என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா 37

ஆதவனின் ஆட்சி நடுநிலையில் வந்திருந்த வேளையது. பள்ளியில் விளையாட்டு விழாவிற்காக,மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களின் முழுப்பலனையும் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

முதலாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்கள், பெரும் ஆர்வத்தோடு கலந்துக்கொண்டனர்.

ஆசிரியர்கள், முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையில்,உள்ள மாணவர்களுக்குப் போட்டிகளை வைத்துத் வெற்றியாளரைகளைத்,தேர்வுச் செய்துக்கொண்டிருந்தனர்.

ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள், ட்ரில்லுக்காகப் பாட்டைத் தேர்ந்தெடுத்து ஆடப்பயிற்சி அளித்துக்கொண்டிருந்தனர்.
இவ்வாறே, விளையாட்டு விழாவிற்காக மாணவர்களும் ஆசிரியர்களும், முழு ஈடுபாட்டைக் காட்டி வருகின்றனர்.

விளையாடு விழாவில் முக்கிய நிகழ்வான அணிவகுப்பிற்கும் சில மாணவர்களைத் தேர்ந்ததெடுக்கப்பட்டு, அவர்களுக்கும் பயற்சியளித்துக் கொண்டிருந்தனர்.

மாணவர்களை நான்கு அணியாகப் பிரித்தனர். முதல் அணி டைமெண்ட் (வெள்ளை ) இரண்டாவது அணி எமரல்ட் (பச்சை) மூன்றாவது அணி  ரூபி (சிவப்பு ) நான்காவது அணி சாஃப்பையர் (ப்ளு) இதைத் தவிர்த்து என்.சி.சி மாணவர்களும் ஸ்கௌட்ஸ் , என் . எஸ். எஸ்.மாணவர்ளும் அந்த அணிவகுப்பில் கலந்துக் கொள்வார்கள்.

சித்துவும் சூர்யாவும் டைமண்ட் அணியில் இருந்தனர். அவர்கள் இருவருமே, அணிவகுப்பில் கலந்து இருந்தனர். அதே, அணி தான் சந்தோஷ்ஷூம். அவனும் அணிவகுப்பில் கலந்திருந்தான்.

சித்து, அந்த அணிவகுப்பில் கலந்திருப்பதைத் தெரிந்து கொண்ட சந்தோஷ்ஷிற்குத் தனது பழியை தீர்த்துக்கொள்ள, இதை சாதகமாக எடுத்துக்கொண்டான். பயிற்சிக்கு வரும் போதெல்லாம், அவன் சரியாகச் செய்யவில்லை என்று அடிப்பதும், அவனை வேலை ஏவுறதுமாக இருந்தான்.

ஒழுங்காகச் செய்யவில்லை என்றால். பனிஸ்மென்ட் என்றப் பெயரில் அவனை, அந்த மைதானத்தைச் சுத்தச் சொல்லி அலகழிப்பான். இவ்வாறே அவனைப்  படுத்தியெடுத்துக்கொண்டிருந்தான் சந்தோசஷ்.

” பட்டீ, அந்த அண்ணா!  ஏன் உன்னை, இவ்வளவு டார்சர் பண்றாங்க. நீ நல்லா பண்ணாலும், தப்புன்னு சொல்லி, உன்னை அடிக்கிறாங்க. திஸ் இஸ் நாட் பேர் பட்டீ. வா, க்ரேஸி மிஸ் கிட்ட சொல்லலாம்.”

” வேணாம் பட்டீ. ஏற்கனவே, அந்த அண்ணா வீட்டுல அடிவாங்கினதுக்கு காரணம் நான் தான்னு என்னை டார்சர் பண்றாங்க. இப்ப இதையும் போய் சொன்னால்,  இன்னும் அடிப்பாங்க பட்டீ. பரவாயில்லை, விடு . கொஞ்சநாள் தான் அப்புறம், அவங்க எக்ஜாம்ல பிசியாகிடுவாங்க. ” என்றான்.

