என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா

இருவரும் ஜானு வருகைக்காகக் காத்திருந்தனர்  இல்லை பயந்திருந்தனர்.

அவ்வீட்டில் கடிகாரத்தில் முட்கள் சுத்தும், சத்தமும், விசிறி சுத்தும் சத்தம் மட்டுமே  கேட்டது. டீ.வியைக் கூட இணைக்கச் செய்யாதது, அப்படியொரு நிசப்தம் அங்கே.

சித்துவும்  ரகுவும்  பயந்துகொண்டே இருந்தனர்.. கொஞ்சம் தாமதமாகவே வீட்டிற்குள் நுழைந்தாள், ஜானு.

” ஏன்மா, லேட்டு ? ஓவர் வொர்க்கா… ?” கேட்டு அவளது தற்போது நிலையை ஆராய்ந்தார்.

” வொர்க் இல்லைப்பா, இன்னைக்கு காலைல ப்ரண்டு வீட்டுக்குப் போயிட்டு வரும்போது ஒருத்தன் என் காரை இடிச்சுட்டான்ப்பா. அதை சர்வீஸ் பண்ண கொடுத்தேன் இரண்டு நாளாகும் சொன்னாங்க அதான் ஆட்டோல வந்தேன்… “

” சரிம்மா… போய் ரெஃபிரஷ் பண்ணிட்டு வா மா, நான் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்… “என்று சமையலறைக்குள் செல்ல, அங்கிருந்து கழன்றார்.

” சித்…  என்னாச்சு? ஏன் அமைதியாக இருக்க ? ”   தனது முடியை அள்ளிமுடித்தவாறு கேட்டாள்.

” நத்திங் ஜானு…! ” என்றவனை வினோதமாக பார்த்து விட்டு குளிக்கச்சென்றாள்.

” ரகு.. ரகு.. எனக்கு பயமா இருக்கு ? ” அவரைக் கட்டிகொள்ள… ” எனக்கும் தான்டா… உன் அம்மா நல்ல மூடுல தான்டா இருக்கா ? “

” அப்ப, பேப்பரைக் காட்டி மூட மாத்தவேணாம்…. நீ எனக்கு பேப்பர்ல சைன் போட்டு கொடுத்திடு ஒ.கே வா…”

” அப்புறம், இந்த மாதிரி செய்தால். உன்னை என்னையும் பிரிச்சுவிட்டுருவா, உங்கம்மா.. எதுவா இருந்தாலும் சமாளிச்சு தான்டா ஆகணும் வேற வழி இல்லைடா…”

” இந்த எக்ஜாம், மார்க், ரெங்கார்ட் யாரு ரகு கண்டுபிடிச்சா…?”

“கிடைச்சா மட்டும் என்ன பண்ண?அவன் தான் செத்து போயிட்டானே, செத்து போனவனைச் சொல்லி ஒண்ணும் ஆகபோறதில்ல பேரா… ! உன் அம்மாவ எப்படி சமாளிக்க போற…?”

” நீ தான் ஹேல்ப் பண்ணனும் ரகு. உன்னை விட்டா யாரு என்னை காப்பாத்துவா சொல்லு….? ரகு ஒரு ஐடியா… அவங்க முன்னாடி நீ என்னை திட்டுற மாதிரி திட்டு… நீயே திட்டுறதை பார்த்து ஜானு அமைதியாகிடுவா எப்படி “

” அப்படிங்கற…! அப்ப நான் திட்டுனா நீ ஃபீல் பண்ணமாட்டியா சித்..?”

” எனக்கு நீ திட்டுனா, சிரிப்பு தான் வரும் ரகு ஃபீல்ங் வராது… ” அவன் கூற,அவனை முறைத்தவர்,

” சரி சரி ரகு… கொஞ்சம் உண்மையா திட்டுறது மாதிரியே நடி ரகு… எனக்கு சிரிப்பு வர மாதிரி திட்டுன்ன அவ்வளவு தான் பார்த்துக்க.. ஒ.கே வா? “

” இருந்தாலும் நான் சொதப்பிருவேனோ பயமா இருக்குடா பேரா…”

