என்றும் இருப்பாள்!

93483613_10221954264708698_3574553666729803776_n-7593ef73

என்றும் இருப்பாள்!

“ஏய் ராஜி எங்க டீ ஓடற? ஒரு இடத்துல ஒழுங்கா உக்கரவே மாட்டியா?! இப்படி அடக்கம் இல்லாம இருந்தா போற இடத்துல என்ன சொல்லப்போறாங்களோ?!” என்று முனகியபடி வாழை தண்டை சமைத்துக்கொண்டிருந்தாள் சுப்பு பாட்டி .

ஏழாம் வகுப்பு பள்ளி முடித்துவிட்டு பின்னர் டியூஷன் முடித்து விட்டு களைப்புடன் வீடு திரும்பிய ராஜிக்கு மோர் கொடுத்தாள் பாட்டி. “தேங்க்ஸ் பாட்டி. நான் பிரின்ட் வீட்டுக்கு போயிட்டு வரேன் பாட்டி. பை”. என்றாள் ராஜி. என்னடி இது இப்போதான் வந்தாய். மணி 6 ஆயிடுச்சு இதுக்கு மேல எங்கயும் வெளில போகாத டீ”. என்று பாதி கவலையுடனும் பாதி பயத்துடனும் கூறினாள் சுப்பு பாட்டி.  “அட என்ன பாட்டி, இன்னைக்கு குரூப் ஸ்டடி. போகியே ஆகணும். இல்லைனா என்ன கங்க ல சேத்துக்க மாட்டாங்க. பை”. என்று வேகமாக தன் சிக்கிளை மிதித்துக்கொண்டு சென்றாள் ராஜி.

அடுத்த வேலை சமைக்க தன் பேத்திக்கு மிகவும் பிடித்த சேனை வறுவலை சமைக்க தொடங்கினாள் சுப்பு பாட்டி. சேனையும் சேமித்து முடிந்தது. சாதமும் வடிந்தது. பாட்டிக்கு கவலையும் அதிகரித்தது. “என்ன இன்னும் ராஜிய காணுமே. இந்த பொண்ணு எங்க போச்சு. கடவுளே, காமாட்சி அம்மா, இவளை சீக்கிரம் வீட்டுக்கு கொண்டு வா என்று வழக்கம் போல் வீட்டில் உள்ள இரும்பை தண்ணியில் போட்டாள் பாட்டி”.

சிறிது நேரம் கழித்து, ட்ரிங் ட்ரிங் என்ற சத்தத்துடன், “பாட்டி நான் தான் கதவை திர. ரொம்ப பசிக்குது ” என்றாள் ராஜி. உள்ளே வந்த ராஜிக்கு தன் சேனை வருவலையும் மிளகு ரசத்தையும் சூடாக பரிமாறினாள் சுப்பு பாட்டி. பசியுடன் வேகமாக சாப்பிட்ட ராஜியை கண்டு பாசத்துடன் புன்னகை பூத்தாள் சுப்பு பாட்டி.

இரவு உணவு முடித்து வழக்கம் போல பாட்டி மடியில் படுத்து அரட்டை அடிக்க தொடங்கினாள் ராஜி. “பாட்டி எனக்கு ஒரு டவுட். ரொம்ப நாளா கேக்கணும் னு நெனச்சேன் மறந்துட்டேன்.” என்றாள் ராஜி. ராஜியின் தலையை கோதியபடி பாட்டி சொன்னாள்,”ஹ்ம்ம்…போன முறை ஏதோ பழமொழி சொல்லி டவுட் கேட்டு என்னையே மடக்கிட்டாய். இப்போ என்ன கேக்க போரையோ. சரி கேளு டீ.” என்றாள் சுப்பு பாடி.

சிரித்த்துகொன்டே கேட்க தொடங்கினாள் ராஜி.”எப்போ பாத்தாலும் போற இடத்துல என்ன சொல்ல போறாங்களோ ன்னு சொல்றியே அப்டினா என்ன பாட்டி. நான் எங்க போக போறேன்?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் ராஜி.

