என் தீராத காதல் நீயே 18

என் தீராத காதல் நீயே 18

என் தீராத காதல் நீயே 18

 

“மிருதுளா ராஷ்மியை பற்றி சொன்னவுடனே.. தனுவிற்கு இதில் ஏதோ தப்பு நடந்திருக்கு என்று சந்தேகம் வர.. அனைவருக்கும் ஃபோன் பண்ணி லட்சுமி வீட்டிற்கு வர சொன்னவள்.. லட்சுமியை பார்க்க சென்றாள்..  

 

“அனைவரும் யோசனையில் முழ்கி இருக்க.. நிலவன் தனுவை பார்ப்பதில் முழ்கி இருந்தான்.. அன்று அவள் வீட்டில் நடந்த சண்டைக்கு பிறகு அவள் அவனை அடியோடு வெறுத்திருந்தாள்.. அவனை பார்ப்பது கூட இல்லை… நிலவன் பலமுறை அவளை பார்க்க முயன்று தோற்றவன்… அதன் பின் தனுவை சந்திக்க முயலவில்லை.. இப்போது ஷரவன், மிருதுளாவை திரும்பவும் ஒன்னு சேக்க தனு போட்ட ப்ளானில் லட்சுமியோடு அனைவருடன் சேர்ந்து கொள்ள.. நிலவனும் வந்துவிட்டான்.. நிலவன் தான் அவளை விடாம சைட் அடிச்சானே தவிர தனு அவனை ஒரு சிறு பார்வை கூட பார்க்கவில்லை.. 

 

சிந்து ” இப்ப என்ன பண்றது தனு.??”

 

விஷ்வா ” இதென்ன கேள்வி சிந்து.?? அதான் பிரச்சனை என்னன்னு தெரிஞ்சு போச்சே.. ராஷ்மியை நேரா மிருதுளாகிட்ட கூட்டி போய் உண்மை சொல்லவைப்போம்.. பிரச்சனை முடிஞ்சது என்று கூலாக சொல்ல..” 

 

தனு “இல்லண்ணா அது சரிபட்டு வராது.. ஏன்னா ராஷ்மியும், பிரேம் அண்ணாவும் உண்மையை சொன்னா மிருது நம்புவ தான்.. ஆனா அதோ சமயம்.. அந்த நர்ஸ் ரெண்டு பேரும் ஏன் அப்படி பேசுனங்க.. யார் அவங்களை அப்படி பேச சொன்னதுனு தெரியணும்.. அப்ப தான் இந்த பிரச்சனையை முழுசா முடிக்க முடியும். இல்லன்னா எல்லாருக்கும் இது ஒரு உறுத்தலவே மனசுல இருந்துட்டு இருக்கும் என்க.. அனைவருக்கும் அவள் சொல்வது தான் சரி என்று பட்டது.. ஓகே தனியா தூள் நீ சொல்றது சரிதான் என்று விஷ்வா தொடங்க தனு அவனை செல்லமாக முறைக்க.. விஷ்வா டக்கென தன் நாக்கை கடித்துக் கொண்டவன்.. சாரி டா தனு என்று கெஞ்ச.. தனு சின்னதாய் சிரித்தவள்.. இட்ஸ் ஓகேண்ணா என்க.. விஷ்வா தொடர்ந்தான்.. நீ சொல்ற மாதிரி செய்ய அந்த ரெண்டு நர்ஸை முதல்ல நாம கண்டு புடிக்கணும்.. நாலு வருஷம் ஆகிடுச்சு இப்ப அதுங்க ரெண்டும் அங்க தான் வேலை பார்க்குத இல்ல வேற எங்கயும் போய்டுச்சன்னு தெரியனுமே என்று கவலப்படா..”

