என் தீராத காதல் நீயே 8

“என் தீராத காதல் நீயே 8

“நாட்கள் அதன் போக்கில் நகர.. மித்து மேல் ஷரவனின் காதல் நாளுக்கு நாள் மண்ணை துளைத்து வெளிவரும் மரம்போல் வேர்விட்டு விருட்சமென பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது.. மித்து இப்போதெல்லாம் ஷரவனை பார்த்து முன்போல் பயப்படுவது இல்லை.. அவனால் தனக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை இருந்தாலும் அவனிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருக்க நினைக்க.. அதற்கு ஷரவன் விடவில்லை.. எப்போதும் மித்துவை தான் கண்பார்வையிலேயே வைத்திருந்தான்.. மேல் படிப்பிற்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தும்.. மித்துவை விட்டு போக மனமின்றி.. அதே காலேஜில் தான் மேல் படிப்பை தொடர்ந்தான்.. அவனின் காதலையும், அன்பையும் மிருதுளா மேல் அடைமழையாக பொழிந்தான்.. அவளுக்கு என் தேவையென்று அவள் அறியும்முன் ஷரவன் அதை செய்து முடித்திருந்தான். அதுவும் அவளே அறியாமல்.. ஒரு தாயைப்போல் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.. பிறந்ததிலிருந்து அன்பு, பாசமென்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த மிருதுளாவிற்கு ஷரவனின் உண்மையான அன்பும், காதலும் கடைசி வரை புரியாமலே போனது.. அவன் காதலுக்கு தான் சம்மதிக்க வேண்டுமென்று மட்டும் தான் அவன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என்று நினைத்தவள் அவனை விட்டு விலகியே இருக்க.. ஷரவனுக்கும் வேறு வழி தெரியாமல் பழையபடி மிருதுளாவை கட்டாயப்படுத்தி, மிரட்டி தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்..

“மிருது ப்ளைட் லோன்டாகிடுச்சு எந்திரி டீ என்று தனுவின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்த மிருதுளா.. தன் லாக்கேஜ்களை எடுத்து கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தாள்.. சென்னையில் ஒருவேலை இருந்தால் ஒருநாள் இங்கேயே தாங்கி வேலையை முடித்துவிட்டு போகலாம்மென்று.. பாக்கத்தில் இருந்த ஹோட்டலில் ரூம் எடுத்து தாங்கினார் இருவரும்..

“ரூமிற்கு வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு குளித்து தோழிகள் இருவரும் வெளியே சென்றவர்கள்.. முடிக்கவேண்டிய வேலையை முடித்து வரும் வழியில் மிருதுளா கால் தவறி கீழே விழுந்து அவள் தலையிலும், காலிலும் அடிபட்டுவிட.. பதறி தனு மிருதுவை பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றாள்.. ஹாஸ்பிடலில் டாக்டர் அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்ற தனுவிற்கு அங்கிருந்த டாக்டரை பார்த்த ஆனந்த அதிர்ச்சி என்றால், மிருதுவுக்கு மனதில் நிலநடுக்கமே வந்து உடல் நடுங்கியது.. அவளின் கடந்தகாலம் ஒரு நிமிடம் அவள் கண்முன் வந்து நின்றது.. அவளையும் அறியாமல் அவள் உதடுகள் லட்சுமிஆன்ட்டி என்று முனுமுனுக்க.. அந்த டாக்டரும் மிருதுளாவை தான் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்..”

