என்னுயிர் குறும்பா

குறும்பா

இருவரும் வெகு நேரம் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர்… அவனது கைக்குள் அவளது கைகள் இளைபாறியது… அவளது விழிகளில் வடிந்த கண்ணீர் அவன் கைகளில் பட்டு தெரிக்க இருவரும் நினைவிற்கு வந்தனர்…

” ஜானு, போதும் நீ அழுதது, இனி எதற்கும் அழுக கூடாது. கண்டிப்பா இனி எந்தவொரு விசயத்திற்காக உன்னை கலங்க விட மாட்டேன் டி. ” என்றதும் தன் கண்ணை துடைக்க அவளது கைகளை எடுக்க, அது என்னவோ முடியாமல் போனது, அவளது கைகளை கெட்டியாக பற்றி இருந்தான்…

மீண்டும் அவனை பார்த்து கைகளை பார்க்கவே, விடுவித்தான். ” உங்களுக்கு கஷ்டமாக இல்லையா ஆர்.ஜே, உங்க அம்மா, அப்பா இந்த கல்யாணத்துக்கு வராதது. அவங்க ஏன் இந்த கல்யாணதுக்கு ஒத்துக்கலை, என்னை பிடிக்கலையா ? “

“ஹேய் ஜானு, உன்னை பிடிக்காம போகுமா, உன்னை என் அம்மாக்கு பிடிக்கும். ஆனா மகன், ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கிற பொண்ணை கல்யாணம் செய்தால் யாருக்கு தான் பிடிக்கும் சொல்லு, அவங்க அந்த காலத்து ஆள். இதெல்லாம் ஏற்க முடியலை, ஆனா அப்பா அப்படி இல்லை, எனக்கு சப்போர்ட் தான். சீக்கிரமா அம்மா மனசை மாத்திடுவார். “

” இருந்தாலும் ஒத்த பையனோட கல்யாணத்தை பார்க்காம போனது அவங்களுக்கு மேலும் கஷ்டம் தானே ஆர்.ஜே.”

“யாரு அவங்களா கல்யாணத்தை பார்க்கலை, அதெல்லாம் பார்த்துடாங்க லைவ்வா, பீட்டர் மூலமாக, அப்பாவோட போன் வழியே நம்முடைய கல்யாணத்தை பார்த்துட்டாங்க ஜானு… ”
என்றதும் ஆச்சரியமாக அவள் பார்த்தாள்..

” கொஞ்ச நாள் தான், அம்மாக்கு என்னை பார்க்காம பேசாம இருக்க  முடியாது, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பெத்த பிள்ளைய விட்டு இருந்திடுவாங்களா என்ன ஓடிவந்திடுவாங்க, அப்புறம் நீ, நான், சித், மாமா, அப்பா,அம்மா எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கலாம் ஜானு, எனக்கு நம்பிக்கை இருக்கு… ” என்றான்..

அவனது வதனத்தையே நோக்கி அமர்ந்திருந்தாள். இது கனவா ? நிஜம் தானா ? புயலாய் வந்த தென்றல் இவன் தான். யாரையும் அனுமதிக்காது வட்டம் போட்டு வாழந்தவளுக்கு, அவ்வட்டத்தை பெரிதாக்கி சொந்தபந்தங்களை சேர்க்க வந்தவன் இவன்தான் !! தன்னை மறந்து தனக்காக எதையும் செய்ய மறந்து சித்துவே உலகமென்று இருந்தவளுக்கு, புதிய உலகம் காட்டி அதில் அவளை, அன்பு சந்தோசம் என  அலங்கரிக்க வந்தவன் இவன்தான் ! இது கனவல்ல, என உறுதியானவள், அவனது கன்னத்தில் முதல் முதலாய் தன் இதழை பதித்தாள்.

அவளிடம் எதிர்பாராதெல்லாம் இன்று கிடைக்கவே ஆடிப் போயிருந்தவனுக்க இந்த முத்தம், சொர்க்க வாசலை தொட்டு வந்தது போல இருக்க, அதிர்ச்சி கலந்த ஆனந்ததில் அவளை நோக்கினான்.