 

நிலவன் “எனக்கு இதெல்லாம் நடக்குற காரியம தெரியல டா என்று சலித்துக்கொள்ள.. கடுப்பான தனு ‘முயற்சி செய்யாம முடியாதுன்னு சொல்ற பழக்கம் எனக்கு இல்ல விஷ்வாண்ணா’.. நாளைக்கு இதோ நேரம்.. இந்த பிரச்சனைக்கு பதிலோடு வரேன் என்று வேகமாக அங்கிருந்து சென்றவள் போய் நின்ற இடம் அந்த ஹாஸ்பிடல்.. லட்சுமி மூலம் அந்த ஹாஸ்பிடல் சீப் டாக்டரிடம் பேசி சிசிடிவி புடேஜை எடுத்தாள்.. அவள் நல்ல நேரம் நான்கு வருஷத்திற்கு முந்தையா சிசிடிவி புட்டேஜை அந்த ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் ஹார்ட் டிஸ்க் ல் ஸ்டோர் செய்து வைத்திருந்தது..”

 

“லட்சுமி வீட்டில் அனைவரும் அந்த புட்டேஜை கவனமாக பார்க்க.. அதில் மிருதுளா அழுக்கொண்டு வெளியே செல்லும் காட்சியும், அதன் பின் அர்ச்சனா முகம் முழுக்க வஞ்சக சிரிப்போடு மிருதுளா அழுது கொண்டு செல்லவதை பார்க்கும் காட்சியும் பதிவாகி இருந்தது.. அர்ச்சனாவை பார்த்தவுடனே.. அனைவருக்கும் என்ன நடந்திருக்கும் என்று புரிந்து விட.. அடுத்து அர்ச்சனா எங்கிருக்கிறாள் என்று விசாரித்தனர்.. அதில் அவளுக்கு ஆக்ஸிடென்ட் ஆனதும் அதன் பின் அவள் லண்டன் சென்று விட்டாள் என்பது வரை கண்டுபிடித்தனர்.. ஆனால் இப்போது அவள் லண்டனில் எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் விஷ்வாவும், நிலவனும் தவிக்க.. தனு யூ டோன் வொறி விஷ்வாண்ணா… 

ஐ வில் ஹான்டில் இட் என்றவள்.. தன் ஃபோனில் யாருக்கோ டயல் செய்து ஸ்பீக்கரில் போட்டு காத்திருக்க.. அனைவரும் தனுவையும், அவள் ஃபோனையுமே ஆர்வமாக மாறிமாறி பார்த்துக்கொண்டு இருந்தனர்..”

 

“மூனு , நாலு ரிங் அடித்த பிறகு.. ஃபோனை அட்டன் செய்த ஆண்குரல்.. ஹாய் தன்யா டார்லிங்.?? ஹொவ் ஆர் யூ மை ஸ்வீட் ஹார்ட்?? இந்தியா போனதும் இந்த மாமனை மறந்துட்ட இல்ல பேபி.. என்று உற்சாகமாக எதிர்முனையில் இருந்து குரல் வர.. இங்கு ஒருவன் இதயம் எரிமலையாய் வெடித்து சிதறிக்கொண்டு இருந்தது..”

 

“நிலவன் கடுப்போடு ஃபோனையும், தனுவையும் மாறிமாறி பார்க்க, தனு “டேய் ஆகாஷ் மாமா எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் டா என்க.. என் பேபி இப்படி கேட்டுட்ட..?? நீ கேட்டா நா என் உயிரையே குடுப்பேன் பேபி என்று எதிர்முனையில் பதில் வர.. இங்கு நிலவன் “நீ என்ன டா உயிரை கொடுக்கிறது பக்கி.. நீ மட்டும் என் கையில சிக்கு..?? ராஸ்கல் என் தனுவ டார்லிங், பேபின்னு கூப்பிடுற அந்த நாக்கை புடிங்கி எடுத்து வெளியபோட்டுட்டு, நடுமண்டையில நச்சுன்னு வெட்டியே கொல்றேன் டா உன்ன என்று பல்லைகடிக்க..”

 

 தனு “ஆகாஷிடம் நடந்த அனைத்தையும் சொன்னவள்.. உனக்கு ஒன் டே தான் மாமா டைம் .. நாளைக்கு எனக்கு அர்ச்சனா பத்தின ஃபுல் டீடெயில்ஸ் வேணும்.. இது மிருதுவோட லைஃப் மேட்டர் டா மாமா, விளையாட்ட எடுத்துக்காத என்க.. 

