என் தீராத காதல் நீயே இறுதிப்பகுதி

என் தீராத காதல் நீயே 

இறுதிப்பகுதி

 

“இன்றோடு ஷரவன், மிருதுளா கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது..” 

 

“நிலவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தவன் இன்று தான் ஊருக்கு திரும்பி இருந்தான்.. வீட்டிற்குள் நுழைந்ததும் லட்சுமி, லட்சுமியின் தங்கை பிரியா, சிந்து, விஷ்வா என்று எல்லோரும் ஏங்கேயே அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்ததை பார்த்தவன். “

 

“என்ன குடும்பமே எங்கயே மொத்தமா கிளம்பிட்டீருக்கீங்க போல என்று கேட்டபடி சோபாவில் அமர்ந்தவனை பார்த்த விஷ்வா.”

 

“டேய் நாங்க கிளம்புறோம் நீ வீட்டை பார்த்துக்க என்க.!?”

 

நிலவன் “டேய் முதல்ல நீங்க எங்க போறீங்க டா.. அத சொல்லு முதல்ல என்று கடுப்பாக.. “டேய் உனக்கு மேட்டர் தெரியாதில்ல.?? நம்ம வால்டியூப்க்கு கல்யாணம் நடக்கப்போகுது டா.. இன்னைக்கு கல்யாணம் பத்தி பேசபோறாங்க.. யூ.எஸ் ல இருந்து ஆகாஷ் வந்திருக்காரு.. நாங்க எல்லாரும் தனு வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருக்கோம்.. செல்வகுமார் சார் தான் எங்க எல்லாரையும் கண்டிப்ப வர சொன்னாரு.. ஷரவனும், அமுல்பேபியும் கூட வராங்க என்று சொன்னவன் அனைவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.. நிலவனுக்கு, தனுவிற்கு கல்யாணம் என்று கேட்டபோதே தலையில் இடி விழுந்துபோல் ஆகி விட அதன் பின் விஷ்வா சொன்ன எதுவும் அவன் காதில் விழவில்லை.. சில நொடிகள் அப்படியே இருந்தவன்.. உடனே கோபமாக எழுந்தவன் காரை எடுத்துக்கொண்டு தனு வீட்டிற்கு விரைந்தான்..”

 

“ஹாலில் அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க.. வேகமாக உள்ளே வந்த நிலவனை யாரும் கவனிக்கவில்லை.. நிலவன் நேராக தனு அறைக்கு செல்ல. அவள் அப்போது தான் புடவையை கட்டிமுடித்திருக்க.. அருகில் காலடி சத்தம் கேட்டு அவள் திரும்பும் முன் நிலவன் அவள் கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அனைத்தவன். அவள் கத்த ஆரம்பிக்கும் போதே அவள் இதழை தன்வசப்படுத்தி இருந்தான்.. தீடிரென நடந்த நிகழ்வில் தனு சுதாரித்து அவனிடம் இருந்து விலக முயல?? அவன் இரும்புப்பிடியில் இருந்து அவளால் விலக முடியவில்லை.. தான் கடுங்கோபத்தை தனுவின் இதழில் வன்மையாக காட்டியவன்.. கொஞ்ச நேரம் கழித்து அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன்.. நேராக அவள் கண்ணை பார்த்து .. போடி?. இப்ப போ.? இப்ப போய் சொல்லு பார்க்கலாம் அந்த ஆகாஷை கல்யாணம் பண்ண ஓகேன்னு.. போடி போய் சொல்லுடி என்றவன். அவள் கூந்தலை பிடித்து தன் முகத்திற்கு அருகில் கொண்டு வந்து. இங்க பாரு டி. இந்த ஜென்மத்தில் உனக்கு கல்யாணமுன்னு ஒன்னு நடந்த அது என் கூட மட்டும்தான் நடக்கும்.. அப்படி இல்லன்னா சாகுற வரை நானு சிங்கிள் தான். நீயும் சிங்கிள் தான். உன் மனசுலயும் சரி, உன் வாழ்க்கையிலும் சரி நான் மட்டும் தான் இருக்கணும். அந்த இடம் எனக்கு மட்டும் தான்.. அதை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று கடுமையான குரலில் சொல்ல..

