என் தீராத காதல் நீயே 3

ei8ULQ8565
 1. “என் தீராத காதல் நீயே 3
 2. “மலர்கள் மேல் படிந்திருந்த மார்கழி மாதத்தின் பனித்துளிகளை தன் அக்னிக்கரம்கொண்டு துடைத்துக் கொண்டிருந்தான் சூரியன்.”
 3. “ஷரவன் படித்துக் கொண்டிருக்கும் போதே.. தன் தந்தை பிரதாப்பின் பிசினஸில் சில பொறுப்புகளை கவனித்து கொண்டிருந்தான்.. அதே சமயம் தன் சொந்த முயற்சியில் சிறிய பிசினஸ் ஒன்றை தொடங்கி அது இப்போது நல்ல முறையில் போய் கொண்டிருக்கிறது… அது விஷயமாகதான் ஊட்டி வந்திருந்தான்.. பிரதாப்பிற்கு ஊட்டியில் சொந்தமான சிறிய அளவிலான அழகிய இயற்கை எழில் சூழ்ந்த கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அதில் தான் ஷரவன் தங்கியிருந்தான்.. ஷரவனுக்கு காலை வேளையில் பனி சூழ்ந்த புல்வெளி, மரங்கள், மலர்களை பார்த்து ரசிப்பது ரொம்ப பிடிக்கும்.. எனோ இன்று காலையில் இருந்து ஷரவனின் மனதில் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு உற்சாகம்.. அதே மனநிலையோடு காலையில் எழுந்தவன். தன் ஜர்கினை எடுத்துப் போட்டுக்கொண்டு தன் ரூமை விட்டு வெளியே வந்தவன்.. அன்றைய பொழுதின் அழகிய இயற்கை காட்சிகளை கண்களில் பதித்தபடி வந்தவனின் கண்களில் விழுந்தாள் மிருதுளா..
 4. “அழகிய பிங்க் நிற காட்டன் சல்வாரில் தண்ணீர் விட்டு வெளியே வந்த மீன் போல் துள்ளிகுதித்து அங்கிருந்த மரத்தின் கிளையை ஏக்கி ஏக்கி பிடித்திழுக்க முயன்றுக்கொட்டிருந்தாள்.. அவள் இழுத்ததில் மரத்தில் இருந்த பூக்களும், அந்த பூக்களின் ஒளிந்திருந்த பனித்துளிகளும் அவள் மேல் மலர் மழையாய் பொழிய அதில் தன்னை மறந்து துள்ளிகுதித்து சிறு குழந்தையென விளையாடிக் கொண்டிருந்தவளை விட்டு எனோ தெரியவில்லை ஷரவனால் இம்மியளவும் கண்களை இப்படி அப்படி அகற்ற முடியவில்லை.. அவள் முகம் சரியாக தெரியதபோதும் அவள் செய்கையில் தன்னை தொலைத்தவன்.. அவளின் முகம் பார்க்கும் ஆவலில் அவளை நோக்கி சென்றான்.. குமரியாய் இருந்தும் இன்னும் குழந்தைதனத்துடன் மிளிரும் முகம், கருப்பு வைரம் போன்ற கண்கள், துள்ளிகுதிக்கும் போது அவளுடன் சேர்ந்து துள்ளிய அவளின் விரித்த கூந்தல், அவளின் சிரிப்பு சத்தத்துடன் இணைந்து தாளம் போடும் கண்ணாடி வளையல்கள் எழுப்பும் ஓசை என்று அவளின் அழகில் முழுவதும் தன்னை இழந்துவிட்டான் ஷரவன்.. அவனையும் அறியாமல் அவள் போகும் இடமெல்லாம் அவள் கால் தடத்தை பின் தொடந்து இவன் வழி அமைய அவள் பின்னோடு அவள் நிழலுக்கு துணையாக அவளை பின் தொடர்ந்தான்..
