என் தீராத காதல் நீயே 5

என் தீராத காதல் நீயே 5

“நடந்த இந்த நிகழ்வில் மிருதுளாவின் மொத்த உடலும் உறைந்த நிற்க… நான் சொன்னது கரெக்டாக போச்சு இல்ல மிருதுளா என்று வந்த பெண்ணின் குரலில் மிருதுளா சுயவுணர்வு பெற்று குரல் வந்த திசையில் பார்க்க.. அங்கே மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு மிருதுளாவை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அர்ச்சனா… நா சொன்ன மாதிரியே நடந்துடுச்சே மிருதுளா என்று அவள் அருகில் வந்த அர்ச்சனா மென்மையாக மிருதுளாவின் தலையை கோதிவிட.. அதை அர்ச்சனாவிற்கு தான் மீது இருக்கும் உண்மையான அக்கறை என்று மிருது நினைக்க.. ஆனால் அர்ச்சனாவின் எண்ணம் முழுவதும் மிருதுவையும், ஷரவனையும் எக்காரணம் கொண்டும் ஒன்று சேரவிடக்கூடாது என்பதாக தான் இருந்தது என்று அந்த அப்பாவி பெண்ணிற்கு யார் சொல்வது..

“அர்ச்சனாவும் ஷரவனை போலவே வசதியான வீட்டு பெண் தான்.. ஷரவன் அப்பாவும், அர்ச்சனாவின் அப்பாவும் தொழில் முறை நண்பர்கள்.. ஆறடி உயரம், பார்ப்போரை தான் வசமிழுக்கும் காந்தகண்கள், மாநிறத்திற்கு சற்று கூடுதல் நிறம், ரெண்டு நாள் ஷேவ் பண்ணாத தாடி, முகத்தில் அது அது இருக்கவேண்டிய இடத்தில் அழகாய் பொருந்தி இருக்கும், காற்றில் அலைபாயும் அடங்காத அடந்த முடி, உதட்டில் எப்போதும் நிலைத்திருக்கும் அழகிய சிரிப்பு, இதோடு படிப்பு, வசதி , சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து என்று எல்லாவற்றிலும் தனக்கு நிகராக இருக்கும் ஷரவன் மீது அர்ச்சனாவின் பார்வை விழுந்தது.. பார்ப்போரை கவர்ந்து இழுக்கும் அழகி தான் அர்ச்சனா. ஆனால் பாவம் ஷரவன் விஷயத்தில் அந்த அழகு எடுபடவில்லை.. பணம், அழகு இரண்டும் சேர்த்து அர்ச்சனாவிற்கு திமிரை கொடுக்க.. தன் அழகையும், பணத்தை வைத்து ஈசியாக யாரையும் தன் பின்னால் அலைய வைக்கமுடியும் என்ற அவள் எண்ணத்தை உடைத்தான் ஷரவன்.. ஷரவனை அவளால் நெருங்க கூட முடியவில்லை.. எப்படியாவது அவனை அடைய வேண்டும் என்று அர்ச்சனா பல வழிகளில் முயல.. ஷரவனிடம் எதுவும் பலிக்கவில்லை.. நேரடியாக ஷரவனிடம் தான் காதலை சொல்ல முடிவெடுத்து அவன் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அவனிடம் சென்றவள்.. அவனிடம் தான் காதலை சொல்ல.. “சாரி அர்ச்சனா எனக்கு உன்மேல அப்படி எந்த பீலிங்கும் இல்ல சாரி என்று அலட்சியமாக சொன்னவன் அங்கிருந்து சென்று விட.. முதல் முறை தன்னை ஒருவன் நிராகரித்ததை தாங்கிக்கொள்ள முடியாத அர்ச்சனா.. ஷரவனை அடைந்தே தீரவேண்டும் என்று வெறி கொண்டாள்..

“அர்ச்சனாவிற்கு ஷரவன், நிலவன், விஷ்வா நட்பை பற்றி தெரிந்து.. நிலவன், விஷ்வாவிடம் தான் ஷரவன் காதலிப்பதை சொல்லி அவர்களிடம் உதவி கேட்க.. நிலவனுக்கும், விஷ்வாவிற்கு அர்ச்சனாவின் குணம் பற்றியும் தெரியும், ஷரவனை பற்றியும் தெரியுமென்பதால் முடியாது என்று மறுத்துவிட அர்ச்சனா கோபத்தின் உச்சிக்கே சென்றாள்..