” உன் பொண்ணு, பையனை திட்டிருப்ப தானே, அதே போல தான் ரகு, ப்ளீஸ் ரகு, ப்ளீஸ்…,” எனக் கெஞ்ச,

” என்னமோ போடா மாதவா, அவ சொல்லுற போல உன் கூட சேர்ந்து நான் மாறிட்டே போறேன்… இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ…. ” காஃபியை டைனிங் டேபிளில் வைத்து விட்டு, இருவரும் அவள் வருகைக்காக காத்திருந்தனர்.. அவள் கதவைத் திறக்கும் ஆரவம் கேட்டு ரகு அவனது பேப்பரை கையில் எடுத்து வைத்துகொண்டவர் அவனிடம் கத்தினார்..

” என்ன மார்க் எடுத்திருக்க சித் நீ… இதெல்லாம் மார்க்கா… பார்டர்ல பாஸ் ஆயிருக்க, உன்னையெல்லாம் என்னதான்டா பண்றது.. என் பொண்ணு இராபகலா உழைக்கிறதெல்லாம் எதுக்குடா அவளுக்காகவா,
எல்லாம் உனக்காக டா… உன்னையும் டாக்டரா ஆக்கணும் எவ்வளவு கனவு காணுறா.. உனக்கு சொல்லிகொடுத்து வீட்டுல வேலையும் பார்த்து, வேலைக்கும் போற அவளுக்காக நீ  நல்ல படிக்க வேண்டாமா, என்னடா என்னடா மார்க் இது முப்பதைந்து நாற்பத்தாருன்னு.. என் பொண்ணு தொண்ணுருக்கு குறைய எடுக்க மாட்டா தெரியுமா… பேரன்னு செல்லம் கொடுத்தது தப்பா போச்சுடா, அதான் படிப்புல கூட  உனக்கு விளையாட்டு தனம். ஜானு திட்டும் போது உனக்கு சப்போர்ட் பண்ணதெல்லாம் தப்புன்னு இப்ப தான் தோணுது… இனி உனக்கு நான் சப்போர்ட் பண்ணமாட்டேன். ஜானு கிட்ட இத காட்டு, இன்னும் திட்டுவா,  ரகுன்னு என்கிட்ட, வராத, நான் உனக்கு சப்போர்ட் பண்ணமாட்டேன் பேரா… எப்படியோ போ…  ” என பேப்பரை ஏறிந்தார். அவனோ இன்னும் அவர் தெளித்துவிட்ட நீர்துளியைக் கண்ணீர் துளியாய் சுமந்து அழுவது போல் சோகமாக முகத்தை வைத்துகொண்டு நின்றான்…

அவரது கோபத்தை வெகுநாட்களுக்கு பிறகு கண்டவள். பதறியடித்து கொண்டு சித் அருகில் வந்தாள்… ” என்னப்பா ஆச்சு, நீங்க சித் கிட்ட கத்தவே மாட்டிங்க. ஏன்பா இவ்வளவு கோபம்…”

” பின்ன, என்னம்மா, மார்க்கை பார்த்தீயா… எவ்வளவு கம்மியா வாங்கிருக்கான்னு பாருமா, உன் கஷ்டம் அவனுக்கு தெரியலமா, அதான் கோபம் வந்திருச்சு. ஏதோ விளையாட்டு பிள்ளையா இருக்கான்னே, கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் செல்லம் கொஞ்சின்னா, தலைமேல உட்காருவான் போல. இது சரி வராதும்மா, இவன டூசனுக்கு அனுப்பு,. நீ படிக்க வைச்சு கஷ்டபடாத, இவனுக்கு நீ பாவம் பார்க்காதடா… இவன் கேட்டதெல்லாம் செய்றனாலதானே படிக்காம இருக்கான்… இனிமே உனக்கு எந்த செல்லமும் கிடையாது நானும் ஜானுவ போலத்தான் நடந்துக்க போறேன்.. ” அங்கு நிக்காமல் விறு விறுவென வெளியே சென்றுவிட்டார், ‘ இன்னும்  நின்றால், கைகால் நடுங்கி  தன் மகளிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் வெளிநடப்பு செய்துவிட்டார், ரகு.

