என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா 34

வேலை நாளில் இல்லாத பரப்பரப்பு கூச்சல் எல்லாம் விடுமுறை நாளில்  தான் தென்படும். அந்த அப்பார்மெண்ட் கூட  விடுமுறை  நாளில் ஆட்கள் நிறைந்தே காணப்பட்டது.

குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி திரிந்து விளையாடிகொண்டிருந்தனர். பெரியவர்கள் பேசி அரட்டை அடித்து சத்தமாக பேசி சிரித்துகொண்டிருந்தனர். பெரும் கூச்சலிட்டு காய்கறிகளை விற்கும், தள்ளு வண்டி வியாபாரிகளும் இருக்க, தினமும் இல்லாது இன்றைய நாள் மட்டும் பரப்பாகவே இருந்தது.

இவ்வுலகம், விடியலை தழுவினாலும், இன்னும் இவர்களுக்கு  மட்டும் தழுவாது இருந்தது. அவ்வறை எங்கும் இருளே சூழ்ந்திருக்க, துயில் கலையாது உறங்கி கொண்டிருந்தனர்.

தன் தந்தையை மேல் கையும் காலையும் போட்டுக்கொண்டு உறங்கி கொண்டிருந்தான் சித். ரகுவும் அசதியில் இன்னும் ஏழாது உறங்கத்தோடு உறவாடி கொண்டிருந்தார்..

நைட் ஷிப்ட்டை முடித்து விட்டு வீட்டுக்கு  வந்தாள் ஜானு, இன்னும் கதவு திறக்கப்படாமல் இருப்பதே ஆச்சரியம் தான். காலிங் பெல்லை அழுத்தி காத்திருந்தாள். இரண்டு மூனு முறை அழுத்திய பின்னரே, கதவை  திறந்தார் ரகு.

” என்னப்பா, இன்னும்மா நீங்க எழுந்திரிக்காம  இருந்தீங்க  ? ”  என்று உள்ளே வந்தாள்.

” தெரியலம்மா நல்லா அசந்து தூங்கிட்டேன் போல “

” சரிப்பா தூக்கம் வந்தா போய் தூங்குங்க, நான் பார்த்துக்கிறேன். ” என்றாள்.

” இல்லம்மா, இனி எனக்கு தூக்கம் வராது. நீ போய் ரெப்பிரஷ் ஆகிட்டு வா. நான் உனக்கு காபி போட்டு கொண்டு வர்றேன். ”  என சமையலறைக்குள் புகுந்தார்.

இவளும் தன்னறைக்கு செல்ல, ஆர்.ஜேவும் சித்தும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறே உறங்கி கொண்டிருந்தனர். பெட்டில் அமர்ந்து, அவர்களை பார்த்தவாறு இருந்தாள்.

இதில் யாரு குழந்தை என்று கேட்டாள், அவளிடம்  பதில்  இல்லை என்பாள். தன்னிடம் பேசுவதிலிருந்து முத்தம் கேட்பது வரை சிறுபிள்ளையின் செயலாகத்தான் இருக்கிறது ஆர்.ஜேவின் செயல். சித் வளராத குழந்தை  என்றால் ஆர்.ஜே வளர்ந்த குழந்தை.

தனது இரு குழந்தைகளை ரசித்து அமர்ந்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவே இல்லை.  சித்துவின் நெற்றியில் முத்தமிட்டு எழ அருகே அவனது வதனமே இருந்தது. மெல்ல ஏக்கியவள், அவனது நெற்றியிலும் இதழ் பதித்தாள்.

தன் காலை கடன்களை முடித்து வெளியே வந்த போதும் உறங்கி  கொண்டிருந்தனர்.

” என்னப்பா, நைட் ஓவர் ஆட்டமா ? இன்னும் தூங்கிட்டே இருக்காங்க. “

” ரொம்ப நேரம் சித் படிச்சான் ஜானு, தூங்க லேட் பண்ணிட்டான். அதான் இன்னும் தூங்கிறான். ” என்றதும் அப்படியா ! என்றது அவளது பார்வை..