” உங்களுக்கு நன்றி சொல்லனும் போல இருந்தது  ஆர்.ஜே, சித், உங்க கிட்ட இப்படிதானே நன்றி சொல்லுவான். அதான் நானும் உங்களுக்கு அவனை போலவே சொன்னேன்… “

” எனக்கும் கூட நன்றி சொல்லனும் ஜானு, சொல்லட்டுமா ? ” விழிகள் கிறங்க, மோக குரலில் சொன்னவனை காண வெட்க நேரகை அவள் வதனத்தில் கொடியாய் படற, தன் இதழ்களை கடித்து தன் வெட்கத்தை மறைக்க முயன்று தோற்றாள் அப்பெண்.

” நமக்குள் எதுக்கு நன்றி, சாரி எல்லாம் இருக்கட்டும் ஆர்.ஜே. எனக்கு தூக்கம் வருது நான் தூங்கிறேன் ” என்று தன் சிரிப்பை அடக்கி போர்வை போர்த்திக்கொண்டு அந்தபக்கமாக படுத்துக்கொண்டாள்.

‘ அடி சண்டாளி ! இவ மட்டும் கொடுக்கலாம்.. நான் கொடுக்கலாம்ன்னா, நமக்குள் எதுக்குவாம்.. ஆர்.ஜே இப்பையே உன்னை நல்ல ஏமாத்திறா,  விடக்கூடாது சரியான நேரத்தில மொத்தமா வசூலிக்கன்னும் டா… ‘ என எண்ணிக்கொண்டு  அவளருகில் படுத்துகொண்டான்.

இங்கோ தன் முந்தானையால் மூக்கை உறிஞ்சிக்கொண்டு அழுதுகொண்டிருந்தார் சீதா..

” கருவபிள்ள கொத்தா ஒன்னே ஒன்னு வைச்சிருந்த என் பிள்ளைய என்னத்த சொல்லி மயக்கினாளோ இப்படி அவ பின்னாடியே போயிட்டானே ! ” ஒப்பாரிவைக்காத குறையாக அழுதுகொண்டிருந்தார்..

அதற்கு நேர்மாராக, தன்மகனது கல்யாணத்தை போட்டு போட்டு,பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்..

” வாரே ! வாரே ! இப்படி மகனோட கல்யாணத்தை எந்த அப்பாகாரனால போட்டு போட்டு பார்க்க வாய்ப்பு கிடைக்குமா. ச்ச… அவன் கண்ணுல என்னா காதல், கடைசியில ஜோசியகாரன் சொன்னது தான் பழித்து இருக்கு, இரண்டா வந்தாலும் மூனா, முழுக்குடும்பமா மகன் நிக்கிறதை பார்க்க ஆனந்த கண்ணீரே வருது.,.. ” என பொய்யாய் துடைத்துக்கொள்ள,

” என்னங்க கிண்டலா, நான் இல்லாம கல்யாணம் பண்ணிட்டானே ஆத்திரத்துல கத்திட்டு இருக்கேன், நீங்க என்ன அவன் கல்யாணத்தை பார்த்து ஆஹா ! ஓஹா புகழ்ந்திட்டு இருக்கீங்க..”

” வேற என்ன செய்ய சொல்லுற சீதா! மகன் கல்யாணத்தை பார்த்து சந்தோசபடாம உன்னை மாதிரி என்னையும் ஆத்திர பட சொல்லுறீயா ! எனக்கு அதெல்லாம் வராது சீதா… அவன் முகத்தில எவ்வளவு சந்தோசம் பார்த்தீயா.. அதானே நமக்கு வேணும் கருவபிள்ளை கொத்தா ஒன்னே ஒன்னே வச்சு கொஞ்சினா போதாதது அவனுக்கு சந்தோசம் எதுவோ அதை கொடுத்து அழகு பார்க்கிறது தான் பெத்தவங்க கடமையாக்கும், இப்படி அழுது ஒப்பாரி வைக்க கூடாது…”

” உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா, அவன் நாம இல்லாம கல்யாணம் பண்ணிருக்கான்.. அவன் மேல கோபப்படாம அவனுக்கு சாதகமாய் பேசுறீங்க… “

” அவன் நாம இல்லாம கல்யாணம் பண்ண காரணம் நீ தான்… நீ மட்டும் மகன் தான் முக்கியமா இருந்தா, அவன் சந்தோசம் போதும் நினைச்சிருந்தா, நம்ம மருமக பேரன் மகன் இருந்திருக்கலாம். நீ இங்க இருக்க வேணாம் சொல்லிட்ட, இப்ப தனியா அனுபவிப்போம்.. எட்டு வருசம பையனுக்கு கல்யாணம் பண்ணாம. அவன் இஷ்டத்துக்கு விடாம நீ பார்க்கிற பொண்ணு அவனுக்கு பிடிக்காம போக  இப்படியே இருந்தா நம்ம வம்சம் எப்படி தலைக்கும்.. இப்ப அவன், அவனுக்கு பிடிச்ச பொண்ணை கட்டிட்டு சந்தோசமா இருக்கான், இப்பையும் ஆதங்க பட்டா என்ன அம்மா நீ… ” என்றதும் அவரை முறைத்து விட்டு திரும்பி படுத்து கொண்டார். அவரும் சீதாவிற்கு கேட்க மீண்டும் கல்யாண வீடியோவை போட்டார். காதை பொத்திக்கொண்டு  படுத்தக்கொண்டார்..

நிலவுமகள் மறைந்து தன்னவனை ஏக்கமாய் வரவேற்க, ஆதவனோ பெரும் முறுவலோடு விடியலை தந்தான்…

ஜானுவும் சித்துவும் தான் என்பதால் மெத்தை சிறியதளவில் இருக்க இருவரும் திரும்பினால் ஒருவரை ஒருவரை நெருங்கி இருப்பது போல இருக்க, ஏசி குளிரில்,தூக்கத்தில் அவனது புஜத்தில் தலை வைத்து உறங்க, அவனோ தலையணை நினைப்பிலும், கனவில் ஜானுவின் நினைப்பிலும் அவளது இடையை அணைத்து உறங்கி கொண்டிருந்தான் முடிய ஜன்னல் வழியே எட்டி பார்க்கும் கதிரவன் வெட்கமே இல்லை போலும், மெல்ல கண்விழித்தவள், தன்னருகில் புதிதாய் அவனிருக்க முதலில் பயந்தவள், திருமணம் ஆனதை எண்ணித்தலையில் அடித்தகொண்டாள்.

அவன் முகம் காண, வெகுநாட்கள் கழித்து நித்தரை அவனை சேர்ந்ததை போல் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தான். எக்கியவள் மெல்ல அவன் பிறைநெற்றியில் இதழ் பதித்து அவன் கையை விலகி எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்தாள்..

அவனை எழுப்பாது சமையலறைக்குள் சென்றாள்.. சமையலறையில் எழும் சத்தத்தில் எழுந்தவன் சுற்றி முற்றி பார்க்க, அவனுக்கும் கல்யாணம் ஆன நினைவே வர எழுந்தான், தன்னருகில் அவள் இல்லாதது அவள் எழுந்திருப்பதை காட்ட, காலை கடன்களை முடித்து கொண்டு அவனும் சமையலறைக்குள் வந்தவன் மேட்டில் ஏறி அமர்ந்தான்..

” குட்மார்னிங் ஆர்.ஜே,…” என்றவள் அவன் கையில் சுட சுட காபியை தந்தாள்… வாங்கி கொண்டவன், ” தாங்க்ஸ்.. ” என்றதும் அவனை பார்த்து     தலைகுனிய, நேற்றை நிகழ்வு தோன்ற சிறு நாணம் தொற்றிக்கொண்டது. சிறு மிடறு குடித்தான், பார்வை அவள் மீது பதித்தே, அவளும்.

