என் உயிரே பிரியாதே 5

                   பிரியாதே 5

 

முழுதாக அந்த கேஸ் ஃபைலை படித்து முடித்து, அந்த பெண்ணுக்கு எந்த மாதிரியான ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம் என அவன் சில குறிப்புகளை எடுத்து வைத்துகொண்டிருந்த போது, அவனுக்கென ஒதுக்கிய அறையின் கதவை தட்டிவிட்டு அவனுக்கென கொண்டு வந்த டீயை ஒரு பெண் வைத்துவிட்டு அவனிடம், “சார், உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க. உள்ள அனுப்பவா? சார்..” அவனுக்கு கீழ் வேலை செய்யும் பெண் அவனிடம் சொல்ல.

 

“இங்க வேண்டாம் மெர்லின் என்னோட ட்ரீட்மெண்ட் ரூம்ல வெயிட் பண்ண சொல்லுங்க மெர்லின்.”

 

“சரிங்க சார்..” அவன் டீயை எடுத்து குடித்துகொண்டே அந்த பெண்ணை சந்திப்பதற்க்காக தயாராகினான். அவன் தயாராவதை ஓர் பார்வை பார்த்துகொண்டே மெர்லின் அறையை விட்டு வெளியேறினாள்.

 

ட்ரீட்மெண்ட்க்கு தேவையான குறிப்பேடுகள், ரெக்கார்ட் டேப், மற்றும் ஹிப்னோடைசம் கடிகாரம். என அனைத்தையும் எடுத்து வைத்துகொண்டே டீயை பருகி முடித்தான். அவன் ட்ரீட்மெண்ட் அறைக்குள் நுழையும் முன் அந்த பெண் ஒரு பெரிய கடிகாரத்தின் முன் நின்று அந்த கடிகாரத்தை உற்று பார்த்துகொண்டிருந்தாள். அவள் ஏன் அந்த கடிகாரத்தை உற்று பார்க்கிறாள் என அவன், அவள் செயலையே பார்த்துகொண்டிருந்தான் சில நொடிகள் வரை.

 

“அந்த கடிகாரத்துல என்ன இருக்குனு அதையே உற்று பார்க்குற நேகா.” அவளின் பெயரை அழைத்தபடியே அவளின் செயலை கேட்க.

 

“உஸ்ஸ்ஸ்…” அவனை அமைதிப்படுத்திவிட்டு, ”இந்த கடிகாரத்துல நேரம் மாறியிருக்கு டாக்டர்..” அவள் கூற.

 

“ஓ.. அவ்வளவு தானா.. இதோ இப்போவே நான் மெர்லின்கிட்ட சொல்லி சரியான நேரத்தை வைக்க சொல்கிறேன்.” அவன் கூற.

 

“வேண்டாம், நானே சரியான நேரத்தை வைக்குறேன்.” அவனிடம் சொல்லிக்கொண்டே அந்த பெரிய கடிகாரத்தின் கண்ணாடி கதவை திறந்து அவள் சரியான நேரத்தை வைத்தாள்.

 

“ஐம் டாக்டர் சிவகுரு…” தன்னை அறிமுகம் செய்துகொண்டே அவளை ஒரு  சாய்ந்த வளைவு நாற்காலியில் அமர வைத்தான்.

 

“ஐம் நேகா.. எம்.என்.சி ல வேலை பார்க்குறேன் டாக்டர்.”

 

“குட்.. அப்போ ஆன்சைட் போக வாய்ப்பு வந்திருக்குமே..”

 

“எஸ்.. டாக்டர், ஆனா போக விருப்பம் இல்லை.”

 

“ஏன்..”

 

“என்னால வேலையில கவனம் செலுத்த முடியலை.. சில பிரச்சனைகள் என்னோட மனசை போட்டு குழப்புது டாக்டர். இதுனால எனக்கும், என் நண்பர்களிடத்திலும் சரியான உறவுகள் இல்லை. அவங்களிடம் மட்டுமில்லை டாக்டர் என் அம்மா, அப்பாகிட்டயும் நான் நானாக இல்லை டாக்டர்.”