இதைக்கேட்ட, ஸ்ரவனோ,சித்தைப் பழிவாங்க. க்ரேஸி மிஸ்ஸிடம் சந்தோஷ், சித்திற்குக் கொடுக்கும் டார்சரையெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டான்.

அவளும், சித்தை வைத்து சந்தோஷ்ஷிடம் விசாரித்தாள். சித்தும், அவளிடம் மறைக்க முடியாமல், உண்மையைக் கூறினான்.

” இந்த வயசில, உன் எண்ணத்தை பாரு. நீ தப்புப் பண்ண, அதுனால உங்க வீட்டுல உன்னைக் கண்டிருச்சிருக்காங்க. அதுக்கு சித், என்னப் பண்ணுவான். இன்னொரு, முறை இதே போல நீ அவனை டார்சர் பண்ணினா,நான் பிரின்சிபால் கிட்ட போக வேண்டியது வரும். இதான் உனக்கு லாஸ்ட் வார்னீங். இனி அவனை டிஸ்டர்ப் பண்ணாத.. ” என்று கண்டித்து விட்டுச்சென்றாள்.

அவள் திட்டிச்சென்றதும் , சந்தோசஷ்ஷிற்கு கோபம் அதிகமானதே தவிர குறைவில்லை. தன்னைத் திட்டிச் சென்றதற்கு காரணம் சித்து என்பதால், அவனை அடிக்கவே திட்டம் போட்டான். அதற்காக நாளும் விரைந்து வந்தது.

பள்ளியின் விளையாட்டு விழாவை  பள்ளியில் நடந்தாமல்… அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் வைக்கத் தீர்மானித்திருந்தனர்.

அங்கே சென்றும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்திருந்தனர். அணிவகுப்பிலும் ட்ரில் செய்யும் மாணவர்களை மட்டுமே அங்கே அழைத்துச் சென்றனர்.

சித்துவும் சூர்யாவும் சந்தோசமாக, வந்தனர்.. தொட்டிலில் நீந்திய மீனுக்கு கடலைக்கண்டதும் எழும் சந்தோசமே. அப்பெரும் மைதானத்தைக் கண்ட, மாணவர்களுக்கு  அங்குமிங்கும் ஓடித்திருந்து விளையாடினார்கள்.

அதன் பின், ஆசிரியரின் கட்டளைக்கு இணங்கவே, மாணவர்கள் வரிசையாக நின்று. பள்ளியில் பயின்றதுப் போல, இங்கையும் அணிவகுப்பிற்குப் பயிற்சி செய்தனர்.

வெயிலையும் பொறுப்படுத்தாது  மாணவர்கள், பயிற்சிச் செய்தவாறே அணிவகுப்பைத் தொடர்வதும். ட்ரில் டான்ஸ் ஆடுவதுமாக இருந்தனர்.

க்ரெஸி மிஸ்ஸிடம் ரெஸ்ட்ரூம் சென்றுவருவதாகக் கூறித் தனியாக சென்றான் சித். ரெஸ்ட்ரூம் ஒதுக்குப்புறமாக இருந்ததால், மைதானத்தை விட்டுக் கடந்து சென்றான்.

அவன் தனியேச் செல்வதைப் பார்த்த சந்தோஷ்.. தனது பள்ளியில் பயிலாத, தனது நண்பர்களை வரவழைத்திருந்தான்.

அவர்களுக்கு கண்காட்டவே,சித்தைத் தொடர்ந்து சென்றார்கள். அவனும் ரெஸ்ட் ரூம் சென்று வெளியே வர அவனை மறித்து நின்றார்கள்.

” தள்ளுங்க அண்ணா.. நான் போகனும்  ”
” போ..” என்று அங்கே நின்றனர்.