 

“தனு அவனை விழிகள் இமைக்காமல் கோபமாக பார்த்தவள்.. உனக்கு உண்ணப்பத்தி, நீ நெனச்சது நடக்கணுன்னு அதை பத்தி மட்டும் தான் கவலை இல்ல.. உனக்கு நீ நெனச்சது நடந்த போதும். என்னோட உணர்ச்சிகளுக்கும், நான் என்ன நெனைக்குறேன்னு உனக்கு கவலையே இல்லை இல்ல.. என்ன ஏதுன்னு ஒரு வார்த்த கூட கேக்காம நீ பாட்டு வந்து முத்தம் கொடுக்குற.. என்ன நெனச்சுட்டு இருக்க நீ..?? நீ யாரு டா எனக்கு முத்தம் கொடுக்க.. நீ யாரு டா என்ன கல்யாணம் செய்யக்கூடாதுன்னு சொல்ல, யாரு நீ என்று அவள் கொதிக்க.. அதில் நிலவன் இன்னும் கடுப்பானவன்.. நான் யார.?? நான் யாருன்னா கேட்ட?? இருடி இரு நான் யாருன்னு இப்ப காட்டுறேன் என்றவன். அந்த அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வர அவனை தீடிரென அங்கு பார்த்த அனைவரும் கேள்வியாய் அவனை பார்க்க. விஷ்வா ‘டேய் நீ எப்ப டா இங்க வந்த..?? அதுவும் உள்ள இருந்து வர.?? எங்களுக்கு தெரியாம நீ எப்ப உள்ள போன என்று கேள்வி மேல் கேள்வி கேட்க.. “டேய் உன்னோட எல்லா கேள்விக்கும் நான் அப்புறமா பதில மெயில் பண்றேன்.. இப்ப எனக்கு டைம் இல்ல என்றவன்.. இங்க ஆகாஷ் யாரு என்று கேட்க.. ஆறடியில் பார்க்க அழகாய், ஸ்டைலாக இருந்த ஒருவன். “எஸ் ஐ அம் ஆகாஷ் என்று சொல்ல.. அவனை பார்த்த நிலவன் பார்வையிலையே அவனை எரிக்க.. பின் தான் கோபத்தை அடக்கிக்கொண்டு ப்ளீஸ் மிஸ்டர். ஆகாஷ் நான் உங்கிட்ட கொஞ்சம் தனிய பேசணும் என்றவனை அனைவரும் விசித்திரமாக பார்க்க.. நீ என்ன டா அவர்கிட்ட பேசணும்.?? அதுவும் தனிய என்ற லட்சுமி நிறுத்திய ஆகாஷ். “இட்ஸ் ஓகே ஆன்ட்டி. அவர் ஏதோ என்கிட்ட பேச நெனைக்கிறாரு.. பேசட்டும் என்றவன்.. வாங்க மாடிக்கு போய் பேசுவோம் என்றவன் நிலவனுடன் மாடிக்கு சென்றான்..”

 

