என் தீராத காதல் நீயே 16

“பழைய நினைவுகளில் முழ்கி இருந்த மிருதுளாவின் கண்கள் அவளையும் அறியாமல் கண்ணீர் சிந்தியது..” 

இரவுக்கும், நிலவுக்கும் ஒய்வு கொடுக்க.. தன் கதிர் கொண்டு பூமியில் கால்பதித்து வானவிதியில் வலம் வந்தான் கதிரவன்.. 

“தனு, மிருதுளாவிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள்..”

 

“மிருது ப்ளீஸ் டி.. என்ன கெஞ்சவைக்காத டி?? கிளம்பு என்று மிருதுவுடன் போராடிக் கொண்டிருந்தாள் தனு.. “ஏய் எரும உனக்கு தான் தெரியுமில்ல நான் பெர்த்டே செலிபிரிரேட் பண்றதில்லனு… அப்புறம் எதுக்கு டி என்னை இம்ச பண்ற என்று மிருதுளா சலித்துக்கொள்ள.. “ஏய் இப்ப யாருடி உன்ன பெர்த்டே செலிபிரேட் பண்ண சொன்னது.. நான் உன்ன சும்மா ஷாப்பிங்க்கு தானே கூப்டேன்.. அதுக்கு ஏன்டி இந்த அலப்பறை.?? என்று அவள் கடுப்பாக., “இப்ப எதுக்கு டி ஷாப்பிங்?? ஹான்.?. எதுக்குன்னு கேக்குறேன்..?? என் பெர்த்டேக்கு புது டிரெஸ் எடுக்க தானே என்க.. ஆமா டி உனக்கு புது டிரஸ்ட் வாங்க தான் ஷாப்பிங். இப்ப அதுக்கு என்ன..? பெர்த்டேக்கு ஜஸ்ட் ஒரு புது டிரெஸ், கோயில் கூட இல்லன்னா எப்புடி டி.. உன்கூட வந்த நெல்லுக்கு பாயுற தண்ணி புல்லுக்கும் பாயுற மாதிரி நானும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிக்குவேன்.. ஏதோ உன் புண்ணியம் உனக்கு டிரெஸ் எடுக்க சொல்லி “மை நைனா அவரோட டெபிட் கார்டையும் அதோட பின்நம்பரையும் அந்த மனுஷன் என்ன நம்பி கொடுத்திருக்காரு பாவம்.. எங்காப்பனுக்கு ஆள் வளர்ந்த அளவு அறிவு வளரால ம்ம்ம்ம்..!?என்ன செய்ய என்று சொல்ல.. மிருதுளா வைத்த கொட்டில் வலி தாங்கமுடியாமல் தலையை தேய்த்துக் கொண்டாள் தனு.. 

 

“எப்படியே மிருதுளா கை, காலில் விழுந்து, கெஞ்சி கெதறீ அவளை ஷாப்பிங்கிற்கு அழைத்து வந்திருந்தாள் தன்யா.. மிருதுளாவை அவளுக்கு உடை தேர்ந்தெடுக்க சொல்லி விட்டு தன்யா அவளுக்கு வேண்டியதை வாங்க செல்ல.. மிருதுளா தனக்கு ஒரு புடவை, ஜீன்ஸ் பேண்ட், டாப் எடுத்தவள்.. தனுவிற்கும் அவள் அப்பா, அம்மாவிற்கு சேர்த்து டிரெஸ் எடுத்து பில்போட்டு விட்டு தனுவுக்காக காத்திருக்க.. அம்மாவின் புடவை முந்தனையை பிடித்து இழுத்தபடி.. அங்கிருந்த பொம்மையை வாங்கி தர சொல்லி தன் பிஞ்சு இதழ்களை பிதுங்கி கெஞ்சிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்தவள்.. கீயூட் பேபி.. என்ன ஒரு நாலு இல்ல ஐஞ்சு வயசு இருக்கும் போல எவ்ளோ கீயூட்ட இருக்கு என்று நினைத்தவள்.. அந்த குழந்தையின் அழகு முகமும், மழலை குரலும் அவள் இழந்த பொக்கிஷத்தை அவளுக்கு நினைவுப்படுத்த.. தன்னை மறந்து அந்த குழந்தையை ரசித்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவள் அந்த குழந்தையின் அருகில் செல்ல நினைக்க.. அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு திரும்பி அதன் தாயை பார்த்து அப்படியே அடித்த அடியெடுத்து வைக்காமல் நின்று விட்டாள்..”

