என் உயிரே பிரியாதே 4

என் உயிரே பிரியாதே 4

                                                                                                        பிரியாதே 4

 

கான்பிரன்ஸ் முடிந்தாயிற்று, சக்கர்வர்த்தி சிவாவை ஒன்றுக்கு இருமுறை வீட்டிற்க்கு அழைத்தும் விட்டார். ஆனால் சிவா அவனது பிரஸ்ண்டேஷனை முடித்து தான் வர சரியாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு, கான்பிரன்ஸின் இறுதி நாளில் அவனது ஆய்வு கட்டுரையை சமர்பித்து பேசிக்கொண்டிருந்தான்.

 

”ஒரு சிறுவனின் துக்கமின்மையை அவன் ஆய்வு கடுரையில் கொண்டு வந்துள்ளான். அவன் பெயர். மெக் அமெரிக்காவில் வாஷிங்க்டன் பகுதியில் தாய், தந்தையுடன் வசித்து வருகிறான். பகலில் துறு துறுவென இருக்கும் மெக், இரவில் துக்கத்தை தொலைத்துவிட்டு பகலில் நடமாடுவது போல அவன் இருக்கிறான். இதை அவன் வீட்டில் பெற்றோர்கள் கவனிக்க வில்லை. ஆனால் அவன் வீட்டிற்க்கு அருகில் வசிக்கும் ஒரு பெண்மணி கவனித்து மெக்கின் தாயிடம் ஒரு நாள் கூறியுள்ளார்.”

 

‘உங்க பையனுக்கு துக்கத்துல நடக்குற வியாதி இருக்க.’

 

”இல்லையே, அவன் இரவு ஒன்பதுகெல்லாம் அவனோட அறைக்கு போயிடுவான்.”

 

அண்டை வீட்டு பெண்மணி, “இதோ உங்க பையன் தூக்கத்துல நடக்குறதை நான் ஒரு வீடியோவா எடுத்தேன். முதல் நாள் சாதாரணமா விட்டுட்டேன் அடுத்தடுத்து அவனோட செயல்கள்ல தான் எனக்கு குழப்பமாகிருந்தது. உங்ககிட்ட சொன்னா, நீங்க இல்லைனு தான் சொல்லுவீங்க, அதான் நான் இப்படி செய்ய வேண்டியாதாகி போச்சு மன்னிச்சுக்கோங்க. உங்க பையனுக்கு துக்கத்துல நடக்குற வியாதி இருக்கா? இல்லை ஏதும் அமானுஷய்ம் அவனோட உடம்புல இருக்கானு பாருங்க.” என அந்த பெண்மணி மெக்கின் தாயிடம் நோய்க்கும் பார், பேய்க்கு பார் என்ற பழமொழியை நாசூக்காக சொல்லிவிட்டு சென்றார்.

 

குழம்பிய மெக்கின் தாய், தன் கணவனிடம் சொல்ல, அவரும் ஒரு நாள் கவனித்து பார்த்து மகன் இரவில் தூக்கத்தில் நடக்கிறான் என புரிந்துகொண்டார். அடுத்த நாளே மருத்துவரை சந்தித்து, மகனின் நடவடிக்கைகளை தாயும், தந்தையும் சொல்ல, அவரும் மெக்கை பரிசோதிக்க ஆரம்பித்தார்.

 

“உன் பேரென்ன ..”

 

“மெக் ஆண்ட்ரசன்..” மெக்கிடம் படிப்படியாக அவனின் படிப்பு, விளையாட்டு, என்ன பிடிக்கும், பிடிக்காது, அவனது தினசரி வேலையை கேட்டுகொண்டே வந்தார்.

 

“இதென்ன மெக்..” கையில் ஒரு அறிதுயில் கடிகாரத்தை வைத்துகொண்டு கேட்டார்.

 

“திஸ் இஸ் ஹிப்னோடிஷம் வாட்ச்.”

 

“இப்போ நாம ஒரு கேம் விளையாடலாம்… நான் ஒன், டூ , த்ரீ சொல்லிட்டே இருப்பேன் மெக் கண் மூடனும்.  ஓகே மெக்.”