“நிலவன் தன்னை முறைப்பதை பார்த்த ஆகாஷ்.. என்ன ஏதோ பேசனும்னு சொல்லிட்டு இப்படி அடிச்சு பார்த்துட்டுட்டு இருக்கீங்க சகலை என்க.. அவனின் சகலை என்ற வார்த்தையில் கொதித்துபோன நிலவன்.. அடி செருப்பால யாருக்கு யாருடா சகலை என்று ஆகாஷ் சட்டை காலரை பிடித்தவன்.. உனக்கு மரியாதைய சொல்றேன் இப்படி இங்கிருந்து ஓடிடு.. இல்ல மகனே உன்னோட டெட்பாடி தான் திரும்ப அமெரிக்க போகும் என்று எச்சரிக்க.. நிலவன் கையை தான் சட்டையில் இருந்து எடுத்த ஆகாஷ். நா எதுக்கு பாஸ் இங்கிருந்து போகணும்.. அவ்வளவு தூரத்தில் இருந்து வந்தது சும்மா திரும்பி போகவா என்ன..? அதோட என்ன போகச் சொல்ல நீங்க யாரு பாஸ்.. இது என் மாமனார் வீடு என்று உரிமையோடு சொன்னவனை கொலைவெறியோடு பார்த்த நிலவன். டேய் எவ்வளவு தைரியம் இருந்த இப்படி சொல்லுவ.. மகனே நீ மட்டும் என் தனுவ கல்யாணம் பண்ண சம்மதம்னு சொல்லி பாரு அப்புறம் தெரியும் இந்த நிலவன் யாருன்னு என்று சொல்ல.. அவன் சொன்னதை கேட்ட ஆகாஷ் சத்தம்போட்டு சிரிக்க அதில் கடியான நிலவன்.. டேய் ஏன் டா இப்ப இப்படி கேவலம சிரிக்கிற என்று பல்லைக்கடிக்க.. பின்ன என்ன பாஸ் இந்த மாதிரி காமெடி பண்ண சிரிக்காம என்ன செய்ய.. நீங்க பாஸா இல்ல லூசா.. நான் போய் தனுபேபிய கல்யாணம் பண்றாத என்று வயிற்றை பிடித்து சிரித்தவன், “கடவுளே நெனைக்கவே சிரிப்பு சிரிப்ப வருது என்று வாய்விட்டு சிரித்தவன்.. நல்லவேள என் பொண்டாட்டி கீழ இருக்கா.. அவ மட்டும் நீங்க சொன்னத கேட்டிருந்த இன்னேரம் ரெண்டு பூரிகட்டையும், என் மண்டையும் ஒடஞ்சிருக்கும் என்று மீண்டும் சிரிக்க.. நிலவன் ஆகாஷ் சொன்னதை கேட்டு அப்படியே சிலையாய் நின்றான்.. “டேய் என்னடா சொல்ற நீ..?? உனக்கு கல்யாணமாகிடுச்ச என்று வியப்பாக கேட்க.. ஆம பாஸ் என்று ஆகாஷ் கூலாக சொல்ல.. நிலவன் மூளையே குழம்பி வெளியே வந்துவிடும் போல் இருந்தது..”

 

“டேய் என்னடா நடக்குதிங்க.?? யாரு டா நீ..?? எதுக்கு டா இங்க வந்த..? அவ என்னடான்னா உன்னை மாமான்னு கொஞ்சுறா. நீ என்னடான்னா இது உன் மாமனார் வீடுன்னு சொல்றா.. விஷ்வா தனுக்கு கல்யாணம், அதபத்தி பேச இங்க வந்திருக்கோம்னு சொல்றான்.. என்னடா நடக்குதீங்க.. இங்க எது உண்மை எது பொய்.. எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு என்று தலையை பிடித்துக்கொள்ள..”

 

“ஆகாஷ் மெதுவாக அவன் தோளை தொட்டவன்.. எல்லாமே உண்மை தான் பாஸ்.. இது என் மாமனார் வீடு. அது உண்மை தான் ஏன்னா தனுவோட பெரியப்பா பொண்ணு அஞ்சலி தான் என்னோட வைஃப்.. சோ இது என் மாமனார் வீடு.. அப்புறம் தனு என்ன மாமான்னு சொல்றது.. அக்கா புருஷனை மாமான்னு தானே பாஸ் சொல்லுவாங்க. அப்புறம் இந்த கல்யாண மேட்டர். இங்க எல்லாரும் வந்திருக்கிறது உங்களுக்கு தனுவை பொண்ணுகேட்டு தான் பாஸ் என்று சொல்ல நிலவனுக்கு தலையில் ஐஸ்கிரீம் மழை பெய்ததுபோல் அப்படி ஒரு சந்தோஷம்.. நீங்க இப்ப என்ன சொன்னீங்க எனக்கும், தனுவுக்கும் கல்யாணம் பேசவ எல்லாரும் வந்திருக்காங்க, தனு இதுக்கு ஒத்துக்கிட்டாளா.?? என்று நம்பாமல் கேட்க..”