” என்னம்மா ! நம்பலையா நீ. சித் உட்கார்ந்து படிச்சான் மா. நானும் மாப்பிள்ளையும் எவ்வளவோ சொல்லிட்டோம். சண்டே லீவு தானே நாளைக்கு  படின்னு, கேட்கவே இல்லை. படித்து முடித்து தான் படுத்தான். என்னமோ ரொம்ப நல்லவனா மாறிட்டு வர்றான் சித். “

” நல்லது தான்பா. என்னதான் டான்ஸ் அவனுடைய பேஷ்ஷன்னா இருந்தாலும் படிப்பு முக்கியம். அவன் டான்ஸ் மாஸ்டர் ஆகனும் ஏம் வச்சிருந்தாலும். எதாவது டிகிரி வேணுமேப்பா… அவன் இவ்வளவு ஆர்வம் காட்டுறதே எனக்கு சந்தோசமா இருக்கு”

” சரிம்மா ! அவன் விருப்பப்படி நல்ல வருவான். அவனை நினைச்சு கவலை படாத” என்றார். அவர்களின் பேச்சு சத்தத்தில் எழுத்து வந்தான்.

” குட்மார்னிங் மாமா ! எப்ப வந்த ஜானு ? ” என கேட்டுகொண்டே வந்து அமர்ந்தான்.

” இப்ப தான் ஆர்.ஜே. நைட் தூங்க லேட் பண்ணிடானா சித் ? “

” ஆமா, ரொம்ப நேரம் புக் வச்சுட்டே உட்கார்ந்து இருந்தான். நாளைக்கு லீவு தானேடா நாளைக்கு படிக்கலாம் சொல்லுறேன், அவன் காதுல விழுகவே இல்லை. அப்புறம் அவனுக்கா தூக்கம் வந்தப்பா தான் சார் புக்கை மூடி வைத்தார்.

இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க, நமது நாயகனோ இன்னும் எழாமல் இருந்தான். ” நீங்க சொல்லுறதை கேட்டு எனக்கு கூஸ்பம்ப்ஸ் தான்.. “

” சரிமா நீ பேசிட்டு இருங்க, நான் மீன் வாங்கிட்டு வரேன். ” என்று வெளியே சென்றார்.

அவனுக்காக மீண்டும் பாலை அடுப்பில் வைத்தாள். அவன் மேடையில் அமர்ந்துகொண்டான்..

” ஜானு !  இது கனவா ? நிஜமா ? தெரியலை, நீ மார்னீங்  எனக்கு முத்தம் கொடுத்தீயா ?  “

” நானா முத்தமா ? அதெல்லாம் கொடுக்கலையே. கனவா தான் இருக்கும் ஆர்.ஜே. “

” ஓ… அப்படியா ! அப்ப, காலை கனவு  பழிக்கும் சொல்லுவாங்கல ஜானு. ” என்றான் அவள் முகபாவனை பார்த்தவாறு.

அவன் எங்கு வருகிறான் என்று தெரிந்தாலும் அதனை தெரிந்து கொள்ளாததை போலவே இருந்தாள் ஜானு. ” அதெல்லாம் பொய் ஆர்.ஜே எனக்கெல்லாம் பழிச்சதே இல்லை. ” என்று அவன் கையில் கப்பை திணித்து விட்டு அடுத்த வேலை பார்க்கச்சென்றாள்.

‘ அதானே ! நம்ம என்ன சொல்லி என்ன கேட்டாலும். அப்படியே தெரியாதது போலவே இருக்கிறது. இது என்ன குணமோ இந்த பெண்களுக்கு  ‘ என்று காபியை பருக ஆரம்பித்தான்.

நேரம் செல்ல சித்துவை எழுப்பிவிட்டவள், அவனை குளியலறைக்குள் விட்டு வந்தாள். அன்றைய நாள் துவைக்க இருக்கும் துணிகளை துவைக்க போட்டாள். ஆர்.ஜே பால்கணியில் நின்றவாறு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தான். அவன் செய்வது போலவே சித்துவும் செய்ய, அவனுக்கு இவ்வாறு செய் என்று சொல்லிகொடுத்து தானும் செய்துகொண்டிருந்தான்.

அவர்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்தவாறு சில பெண்கள் நின்றிருந்தனர் அவர்கள் வீட்டு பால்கனியில் ..

திருமணமான பெண்களும் கல்யாணம் ஆகாத பெண்களுமே அவர்களை பார்த்துகொண்டே நின்றிருந்தனர்..

அவர்களை கவனித்தாலும் கவனிக்காது போலவே தனது வேலை பார்த்திருந்தான் ஆர்.ஜே.