” நைட் தூக்கம் வந்ததா, ஆர்.ஜே.. ” என்று அவள் கேட்க, குடித்தவாறே புருவத்தை உயர்த்தி ஏன் என்று கேட்க. ” இல்லை புது இடம், சிலருக்கு தூக்கம் வராது அதான் கேட்டேன். கம்பர்டபல இருந்ததா.. “

அவளையே பார்த்தவன்… ” ரொம்ப நாளா  உன்னை நினைச்சு எங்க வீட்டுலே தூங்கமா இருந்திருக்கிறேன், ஜானு. ஆனால் இது புது இடமா இருந்தாலும் உன்கூட தூங்கும் போது சொர்க்கத்துக்கு போயிட்டு வந்த பீல் தான்…”

” எப்படி ஆர்.ஜே இப்படி பச்சையா வழியிறீங்க… ” என்றதும் புரையேற சிரித்தவன்.. ” ஜானு, சீரியஸ்லி நான் எந்த பொண்ணுங்க கிட்டையும் பேசுறதே அபூர்வம்,இதுல வழியிறது நாட் பாஸ்சிபில்… ஆனால், உன் கிட்ட மட்டும் வெட்கம் ,  மானம் , சூடு எல்லாம் என்னைக்கு என்னை விட்டு போச்சுன்னே தெரியல, ரியலி ஐ யம் மேட் ஆன் யூ சம்திங் யூ ஆர் டூ மீ. ” என்றான் ” காதலாய்…

அவனிடம் கப்பை வாங்கி கொண்டு நகன்றாள்… ” காலை என்ன டிபன் செய்யட்டும் உங்களுக்கு பிடிச்சது எது வேணும் சொல்லுங்க செஞ்சு தாரேன்.. “

“எனக்கு பூரி கிழங்கு, பேவர், அதை செய் ஜானு.. ” திரும்பி அவனை விநோதமாய் பார்த்தாள்..

“என்னாச்சு, ஜானு, ஏன் அப்படி பார்க்கிற ? “

” இல்லை நீங்க, கேட்டது, எனக்கு சித் கேட்டது போல இருந்தது அதான். அவனுக்கு பூரி கிழங்கு தான் பேவர், நான் இப்படி கேட்டாலே இதான் தான் சொல்லுவான் உங்களை போலவே..” என்றதும்,

” என்னை போலத்தான் என் பிள்ளையும் இருப்பான், ஆமா சித் எங்க ஜானு ? இன்னும் அவங்க வரலையா ? ”  என்றதும் அவளது காதில் விழுகவே இல்லை, கேட்டதெல்லாம் என்னை போலத்தான் என் பிள்ளையும் என்றதும் மனது ஏனோ இனம்புரியா மகிழ்ச்சியை தொற்றிகொண்டது.

முழுமனதாய் சித்தை தன்மகனா பார்க்கும் ஆர்.ஜேவை மேலும் அவளுக்கு பிடித்தது.. ” ஜானுமா, என்ன கனவா, “

” இல்ல, என்ன கேட்டீங்க ?”

” சித்துவையும் மாமாவையும் இன்னும் காணோமே எப்ப வருவாங்க ? “

” ஆமா… இவ்வளவு நேரம் அண்ணன் வீட்டுல இருக்க மாட்டாங்களே ! அதுவும் சித்து சான்சே இல்லை வந்திடுவாங்க…”

” ஏன் உங்க அண்ணிக்கு சித்தையும் பிடிக்காதா ? “

” ம்ம்,.. சித்தை பிடிக்காத ஒரே ஆள் அவங்க மட்டும் தான், மத்த எல்லாருக்கும் செல்லம்… ” என்றதும் காலிங் பேல் அடிக்க, வந்துடான் உங்க புள்ளை, சரியா தூங்கிருக்க மாட்டான். புலம்பிட்டே வருவான் பாருங்க… ” என்றாள், அவன் கதவை திறக்க சித்தோடு நின்றார் ரகு.

