என்னுயிர் குறும்பா

குறும்பா 32

தனது போனை பார்த்தவாறே வெகு நேரம் அமர்ந்திருந்தான் ஆர்.ஜே… சித் அவனை அழைத்து, இன்றைக்கு இருவருக்கும் வேலை இருப்பதாகவும் நாளைய தினம்  டான்ஸ்  க்ளாஸை கண்டினு பண்ணிக்கிறேன் என்று போனை வைத்துவிட, மீண்டும் போனை அடித்து பார்க்க அவர் எடுக்கவில்லை, ஜானுக்கு அழைத்து கேட்டுவிட்டான், அவளுக்கும் தெரியவில்லை…

‘ டான்ஸ் க்ளாஸை தவிர்க்க, அப்படி என்ன முக்கியமான வேலை   ?  ‘  என்றவாறே  யோசித்து கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தது அவனது அலைபேசி.

” ஹலோ…. “

” மகனே ! எப்படிடா இருக்க ? “

” நைனா !! இப்ப தான் உனக்கு போன் பண்ணனும் தோணுச்சா ? ஒருத்தன் கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டி வீட்டுக்கு போயிருக்கானே, புது இடம் புது ஆட்கள், பிள்ளை என்ன பண்றான் எப்படி  இருக்கான், ஒழுங்கா சாப்பிட்டானான்னு  கேட்க ஒரு போன் பண்ணியா நீ… உன் கடமை முடிச்சுன்னு மாமனார் வீட்டு அனுப்பிட்டா, போதும் நிம்மதியா இருக்க அப்படிதானே…. “

” அடபாவி மகனே !!!   என்னடா புகுந்த வீட்டுக்கு போன பொண்ணு மாதிரி இதெல்லாம் கேட்க சொல்லுற. “

” பின்ன புகுந்த வீட்டுக்கு தானே போயிருக்கேன் உன் மகன். அதுவும் மாமனார் வீட்டுல இருக்கேன். ஏன்னா ஏதுன்னு கேட்காம உன் பொண்டாட்டி கூட டூயட் ரொமான்ஸ்ன்னு இருக்கீயா.. “

” ஆமாடா, காலையில,  மதியம், நைட் தினமும் மூணு நேரமும்  மூணு பாட்டுக்கு மூவுவ்மென்ட் போட்டு முட்டி வலியே வந்திருச்சு… போடா !! நீ கல்யாணம் கட்டிகிட்டதிலிருந்து
அவ என்கிட்ட பேசுறதே இல்ல, ஏதோ தயவு தாட்சியம் பார்த்து சாப்பாடு போடுற… “

” சோ சேட் நைனா….”

” சேட் தான் உன் டாட்…. உனக்கென்ன மாமனார் வீட்டுல பொண்டாட்டி கையால சாப்பிடுற, கொடுத்து வச்ச மகராசன் தான்டா நீ மகனே…”

” நைனா,இங்க மாமனார் சமையல்.. சும்மா சொல்ல கூடாது மில்டிரி ஆபிசர், சமையலிலும்  ப்ரபெக்ட்….”

” வாழு மகனே வாழு மகனே !  ” 

” எல்லாம் உன் ஆசி நைனா, அப்புறம் எதுக்கு நைனா போன் பண்ண…”

” அதுவா மகனே !! இன்னைக்கு என் சம்மந்தியும் என் பேரனும் இங்க வந்திருந்தாங்க…”

” என்ன நைனா சொல்லுற நிசமாலுமா.. எதுக்கு இரண்டு பேரும் வந்தாங்க ? “

” அதுவா…”  என அவர்கள் வந்த காரணத்தை கூறினார்.

இருவரும் ஆர்.ஜே வீட்டின் முன் நின்றிருந்தனர்… வாட்ச்மேனிடம் சொல்லிக்கொண்டு உள்ளே சென்றனர்.

வாசலில் இருவரும் வந்த நிற்க, ஹாலிங் பெல்லை அடித்தார் ரகு. அவனோ வீட்டை பார்த்தவாறு நிற்க, அவரோ கலக்கத்தோடு நின்றிருந்தார்.