 

“ஏய் லூசு அவ உனக்கு ப்ரண்டுன்ன எனக்கு அவ சிஸ்டர் மாதிரி டி.. நீ ஃபோனை வைச்சிட்டு அர்ச்சனாவோட டீடெயில்ஸ் மட்டும் எனக்கு அனுப்பு.. இன்னும் ஒன் ஆவர்ல அர்ச்சனா மொத்த ஜாதகத்தையும் உனக்கு அனுப்புறேன் என்ற ஆகாஷ் ஃபோனை வைக்க.. தனு நிம்மதி பெருமூச்சு விட்டவள்.. இனி நோ ப்ராப்ளம்.. சீக்கிரம் அர்ச்சனா பத்தி தெரிஞ்சிடும் என்றாள்..”

 

சிந்து “ஏய் தனு யாரு டி அது ஆகாஷ்?? மாமானு கூப்புற.. அவ்வளவு நெருக்கமா என்ன..??”

 

“ஆமா டி ஹீ ஸ் வொறி க்ளோஸ் டூ மை ஹார்ட் என்று நிலவனை ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டே சொல்ல.. நிலவன் முஞ்சில் எள்ளும் கொல்லும் வெடித்தது.. ஓஓஓ மேட்டர் அப்படி போகுத என்று சிரித்த சிந்து.. சரி சரி எப்படியோ நல்ல இருந்தா ஒகே தான்.. அது சரி அவரால எப்படி அர்ச்சனாவை உடனே கண்டுபுடிக்க முடியும்?? அந்த ஆகாஷ் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கர.?? ஒன் ஆவர்ல அர்ச்சனாவை பத்தி கண்டுபுடிக்க.. உன் ப்ரண்டுனா உன் கூட தான் வேலை பார்த்திருப்பாரு.. அப்ப அவரு யூ.எஸ் ல தானா இருக்கணும்.. அப்புறம் லண்டன் ல இருக்க பொண்ண எப்படி டி.?? அதுவும் ஒன் ஆவர்ல.?? உன் மாமா என்ன மந்திரவாதிய வெத்தலையில மைபோட்டு கண்டுபுடிக்க..?? இட்ஸ் இம்பாசிபிள் என்க..”

 

“தனு அழகாய் சிரித்தவள்.. இட் ஸ் பாசிபிள் சிந்து.!! அவன பத்தி உனக்கு தெரியாது.. ஜகஜ்ஜல ஜித்தன்.. அவன் யூ.எஸ் ல தான் இருக்கான்.. ஆன அவன் என்கூட வேலை பாக்குறவன் இல்ல.. என்னோட பாஸ்.. என் கம்பெனியோட எம்.டி டி அவன்… அவனுக்கு உலகம் பூர காண்டக்ட் இருக்கு, அவன் நெனச்ச எதுவும் செய்யமுடியும்.. வெய்ட் ஆன் சி!! கண்டிப்பா அவன் அர்ச்சனாவை கண்டு புடிப்பான் என்றதும் சிந்துவிற்கு செம்ம ஷாக்.. என்ன டி சொல்ற.. அவர் உன்னோட பாஸா..?? அப்புறம் வாடா, போடான்ற, மாமா வேற கூப்புடுற என்று ஆச்சரியமாக கேட்க?? அது அப்படி தான் நா அவனா அப்படி கூப்பிட்ட தான் அவனுக்கு புடிக்கும் என்று கண்ணடித்தவள்.. அவனுக்கு நான், மிருதுன்ன உயிரு எங்களுக்காக எதுவும் செய்வான் என்று நிலவனின் எரியும் வயிற்றில் இன்னும் எண்ணெய்யை உத்தினாள் தனு..”

 

“ஒரு மணிநேரம் ஒரு யுகமாக கழிய.. ஆகாஷிடம் இருந்து கால் வந்தது.. தனு பேபி “அந்த அர்ச்சனாவை புடிச்சுட்டேன்.. அவ ஹஸ்பென்ட் அசோக் நம்பர் கிடச்சிது.. அவர்கிட்ட மிருதுகுட்டி பத்தி சொன்னேன்.. 