கையில் இல்லா டீசர்ட் அணிந்திருந்தவன், முட்டி வரை ஸ்டார்ட்ஸை அணிந்து உடற்பயிற்சி செய்ய, அவனது இரு புஜங்களும் ஏறி இறங்க ஆண்களுக்கு உண்டான உடற்கட்டோடு இருந்த ஆர்.ஜேவின் அழகை ரசித்தவாறே  அங்கே பெண்கள் நின்றிருந்தனர்.

” ஆர்.ஜே, என்ன எல்லா ஆன்ட்டியும்  உன்னையே பார்க்கிறாங்க. “

” அது ஆர்.ஜே பார்க்க அழகா இருக்கேன்னா, அப்புறம் நான் ஒரு செலபிரட்டி வேறையா அதான் சைட் அடிக்கிறாங்க “

” சைட்ன்னா என்ன ஆர்.ஜே ? “

” சைட்ன்னா ! பார்க்கிறது. நம்ம கண்ணுக்கு எது அழகா தெரியிதோ அதை பார்த்துட்டே இருக்கிறது தான் சைட் சித். “

அவனும் அவர்களை பார்த்தவாறே உடற்பயிற்சி செய்தான். அங்கிருந்து அறைக்கு வந்த சித், ஜானுவிடம் சென்றான்.

” ஜானு, ஆர்.ஜே சைட் அடிக்கிறார். எதிர்வீட்டு ஆன்டீஸ் எல்லாரும் ஆர்.ஜேவையே பார்க்க, இவரும் பார்த்துட்டே இருக்கார் ஜானு. ” என்றவன் போட்டு கொடுத்துவிட்டான்..

அவனை அழைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தாள். அங்கே கைகாட்டும் பெண்களுக்கெல்லாம் கைக்காட்டி கொண்டிருந்தான் பின்னால் நின்றாள் ஜானு.

” ஆர்.ஜே சார் ! என்ன பண்றீங்க  ? “

” பார்த்தா தெரியல எக்சர்சைஸ் பண்றேன். ” என்று திரும்ப,  அங்கே சித்தோடு ஜானுவும் நின்றாள்.

” தெரியலையே, எதிர் வீட்டு ஆன்ட்டிஸை சைட் அடிக்கிறது மாதிரில தெரியிது. ”  சப்பாத்தி கட்டை கையில் வைத்தவாறு ஜானுவும் பக்கவாட்டில் சித் வாயில் கைவைத்து, தன் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தான்.

” அது ஜானுமா ! சும்மா பார்த்துட்டு தான் இருந்தேன். சைட்ன்னு யாரு சொன்னா இவனா ? “

” ஜானு !  இவர் தான்  சொன்னார். சைட்ன்னா பார்க்கிறதுன்னு. அப்ப இவர் சைட் தானே அடிக்கிறார் ஜானு. ” மேலும் அவனை மாட்டிவிட்டு இடத்தை காலி செய்தான்.

‘ அட ! எட்டப்பா கூடவே இருந்து கோர்த்துவிட்டு போயிட்டானே. ‘

” இல்ல ஜானுமா ! அவங்க தான் என்னைய  பார்த்தாங்க.. நான் சும்மா எக்சர்சைஸ்  பண்ணிட்டு வேடிக்கை தான் பார்த்தேன்.. “

” ஆர்.ஜே சார் ! நீங்க செலபிரட்டியா இருக்கலாம். உங்களை நாலு பேர் பார்க்கலாம். ஆனா நீங்க பார்க்க கூடாது. பார்த்தீங்க, காலம் முழுக்க குருடனா தான் இருப்பீங்க” என்று எச்சரிக்கை விடுத்து சென்றவளை இமைகொட்டாது பார்த்து நின்றான்.

காலை உணவை முடித்துவிட்டு வெளியே சூட்டீங் சென்றிருந்தான் ஆர்.ஜே. கொஞ்சநேரம் படித்தவன், சிவாளி வீட்டிற்கு சென்றான். அவளோ கீழே சென்றதாக  சக்தியிடம் தெரிந்து கொண்டவன். அவளை தேடிச்சென்றான்.

கதிரையில் கைவைத்தவாறே சோகமாக  அமர்ந்திருந்தாள் சிவாளி.