கதவை திறந்தார் கௌரி, ” யாரு நீங்க உங்களுக்கு யாரு வேணும் ? “

” நான் ஆர்.ஜே தம்பியோட மாமனார், சம்மந்தி இரண்டு பேரையும் பார்த்து பேசனும்…”

” உள்ள வாங்க  ” என்றவர் சோபாவை காட்டி  அமர சொல்லி,  இருவரையும் அழைத்தார்.

” வாங்க வாங்க சம்மந்தி…, ” என ராமன் அவரை வரவேற்க அவர் பின் அமைதியாக வந்தவர் வெறும் வணக்கத்தை வைத்து அமைதியாக நின்றார் சீதா.

இருவரையும் பார்வையால ஆராய்ச்சி செய்ய, சித் பள்ளியில் இருந்து நேராக வந்திருப்பது தெரிந்தது. அவனை அழைத்து வருவது இவர் தான்  என்று எண்ணியவர் அவனது காலை பார்க்க ஸ்ஸூவையும் சாக்ஸ்ஸையும் கழட்டி வெளியை விட்டு தான் உள்ளே வந்திருந்தான்..

அவனது முகத்தை பார்க்க,  சோர்வின்றி உற்சாகத்தோடு இருந்தது தன்னை மறந்து அவனை பார்த்துகொண்டே நின்றார்.

” சொல்லுங்க சம்மந்தி என்ன விசயம்  ? ” கேட்டாலும் உள்ளுக்குள் சிறு உதறல் ஏற்பட்டது.” கல்யாணத்திற்கு சம்மதம் கேட்க வந்த ஜகாவிடமும், ரகுவிடம் கத்திவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு போனது நினைவுக்கு வர மீண்டும் இவர் வந்திருப்பதை எண்ணி கலக்கம் இருந்தாலும் கூட சித்தை அழைத்து வேற வந்திருக்கார். அவனை எதாவது சொல்லிடவாளோ என்ற பயம் வேறு ராமனுக்கு…

ரகு சித்தை பார்க்க, சித் ரகுவை பார்க்க இருவரும் கண்ணால் ” நீ சொல்  ” என்றே பேசிக்கொண்டிருந்தனர்..

‘ அடேய் பேராண்டி கான்சபட்டே இல்லாம கூட்டிட்டு வந்து நீ பேசுனா… உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டானுங்கடா, என்னை தான் ஒரு குழந்தைய நம்பி வந்திருக்கீயேன்னு பெரிய மனுசன் பார்க்காம அந்தம்மா இப்ப கத்த போது ‘

” சொல்லுங்க சம்மந்தி.. “

” அது வந்து  சம்மந்தி… ” என்றவர் ஆரம்பிக்க, ” ரகு… ” என தடுத்தவன்… ராமன், சீதா, நடுவில் போய் நின்றான்.

” தாத்தா, பாட்டி.. உங்களுக்கு இந்த மேரேஜ் பிடிக்கலையா ? இல்லை எங்கலை பிடிக்கலையா ? நானும் ஜானும் வந்தது தான் உங்களுக்கு கோபமா ? “

அவனை தூக்கி மடியில் வைத்தார்.. ” அப்படி இல்லடா கண்ணா !! “

” அப்ப ஏன் நீங்களும் பாட்டியும் கோபமா இருக்கீங்க ? அப்பாவை வந்து பார்க்கவே இல்ல. கல்யாணத்துக்கு ஏன் வரலை ? ” அவன் கேட்க சீதாவை பார்க்க, அவரோ அவனை அதிர்ச்சி மாறாமல் பார்த்தார்.

” நானும் ஜானுவும் எதாவது தப்பு பண்ணிருந்தா சாரி தாத்தா சாரி பாட்டி, ப்ளீஸ் ஆர்.ஜேவை ஏத்துக்கோங்க,   எனக்கு பாட்டி தாத்தா கூட இருக்கனும் ஆசை ஆனா எனக்கு ரகு மட்டும் தான் இருக்கார். பாட்டி இல்லை… எனக்கு நீங்க இரண்டு பேரும் வேணும் நாம ஒரே பேமிலியா இருக்கலாம் பாட்டி, ஆர்.ஜே பாவம் எனக்கு அப்பாவா வந்து, உங்களை அவர் மிஸ் பண்ண கூடாது… நீங்க எங்களை மன்னிச்சு ஏத்துப்பீங்களா தாத்தா பாட்டி… ” என அவர்கள் முன் கைகூப்பி நின்றான்.

