என் தீராத காதல் நீயே 2

ei8ULQ8565

கல்லூரியில் முதல் நாள். அதுவும் தன் ஆசைப்பட்ட கல்லூரியில் படிக்க போகிறோம் என்ற நிறைவுடன் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்க. அங்கு காலேஜிக்குள் நுழையும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஒருவனின் இதயத்திலும் அவளுக்கே தெரியாமல் அடியெடுத்து வைத்துவிட்டாள் மிருதுளா.

“ஆவென என்று வாய் பிளந்த படியே மிருதுவும், தனுவும் காலேஜிக்குள் வர. அங்கே ஒரிடத்தில் சீனியர் மாணவர்கள் புதிதாக வரும் மாணவர்களை படாதபடுப்படுத்திக் கொண்டிருந்தனார். அதை பார்த்து பயந்து மிருதுவும், தனுவும் ஒதுங்கி ஒட நினைக்க. வசமாக ஒரு சீனியர் கும்பலிடம் மாட்டினார். மிருது திரு திருவென முழித்து தனுவை பார்க்க அவளோ தைரியமாக நின்றிருந்தாள். மிருதுளா அவள் காதருகில் குனிந்தவள் “ஏய் தனு பரவாயில்ல டி. சீனியர்ஸ் முன்னாடி நின்னும், கொஞ்சம் கூட பயப்படாம தைரியமா இருக்கியே நீ. சுப்பர் டி என்க. மற்றவர் பார்க்காது மிருதுவின் காலை மீதித்த தனு. அடியேய் நீ ஏ முஞ்ச மட்டும்தானே பாத்த, காலை பார்க்கலயே என்று அஸ்கீ வாய்ஸ்சில் சொல்ல. சற்றுகுனிந்து அவள் கால்களை பார்த்த மிருது தனுவின் கால்கள் பயத்தில் நடுங்கி கொண்டிருக்க. நிமிர்ந்து தனுவை பார்த்து, த்து என்று துப்ப. விடுறா விடுறா நானெல்லாம் வடிவேலு மாதிரி பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு. அடக்கி வாசி சீனியர்ஸ் பாக்குறங்க”

“ஹலோ அமுல்பேபி என்ன அங்க குசுகுசு. சீனியரை பார்த்த வணக்கம் வைக்கணும்னு தெரியாத என்று கம்பீரமாக வந்த குரலில் மிரண்டுபோய் இருவரும் பார்க்க. அங்கு இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனார் அந்த ஐந்து பேரும். நல்வரின் கண்கள் பெண்கள் இருவரையும் இயல்பாக பார்க்க. ஒருவன் கண்கள் மட்டும் மிருதுளாவை முடி முதல் அடி வரை ரசனையோடு ரசித்துக் கொண்டிருந்தது. கோதுமை நிறம், அழகிய முகம், அதில் தவழும் குழந்தைத்தனம், பார்ப்பவர்களை பிடித்து கிள்ள தூண்டும் புசுபுசு கன்னம், அதில் அம்சமாக விழும் குழி. காதலாய் அணைத்தால் அவன் இதயத்துடிப்பு கேட்கும் அளவு உயரம், கொஞ்சம் சப்பீயான உடல்வாகு. கல்யாணத்துக்கு அப்புறம் தலகாணியே தேவையில்ல இவளையே கட்டி புடிச்சிட்டு தூங்கலாம் போல என்று மிருதுளாவை கண்ட மறு நொடி கல்யாணம் வரை போய்விட்டார் நம்ம ஹீரோ ஷரவன். (ஷரவன், நிலவன், விஷ்வா, பரத், பிரேம் ஐந்து பேரும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள்.. இதில் ஷரவன், நிலவன், விஷ்வா சிறு வயதிலிருந்தே குடும்ப நண்பர்கள்)”

