என் உயிரே பிரியாதே

                  பிரியாதே 6

 

கடிகாரத்தின் ஓசையை தவிர அங்கு வேறொதும் சத்தம் கேட்கவில்லை. நேகாவேயே பார்த்துகொண்டிருந்த சிவாவுக்கு “மழை தனக்கு பிடிக்காது என்பது” எப்படி தெரியும்? முரளிக்கும் கூட மேலோட்டமாக மட்டுமே மழை பிடிக்காது என தெரியும். நேகா தன்னிடம் உள்ள ஒரு குறையை கண்டுபிடித்தது தான் எப்படி என அவனுக்கு தெரியவில்லை. அவன் கண்கள், நேகாவையே பார்த்துக்கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

 

“எனக்கு மழை பிடிக்காதுனு ஒரு விசயத்தை தெரிந்து வைத்துகொண்டு நீங்க சொன்னது எல்லாம் உண்மைனு நான் நம்ப முடியாது நேகா. சரி எனக்கு மழை பிடிக்காது தான்.. கடல், ஆறு, ஏரினு நீர் அதிகமா இருக்குற இடம் எனக்கு பிடிக்காது தான் நீங்க சொன்னதும் உண்மை தான்.” அவளிடம் சாதாரணமாக உரையாடிகொண்டே அவன் கிளம்ப தயாரகும் நிலையில் அவன் காலை நனைப்பது போல நீர் வர ஆரம்பித்தது.

 

எப்படி தண்ணீர் உள்ள வர முடியும்… அதுவும் ரூம்க்குள்ள எப்படி இவ்வளவு தண்ணீர் வரமுடியும், பாத்ரூட் டேப் எதுவும் உடைஞ்சிருக்குமோ. என அவன சிந்திக்க.. அவன் மேல மழை சாரல் போல் நீர் சொட்டு சொட்டாக விழ ஆரம்பித்தது. கான்க்ரீட் வீட்டில் நீர் எப்படி வரும் அவன் சிந்திக்கவில்லை. ஆனால் அந்த நீரை பார்த்ததும் அவன் பொருளை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு அவன் அந்த அறையைவிட்டு வெளியே முயன்ற பொழுது நேகா பேச ஆரம்பித்தாள்.

 

“டாக்டர் ஏன் இப்படி பயப்படுறீங்க…” அவனின் செயலில் அவள் கேட்க.

 

“இங்க ஒரே தண்ணீரா இருக்கு.. என்மேலையும் மழை பெய்யுற மாதிரி நீர் விழுகுது..” அவன் எதில் இருந்தோ தப்பிப்பது போல அவளிடம் கூற.

 

“என்ன… தண்ணீரா.. எங்க இருக்கு டாக்டர்.. இங்க எந்த தண்ணீரும் இல்லை..”

 

’இதோ நான் நனைஞ்சுருக்கேன்… உன் கண்ணுக்கு தெரியலையா..’ சிவா தன் உடையின் ஈரத்தை அவளிடம் காட்டினான்

 

”இல்லையே டாக்டர்… உங்க மேல ஒரு சொட்டு நீர் கூட படலை. அதுவுமில்லாம ட்ரெஸ் எதுவும் ஈரமா இல்லை டாக்டர்.”

 

’இல்லை… நான் நனைஞ்சுருக்கேன்… என் ட்ரெஸ் ஈரமா இருக்கு..’ அவன் உடையை அவனே தொட்டு பார்க்க ஈரமாக தான் இருக்கிறது என அவளிடம் காட்டினான்.

 

“அப்போ நானும் நனைஞ்சுருக்கனுமே டாக்டர் ஏன் நான் மட்டும் நனையல..” அவள் உடையை அவன் கை கொண்டு தொட்டு பார்க்க செய்தவளை விசித்திரமாக அவன் பார்க்க சிவா அப்படியே மயங்கி போனான்.

 

அவன் மயங்கியதும், ”மெர்லின்…” அவள் அழைக்க. நேகா அழைத்த அழைப்புக்கு மெர்லின் வேகமாக உள்ளே நுழைந்தாள். சிவாவின் மயக்க நிலையை பார்த்து, மெர்லினும், நேகாவும் அவனை அந்த வளைவு நாற்காலியில் படுக்க வைத்தனர்.

 

”மேம்… சார்-அ வரச்சொல்லவா..”

 

“வேண்டாம்… நீ போகலாம்..”