” இவன் இவ்வளவு பேசுவனா சம்மந்தி., “

” இதுக்கு மேலையும் பேசுவான் சம்மந்தி, அவன் தான் இங்க கூட்டி போங்க அடம் பண்ணினான் அதான் அழைச்சுட்டு வந்தேன்… “

” எனக்கு அப்பா இல்ல, என் பெயருக்கு பின்னாடி அம்மா பெயர் தான் இருக்கும், எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க, நான் பீல் பண்ணுவேன்,.. ஜானுவும் பாவம் அவ கூட சண்ட போட்டு அவளையும் பீல், பண்ண வச்சிருக்கேன்.. ஆனா ஆர்.ஜே தான் அந்த பீல்லை போக்கினார். எனக்கு அப்பாவ வந்து. நான் ரொம்ப ஹாப்பி இருக்கேன் தாத்தா… ஆனா என் ஹாப்பீக்காக ஆர்.ஜே உங்களை விட்டு எனக்காக எங்க கூட வந்துட்டார். அது தப்புதான் சாரி தாத்தா, ப்ளீஸ் எங்க மூனு பேரையும் ஏத்துபீங்களா… ” என்று அவர் முன் நின்று கேட்டவனை வாரி அணைத்து முத்தமிட வேண்டும் போல இருந்தது சீதாவிற்கு, ஏதோ தடுக்க அமைதியாக நின்றார்..

ரகு, ராமனின் பார்வை சீதாவின் மேல் திரும்பியது… அவர் அவனது உயர்த்திற்கு அமர்ந்தவர்.. ” எனக்கு உன் மேல உன் அம்மா மேல கோபம் இல்லை, உன் அப்பன் மேல தான் கோபம், அந்த கோபம் போனதும் நானே வந்து பேசுறேன்., நீ கவலை படாம போ. ” என்றார்.
அவனுக்கே உரித்தான சிரிப்பை அவர் முன் சிரித்தவன்.. ” தாங்க்ஸ் சீதா… ” என்று அவர் அசந்த நேரம் கன்னத்தில் முத்தம் பதித்தான். அவருக்கு அதிர்ச்சியாகவும் அதே சமயம் வெட்கமாகவும் போனது,  தன்னை சமன் செய்துகொண்டார்.

” ரொம்ப நன்றி சம்மந்தி.. நாங்க வர்றோம் ” என்று அவனையும் அழைத்துகொண்டு வாசலுக்கு வர, அவனே அவனது சாக்ஸ் மாட்ட, கொஞ்சம் தடுமாற, சீதா வந்தவர் போட்டு விட உதவ வந்தார்.

” வேணாம் சீதா !! அதுல ஸ்வேட் ஸ்மேல் அடிக்கும் நானே போட்டுகிறேன்… ” என்றான்.. ” பரவாயில்லை  ” அவனுக்கு உதவினார்.

” தாங்கியூ சீதா..  பாய் சீதா.. ” என டாட்டா காட்டி விட்டுச்சென்றான்..

” படவா ராஸ்கஸ் !!! என் பொண்டாட்டி பெயரை நானே ஒரு நாளைக்கு இத்தனை தடவை சொன்னதில்லை, இவன் சொல்லிட்டு போறான், இதுல முத்தம் வேற… ” பொய்யாய் கோபிக்க

” என்னங்க பொறாமையா ? “

” ஆமா,.. நீ ஏன் கோபப்படல, அவனை அவங்க அம்மாவை நீ ஏத்துக்கலை தானே, உன் மகன் மேல உனக்கு கோபம் தானே… இப்படி வந்தவங்களை சத்தம் போட்டு அனுப்பாம அவனுக்கு உதவி பண்ணிட்டு இருக்க.. “

” பிள்ளை மேல தான் கோபம்.. இந்த குட்டி என்ன பண்ணுச்சு? எனக்கு இவனை பார்த்ததுக்கு அப்புறம் கோபம் எங்க போச்சுன்னு தெரியல. எனக்கு சிறு வயது ராஜூ மாதிரி தான் தெரியுது, எதோ பண்ணிட்டு போயிட்டாங்க… ” என்றவர் செல்ல. இவருக்கு உள்ளே ஏக போக குசி,.. தன் மகனை அழைத்து அத்தனையும் பகிர்ந்தார்.