” அண்ணா ! நான் போகனும். போன்னு சொல்லிட்டு வழி விடாம நிக்கிறீங்களே ! “

” அப்படிதான் நிப்போம்… நீ போ ! ” என்றான் ஒருவன். ஐவர், அவனை சூழ்ந்திருக்க, வழிவிடாமல் நிற்பதைக்கண்டு என்னச் செய்வதென்றுப் புரியாமல் தவித்து நின்றான்.

” அண்ணா ! விடுங்க அண்ணா, போகனும்.. “

” போ… ” என்று அவ்வாறே நிற்க, கடுப்பானான். ” அண்ணா ! தள்ளுங்க. எனக்குப் ப்ராக்டிக்ஸ் இருக்கு,வழிய விடுங்க. தேவையில்லாம ஏன் என் வழியை மறச்சு நிக்கிறீங்க.. “

” ஏய் !! என்ன குரலை உசத்துற,அதான் போன்னு சொல்லிட்டோம்ல.. போகாம நீ நின்னா, நாங்க என்ன பண்றதாம்.. ” என்றான்.

அவர்களை இடித்துவிட்டு செல்ல முயற்சி செய்தவனை. இழுத்து,அடிக்க ஆரம்பித்தனர். அவன் கத்தியும் பலனின்றி போனது. ஆத்திரம் தீர அடித்து நொறுக்கி எடுத்துச்சென்றனர்.

நெற்றியில் இருந்து கால் வரை அடிப்பட்டிருந்தது, அவனால் எழ முடியவில்லை. காலால் மிதித்திருந்தனர். கைகால் அங்காங்கே வீக்கம் கொண்டு உதட்டில், இரத்தம் கசிய,கீழே மயங்கிக் கிடந்தான்..

க்ரேஸியிடம் சொல்லிவிட்டு,சித்தைத் தேடி வந்தான் சூர்யா.. அங்கே அடிப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்த சித்தைக் கண்டதும்.. எல்லாரையும் அழைத்து ஓடிவந்தான்…

” சித், உனக்கு என்னாச்சு, சித்… சித்.. ” என அவனை எழுப்ப, மயக்கத்தில் இருந்தான். உடம்பு முழுதும் காயங்கள் இருந்தது. அவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்..

க்ரேஸி, ரகுவை,அழைத்துக் கூறினாள். ஆர்.ஜேவும் ரகுவும் விரைந்தனர்.

” என்னாச்சு சித்துக்கு ? எப்படி அடிப்பட்டது. “

” ஆர்.ஜே சார்.. நாங்க இங்கப் ப்ராக்டிஸ்ல இருந்தோம். சித் ரெஸ்ட்ரூம் கேட்டுப் போனான். வர நேரமானதுனால, அவன் ப்ரண்ட், சூர்யாவிட்டுப் பார்க்கச்சொல்லி  அனுப்பினேன். அவன் தான் சித் அடிப்பட்டிருப்பதைப் பார்த்து வந்து சொன்னான்.. நாங்க ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தோம். அவனைப் போட்டு யாரோ அடிச்சிருக்காங்க.. ” என்றான்.

” இத்தனை பேர் இருந்து என்ன பண்ணிட்டு இருந்தீங்க க்ரேஸி.. அவன் தனியா போகும்,போது, பெரிய பசங்க யாரைவது துணைக்கு அனுப்பக் கூடாதா ?. அவனுக்குன்னு மட்டுமில்லை. எல்லாருக்கும் சேர்த்துத் தான் சொல்லுறேன். ஒரு சின்ன பையன் ரெஸ்ட் ரூம் கேட்டா, அவனைப் போன்னு தனியா அனுப்புவீங்களா ? அவன் தொலைஞ்சுப் போயிட்டா என்ன பண்ணுவீங்க மிஸ்.. நீங்கன்னு இல்லை எல்லாரையும் தான் கேட்கிறேன். ஒரு சின்ன பையன் வழி தவறிப்போனா என்ன பண்ணுவீங்க.. எனக்கு தெரியாது சித்துக்கு எதாவது ஆகட்டும். நான் போலீஸ்ஸுக்குப் போவேன். ” கத்திவிட்டு, சித்தை கண்ணாடி வழியேப் பார்த்தான்.