 

“ஓகே அங்கில்..” அறிதுயில் கடிகாரத்தை அவன் முன் ஆட்டிக்கொண்டே அவனை ஆழ் உறக்கத்திற்க்கு அழைத்து சென்றார்.

 

”மெக்.. மெக்.. நான் பேசுறது கேட்க்குதா?” அவனின் ஆழ் உறக்கத்தில் அவரின் குரல் ஒலிக்க அவன் செவி சாய்த்து பதிலளித்தான்.

 

“ம்ம்..கேட்க்குது.”

 

“அங்க என்ன இருக்கு மெக்..”

 

“என்னோட சின்ன வயசுல வளர்த்த நாய்குட்டி என்னை பார்த்ததும் என்கிட்ட வந்தது.” இறந்து போன நாயை கண்டறிந்து கூறினான் மருத்துவரிடம்.

 

“அப்புறம் இன்னும் கொஞ்சம் தூரம் நடங்க.. இப்போ என்ன பார்த்தீங்க மெக்.”

 

“இப்போ இப்போ..” அவன் தயங்க.”

 

“ம்.. சொல்லு மெக்.. என்ன இருக்கு அங்க.”

 

“ஒரு பையன் என்ன மாதிரியே இருக்கான்.. இப்போ என் பக்கத்துல வர்ரான்…”

 

“என்ன சொல்லுறான் மெக்.. அவன்கிட்ட பேசுறீயா?”

 

“ம்ம்..” அதற்கடுத்து அவனிடம் பதில் இல்லை.

 

மெக்கின் ஆழ் உறக்கத்தில் நடந்தவை, “மெக், நான் உன்னோட அண்ணா,  எப்படி இருக்க..”  எதிரில் மெக் போலவே இருந்த ஒரு சிறுவன், மெக்கிடம்

பேச ஆரம்பித்தான். ஆழ் உறக்கத்தில் இருக்கும் மெக்கின் கனவுக்குள் அனைத்து நடக்கிறது.

 

”மெக், அம்மா, அப்பா எப்படி இருக்காங்க.. நான் காண போயிட்டேனு அம்மா, அப்பாவும் கவலைப்பட்டுடூருப்பாங்க. அவங்களை கவலைப்பட வேண்டாம்னு சொல்லு. நான் இங்க நல்லா இருக்கேனு சொல்லு மெக். அவங்களை நீ நல்லா பார்த்துக்கோ. இதோ என்னை அழைக்க அந்த கடவுள் வந்துட்டாரு, உன்னை இனிமே தொந்திரவு செய்ய மாட்டேன் மெக். பாய் மெக்..” மெக்கை அணைத்து, முத்தம் கொடுத்துவிட்டு சென்றான், மெக்கின் அண்ணன் ஜாரோவ்.

 

“மெக், நான் ஒன், டூ, த்ரீ சொல்லுறேன் அப்படியே என் குரல் வற்ர திசையை பின்பற்றி வாங்க… இப்போ கண்ணை திறங்க.. ஒன், டூ, த்ரீ..” அவர் சொல்லிகொண்டே மெக்கை  ஆழ் உறக்கத்தில் இருந்து வெளிகொண்டு வந்தார்.

 

சிறு வயதில் தொலைந்து போன மெக்கின் அண்ணன். ஒரு விபத்தில் இறந்துவிட்டான், ஆனால் தொலைந்த மகனை இன்றும் தேடும் மெக்கின் தாயின் வேதனை கண்டு ஆன்மாவாக அலையும் ஜாரோ அறிந்துகொண்டு மெக்கின் கனவில் சென்று அவனிடம் பேச முயற்சிக்க, அவனோ தெரியாத நபரை கண்டு ஓடுவதாக நினைத்து தூக்கத்திலே நடந்தும், ஓடியும் கொண்டிருந்தான். இதனால் தான் மெக் இரவில் நடக்கிறான் என மெக்கின் தாய், தந்தையர்கள் தெரிந்துகொண்டனர்.

 

இரண்டு மாதம் சிகிச்சைக்கு பின் மெக் இரவில், தூக்கத்தில் நடப்பதில்லை. அதன் பின் அவனின் மனமும், உடலும்  இயல்பு நிலைக்கு திரும்பி சாதாரணமாகவே  இருந்தான்.

