‘உனது சுதந்திரம் என்பது மற்றவர்களைப் பாதிக்காத வரை மட்டுமே.’
Your rights are legal only until it’s not affecting other lives.
2003 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமையால் மரணம் அடைந்தவர், ‘ஜேன் லோங்ஹர்ஸ்ட்/jane longhurst. அவரின் மரணத்திற்கு மட்டும் அல்ல உலக அளவில் பல பாலியல் வன்கொடுமைக்கு, ஆட்கடத்தலுக்கு,பல மரணங்களுக்கு ஒரு அரக்கன் காரணம்.
இந்த அரக்கன் ஏதாவது ஒரு வடிவில் நம் இல்லங்களில் படுக்கை அறை வரை நுழைந்து விடும் அளவிற்கு ஆற்றல் கொண்டவன்.மகளை இழந்த அவர் அன்னை இன்றளவும் சமூகத்தைப் பிடித்து இருக்கும் இந்த அரக்கனை, எதிர்த்துப் போராடி கொண்டு இருக்கும் liz longhurst போராட்டமும், 2012ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்து போன குழந்தை, ஏப்ரல் ஜோன்ஸ்/april jones, ஹைதெராபாத் டாக்டர் பாலியல் வன்முறை இந்தக் கதைக்கான அடித்தளம்.
சசி அக்கா உள்ளிட்ட பல எழுத்தாளர்கள், ‘தரம் இல்லாத மூன்றாம் தரப் படைப்புக்களை, எதிர்த்து முகநூலில் குரல் கொடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே.
அவர்களின் இந்தத் துணிகர எதிர்ப்பும், அவர்கள் எதிர்க்கும் வகையில், ‘கலை’ என்ற பெயரில் சமூக, குடும்ப கட்டமைப்பையே சிதைத்து கொண்டு இருக்கும் வீடியோ, புத்தகம், வலை பக்கங்கள் மிகப் பல.
இப்படி சமூகத்தில் பெருகி வரும் குற்றங்களின் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அரக்கன் இது.
‘ஒரு குழந்தையை, பெண்ணைச் சதை பிண்டமாக, தன் கொடூரங்களை தீர்த்துக் கொள்ள கிடைக்கும் ஒரு பொருளாக மட்டும்’ பார்க்கும் கண்ணோட்டம் இந்த அரக்கனால் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது.
திருமதி லாங்ஹர்ஸ்ட் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் சால்டர் ஆகியோர் குற்றவியல் நீதி மசோதா/Criminal Justice Bill 2009 இல் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய ‘தீவிர ஆபாசத்தின்’ உரிமையைத் தடைசெய்யும் புதிய சட்டம் வெற்றிகரமாகக் கொண்டு வந்தனர்.
இந்தியாவிற்கும் இது போன்ற சட்டம் மிகவும் தேவை.
இதுவும் சில நிஜ மனிதர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட பிம்பமே. நம் வீட்டில், அக்கம் பக்கம் வீடுகளில் நிச்சயம் இவர்களை நாம் கடந்து வந்திருப்போம்.
‘அட! இது அவங்க இல்லை’ என்று யோசிக்க வைக்கும் நிஜ மனிதர்களின் பிரதிபலிப்பே இவர்கள் வாழ்வு.
சசி அக்கா போன்றோர் கண்ணுக்குத் தெரிந்த இந்த அரக்கனின் ஒரு கிளையை எதிர்த்து நின்றனர்.ஆனால் கிரேக்க மெடூசா போல், ஆக்டோபஸ் போல் இந்த அரக்கனிற்கு பல முகம் இருக்கிறது.
அதில் சில நாமே அறியாமல் நம் இல்லங்களில், பூட்டப்பட்ட நான்கு சுவர்களுக்குப் பின்னால் புத்தகம், வீடியோ, இன்டர்நெட், மொபைல், கம்புயூட்டர் மூலமாய் உள்ளே நுழைந்து இல்லறத்தை, சமூக கட்டமைப்பை, தனி மனித ஒழுக்கத்தை, சமுதாய கோட்பாடுகளைச் சின்னா பின்னமாக்கி கொண்டு இருக்கிறது என்பது அதிர்ச்சியான விஷயமே.
ஒரு வன்கொடுமை நடந்த பிறகு, ‘ என் மகன், கணவன், மகள், சகோதரன், சகோதரி அப்படி அல்ல’ என்று சமூகத்தின் முன் அவமான பட்டு நிற்பவர்கள் இங்கு அநேகம்.
இப்படியும் நடக்க வாய்ப்புகள் உண்டு.உங்கள் வீட்டுடன் சேர்த்து மற்றவர்கள் வீட்டினையும் அந்த அரக்கன் அழிப்பதற்கு முன்பு உங்கள் மொபைல், கம்ப்யூட்டர் பத்திரம்’ என்று சொல்ல முயன்று இருக்கிறேன்.
போதை மருந்துபோல் இதற்கும் அடிக்ட் ஆனவர்கள் வெளியே தெரியாமல் கோடிக்கணக்கில் உண்டு. இதற்கான தெளிவான டிரீட்மென்ட், வழிகாட்டுதல், இந்த அரக்கன் இவர்களைக் கொடூர குற்றங்கள் செய்யக் கொண்டு செல்வதற்கு முன் தடுப்பது நம் ஒவ்வொரு குடும்பத்தின் கடமை.
தடுக்க முடியும் குற்றங்களைத் தடுக்காமல் துணை புரியும் ஒவ்வொருவரும் குற்றவாளிகளே!
நாம் குற்றத்திற்கு துணை போகும் குற்றவாளிகளா இல்லை எதிர்த்து நின்று குடும்பங்கள், சமூகம் அழியாமல் காக்கும் தூணாய் நிற்கப் போகும் நிஜ வாழ்வின் போராளிகளா?
இந்திய அளவில், உலக அளவில் பேமஸ் வழக்குகள், இந்தியாவில் அதன் தாக்கம் என்று இங்குக் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஒன்றிற்கு ரெண்டு முறை சரி பார்த்த பின்னரே கொடுக்கப் பட்டு உள்ளது.
ovov முடிந்ததும், இந்த, ‘சங்கமம்’ ஆரம்பமாகும்.வாரம் பிரதி செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ud பதிய படும்.
சொல் குற்றம், பொருள் குற்றம் எக்குற்றம் இருப்பினும் மன்னிப்பு வேண்டுகிறேன்.
மற்ற எல்லா கதைகளுக்கும் கொடுத்த உங்கள் அன்பும், ஆதரவும், கருத்துக்களும், ரெவியூகளும் அன்புடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் உங்கள் ஹனி.
Sincere Thanks to
Tamilnadu police Department
Tamilnadu cyber crime division.
Books, articles referred-
• Vakul Sharma Information Technology law and practice.
• Nandan Kamath, Law relating to computers Internet and E- commerce (2017).
Statute:
• Information Technology Act, 2000.
• The Indian Constitution.
• Indian Penal Code, 1860.
• Information Technology (Intermediary Guidelines) Rules 2011
• POSCO ACT
International Journal of Transgenderism, Philadelphia.
Greenwood Press.
Responding to Sexual Violence: Pathways to Recovery. Wellington: Ministry of Women’s Affairs.
Victoria University of Wellington.
Covenant Eyes, Inc.
Aisha K. Gill- University of Roehampton, United Kingdom
Karen Harrison2 University of Hull, United Kingdom.
Times magazine.
Times of India.
The Hindu.
Website: www.ecpat.org
The guardian
The Witherspoon Institute
need your love and support as usual
with love yours
honey