“இங்கு விஷ்வாவும், நிலவனும் ஷரவனின்.. “ஏன் டா அந்த அர்ச்சனா உன் பின்னாடியே கால்ல சலங்கை கட்டிட்டு சுத்திட்டு இருக்க.. நீ ஏன் டா அவகிட்ட ஒரு ப்ரண்ட்டா கூட இல்ல, ஒரு நார்மல் பார்வை கூட பாக்க மாட்டேங்கிற.. அவகிட்ட என்னடா இல்ல.. உன்ன மாதிரியே வசதியான பொண்ணு.. உங்க அப்பாவும், அவ அப்பாவும் ப்ரண்ட்ஸ்.. உன் ஸ்டேட்டஸ் க்கு ஏத்த ஆளுதான டா அவ.. அப்புறம் எதுக்கு டா நீ அவ பக்கம் கூட திரும்பமாட்டேங்கிற..??

ஷரவன் “டேய் நீ சொல்றது எல்லாம் கரெக்ட் தான்.. அழகு, படிப்பு, பணம் இப்புடி அவகிட்ட எல்லாம் இருக்கு தான்.. ஆன அவளுக்கு என் மேல இருக்கிறது உண்மையான காதல் இல்ல டா.. அவ விரும்புறது என்னோட ஸ்டேட்டஸ், பணம், நான் ஷரவன் பிரதாப் போட ஆளுன்னு கெத்தா சொல்லிக்கணும், இதெல்லாம் தான் அவளுக்கு வேணும்.. மத்தபடி அவளுக்கு என் மேல அன்புமில்ல காதலுமில்ல.. சோ எனக்கு அவளை புடிக்கல.. அதுக்கு நான் என்ன டா செய்யமுடியும்.. நா எதிர்பார்க்குற பொண்ணு அர்ச்சனா இல்ல டா..!!

விஷ்வா “ம்ம்ம்ம் அதுவும் சரிதான் அர்ச்சனா அப்படிதன்னு எங்களுக்கும் தெரியும்.. அதனால தான் அவ எங்க கிட்ட ஹெல்ப் கேட்டப்போ கூட முடியாதுன்னு சொல்லிட்டோம்..

” ஓஓஓ இதுவேறய.. ஆனா நல்லவேளை டா நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணி என் கிட்ட எதுவும் பேசல.. பேசி மட்டும் இருந்தீங்க என்று ஷரவன் தான் கைகளை முறுக்க.. டேய் டேய் ஏன் டா இப்ப வன்முறைய கையில எடுக்குற..

நிலவன் “அத விடு ஷரவன்.. அப்படி என்ன மாதிரி பொண்ண டா நீ எதிர்பார்க்குற.?? அத கொஞ்சம் புளி போட்டு விளக்கு.?? கொஞ்சம் கேப்போம்…