“மிருதுளாவும், தனுவும் பத்தாவது படிக்கும் போது அவர்கள் பள்ளியில் நடந்த மெடிக்கல் கேம்பில் தான் டாக்டர். லட்சுமி இவர்களுக்கு அறிமுகம்.. துறுதுறுவென இருந்த மிருதுவையும், தனுவையும் லட்சுமிக்கு பிடித்துவிட்டது.. மிருதுளாவின் குடும்பத்தை பற்றி தெரிந்த பிறகு மிருதுளா மீது லட்சுமிக்கு தனி பாசம் வந்துவிட.. வயது வித்தியாசத்தையும் தாண்டி அவர்களுக்குள் ஒரு ஆழமான நட்பு உருவானது.. லட்சுமி, மிருதுவிற்கு ஒரு தாயாகவே இருந்தார்… கணவர் இறந்த பிறகு தன் பிள்ளைகளை.. பிள்ளை இல்லாத தன் தங்கையின் பொறுப்பில் விட்டு விட்டு.. முழுவதும் தன்னை மருத்துவத்துறையில் அமர்த்தி கொண்டார் லட்சுமி…”

“மிருதுளா தான் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்த லட்சுமியை பார்த்த பார்வையில் அத்தனை ஏக்கம், எதிர்பார்ப்பு, வேதனை, வலியென்று அனைத்து உணர்வுகளும் கலந்திருந்தது.. லட்சுமியும் அதை கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.. மருந்தை போட்டு விட்டு உடம்பை பாத்துக்கே மிருதுளா என்றவர் அறையை விட்டு வெளியே செல்ல.. மிருதுளா லட்சுமியின் கையை பிடித்தவள்.. என்கிட்ட சொல்ல வேறென்னும் இல்லையா ஆன்ட்டி என்று ஏக்கத்தோடும், வலி கலந்தும் வந்த மிருதுவின் குரலில் லட்சுமியும் கண்கலங்கி விட.. திரும்பி அவளை பார்த்தவர்.. சாரி மிருது உன் வாழ்க்கையின் எல்லா முடிவும் நீ எடுத்த முடிவு தான் ஃ.. அதோட லாப நஷ்டதையும், விளைவுகளையும் நீதான் அனுபவிக்கனும்.. இப்ப நீ என்கிட்ட என்ன ஏதிர்பார்குறேன்னு எனக்கு தெரியும்.. ஆன அத நான் சொல்ல மாட்டேன்.. சொல்லவும் முடியாது அது உனக்கே தெரியும்.. அப்ப நான் சொன்னதை நீ கேக்கல, இப்ப நீ சொல்றதை என்னால் கேக்க முடியாது.. ஐம் சாரி மா என்றவர் அங்கிருந்து சென்றுவிட.. மிருது மனதில் சொல்ல முடியாத வேதனை.. இவர்கள் பேசிய அனைத்தையும் வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த தனுவிற்கு மனதில் பெரும் குழப்பம்.. இந்த குழப்பத்திற்கு லட்சுமியிடம் மட்டுமே விடை கிடைக்கும் என்று எண்ணி லட்சுமியின் அறைக்கு சென்றாள்.. அங்கு அவளுக்காக காத்திருக்கும் விதியின் விளையாட்டை அறியாமல்..”