முகமெல்லாம் சோர்வாக இருந்தது அவனுக்க, அவனை தூக்கி கொண்டான். ” வாங்க மாமா… ” என்றான்.

” என்னப்பா, நைட் தூங்கலையா ? ரொம்ப டயர்டா இருக்கீங்க  “

அவர் சித்துவைக்க பார்க்க, அவனோ ஆர்.ஜே மடியில் பாதி உறக்கத்தில் இருந்தான்..

” சித்து குட்டி, என்னாடா தூங்கலையா… சொக்கி விழுகிற  “

” ஜானு… அத்தை வீட்டுல சரியாவே தூங்கலை பயமாவே இருந்தது.காலை தான் தூங்கினேன் ரகு உசுப்பி,கூட்டிட்டு வந்துட்டார்  ” என்றான் கண்ணை கசக்கி கொண்டு…

” சித்துக்கு தூக்கம் போலையா, நான் அவனை பீச் அழைச்சுட்டு போலாம் இருந்தேன்… இப்படி தூக்கிறானே இன்னைக்கு வேணாமா ? ” என்றதும்,

” நிஜமாவா, ஆர்.ஜே நான் தூங்கல போலாம் போலாம்… ” என்றான்..

” சரி சரி கொஞ்சம் சித்து குட்டி தூங்குவானாம் அப்புறம் நீ, நான் ஜானு,மாமா போவோமா ஒ.கேவா.. ” என்றதும் தலையாட்டா,

” நீங்க போயிட்டு வாங்க தம்பி நான் தூங்கப்போறேன். எனக்கும் அங்க தூக்கமே வரல நீங்க போயிட்டு வாங்க ” என்றார்..
” ஏன்பா நீங்களும் வாங்க… “

” இருக்கட்டும் முதல் முறையா வெளிய சேர்ந்து போறீங்க, நான் இருந்துகிறேன். நீங்க போயிட்டு வாங்க ” அவர்களுக்கு இடம் கொடுத்து  தள்ளி நின்றார்.

சித்துவை தூக்கி கொண்டு அவன் உள்ளே செல்ல அவள் அவர்களுக்கு சமைக்க சமையலறைக்குள் செல்ல. அவள் பின்னே ரகுவும் நுழைந்தார்..

” ஜானுமா… ஒரு பிரச்சினை இல்லையே, நீ மாப்பிள்ளை கூட சண்டை போடலை தானே சமாதானம் ஆகிட்டிங்க தானே.. ” என்றவர் கண்களில் கலக்கம்இருக்க,

” அப்பா ! நீங்க பயப்பிடுவது போல எதுவுமில்லப்பா… நான் ஏன் பாஸ்ட் சொல்லிட்டேன். எனக்கு கொஞ்சம் டைம் கேட்டிருக்கேன். மத்தபடி எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லை, இனி உங்க மகளை நினைத்து கவலை வேணாம் நிம்மதியா இருங்க… ” என்றதும் கலங்கிய கண்களோடு நெற்றியில் முத்தமிட்டார்..

” இது போதும்டா எனக்கு நீ, சித், மாப்பிள்ளைன்னு  சந்தோசமா இருந்தாளே போதும்டா… ”

” அப்பா… நீங்களும் இருக்கீங்க அதுல, ஆனாலும், ஆர்.ஜேவோட அப்பா அம்மா கிட்டையும் பேசி சமாதானம் பண்ணி,ஒன்னா இருக்கனும்பா, அவங்களும் நமக்கு முக்கியம் தானே…”

” கண்டிப்பாமா, அவங்க கிட்ட நான் பேசுறேன்.. மாப்பிள்ளையோட அம்மா தான் கொஞ்சம் வீம்பா இருக்காங்க, பேசுவோம் மா… “

” சரிப்பா, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க ”  என்றவள், சமையல் வேலையை தொடர்ந்தாள்….

