என் தீராத காதல் நீயே 19

என் தீராத காதல் நீயே 19

என் தீராத காதல் நீயே 19

“ஏழு வருஷத்துக்கு முந்தி தான் ஷரவன் தம்பிய நான் மொதமுறையா பார்த்தேன்.. ஒருநாள் உன்னை பத்தி பேச என்னை பார்க்க நம்ம வீட்டுக்கு வந்திருந்தாரு… உன்னை அந்த தம்பி முதல் முதல்ல ஊட்டில வச்சு பார்த்திருக்காரு.. பார்த்த உடனே அவருக்கு உன்ன புடிச்சிச்போச்சு.. அதுக்கு அப்புறம் உன்னை பத்தி முழுசா விசாரிச்சு தெரிஞ்சுகிட்டு என்னை பார்க்க வந்தாரு..”

ஷரவன் “சார்.!! எனக்கு மிருதுளாவை பார்த்தும் புடிச்சு போச்சு.. அவதான் என் லைஃப்னு முடிவு பண்ணிட்டேன்.. அதபத்தி பேச தான் உங்களை பார்க்க வந்தேன் என்றவனை செல்வகுமார் கேள்வியாய் பார்க்க.. அதன் அர்த்தம் புரிந்தவன்.. நீங்க நெனைக்கிறது எனக்கு புரியுது சார்.. மித்து பத்தி அவங்க வீட்டுல தானே போய் பேசணும்.?? இங்க ஏன் வந்திருக்கேனு நீங்க நெனைக்கிறீங்க..?? மித்து குடும்பத்த பத்தி நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல.. எனக்கு மித்து பத்தி எல்லா விவரமும் தெரியும்.. அவளை பொறுத்தவர நீங்களும் உங்க வைஃப்பும் தான் அவளுக்கு அப்பாவும், அம்மாவும் அதனால தான் உங்களை பார்த்து பேச வந்தேன் என்றவன் தன்னை பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் அனைத்தையும் சொன்னவன் மிருது மேல் வைத்திருக்கும் காதலையும் தெளிவாக விளங்கினான்..”

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் தம்பி ஆன இதுல முடிவெடுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு, நீங்க பணக்கார வீட்டுக்கு ஒரே பையன்னு சொல்றீங்க, உங்க வீட்டுல மிருதுவை ஏத்துக்கணும்.. அதோட மிருதுகுட்டி சின்ன பொண்ணு தம்பி.. இப்ப தான் ஸ்கூல் முடிச்சிருக்க.. இன்னும் அவ படிக்கணும், அவ சொந்தகால்ல நிக்கணும், அதுக்கு அப்புறம் தான் நீங்க சொன்னது பத்தி எல்லாம் யோசிக்கவே முடியும் என்றவர் மிருதுளா நிலையை விளக்க..”

“தெரியும் சார்.. இன்பேக்ட் அதபத்தி பேச தான் நான் இங்க வந்தேன்.. அவ வீட்டுல அவள படிக்கவைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்கனு கேள்விப்பட்டேன், ஆன மித்துக்கு மேல படிக்கணுன்னு ரொம்ப ஆசை.. ஆன்ட் ஒரு பொண்ணுக்கு கண்டிப்பா படிப்பு ரொம்ப முக்கியம் சார், அவ நல்ல படிக்கணும் அது தான் என்னோட ஆசையும்.. சோ மித்துவோட படிப்பு செலவு முழுசையும் நானே ஏத்துக்குறேன் என்ற ஷரவன் ஆச்சரியமாக பார்த்த செல்வம்.. அது எப்படி தம்பி முடியும் முன்னபின்ன தெரியாத ஒரு பொண்ணுக்கு நீங்க எப்படி?? அது எப்படி சரியா வரும் என்று செல்வம் இழுக்க..?? இதோ பாருங்க சார் எப்ப நா மித்துவ பார்த்தேனோ அப்பவே அவதான் என் பொண்டாட்டினு முடிவு பண்ணிட்டேன்.. சோ என் பொண்டாட்டியோட எல்லா தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கு..இனி அவ ஆசையை நிறைவேத்துற பொறுப்பு என்னோடது.. அதுக்காக என்னோட அப்பா பணத்த கூட நான் யூஸ் பண்ணமாட்டேன் சார்.. நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்துல தான் என் மித்துவை நான் பார்த்துப்பேன் என்ற ஷரவனின் குரலில் இருந்த உறுதி செல்வகுமாரையே சற்று அசரா வைத்தது.. செல்வகுமாருக்கு ஷரவன் மேல் முழுநம்பிக்கை வர அவனுக்கு உதவுதற்கு சம்மதித்தார்.. ஷரவனும் மிருதுளாவை தன் கண்பார்வையிலேயே வைத்துக்கொள்ள விரும்பி அவளுக்கு தான் படிக்கும் காலேஜிலேயே சிட் வாங்கினான்.. அவள் வீட்டில் இருந்து படித்தால் சரிவராது என்று ஷரவன் செல்வத்தின் உதவியுடன் அவளை ஹாஸ்டலில் சேர்த்தான்.. செல்வகுமாரும் தன் நண்பர் யாரோ ஒருவர் மிருதுளாவின் படிப்புக்கு உதவுகிறார் என்று பொய் சொல்லி மிருதுளாவை காலேஜில் சேர்த்தவர், தனுவையும் அங்கேயே மிருதுளாவிற்கு துணையாக ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்..”