ஆர்.ஜேயின் கண்கலங்கி போயிருந்தது,. ” டேய் மகனே !! உங்க அம்மா கோபம் குறைஞ்சு உன்னை ஏத்துப்பா, நான் என் பேராண்டி கூட இருக்கனும் ஆசைடா… என்னம்மா பேசுறான்.. இதெல்லாம் பார்க்க மாட்டோமா ஏங்கினதுக்கு இரண்டு மடங்கா  சந்தோசம் வந்திருக்கு  உனக்கு இப்படி பிள்ளைகிடைக்க நாம எல்லாரும் கொடுத்து வச்சிருக்கனும் டா… ” என்றவர் வைத்துவிட,  தன்மகனை மெச்சிகொண்டவனுக்கு ஆனந்த கண்ணீர் நின்ற பாடு இல்லை.. அவனை காண விரைந்தான்.

இங்க இருவரும் வீடு வந்தனர்… ” இரண்டு பேரும் எங்க போயிட்டு வரீங்க,..?”

” அதை உன் பையன்கிட்டையே கேளு ஜானுமா… “

” சித்… இரண்டு பேரும் எங்க போயிட்டு வரீங்க ? ” என்றதும்… ” உன் அப்பாகிட்ட கேளு ஜானு… ” இருவரும் வேற வேற அறையில் நுழைய,

” தோ பார்ரா…யாராவது சொல்லிட்டு போங்களேன். இந்த வீட்டுல யாரு பெரிய மனுசங்கன்னே தெரியமா  போயிட்டு இருக்கு… “

குளித்து முடித்து  உடை மாற்றி ஸ்நாக்ஸ் சாப்பிட்டு படிக்க அமர்ந்தவனிடம். ” சித் எங்க தான்டா போன ? “

” ஜானு,எல்லா நல்ல விசயத்துக்காக தான் போனோம்.. இப்ப படிப்போமா ? ” என கேட்டவனின் காதை திருகியவள், ” கேட்டா பதில் சொல்லு சித்.. அதை விட்டுட்டு பெரிய மனுசன் மாதிரி பேசாத,. ” என்றாள். ”  ஜானு, விடு வலிக்கிது, சொல்லுறேன் ஜானு விடு… ” என்றதும் விட்டவள், ” சொல்லு… ” என்றாள்.

” நாங்க… ” என தயங்கி சொல்லுவதற்குள் அங்கே ஆர்.ஜே வந்து சேர… சித்தை தூக்கியவன் ஒரு சுத்தி சுத்தி சோபாவில் அவனோடு விழுந்து தன் மகிழ்ச்சியை முத்தத்தால் தெரிய படுத்தினான். இரு கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான்.

” என்ன இவ்வளவு சந்தோசம். என்னாச்சு ? “

” சித்… எங்க அப்பா,அம்மாவ பார்க்க போயிருக்கான்.. எனக்காக பேசி மன்னிப்பெல்லாம் கேட்டு வந்திருக்கார் இந்த பெரிய மனுசன்… ” என்றதும்,

” நிஜமாவா சித்… “

” ஆமா ஜானு, ஆர்.ஜே எனக்காக உன்னை மேரேஜ் பண்ணாலும்,அவரோட அம்மா அப்பாவ விட்டு தானே வந்தார். உனக்கு ரகு இருக்கார். எனக்கு நீங்க இரண்டு பேர் இருக்கீங்க, ஆர்.ஜேக்கு இல்ல.. அதான் நான் சாரி கேட்டு எல்லாரும் ஒன்னா இருக்கலாம்ன்னு கேட்டு வந்தேன்… ” என்றதும்