 

“அந்த பெண் ஃபோனில் பேசியது மிருதுளாவிற்கு தெளிவாக கேட்டது.. “மை டியர் ஷரவன் உன் அருமை பொண்டாட்டிக்கும், புள்ளைக்கும் டிரெஸ் எடுத்தாச்சு.. இன்னு ஒரு மணிநேரத்தில் நான் நம்ம வீட்டுல இருப்பேன் என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்த ராஷ்மியை பார்த்து தான் மிருதுளா சிலையாய் நின்றாள்.. ராஷ்மியையும், குழந்தையையுமே இமைக்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தவள்.. ஷரவனுக்கும், ராஷ்மிக்கும் கல்யாணம் ஆகிடுச்ச.. அது ஷரவன் குழந்தையா என்று நினைத்தவள் இதயத்தில் யாரோ கத்தி கொண்டு கிழிப்பது போன்ற வலி.. அந்த வலியோடு ராஷ்மியையே பார்த்துக் கொண்டிருந்தவள்.. தனு அருகில் வந்ததை கூட கவனிக்கவில்லை..” 

 

” ஏய் மிருது..!? ஏய் என்று தனு அவளை உலுக்க.. மிருது அப்போதும் அசையாமல் நிற்க..?!”

 

 “ஏய் மிருது, என்ன டி நா வந்தது கூட கவனிக்காம அப்படி என்னத்த அங்க பார்த்துட்டு இருக்க என்று மிருதுளா பார்வை போன இடத்தை பார்க்க.. அங்கு ராஷ்மியை பார்த்தவள்.,”ஏய் மிருது அது நம்ம ராஷ்மி தானே?? என்று உற்சாகமாக சொன்னவள்.. அவளா பார்த்து எத்தனை வருஷம் ஆகிடுச்சு.. கல்யாணம் ஆகிடுச்சுபோல.. கையில பாப்பா வேற வச்சிருக்க.. வா மிருது போய் அவகிட்ட பேசுவோம் என்று மிருதுளா கைப்பிடிந்து இழுக்க.. அதில் உணர்வு வந்த மிருது , தனு சீக்கிரம் வா டி வீட்டுக்கு போலாம் என்று அவசப்படுத்த.”

 

“ஏய் லூசு?? என்ன பேசுற நீ.. அது நம்ம ராஷ்மி டி மறந்துட்டிய?? வாடி போய் எப்படி இருக்காணு விசாரிப்போம் என்று சொல்ல.. மிருதுளா, “இப்ப நீ என் கூட வரபோறீய இல்லையா தனு என்று இருக்கும் இடம் மறந்து கத்தியவள்.. தனுவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல.. தனுவிற்கு ஒன்னும் புரியவில்லை..”

 

“வீட்டிற்கு வந்து ரொம்ப நேரமாகியும் மிருதுளா எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க.. தனு அவளை கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தாள்.. “ஏய் நான் இங்க கத்திட்டுடிருக்கேன்.. நீ பாட்டுக்கு அமைதியா இருந்தா என்ன டி அர்த்தம்.. ராஷ்மி நம்ம கூட வேல பார்த்தவ டி.. எத்தனை வருஷம் கழிச்சு அவளை பார்த்தோம்.. கையில குழந்தையோட வேற இருந்தா.. ஒரு வார்த்தை பேசிட்டு வந்த நீ என்ன கொறஞ்ச போய்டுவா.. அப்படி அவ உனக்கு என்னடி செஞ்ச அவ முகத்தை கூட பாக்காம முஞ்ச திருப்பிட்டு வர அளவுக்கு அவ என்ன டி தப்பு செஞ்ச என்று தனு மிருதுளாவை தீ பார்வை பார்க்க..”

 

மிருதுளா, ” மெதுவாக தனுவை நிமிர்ந்து பார்த்தவள்.. நா என்னோட கல்யாணத்தை நிறுத்தினதுக்கு காரணமே அவ தான் டி என்க.. தனு ஒன்னும் புரியாமல் கண்களை அகல விரிக்க.. அவள் மண்டை குழம்பியது..”