 

“அப்படி என்ன பிரச்சனை நேகா.. எதுனால உங்க மனது குழப்பமா இருக்கு.”

 

ஒரு நாள் வேலை முடித்துவிட்டு பேருந்தில் பயணமானாள் நேகா. அவளும், ஒரு சிலரும் மட்டுமே அந்த பேருந்தில் இருந்தனர். ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவள் அருகில் யாரோ அமர்வது போல தோன்ற, திரும்பி பார்த்தாள். எட்டு வயது குழந்தை அவளருகில் அமர்ந்து அவளையே உற்று பார்த்துகொண்டிருந்ததை பார்த்த அவள், “நீ மட்டுமா தனியா வந்திருக்க.. உன் கூட உன் அம்மா, அப்பா வரலையா.. உன் பேரென்ன..”  சிறு குழந்தை தனியாக வந்திருக்கிறதோ என அவள் அறிந்துகொள்ள அந்த குழந்தையிடம் பேச்சுகொடுக்க.

 

“என் பேர் மதனா.. உன் பேரென்ன..” அவள் கேட்ட கேள்வியில் ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளித்தாள் அந்த குழந்தை. இப்படியாகா அந்த குழந்தையிடம் பேச்சுகொடுத்துகொண்டே வந்த நேகா, அவள் நிறுத்ததில் இறங்கிகொள்ள, அந்த குழந்தையை பார்க்க திரும்பிய நேக அதிர்ச்சி அடைந்தாள் ஏன்னென்றால் அந்த குழந்தை அந்த சீட்டில் இல்லை.

 

சரி குழந்தையின் தாய் அருகில் அமர்ந்துவிட்டது போல என எண்ணிக்கொண்டு அவள் வீட்டிற்க்கு நடந்து செல்லும் போது தான் மின் கம்பத்தில் இருந்த ஒரு சுவரொட்டி அவள் கவனத்தை கவர்ந்தது. அதன் அருகில் அவள் சென்று பார்க்க, மீண்டும் அவள் அதிர்ச்சியடைந்தாள்.

 

இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த சிவா, “நேகா, அந்த குழந்தை உங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரிந்ததா..? இல்லை அந்த பேருந்தில் பயணித்த மற்றவர்கள் கண்ணுக்கு தெரிந்ததா?”

 

“உங்ககிட்ட மட்டும் பேசுன குழந்தை, ஏன் மற்றவர் பார்வைக்கு தெரியவில்லை. பேசும் சத்தம் கூடவா மற்றவர் காதில் விழுந்திருக்காது நேகா உங்களோட வேலையில நீங்க மன அழுத்தமா இருந்திருக்கீங்க அதனால தான் இப்படியெல்லாம் பீல் பண்ணுறீங்க.” சிவா முதல் கருத்தை தெரிவிக்க.

 

அவளோ, கொண்டு வந்திருந்திருந்த தன் ஹேண்ட் பேக்கில் இருந்த நீயூஸ் பேப்பரையும் அதில் வந்திருந்த செய்தியையும் அவனிடம் காட்ட, அவனோ அவள் காட்டிய பேப்பரில் அவள் கூறிய குழந்தையின் புகைப்படமும், அவள் இறப்பு செய்தியும் வந்திருந்தது. ஏன்னென்றால் அந்த குழந்தை இறந்து ஒரு வாரம் ஆகிருந்தது.

 

அடுத்ததாக, அவள் அறையில் யாரோ ஒருவர் இருப்பதாக அவள் கூற, அவனோ, “நேகா, நீங்க கோஸ்ட் படம், அதோட சீரீஸ் இதெல்லாம் பார்ப்பீங்க சரியா… உங்களுக்கு பேய், ஆன்மா, ஆவி சம்பந்தமானதை பற்றி நீங்க அதிக ஆர்வம் உங்களுக்கு. அதை பற்றியே யோசிக்குறது, நினைக்குறது, இவ்வளவு ஏன் கனவு கூட வரலாம். அதெல்லாம் உங்களோட மனசை சம்பந்த படுத்தி நீங்களே பயந்து போயிருக்கீங்க.’’  