 5. “பள்ளி விடுமுறைக்கு தன்யாவின் குடும்பம் ஊட்டிக்கு வந்தவர்கள் மிருதுளாவையும் உடன் அழைத்து வந்தனர்.. தனுவுடன் சேர்த்து மிருது செய்யும் அனைத்து சேட்டைகளையும், குறும்புகளையும் ரசித்து, தன் இதயப்பையில் நிறைத்துக் கொண்டீருந்தான் ஷரவன்.. ஒரிடத்தில் மிருதுளா தெரியாமல் மிளகாயை கடித்து விட்டு காரம் தங்காமல் கண்களில் நீர் வர அய்யோ அம்மா என்று வானுக்கும் பூமிக்கும் குதித்து கை, கால்களை உதைத்துக் கொண்டு இதழ்களை பிதுக்கி முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டு அம்மா எரியுது ம்மா எரியுது மா என்று தனுவின் அம்மா தங்கமணியை பார்த்து கத்த..
 6. தனு “மிருது தலையில் கொட்டியவள்.. அடியேய் ஒரு சின்ன மிளகா கடிச்சதுக்கு ஏன் டி இப்படி சீன் போடுற என்று தனு மிருதுவின் மூக்கை பிடித்து கிள்ள..
 7. தங்கமணி ” ஏய் தன்யா.. சும்மா இரு டீ. பாவம் அவளே காரம் தாங்காம கத்திட்டு இருக்கா.. இதுல நீ வேற.. வாயமூடிட்டு இரு டி என்றவர்.. மிருதுவை சமாதானம் செய்ய ஒரு ஐஸ்கிரீமை வாங்கிக் கொடுக்க உடனே அழுகையை விட்டு ஐஸ்கிரீமை கையில் வாங்கிக் கொண்ட மிருதுவின் முகத்தில் மின்னலென வெட்டிய சிரிப்பை பார்த்த ஷரவன் மயங்கி நிற்க..
 8. தனு, “அடிபாவி.. ஏன்டி பக்கி ஒரு ஐஸ்கிரீம்காடி இவ்வளவு அக்கப்போரு.. எரும எரும என்று மிருதுவின் முதுகில் தாளம் போட மிருது தனுவிற்கு தன் முதுகை வாடகைக்கு தந்தவள் கையில் வழிந்த ஐஸ்கிரீமை ஒரு சொட்டு கூட விடாமல் கவனமாக நாக்கிக் கொண்டிருக்க அத பாத்த ஷரவனுக்கு உள்ளுக்குள் அப்படியே மிருதுளாவை அள்ளி தன் இருகைகளில் அணைத்துக் கொள்ளும் பேராவல் எழுந்தது.. (ஆனா முடியாதே ஹா ஹா ஹா)
 9. “நேரம் போவதே தெரியாமல் ஷரவன் மிருதுளாவையே சுற்றிக்கொண்டு தன் மொபைலில் அவளின் அனைத்து சேட்டைகளையும் போட்டோ எடுத்துக்கொண்டான்.. நேரம் போனது தெரியாமல் மாலை வரை தன்னைமறந்து மிருதுளாவையே சுற்றிக் கொண்டிருந்த ஷரவனை அவன் ஃபோன் மணியடித்து “டேய் வா டா இங்க” என்று நிகழ்வுலகிற்கு இழுத்து வந்தது. கடுப்பாக ஃபோனை பார்க்க அவன் தந்தை தான் அழைத்திருந்தார்.. அவரிடம் ஐந்து நிமிடம் பேசிவிட்டு திரும்ப அங்கே அவன் கண்களுக்கு மிருதுளா இல்லாத வெறுமை தான் காட்சியாக காத்திருந்தது.. சுற்றும் முற்றும் மிருதுளாவை தேடி அலைந்தவன்.. எங்கும் அவள் கிடைக்காமல் போக ஷரவன் முகம் சார்ஜ் போன மொபைல் போல் ஆகிவிட்டது.. பெயர் கூட தெரியாதவளிடம் தான் மனதை தொலைத்து, காதலை வாங்கிக்கொண்டு திரும்பினான்..
