!”

” சும்மா இருங்க…. டேய் நீ கல்யாணம் ஆகாம கூட இரு.. இந்த சினிமாகாரி மட்டும் உனக்கு வேணாம் டா மகனே!  உன் ஜாகத்தை எடுத்து போய் ஜோசியர்கிட்ட காமிச்சேன்… உனக்கு கல்யாணம் யோகம் இந்த வருசத்துக்குள்ள கூடும் சொல்லிருக்கார். ஆனா,  ஒன்னுக்கு இரண்டா வரும் சொன்னாரே அதுக்கு அர்த்தம் தான் புரியல….!” என்றார் யோசிப்பது போலே.

” இதுக்கூட புரியலையா… இரண்டு மருகளா வர்ற போற உனக்கு…. !” என்று சொல்லிச் சிரிக்க… ” ம்க்கூம் ஒன்னுக்கே வழியில்லையாம் இதுல இரண்டாம்… போ நைனா நீ வேற…”

” டேய், சலிச்சுக்காத மகனே ! கண்டிப்பா உனக்கு ஏத்த பொண்ணா நான் பார்க்கிறேன்… நீ குளிச்சுட்டு வா நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ” என தன் கணவனையும் அழைத்துசென்றார்…

சீதா…. ராமனின் தவப் புதல்வன் ராஜேஷ்… ஆர்ட்ஸ் காலேஜ்ல ஹிஸ்ட்ரி குருப் எடுத்து படித்தவன், டீவியில் நடக்கும் டான்ஸ் ஷோவில் எல்லாம் கலந்து டைட்டில் வின்னர் பெற்று இப்பொழுது பிரபலமான கோரீயோகிராபராக இருக்கிறான்.  இன்னும் திருமணம் ஆக வில்லை.. இவனை பிடித்தாலும் சினிமா பிரபலம் என்பதாலே தட்டி கழிந்து போனது இவனது கல்யாணம்..

இவனது அன்னை தேடும் பெண் கடலே இல்லையாம் அந்த அளவு அடக்கமான பெண்ணாக தேட, அவனுக்கு வரனாக வருவதெல்லாம் படித்து வேலைக்கு செல்லும் பெண்களாக, அதிகாரம் செய்யும் பெண்களாகவே வர்ற இருவரும் போட்டி போட்டு கழித்தனர்…

ஆனாலும் பெண்கள் மத்தியில் பிரபலம் என்றால் என்னத்தைச் சொல்ல…. தனது பெயர் ராஜேஷை சுருக்கி ஆர். ஜே என்று வைத்துக்கொண்டான்.

கிளம்பி தயாராகி கீழே வந்தவனை வரவேற்றான் பீட்டர். அவனது பீ.ஏ, ப்ரண்ட், எல்லாமே அவன்தான்.

பீட்டரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாற்றினார் சீதா.

” என்ன பீட்டர், இவன் கூட சேர்ந்து நீயும் சாமியாரா ஆகப் போறீயா ? நீயும் ஒரு நல்ல நீயூஸா சொல்லுற மாதிரியே தெரியலப்பா…! ”

” அப்பா.. நானெல்லாம் சாரைப் போல இல்லை… சீக்கிரமா அந்த நல்ல நீயூஸ் சொல்லுவேன் ப்பா…”  என்றான் சிறு வெட்கத்தோடு.

” அப்படியா பொண்ணு பார்த்துட்டீயா பீட்டர்? ”

” மா.. சார்,  கிரேஸின்ற பொண்ணுமேல கிரேஸியா இருக்கார்,” என்றான் ஆர். ஜே.

” கிரேஸியா ? லவ்வா டா…! ”

” ஆமாப்பா… சர்ஜ்க்கு வரும் போது பார்த்து பழகிப், பிடிச்சுபோச்சு.., அவ தான் கொஞ்சம் டைம் கேட்டிருக்கா, அதான் வெய்டிங்….”