 

“டாக்டர், ஏன் நான் சொல்லுறதை புரிந்துகொள்ள மாட்டேங்குறீங்க. நான் பார்க்குறது, கேட்க்குறது, உணர்ரது எல்லாமே உண்மை தான் டாக்டர்.”

 

“நேகா.. நேகா.. எனக்கு உங்களோட சாப்ட்வேர் வேலை பற்றி எல்லாம் தெரியும். எவ்வளவு டென்ஷனான வேலை, அதுல கோடிங்க், எரர், ப்ரோக்ராம், இத்தியாதி.. எல்லாமே உங்களோட மனசை பாதிச்சிருக்கு. நீங்க உங்களை ஒரு நிமிஷம் கூட ரிலாக்‌ஷ் பண்ணிக்க மாட்டீங்க. இதெல்லாம் வெறும் கற்பனை, பார்க்குறதை உங்களோட கற்பனையாக்குறீங்க. கேட்க்குறதை இப்படிதான் இருக்குமோன்னு உண்மையாக்குறீங்க. உணர்வுகளை, முதல் இரண்டு விஷயத்துல சேர்த்து அதையே நிரந்தரபடுத்தி இது தான் நடந்ததுனு கறபனையை நிஜமாக்கிட்டீங்க நேகா.” நேகாவின் மனநிலையை வெறும் கற்பனை என முற்று புள்ளி வைத்துவிட்டான்.

 

“நான் சொன்னா எல்லாத்துக்கு ஆதராம் கொடுத்துட்டேன் டாக்டர். உங்களுக்கு தான், நான் சொல்லுறது கற்பனையா தெரியுது. அதை ஏன் டாக்டர் புரிந்துகொள்ள மாட்டேங்குறீங்க.”

 

”சரி, நாமா ஏன் ஹிப்னோடைசம் ட்ரீட்மெண்ட் செய்து பார்க்க கூடாது? உங்க உறக்கத்துல வர்ர அந்த கனவு தான் மூனாவது விஷயம்.  அந்த கனவை ஏன் ஹிப்னோடைசம் பண்ணி பார்க்க கூடாது.” அவன் ட்ரீட்மெண்டை ஆரம்பித்தான்.

 

“சூயர் டாக்டர்.. முதல் இரண்டு விஷயம் வேணா, உங்களுக்கு கற்பனையா இருக்கலாம். ஆனா இந்த கனவு முதல் இரண்டை விட, நிஜமானது டாக்டர். அந்த கனவு இன்னும் என்னால மறக்க முடியலை..”  அவள் ஒத்துகொண்டதும், அறிதுயில் கடிகாரத்தை அவள் பார்வையில் வைத்தான். அவளும் கொஞ்சம், கொஞ்சமாய் ஆழ் நிலை உறக்கத்திற்க்கு செல்ல, அவன் சிகிச்சையை ஆரம்பித்தான்.

 

“நேகா… நேகா…” அவன் அழைக்க, அவளோ அவன் குரல் கேட்கும் திசையை தாண்டி ஒரு மாளிகையின் முன் நின்றிருந்தாள்.