” சிவாளி, என்னாச்சு ஏன் சோகமாக இருக்க ? சத்தி ஆன்ட்டி திட்டினாங்களா ? “

இல்லை என்று தலையை மட்டும் ஆட்டிவைத்தாள்… ” தென் ஒய் ஆர் யூ சேட் ?    “

” சித், இந்த சந்தோஷ் அண்ணா !  என்கிட்ட லெட்டர் கொடுத்து,  பூஜா அக்கா கிட்ட கொடுக்க சொல்லுறாங்க. எப்ப பாரு என்னையே அனுப்பி விடுறாங்க. அதுவும் அவங்க பேரண்ட்ஸ்க்கு தெரியாம கொடுக்கனுமா! நான் தனியா லிப்ட்ல போகமாட்டேன் உனக்கு தெரியும்ல சித். நான் படி வழியாதான் போய் கொடுக்கிறேன்.

நான் போய் கொடுத்தா அந்த அக்கா ஒரு லெட்டர் கொடுக்கிறாங்க. அதை நான் மறுபடியும் சந்தோஷ் அண்ணாகிட்ட போய் கொடுக்கனுமா அவங்க சிக்ஸ்த் ப்ளாக். எனக்கு கால் வலிக்கிது சித். ”

” சிவாளி அந்த லெட்டரை கொடு ! ” என்றவன் கேட்க, கொடுத்தாள். அதில் தங்கிலிஸ்ஸில் எழுதி இருக்க,  கடைசி வரியில் ஐ லவ் யூ இருந்தது.

” அந்த அக்காவும் அந்த அண்ணாவும் வீட்டுக்கு தெரியாம லவ் பண்றாங்க சித் ! அதான் என்கிட்ட கொடுக்கும்போது, அந்த அக்காகிட்ட மட்டும் தான் கொடுக்கனும் சொல்லுவாங்க. இப்ப என்ன பண்ண சித். வீட்டுல சொன்னா சக்தி, என்னை தான் திட்டுவா ! அப்புறம் அவங்க வீட்டுல தெரிஞ்சா என்னை தான் அந்த அண்ணா திட்டுவாங்க  ” கண்கலங்க நின்றாள்.

” சிவாளி, டோன்ட் கரை. நான் இத பார்த்துகிறேன்.  ” என்றான்.

” சித். நீ என்ன பண்ண போற ? “

” சிவாளி ! வெய்ட். இந்த லெட்டரை பூஜா அக்கா கிட்ட கொடுக்கனும், அவ்வளவு தானே ! நானே போய் கொடுத்துட்டு வர்றேன். நீ இங்கையே இரு ! “

” சித் ! வேணாம், அண்ணாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. நானே போறேன். “

” ம்ம்… ஒ.கே நீயும் என் கூட வா சிவாளி. நாம இரண்டு பேரும் போய் கொடுப்போம். ” அவளை அழைத்துக்கொண்டு  பூஜாவீட்டிற்கு சென்றான்.

காலிங் பெல் எட்டாமல் போக, கதவை தட்டினான். கதவை திறந்து வெளியே வந்தார் பூஜாவின் அன்னை.

” ஹாய் ! சித். என்ன இந்த பக்கம். ஜானு எதுவும் சொல்லிவிட்டாளா ? “

” இல்லை ஆன்ட்டி ! பூஜா அக்கா இருக்காங்களா ? “

” பூஜா அவங்க டாடி கூட வெளிய போயிருக்கா சித். ” என்றார்.

” ஓ.கே ஆன்ட்டி நாங்க அக்கா வந்ததும் வர்றோம்  ” என்று சித்தின் கைப்பிடுத்து சிவாளி இழுத்தாள்.

” சிவாளி ! அப்ப சந்தோஷ் அண்ணா கொடுத்த லெட்டரை எப்படி பூஜா அக்கா கிட்ட கொடுக்க.. ” என்று கெட்டு வைக்க, சிவாளி பயந்து விழித்தாள்.

” சந்தோஷ் ஆ! அவன் என்ன லெட்டர் கொடுத்தான் சித். “

” ஆன்ட்டி ! அதெல்லாம் உங்க கிட்ட கொடுக்க முடியாது. பூஜா அக்கா கிட்ட தான் கொடுக்க சொல்லி கொடுத்தாங்க. உங்க கிட்ட கொடுத்தா திட்டுவாங்க எங்களை ” என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு.

” அப்படியா ! அப்படி என்ன லெட்டர் அது கொடு பார்க்கலாம் ” என வாங்கி பிரித்து பார்த்தவருக்கு புசு புசு வென கோபம் வந்தது..