 

 “ஏன் டி கல்யாணத்தை வேண்டான்னு சொன்னேன்னு பல தடவை காரணம் கேட்டிருக்கோம்.. ஒரு தடவ கூட இவ வாயை தெறந்தது இல்ல.. ஆன இன்னைக்கு சம்மந்தமே இல்லாம ராஷ்மியை ஏன் இந்த மேட்டர்ல இழுக்குறா என்று தனு முழிக்க.. மிருதுளா அழுவதற்கு கூட கண்ணில் கண்ணீர் இல்லாமல் போக வரண்ட பார்வையோடு எங்கே வெறித்து பார்த்தபடி அன்று ஹாஸ்பிடலில் ஷரவனையும், ராஷ்மியையும் பார்த்த முதல் நடந்த அனைத்தையும் சொன்னவள் முகத்திலும், கண்களிலும் அத்தனை வெறுமை.”

 

வலிகளை வார்த்தைகளில் வடிக்க முடியாமல்.!!

கண்ணீராயாய் வடிக்கிறேன்..!! 

 

வாழ்ந்த காலமெல்லாம் அழுதும்..!! 

இன்னும் கண்ணில் கண்ணீர் தீரவில்லை..!!

 

இனி வாழுப்போகும் காலம் அதை நினைத்தால் வடித்த கண்ணீர் அதிகமில்லை..!! 

 

மனவலியை வார்த்தைகளில் சொல்லி சொல்லி வார்த்தைகள் தான் தீர்ந்தது..!! 

 

வலியும் போகவில்லை..!! வாழ்க்கையும் மாறவில்லை..!! 

 

“ராஷ்மியை பார்த்ததும் மிருதுளாக்கு பழைய நினைவுகள் மனதில் வந்து அவள் நிம்மதியை குலைக்க.. வெகுநேரம் அழுதவள் தன்னை மறந்து அப்படியே உறங்கிவிட… தனு மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள்.. மிருதுளாவின் நிலையை நினைத்து ஒரு பக்கம் கஷ்டமாக இருந்தாலும்.. அவசரப்பட்டு எதையும் முழுசா தெரிஞ்சிக்காம இப்படி வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்குறளே என்று ஒரு பக்கம் கோபமும் வந்தது.. இவளோட இந்த அவசர முடிவு எத்தனை பேரோட வாழ்க்கை புரட்டி போட்டுடுச்சு என்று நினைத்தவள் மனகண்முன் அவள் அனுமதி இல்லாமல் வந்து நின்றான் நிலவன்.. தலையை உலுக்கி ச்சே என்ன நெனைப்பு இது… அவனா எதுக்கு நான் நெனைக்கணும் என்று தன்னை தானே திட்டியவள்.. மெதுவாக தூங்கும் மிருதுளாவின் தலை தடவியவள்.. இதுவரை ஏன் நீ கல்யாணத்த நிறுத்தினேன்னு தெரியாம இருந்தது தான் டி எனக்கு இருந்த பெரிய பிரச்சனை.. இப்ப அது தெரிஞ்சு போச்சு இனி எல்லாம் சரியாகிடும்.. உன் பெர்த்டே அன்னைக்கு உன் வாழ்க்கையே மாறபோகுது டி.. இனி வரப்போற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு அதிர்ச்சி காத்திருக்கு மிருது.. உனக்கே தெரியாத உன்ன பத்தின பல விஷயம் இனிமே தான் வெளிய வரப்போகுது.. பி ரெடி பார் இட் என்றவள்.. டாக்டர். லட்சுமிக்கு கால் செய்து இன்று நடந்த அனைத்தையும் சொன்னவள்… நாம தேடுனது கிடச்சுடுச்சு ஆன்ட்டி.. சோ இனி வெய்ட் பண்ண வேண்டாம்… அவ பெர்த்டே அன்னைக்கே நம்ம ப்ளானை எக்ஸிக்யூட் பண்ணிடுவோம் என்றவள்.. இன்னு சில விஷயங்களை பேசிவிட்டு ஃபோனை வைத்தவள்.. முகம் முழுதும் வேதனையோடு உறங்கும் மிருதுளாவின் கன்னத்தில் முத்தம் வைத்தவள்.. இனி உன் லைப் சுப்பரா இருக்கும் டா மிருதுகுட்டி என்றவள் அவள் அறைக்கு சென்றாள்..