 

இனி அவள் கனவில்,

 

’கண் விழித்து பார்க்க, ஒரு மாளிகையின் முன் நின்றிருந்த நேகா, உள்ளே செல்ல ஆரம்பித்தாள். அந்த மாளிகையில் யாரும் இல்லை.. அவள் ஒருத்தி மட்டும், அந்த மாளிகைக்குள் நுழைந்து உள்ளே சென்று கொண்டிருந்தாள். அந்த மாளிகையின் ஒரு அறை கதவை திறந்ததும் வேறொரு இடம், அந்த இடம் முற்றிலும் வேறாக இருந்தது. இடிந்த நிலையில் இருந்த கட்டிடத்தில் இருந்தவள் முன் ஒரு சவபெட்டி இருந்ததது திறந்த நிலையில். அதன் அருகில் அவள் சென்றாள், அந்த பெட்டிக்குள் ஒருவன் கோட்சூடுடன் அமைதியான ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருந்தான். அவனின் காலில் இருந்து அவள் அவனை பார்த்துகொண்டே அவன் முகத்தை காணா, அவளுக்கு பரிட்சையமான முகம் போன்று தான் தெரிந்தது.’

 

அவன் முகத்தையே பார்த்துகொண்டிருந்தவள் மீது ரோஜா இதழ்கள் மழை போல் கொட்டியது. அப்போது அவள் கண்ணுக்கு இன்னொரு விஷயமும் தெரிந்தது. ஒரு சிறுவன், அவன் வயதுக்கு கீழே உள்ள சிறுமியை துரத்தி விளையாடிக்கொண்டிருந்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் அவள் அந்த கனவில் மட்டுமின்றி ஆழ் நிலை உறக்கத்திலும் சிரித்தாள்.

 

நேகாவின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துகொண்டிருந்த சிவா, அவள் சிரிப்பில் அவன், கனவில் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள அவள் ஆழ் நிலை உறக்கத்திலே நுழைய முற்பட்டான்.

 

“நேகா… நேகா… நான் பேசுறது கேட்க்குதா..?”

 

“ம்ம்..” அவள் சத்தம் கொடுத்ததும் அவன் பேச ஆரம்பித்தான்.

 

“உங்க கண்ணுக்கு என்ன என்ன தெரியுது நேகா.. யார் யாரை பார்க்குறீங்க. நீங்க எங்க இருக்கீங்க நேகா..”

 

“இடிந்த நிலையில் இருக்கும் கட்டிடத்தின் முன் நான் இருக்கிறேன். என் முன்னே, ஒரு சவெபெட்டியில் ஒரு ஆண் அமைதியான உறக்கத்தில் இருக்கிறான். ரோஜா பூக்கள் என் மீது மழையாய் பொழிகிறது.. பின் ஒரு இடத்தில் இரு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.”

 

“குட்… நேகா.., அந்த ஆண் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவரா… இல்லை தெரியாதவரா?” அவன் கேள்வியில் அவள், அந்த சவபெட்டியில் இருக்கும், ஆணையே உற்று பார்க்க, சட்டென்று அந்த ஆண் முழித்துகொண்டான்.

 

அவன் முழித்தலில் நேகா சிறு பயமில்லாமல் அவனையே பார்த்தவள் முன் அந்த ஒருவன் அவள் முன் எழுந்து நின்றான்.

 

“நேகா… நேகா..” கனவில் அந்த ஒருவன் அழைக்க. நிஜத்தில் சிவா அழைத்துகொண்டிருந்தான். நேகா இருவருக்கும் பதில் கூறாமல், அமைதியாக இருக்க. அவள் அமைதியை பார்த்து கனவில் இருந்த ஒருவன் அவளை தொட முயல, நேகா கண்களை மூடி ஆழ் நிலை உறக்கத்தில் இருந்து வெளி வந்தாள்.

 

“என்னாச்சு.. நேகா.. ஏன் மூச்சு வாங்குறீங்க.. கனவுல என்ன நடந்தது.” கண் விழித்ததில் இருந்து மூச்சு வாங்கிகொண்டிருந்தாள் நேகா.

 

“இல்லை.. எனக்கு அவனோட முகம் ரொம்ப தெரிந்த மாதிரி தான் இருந்தது. ஆனா யார்னு என்னால குறிப்பா சொல்ல முடியலை.”

 

“ரிலாக்‌ஷ் நேகா.. ரிலாக்‌ஷ்..” அவள் குடிப்பதற்காக தண்ணீரை எடுத்துகொடுத்தான்.