வந்த வேலை முடிந்தது என சிவாளியை அழைத்துக்கொண்டு சித் ஓடியே விட்டான்.

” சித் ஆன்ட்டிகிட்ட ஏன் கொடுத்த! போச்சு போச்சு, சந்தோஷ் அண்ணா திட்ட போறார். “

” சிவாளி ! பேரண்ட்ஸ் தெரியாம பண்றதெல்லாம் தப்பு. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணி நாமலும் தப்பு செய்ய கூடாது . க்ரேஸி மிஸ் சொல்லிருக்காங்கள, அதான் நான் சொன்னேன். இனி அந்த அண்ணா உன் கிட்ட கொடுக்க மாட்டாங்க லெட்டரை. பீ ஹாப்பீ சிவாளி. டோன் பீல். வா விளையிடலாம்  ” அவளை அழைத்து கொண்டு விளையாடச் சென்றான்..

இருக்குடும்பங்களும் சேர்ந்து தன் பெற்ற செல்வங்களையும் அவர்களையும் மாறி மாறி திட்டி சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.. அப்பார்மெண்ட் மக்கள் வேடிக்கை பார்த்தவாறே நின்றிருந்தனர். சிலர் அவர்களை பிரித்தவாறு இருந்தனர்..

” என்னம்மா !  சண்டை  அங்க ? “

” தெரியலப்பா ! பசங்க வேற அழுதிட்டு இருக்கிறதை பார்த்தா லவ் மேட்டரா இருக்கும் போலப்பா… “

” ஜானு ! ஐ யம் சோ ஹங்கிரி  ” விளையாடி களைத்து பசியோடு, வந்தான்.

” சித்து கண்ணா ! கீழ இருந்து தானே வர,ஏன் பூஜா பேரண்ட்ஸ் சந்தோஷ் பேரண்ட்ஸ்  சண்ட போட்டுகிறாங்க..  “

” ரகு ! இரண்டு பேரும் லவ் பண்ற விசயம், அவங்க பேரண்ட்ஸ்க்கு தெரிஞ்சு சண்ட போடுறாங்க. “

” அப்படியா ! உனக்கு யார் சொன்னா சித் !

” ஜானு ! சந்தோஷ் அண்ணா, கொடுத்த லெட்டரை, நான் தான் பூஜா அக்கா மம்மிகிட்ட கொடுத்தேன். அவங்க அந்த லெட்டரை படிச்சுதுனால, அவங்க லவ் பண்ற விசயம் தெரிஞ்சிடுச்சு. ” என்று அமர்த்தலாக கூறியவனை கண்டு இருவரும் அதிர்ந்தனர்.

” பேரா ! என்ன நீ இந்த வேலை பார்த்துட்டு வர்ற, அந்த பையன் அவங்க அம்மா அப்பாக்கே அடங்க மாட்டான். ரௌடி மாதிரி சூத்தி திரிறான் இந்த அப்பார்மெண்ட்ல. இதுல நீ தான் இந்த வேலை, பண்ணதுன்னு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டான்டா  “

” சித் ! ஏன் உனக்கு இந்த தேவையில்லாத வேலை. விளையாட தானே போன, இப்ப பிரச்சினை இழுத்துவிட்டு வந்திருக்க, கொஞ்ச நாளா இப்படி பண்ணாம இருந்த மறுபடியும் ஆரம்பிச்சுட்டீயா ? “

” ஜானு ! அந்த சந்தோஷ் அண்ணா சிவாளி கிட்ட தான் லெட்டர் கொடுத்தாங்க. பாவம் சிவாளி! ஸ்டெப்ஸ் ஏரி இறங்குறா, அவளை அழைய விடுறாங்க. அப்புறம் இது தப்பு ஜானு ! பேரண்ட்ஸ்க்கு தெரியாம பண்றது தப்பு.  சிவாளி தான் இதுக்கு ஹெல்ப் பண்றான்னு சக்தி ஆன்ட்டிக்கு தெரிந்தா அடிப்பாங்க அதான். நான் பூஜாக்கா மம்மிகிட்ட சொல்லிட்டேன். இனி சிவாளிய டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. ப்ராபளம் சால்வ்ட் ஜானு. “

” சிவாளியோட ப்ராபளம் சால்வ்ட் . ஆனா உனக்கு அவனால ப்ராபளம் வந்தா ? என்ன பண்ணுவ சித்  “

” ஜானு ! ஆர்.ஜே இருக்கார். டோன்ட் வொரி  ” என்றான். சரியாக அவனும் உள்ளே நுழைந்தான். ” என்ன மாமா ? கீழே ஓரே சண்ட என்ன பிரச்சனை ? ”
கேட்டு ஆயாசமா அமர்ந்தான்.