 

சிவாவின் மயக்க நிலையை பார்த்துகொண்டே அவனின் அருகில் அமர்ந்தாள். சிவா மயக்கத்திலும் எதுவோ சொல்லிகொண்டிருக்க, நேகா அவன் அருகில் தன் காதை வைத்து கேட்க்க ஆரம்பித்தாள்.

 

“பிந்து… பிந்து…” அவன் வாய்க்குள்ளே முனங்கினான்.

 

’பிந்து யாரு  சிவா…’ அவனின் மயக்க நிலையை தனக்கு சாதகமாக்கிகொண்டு பேச ஆரம்பித்தாள்.

 

“பிருந்தா.. என் பிந்து.” அவனின் தெளிவற்ற பேச்சில் நேகாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் இன்னும் ஆழ் உறக்கத்திற்க்கு செல்லாமல் இருக்கிறான் என அவள் உறுதி செய்துகொண்டு ஆழ் உறக்கத்திற்க்கு செல்லும் மருந்து அவனுக்கு செலுத்தினாள். மருந்து செலுத்தப்பட்டதும், சிவாவின் முனங்கல் நின்றது. அவன் பேசுவதற்க்காக நேகா காத்திருந்தாள். அரை மணி நேரத்திற்க்கு பின் சிவா பேச ஆரம்பித்தான்.

 

காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் உள்ளதா? சிறிய கிராமத்தில் இருந்து, பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை. ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மனிதன் இருக்கும் வரை அழியப் போவதில்லை. காதல் என்பது ரஜினி சொன்னதை போல தான், “அது எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் காதலில் விழுவது நிச்சயம்.

 

 

பிருந்தா பார்ப்பதற்க்கு வடகத்திய பெண்ண போல் தான் இருப்பாள். ஆனால் அவள் பேசு தமிழிலும், ஆங்கிலமும் அவளை தமிழ் நாட்டு பெண்ணை போலவே நினைக்க தூண்டும். தாய், தந்தை இல்லை.. பிருந்தாவுக்கு எல்லாமே அவளின் தாய் மாமன் சுந்தர் தான். குஜராத்தில் பிறந்து வளர்ந்தவள் தான் பிருந்தா. குஜராத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்தவள். சுந்தரின் வேலை மாற்றத்தால் சென்னை வந்தார்கள். அவளும் கல்லூரியில் இடம் மாற்றம் செய்துவிட்டு சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தாள் மூன்றாமாண்டு மாணவியாய். அவளுக்கு எல்லாமே புதிதாக தெரிந்தது, இடம் , பொருள், பார்க்கும் மனிதர்கள் என அனைவரும் புதிதாகவே தெரிந்தனர்.

 

 

”பிருந்தா காலேஜ் டைம் ஆச்சும்மா… கிளம்பிட்டியா.” வாசலில் காரில் பிருந்தாவுக்காக காத்திருந்த சுந்தர் அவளை அழைக்க.

 

 

“இதோ வந்துட்டேன் மாமா…” காரில் ஏறினாள்.

 

’முதல் நாள் காலேஜ் பார்க்குறவங்க புதுசா தான் தெரியும் போக போக பழகிடும். நீயும் ஃப்ர்ண்ட்ஸ்கிட்ட கொஞ்சம் பழகிக்கோம்மா. அப்புறம் காலேஜ் பஸ் எப்போ வரும், நம்ம இருக்குற ஏரியாவுக்கு வருமானு டீடைல்ஸ் கேட்டுக்கோம்மா. ஒரு வாரம் மட்டுமே நான் உன்னை இறக்கிவிடுறேன். அப்புரம் நீயே பழகிக்கனும் சரியா பிருந்தா.’

 

”சரிங்க மாமா..”  மாமனிடம் விடைபெற்றுகொண்டு கல்லூரிக்குள் நுழைய. மாணவர்கள் புதிதாய் பார்ப்பது போல பிருந்தாவை பார்த்தனர். அதிலும் சில மாணவர்கள் அவளின் அழகில் உலகை மறந்து ஜொல் விட்டுக்கொண்டிருந்தனர்.

 

பிருந்தா யாரிடம் வகுப்பு எங்கே உள்ளது என கேட்க்கலாம் என அவள் யோசித்துகொண்டே ஒவ்வொரு மாணவ, மாணவியையும் பார்க்க. அவர்கள் எல்லாம் கையில் புத்தகத்துடனும், மற்றவர்களிடம் பேசி கொண்டும் செல்வதை பார்த்து அவள் நின்றிருந்தாள்.