” மகனே !! கூஸ்பம்ஸ் டா… உனக்கு, எப்படி சித் இதெல்லாம் தோணுது. “

” ஆர். ஜே பீல் பண்ண கூடாது ஜானு, அதான்… ” என்றதும் அவனது கன்னத்தில் இதழ் பதித்தான்.. ” சித்… என்ன அப்பான்னு கூப்பிடேன் ஒரு வாட்டி.. ” என்றதும்,

” அப்பா… ” என அழைத்து அவனை அணைத்துகொண்டான்… ஜானுவிற்கும் ரகுவிற்கும் கண்கலங்கியது… ” சித்து கண்ணா… இனி பெயர் சொல்லி அழைக்காம அப்பா அம்மான்னே கூப்பிடு  ” என்றார் ரகு,

” ரகு… அது கஷ்டமாச்சே.. “

” எல்லாம் இந்த ஜானு பண்ண வேலை அம்மான்னு சொல்லி பழக்காம, பெயர் சொல்ல சொல்லி பழக்கிட்டா. இப்ப பாரு கஷ்டம் சொல்லுறான்…”

” அப்பா, ப்ரண்ட்லியா இருக்குமே அவனை அப்படி கூப்பிட விட்டேன்… “

” விடுங்க மாமா.. அவன் எப்படி வேணா கூப்பிடட்டும் என்ன இருந்தாலும் இவன் என் பிள்ளை தான், என் குறும்பா தான்.. ” கொஞ்சி தீர்த்துவிட்டான்.

அன்றைய நாள் மனநிறைவோடு முடிய வழக்கம் போல காலை அவரவர் வேலை செய்ய சித் பள்ளிக்கு செல்ல, ரகு தன் மகன் வீட்டிற்கு சென்றார்.

ஆர்.ஜே விற்கு சூட்டிங் இல்லாததால் தன் மனைவி வீட்டில் இருப்பதால், டான்ஸ் க்ளாஸிற்கு செல்லாமல் வீட்டிலே அவளுக்கு துணையாக இருந்தான். அவள் வீட்டை சுத்தம் செய்ய, அவளுக்கு உதவி செய்தான்.

” ஆமா, மாமா ஏன் இங்க வரது இல்லை ஈவினிங் தான் வர்றார் ? “

” நமக்கு ப்ரைவசி தர, அப்படி செய்றார்.. “

“ம்ம்… ” என்றவன் பொருட்களை எல்லாம் பார்த்தவாறே வந்தவன், சித்துவின் சூட்கேஸை திறந்து பார்த்தான்.

” என் போட்டோஸ் இருக்கு, இதெல்லாம் என்ன ஜானு.. “

” அது உங்க பிள்ளையோட குட்டி மீயூசியம், அவனுக்கு பிடிச்சதெல்லாம் அதுல வச்சிருப்பான்… ” என்றாள்.

” என் போட்டோஸ் அதுவும் கலர் ப்ரிண்ட் ” என பார்த்தவன், அவனது கையெழுத்திட்ட டீஸ்ர்ட்டையும் பார்த்தான்.

” வெங்கி கம்ப்யூட்டர்ல உங்க போட்டோஸ் தேடி ப்ர்ண்ட் அவுட் எடுத்துவைத்திருக்கான்… ” தன்மகனை நினைக்க எப்பொழுதும் உள்ளம் பூரித்து போவதை அறியாது இல்லை ஆர்.ஜே மீண்டும் பார்வை சூழல விட்டவன், ஏதோ கவர் இருக்க பிரித்தான்… அதில் ஆர்.ஜே போட்டோ சிரியதளவில் ப்ரோம் போட்டிருக்க, சந்தேகித்தவன், ” இது யாரோட வேலை ஜானு… என் போட்டோ ப்ரேம்ல இருக்கு  ” என்றவன் கேட்க,