“செல்வகுமார் ஷரவனை பற்றி சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளா மொத்தமாய் சரிந்து விழுந்தாள்.. அழுவதற்கு கண்ணில் கண்ணீர் இல்லாமல் போக வரண்ட குரலில் “ஏன்ப்பா இவ்வளவு நாள் இத என் கிட்ட சொல்லல.. அட்லீஸ்ட் நான் கல்யாணம் புடிக்கலன்னு சொன்னபோதாவது இத சொல்லியிருக்க கூடாதப்பா என்று ஆதங்கமாக கேட்க.. அவளை அணைத்து கொண்ட செல்வம் “இல்ல மா நா சொல்லாம்ணு தான் இருந்தேன்… ஆனால் எக்காரணம் கொண்டும் உன் கிட்டயும் சரி வேற யார்கிட்டையும் சரி இந்த உண்மை சொல்லக்கூடாதுனு ஷரவன் தம்பி என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாரு மா… அதனால தான் நா தனுகிட்ட கூட இதபத்தி செல்லல.. அதோட அவர் உனக்கு உதவி பண்ணி இருக்காருன்ற ஒரு காரணத்துக்காக நீ அவர கல்யாணம் பண்ண சம்மதிக்கிறதை அவர் விரும்பல.. அது பணம் குடுத்து உன்ன விலைக்கு வாங்குற மாதிரி இருக்கும்னு சொல்லி மாறுத்துட்டாரு என்ற செல்வத்தின் வார்த்தைகள் மிருதுளாவின் இதயத்தை கிழித்தது..

அய்யோ….

அய்யோ….

என்று தன் முகத்தில் தன் கைகள் கொண்டு அடித்துக் கொண்டு அழுதவள்.. ஒவ்வொரு நிமிஷமும் என்ன பத்தியே நெனச்சிட்டு இருந்த அவரோட நல்ல மனச என்னோட அவசர புத்தியால சுக்குநூறா ஒடச்சிட்டேனேப்பா, ஏன் ப்பா?? ஏன்?? எனக்கு மட்டும் ஏன் ப்பா இப்படி நடக்குது.. என் மேல உயிரையே வச்சிருந்தவரா நான் ஏன்ப்பா புரிஞ்சிக்காம போய்டேன்.. அவரோட உண்மையான காதல் ஏன் என் மரமண்டைக்கு ஒறைக்காம போச்சு, ஏன் ப்பா?? ஏன்.?? நீங்களாவது நாலு அறைவிட்டு எனக்கு எடுத்து சொல்லி இருக்க கூடாதப்பா, நீங்க எனக்கு அப்பா தானே ?? நான் தப்பு பண்ணும்போது என்னை கண்டிச்சு இருக்கலாம்மில்ல ப்பா?? என்று கதறி துடிக்க.. ஷரவனை இவள் பிரிந்த போது அவன் உணர்ந்த காதலின் வலியை விட பன்மடங்கு வலியை இன்று அவள் தன் இதயத்தில் உணர்ந்தாள்..