அர்ச்சனா அவ தப்ப ரியலைஸ் பண்ணிட்டளாம்.. மிருதுளாகிட்ட நேரடியா மன்னிப்பு கேட்க அவளும், அவ ஹஸ்பென்ட் அசோக்கும் இந்தியா வரேன்னு சொல்லிட்டங்க.. அசோக்கிட்ட உன்னோட நம்பர் கொடுத்திருக்கேன்.. இனி நீ டில் பண்ணிக்கோ என்க. சந்தோஷத்தில் துள்ளிய தனு.. வாவ் லவ் யூ டா மாமா, லவ் யூ சோ மச்.. அதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கறது என்றவள்.. டேய் நா அப்புறமா உன்னை கூப்புடிறேன் என்றவள் ஃபோனை காட் செய்ய.. நிலவன் கட்டுக்கடங்காத கோபத்தின் கொதித்துக் கொண்டு இருந்தான்..”

 

“அடியேய் வால்டியூப் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா.. குத்து கல்லாட்டாம் நா ஒருத்தன் இங்க உன் கண்ணு முன்னாடியே உட்கார்ந்திருக்கேன்.. நீ எவ்வளவு திமிர் இருந்தா இன்னோருத்தனுக்கு ஐ லவ் யூ சொல்லுவ.. இதுவர எனக்கு ஒரு லவ் யூ வது சொல்லி இருப்பிய டி நீ.. நேத்து அவ்வளவு தூரம் உன் பின்னாடி வந்து நா மன்னிப்பு கேட்டு கெஞ்சுனேனே டி.. உன் மனசு எறங்குச்சா, இப்ப என்னை வச்சிட்டே அந்த ஆகாஷ் பக்கி கிட்ட கொஞ்சிட்டு இருக்க.. அதுவும் மாமானு வேற கூப்புடிற நீ.. இரு டி மகளே நம்ம கல்யாணம் மட்டும் மூடியட்டும் இதுக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா உன்னை பழிவாங்கல என் பேரு நிலவன் இல்ல டி.. என்க அதுக்கு முதல்ல அவ மனசு மாறி உன்ன மன்னிக்கணும்.. நீ என்ன சின்ன தப்ப பண்ணி வச்சிருக்க.. அவ நேத்து பேசினதுல இருந்தே அவ மனசு எந்த அளவு காயப்பட்டிருக்குனு உனக்கு புரியல என்றவன் மனசாட்சி நேற்று நடந்த நிகழ்வை நினைத்து மனம் கசந்தது..”

 

“நேற்று தனு ஷரவனை பற்றி தப்பாக பேசிய அந்த நர்ஸ் ரெண்டு பேர் பற்றி எதாவது தகவல் கிடைக்கும் என்று பார்க்க ஹாஸ்பிடல் செல்வதாக சொல்ல.., லட்சுமி அவளை தனியாக போக வேணாம் என்றவர், நிலவனை கூடப்போக சொல்லி இருந்தார்.. தனுவும், லட்சுமியின் வார்த்தையை மீறாமுடியாமல் நிலவனுடன் சென்றாள்.. காரில் சொல்லும்போது தனு, நிலவன் பக்கம் கூட திரும்பவில்லை.. கண்ணாடி வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.. நிலவன் பொறுத்து பொறுத்து பார்த்து முடியாமல்.. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தியவன்.. கதவை திறந்து வெளியே வந்து.. தனுவின் பக்கம் இருந்த கார் கதவை திறந்து அவள் கையை பிடித்து வெளியே இழுத்தவன்.. கதவை மூடிவிட்டு தனுவை கார் கதவின் மீது தள்ளி நிருத்தி அவள் அசைய முடியாதபடி தன் கை கொண்டு தடுப்பு போட்டவன்.. அவள் கண்களை ஊடுருவும் பார்வை பார்க்க.. தனுவின் கண்களில் எந்த உணர்சியும் இல்லை.. எப்போதும் அவன் அருகாமையில் தன்னை தொலைத்து, கண்கள் முழுவதும் காதலை தேக்கி வைத்து அவனை பார்க்கும் அவள் கண்கள் இன்று வரண்டிருந்தது.. அதை பார்த்த நிலவன் மனதும் அதிகமாகவே வலித்தது… அவசரபட்டு நான் சொன்ன ஒரு வார்த்தை எங்க வாழ்க்கையோட மொத்த சந்தோஷத்தையும் எங்ககிட்ட இருந்து பறிச்சிடுச்சே, அன்னைக்கு மட்டும் நா கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இன்னைக்கு என்னோட தனு என் கூட இருந்திருப்பாளே என்று நினைக்கையிலேயே அன்றைய நாளை எண்ணி அவன் உள்ளம் வருந்தியது..”