“ஷரவன் அழகாய் சிரித்தவன் எனக்கு சொல்ல தெரியலடா.. ஆன எனக்கு அவள பார்த்தும் பிடிக்கணும்.. என் அறியாம அவ பின்னாடியே ஏ மனசு போகணும்.. அவளோட ஒவ்வொரு அசைவும் என்ன பாதிக்கணும்.. ஒரு நல்ல வாழ்க்கை துணையால மட்டும்தான் நம்ம வாழ்க்கையை முழுமையடையும். அப்படி பாதி மனுஷனா இருக்க என்ன அவளோட அன்பு, பாசம், காதலால முழுமையடைய வைக்கணும்.. ஆடம்பரம் இல்லாத அமைதியான அழகு.. எல்லாரையும் நேசிக்கிற குழந்தை மனசு.. நா ரசிக்கிற மாதிரி சின்ன சின்ன குறும்பு, சேட்டை செய்யணும்.. எல்லாத்துக்கும் மேல அவகிட்ட நா நானாக இருக்கமுடியணும்.. வாய்விட்டு சிரிக்கவும், அவ மடியில படுத்து மனசுவிட்டு அழுகவும் முடியனும்.. என்னையும் அறியாம அவகிட்ட உரிமை எடுத்து பழகணும்.. செல்லம் கொஞ்சி சீண்டி விளையாடணும், காரணம் இல்லாம சண்ட போடணும், அவள பாக்குறதே சந்தோஷம்னு தோனணும்.. எனக்கு இன்னொரு அம்மாவ அவ இருக்கணும்.. அதேமாதிரி நான் அவளுக்கு நல்ல நண்பனா, நல்ல காதலனா, அன்பான புருஷனா அவளோட எல்லா சந்தோஷத்துக்கும் காரணமா நா இருக்கணும், எந்த கஷ்டமும் அவளை நெருங்க விடாமல் அவள பாத்துக்குவேன்ற நம்பிக்கை எனக்கு என் மேல் வரணும் அப்படி ஒரு பொண்ணுக்கு தான் டா மீ வெய்டிங் என்று சொல்லி முடிக்கும் போது ஷரவனின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.. அதை பார்த்த நிலவனும், விஷ்வாவும் அம்மாடி என்று பெருமூச்சு விட்டவர்கள்.. சுப்பர் டா.. ஆனா இந்த மாதிரி ஒரு பொண்ணு பொறந்திருக்குமான்னு தெரியல.. பட் பொறந்திருந்த அவ சீக்கிரம் உன்ன தேடி வரட்டும் என்று ஆசிர்வாதிப்பது போல் கைகாட்ட.. (நிலவனுக்கு தெரியது அவன் சொன்ன வாக்கு சீக்கிரமே பலிக்கபோவது) ஷரவன் சிரித்துக்கொண்டே ரொம்ப நன்றி சுவாமி என்று கைகூப்ப மூவரும் சிரித்துவிட்டனர்..

விஷ்வா “ஆன ஒன்னு டா கடைசிய சொன்ன பாரு அந்த பொண்ணோட எல்லா சந்தோஷத்துக்கும் நான் காரணமா இருக்கணுனு செம்ம.. அந்த பொண்ணு ரொம்ப லக்கி தான் டா..

“இல்ல டா, அந்த மாதிரி ஒருத்தி எனக்கு கெடச்ச இந்த உலகத்துலயே நான் தான் டா லக்கி என்ற ஷரவன் அங்கிருந்து கிளம்ப.. நிலவனும் விஷ்வாவும் ஷரவன் ஆசை நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலுடன் கிளம்பினார்..

“நாட்கள் அதன் போக்கில் நகர.. அர்ச்சனா ஷரவனை அடைய பல வழிகளில் முயற்சி செய்தாள்.. தான் தந்தையை ஷரவன் தந்தையிடம் பேச வைத்தாள்.. ஆனால் ஷரவனின் அப்பா பிரதாப் கல்யாண விஷயத்தில் ஷரவனின் முடிவு தான் என் முடிவு என்று சொல்லி விட .. அர்ச்சனாவிற்கு இருந்த கடைசி வழியும் அடைந்துபோனது..

“ஷரவனை எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி அர்ச்சனாவை தான் பெண் என்பதை மறந்து கீழ்த்தரமாக அத்துமீறி அவனிடம் நடந்துகொள்ள வைத்தது.. பொறுத்து பொறுத்து பார்த்த ஷரவன் ஒரு கட்டத்தில் அவளின் செயல்கள் ஆத்திரத்தை உண்டாக அவளை அறைந்தவன்.. ச்சே நீயெல்லாம் ஒரு பொண்ணாடி.. நீ நெனச்சது நடக்க இவ்ளோ கீழ்த்தரமான இறங்குவிய.. ச்சீ உன்னயெல்லாம் பொண்ணுன்னு சொல்லவே கேவலமா இருக்கு.. உடம்பையும், அழகையும் காட்டுன எந்த ஆம்புளையும் விழுந்துடுவன்னு நெனச்சிய.. மனசுக்கு புடிச்ச பொண்ணோட சின்ன நக தீண்டால் ஒரு ஆம்புல மனசுல ஏற்பாடுத்துற சலனத்தை, பிடிக்காத பொண்ணோட நிர்வான கூட ஏற்படுத்தது டி அத முதல்ல புரிஞ்சுக்கோ.. நீயெல்லாம் என்ன ஜென்மமோ.. உன் மூஞ்சிய பார்க்கவே அசிங்கமாக இருக்கு என்றவன் கோபமாக அவளை திரும்பி கூட பார்க்காமல் சென்று விட.. அவமானத்திலும், ஷரவன் அடித்ததிலும் கோபத்தின் எல்லைகடந்த அர்ச்சனா மனதில் ஷரவனை எப்படியும் பழிவாங்கியே தீரவேண்டும் என்ற எண்ணம் ஆழிப்பேரலை எனெ உருவெடுக்க அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.. அதற்கான வழியை தெரிந்தே தெரியாமலோ ஷரவனே அவளுக்கு தந்துவிட்டான்..