நேரம் செல்ல மூவரும் சாப்பிட்டு செல்ல, அழகு வண்ண நீல நிற காட்டனில் வடுகில் பொட்டிட்டு அழகு பெண்ணவள் வர. பெத்தவராக அவளை அப்படி பார்க்க பூரித்து போனார்..

கணவராய் அவளை சைட் அடிக்கும் வேலை இறங்கினான்..

” ஆர்.ஜே ஆர்.ஜே…  ” சித் அவனை உலுப்பவே நடப்பவைக்கு வந்து சேர்ந்தான்.. மூவரும் மகாபலிபுரத்திற்கு சென்றனர்…

அங்கே மூவருமாக சுற்றித்திருந்தனர். மூவருமாக சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள, பின் அவளை மட்டும் தனியாக தனது மொபையில் எடுத்துவைத்து கொண்டான்.

பின் இருவரும் கடலில் விளையாட மணலில் அமர்ந்து ரசித்தாள்..

சித்து, மணலில் விடு கட்ட. ஜானுவின் அருகில் அமர்ந்தான்.

“ஏன் ஜானு இந்த கண்மை, லிப்ஸ்டிக் போடமாட்டீயா நீ… ” என்றவனை பார்த்தவள், ” ம்ம்…. வாங்கி கொடுத்த போடுவேன்..

” ஜானு, பீ சிரியஸ் ஏன் உன்னை அலங்காரம் செய்துக்க மாட்டிகிற, அன்னைக்கு நீ கோயில் பூவைக்கல, குங்குமம் கூட வைக்கல, ஏன் நீ இவ்வளவு சிம்பிள் இருக்க…”

” எனக்கு கண்மை தவிற மத்ததெல்லாம் போட இஷ்டமில்லை, அதுவுமில்லாம, இந்த அலங்காரம் கல்யாணம் ஆகிர வர பொண்ணை சார்ந்திருக்கும்.. கல்யாணம் ஆனது பின் கணவனை சார்ந்தது இருக்கிறது..

கல்யாணம் ஆன பெண் நீ, நல்ல பூவும் பொட்டும் வை சொல்லுவாங்க, அதுவோ புருசன் இறந்தாலோ, புருசன் விட்டு தனியா இருந்தாலோ புருசன் இல்லாதவளுக்கு இத்தனை அலங்காரமான்னு கேட்பாங்க.. எதுக்கு இந்த வீண் பேச்சுக்கு ஆளாக நிம்மதியா வாழ்ந்துட்டு போலாம் இதுக்கெல்லாம் அக்கறை காட்டுறதில்லை…”

” போதும் போதும் ஜானு, இனி நீ உன்னை கண்டிப்பா அலங்கரிங்கனும்.. நீ சொன்ன மாதிரி புருசனுக்காக மட்டுமில்ல உனக்காகவும்… “

” அப்ப புருசன் வாங்கித்தரனும்… “

” சரி, ஆனா எனக்கு லேடீஸ் திங்க்ஸ் எதுவுமே தெரியாது ஜானு, வீட்டுல ஒரு   பையன், அம்மா பழங்காலத்து ஆள்.. அதனால எனக்கு தெரியாது, நீ சொல்லு நான் வாங்கி தரேன்.. “

” நான் என்ன கேட்பேன், குங்குமம், பூ, அப்புறம் “

” அல்வா ? ” என்றான்..