 

“தனு, ப்ளீஸ் டி என் கிட்ட பேசு டி. ஏதோ கோவத்துல அன்னிக்கு அப்படி பேசிட்டேன்.. அதுக்காக நாலு வருஷம் என்ன பிரிஞ்சு என்ன வதைச்சது பத்தாத உனக்கு.. இன்னு எத்தனை நாள் டி என் விட்டு தள்ளி நின்னு என்ன சாகடிக்கபோற, இன்னும் எவ்வளவு நாள் டி எனக்கு இந்த தண்டனை.. இவ்வளவு நாளும் எப்ப நீ இந்தியா திரும்பி வருவ, எப்ப உன் வாயல நீ என்னா இம்ச, கொரங்குன்னு திட்டுவ, நா எப்ப உன்கூட உரிமைய செல்ல சண்டபோடுவேன்னு ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏங்கிட்டு இருந்தேனு தெரியுமா,?? ஆன நீ..?? இங்க வந்ததுல இருந்து என் முகத்தை ஒரு தடவ கூட பாக்கல, ஒரு வார்த்தை கூட பேசல.. மனசு வலிக்குது டி என்றவன் குரலில் அத்தனை வேதனை.. அவன் பேசுவது எதுவும் காதில் விழவில்லை என்பது போல் தனு அமைதியாக இருக்க.. நிலவனுக்கு கோபம் தலைக்கேறியது.. “ஏய் ஏன் டி இப்படி இருக்க.. இன்னு நா என்ன பண்ணனுன்னு நீ எதிர்பார்க்குற, என்ன செஞ்ச உன்மனசு மாறும்?? நீ எனக்கு என்ன தண்டனை குடுத்தாலும் சரி நான் ஏத்துக்குறேன் என்று அவன் ஆற்றாமையில் கத்த??

 

“தனு அவனை கூர்ந்து பார்த்தவள் “நா யாரு மிஸ்டர் உங்களை தண்டிக்க உங்களுக்கு எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?? என்று அவனை நேருக்கு நேர் பார்த்து சொல்ல.. நிலவன் எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.. “ஏய் யாருகிட்ட பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறீய நீ.. நா உனக்கு யாரும் இல்ல?? சொல்லுடி?? உன் லைஃப் ல நா இல்ல.. உன் நெஞ்ச தொட்டு, உன்ன நீயே கேட்டு பாரு டி?? அது சொல்லும் உனக்கு நா யாருன்னு, இப்பவும் உன் மனசுல நா தான் இருக்கேன்.. அது எப்பவும் மாறாது.. ஒகே ஐ வில் அக்செப்ட்.. நான் தப்பு பண்ணிட்டேன். அதுக்கு நீ என்ன ப்னிஷ்மென்ட் குடுத்தாலும் எனக்கு ஓகே. ஆன அதுக்காக நீ என்ன விட்டு விலகி போக நெனச்ச ஐம் சாரி.. அது இந்த ஜென்மத்துல நடக்காது என்று அவள் தோளை அழுத்தி பிடித்து உறுதியாக சொல்ல.. அவன் பிடியில் வலி தாங்கமுடியாமல் தனு முகம் சுருங்க.. அவன் கையை தட்டிவிட்டவள்..”