தன் மகனைப் பார்த்து இரக்கப் பட, பத்து பொருத்தத்தையும் பொருத்திக் கொண்டு அமைதியின் உருவமாய் தன் தாயைக் காண, அவர்களின் எண்ணப்படியே அமைதியாக அமர்ந்து தன் மகனை தன் மடியில் அமர்த்திக்கொண்டாள்.

” சித் குட்டி, தாத்தா திட்டிட்டாருன்னு, ஃபீல் பண்ணாத , அடுத்த முறை தாத்தா திட்டாத அளவுக்கு நீ மார்க் எடுத்து காட்டணும்.. என் சித்து சமத்து குட்டில, படிச்சு எடுப்பான் என்னடா குட்டி…” எனஅவன் முகமேந்தி கேட்டாள்,

” சாரி, ஜானு…. நெக்ஸ்ட் டைம் நான் மார்க் எடுப்பேன், ப்ராமிஸ் ஜானு… ” என்றவனை அணைத்து முத்தமிட்டாள்.’ அப்பாடா…. கிரேட் எஸ்கேப் சித்.. ரகு கிரேட் அக்டீங் மேன்… ‘ என்றெண்ணி முடிக்கும்  முன்னே சிவாளி அழுதுக் கொண்டே ஓடிவந்தாள்.

சிவாளி சிணுங்கி கொண்டே ஜானுவின் அருகில் அமர்ந்தாள்.

” ஏன் சிவாளி, அழுகிற என்னாச்சு ? “

” ஜானு ஆன்ட்டி, அம்மா திட்டிட்டாங்க… ” கண்ணைகசக்கிக் கொண்டு அழுதாள்.. ” ஏன் குட்டிம்மா திட்டினாங்க,.. நீ என்ன பண்ண ? “

” மேத்ஸ்ல இரண்டு மார்க், தமிழ்ல ஒரு மார்க் குறைஞ்சதுக்கு திட்டிட்டாங்க  ” என அழுக, சித்துவிற்கோ பயம் மீண்டும் எழுந்தது.

‘ ஐயோ, இப்ப தான் என் ஜானுவை அமைதி படுத்தினோம். அதுக்குள்ள இவ வேற வந்து ஏத்திவிடுறாளே…! சிவாளி நீ ஏன் வந்த? ‘ என முழித்துக்கொண்டிருந்தான்.

” ஒன் மார்க் குறைஞ்சதுக்கா திட்டுறா அந்தச்  சக்தி… நீ வா சிவாளி கேட்போம்  ” என இருவரையும் அழைத்துகொண்டு சிவாளி வீட்டிற்கு சென்றாள்.

” வா ஜானு… என்ன திட்டினதும் மேடம் அங்க வந்துடாங்களா… “

” ஏன் சக்தி, அவளை திட்டுற? ஒரு மார்க் இரண்டு மார்க் தானே போச்சு,அதுக்கு போய் திட்டுவாங்களா… “

” ஜானு… இதை இவ கவனிக்காம விட்டாள். நாளைக்கு டென்த், டூவில்த் ரிசல்ட்ல இதே அலட்சியம் வரும். இப்ப இருந்தே கவனிச்சு திட்டுனாதான் நாளைக்கு இந்த தப்பை பண்ண தோணாது  “

ஜானுவும் சித்துவும் ஆ- வென பார்த்தனர்…. ” அப்படி பார்த்தா, இவனை நான் என்ன பண்ண சக்தி? வாங்கிட்டு வந்த மார்க் பார்த்தால்… நீயேல்லாம் என்ன பண்ணுவீயோ….”  சிறியதாக ஆரம்பித்தாள் ஜானு.

‘ சிவாளிளிளி…. ‘ என காதில் புகைவராத குறையாக முறைத்தான் .. ” அவளை ஏன் முறைக்கிற சித்..? நீ அவக் கூடத்தானே படிக்கிற அவங்க வாங்கற மார்க் பாதில வாங்கிட்டு வர நீ.. ” என்றதும் ‘ ப்ளான் சொதப்பல்… ரகு எங்க இருக்க ஹேல்ப் மீ மேன். ‘ என வேண்டினான். கடவுளாய் பார்த்து அனுப்பி வைத்தது போல் உள்ளே நுழைந்தான் வெங்கி .