 

தனது கட்டுரையை வீடியோவாக பிரஷண்டேஷன் செய்து, மெக்கின் தற்போதையை நிலை வரையில் சிவா எடுத்துரைத்தான். அவனின் ஆய்வு கட்டுரையை பார்த்த மருத்துவர்கள் அவனை பாராட்டினர். அங்கு சக்கரவர்த்தியும் இருந்தார், அவரின் முகம் யோசனையை காட்டிய படியே எழுந்து சிவாவிடம் பேச சென்றார்.

 

“உங்க பிரஷண்டேஷன் சூப்பரா இருந்துச்சு சிவா இந்த பிரஷண்டேஷனே உங்களை பாராட்டிடுச்சு.”

 

“தாங்க்ஸ் சார்..”

 

“என்கிட்டயும் ஒரு கேஸ் இருக்கு சிவா, நானும் எவ்வளவோ முயற்சி செய்துட்டேன் அவங்களோட மனநிலையை என்னால மாற்ற முடியலை. அவங்க இன்னும் பேய் இருக்கும், காணம போய், இறந்து போன குழந்தை என் பக்கத்துல இருக்குனு சொல்லுறாங்க. நானும் எவ்வளவோ முயற்சித்தும் அவங்க ஆழ் மனசுல அது எதுவும் இல்லைனு சொல்லி சிகிச்சை அளித்துகொண்டே இருக்கிறேன், ஆனால் பலன் என்னவோ ஜீரோ தான்.”

 

“என்னைவிட எக்ஸ்ப்ரீயன்ஸ் சார் நீங்க உங்களால முடியாததா.” சக்கரவர்த்தியையே வியப்பாக பார்த்தான்.

 

“அதான் சொன்னேனே, மனநிலையை மாற்ற முடியலைனு.”

 

“ஹ்ம்ம்…” அவன் யோசனைக்கு செல்வதை பார்த்து, அவர், அவனின் யோசனையை கலைக்க, “வேணா, அந்த    கேஸ-அ நீங்க முயற்சி  செய்து சிகிச்சை அளிக்க முடியுமானு பாருங்க சிவா. உங்களால முடிந்தா அந்த பொண்ணை இயல்பு வாழ்க்கை திருப்பி கொண்டு வாங்க.” அவர், அவனிடமே அந்த கேஸை கொடுக்க.

 

“சார், உங்களாலே முடியலைனா, அப்போ என்னால் மட்டும் முடியுமா சார்.” முதல் முறை தயங்கினான். சீனியர் டாக்டர் அதுவும், இப்போ ஒரு மருத்துவ கல்லூரியின் டீன். அவராலே முடியாதது, நம்மால் முடியுமா என்ற தயக்கம் சிவாவுக்கு.

 

“கமான் சிவா, சீனியர் என்னால முடியலைனா, வேற டாக்டரை நான் கன்வே பண்ணலாம். இதுல தப்பெல்லாம் இல்லை, அதான் உன்கிட்ட அந்த கேஸ் ஃபைல் கொடுக்குறேன். உன்னால் முடியும் சிவா எனக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா நீ இயல்பு வாழ்க்கைக்கு ஏற்றுகொள்ள முடியும்னு.” அவர் சிவாவை ஆழ்ந்து பார்த்து உரைத்துவிட, அவனோ முகத்தை சுருக்கி, அவரை பார்த்து, “சார்.. கேஸ் ஒரு பொண்ணுனு சொன்னீங்க.” அவரின் தவறை திருத்த.

 

“ஓ.. சாரி சிவா..” அவனுக்கு தெரியாதது போல முகபாவத்தை மாற்றிகொண்டார்.

 

இதெல்லாம் கான்பிரன்ஸ் இறுதி நாளில் நடந்தவை. இதோ சக்கரவர்த்தியின் வீட்டிற்க்கே வந்துவிட்டான். அவனை அழைத்து போக வாசலில் சரியாக நின்றிருந்தார் சக்கரவர்த்தி.

****

 

”கிளம்பிட்டேன்…”

 

“குட்.. உன்னை அழைச்சுட்டு போக என்னோட தம்பி அங்க இருப்பான்.”

 

“ஆனா, எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.”

 

“என்ன..”