 

“நீங்க ஏன் மிஸ்டர். நிலவன் நடந்ததை நெனச்சு வருத்தப்படனும்.. நியாயமா நான் தான் உங்கிட்ட மன்னிப்பு கேட்கணும், நா தான் முட்டாள்தனமா நீங்க என்ன விரும்புறீங்க, உங்களுக்கு என் மேல அதிக நம்பிக்கை இருக்குன்னு கண்மூடித்தனமா நம்பிட்டேன்.. அன்னைக்கு நீங்க கேட்டீங்களே.. என்ன விட பெட்ர்ரா இன்னொருத்தன் கிடைச்ச அவன் கூட போய்டுவியன்னு அப்ப தான் புரிஞ்சிது உங்களுக்கு என் மேல காதலும் இல்ல, நம்பிக்கையும் இல்லைன்னு.. அதுல கூட உங்க மேல தப்பு இல்ல.. உங்களுக்கு நம்பிக்க வர அளவுக்கு நா நடந்துக்கல போல.. சோ தப்பு என் மேல தான்.. இதுல நா உங்களை தண்டிக்க ஒன்னு இல்ல.?? அந்த உரிமையும் எனக்கில்ல.. நீங்க சொன்ன மாதிரி நீங்க அப்போ என் மனசுல இருந்தது உண்மை தான்.. ஆன இப்ப இல்ல.. ஏன்னா?. எப்ப உங்க வாயால அப்படி ஒரு வார்த்தையை கேட்டேனே அப்பவே ஏ மனசு செத்து போச்சு.. இனி அதுக்கு உயிர் கொடுக்க முடியாது, நீங்க தேவை இல்லாம என்ன நெனச்சிட்டு உங்க லைஃப் பை வேஸ்ட் பண்ணிக்கதீங்க.. நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிட்டு உங்க வாழ்க்கையை வாழ பாருங்க..!!என் லைஃப் பத்தி ஆல்ரெடி நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்.. சோ டோன்ட் டிஸ்டர்ப் மீ.. நா இங்க வந்தது மிருதுகாக மட்டும் தான்.. அந்த வேல முடிஞ்சதும் நா மறுபடி யூ.எஸ் போய்டுவேன்.. என்றவள் வார்த்தைகள் வலி தோய்ந்து வந்து விழ, கோபத்தில் தான் சொன்ன ஒரு வார்த்தை தன்னவளை எத்தனை தூரம் காயப்படுத்தி இருக்கிறது என்று நினைக்க அவனுக்கு அவன் மேலேயே வெறுப்பு வர அவன் உள்மனம் ஊமையாக கண்ணீர் வடிந்தது..”

 

 “நீ என்னை அன்னைக்கு மாதிரி நாலு அறவுட்டிருந்தா கூட எனக்கே இவ்ளோ வலிச்சிருக்காது டி.. ஆன எனக்கு உன்மேல காதல் இல்லைனு சொன்ன பாரு… எனக்கு வலிக்கிது டி.. ரொம்ப வலிக்கிது.. உன்ன நா எந்த அளவு காயப்படுத்தி இருக்கேனும் எனக்கு நல்ல புரியுது.. இனி உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வர நா விடமாட்டேன் டி.. இது உன் மேல நா வச்சிருக்கிற காதல் மேல சத்தியம்.. இனி உன்ன கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு, உன்னோட மொத்த வாழ்க்கையையும் சந்தோஷமா மாத்துறது தான் செல்லம் என்னோட அடுத்த வேலை என்று மனதில் நினைத்தவன் மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்து.. இப்படியே விட்ட இவ சரிபட்டு வரமாட்ட?? இவளா வேற மாதிரி தான் கரெக்ட் பண்ணணும் என்று நினைத்தவன் ஒரு முடிவெடுத்து.. இங்க பாரு டி இந்த ஜென்மத்துல எனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்த அது நீ தான், உனக்கு புருஷன்ன அது நா தான்.. இத யாராலயும் மாத்தமுடியாது, ஏன் நீயே நெனச்சலும் அது மாறாது.. என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகாலன்னு கனவுல கூட நெனைக்காத.. திரும்பி யூ.எஸ் போற கனவை எல்லாம் மூட்டகட்டி ஓரமா வச்சிடு.. மறுபடி உன்ன பிரிஞ்சி கஷ்டப்பட என்னால முடியாது.. ஷரவன், மிருதுளா பிரச்சனை முடிஞ்சதும் அடுத்து நம்ம கல்யாணம் தான்.. நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாரும் கல்யாணம் பண்ணி புள்ளகுட்டின்னு ஜாலியா இருக்காங்க.. ஏன் சிந்து, விஷ்வாக்கு கூட கல்யாணமாகி ஒரு சின்ன வாண்டு இருக்கு, நீயும், நானும் மட்டும் தான் இன்னு சிங்கில்ல சுத்திட்டு இருக்கோம்.. சீக்கிரம் நம்ம கல்யாணத்த முடிஞ்சு, புள்ளகுட்டி பெத்து அவங்களை ஒவர்டேக் பண்ணணும்.. சோ நீ சீக்கிரம் அதுக்கு ரெடியாகுற வழிய பாரு என்று குறும்பாக சொல்ல.. தனு அவனை தீயாய் முறைத்தவள் அவனை வெட்டவ, குத்தவ என்பது போல் பார்த்துக் கொண்டு நின்ற இடத்தில் அப்படியே நிற்க.. நிலவன் செல்லமாக அவள் கன்னத்தை தட்டிவிட்டு சென்று காரில் உட்காந்தவன்.. தனு இன்னும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நிற்க.. ஏய் வால்டியூப் அங்க என்ன கனவு கண்டுட்டு இருக்க.. பொறக்கபோற புள்ளைக்கு பேர் யோசிக்கிறீய என்ன..?? அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்.. இப்ப வா டி.. அந்த ரெண்டு நர்ஸ் பிசாசு பத்தி விசாரிக்கணும்.. ஹாஸ்பிடல் போக டைம் ஆச்சு என்று சொல்ல.. தனு இப்போது இவன்கிட்ட சண்ட போட நமக்கு நேரமில்ல.. இப்ப மிருதுளா தான் முக்கியம் என்று நினைத்தவள் அமைதியாக நிலவனுடன் சென்றாள்.. அங்கு அந்த ரெண்டு நர்ஸ் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் திரும்பி வந்தவளுக்கு ஆகாஷ் மூலம் நல்ல செய்தி கிடைத்தது..