 

ஆகாஷ், ‘ஆமா பாஸ் அவ உங்களை தான் மனசார விரும்புறா.. இந்த விஷயம் எனக்கு கொஞ்ச நாள் முந்தி தான் தெரிஞ்சுது.. என்னோட ப்ரண்ட் ஒருத்தன் தனுவ புடிச்சுப்போய். என்கிட்ட வந்து கேட்டான். நானும் தனுகிட்ட கேட்டேன்.. ஆன அவ நான் இந்தியால ஒரு கொரங்கை மனசார காதலிச்சிட்டேன் மாமா.. ஆன அந்த கொரங்கு என்னை புரிஞ்சுக்காம ரொம்ப தப்பா பேசிடுச்சு.. என்னால அத தங்கிக்க முடியல அதான் அது செவுல்ல ஓங்கி ஒன்னு வச்சுட்டு போடான்னு சொல்லிட்டு இங்க வந்துட்டேன்.. ஆன அவனை என்னால மறக்கமுடியாது மாமா.. இந்த பிறவியில் எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்த அது அந்த கொரங்கு கூட தான்.. இல்லன்னா எனக்கு கல்யாணமே இல்ல மாமா..

 

“என்ன தனு இது சின்ன புள்ளை மாதிரி பேசிட்டு. சரி நீ சொல்றது நா ஒத்துக்கிறேன்னே வச்சிக்கோ.. ஆன அந்த பையனும் இன்னமும் உன்னை நெனச்சிட்டு இருக்கணுமே.. ஒருவேள அந்த பையன் உன்ன மறந்து வேற கல்யாணம் பண்ணி இருந்தால் நீ என்ன பண்ணுவ.?? என்றவனை பார்த்து சிரித்த தனு.. என்னை தவிற அவனால இன்னொரு பொண்ண நெனச்சு கூட பாக்கமுடியாது மாமா.. அவன் அந்த அளவு என்ன உயிரா காதலிக்கிறான் என்றவள் முகம் கர்வத்தில் மிளிர..”

 

“இவ்வளவு நேரம் ஆகாஷ் சொல்லியதை கேட்டுக் கொண்டிருந்த நிலவன் கண்கள் கலங்கி இருந்தது.. அவ இந்தியா வந்தது, மிருதுக்காக மட்டுமில்ல, உங்களை பாக்கவும் தான்.. ஆன நீங்க பேசுன வார்த்தை அவளை ரொம்ப காயப்படுத்திடுச்சு போல.. அதான் நீங்க அவகிட்ட பலமுறை பேச வந்தும் அவ விலகி விலகி போய்ட்ட.. ஒரு லெவலுக்கு மேல அவளால நீங்க கஷ்டப்படுறத பாக்கமுடியல.. அந்த நேரம் மிருது , ஷரவன் பிரச்சனை முடியாம அவ மனசுல இருக்குறதை சொல்லவும் அவ விரும்பால.. அப்கோர்ஸ் நீங்களும் அவங்க ரெண்டு பேர் லைஃப்ல நல்ல முடிவு கிடைக்காம உங்க கல்யாணம் பத்தி யோசிக்க மாட்டிங்க.. அதனால தான் அவங்க கல்யாணம் முடியுற வரை அவ வெய்ட் பண்ணா.. நானும் செல்வா மாமாகிட்டையும், மிருதுகிட்டையும் உங்க காதலை பத்தி சொன்னேன்.. மாமாக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் போல. உடனே ஓகே சொல்லிட்டாரு.. மிருது உங்க அம்மா லட்சுமி ஆன்ட்டி, பிரியா ஆன்ட்டி கிட்ட பேசுனா.. அவங்களுக்கு ஏற்கனவே தனுவ உங்களுக்கு கட்டிவைக்கனும்னு எண்ணம் இருக்கவும் அவங்களும் சம்மதிச்சிட்டாங்க.. உங்களுக்கு ஒரு ஷாக் சர்ப்ரைஸ் கொடுக்க தனு செஞ்ச ஏற்பாடு தான் இந்த விஷயத்தை உங்க கிட்ட மறச்சது.. இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் சிம்பிள நிச்சயம். அடுத்த ஒரு மாசத்தில் கல்யாணம் என்று ஆகாஷ் சொல்லி முடிக்கும் முன் நிலவன் பறந்திருந்தான் தன்னவளை பார்க்க..”