“ஏய் அப்ரசன்டிகளா என்ன அங்க லுக்கு? இங்க நாங்க பேசிட்டு இருக்கோமில்ல. சீனியர்க்கு வணக்கம் வைக்க சொல்லி அரைமணி நேரமாச்சு. இன்னும் எங்க மூஞ்சையே பார்த்துட்டிருக்கீங்க. ஒழுங்க வணக்கம் வைங்க என்று பரத் மிரட்ட. மிருதுவின் பயம் அவள் முகத்தில் தெரிய. அவள் இமைகள் படபடவென அடித்துக்கொள்ள. கண்ணில் குளம் கட்டிக்கொண்டு தண்ணீர் இப்வோ அப்பவோ என்று வர தயாராக இருக்க. அதை கண்டு பதறிய நிலவன். ஏய் ஏய் இப்ப எதுக்கு கண்ணுல டாம் கட்ர்ர நீ. ஒரு வணக்கம் தான கேட்டோம்.. தமிழ் தெரியலன்னா குட் மார்னிங்னு சொல்லிட்டு போவியா அதவிட்டு என்று இழுக்க. தனுவிற்கு வந்ததே கோவம். ஹலோ யாரை பார்த்து தமிழ் தெரியாதுனு சொன்னீங்க. நாங்க தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் காத்த சுவாசிச்சு தமிழ் தண்ணி குடுச்சு வளர்ந்த வீர தமிழச்சியாக்கும் எங்களை பாத்து எவ்வளவு தைரியமிருந்த தமிழ் தெரியாதுன்னு சொல்லுவீங்க என்று தம்கட்டி பேச. நாங்கென்று அவள் தலையில் கொட்டியவன். ஏய் வால் டியூப் எதுக்கு இப்ப இப்டி தம்கட்ர. பேச்சை கொர முதல்ல. தனு தான் தலையை தடவிக்கொண்டே நிலவனை முறைக்க”

“ஓஓய் என்ன அங்க முறைப்பு? என்று நிலவன் அதட்ட”

தனு, “ஐய்யோ சீனியர் நா உங்களை முறைக்களை சீனியர், சும்மா பாத்தேன் என்று அண்ட புளுகு புளுக”

“ம்ம்ம் அது அந்த பயமிருக்கட்டும். அதுசரி உங்க பேர் என்ன? என்றான் நிலவன்”

“என் பேரு தன்யா, இவ பேரு என்று ஆரம்பிக்க, “ஹலோ, ஏன் இந்த அமுல்பேபிக்கு வாய் இல்லையா அவ பேர அவ சொல்ல மாட்டாளா என்ற விஷ்வா. ஓய் அமுல்பேபி உன் பேரென்ன என்று அதட்ட. விஷ்வாவின் அதட்டலில் பயந்த மிருதுளா தத்தி தத்தி மி. மி. மிருதுளா என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு வந்துவிட. ஏனோ நிலவனுக்கு மிருதுளா அழுவதை பார்க்க மனசு கேட்கவில்லை”

“ஏய் ஏய் அமுல்பேபி இப்ப எதுக்கு அழகுற நீ. நாங்க உன்ன ஒன்னும் செய்யமாட்டோம். எங்களை பாத்து பயப்படாத. கண்ணதொட முதல்ல என்று அன்பாக சொல்ல.. ஏனோ மிருதுளாவிற்கு நிலவனை பிடித்துவிட்டது. மெதுவாக சிரித்தவள் கண்களை துடைத்து கொண்டாள். குட்கேர்ள். இப்ப நீ கிளாசுக்கு போ என்று சொன்னது தான் தாமதம் மிருது, தனு இருவரும் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தனர்”

“அடப்பாவிகளா காத்து மாதிரி மறஞ்சுபோய்டுச்சுங்க. நம்மை பாத்த அவ்வளவு டெரர்ரவா இருக்கு என்று பரத் சொல்ல. பிரேம் ஆமா டா நம்ம பவர் இவ்வளவு நாள் நமக்கே தெரியல பாரேன் என்றவன் நிலவனிடம் திரும்பி டேய் அதென்ன டா அந்த அமுல்பேபி அழுததும் அப்படியே மட்டடைய மடிஞ்சிட்ட என்ன விஷயம் என்று குறும்பாக கேட்க”

“டேய் இப்ப நீ மீதிவாங்க போர. பாவம் அந்த பொண்ணு சத்தம பேசுனதுக்கே கண்ணுல தண்ணி வந்து முகம் வாடிபோச்சு. அதான் போக சொன்னேன். அதோட அந்த பொண்ணு முகத்தை பாக்க சிந்து மாதிரியே இருக்கு” (சிந்து நிலவனின் தங்கை அதே கல்லூரியில் முதலாமாண்டு மாணவி)