” எல்லா உங்க புள்ள பண்ண வேலை தான் ” என்று முழுவதை கூறி கடைசி வரியில், நீங்க இருக்கீங்களாம், அதுனால சாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துப்பாராம்.. ”  ஜானு கூற ஆர்.ஜேவின் விழிகள் கலக்கம் கொண்டது.

” மகனே ! நீ பண்ணது சரிதான். பெத்தவங்களை ஏமாத்திற பசங்களுக்கு நாம ஹெல்ப் பண்ணகூடாது தான்.எதாவது பிரச்சினை வந்தா கண்டிப்பா ஆர்.ஜே உன் கூட இருப்பேன். அதுக்காக வான்டடா பிரச்சனை வாங்கிட்டு வர்றாத சித், அப்பா பாவம்ல.. ” என்றான்.

” இப்படி பண்ணாத சொல்லுவீங்கன்னு பார்த்தா, அவனுக்கு சப்போர்ட் பண்றீங்க ஆர்.ஜே. “

” ஜானு !  அவன் செய்தது சரி. பெத்தவங்களை ஏமாத்திட்டுருக்க அந்த பசங்களோட லைப்பை நினைச்சு பாரு. எப்படியோ போன்னு விட முடியாது. நாளைக்கு தவறா எதாவது நடந்தா. அந்த பையனுக்கு பிரச்சினை இல்ல, அந்த பொண்ணுக்கு தான். விடு ஜானு,  சித்துக்கு எந்த பிரச்சினை வந்தாலும் நான் இருப்பேன். இதை பத்தி பேசவேணாம்.. ”  என்றதும் முத்தம் கொடுத்து தன் நன்றியை தெரிவித்தான் சித்.

அதன் பின் நால்வரும் மதிய உணவை முடித்து விட்டு, கொஞ்சம் நேரம் உறங்கினார்கள். மாலையாக, சித்தை அமரவைத்து அடுத்த நாள் பரீட்சைக்காக படிக்க வைத்தாள். அவனும் கவனமாக படித்தான்.

அவன் மேல் ஒரு கண்ணிருந்தாலும், ஆர்.ஜே மேலையும் ஒரு கண்ணிருந்தது. ஆனால் ஆர்.ஜேவின் மொத்த கண்ணுமே ஜானு மேல் நிலைத்திருந்தது.

சோபாவில் சாய்ந்து அமர்ந்தவன், அவளையே ரசித்தான். அவளுக்கு தான் அவனது பார்வை உள்ளுக்குள் மாற்றங்களை உண்டாக்கியது. முகமெல்லாம் வியர்வை பூக்க, இதழ்கடித்து தன்னை சமன் செய்தவாறு அமர்ந்திருந்தாள்.

கன்னமிரண்டும் சிவக்க, இன்ப அவஸ்தைகளை அவனது பார்வையால் கொடுத்து கொண்டிருந்தான்.

அவளால் அங்கு அமரவும் முடிய வில்லை.. அவனாவது அங்கிருந்து நகர்வான் என்று எண்ணியவளுக்கு ஏமாற்றம் தான். பார்வை அகற்றாத சிலை போல் அந்த சோபாவில் வாகாய் அமர்ந்துவிட்டான்.

அவளுக்கு நேரமும் ஓடவில்லை, அவனது இம்சைகளும் ஓயவில்லை.. ” சித் ! போதும் நாளைக்கு காலை படிச்சுக்கலாம். ” என்றாள்.

அவனும் சரியென்று உள்ளே வைத்தவன். ” ஜானு ! ஆர் யூ ஓ.கே ? “

” ஏன் சித் !   ஐ யம் ஓ.கே. “

” இல்ல ஜானு ! நீ ரொம்ப நேரமா அன்கம்ஃபோர்டபுலா, பீல் பண்றது போல இருக்கு. அதான் கேட்டேன் ஜானு. “

” அதெல்லாம் இல்லை சித். நீ சிவாளி வீட்டுக்கு  போ. ” என்றாள். அவனும் செல்ல, சோபாவில் உள்ள தலையணையை அவன் மேல் எறிந்தாள். அதை லாவகமாக பிடித்தான்.