 

அவள் முகத்தையே பார்த்துகொண்டு ட்ரீட்மெண்ட் ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை அவன் எடுத்த குறிப்புகள் அனைத்தும் அவன் பார்த்துகொண்டே, “இப்போவாச்சு புரிந்துகொள்ளுங்க நேகா.. எல்லாமே கற்பனை தான். சிலர் கனவுல தெரியாத இடத்துல அவங்க இருக்குற மாதிரி இருக்கும். ஆனா முழிச்சு பார்த்தா அவங்களோட பெட்ல தான் அவங்க இருப்பாங்க. கனவுல நடக்குறதையும், உங்க கற்பனையையும் ரொம்ப ஆழ்ந்து யோசிக்குறீங்க. இதெல்லாம் வெறும் கற்பனையே, நிஜமல்ல நேகா. இன்னும் மூனு கவுன்சிலிங்க் நீங்க வந்தா இதெல்லாம் கற்பனைனு நீங்க புரிந்துகொள்ளுவீங்க.” அவனின் குறிப்பேடுகளையும், ரெக்கார்ட் டேப், எடுத்துகொண்டு அவன் கிளம்ப தயாராகியவனை,

 

“நான் சொன்னது கற்பனையா இருக்கட்டும், ஆனா உங்க பின்னாடி ஒருத்தர் இருக்காங்க. அவங்களையும் என்னால பார்க்க முடியுது, அவங்க உங்ககிட்ட பேசனும் நினைக்குறாங்க டாக்டர்.”

 

“நேகா இப்போ என்னை பயமுறுத்தாலாம் நினைக்குறீங்களா? இப்படியெல்லாம் சொன்னா நான் நம்புவேனு நீங்க நினைச்சா ரொம்ப தவறு.” சாதாரணமாக அவன் பேசிகொண்டே இருந்தான்.

 

“உங்களை பயமுறத்த நான் சொல்லலை.. அவங்க உங்க பின்னாடி தான் இருக்காங்க. அவங்க உருவம் மழை நீரில நனைஞ்சது போல இருக்கு.” அவன் காதுகொடுத்து கேட்க்காமல் அவனின் பொருளையெல்லாம் எடுத்துகொண்டிருக்க,

 

“டாக்டர், அவங்க உங்ககிட்ட ஏதோ பேசனும் சொல்லுறாங்க என்னை நம்புங்க டாக்டர்..” நேகா சொல்ல, அவனும் அவன் பின் யாராவது இருக்காங்களா, என திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லை.

 

”ஹ்ம்ம்… நேகா உங்களோட கற்பனைக்கு ஓர் எல்லை இருக்கு.” அவளை கண்டிக்கும் விதமாக சிவா கூற.

 

“சரி டாக்டர், நான் சொன்னது கற்பனைனு சொல்லுறீங்களே அப்போ உங்களை பற்றி ஒரு விஷயம் சொல்லுறேன். உங்களுக்கு மழைனா பிடிக்காது..  மழை மட்டுமில்லை.. உங்க அதிகமான நீர்  உள்ள இடம் அதாவது கடல், ஆறு இப்படி இருக்குற ஏரியாவே உங்களுக்கு பிடிக்காது. மழையை கண்டா நீங்க பயந்து, ஒதுங்கி போவீங்க சரியா டாக்டர்.”  நேகா சொல்வதையெல்லாம் ஆச்சர்யமாக  @ அதிர்சியாக சிவா பார்த்துகொண்டிருந்தான்.

 

சிவாவுக்கு மழை என்றாலே பிடிக்காது என்பதை முரளியை தவிர வேற யாருக்கும் தெரியாது. அப்படி இருக்க இவளுக்கு எப்படி தெரியும் என அவன் அதிர்சி விலாகமல் நேகாவையே அவன் பார்த்துகொண்டிருந்தான்.

 

                                                  பிரியாதே…………