“டேய் உனக்கும் அப்படி தான் தோணுச்ச. எனக்கு கூட அந்த பொண்ணை பாக்கும்போது சிந்து ஞாபகம் தான் வந்துது. என்ன இந்த பொண்ணு அப்பாவி. உன் தொங்கச்சி பாடுபாவி என்று பரத்தும், பிரேமும் சிரிக்க”

நிலவன் ”டேய் உங்க நல்லநேரம் அவ இங்க இல்ல. அவ மட்டும் நீங்க சொன்னதை கேட்டிருந்த உங்க நிலமை என்னகுன்னு தெரியுமில்ல”

“தெய்வமே தயுவுசெஞ்சு இங்க நடந்தது நமக்குள்ளையே இருக்கட்டும் அவகிட்ட எதுவும் சொல்லிடாத என்று சரண்டராக”

நிலவன் “ம்ம்ம் அது. அந்த மரியாதை எப்பவும் மனசுல இருக்கட்டும் என்க. உடனே விஷ்வா ஓஓஓ கதை அப்டிபோகுதா. அப்போ இனி அந்த மிளகாதூளும், தனியாதூளும் நமக்கு தங்கச்சியா? ஓகே ஓகே”

நிலவன் ” ஏது மிளகா, தனியா வா? டேய் என்ன டா உலர்ர நீ”

விஷ்வா ” ஆமா அந்த அமுல்பேபி பேரு மிளகா தூள், வால் டியூப் பேரு தனியாதூள்னு தானே சொல்லுச்சுங்க”

பிரேம் “அட கருமம்புடிச்சவனே அது மிளகா,தனியா இல்லடா. மிருதுளா, தன்யா டா”

விஷ்வா “ஓஓ அத அப்டியும் சொல்லலாம”

நிலவன் “ம்ம்ம் அப்டிதான் டா சொல்லணும். அதோட நா அந்த அமுல்பேபியை மட்டும் தான் தங்கச்சி மாதிரின்னு சொன்னேன். அந்த வால்டியூப இல்ல. சப்பிபோட்ட ஐஸ்குச்சி மாதிரி இருந்துட்டு என்ன வாய் அதுக்கு. ஏதோ அமுல்பேபி கூட வந்ததால் தப்பிச்ச. மறுபடியும் தனிய மாட்டட்டும் அப்ப இருக்கு கச்சேரி அவளுக்கு என்று சொல்லி திரும்பியவன் அப்போதுதான் ஷரவனை பார்த்தான். முகம் முழுவதும் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் ஷரவன் மெய்மறந்து அமர்ந்திருக்க”

விஷ்வா “டேய்,டேய் ஷரவன் என்று அவனை உலுக்க. நிகழ்வுலகிற்கு வந்த ஷரவன். ஏன் டா எரும? எதுக்கு இப்ப என்ன கூப்பிட்ட? என்று கடுப்புடன் கேட்க? ம்ம்ம் ஏன் டா சொல்லமாட்ட. இங்க நாங்க ஒரு பாசவலையே பின்னிட்டு இருக்கோம். நீயென்னாடான்ன இப்டி புடிச்சுவச்ச புள்ளையார் மாதிரி இருக்க”

ஷரவன் “எது பாசவலைய என்னடா ஒலர்ரா?”

” அது டா இப்ப இங்கிருந்து போச்சே அந்த அமுல்பேபி. அதை இன்னைக்கு இருந்து நாங்க எல்லாரும் எங்க தங்கச்சியா தத்தெடுத்துக்குட்டோம் என்று சொல்ல. நண்பர்களை ஒருமாதிரி பார்த்த ஷரவன்.. ஐம் சோ ஹாப்பி டா. இவ்வளவு நாள் நீங்க எனக்கு ப்ரண்ஸ்ச இருந்தீங்க இனி நீங்க நாளுபேரும் எனக்கு மச்சான் ஆகிப்போறீங்க என்றான் குறும்பு கொஞ்சமும் குறையாத குரலில்”