 

“என்னால அவங்களை சரி செய்ய முடியுமா?”

 

“முடியும், அதனால உன்னை அனுப்புறேன் சர்மிளா.” அவர் சொன்ன பின் அவள் பக்கம் அமைதி நிலவ. அவரே பேச ஆரம்பித்தார்.

 

“நூல்கண்டு சிக்கலா இருந்தா நாமா வேற நூல்கண்டு வாங்கலாம். ஆனா, சிக்கலா இருக்குற நூலை நாமா நிதானமா எங்க சிக்கலாகிருக்குனு பார்த்து மெதுவா அந்த சிக்கலை எடுக்கனும். அதே மாதிரி தான், வாழ்க்கையும் சிக்கலாகிருக்கு, அதுக்கான வழியை கண்டு பிடிச்சு அந்த சிக்கல்ல இருந்து வெளி வரணும்.”

 

”ஹ்ம்ம்…”

 

“இப்போவே சோர்ந்து போகாதா… இன்னும் நீ பார்க்க வேண்டியதும், தெரிந்துக்க வேண்டியதும் நிறைய இருக்கு.”

 

’இவர் எப்போ பாரு என்னை குழப்புற மாதிரியே பேசுறார். உதவி செய்யனும் சொல்லுறாரு, ஆனா அது என்னை பார்த்து சொல்லுற மாதிரியே இருக்கு.’

 

“என்ன யோசிக்கிறையா? இல்லை நான் குழப்புறேனு மனசுல திட்டுறியா சர்மிளா?”

 

“நான் கிளம்பிட்டேன்.. கால் டாக்சி வந்திருச்சு.” அவரின் பதிலை எதிர்பார்க்காமல் போன் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

 

தியாவிடம், வெளியூர் செல்ல போவதாகவும், வருவதற்க்கு இரண்டு  வாரங்கள் ஆகும் என்பதாகவும் சொல்லிவிட்டு சர்மிளா கிளம்பிவிட்டாள்.

****

 

”நான் சொன்ன கேஸ் ஃபைல் இது தான்.. நீங்க பார்த்துட்டே இருங்க. என்னோட ஹாஸ்பிட்டலுக்கு விசிட் போயிட்டு வந்திரேன்.” அவனிடம் ஒரு பெண்ணின் கேஸ் ஃபைலை கொடுத்துவிட்டு அவர்  மருத்துவமனைக்கு  சென்றார்.

 

சிவா, கையில் வாங்கிய ஃபைலை ஓபன் செய்து படித்து பார்க்க ஆரம்பித்தான் அந்த பெண்ணின் புகைபடத்தை பார்த்ததுவிட்டு, அவளின் சிகிச்சை அளிக்கப்பட்ட விளக்கத்தை படிக்க ஆரம்பித்தான். அவளுக்கு ஏற்ப்பட்ட நோய்க்கு அவன் அந்த அறையில் இருக்கும் புத்தக அலமாரியில் ஒவ்வொரு புத்தகத்தை தேடி தேடி எடுத்து வைத்துகொண்டான்.

 

சில புத்தகங்கள் அவனுக்கு உதவியாக இருந்தது. அதில் இருந்து அவன் சில குறிப்புகளை எடுத்து வைத்துகொண்டான். இடை இடையே அவனுக்கு காஃபி, டீ என அங்கு வேலை செய்பவர் அவனுக்கு வைத்துவிட்டு சென்றார்.

 

அவளின் சிகிச்சையின் சுருக்கம்.

 

“அவளின் பதினெட்டின் வயதில் இரவில் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும் போது அவளது அருகில் ஒரு குழந்தை அமர்ந்தது. அந்த குழந்தையிடம் சாதாரணமாக பேச்சுகொடுக்க, அந்த குழந்தையும் பேசியது. ஆனால் அந்த பேருந்தில் பயணம் செய்த மற்றவர்கள், அவளை விசித்திரமாக பார்த்தனர்.” இது முதல் சுருக்கம்.

 

“அவளின் அறையில் ஓர் ஆள் நடமாட்டம் இருப்பதை அவள் உணர்ந்தாள். அதை அவர்களின் பெற்றோரிடம் சொல்ல, அவர்களோ அதெல்லாம் இல்லை என சொல்லி எடுத்துரைத்தார்கள்.” இது இரண்டாம் சுருக்கம்.