 

“எக்ஸ் க்யூஸ் மீ வழில நின்னுட்டு என்ன கனவு காணுறீங்க..”

 

குரல் வந்த திசையை நோக்கி அவள் திரும்ப, அவனோ, அவளை ஏறொடுத்தும் பார்க்காமல் கையில் வைத்திருந்த புத்தகத்தில் கவனத்தை வைத்துகொண்டே சென்றான்.

 

”ஹே பகவான்… இந்த காலேஜ்ல நான் எப்படி படிக்க போறேனோ.” வானத்தை பார்த்து அவள் கையெடுத்து கும்பிட்டுகொண்டிருக்க.

 

“புத்தகத்தை வச்சு தான் படிக்கனும், தியேரி, ப்ராஜெக்ட், அனாடமி க்ளாஸ் எல்லாம் பார்த்து தான் படிக்கனும். ஏன் உனக்கு மட்டும் கடவுள் ஸ்பெஷ்ல்லா படிக்க கத்துக்கொடுக்க போறாரா மிஸ்…” அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டே அவள் பெயரை கேட்டு நிறுத்தினான் முரளி.

 

“பிருந்தா பையா.. நீங்க?” ஒரே வார்த்தையில் அவனை அண்ணன் ஆக்கிகொண்டாள்.

 

“முரளி.. எந்த இயர் நீ..  நீயூ ஜாயினியா..?”

 

“ஆமா பையா… த்ர்ட் இயர் பையா, குஜராத்ல இருந்து ட்ரான்ஸ்பர் வாங்கி வந்திருக்கோம்.”

 

“ஓ… வா.. நான் காட்டுரேன் உன் க்ளாஸ்-அ” அவளை அழைத்து சென்றான்.

 

’முதல் நாள் காலேஜ் கொஞ்சம் பயமாவும், பதட்டமாவும் இருக்கு பையா.. எல்லாரும் எப்படி பழகுவாங்கனு தெரியலை. யார்கிட்ட க்ளாஸ் ரூம் இருக்குனு கேட்க்க கூட தயக்கமா இருக்கு. நல்ல வேளை பகவான் என்னை காப்பாத்திட்டாரு உங்க ரூபத்தில வந்து தாங்க்ஸ் பையா.’

 

“உன் நன்றி நவிழ்தல் இருக்கட்டும், முதல்ல பயப்படமா இரு, ஃப்ரீயா பழகு எல்லார்கிட்டயும்.  இந்த தயக்கம், பயம், பதட்டம் எல்லாத்தையும் தூக்கி அதோ அந்த டஸ்பின்ல போட்டுட்டு நீ ஃப்ரியா இரு சரியா.” அவளின் வகுப்பிற்கு வழி காட்டிவிட்டு விடை பெறும் சமயம்,

 

“பையா.. நில்லுங்க..”

 

“என்ன..”

 

“அது… எனக்கு முதல்ல அறிமுகமானவங்க நீங்க தான் பையா. அதனால இந்த இடம் பழகுற வரைக்கும், நீங்க எனக்கு துணையா இருக்கனும் அதுக்கு..” அவள் தயக்கத்தில் அவன் ஒன்றை புரிந்துகொண்டான் அவள் என்ன கேட்க வருகிறாள் என்று.

 

“98******* இது என் நம்பர், எப்போனாலும் உன் உதவிக்கு நான் வருவேன். வேற எதாவது வேணுமா.. இல்லை போகவா.. எனக்கு க்ளாஸ் டைம் ஆச்சு.”

 

“அவ்வளவு தான் பையா… போயிட்டு வாங்க..” அவனிடம் இருந்து வகுப்பறையில் முதல் வரிசையில் அமர்ந்தவளை அனைவரும்  புதுமுகமாக பார்த்தனர் ஆனால் யாரும் அவளிடம் பேசவில்லை.

 

வகுப்பின் பேராசிரியரிடம் அவள் ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டு அவள் அமர்ந்தாள். அந்த ஆசிரியரோ அவளை வியப்பாக பார்த்தார். அதன் பின் வகுப்புகளில் அவள் ஒன்ற, அவளுடன் யாரும் இணக்கமாக இருக்கவில்லை. தொடர் வகுப்பில் எல்லாம் அவள் பிசியாகவே இருந்தாள். இடைவேளை கூட அவள் வகுப்பைவிட்டு வெளிவர முடியவில்லை. பாட சம்பந்தமாக அவள் எழுதிகொண்டே இருந்தாள். அனைத்து மாணவர்களும் அவரவர் வேளைகளில் மூழ்கி இருக்க உள்ளே நுழைந்தான் முரளி.