 

“ஆகாஷ் மூலமாக அர்ச்சனைவும் அசோக்கும் இந்தியா வந்தனார்.. எல்லோரும் சேர்ந்து போட்ட ப்ளான் படி அர்ச்சனா, லட்சுமி வீட்டிற்கு வந்தவள்.. மிருதுளாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஷரவன் முகத்தை பார்க்கும் துணிவு இல்லாமல், அவனிடம் தான் மன்னிப்பு கேட்டதாக சொல்லும்படி அனைவரையும் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்..”

 

மிருதுளா இதயம் முழுவதும் சொல்லமுடியாத ஒரு வலி.. அவள் எதுவும் பேசவில்லை.. வாயிருந்தும் ஊமையாகி போனாள்.. போதும். தான் பேசின வரை போதும்.. பேசி பேசி அவள் தலையில அவளே மண் அள்ளி போட்டுக்கிட்டது போதும் என்று நினைத்தளோ என்னவோ.. ஒரு வார்த்தை கூட அவள் வாயிலிருந்து வரவில்லை.. 

 

“செல்வம் மிருதுளா அருகில் வந்தவர்.. அர்ச்சனா அவ பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்ட மாதிரி நானும் உனக்கு செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன் மிருதும்மா என்றவரை உணர்ச்சிகளற்ற பார்வை பார்க்க அதில் ஏன் என்ற கேள்வி இருக்க?? ஷரவனை பத்தி எனக்கு தெரிஞ்ச உண்மையை நான் முதல்லயே உனக்கு சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது டா, அந்த தம்பிய பத்தி உனக்கு தெரிஞ்சியிருந்த நீ கண்டிப்பா கல்யாணத்த நிறுத்தி இருக்க மாட்ட.. ஆன விதி ஷரவன் தம்பி அவரை பத்தின எந்த உண்மையும் உன்கிட்ட சொல்லகூடாதுன்னு என் கிட்ட சத்தியம் வாங்கிட்டாரு என்றவரை மிருதுளா கேள்வியாய் பார்க்க.. ஆமா மிருது மா.. உனக்கு ஷரவனை தெரியுறதுக்கு முந்தியே எனக்கு அவர தெரியும் என்றவர் ஷரவனை பார்த்த நிகழ்வை விவரித்தார்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!