பரத் ” டேய் என்னடா சொல்ற நீ? இதுக்கு என்ன அர்த்தம்? எனக்கு ஒன்னும் புரியல என்று முழித்தவன் தலையை சொறிய. ஷரவன் ஸ்டைலாக தன் கூலர்ஸ் எடுத்து மாட்டியவன், “ம்ம்ம் உங்க தொங்கச்சி அந்த அமுல்பேபி தான் என்னோட வருங்கால பொண்டாட்டி ன்னு அர்த்தம் என்றவன். தன் பைக்கில் ஏறி சென்று விட. நண்பர் நால்வரும் கொஸ்டின் பேப்பரை பார்த்த பிள்ளை போல் பேயறைந்த முகத்துடன் நின்றிருந்தனர். நிலவனுக்கு மட்டும் மனதில் ஒரு சின்ன நெருடல், இன்று ஷரவனுடன் இதைப்பற்றி பேசவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்”

“கல்லூரியின் முதல் நாள் எந்தவித பெரிய தொல்லையும் இல்லாமல் முடிய மிருது, தனு நிம்மதியாக ஹாஸ்டல் வந்து சேர்ந்தனர்”

“இங்கு ஷரவன் மிருதுளாவையே நினைத்து கற்பனையில் அவளுடன் டூயட் பாடிக் கொண்டிருக்க. அவன் டூயட்டில் மண் அள்ளிப்போட வந்தான் நிலவன்”

“டேய் ஷரவன் என்ற நிலவனின் குரலில் கற்பனை கலைந்தவன். ஏய் நிலவா வாடா. என்ன அதிசயம் ரொம்ப நாள்கழிச்சு வீட்டுக்கு வந்திருக்க. பிரியா அத்தை, சிந்துக்குட்டி எல்லாம் வந்திருக்கங்களா என்று ஆவலாய் கேட்க”

“இல்லடா நா மட்டும்தான் வந்தேன். உன் கிட்ட கொஞ்சம் பேசணும் அதான் என்று இழுக்க. அவனை பார்த்து அர்த்தமாக சிரித்த ஷரவன். என்னடா உன் புது தங்கச்சி மிருதுளா பத்தி பேசணும என்று நிலவன் மனதை சரியான கனிந்து சொல்ல”

” நிலவன் சற்று அதிர்ந்தவன் ஆமாடா அமுல்பேபி பத்திதான் பேசணும் என்று தயங்கி தயங்கி சொல்ல. ஏனோ ஷரவனுக்கு நிலவன் மிருதுளாவை அமுல்பேபி என்று செல்லபேர் வைத்து அழைத்தது பிடிக்கவில்லை. அவனை தவிர வேறு யாரும் மிருதுளா செல்லமாக கூப்பிடுவது. அவளிடம் உரிமை எடுத்துக்கொள்வதும் அவனுக்கு பிடிக்கவில்லை. அதை ஷரவனின் முகம் அப்பட்டமாக சொல்ல. அதை புரிந்துகொண்ட நிலவன். டேய் அவ எனக்கு தங்கச்சி மாதிரி டா. அவளை பாக்கும் போது எனக்கு சிந்து தான் டா ஞாபகம்வர என்று தான் நண்பனின் மனதை புரிந்து நிலவன் சொல்ல. அதில் மனம் நிறைந்த ஷரவன். ஓகே நிலவா இப்ப சொல்லு மித்துவை பத்தி என்ன சொல்லவந்த என்ற ஷரவனின் வார்த்தையில் நிலவன் ஒரு நிமிடம் சிலையாய் நின்று விட்டான். ஏனென்றால் இதுவரை ஷரவன் சிந்துவை தவிர எந்த பொண்ணையும் இப்படி உரிமையோடு செல்லபேர் வைத்து அழைத்ததே இல்லை. ஒரு முறை பிரேம் ஷரவனிடம் இதுபற்றி கேட்க.. நா சிந்துவை தவிர்த்து. எந்த பொண்ண மனசார விரும்புறேனோ அவளா மட்டும்தான் செல்லபேர் வச்சு கூப்பிடுவேன். அவளுக்கு மட்டும்தான் அந்த உரிமை இருக்கு. வேற எவளுக்கும் அந்த உரிமை கிடையாது என்ற ஷரவன், இன்று மிருதுளாவை உரிமையோடு மித்து என்று அழைக்க நிலவனுக்கு மேலும் குழப்பம்”

ஷரவன் “என்ன நிலவா என் முகத்தை பார்த்துட்டே இருக்க.. மித்து பத்தி ஏதோ பேசணும்னு சொன்னீயே? என்ன அது சொல்லு”

இல்ல ஷரவன் அது அது வந்து என்று நிலவன் இழுக்க.