“ஷரவனையே கவனித்துக் கொண்டிருந்த அர்ச்சனா அன்று ஷரவன் , சிந்துவிடம் மிருதுளாவை காதலிப்பதை சொல்லிக் கொண்டிருக்கும் போது ஷரவனின் கெட்ட நேரம் அதை அர்ச்சனா கேட்டுவிட்டாள்.. பின் மிருதுளாவை பின் தொடர்ந்தவள் அவளை பற்றி தெரிந்ததும்.. ச்சே இந்த ஷரவனுக்கு போயும் போயும் இவளைய புடிச்சிருக்கு.. என்னை வேணானு சொல்லிட்டு ஒரு சாதாரண மிடில்கிளஸ் பொண்ணு பின்னாடி அலையுறான் .. இல்ல.. இல்லவே இல்ல இது நடக்ககூடாது, நடக்க விடமாட்டேன்.. ஒரு சாதாரண மிடில்கிளஸ் பொண்ணுகிட்ட நா தோக்கமாட்டேன் என்று கத்தியவள்.. அன்று மாலையே மிருதுளாவை சந்தித்தாள்..

“ஹாய் மிருதுளா ஐ ஆம் அர்ச்சனா என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள.. மிருதுளாவும் ஹாய் என்று கை கொடுத்து தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.. அர்ச்சனா மெல்ல மிருதுளாவிடம் பேச்சு கொடுத்து அவளை பற்றி தெரிந்துகொண்டவாள்.. மெதுவாக தன் சதி வேலையை தொடங்கினாள்.. மிருதுளா உன்னோட பேர் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு அதோட உன்னையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று பாசமாக பேச.. மிருதுளா முகத்தில் சின்ன சந்தோஷம்.. ஆமா மிருதுளா காலையில உன்ன அந்த நிலவனும் அவன் ப்ரண்ட்ஸ்சும் ராக்கிங் பண்றதை பாத்தேன்.. என்ன ஆச்சு.?? எதுவும் பிரச்சனைய??

“அச்சோ அதெல்லாம் ஒன்னு இல்ல.. சும்மா பேர் கேட்டாங்க அப்புறம் போக சொல்லிட்டாங்க அவ்ளோ தான் என்று அப்பாவியாக சொல்ல..

அர்ச்சனா “ம்ம்ம் ஒகே, ஆன பாத்து மிருதுளா அவங்க எல்லாம் பெரிய பணக்கார வீட்டு பசங்க.. அவங்க வச்சது தான் இந்த காலேஜில சட்டம்.. பாத்துக்கோ.. அந்த நிலவன், விஷ்வா, பரத், பிரேம் எல்லாம் ஓகே தான்..ஆன அந்த ஷரவன் இருக்கானே அவன் ரொம்ப மோசம்.. சரியான பொம்பளை பொறுக்கி.. காலேஜில் ஒரு பொண்ணை விடமாட்டான்.. காதல் அது இதுன்னு சொல்லி எத்தனை பொண்ணுகளை ஏமாத்தி இருக்கான் தெரியுமா என்று ஷரவனை பற்றி மிருதுளாவின் மனதில் தப்பான எண்ணத்தை விதைக்க ஆரம்பித்தாள் அர்ச்சனா.. இதுவரை சாதாரணமாக அர்ச்சனா சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த மிருதுளா அடுத்து அவள் சொன்ன வார்த்தைகளில் பயத்தில் அடி ஆழத்திற்கே சென்று விட்டாள்..