” நீங்களும் பழங்காலத்து ஆள் தான் ஆர்.ஜே… எனக்கு அல்வா பிடிக்காது. நான் சொல்ல வரது, நேப்கின்… ”
கேள்வியாய் பார்த்தான்.. ” மாசம் மாசம் பெண்கள் வர திரி டேஸ் பெய்ன் அதுக்கு அது தேவை வாங்கி தருவீங்களா ? “

” ம்ம்… புரியுது ஜானு, நீ கேட்டா எதுவும் வாங்கி தருவேன்.. அதுவும் இது கண்டிப்பா வாங்கி தருவேன், கூச்சம் படமாட்டேன், என் பொண்டாட்டிக்குன்னா கண்டிப்பா அதெல்லாம் பார்க்க மாட்டேன்.. “

” ஆனா நீங்க பிரபல ஹோரீயோகிராப்பர். இதெல்லாம் வாங்கினா, பேப்பர்ல டீவில போட மாட்டாங்களா ஆர்.ஜே ” அவனை வம்பிழுத்தாள்…

” நான் பிரபலமாகவே இருந்தாலும் நானும், மனுசன் தான், நானும் புருசன் தான்… பிரபலம்ன்னு சொல்லிட்டு என் பொண்டாட்டிக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாம இருக்க முடியுமா.. இல்ல செய்யாம விட்டிருவேனா, உலகத்துக்கே பேமஸ் ஆனாலும்  நான் எப்பையும் உன் புருசன் அது மாறாது, ஜானு.. ” என்றான். காதலாய் அவள் பார்வை மாறவே, இருவரும் பார்த்த அமர,

” ஜானு… ஜானு.. ” என கத்தி அவர்களது பார்வையை மாற்றச் செய்தான் சித்…

  ” ஜானு, நான் கட்டுன வீடு பாரு.. ” என்று மணல் வீட்டை காட்டினான்..

” சூப்பர்டா மகனே ! “

” ஆர்.ஜே இது உனக்கும் ஜானுக்கும் இந்த ரூம், அப்புறம் இது, ரகுக்கு. இது தாத்தா பாட்டிக்கு. அப்புறம் இது, எனக்கு  ” என்றவன் கூற, அவன் தன் அன்னை தந்தையை தாத்தா பாட்டியாக ஏற்றுகொண்டதில் மனநிறைய மகிழ்ச்சே பரவியது, சில குழந்தைகளுக்கு புது உறவை ஏற்க நாட்கள் ஆகத்தான் செய்யும் ஆனால். சித்துவிற்கு அந்த நாட்களும் தேவையில்லை என்றானது..

” இந்த ரூம் யாருக்கு சித்.. “

” அதுவா தங்கச்சி பாப்பாக்கு ஜானு  ” என்றதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..

” தங்கச்சி பாப்பா  ? “

” ஆமா ஜானு.வைஷூக்கு தம்பி இருக்கா. சூர்யாவுக்கு சாலு தங்கச்சியா இருக்கா.. அப்ப எனக்கு தங்கச்சி இருக்கனும்ல அதான் அவளுக்கும். அதுமட்டும் இல்ல, சக்தி ஆன்ட்டி உனக்கு சீக்கிரமாவே தங்கச்சி பாப்பா வரும் சொன்னாங்களே அதான்… ” என்றதும் இருவரும் வெட்கம் கொள்ள  ” நான் போய் எதாவது வாங்கிட்டு வரேன்  ” என்று அவன் அங்கிருந்துசெல்ல.

அவனை பார்த்துவிட்டுதிரும்பியவள், ” இப்படிதான் வைஷூக்கு அப்பா இருக்கு சிவாளிக்கு அப்பா இருக்குன்னு கேட்டு கேட்டு உனக்கு அப்பா வந்துட்டார்.. அடுத்து தங்கச்சி பாப்பாவா… சித்து நினைக்கிறதெல்லாம் நடுக்குதே.. ” என கன்னத்தை ஆட்டி முத்தம் கொடுக்க அவளை கட்டிகொண்டான்..

குறும்பு தொடரும்…இருவரும் வெகு நேரம் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர்… அவனது கைக்குள் அவளது கைகள் இளைபாறியது… அவளது விழிகளில் வடிந்த கண்ணீர் அவன் கைகளில் பட்டு தெரிக்க இருவரும் நினைவிற்கு வந்தனர்…

குறும்பு தொடரும்…