 

“கனவில் அவள் முன் ஒரு கதவு இருக்கிறது,  அந்த கதவை திறந்து அந்த பக்கம் போனால் ஒரு சவபெட்டியில் ஒருவன் படுத்திருக்கிறான். அவளை சுற்றியும், அவள் மேலையும், பூக்கள் விழ, சவபெட்டியில் இறந்து படுத்திருந்தவன் எழுந்து நின்றான்.” இது மூன்றாம் சுருக்கம்.

 

இப்படியே சிவா அவளின் கேஸ் ஃபைலை விளாவாரியாக படித்துகொண்டு, சிகிச்சை அளிக்க, எந்த மாதிரியான குறிப்புகள் தேவை என அவன் புத்தகத்தையும், அவன் செய்திருந்த ஆய்வு கட்டுரைகளையும் மாற்றி மாற்றி பார்த்துகொண்டிருந்தான். இப்படியே இரண்டு மணி நேரம் கடக்க. வேலை செய்பவர் வைத்துவிட்டு சென்ற டீயை, எடுத்துகொண்டு, அங்கிருந்து பால்கனியில் நின்று மும்பை நகரத்தை வேடிக்க பார்த்துகொண்டே குடித்துகொண்டிருந்தான்.

 

அப்போது, “குரு..” காற்றின் வேகம் கொஞ்சம் கூட, அந்த காற்றில் மிதந்து வரும் குரலாக அவன் பெயரை கூற, சரெலென்று திரும்பினான். பார்த்தவன் கண்ணில் எதுவும் தெரியவில்லை, ஆனால் அந்த குரல் இன்னும் அவன் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

 

”குரு” இது பிருந்தா மட்டும் அழைக்கும் அழைப்பாகும். யாராவது குரு என அழைத்தாலும், ‘டோண்ட் கால் மீ குரு, கால் மீ சிவா.’ நாகரிகமாக சொல்லிவிட்டு செல்வான். மீறி அவனின் முழுப்பெயரை வைத்து  அழைத்தாலும் அவன் செவி சாய்க்க மாட்டான்.

 

குரலின் ஓசையே அவன் பிருந்தாவுடன் வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் நினைவுபடுத்தியது. மறக்க முடியாத வாழ்க்கை, ஹ்ம்ம்… இல்லை, மறக்க முடியாத சந்தோஷம் பிருந்தா அதுவும், குருவின் பிருந்தா ஆவாள்.

 

இரு இதயம் போன்ற அமைப்பில் இருக்கும் மரங்கள். இரட்டை பிள்ளை போல் ஒட்டி இருக்காமல் தனித்தனியாக இருக்கும், ஆனால் அதன் கிளைகள் தனித்தனியாக இல்லை பிணைப்பாக இருந்தது. அவர்களின் காதலுக்கு சாட்சியே அந்த மரங்கள் தான். இருவரின்  காதலில் இருந்து, பிருந்தாவின் மரணம் வரை இருந்தது அந்த மரங்கள்.

 

பிருந்தாவின் நினைவுகளுக்கு செல்ல இருந்தவனை மழை தூறல் கலைத்துவிட்டது. தூறலை கண்டதும், அவன் வேகமாக உள்ளே நுழைந்துகொண்டு பால்கனி கதவை சாற்றிவிட்டான். சிவாவுக்கு மழை என்றாலே பிடிக்காது.. அதிகமாக தண்ணீரில் அவன் இருக்கமாட்டான். மழையின் வேகத்தையும், அதன் நீர்த்துளியையும் வெறித்து பார்த்துகொண்டிருந்தான்.

 

மழையில் உன்னோட நனைந்த காதலில்

எத்தனை சுகம்…

நீயில்லாத என் காதலை நகர்த்தியும்

செல்கிறது…

நனைத்தும் செல்கிறது…  என் உயிரே (பிரியாதே)…

 

சிவாவின் ஒவ்வொரு நடவடிக்கையைகளையும் அவனுக்கு தெரியாமலே கண்காணித்து கொண்டிருந்தார்கள் மூவர்.

 

                                              பிரியாதே…………….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!