“டேய் நீ என்ன சொல்லவரேன்னு உன் முஞ்ச பார்த்தலே புரியுது. இன்னைக்கு மித்துவ என் பொண்டாட்டினு சொன்னதை பத்தி கேக்கதானே வந்த”

“ஆமாடா உன்ன பத்தி எனக்கு நல்ல தெரியும்.. பாவம் அந்த பொண்ணு பார்த்த அப்பாவியா தெரியுது. நீ பாட்டுக்கு பொண்டாட்டி அது இதுன்னு சொல்லிட்டு போய்டுவ அப்புறம் அந்த அமுல்பேபி நிலைமை என்னாகும் டா என்ற நிலவனை ஷரவன் முறைக்க”

“டேய் டேய் கோச்சிகாத டா. நீ நல்லவன் தான் நா இல்லேன்னு சொல்லல. ஆனா நீ என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிலவன் பேச்சை நிறுத்த”

“புரியுது நிலவா.. நா நிறைய பொண்ணுங்க கூட பழகுறது, அவங்க கூட ஊர் சுத்துறது பத்திதான நீ சொல்ல வர? எங்க மித்துவும் பத்தோட பதினொன்னா ஆகிடுவளோன்னு உனக்கு பயம். அப்டிதான என்று நிலவனின் மனதை ஷரவன் சரியாக கணிக்க.? நிலவனும் ஆம் என்று மெதுவாக தலையாட்டினான்”

“டேய் என் வாழ்க்கையில பல பொண்ணுங்க வந்துபோய் இருக்காங்க தான் நா இல்லன்னு சொல்லல. ஆன அவங்க எல்லாரும் என்னோட அழகுக்கும், பணத்துக்கு தான் என் பின்னாடி சுத்துனாங்க. நானும் சும்மா ஒரு ஜாலிக்கு அவங்க கூட பழகினேன் அவ்ளோதான். ஆனா அந்த பொண்ணுங்க இடம் என் பெட்ரூம் வாசல்வரை தான் டா. அதை தாண்டி இதுவரை ஒருத்தியும் இந்த ரூமுக்குள்ளேயும் வந்ததில்ல, என் மனசுக்குள்ளையும் வந்ததில்ல. என் வாழ்க்கையில் நா விரும்பின முதல் பொண்ணும் அவதான். கடைசியும் அவதான். இந்த ஜென்மத்தில் அவஒருத்தி மட்டும்தான் டா எனக்கு பொண்டாட்டி என்று ஷரவன் தீர்க்கமாக சொல்ல.

நிலவனுக்கு அப்போது தான் உயிரே வந்தது. ரொம்ப சந்தோஷம் ஷரவன் நீ சொன்னாத கேட்ட பிறகு தான் மனசு நிம்மதியா இருக்கு. ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம் இருக்குடா ஷரவன்?

“இன்னு என்ன டா சந்தேகம்?”

“இல்லஆஆ இன்னைக்கு காலையில் தான் நீ அமுல்பேபியை பார்த்தே. அதுக்குள்ளே எப்படி டா இப்படி ஒரு லவ்வு. அதுவும் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு என்று நம்பமுடியாமல் ஷரவனை பார்க்க?”

“ஷரவன் நிலவனை பார்த்து மென்மையாக சிரித்தவன். டேய் மித்துவை நா இன்னைக்கு தான் முதல் முறையா பாத்தேன்னு நெனச்சிய? நான் அவளை இதுக்கு முன்னையே பாத்திருக்கேன்டா”

அப்டிபோடு,எப்ப டா நடந்தது இது. அதுவும் எங்களுக்கு தெரியாம. முதல் முதல்ல அமுல்பேபியை எப்போ, எங்கே பாத்தே என்று ஆர்வமாக கேட்டான் நிலவன்.

ஷரவன் கண்முன் மிருதுளாவை முதல் முதலில் பார்த்த அந்த அழகிய நாள் விரிந்தது.