 

“தனு அறைக்கு சென்றவன் அவளை பின்புறமாக இடையோடு இருக்கி அனைத்து.. சாரி டி…!! ரொம்ப சாரி…!! உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் ரொம்ப சாரி டி என்று மனதில் இருந்து சொல்ல.. தனு திரும்பி அவளும் அவனை இறுக்கி அனைத்தவள்.. “ஐ மிஸ் யூ நிலா” “மிஸ் யூ வெரி பேட்லி” என்றவள் நிமிர்ந்து அவன் கன்னத்தில் முத்தமித்தவள் ” ஐ லவ் யூ நிலா ” ஐ லவ் யூ பாட்டம் ஆப் மை ஹார்ட் நிலா ” என்றவள் இன்னும் இன்னும் அவனை தன்னோடு இறுக்கி கொண்டாள்.. 

 

“இரண்டு வருடங்களுக்கு பிறகு..

 

“ஷரவன், மிருதுளா பிரச்சனையின் போது தன் தந்தையின் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக வெளிநாடு சென்ற பரத் ஐந்து வருடம் கழித்து போன வருஷம் தான் இந்தியா திரும்பினான்.. சாருக்கு லவ் எதுவும் செட்டகாமல் போக. வேறு வழி இல்லாமல் வீட்டில் பார்த்த அவன் மாமன் மகள் ஷாலினியை திருமணம் செய்ய ஓகே சொல்ல.. இன்று அவனுக்கு தான் திருமணம்..”

 

“அந்த கல்யாண மண்டபம் விளக்கு வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு இருந்தது.. “டேய் பிரேம் இந்தம்மா ராஷ்மி இங்க வந்து பாருங்க.. உங்க பையன் எப்ப பாரு என் பொண்ணு பின்னாடியே சுத்திட்ருகான்.. இதெல்லாம் நல்ல இல்ல சொல்லிட்டேன். என் பொண்ணை இவன் கிட்ட இருந்து காப்பாத்துறதே எனக்கு ஓவர் டைம் வேலைய போச்சு.. எவ்வளவு அழகாக பொண்ணுங்க கல்யாணத்துக்கு வந்திருக்காங்க நிம்மதியா சைட் கூட அடிக்கமுடியல என்று புலம்ப.. உனக்கு பின்னாடி ஒரு சுப்பர் ஃபிகர் நிக்குது உனக்கு ஓகேவன்னு பாரு மச்சி என்று பிரேம் சொல்ல “விஷ்வா எங்க.? எங்க.? எங்க அந்த ஃபிகர் என்று ஆர்வமாக திரும்ப அங்கு பத்திரகாளியாய் நின்றிருந்தாள் சிந்து.. விஷ்வா தோளில் இருந்து இறங்கிய அவன் மகள் சிவிகா, பிரேம் மகன் தருண் கையை பிடித்தவள்.. வா தருண் நம்ம போய் விளையாடலாம்.. அப்பாக்கு அம்மா கையில நல்ல அடி காத்திருக்கு என்று சொல்லிவிட்டு சொல்ல.. பிரேம் குழந்தைங்க வர உன் லட்ச்சனம் தெரிஞ்சிருக்கு டா த்த்து என்று காறித்துப்பியவன் ராஷ்மியை அழைத்துக்கொண்டு, சிந்து யூ ஸ்டார்ட் என்றுவிட்டு சொல்லிவிட்டு செல்ல.. விஷ்வாவின் கன்னம் வீங்கி இருந்தது..”