“என்ன மன்னிச்சிடு மிருது மா.. நான் செஞ்சது தப்பு தான்.. நா முன்னாமே உண்மையை உன் கிட்ட சொல்லி இருக்கணும்.. ஒரு அப்பாவா என்னோட கடமையில் இருந்து நான் தவறிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன் என்ன மன்னிச்சிடு மா என்று வருத்த.. நீங்க செஞ்ச தப்புக்கு நா உங்களை மன்னிக்கலாம் ப்பா.. ஆனா என்னையே உலகம்னு நெனச்சிட்டு இருந்தவர்.. உயிரா என்ன நேசிச்ஙவர், அன்பையும், காதலையும் மொத்தமா எனக்கு கொடுத்தாரே அவர் மனச நோகடிச்சேனே, அனுஅனுவாய் சித்ரவதை செஞ்சேனே.. என்ன யாருப்பா மன்னிக்கிறது..?? என்ன யாரு மன்னிக்கிறது என்றவள் செல்வத்தைக் கட்டிக்கொண்டு கதற.. அங்கிருந்த அனைவரின் கண்களும் கலங்கிவிட்டது.. மிருதுளா மேல் கோபமாக இருந்த சிந்துவிற்கு கூட இப்போது அவள் நிலையை நினைத்து மனது வலிக்க தான் செய்தது..”

“தன் ஆயுள் முழுவதும் அழுதாலும் ஷரவனுக்கு தன்னால் ஏற்பட்ட வலிக்கு இனையாகது என்று உயிர் வெறுத்து அமர்ந்திருந்தாள் மிருதுளா..”

“லட்சுமி மிருதுளா அருகில் வந்தவர்.. மிருது “இப்ப நீ என்ன மனநிலையில் இருக்கேன்னு எனக்கு புரியுது.. இந்த நேரத்தில் உன்கிட்ட முக்தா பத்தி சொல்றது சரியில்லைன்னு எனக்கு தோணுது என்று இழுக்க.. லட்சுமியை உயிர் இல்லாத பார்வை பார்த்த மிருதுளா.. இவ்வளவையும் கேட்ட பிறக்கும் நான் இன்னும் உயிரோட தானே ஆன்ட்டி இருக்கேன்.. எனக்கு இத விட பெரிய அதிர்ச்சி இனி என்ன வந்திடப்போகுது என்றவள் குரலில் சுத்தமாக உயிர் இல்லை.. லட்சுமிக்கும் அவளுக்கு அனைத்து உண்மைகளும் இன்றே தெரிந்து விடட்டும் என்று நினைத்தவர்.. முக்தா பற்றி சொல்ல தொடங்கினார்..

“மிருது நீ நெனச்சது சரிதான்.. ”முக்தா” உன்னோட பொண்ணு தான்.. ஷரவன் உன்மேல வச்சிருக்க காதலுக்கு உயிர் உள்ள சாட்சி முக்தா தான்..”

மிருதுளா கண்கள் விரித்து லட்சுமியை பார்த்தவள்..

“………”

“அப்..

அப்போ??

நா..!! நான்.?? ஷரவன், ஷரவனோட குழந்தைக்கு என்றவள் குரல் தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொள்ள.. கண்ணீர் திரையிட்ட தான் கண்களை துடைத்துக்கொண்டு லட்சுமியை ஆர்வமாக பார்க்க.. ஆமா மிருது நீ சுமந்து பொத்தது ஷரவன் உயிரை தான், முக்தா உங்க ரெண்டுபேருக்கும் பிறந்த குழந்தை என்றவர் நான்கு வருடங்களுக்கு முன் நடந்ததை சொல்ல தொடங்கினார்…

“மிருதுளா, ஷரவன் கல்யாணம் நின்ற பிறகு கவிதாவின் ஆட்டம் அதிகமாகி.. 45 வயது ஆளுக்கு மிருதுவை கல்யாணம் செய்துகொடுக்க யோசிக்க.. அதில் மனமுடைந்த மிருதுளா.. இவங்களுக்கு பணம் தான் முக்கியம் நான் முக்கியமில்லை என்று மன வருந்தியவள்.. பணத்திற்கு என்ன செய்வது என்று பல வழியில் யோசித்து, ஒரு முடிவோடு லட்சுமியை பார்க்க சென்றாள்..