 10. நிலவன் “ம்ம்ம்ம் அப்போ அமுல்பேபியை பார்த்ததும் சார் விழுந்துட்டீங்க அப்படி தானே என்று குறும்பாக கேட்டு.. ஷரவன் அழகாக தலையை மேலும் கீழும் ஆட்ட.. நிலவன் சிவந்திருந்த ஷரவனின் கன்னத்தை பார்த்து டேய்.. டேய்… என்ன டா இது புதுச இருக்கு..?? உனக்கு வெட்க பட கூட தெரியுமா.. அய்யோ அய்யோ இப்ப பார்த்து சிந்துவும் விஷ்வாவும் இங்க இல்லாம போய்டங்களே என்று கலாய்க்க.. டேய் நீ இப்ப என் கிட்ட மீதி வாங்க போற பாரு மரியாதைய ஓடி போய்டு என்று நிலவனை செல்லமாக முறைக்க..
 11. நிலவன் “ஆனா ஒன்னு டா எவ்வளவோ அழகான பொண்ணுங்க உன் பின்னாடி சுத்தியும், அதெல்லாம் விட்டுட்டு. அந்த அப்பாவி அமுல்பேபிக்கு புருஷனா வாக்கப்பட போறா நீ.. ம்ம்ம்ம் எப்படியோ நல்ல இருந்த சரி.. நீ உன் வெட்கத்தை கன்டினியூ பண்ணு நா கிளம்புறேன் என்று நிலவன் கிளம்ப..
 12. ஷரவன் “டேய் என்று அதிகாரமாக நிலவனை அழைத்தவன்.. நான் வெட்க பட்ட மேட்டர் நமக்குள் தான் இருக்கணும்.. இது கடுகளவு வெளிய கசிஞ்சலும் அவ்வளவு தான்..
 13. நிலவன் “டூ பி ஹானஸ்ட்
  இப்ப வரை எனக்கு அந்த ஐடியாவே இல்ல டா.. நீ சொன்னதுக்கு அப்புறம் தான். அப்படி செஞ்ச என்னன்னு தோணுது என்று விஷமமாக சொல்ல..
 14. ஷரவன் “டேய் வேணாம் டா.. நீ அப்படி ஏதும் செஞ்சேன்னு வை.. மகனே நீ காலி என்று மிரட்ட..
 15. நிலவன் “ஹலோ பாஸ்.. ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன் நீங்க இப்ப என்கிட்ட கெஞ்சணும்.. அத மறந்துட்டு பேசிட்டு இருக்கீங்க மிஸ்டர். ஷரவன் பிரதாப் என்று அலட்சியமாக சொல்ல..
 16. ஷரவன் ” ஐய்யோ கடவுளே போயும் போயும் இந்த பக்கி கிட்ட போய் மாட்டிக்கிட்டேனே.. இந்த பக்கி வேற இப்ப பிளாக் மெயில் பண்ற மூடுல இருக்கு போலயே.. நல்ல தொக்க சிக்கிட்டேன் என்று கடுப்பானவன்.. “டேய் ப்ளீஸ் டா உன் திருவாயை மூடிட்டு கொஞ்சம் சும்மா இரு டா நான் உன்ன கெஞ்சே கேட்டு தொலைக்குறேன்..

  நிலவன் ” டேய்.. உன் டைய்லாக் மட்டும் தான் கெஞ்சுற மாதிரி இருக்கு.. ஆனா உன் குரலும் முகமும், டைய்லாக்குக்கு சிங்க் ஆகலயே அதுல ஆணவம் தெரியுதே என்று தான் ஆள்காட்டி விரல் கொண்டு கன்னத்தை தேய்த்து. இது செல்லாது என்பது போல் தலையை இட வலமாக ஆட்ட.. கடுப்பான ஷரவன் டேய் நீ ரொம்ப தான் பண்ற.. நாளைக்கே நீ லவ்வுல மாட்டி அவதி படுறப்போ.. நான் முடியே போச்சுன்னு சும்மா இருந்துடுவேன் பாத்துக்க.. மலையேற மச்சான் தயவு வேணும்மோ இல்லையே.. லவ்வுக்கு நண்பன் தயவு வேணும் டா நல்ல யோச்சிக்க..

