என் அழகி

images (2)-cbe9873c

ஏய் அழகி என்ன பாரு டி…..என்று தன் அருகில் இருந்த தன் ஒரே சொந்தமான மனைவியை கேட்டான் கோபாலன்.

 

எய்யா நான் அழகியா?…… சும்மா இங்க நின்னுட்டு என்ன பாக்குறத விட்டு வேளைக்கு நேரமா கெளம்பி போயா…….நேத்தைக்கே அந்த மேஸ்திரி நீ சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்ட……இனிமே உனக்கு கூலி கொறைச்சு தான் தருவேனு சொல்லிட்டு போனான்….என்று அங்கலாய்த்தாள் கண்ணகி…..

 

எப்படி புள்ள இந்த நிலைமையில் உன்ன விட்டுட்டு  நான் அங்க நிம்மதியா இருக்க முடியும்….. அத அந்த மேஸ்திரி கிட்ட சொன்னா அவன் வேற புரிஞ்சுக்க மாட்டங்கிறான்……..அவனுக்கு புள்ள குட்டிலாம் இல்லையா என்ன………நிறைமாசமா இருக்க உன்ன தனியா விட்டுட்டு என்னால வேலை பார்த்துட்டே இருக்க முடியல புள்ள….._____கோபாலன்

 

விடுயா…..இங்கன நான் மட்டும் தனியாவா இருக்கேன்…..அதான் பக்கத்துல திருப்பதி அண்ணா,கோகிலா அக்காலாம் இருக்காங்களே……._____கண்ணகி

 

என்னமோ புள்ள…..பாப்பா வர்ற நேரம் ஆவ ஆவ கொஞ்சம் பயமாய்ருக்கு……என்று தன் கவலைகளை கூறினான் கோபாலன்.

 

இந்தாயா இதுல சோறும் ஊறுகாவும் மட்டும் தான் இருக்கு சமாளிச்சுக்கோ…….என்று தன் கையில் இருந்த பாத்திரத்தை நீட்டி,ஒரு காலாக கம்பை ஊன்றி ஒற்றை காலில் நின்றிருந்தாள் கண்ணகி.

 

சரி புள்ள……பத்திரமா இரு…..நான் வேலை முடிஞ்சு ராவைக்கு வெரசா வர பாக்குறேன்……… எதானும் வேணும்னா கோகிலா அக்கா கிட்ட சொல்லி மூர்த்தி அண்ணனுக்கு கூப்ட சொல்லு…….நான் வரப்போ வாங்கியாந்து தரேன்……._____கோபாலன்

 

சரி யா நீ கெளம்பு…..நான் பாத்துக்கிறேன்…..என்று தைரியமாய் வழியனுப்பிவைத்தாள் கண்ணகி…..தனக்கு வரப்போகும் பிரச்சனைகளை அறியாமலேயே.

 

          (வருவாள்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!