“லட்சுமி விட்ட அறையில் மிருது கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருக்க.. லட்சுமி அவளை கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தார்.. “ஏன் டி உனக்கு அறிவுகிறிவு கெட்டுபோச்ச என்ன..?? எதுக்கு டி இப்ப இப்படி ஒரு முடிவெடுத்த.. உனக்கு அப்படி என்ன கேடு வந்துச்சு.. புத்திகெட்டு போய் முதல்ல கல்யாணத்தை நிறுத்தின அதுவே பெரிய மடத்தனம்.. “சரி அது உன் சொந்த விஷயம் அதுல நா தலையிடல.. ஆன இப்ப நீ எடுத்திருக்க முடிவு எப்படி டி..?? ஏன் இந்த மாதிரி எடுத்தோம் கவுத்தோம்னு முடிவோடுக்குற என்ற லட்சுமியின் கோபம் எல்லை கடந்திருந்தது..”

“இப்ப எனக்கு பணம் தேவைப்படுது ஆன்ட்டி.. அஐய், அனிதாவின் படிப்புக்கு அதிக பணம் வேணும்.. பணத்துக்காக ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க என்னால முடியாது.. பணத்துக்கு என்ன செய்யன்னு யோசிக்கும் போது தான்.. நான் ஹாஸ்பிடல்ல இருந்த அன்னைக்கு நீங்க பேசுனது ஞாபகம் வந்துச்சு.. ஒரு பெரிய குடும்பத்துக்கு Surrogate mother ர இருந்து குழந்தை பொத்துக் கொடுக்க நீங்க ஒரு பொண்ண தேடிட்டு இருந்தீங்க.. அப்படி வர பொண்ணுக்கு கேக்குற பணம் கொடுக்குறதாகவும் சொன்னீங்க.. அத கேட்டப்போ எனக்கு ஒன்னு தோனல.. ஆன இப்ப நான் இருக்க நிலையில்.. எனக்கு அது ஒன்னு தான் ஒரே வழின்னு தோனுச்சு.. குழந்தை இல்லாம கஷ்டப்படுற ஒரு பொண்ணுக்கு (Surrogate mother) வாடகைத்தாய இருந்தால், அவங்க கஷ்டமும் தீரும்.. அவங்க தர பணத்துல என் கஷ்டமும் தீரும் என்றவள் குரலே அவள் முடிவில் உறுதியாக இருப்பதை சொல்ல.. லட்சுமிக்கு என்ன செய்வதென்று புரியாமல் தவித்தவர்.. “ப்ளீஸ் மிருது இது உன் லைஃப் டா.. கொஞ்சம் யோசி. இதனால உன்னோட என்று தொடங்கும் போதே அவரை நிருத்திய மிருது.. நீங்க என்ன நினைக்குறீங்கனு எனக்கு புரியுது ஆன்ட்டி .. என் வாழ்க்கையில் இனி கல்யாணமே கிடையாது ஆன்ட்டி.. எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்ல, என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது என்று உறுதியாக செல்ல.. லட்சுமி சற்று யோசித்தவர்.. சரி மிருது இனி உன்கிட்ட பேசி யூஸ் இல்ல.. நீ இப்ப கிளம்பு.. இன்னைக்கு ஃபுல்லா நல்ல யோச்சிட்டு நாளைக்கு வா.. அப்பவும் உன் முடிவில் எந்த மாற்றமும் இல்லையின்னா அடுத்து என்ன செய்யுறதுனு யோசிப்போம் என்று ஒருவாரு பேசி அவளை அனுப்பி வைத்தார் லட்சுமி.. சேரில் அமர்ந்து ரொம்ப நேரம் யோசித்தவர்.. ஷரவனுக்கு ஃபோன் செய்து வர சொல்ல.. அங்கு வந்து லட்சுமி சொன்னதை கேட்ட ஷரவன் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தான்..”