” ஆர்.ஜே, ஏன் என்னை பார்த்துட்டே இருக்கீங்க. உங்களுக்கு வேற வேலையே இல்லையா. சித் சொன்ன மாதிரி அன்கம்ஃபோர்டபுலா தான் பீல் பண்ணினேன். இப்படி பார்க்காதீங்க ஆர்.ஜே “

” இதென்ன கொடுமை, என் பொண்டாட்டிய நான் பார்த்து சைட் அடிக்க கூடாதா.. எனக்கு உன்னை பார்க்கிறதை விட வேற வேலை என்ன இருக்கு ஜானுமா ! ” என அவளை இழுத்து தன் கைவளைவுக்குள் அமர்த்திக்கொண்டான்.

” ஏன் உங்க மாமனார் கிட்ட பேச வேண்டியது தானா ! கீழ சும்மா வாக்கிங் போக வேண்டியது தானே ! அத விட்டு என்னையவே பார்த்துட்டே இருக்கனுமா ? ”

” அடியே உங்க அப்பாவா என் பொண்டாட்டி, நீ தானே என் பொண்டாட்டி. உன் அப்பா கிட்ட பேசவே தனியா சாப்டனும் போலையே ! ஆயிரத்தி தொல்லாயிரம் ஆரம்பிச்சு  எஸ்டிடி க்ளாஸ் எடுக்கிறார் உங்க அப்பா.

எனக்கு படிப்புக்கும் ஆகாது டி.. அப்புறம் நான் வாக்கிங் போனா அப்பார்மென்ட்ல இருக்க லேட்டீஸ் எல்லாரும் என்னை தான் பார்க்கிறாங்க, அப்புறம் ஆட்டோகிராப் போட்டோ, செல்பின்னு கூட்டம் கூடான்னா, உனக்கு தான் கஷ்டம். நீ பொறாமை வேற படுவ,  அதான் என் பொண்டாட்டிய ரசிச்சாலே போதும் இங்கையே கிடக்கிறேன்.. ” நீண்ட விளக்கம் கொடுத்தான்..

” ரொம்ப தான், விடுங்க வேலை இருக்கு, ” என எழுந்தவளை, தடுத்தவன். ” கொஞ்ச நேரம் ஜானு, ப்ளீஸ். அப்புறம் நீ வேலைக்கு போய்டுவ.. “

” ஆர்.ஜே சார், இன்னைக்கு எனக்கு லீவ்.  இனி ஒன்வீக் மார்னிங் தான். நைட் முழுக்க பேசலாம், இப்ப வேலை இருக்கு விடுங்க.. ” என்று எழுந்துகொண்டாள். அவனோ அந்த ஒருவாரத்துக்கான இரவை, அவளோடு எப்படி கழிக்கலாம் என்று சிந்தனைக்கு சென்றுவிட்டான்.

”  சந்தோஷ், பீல் பண்ணாதடா ! விடு பார்த்துக்கலாம் “

” எதைடா விட சொல்லுற, எப்படி எங்கப்பன் அடிச்சிருக்கான் பாரு. இதுக்கெல்லாம் காரணம், அந்த சித் தான்டா. அவனை நான் சும்மா விடமாட்டேன் டா.. “

” டேய் சின்ன பையன் டா ! அவனை போய் என்னடா பண்ண போற  “

” அவனா சின்ன பையன், அவன் வேணும் தான்டா இப்படி பண்ணிருக்கான். பூஜா அம்மாகிட்ட வேணும் தான் கொடுத்திருக்கான்.. கண்டிப்பா ஒரு நாள் இதே போல அவன் உடம்பும் வலிக்கிறது மாதிரி எதாவது பண்ணுவேன்டா.. ” என்று தன் நண்பனிடம் சபதமெடுத்து கொண்டிருந்தான்.

குறும்பு தொடரும்.வேலை நாளில் இல்லாத பரப்பரப்பு கூச்சல் எல்லாம் விடுமுறை நாளில்  தான் தென்படும். அந்த அப்பார்மெண்ட் கூட  விடுமுறை  நாளில் ஆட்கள் நிறைந்தே காணப்பட்டது.

குறும்பு தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!