” டேய் மவனே !   அவன பார்த்தாவது கத்துகோடா…. லவ் கூடவா உனக்கு பண்ண தெரியல….”

” எம்மா… உன் புருசன் என்னைய ரொம்ப டேமெஜ் பண்றாரு சொல்லிவை. லவ் பண்ணா மட்டும் ஒத்துக்குவா பாரு உன் பொண்டாட்டி.. இரண்டும் பேரும் சதி பண்ணிட்டு இப்ப வந்து கத்துக்கவாம். என்னுடைய இருபத்தி ஆறாவது வயசுல ஒரு பொண்ண பிடிச்சிருக்கு வந்து நின்னேன்.. நீங்க என்ன பண்ணிருக்கணும் அவங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்கி கட்டிவச்சிருக்கணும் ஆனா, நீங்க காதல் வேணாம் நம்ம குடும்பம் மானம் அது இது சொல்லி அந்தப் பிள்ளையையும் மறுத்துடீங்க.. அது இப்ப மூனு பிள்ளை பெத்து சந்தோசமா இருக்கு… இதுக்கெல்லாம் யாரு காரணம் நீங்கதான்.,. இதுல நான் கத்துக்கணுமா…! என்னை பேசவைக்காதீங்க.”  வேலைகாரன் படத்தில் தனுஷை போல தந்தையிடம்  படு சீரியஸாகப் பேச, சீதா கண்களில் கண்ணீரும், தலைகுனிந்தவாறு ராமனும் அமர்ந்திருக்க மினி படமாய் ஓடியது பீட்டருக்கு.

” பேசுங்கப்பா… பேசுங்கம்மா..”

”  இது சோகமான சீன்.. வார்த்தைகள் வராது ஒன்லி பீலிங் தான் பாஸ்…”  என்றான் பீட்டர்.

” போதும்ப்பா போதும்மா… இனி நீங்க எனக்கு பண்ணதெல்லாம் போதும். எனக்காக பிறந்தவ கண்டிப்பா என்னை தேடி வருவா… அவளுக்காக நான் காத்திட்டுருக்கேன்…”

” பாஸ்… அவங்க வந்ததும் நீ அவங்கள ஆறுபதாம் கல்யாணம் பண்ணுவீங்களா? எம்பதாம் கல்யாணம் பண்ணுவீங்களா?” 

என்றதும் இருவரும் சிரிக்க..

” யூ டூ ப்ரூடஸ்…”  என அவனை அடித்தவன் எழுந்து சென்றான்..  பின் இருவரும் கிளம்பி சூட்டிங் சென்றனர்.

” பீட்டரே… இன்னைக்கு எதுவும் ப்ரெக்கிங் நீயூஸ்… சோசியல் மீடியலா எதுவும் ஹாட் நீயூஸ் இருக்கா…?”

” எஸ் பாஸ் ஹார்ட் ஆண்ட் ப்ரேக்கிங் நீயூஸ் தான். அதுவும் உங்களுக்கு தான்….”

” எனக்கா என்ன ? ”

” ***** படத்தோட பார்ட்டில நீங்க அந்த ஹீரோயினோட ஆடுனதை. அவங்களோட டூவிட்டர், இன்ஸ்டா பக்கத்தில் பகிரங்கமா உங்களுக்கும், அவங்களுக்கும் ஏதோ ஆஃபேர் இருக்கிறதா  போட்டிருக்காங்க. லைக்ஸ் ஆண்ட் வீயூஸ் எகிருக்குது பாஸ்..  ”

” வாட்… ஆஃபேரா.. ? ” என வாய் பிளந்து கேட்டேன்….

குறும்பு தொடரும்…அகன்ற வானில் ஆங்காங்கே ஜொலிக்கும் நட்சத்திரமும் தனித்திருக்கும்  நிலவையும் கொண்டு தன்னை அலங்கரிந்தது அந்த இரவு.

” வாட்… ஆஃபேரா.. ? ” என வாயைப் பிளந்தான் ஆர்.ஜே.

குறும்பு தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!