  நிலவன் “டேய் என்னை என்ன உன் மாதிரி வீக் ஹார்ட் னு நெனைச்சிய.. மீ வெரி ஸ்ட்ராங் டா இந்த காதல் எல்லாம் நான் இருக்க திசை பக்கம் கூட வராது என்று சட்டை கலரை தூக்கி விட்டவன் அங்கிருந்து கிளம்ப (பாவம் சாருக்கு தெரியாது.. அவன் ஸ்ட்ராங் ஹார்ட் ஒரு வால்டியூம் கிட்ட வசமா மாட்டபோதுன்னு.. ஹா ஹா ஹா) ஷரவனும் மிருதுளாவின் நினைவுகளில் முழ்கி உறங்கி போனான்…”

 17. “மறுநாள் காலை புதிதாய் விடிய மிருதுளாவை பார்க்கும் ஆர்வத்தில் ஷரவன் வேக வேகமாக காலேஜ் கிளம்ப.. இங்கு மிருதுவும், தனுவும் ஏற்கனவே காலேஜ் வந்திருந்தனர்.. கிளாசுக்கு போகும் வழியில் சில சீனியர் மாணவர்கள் இரு பெண்களையும் பிடித்துக்கொண்டு வம்பு செய்ய.. வழக்கம் போல் மிருது கண்களில் குத்தால அருவி ஸ்டார்ட் ஆகிவிட்டது, தனுவும் அந்த மாணவர்களின் மோசமான பேச்சில் முகம் சுழிக்க, சரியான நேரத்தில் “இங்க என்ன டா நடக்குது” என்ற அதட்டால் குரல் வர குரல் வந்த திசையில் வந்து கொண்டு இருந்தனர் நிலவனும் அவன் நண்பர்களும்..
 18. “நிலவனை பார்த்ததும் மிருதுளா முகத்தில் நிம்மதி பரவ, தனு “ஐய்யோ கடவுளே ஏற்கனவே இங்க பத்திட்டு ஏரியுது.. இதுல பெட்ரோல் உத்த இந்த விசித்திர கொரங்குங்க வேற வருதே.. காலையிலேயே காலண்டரில் போட்டிருந்தான்.. இன்னைக்கு சோதனை மேல் சோதனைன்னு இப்ப புரியுது அதுக்கு என்ன அர்த்தம்னு என்று தலையில் அடித்துக்கொள்ள.. பெண்கள் அருகில் வந்த நிலவன் அங்கிருந்த மாணவர்களிடம் “ஏன் டா இந்த பெண்ணுங்க கிட்ட வம்பு பண்றீங்க என்று கோவமாக கேட்க.. அவன் கோபத்தில் பயந்த அந்த மாணவர்கள்.. இல்ல.. இல்ல.. சீனியர் சும்மா பேர் தான் கேட்டோம்.. அவ்வளவு தான் வேற ஒன்னும் இல்ல என்று வார்த்தைகள் தந்தியடிக்க.. அதை பார்த்த தனுவும், மிருதுவும் வாய்குள்ளேயே சிரித்துக்கொண்டு இது உலகமக நடிப்பு டா சீனியர்ஸ் என்று மைண்ட் வாய்ஸ் போட.. நிலவன் இதோ பாருங்கடா இதுதான் லாஸ்ட். இனி இவங்க கிட்ட சும்மா பேசுறது இல்ல பார்த்தாலே கண்ணை நோண்டிவேன் என்று மிரட்ட.. விஷ்வா டேய் இனி அவங்க ரெண்டு பேர் இருக்க பக்கம் மறுபடி உங்களை பாத்தேன் அவ்ளோ தான்.. போங்க டா என்று விரட்ட அந்த மாணவர்கள் விட்டால் போதுமென்று ஓடி விட்டனர்.. (நிலவன், ஷரவன் மிருதுளாவை பற்றி சொல்லிய அனைத்தையும் விஷ்வா, பிரேம், பரத்திடம் நேற்று இரவே சொல்லி விட அவர்களுக்கு மிருதுளா மீதிருந்த அன்பு இன்னு கொஞ்சம் கூடிடுச்சு..)”