“இதை நான் சும்மா விடமாட்டேன் ஆன்ட்டி..?? எவ்வளவு தைரியம் இருந்தா அவங்க என் மித்துக்கு இப்படி ஒரு ஆளை மாப்புள்ளைய பார்த்திருப்பாங்க.. அவங்களை நான் உண்டுயில்லன்னு பண்ணாம விடப்போறது இல்ல என்று கோபத்தில் எழுந்தவனை.. அடக்கிய லட்சுமி..!! டேய் ஷரவன் என்ன இது?? கொஞ்சம் அமைதியா இரு.. உனக்கு சரி, மிருதுளாவுக்கும் சரி ஒரு விஷயத்தை பொறுமையா ஆன்டில் பண்ணவே தெரியாத..?? எப்பாரு அவசரமா முடிவெடுத்து அவதிபாடுறதே, ரெண்டு பேருக்கும் வழக்கமா போச்சு.. இப்ப இவ்ளோ குதிக்கிறீயே.. அப்புறம் ஏன் டா அவ சொன்னன்னு கல்யாணத்தை நிறுத்தினே..??
“சரி இப்ப நீ போய் மிருதுளா அம்மா கவிதாகிட்ட ஏன் இப்படி செய்றீங்கன்னு கேக்குறன்னு வச்சிக்கே.. பதிலுக்கு நீ யாரு டா அதை பத்தி கேக்க?? அவ என் பொண்ணு நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொன்ன நீ என்ன செய்வ.. எப்ப கல்யாணத்தை நிறுத்தீனியே அப்பவே..?? மிருது மேல உனக்கு இருந்த எல்லா உரிமையும் போச்சு.. இப்ப அவ அவங்க பொண்ணு மட்டும் தான் என்ற லட்சுமியை கண்ணீர் வழியும் கண்களோடு பார்த்தவன்.. பாவம் ஆன்ட்டி என் மித்து. ஏன் அவளுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது என்று வாய்விட்டு அழ.. லட்சுமி என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தவர் அடுத்து ஷரவன் சொன்ன வார்த்தையில் ஆடிப்போய் விட்டார்..

“டேய் நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறீய.. உங்க ரெண்டுபேருக்கும் வாழ்க்கையின்ன என்ன அவ்வளவு விளையாட்டா போச்ச.. “அவ என்னாடான்ன அறிவு கெட்டதனமா Surrogate mother ரா இருக்கேன்ற.. நீயென்னடான்ன அவ மூலமா உனக்கு குழந்தைவேணும்னு கேக்குற.. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்..?? மரியாதையா மிருதுளா கிட்ட பேசி அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சு கல்யாணம் பண்ணற வழி பாரு.. அதவிட்டு இது என்ன முட்டாள்தானம் என்று லட்சுமி கத்த தொடங்க…