சற்று தடுமாறியவள், ” அது இங்க உங்க போட்டோ எதவுமில்லையே அதான் ப்ரோம் போட்டு வைத்தேன்  ” என்றவள் சமாளித்தாலும் மாட்டிக்கொண்டாள்… ” ஆனா பில்லுல,  வேற டேட் காட்டுதே ஜானு மேடம், நம்ம கல்யாணத்திற்கு முன்னேடியே ப்ரோம் போட்டிருக்கீங்க போல…”

நாக்கை கடித்தவள்  ” ஆட்சுவலா அன்னைக்கு இந்த சூட்கேஸை பார்க்கும் போது தான் தெரிந்தது. சித் உங்க மேல  எவ்வளவு அன்பு வச்சிருக்கான்னு, அவனுக்கு சப்ரைஸ் பண்ணத்தான் ப்ரோம் போட்டு வச்சிருந்தேன்.. ” என்றாள்.

” ம்ம் இந்த பொய்யையும் நம்புறேன் மிஸஸ்.ஆர்.ஜே என்றதும் அவனை இடித்தாள்.. பின் வேலை முடித்து குளித்துவிட்டு இருவரும் அமர, சற்று முன் சுத்த படுத்தும் போது கிடைத்த பன்னாங்குழியை எடுத்து அவள் முன் வைத்தான் .

” உங்களுக்கு இதுவிளையாட தெரியுமா ஆர்.ஜே.. நான் இதை எங்க அம்மா கூட தான் விளையாடுவேன்…”

” நானும் தான் ஜானு, எங்கம்மா கூட சின்ன பிள்ளைய விளையாடுவேன்.. இப்ப தான் நிறைய இன்டூர் கேம்ஸ் போன்ல வர இதெல்லாம் மறைந்து போச்சு.. இதுவும் இன்டரஸ்டிங்கான கேம் தான்.. வா விளையாடலாம்.. ” என்றான்..

இருவரும் சோபாவில் அமர்ந்தனர் எதிரெதிரே நடுவில் பன்னாங்குழியை வைத்தனர்..

அதில் பதினான்கு  குழிகள் இருக்க, ஒருபக்கம் ஏழு என பிரிந்து இருக்க ஒவ்வொரு குழியிலும் ஐந்து முத்துக்கள் விதம் ஒரு பக்கம் முப்பதைந்து முத்துக்கள் ஒரு பக்கம் முப்பத்தைந்து முத்துக்கள் நிறைந்திருக்கும்… முதலில் விளையாடுபவர் தன் பக்கம் இருக்கும் ஏதாவது ஒரு குழியிலிருந்து முத்துக்களை எடுத்து அதன் பக்கத்திலிருந்து முத்துக்களை போட்டவாறே வர வேண்டும்.இதான் விளையாட்டே. அப்படி செய்துகொண்டே வந்தாள் கடைசியாக நமக்கு ஒரு முத்திலிருந்து பல முத்துக்கள் கிடைக்கும் அதே போல எதிரே  இருப்பவரும் விளையாடனும் இவ்வாறு விளையாடி அதிக முத்துக்கள் ஈன்று மற்றவர்களின் குழியை தொக்கம் ஆக்குவதே,இந்த விளையாட்டு.

விளையாடிக்கொண்டே இருக்க, ஆர்.ஜேவே அதிக முத்துக்களை எடுத்தான். ஜானு தோற்க்கும் தருவாயில் இருக்க, அவனை ஏமாற்றி முத்துக்களை அல்லவே ஒரே குழியில் இரண்டு முத்தினை போட அதை கண்டுபிடித்தவன் கைகளை பற்றினான்,..  ” இது போங்கு ஆட்டம் ஜானு நீ தப்பா விளையாடுற.. ” என்றான்.. ” இல்ல இல்ல நான் சரியாத்தான் விளையாடுறேன்.. ” என்றாள் இருவரும் வாதம் செய்ய, சற்றே அவள் கைப்பற்றி இழுக்க, பன்னாங்குழி கீழே விழுந்து முத்துக்கள் தெறிக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் சரிந்தாள்.. இருவரது இதழும்  நூலளவு இடைவெளி விட்டிருக்க, அதையும் குறைக்க அவள் இதழை நெருங்கினான் ஆர்.ஜே..

குறும்பு தொடரும்…