” சார்.. ரியலி சாரி. போலீஸ்க்கு எல்லாம் போகாதீங்க. இது எப்படி நடந்துன்னு விசாரிக்கிறோம் சார்.ப்ளீஸ், சார் போலீஸ்க்கு போனா, ஸ்கூல் பெயர் போகும் சார். சாரி சார்.. ” என்று ப்ரின்சிபாலும் கெஞ்சினார்.

” உங்க ஸ்கூல் பெயர் போயிடும் பயப்படுறீங்க, நான் என் புள்ளைக்கு, எதுவும் ஆகக் கூடாதுன்னு பயப்படுறேன். எப்படி அடிச்சுப் போட்டு போயிருக்காங்கன்னு பாருங்க சார்.. உங்களை நம்பித்தானே அனுப்பிறோம், நீங்களே அஜாக்கிறதையா இருந்தா எப்படி.. இப்ப இப்படியானதுக்கு என்னப் பதில் சொல்லுவீங்க… “

“க்ரேஸி, பேரண்ட்ஸ் கேட்கிறாங்க, பதில் சொல்லுங்க. அஜாக்கிறதை ஏன் இருந்தீங்க. குழந்தையைப் பார்த்துக்கிறது தானே உங்களை அனுப்பிவைச்சோம். உங்களால பேரண்ட்ஸ் என்னைக் கேள்வி கேட்கிறாங்க.. அவங்களுக்கு என்னப் பதில் சொல்லுறது சொல்லுங்க. இன்னொரு முறை இப்படி நடந்ததுன்னா, உங்களை வேலை விட்டுத் தூக்கிடுவேன்.. ” அவளை திட்ட, அழுத்துக்கொண்டு இருந்தாள்.

” சார்.. விடுங்க. அவங்களும் எத்தனை குழந்தைகளைத் தான் சமாளிப்பாங்க.. நடந்தது நடந்திடுச்சு.. சித்துக்கு எதுவும்   ஆகாதுன்னு வேண்டிப்போம்” என்றார் ரகு.

” அப்பா, என்னை மன்னிச்சிடுங்க, என்னுடைய கவனக்குறைவு தான்.. அவனைத் தனியா அனுப்பினது, என் தப்புத் தான்.,சித்துக்கு ஒன்னும் ஆகாதுப்பா. சாரி சார். இதுப்போல இனி நடக்காது சார் ” என்றாள்.

ஜானு, பதறியடித்து கொண்டு ஓடி வந்தாள். ” ஆர்.ஜே சித்துக்கு என்னாச்சு ? ” என்று வந்தவளைப் பிடித்துக்கொண்டான். ” ஜானு… யாரோ அவனைப் போட்டு அடிச்சிருக்காங்க.. உள்ளே, ட்ரீட்மெண்ட் போகுது.. “

” நான் போய் பார்க்கிறேன்.. விடு ஆர்.ஜே, “

” ஜானு, சித்துக்கும் ஒன்னும் ஆகாது, உள்ளே டாக்டர்ஸ் பார்த்துட்டு இருக்காங்க. நீ போகவேணாம் ஜானு.. “

“ஆர்.ஜே அவன் வலித்தாங்க மாட்டான், நான் கூட இருக்கேன்விடுங்க ஆர்.ஜே. “

” ஜானு… பொறுமையா இருமா, டாக்டர்ஸ் பார்த்துப்பாங்க… ” அவனை அமர வைத்தான்.

” ஆர்.ஜே அவனுக்கு ஒன்னும் ஆகாதுல… “

” ஜானு… என்ன இது அழுகாத சித்துக்கு ஒன்னும் ஆகாது..” என்றான்.