“அர்ச்சனா மிருதுளாவிற்கு படிப்பு தான் முக்கியம் என்று கண்டு கொண்டவள்.. நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மிருதுளா.. இன்னைக்கு காலையில அந்த ஷரவன் உன்னையே உத்து உத்து பார்த்துட்டு இருந்தான்.. அவன் பார்வையே சரியில்லை.. இப்ப அந்த ஷரவன் பார்வை உன்மேல விழுந்திருக்குனு நெனைக்குறேன்.. இங்க நெறைய பொண்ணுங்க ஷரவனால படிப்பே வேணாம்னு பாதியிலேயே விட்டு போய்ட்டாங்க தெரியும.? நீ வேற ரொம்ப கஷ்டப்பட்டு இங்க படிக்க வந்திருக்க பாத்து ஜாக்கிரதை. உன் படிப்பு கெட்டுப்போகாம பாத்து நடந்துக்கோ என்று மிருதுளாவின் வீக் பாயிண்ட்டில் சரியாக அடிக்க.. மிருதுளாவிற்கு உள்ளுக்குள் தூக்கிவாரி போட்டது.. அய்யோ பிள்ளையாராப்ப இது என்ன புது பிரச்சனை.. யார் இந்த ஷரவன்.. எதுக்கு அவன் என்ன பாக்கணும்.. எனக்கு இருக்க ஒரே நம்பிக்கை என் படிப்பு மட்டும் தான்.. இவனால என் படிப்புக்கு எதாவது பிரச்சினை வந்த என்னோட எதிர்காலமே நாசமா போய்டும்.. நானே யாரே நல்ல மனசுகாரங்க செய்ற உதவியால படிக்கிறேன்.. இங்க எதும் பிரச்சினை வந்த அவங்களுக்கு நா என்ன பதில் சொல்வேன் என்று மனதில் புலம்பி தவித்தவள்.. கடவுளே அவனால எனக்கும் என் படிப்புக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று வேண்டியவள்.. இனி எக்காரணம் கொண்டும் ஷரவன் கண்முன்னே செல்லக்கூடாது என்று நினைத்தவள் பயத்தில் அப்படியே உட்கார்ந்து இருக்க.. அர்ச்சனா தான் வந்த வேலை முடிந்தது மிருதுளாவின் மனதில் ஷரவனை பற்றி தப்பான எண்ணத்தையும், பயத்தையும் விதைத்து விட்ட திருப்தியில் அங்கிருந்து புறப்பட்டாள்..

“இன்று ஷரவன் , மிருதுளாவிடம் தான் அவளை காதலிப்பதை சொல்லி அவளும் அவனை காதலிக்க வேண்டும் என்று மிரட்டவிட்டு சென்றதும்.. எங்கே அர்ச்சனா சொன்னது போல் தான் படிப்புக்கு ஷரவனால் எதுவும் பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில் மிருதுளா அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தூண்டில் மீனாய் தவித்திருக்க.. அந்த சமயத்தில் அங்கு வந்த அர்ச்சனா ஷரவன் மிருதுளாவிடம் அவன் காதலை சொன்னதை கேட்டவள் அதை பொறுக்க முடியாமல் அதை எப்படி கெடுப்பது என்று யோசித்து மிருதுளாவிடம் வந்தவள்..”

“என்ன மிருதுளா இதெல்லாம்.. நான் தான் உன்ன அந்த ஷரவன்கிட்ட இருந்து தள்ளி இருன்னு படிச்சு படிச்சு சொன்னேன் இல்ல..!! இப்ப பாரு.?? இனி உன்னோட படிப்பு என்னாக போகுதோ?? அந்த ஷரவன் உன்ன என்ன பண்ணபோறனோ?. என்று தான் வார்த்தைகளில் மிருதுளாவை பயமுறுத்த..

“மிருதுளா என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்து அழுதுகொண்டே எழுந்து ஓடியவள் எப்படி ஹாஸ்ட்டல் வந்து சேர்ந்தாள் என்பது கடவுளுக்கும் ஷரவனுக்கும் தான் தெரியும்.. ஷரவன் கொடுத்த அதிர்ச்சியில் மிருதுளா தடுமாறி இருப்பாள் என்று நினைத்த ஷரவன் அவள் காலேஜில் இருந்து வெளியே வந்தது முதல் ஹாஸ்ட்டல் சென்று சேரும் வரை அவளை பின் தொடர்ந்தவன்.. அவள் பத்திரமாக ஹாஸ்டல் சென்ற பிறகே தன் வீட்டிற்கு சென்றான்..