” அப்பா…. ” என ஓடி அவனை அணைத்தவள், சக்தியைப் பற்றி பத்த வைத்தாள்.

” ஆரம்பிச்சுட்டீங்களா.. ?எக்ஜாம் பேப்பர் வந்திடக் கூடாது, குழந்தைகளைத் திட்ட ஆரம்பிச்சிடுவீங்களே…. சக்தி, நான் உன்கிட்ட பலமுறை சொல்லிட்டேன். அவ தப்பு செஞ்சா அதுக்கு திட்டு நல்லத்தை சொல்லிக் கொடு, நான் எதுவும் சொல்ல மாட்டேன். பட் மார்க் வைச்சு திட்டாதே சொல்லிருகேன்.

” அப்படி திட்டலைன்னா.. ஒழுங்க படிக்க மாட்டாங்க.. இப்ப இருந்தே சொன்னாதான், டென்த் , டூவில்த் ரெங்க் வரும்ங்க..”

” அடியே ! போர்த் தான்டி படிக்கிறா… இவ காலத்தில இந்த எக்ஜாம்ஸ்   இருக்கான்னு பாப்போம். அப்படி இருந்தாலும் அவ எவ்வளவு எடுக்கிறாளோ அவ்வளவு போதும் உன் பொண்ணு நல்லாதான் படிக்கிறா ரெங்க் ஹோல்டர் தான் போதாதா… நீ இப்படி கொடுக்கிற ப்ரசர் தான் நாளைக்கு அவளுக்கு அதுமேல பயம் வந்திடும் படிக்கிற விசயம் அவங்க விருப்பத்தோட படிக்கணும், நம்ம திணிச்சு ப்ரசர் பண்ணி படிக்கக் வைக்கிறது தப்புமா… அவங்க பட்டர்ஃபலை போல சுதந்திரமா விடுங்க.
உனக்கு தான் சொல்லுறேன் ஜானு…

அவன் பாஸ் ஆகிட்டு வர்றானா பாரு, அது போதும் அந்த அளவுக்கு நம்ம குழந்தை  படிப்பு விசயத்தில சரியா இருக்காங்க நினைச்சுகோங்க. வாசிக்கக் கூட தெரியாம இன்னும் இருக்கத்தான் செய்றாங்க குழந்தைங்க… ஃப்யூசர் ஃப்யூசர் அவங்களை திணிச்சு, பயமூற்றி, அழகான இந்த ப்ரசண்ட் வாழ்க்கை இழக்கச் செய்தீடாங்க… ஃப்யூசர்ல அவங்க என்ன ஆகணும் ஆசைபடுறாங்களோ அது போல வரட்டும்.. அவங்க ஆசை படி வளரட்டும்..

நீங்க டிசைன் பண்ண வேணா அவங்க லைப் அவங்க போற ரூட் சரியா போறாங்களா? கீழ விழுகாம போறாங்களா? பாருங்க. விழுந்தால்  சரி பண்ணனும்.. நீங்க ஒரு பாதை இதுல போன்னு வற்புறுத்தாதீங்க.. ” என்றதும் சிவாளி தன் தந்தை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்.

அதனை ஏக்கமாய் பார்த்த சித்.. அங்கிருந்து வெளியே வந்துவிட்டான்..  ” சித் சித்… ” என  மூவரும் அழைக்க அதனை காதில் கேட்காது நடந்தான். தன் மகனின் ஏக்கத்தை அறியாத தாயா அவள்.. அவளும் அவனை தொடர்ந்தாள்.

ரகு அப்படியே நடந்தவர், தன் மகன் ஜகதீஸ் வீட்டிற்கு வர வாசலிலே நிறுத்தியது மருமகளின் குரல்.. ” என்னடி மார்க் வாங்கிருக்க… ஒழுங்க தானடி படிக்கிற அப்புறம் ஏன்டி…? ” என வைஷூவை திட்ட, அவளோ தன் தந்தையின் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.