டாக்டரும் வந்தார். ” அடிச்சிருக்காங்க, அடித்த இடத்திலே இரண்டு மூனுதடவை அடிச்சிருக்காங்க.. அங்காங்க வீங்கிருக்கிருக்கு, ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கோம். ட்ரீப்ஸ் ஏறுது. மயக்கத்தில் இருக்கான்.
டிஸ்டர் பண்ணாம பாருங்க. ” என்று சொல்லிச்சென்றார்.

ஜானு, ஆர்.ஜே, ரகு மூவரும் உள்ளே சென்றனர். தலையில் கட்டும். கன்னத்தில் மருந்திட்டு இருந்தனர்.. கைகாளில் இருந்த சிராய்ப்புகளில் மருந்திட்டுக் கட்டிப் போட்டிருந்தனர்.

சித்துவின் அருகில், அமர்ந்தான். அவனை அந்த நிலையில் அவளால் காண முடியவில்லை… ” யாரு ஆர்.ஜே, என் சித்தை இப்படிப் பண்ணா, யாரு வம்புக்கும் போக மாட்டான். அவனை போய் எப்படி ஆர்.ஜே அடிக்கத்தோணுச்சு… “

” தெரியலமா… அவன் யாருன்னு தெரியட்டும். அவனுக்கு இருக்கு. அவன் முன்னாடி அழுகாத ஜானுமா.. அவனை நாம இதுல இருந்து கொண்டவரனும்.. “

அவனது தலையைக் கோதியவாறே, கண்ணீர் வடிய அமர்ந்திருந்தாள். ” அதான், மாப்பிள்ளை  சொல்லுறாரேம்மா, அழுகாதடா.சித்துக்கு ஒன்னுமில்ல சரியாகி வந்திடுவான்..

அதன்பின் மீண்டும் ஒரு முறை மன்னிப்பை கேட்டுச் சென்றனர். அவர்களிடம் இதனை யார் செய்தது விசாரிக்கச் சொன்னான். அவர்களும் சென்றனர்.,நேரம் செல்ல சித் கண்விழிந்தான்.

அங்கே, ஆர்.ஜே , ரகு , ஜகதீஸ் , வெங்கி ,  ஜானு இருந்தனர்.

” ஆர்.ஜே… ” என்றான். ” சித்துக்குட்டி, யாருடா உன்னை இப்படி அடிச்சது ? உனக்கு யாருன்னு,தெரியுமா ? “

அவன் நடந்தைக் கூறினான். ” ஆர்.ஜே. யாரோ வேணும்ன்னே பண்ணதுப்போல இருக்கு.. எதுக்கு தேவையில்லாம, சித்துக்கிட்ட, வம்பு பண்ணி அடிக்கணும்.,சித்தை பழிவாங்கத் தான் இப்படி பண்ணிருக்கனும். ” ஜகதீஸ் கூறினான்.

” இந்த சின்னப்பையனைப் பழித்தீக்கிற அளவுக்கு, அவன் என்ன பண்ணான்.அவன் மனுசன் தானா  ? குழந்தையைப் போய் பழிவாங்கிருக்கான்.. “

” சித்து, ஸ்கூல்ல எந்தப் பசங்களாவது, உன்னைய டிஸ்டர்ப் பண்ணிருக்காங்களா ? “

” ஆர்.ஜே, அந்த சந்தோஷ் அண்ணா தான், டிஸ்டர்ப் பண்ணாங்க  ” என்று நடந்தைக் கூறினான்.

” மாப்பிள்ளை, ஒருவேள அவனா இருக்குமோ ? அவன் ரொம்ப மோசமானவன். அவன் இதை செய்திருக்கலாம்.. “

” சந்தோஷ் தான் அடிச்சான். ஆதாரம் இல்லாம சொல்ல முடியாது மாமா.. விடுங்க இத நான் பார்த்துகிறேன். ” தற்காலிகமாக அந்த பிரச்சினை தள்ளிப்போட்டான் ஆர்.ஜே.

அடுத்தவந்த நாட்கள் மாறி மாறி சித்துவை பார்த்துக்கொண்டனர்.