 19. “மிருதுவை திரும்பி பார்த்த நிலவன் இங்க பாரு அமுல்பேபி இனி யாரவது உன் கிட்ட வம்பு பண்ண எங்ககிட்ட சொல்லு நாங்க பாத்துக்குறோம் என்றதும் மிருது, தனு இருவரும் தலையாட்ட.. ஏய் வால்டியூப் நா அமுல்பேபிக்கு தான் சொன்னேன் உனக்கு இல்ல.. நீ ஏன் தலைய இப்புடி ஆட்டுற.. உன்கிட்ட எல்லாம் இந்த பசங்க வம்பு பண்ண மாட்டாங்க.. நீ தைரியமா இருக்கலாம் என்க.. அது எப்படி டா அவ்வளவு கன்ஃபார்மா சொல்ற என்று பரத் சந்தேகமாக கேட்க.. நிலவன் தனுவின் கன்னத்தை பிடித்து இடவலம் ஆட்டியவன்.. நாம் பசங்களுக்கும் ஒரு டேஸ்ட் இருக்குமில்ல டா.. இந்த ஐஸ்குச்சியை எவனும் கண்டுக்க மாட்டான் என்று விளையாட்டாய் சொல்ல.. தன் கன்னத்தை பிடித்திருந்த நிலவன் கையை தட்டிவிட்ட தனுவின் கண்களில் நீர் திரண்டு விட.. வாடிய முகத்துடன் அங்கிருந்து ஓடி விட அவள் முகவாட்டாம் நிலவன் மனதை வெகுவாக தாக்கியது..
 20. மிருது “ஏய்… தனு… தனு… நில்லு டி என்று கத்தியவள் திரும்பி நிலவனுக்கு தங்களை காப்பாற்றியதற்கு தேங்க்ஸ் அண்ணா என்றவள் தனு பின்னாடியே ஓடிவிட்டாள்..”
 21. “இங்கு விஷ்வா நிலவனை ஒரு மாதிரி பார்க்க.. டேய் என்ன டா?? ஏன் இப்புடி ஃபிகர்ர பாக்குற மாதிரி லுக்கு விடுறா..? என்ன??”
 22. “இல்ல இது நீதானன்னு பாக்குறேன் மச்சி.. நீ இதுவரை இப்படி எந்த பொண்ணையும் கிண்டல், கேலி பண்ணி நாங்க பாத்ததே இல்ல.. நாங்க சைட் அடிச்ச கூட நீ ஒரு அடி தள்ளியே நிப்ப.. இப்ப என்னடான்னா அந்த தனியாத்தூள் கிட்ட ஓவரா சீண்டி விளையாடுற மாதிரி தெரியுது என்று சந்தேகமாக பார்க்க.. நிலவனுக்கு அதே குழப்பம் தான். இதுவரை நிலவன் எந்த பொண்ணிடமும் இப்படி விளையாடியது இல்ல.. அவனுக்கு எப்போதும் பெண்கள் மேல் ஒரு மரியாதை இருக்கும்.. சிறுவயதில் இருந்து பெண்களை மதித்து, மரியாதையோடு நடத்த வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கப்பட்டதால்.. நிலவன் எப்போதும் பெண்களை மதித்து நடப்பான்.. ஆனால் ஏனோ தன்யாவிடம் மட்டும் அப்படி இருக்க முடியவில்லை.. தனுவை வெறுப்பேத்தி அவளின் முறைக்கு கண்களையும், கோபத்தில் சிவக்கும் அவள் கன்னத்தையும் வேடிக்கை பார்ப்பது நிலவனுக்குள் ஜூல் என்ற உணர்வை ஏற்படுத்துவது அவனுக்கே வியப்பாக இருந்தது.. இதுவரை தோன்றத புதுவித உணர்வுகள்.. தனுவை நினைக்கும் போது அவனுள் வருவதை அவனால் தடுக்கமுடியவில்லை.. ஒரே நாளில் அவனுள் ஏற்பட்டிருந்த இந்த மற்றும் அவனையும் அறியாமல் அவன் முகத்தில் ஒரு அழகிய புன்னகை மலர செய்தது.. தன்னை நிலைப்படுத்த தன் தலைமுடியை அழுத்தி கோதியவன்.. தன் புன்னகையும், முகத்தில் அவன் அனுமதி இல்லாமல் வந்த வெட்கத்தை நண்பர்களுக்கு தெரியாமல் மறைக்க அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்…”