 

சீனியர் மாணவனான முரளியை கண்டது ஜூனியர் மாணவர்கள் வணக்கம் செய்தனர். அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பிருந்தாவின் முன் நின்றான். தன் முன் நிழல் ஆடுவதை பார்த்து அவள் எழுவதை நிறுத்திவிட்டு நிமிர முரளி சிரித்துகொண்டே நின்றிருந்தான்.

 

“பையா… நீங்களா..”

 

“நான் தான்.. சாப்பிட்டயா பிருந்தா.. நேரம் மூனாக போகுது.” அவன் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்து அவளிடம் கேட்க.

 

“நையி பையா… நோட்ஸ் எழுதியிட்டு இருக்கேன்… இன்னும் நிறைய இருக்கு பையா.. அதெல்லாம்.” அவள் சொல்லிகொண்டே இருக்கும் போதே முரளி, நோட் புக்கை எல்லாம் மூடி வைத்துவிட்டு அவளுக்கென வாங்கிய லஞ்சை கொடுத்தான்.

 

“சாப்பிட்டு நிதானமா எழுது.. டைம் இருக்கு, அதே நேரம் எக்‌ஷாம் டேட் இப்போ வரைக்கு சொல்லலை. புதுசா வந்திருக்குறதுனால யாரும் உன்னை எழுதலைனு திட்டமாட்டாங்க, ஒன் வீக் டைம் இருக்கு அது வரைக்கு பொறுமையா எழுதலாம் சரியா.”

 

“சரிங்க பையா..”

 

“நீ போன் பண்ணுவேனு எதிர்பார்த்தேன்.. எல்லாம் ஓகே வா உனக்கு. எந்த பிராப்லமும் இல்லையே..”

 

“இல்லை… இல்லை… பையா எல்லாம் ஓகே.”

 

“ம்ம்.. சரி எனக்கு டைம் ஆச்சு.. நீ சாப்பிட்டு ஒழுங்கா எல்லார்கிட்டயும் நார்மலா பேச பழகு அப்போ தான் ஃப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க.”

 

முரளியும், பிருந்தாவும் பேசுவதை பார்த்துகொண்டிருந்த மாணவர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். பின்னே இருக்காதா எம்.டி படிக்கும் முரளி, ஒரு பெண்ணை கண அக்கறையாக பார்த்து, பேசிகொண்டு இருக்கிறான் முக்கியமாக அவளுக்கென உணவு வாங்கி வந்திருக்கிறான் என முதலில் ஆச்சர்யமாக பார்த்தாலும். பிருந்தாவின் “பையா” என்ற அழைப்பில் மாணவர்கள் புரிந்துகொண்டர் அவர்களின் உறவுகளை.

 

“ஜூனியர்ஸ்… சின்ன ரெக்வெஸ்ட், இவங்க பேர் பிருந்தா. நம்ம காலேஜ்க்கு புதுசா படிக்க வந்திருக்காங்க. புது இடம், புது சூழல், ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பா இருக்குறது அவங்களோட படிக்குற மாணவர்கள் தான்.. நம்மளை பார்த்து பயந்திர கூடாது அதனால என் அன்பு தங்கையை உங்களோட தோழியா ஏத்துக்கோங்க.”

 

“ஓகே சீனியர்…” கோரசாக பதிலளித்தனர்.

 

அன்று முரளி அவளை அறிமுகப்படுத்தியதோட பிருந்தாவை முரளி சந்திக்கவே இல்லை. அவன் படிப்பில் முரளி மூழ்க, பிருந்தாவுக்கும் படிக்கும் நேரம், நோட்ஸ் எழுதும் நேரமும் இறக்கை கட்டிகொண்டு பறந்தது. கிட்டதட்ட இருவரும் சந்தித்து ஒரு மாதம் ஆகிய நிலை தான்.

 

கேண்டினில் அமர்ந்து சிவாவுடன் பேசிகொண்டிருந்த போது தான் பிருந்தா அவள் வகுப்பு தோழியுடன் பேசிகொண்டே வந்துகொண்டிருந்தவளை முரளி பார்த்துவிட்டான். ”சிவா இதோ வரேன்..” நண்பனிடம் சொல்லிகொண்டு பிருந்தாவின் இருக்கையின் அருகில் அமர்ந்தான்.