டான்ஸ் ஷோவிலிருந்து மேனேஜர் வந்தார். சித்தை குறித்து விசாரித்தவர்.ஆர்.ஜேவிடம்பேசிவிட்டு சென்றார்.

நடக்க இருக்கும் போட்டியில், ஆடும் குழந்தைகளில் முதல் பத்து குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டி. அதில் சித்து கலந்துக் கொள்ளவில்லை என்றால், அந்த காம்பெடிசனில்  அவனால் ஆட முடியாமல் போய்விடும்.. ஆடும் குழந்தைகளில், சித் கொஞ்சம் ப்ரபலமாக இருக்க. அவன் இல்லாத போட்டி என்றால் ரசிகர்கள் பார்வையாளர்கள் கேட்பார்கள்..

டீ.ஆர்.பி குறைந்துவிடும் பயத்தில். அவனை தேடி வந்தனர்.
ஆனால். டாக்டரோ, தற்போது சித், ஸ்ட்ரையின் பண்ணக்கூடாது என்றுச் சொல்லிச்சென்றார்.

சித்துவின் கனவு, இதை விட்டால், இன்னொரு ஷோவில் கூட ஆடமுடியும் தான். ஆனால், அவனது உழைப்பு பாதியில் தடைப்பட்டு போனால். அவனது மனநிலை என்னவாகும். கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிக் கொண்டு வந்தவனை, மீண்டும் கைவிட்ட நிலை வந்திடுவான் நம்பிக்கையை விட்டுவான். தான் ஆசைப்பட்டது கிடைக்காத பட்சத்தில் தற்கொலைச் செய்யும் மனநிலை இருக்கின்றனர், இன்றைய காலக்குழந்தைகள்..

தனது முயற்சிப் பயனின்றி போகும் போது, மனம் வெகுண்டு தற்கொலை முயற்சிக்குத் தள்ளப் படுகிறார்கள். தன்னால் இனி முடியாது என்று மனதைவிட்டு அந்த முடிவுகளை எடுக்கிறார்கள்… அந்தளவு யோசிக்கும்  யுத்தி சித்திற்கு இல்லை என்றாலும். போட்டியில் கலந்துக்கொள்ளாமலே தோல்வியைத் தழுவது, காலில் சிக்கிய, சிறுமுல்லைப்போல்,
உறுத்திக்கொண்டு தான் இருக்கும்.

அவனை அந்த நிலைக்கு ஆளாக்கிட கூடாது என்று தீர்க்கமாக இருந்தான்.அவன் கண்டிப்பாக ஷோவில் கழுத்துக்கொள்வான் என்று அவர்களுக்கு வாக்குக் கொடுத்தான்.

ஏற்கனவே அதற்காக பயிற்சி எடுத்திருந்தான் சித்… அதனால் புதிதாக சொல்லித்தர வேண்டியதில்லை சித்துவிற்கு.

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர் சித்தை. அவனை காண,வைஷூவும் விஷ்ணுவும் வந்தனர். அவனைப் பார்த்துத் திருநீரைப் பூசிவிட்டாள் வைஷூ. அவனை கன்னத்தில்,இதழ் பதித்தான் விஷ்ணு… அவனிடம் பேசிவிட்டு சென்றனர்.

” சித், நாம டான்ஸ் ப்ராக்டிஸ்க்கு போலாமா ? ” அவனை அழைத்தான்.

