என் இமைக்குள் “நறும் பூவே நீ நல்லை அல்லை “

என் இமைக்குள் “நறும் பூவே நீ நல்லை அல்லை “

“நறும் பூவே  நீ நல்லை அல்லை” 

 

நறும் பூ இதை தாமரை என்றும் சொல்லலாம் நீரில் வளரும் பூ.நாயகியை  அதைக்கொண்டு விழித்த விதம் அருமை…

குறிஞ்சி நில காதல் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் ஊடல்,ஒருவித கோபம், இருவருக்கிடையான சண்டையை  கூற அதிகமாக பயன்படும் “நல்லை அல்லை” எனும் சொல் கதைக்கு மிகப்பொருத்தமாய். 

 

காதல் கொண்டவன் தன்னை ‘வேண்டாம்’  எனும் வார்த்தை தலைவியிடம் இருந்து கேட்க விரும்பாது அதற்கு  அஞ்சி அவள் விருப்பத்தையும் கேளாமல் அவள் தந்தை பெற்றிருந்த கடனை முன்னிறுத்தி அவளை மணம் முடிக்கிறான்.  

 

நகர் புர வாழ்வில் இருந்தவள் கிராமத்து வாழ்க்கைக்கு தன்னை  பொருத்திக்கொள்ள முடியுமா என நினைத்து வந்தவள் ஒரே மாதத்தில் பொருந்தியும் போகிறாள்.கணவன் காதலையும் புரிந்து அவன் பரிசுத்த காதலை ஏற்றவள் அவள் காதலை அவனுக்கு வழங்க நினைத்த நேரம்  சகுனியாய் தலைவன் கைகளில் தலைவி அவள் முன்னால் காதலனுடனான படங்கள்… 

 

பயந்து போகிறான், தன் காதல் தேவதை  தனக்கு கிடைத்தும் அவள் தனக்கு சொந்தமில்லயா என்று தடுமாறி கொஞ்சம்  தடம் மாறுகிறான். 

 

அவன் நிலை சரியாக புரிந்துக் கொண்டவளோ சரியான முறையில்  அவனை கையாண்டு இடையே ஏற்பட்ட பிணக்கை தகர்த்தெறிகிறாள்.

 

இதோ இதை சகியாத முன்னால் காதலனோ,  

அவள் சந்தோஷத்தை குழைக்க எண்ணி  செய்த காரியம் நாயகி வீடு விட்டு  தலைவன் விட்டு நாடு விட்டு நாடு செல்கிறாள். (எழில் மிகு இலங்கைக்கு )

ஒரு சில நாட்களே பிரிந்தனர். ஜென்மங்கள் ஒன்றாய் இருந்து பல ஆண்டுகள் பிரிந்த ஏக்கம் இருவரிடையே.முன்னால் காதலன் இடையே வரும் நேரங்களே இவர்களிடையே புரிதலும் காதலும் உற்றெடுக்கின்றது என்பைதை ஏனோ அவன் அறியான். 

 

இவள் கொண்ட பிழையை தாயாய்  தாங்கிய தலைவன் அன்னையோ , தலைவனுக்கு மட்டும் தாயாகிய நேரம்  செய்திட்ட பிழை தலைவியின் நெஞ்சில் சிறு மனக்காயத்தை ஏற்படுத்திடுகிறது.

நாயகியின் சகோதரி அதுபோலவே  நாயகனின் சகோதரி இருவருமே இவர்களோடு பிணைந்து நல்லுறவாய். 

 

நாயகியின் தந்தை மீது பொறுப்பில்லாதவர் எனும் காரணத்தோடு பிடித்தமின்மை. அவருக்குமே தன் அழகு பெண்ணை கிராமத்தானுக்கு கட்டிக்கொடுக்க விருப்பமில்லை.

 

முன்னால் காதலன் அவன் மீது கொண்ட காதல் பெண்ணின் காதலை உணர்ந்து கை பிடிக்கிறான்.அவளோ நவநாகரீகமானவள். இருந்தும் தன் காதல் மொத்தத்தையும் கொடுத்த காதலனுக்கு விரும்பியபடி தன்னை ஒட்டுமொத்தமாய் மாற்றிக்கொண்டவள்.தன் காதலன் செய்த தவறை உணர்ந்து அதை தன்னால்  சரிசெய்ய முடியாவிட்டாலும் தன்னால் முடிந்ததை செய்தாள். கர்ப்பத்தை இழந்து அதற்காய் தன் காதல் கணவன் செய்த பிழையே காரணம் எனக்கருதி தலைவன் தலைவியரிடையே அதற்காய் மன்னிப்பு வேண்டி நிற்கிறாள்.தலைவன் அவன் நிலை உணர்ந்து அவனுக்காய் அவனிடம் பேசுகிறான்… இங்கு அவனோ வாசகன் மனதில்  இன்னும் உயர்ந்து விடுகிறான்… 

 

இவ்வாறு ஒட்டுமொத்த மேன்மையான  மென்மையான காதல் தம்பதிகளின் காதல் கதை இது.  

 

நாயகன் :மாதவன் 

நாயகி : பல்லவி 

 

இனிதான அழகியின் அழகிய எழுத்து நடையில் வாசகனை என்றும் போல் இன்றும் கவர்ந்துவிட்டார்… 

வாழ்த்துக்கள். 

 

வாசகியாய், 

இமையி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!