 23. “ஷரவன் மிருதுளாவை அவள் கிளாஸ் ரூமிற்கு வெளியே நின்று பார்த்து ரசித்து ஜொள்ளு விட்டு விட்டு தான் நண்பர்கள் இருக்குமிடம் வந்தவன்…”
 24. “குட் மார்னிங் கைய்ஸ் என்று உட்கார.. நிலவனை தவிர மற்ற மூனும் ஷரவன் ஒரு மாதிரி பார்வை பார்க்க.. ஷரவனுக்கு புரிந்து விட்டது இது நிலவன் வேலை தான் என்று.. திரும்பி நிலவனை முறைக்க.. அந்த சிட்டிவேஷனுக்கு கரெக்டாக நிலவனின் ஃபோனில் “நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும்” என்ற மெர்சல் பட டைய்லாக் ரீங்டோனாய் ஒலிக்க.. நிலவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. ஷரவனுக்கும் இனி இங்கு என்ன நடக்கும் என்று தெரிய நண்பர்களின் அடியைத் தாங்க தான் நெஞ்சை இரும்பாக்கி கொண்டான்… அந்த நாலு கொரங்கும் சேர்ந்து ஷரவனை உண்டு இல்லை என்று வச்சு செய்ய.. டேய் முடியல டா, கொஞ்ச கேப் விட்டு தெளிய வச்சு தெரிய வச்சு அடிங்க டா.. என்னால முடியல டா என்று கதறியவன்.. இப்ப என்ன டா உங்களுக்கு பார்ட்டி வேணும். அதுக்கு தானே இவ்வளவு சீனும்.. இன்னைக்கே தந்து தொலையுறேன் டா என்று ஷரவன் சரண்டராக.. அப்புடி வா டா மகனை வழிக்கு என்ற விஷ்வா.. கைய்ஸ் ப்ளான் சக்ஸஸ்.. மிஷன் கம்ப்ளீட்டாட்.. கேட் ரெடி பார்த்த பார்ட்டி… யா யா யா என்று நால்வரும் கத்த..
 25. ஷரவன் “டேய் எருமைங்களா நீங்க சும்மா பார்ட்டி வேணுன்னு கேட்டிருந்தாலே நான் ஓகே சொல்லி இருப்போனே டா.. ஏன் டா இப்படி என்ன வச்சு செஞ்சீங்க, ஏன்டா இந்த கொலைவெறி பன்னிங்களா.. வலி உசுரு போகுது..
 26. விஷ்வா “பேசாத நீ..!! நீ அமுல்பேபி பத்தி எங்ககிட்ட சொல்லாம விட்டதுக்கு உனக்கு நாங்க பெரிய ஆப்பு வச்சிருக்கனும்.. ஏதோ பார்ட்டி தாரேன்னு சொன்னியேன்னு இத்தோட விடுறோம்..
 27. பரத் ” அதென்ன டா பார்த்த உடனே அமுல்பேபி மேல அப்படி ஒரு லவ்வு சாருக்கு..?? அதுவும் கல்யாணம் பண்ற அளவுக்கு என்று குறும்பாக கேட்க.. ஷரவன் முகத்தில் மெல்லிதாக வெட்கம் பரவ..
 28. பரத் ” டேய்…. டேய்…!! இங்க வாங்க டா நிலவன் சொன்னது உண்மை தான் டா.. ஷரவன் வெட்கப்படுறான் டா என்று கத்த.. “யாரு டா இங்க வெட்கம், மானம்னு பேசுறது.. உங்க ஐஞ்சு பேருக்கும்தான் அதெல்லாம் இல்லையே” என்று வந்த கம்பீர குரலிலேயே அது யாரென்று தெரிய.. ஐஞ்சு பேரும் திரும்பி பார்க்க அங்கு இடுப்பில் கைவைத்து இவர்களை முறைத்தபடி வந்து கொண்டிருந்தாள் சிந்து…
 29.