 

“இங்கு அறைக்குள் நிறைமாத வயிறுடன் புடவைகட்ட முடியாமல் தவித்த தன் மனைவிக்கு அழகாய் புடவைகட்டிவிட்டுக் கொண்டிருந்தான் நிலவன்.. சுப்பர்ங்க என்ன அழக புடவை கட்டி இருக்கீங்க செம்ம போங்க என்று தனு புருஷனை மெச்சிக்கொள்ள.. தன் உயிரை சுமந்து இரு உயிராய் அழகு பதுமைபோல் இருந்த மனைவியின் தாய்மையின் அழகை ரசித்தவன்.. இவ்வளவு அழக புடவை கட்டிவிட்டதுக்கு கன்னத்துல எதாவது தந்தா நானும் சந்தோஷப்படுவேன் என்றவனை செல்லமாக முறைத்த தனு.. முத்தம் கொடுப்பது போல் அவன் அருகில் சென்றவள் அவன் கன்னத்தை கடித்து விட.. ஸ்ஸ்ஆஆ என்று கத்தியவன்.. அவனை கடித்த அவள் வாயை தன் வாய்கொண்டு மூடினான்.. 

 

“மிருதுளா திரு திருவென முழித்துக்கொண்டிருக்க.. முக்தா தன் அம்மாவையும், அப்பாவையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.. ஏன்ப்பா அம்மாக்கு தான் புத்தி இல்ல.. உனக்கு என்ன ஆச்சு..?? நீயும் இப்புடி பண்ண என்ன அர்த்தம் என்ன தன் பிஞ்சு விரால்களை நீட்டி மிரட்ட.. ஷரவன் திரும்பி மிருதுளாவை பார்த்தவன்.. எல்லாம் உன்னால தான் டி.. இதெல்லாம் எனக்கு தேவையா என்று கண்ணாலேயே அவளை முறைக்க.. மிருதுளா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.. ஏம்மா நேத்து கிளம்பும்போதே கயல்பாட்டியும், லட்சுமி பாட்டியும் எக்காரணம் கொண்டும் உன்னை ஐஸ்கிரீம், சாக்லேட் சாப்பிடக்கூடாது.. அது குட்டி பாப்பாக்கு ஒத்துக்காதுன்னு சொல்லி தானே அனுப்புனங்க.. அப்படி இருந்தும் நீ திருட்டுத்தனமா அப்பாவை ஐஸ்கிரீம் எடுத்து வர சொல்லியிருக்க.. நீங்களும் கொண்டு வந்து தந்திருக்கீங்க என்று இருவரையும் முறைத்தவள்.. மிருதுளா கையில் தன் அக்காவின் பேச்சைக்கேட்டு தன் பொக்கைவாயை திறந்து சிரித்துக் கொண்டிருந்த பிறந்து ஆறுமாதமே ஆன ஷரவன், மிருதுளாவின் குட்டி இளவரசன் வினய் யை பார்த்தவள்.. இங்கபாரு தம்பி பாப்பா இனி அம்மா ஐஸ்கிரீம், சாக்லேட்ன்னு எதாவது சாப்பிட்ட. நீ அக்காகிட்ட சொல்லு அக்கா பாட்டிங்க கிட்ட சொல்லி அம்மாக்கும், அப்பாக்கும் அடிவாங்கித்தரேன் என்றவள் தன் தம்பியின் பட்டு கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டு விட்டு சொல்ல.. ஷரவன், மிருதுளாவிற்கு தன் மகளின் பாசத்தை நினைத்து மனம் நிறைந்துவிட்டது.. அதுவும் மிருதுளா தன் மகள் தன்னவனைப் போலவே அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதை நினைத்து அவள் உள்ளம் மகிழ்ந்தது..

 

“குறித்த நேரத்தில் உறவும், நட்பும் சூழ்ந்திருக்க.. பரத், ஷாலினி திருமணம் இனிதே முடிந்தது.. இனி அனைவர் வாழ்விலும் சந்தோஷம் மட்டுமே நிலைத்து இருக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் நாமும் செல்வோம்..

 

            ……….‌முற்றும்……….