” ஆர்.ஜே, என்ன பேசுறீங்க,அவனுக்கு அடிப்பட்டிருக்கு, இப்ப,போய் டான்ஸ் ப்ராட்டிக்ஸ் சொல்லுறீங்க ?  அவனால எப்படி முடியும் ? “

” அவனால, முடியும் ஜானு.. இந்த டைம் விட்டால், ஆடவே முடியாம போயிடும். அதான் அவனைக் கூப்பிடுறேன்.. “

” டான்ஸ்  ஷோ தானே, அடுத்த முறைக்கூட ஆடிக்கலாம். ஆனால், அவனை ஆடச்சொல்லி, மேலும் அவனை கஷ்டபட சொல்லுறீங்களா ? இன்னும் அவனுக்கு வலிக்குறையில, இதுல ஆடச்சொல்லி, மேலும் கூட்ட போறீங்களா ? வேணாம் ஆர்.ஜே.. “

” ஜானு, புருஞ்சுக்கோ அவனால முடியும், கைல தான் வலியிருக்கு, கால்ல அவ்வளவு வலிகிடையாது.. ஆடி முடிச்சதும் பெய்ன் கில்லர் கொடுத்திடலாம்… ஆனால், இந்த லெவலை விட்டால். அவனால், அடுத்து அந்த காம்பெடிசன்ல ஆடவே முடியாம போயிடும் ப்ளீஸ்,ஜானு.. “

” போதும்… முடியாது,நான் சித்தை எங்கும் அனுப்பமாட்டேன். கொஞ்சம் கூட உங்களுக்கு மனச்சாட்சி இல்லையா, அவனுக்கு அடிப்பட்டிருக்கு, அவனுக்கு வலிக்கும் உங்களுக்குத் தெரியாதா. அவனை ஆட கூப்பிடுறீங்க.. முடியாது அவன் எங்கும் வரமாட்டான். “

” சித், நீ சொல்லு உன்னால ஆடமுடியாமா ? முடியாதா ?”

” என்னால, முடியும் ஜானு. நான் போய், ப்ராக்டிஸ் பண்றேன். ப்ளீஸ், ஜானு நான் போறேன். ” என்றான்.

” சும்மா ! இரு, சித். நான் அனுப்பமாட்டேன் ஆர்.ஜே. அவன் எங்கையும் போக வேண்டாம். ” என்றான்.

” ஜானு, மறுபடியும் ஆரம்பிக்காத, புருஞ்சுகோமா.. இது சித்தோட ஆசை, கஷ்டபட்டு. இதுக்காக நிறைய முயற்சி எடுத்திருக்கான். ப்ளீஸ் அதைக் கெடுக்காத, ஒத்துக்கோமா. “

“என்ன பேசுறீங்க, எனக்கு அவனோட ஆசைவிட. எனக்கு அவன் தான் முக்கியம். இன்னும் அவனுக்கு வலியிருக்கு, அவனை ஆடவைச்சு, இன்னும் வலிக்க வைக்கப்போறீங்களா, அவனால  வலித்தாங்க முடியாது ஆர்.ஜே. அடிப்பட்டவனை ஆடவைக்கனும் நினைக்கிறீங்க. உங்களுக்கு துடிக்கலையா அவன் வலியில துடிக்கும் போது, பெத்த எனக்குத் தானே தெரியும்.. நீங்க பெத்த குழந்தையா இருந்தால் புருஞ்சிருக்கும்  ” என்று வார்த்தைகளை விட்டாள்.

” ஜானு…. ” என அவன் கத்திய பின்னே, அவள் தன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிய,அவனை பார்த்தாள் அவளை எரிப்பதுபார்த்தவன், ”  நான் பெறாதப் பிள்ளைதான் தான். ஆனால் அவன் எனக்கும் பிள்ளைத்தான்.. ” என்றவன். அவனைத் தூக்கிச்சென்றான்.

கோபத்தில், அறிவை இழுந்து சிலர் விடும் வார்த்தைகள் எத்தனை வீரியத்தைக் கொண்டது என்பது எதிரில் உள்ளவர்களுக்கு வலித்தப்பின்னே உணருவோம்..

குறும்பு தொடரும்..ஆதவனின் ஆட்சி நடுநிலையில் வந்திருந்த வேளையது. பள்ளியில் விளையாட்டு விழாவிற்காக,மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களின் முழுப்பலனையும் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

குறும்பு தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!