 

“பையா… எப்படி இருக்கீங்க..” தன் அருகில் அமர்ந்த முரளியை அதிசயமாக பார்த்தாள்.

 

“உன்னை பார்த்து நான் தான் கேட்க்கனும்.. எப்படி இருக்க. பழகிடுச்சா இந்த காலேஜ்.”

 

“பழகிடுச்சு பையா… நல்லா இருக்கேன்..”

 

“அதான் பார்த்தாலே தெரியுதே… எப்பவும் க்ளாஸ்விட்டு நகராத நீ, கேண்டின் பக்கம் வந்திருக்கேனு.”

 

”பையா… கிண்டல் எல்லாம் வேண்டாம், இவ தன் என் ஃப்ர்ண்ட்  சர்மிளா. இவங்க என் பையா…” தோழிக்கும், முரளிக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

 

“ஹாய்..” என இருவரும் அறிமுகமாகிகொள்ள.

 

“ம்ம்… ஃப்ரண்ட்ஸ் எல்லாம் வந்த உடனே இந்த பையாவ மறந்துட்டலே.. பார்த்துக்கிறேன் உன்னை.” பிருந்தாவை மிரட்டும் தோணியில் முரளி சொல்லிகொண்டிருக்க.

 

“இங்க என்ன அரட்டை அடிச்சிட்டு இருக்க.. ஷீப் வரசொன்னார் நம்மளை வா முரளி போகலாம்.” மற்ற இரு பெண்களின் முகம் பார்க்காமல் முரளி தான் முக்கியம் என அவனை அழைக்க.

 

“போகலாம் சிவா… ஒரு நிமிஷம் இரு..” நண்பனிடம் சொல்லிவிட்டு பிருந்தாவின் பக்கம் திரும்பிய முரளி.

 

“கம்மிங்க் ஃப்ரைடே என் பெர்த் டே கண்டிப்பா என் வீட்டுக்கு வரணும். இதான் என் வீட்டு அட்ரெஸ், வரும் போது உன் மாமாவையும் அழைச்சிட்டு வா.. பிருந்தா சரியா.”

 

“ஓகே பையா… கண்டிப்பா வரேன்..”

 

“இன்னும் என்ன முரளி… வா போகலாம்.”  முரளியின் சட்டையை பிடித்துகொண்டு அவனை அழைத்து இல்லை இல்லை இழுத்து சென்றான் சிவா.

 

“அய்யோ பையா.. பார்த்து..” சிவாவின் செயலில் பிருந்தா சின்னதாய் அதிர்ச்சியாக பார்த்துகொண்டிருந்தாள்.

 

“அவங்களை உனக்கு முன்னாடியே தெரியுமா பிருந்தா.” அவள் தோழி கேட்க.

 

“இல்லை.. சர்மி.. ஏன்?”

 

“ஹ்ம்ம் நத்திங்க்… சரி எனக்கு சின்ன வேலை இருக்கு நீ முன்னாடி க்ளாஸ்க்கு போ நான் வரேன் பின்னாடியே.” பிருந்தாவிடம் சொல்லிவிட்டு சர்மிளா வெளியேறி சென்றாள்.

 

கல்லூரியில் முரளியை முதல் நாள் சந்தித்ததில் இருந்து இன்று வரை நடந்ததை தனது மாமனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் பிருந்தா.  முரளி செய்த உதவியையும் மறக்காமல் பிருந்தா சொல்ல, சுந்தர் முரளியை நினைத்து பெறுமை கொண்டார். தெரியாத பெண்ணை இந்த காலத்தில் ஏமாற்றும் ஆண்களில் இருந்து அவன் சற்று வித்தியாசமாக தெரிந்தான். பிருந்தாவின் போனில் கூட முரளியின் பெயரை “முரளி பையா” என சேவ் செய்து வைத்திருந்தாள்.

 

முரளி, பிருந்தாவின் மீது வைத்துள்ள பாசம் சிவாவுக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால், அதையெல்லாம் சிவா ஒரு பொருட்டாக மதிக்கவும் மாட்டான். பிருந்தாவின் முகம் கூட காணமல் இருக்கும் இந்த சிவா தான் ஒரு காலத்தில் பிருந்தாவை இழந்து தவிக்க போகிறான் என்பது அப்போது தெரியவில்லை சிவாவுக்கு.

 

                                         பிரியாதே………………….

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!