“அவரை கண்ணீரோடு பார்த்த ஷரவன்.. இல்ல ஆன்ட்டி?? எப்ப அவ இந்த கல்யாணம் நடந்தா நான் உயிரை விட்டுடுவேன்னு சொன்னாளோ அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு.. இப்ப நெனச்ச கூட அவளை என்னால கல்யாணம் பண்ணமுடியும்.. ஆன மித்துவ கட்டயப்படுத்தி கல்யாணம் பண்ண எனக்கு விரும்பமில்ல.. ஒருத்தரை நாம உண்மைய காதலிச்ச அவங்களை எந்த விதத்துலயும் நாம கட்டாயப்படுத்த கூடாது.. அதனால தான் அவ சந்தோஷத்துக்காக என் மனசையும், அதில் இருந்த ஆசையையும் கொன்னு புதைச்சுட்டு, உயிருள்ள பொணமா வாழ்ந்துட்டு இருக்கேன்.. அவளை நெனச்சு நெனச்சே நான் செத்துடுவேன் போல இருக்கு ஆன்ட்டி.. அவ இல்லாம என்னால வாழமுடியாது.. என் தலையெழுத்து அவகூட சேர்ந்து இருக்கவும் முடியல.. அட்லீஸ்ட் நீங்க நான் சொன்னதை செஞ்சா.. என்னோட காதலுக்கு சாட்சியான எங்க குழந்தை உருவத்துல என்னோட மித்து என் கூடவே இருப்பால்ல ஆன்ட்டி என்றவனை லட்சுமி கோபமாக பார்க்க..!! அது புரிந்த ஷரவன்.. எனக்கு புரியுது ஆன்ட்டி இது முழக்க முழுக்க என்னோட சுயநலம் தான்.. ஆன எனக்கு வேறவழி தெரியல.. அதோட எப்ப மித்து இந்த மாதிரி ஒரு முடிவெடுத்தாளோ.. இனி அவ என்ன செய்யவும் தயங்க மாட்ட.. நீங்க இதுக்கு ஒத்துக்கலன்ன அவ வேற டாக்டரை போய் பார்த்தாலும் பார்ப்ப.. அதனாலயும் தான் ஆன்ட்டி இப்படி ஒரு முடிவெடுத்தேன்.. பொறக்கப் போற குழந்தை, இனி நான் வாழப்போற வாழ்க்கைக்கு காரணமா, ஒரு அர்த்தமா இருக்குமில்ல ஆன்ட்டி என்ற ஷரவனின் முகத்தில் பொம்மைக்கு ஏங்கும் குழந்தையின் பரிதவிப்பு தான் லட்சுமிக்கு தெரிந்தது.. கல்யாணம் நின்ற நாளில் இருந்து லட்சுமியும் ஷரவனை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்.. சரியாக சாப்பிடாமல், யாருடனும் பேசாமல், தன்னையே மறந்து தனித்தீவாய் நான்கு சுவற்றுக்குள்ளே அடைந்து கிடக்கிறான்.. யார் சென்று பேசியும் பதில் பேசாமல் இருந்தவன்.. இன்று லட்சுமி மிருதுளா அவரை வந்து பார்த்த விஷத்தை சொன்னதும் உடனே ஓடி வந்து விட்டான்.. இந்த உலகத்திலேயே அவனை மாற்றக்கூடிய, அவனை பாதிக்கக்கூடிய ஒரு ஜீவன் உண்டு என்றால் அது அவன் மித்து மட்டும் தான்.. அவனை பழையபடி மாற்ற அவளால மட்டுமே முடியும்.. ஆனால் அது இப்போது சாத்தியம் இல்லையே.. மிருதுவும் அவள் முடிவுல உறுதியா இருக்க.. சோ?? வேறவழி இல்ல இத செஞ்சு தான் ஆகணும்.. ஷரவன் சொல்ற மாதிரி செஞ்ச மிருதுவோட பிரச்சனையும் திரும்.. ஷரவனுக்கும் அந்த குழந்தை மூலம் ஒரு மாற்றம் கிடைக்கும்.. யார் கண்ட?. நாளைக்கே இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர அந்த குழந்தை ஒரு காரணமா இருந்தாலும் இருக்கும்.. அதோட இது சட்டப்படியும் தப்பில்லை என்று நினைத்தவர்.. ஷரவனிடம் தான் சம்மதத்தை சொல்ல.. ஷரவனுக்கு வார்த்தையில் வடிக்கமுடியாத சந்தோஷம்.. உடனே லட்சுமி காலில் விழுந்தவன்.. ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி ரொம்ப தேங்க்ஸ்.. என்னோட வாழ்க்கையையே நீங்க எனக்கு திரும்பி குடுக்கப்போறீங்க என்றவன் உணர்ச்சி பெருக்கில் லட்சுமியை கட்டிக்கொண்டான்.. லட்சுமி ஆறுதலாக அவன் தலையை தடவியவர்.. இனி அடுத்து என்ன செய்யணும்னு நீயே சொல்லு ஷரவன் என்று கேட்க..”

“ஆன்ட்டி மித்துக்கு எவ்வளவு பணம் தேவையோ அத கேட்டு அதுப்படி ஒரு அக்ரிமெண்ட் ரெடி பண்ணுங்க.. எக்காரணம் கொண்டும் அவளுக்கு அந்த குழந்தை எங்க குழந்தையின்னு தெரியக்கூடாது.. அதோட அவ பிரக்னன்சி கன்பார்ம் ஆனதில் இருந்து குழந்தை பிறக்கிற வரை அவ நாம் ஊட்டி கெஸ்ட் ஹவுஸ்ல நம்ம கண்பார்வையில் தான் இருக்கணும்னு சொல்லிடுங்க.. கூடவே நீங்களும் இருக்கணும் என்று கொஞ்சி கேட்டுக்கொண்டு.. இன்னும் என்ன செய்யவேண்டும் என்று எல்லாவற்றையும் சரியாக பேசி திட்டமிட்டு விட்டு ஷரவன் சென்று விட.. லட்சுமிக்கு ஷரவனின் மிருதுளா மேலான காதலை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது.. அவன் இடத்தில் வேறொருவன் இருந்திருந்தால் அவன் பணத்திற்கும், அழகுக்கும் இன்நேரம் வேறொரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்து நிம்மதியாக இருந்திருக்கலாம் ஆனால் ஷரவன் மிருதுளா மட்டுமே தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான், ம்ம்ம்ம் என்று பெருமுச்சு விட்டவர்.. மிருதுளாவிற்கு ஃபோன் செய்து மறுநாள் காலை அவரை வந்து பார்க்க சொன்னார்..”