” நான் இங்க கத்திட்டு இருக்கேன்… உனக்கு ஹேம் கேட்குதா… அந்த சித் கூட சேர்ரதுனால தான் இவ்வளவு திமிரு உனக்கு… “

” மா,. நீ என்னை மட்டும்  திட்டுமா, ஏன் சித்துவை இழுக்கிற… ?டோன்ட் டாக் அபௌட் ஹிம்…”

” அவனை சொன்னதும் உனக்கு ஏன்டி கோபம் வருது…? இங்க பாரு சித்.. சித்.. அவன் பின்னாடியே சுத்துன. அவ்வளவு தான்டி சொல்லிட்டேன்..”

” மா.., அவன் என் கசின்.நான்அவன் கூட தான் சேருவேன்..”

” அவன் உன் கசின்னு தெரியுமா டி.. அவன் யாரோ யார் பெத்த பிள்ளையோ அவன் உனக்கு கசினா…?” என்று வார்த்தைகள் விட, இதைக் கேட்ட ரகுவிற்கும் கோபம் வந்தது.. இதுவரை அமைதியா இருந்த ஜகதீஸ்க்கும் கோபம் வந்தது..

” இங்க பாரு. வைஷூ உன் பொண்ணு, நீ அவளை திட்டு நான் எதுவும் சொல்ல மாட்டேன்… ஆனால் என் தங்கச்சியையும்  சித்தைப் பத்தியும் பேச உனக்கு உரிமை இல்லை அபி.. குழந்தைங்க முன்னாடி என்னடி பேசுற.. ?உனக்கு அவங்களை பிடிக்கலைன்னு சொன்ன, அவளும் இங்க வரதில்ல சித்தையும் இங்க விடுறதில்ல. உனக்கு பிடிக்கலைன்றனால வைஷூவோ விஷ்ணுவோ, ஏன் நானும் பழகக் கூடாது பேசக் கூடாதுன்னு சொல்ல உனக்கு உரிமை இல்ல அபி…!” என்றான் கடுமையாக,

” உங்க தங்கச்சி, தங்கச்சி பையன சொன்ன கோபம் வந்திருமே… ” என முனங்கியே திரும்ப, அங்கே ரகு நிற்பதைக் கண்டு அமைதியானாள்…. ” வாங்கப்பா.. ” என அவனும் அவரை அழைக்க,  உள்ளே நுழைந்தார்.

” தாத்தா… ” என குழந்தைகளும் தாவிக்கொள்ள, அவர்களை கொஞ்சினார்.. அபி,காஃபி கொண்டுவந்து கொடுக்கு மறுக்காமல் குடித்தவர், குழந்தைகளுடன் விளையாட்டினார். நேரமாக, வீட்டிற்குக் கிளம்பினார்.. அவருடன் ஜகதீஸூம் கிளம்பினான்..

இருவரும் நடந்தனர். ” அப்பா சாரி… அபி அப்படி பேசுவான்னு நினைக்கல…!”

” நீ ஏன்டா சாரி கேட்கிற… ?அபியைச் சொல்லி ஒண்ணுமில்லடா… ஜானு வாழ்க்கைல எடுத்த முடிவை அபிக்கு பிடிக்கல. ஜானுவால அபிக்கு ஏற்பட்ட கஷ்டங்களால அப்படி பேசிட்டா… !ஆனா, நீ இந்த சூழ்நிலையும் ஜானுவையும் சித்தையும் விட்டுக்கொடுக்காம இருக்கிறது சந்தோசம்ப்பா..” என்றார்.

” அப்பா… அவ என் தங்கைப்பா… உங்களுக்கு அடுத்து நான் தான் அவளை பார்த்துக்கணும்.. இத்தனை வருசம் என்கூட என் கைப்பிடிச்சு வளர்ந்தவ. இப்பையும் அந்த அண்ணன் தங்கை உறவைப் பற்றி தான்ப்பா இருக்கோம். என்ன கொஞ்சம் தள்ளி இருக்கோம். அவளை விட்ற மாட்டேன்ப்பா… அவ என்னோட இன்னொரு அம்மா…” என்றதும் தன் மகனை எண்ணிப்பெருமிதம் கொண்டார்…

” அப்பா.. ஜானு சித்துவை திட்டினாளா…?”

” அதை ஏன்டா கேட்கிற? ” என நடந்தை அவர் கூறி, இருவரும் சிரித்துகொண்டே வீடுவந்தனர்.

குறும்புதொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!