சிரித்த்து கொன்னடே கூறினாள் பாட்டி. “இதையே தாண்டி நான் என் பாட்டியிடம் கேட்டேன். அதுக்கு என் பாட்டி, போக போக நீயே தெரிஞ்சிப்ப ன்னு  சொல்லிட்டா டீ.”

“என்ன பாட்டி இப்படி சொல்லி என்ன ஏமாத்தலாம் னு பாக்கறியா” என்று கேட்டாள் ராஜி. “அது இல்லடி என் ராஜி குட்டி, பாட்டி உனக்கு ஒண்ணே ஒன்னு சொல்லித்தறேன். வாழ்க்கைல நீ ஓடலைனா வாழ்க்கை உன்ன விட்டு ஓடிடும்.” என்றாள் சுப்பு பாட்டி.

குழம்பியபடி தலையை சொறிந்துகொண்டே ராஜி சொன்னாள்,”இப்போ போடணுமா இல்ல ஓடிஏ கூடாதா? என்ன பாட்டி இப்படி குழப்பிட்ட. ந தூங்க போறேன். நாளைக்கு சீக்கிரம் எழுப்பு கிளாஸ் இருக்கு.” என்று கூறி கண்களை மூடிக்கொண்டாள் ராஜி. தன் செல்ல பேத்தியின் நெற்றியில் முத்தமிட்டு அவள் முகத்தை ரசித்தபடி அமர்ந்தாள் சுப்பு பாட்டி.

இரவு போய் கதிரவன் வர தொடங்கிவிட்டான். “அம்மா அம்மா, தண்ணி தா அம்மா”. என்ற குரலை கேட்டு குழப்பத்தில் எழுந்தாள் ராஜி. தன் இரு பிள்ளைகளின் அழகிய முகங்களை பார்த்து சிறிது நேரம் கழித்துதான் ராஜிக்கு புரிந்தது இவை அனைத்த்தும் கனவு என்று. தன் சிறு வயதில் பாட்டி கூறிய அனைத்தும் கனவில் கண்டதை எண்ணி ஆச்சரியம் அடைந்தாள் ராஜி.

உடனடியாக அலமாரியில் இருக்கும் தன் சுப்பு பாட்டியின் புகைப்படத்தை பார்த்து கூறினாள்,”பாட்டி, அன்னைக்கு நீ சொன்னது இப்போ தான் புரியுது. என்ன ஓட வேண்டாம் னு நீ சொன்ன. ஆனா இன்னிக்கு நான் என் இரண்டு பிள்ளைகள் பின்னால் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன். வாழ்க்கையில் ஜெயிக்க ஓடலைனா வாழ்க்கை நம்மலைவிட்டு ஓடிடும் னு நீ சொன்னது புரியுது”.

வாழ்க்கையின் பல அழுத்தங்களால் மனம் தளர்ந்து நிற்கும் ராஜிக்கு பாட்டியின் இந்த கனவு மேலும் தெம்பு தரும் மருந்தாக அமைந்ததை நிணனித்து ராஜி கண் கலங்கினாள். “நீ இன்னும் என் கூடத்தான் இருக்க பாட்டி. என்ன பாத்துகிட்டே என்னைக்கும் என் கூடவே தன் இருப்ப.” என்று தன் கண்களில் பொங்கிவரும் கண்ணீர் துளிகளை துடைத்து தன் இரு பிள்ளைகளையும் கட்டி தழுவிக்கொண்டாள் ராஜி.

ஒரு பெருமூச்சு விட்டு தன் கூந்தலை முடிந்து கொண்ட ராஜி, தன் நாவில் இருந்த சேனை வருவலின் சுவையையும் தன் நெற்றியில் இருந்த பாட்டியின் முத்தத்தின் ஈரத்தையும் உணர்ந்து திகைத்து நின்றாள்!!!!…………….

Aishwarya Venkateswaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!