“மிருதுளாவிற்கு லட்சுமி தான் நிலவன், சிந்து அம்மா என்று தெரியாமல் இருந்தது ஒரு விதத்தில் நல்லதாக போனது.. ஷரவன், மிருதுளா திருமணத்தில் தான் யார் என்பதை சொல்லி மிருதுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தார் லட்சுமி.. ஆனால் விதி வேறுவிதமாக போக எல்லாம் தவறாக முடிந்துவிட்டது.. மிருதுளா ஹாஸ்பிடல் வந்தவள் லட்சுமி சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்டாள்.. லட்சுமி மிருதுளாவிடம் ஒரு அக்ரிமெண்டை கொடுத்து படிக்க சொல்ல அதைபடித்த மிருவிற்கு மனதில் சொல்லமுடியாத உணர்வு.. என்ன ஆன்ட்டி இது?? இப்படி கூட அக்ரிமெண்ட் போடுவாங்களா என்ன?? இதுமாதிரி நான் கேள்விபட்டதே இல்லையே என்று ஆச்சரியப்பட்டாள்..”

“அவள் குழந்தையை சுமக்கும் காலத்தில் ஊட்டியில் இருக்கும் குழந்தையின் தந்தை வீட்டில் தான் மிருதுளா இருக்கவேண்டும், குழந்தை பிறந்ததும் கண்டிப்பாக மூன்று மாதம் குழந்தையுடன் இருந்து தாய்பால் கொடுக்கவேண்டும்,
இந்த இடைப்பட்ட காலத்தில் மிருதுளா மேற்கொண்டு படிக்க விரும்பினால் படிக்கலாம், வீட்டில் இருந்தபடியே வேலையும் செய்யலாம், அவளுக்கு மொத்தம் பத்து லட்சம் தரப்படும்.. ஐந்து லட்சம் முதலிலும், மீதி தொகை ஒருவருடத்தில் மாதமாதம் பிரித்து கொடுக்கப்படும் என்று அந்த அக்ரிமெண்டில் இருந்தது..
(மிருதுளா எதிர்காலத்தில் அவள் சொந்த காலில் நிற்க படிப்பும், வேலையும் முக்கியமென்று ஷரவன் இந்த மாதிரி சலுகைகளை அக்ரிமெண்டில் போட்டிருந்தான்.
அதோடு தாய்ப்பால் கொடுக்கும் சாக்கில் கொஞ்ச நாள் மிருதுளா குழந்தையுடன் சந்தோஷமாக
இருப்பாள்., அதோடு குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம் என்று இப்படி செய்திருந்தான்..)

“மிருதுளா அனைத்து கண்டிஷனுக்கும் முழுமனதுடன் சம்மதித்து கையெழுத்து போட.. அவளுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்து.. சரியான நேரத்தில் ஷரவனின் உண்மை காதல், மிருதுளாவின் கருவில் உயிர் கொண்டது.. திட்டமிட்டபடி மிருதுளா வேலைக்கு செல்வதாக சொல்லி விட்டு ஊட்டிக்கு சென்றுவிட, மிருது சென்ற ஒரு வாரம் கழித்தே ஷரவன் செல்வகுமாரிடம் நடந்த அனைத்தையும் சொன்னான்..”

“சாரி சார் நான் இந்த மாதிரி செய்யபோறேன்னு தெரிஞ்ச எங்க நீங்க இதுக்கு ஒத்துக்கமாட்டிங்களோனு பயந்து தான் உங்க கிட்ட மறைச்சிட்டேன்.. ஐம் சாரி சார் என்று மன்னிப்பு கேட்க.. செல்வத்திற்கு என்ன சொல்வதென்று புரியாமல் அமைதியாகி விட்டார்..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!