” லட்சுமியின் அறையில் இருந்து வெளியே வந்த தனுவிற்கு மிருதுளாவின் கடந்தகாலம் பற்றி தெரிந்தது நிலத்தில் இடி விழுந்த உணர்வென்றால், அடுத்து லட்சுமி யாரென்று தெரிந்த பிறகு நிலத்தில் விழுந்த இடி அவள் தலையில் விழுந்த உணர்வு.. அந்த அதிர்ச்சியிலேயே அப்படியே மிருது இருந்த அறைக்கு வந்த தனு, கண்மூடி அமைதியாக படுத்திருந்த மிருதுளாவை உணர்சிதுடைத்த பார்வை பார்த்தாள்.. ஏனோ இன்று மிருது அவளுக்கு புதிதாக தெரிந்தாள்.. இந்த சின்ன வயசுல அவளுக்குதான் எவ்வளவு கஷ்டம்.. இத்தனை வருஷம் தான் பார்த்து வந்த மிருதுளாவிற்கும் இன்று தான் பார்க்கும் மிருதுளாவிற்கும் நிறைய மாற்றம் இருந்தது.. உயிர் தோழியாய், எந்தவித ஒளிமறைவும் இல்லாமல் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் தன் மிருது, அவள் வாழ்க்கையில் நடந்த இவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை காலமும் தன்னிடம் மறைத்து இருக்கிறாள் என்று ஒரு பக்கம் கோபம் வந்தாளும், அடுத்த நிமிடம் நீ மட்டும் ரொம்ப ஒழுங்க, மிருதுளாவிடம் நீ எதையும் மறைச்சது இல்லையா என்று தன் மனசாட்சி தன்னிடம் கேட்ட கேள்வியில் வாயை மூடிக்கொண்டாள்.. மிருதுவின் கடந்தகாலம் முழுவதும் தன் பெற்றோருக்கும் தெரியும், ஆனால் இதுவரை அவர்கள் தன்னிடம் இது பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னவில்லை என்பது ஒருபுறம் அவளை குழப்ப.. ஏன் இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னிடம் சொல்லாமல் இருந்தனர்.. ஒருவேளை இதெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் மிருதுளாவின் வாழ்க்கையை அப்பவே சரி பண்ணி இருக்கலாமே என்று ஆதங்கம் ஒருபுறம்.. மிருது எடுத்த முடிவில் தனுவிற்கு வருத்தம் தான்.. என்ன சொல்லியும் அவள் செயலை நியாப்படுத்த முடியாத தான்.. ஆனால் அவளை இவ்வளவு பெரிய காரியத்தை துணிந்து செய்யும் அளவு கஷ்டப்படுத்திய மிருதுவின் அம்மா கவிதாவையும், அஜய், அனிதாவையும் நினைத்த தனுவிற்கு கொலைவெறி வந்தது.. இப்ப மட்டும் கவிதா, தனு கண்ணுக்கு முன்னாடி இருந்து இருந்த கவிதா சிக்கன் 65 தான்.. லட்சுமி சொன்னா அனைத்தையும் நினைத்து கொண்டிருந்த தனு, மிருதுவை திரும்பி பார்க்க அவள் கண் விழித்திருந்தாள்..”

“மிருது அருகில் ஒடிய தனு.. இப்ப எப்படி டா இருக்கு, இப்ப ஓகே வா என்று அவள் தலையை தடவியபடி கேட்க.. தோழியின் அன்பில் மகிழ்ந்தவள்.. இல்ல டா இப்ப வலி இல்ல.. ஐ ஆம் ஓகே என்றவள்.. தனுவிடம் தயங்கி தயங்கி லட்சுமி ஆன்ட்டி என்று இழுக்க.?? அவள் என்ன கேட்க வருகிறாள் என்று புரிந்த தனு.. ஆன்ட்டி கிளம்பிட்டாங்க மிருது.. இங்க ஒரு கான்ஃபரன்ஸ்காக தான் வந்தாங்கலாம்.. இங்க ஒரு டாக்டரை மீட் பண்ண வந்திருக்காங்க.. நாம வந்தப்ப வேற டாக்டர் யாரும் இங்க இல்ல போல அதன்.. அவங்க உன்ன அட்டென் பண்ணாங்க.. அவங்களுக்கு ப்ளைட்டுக்கு டைம் ஆச்சுன்னு உடனே கிளம்பிட்டாங்க என்று சொல்ல.. ஒரு பக்கம் லட்சுமிஆன்ட்டி எதுவும் சொல்லாமல் சென்றது கஷ்டமாக இருந்தாலும்.. தன்னை பற்றி எதையும் தனுவிடம் சொல்லவில்லை என்ற நினைவு நிம்மதியை தந்தது.. (ஆனால் லட்சுமி அனைத்து உண்மைகளையும் தனுவிடம் சொன்னது மிருதுளாவிற்கு தெரியவில்லை பாவம்..) தனுவிற்கு மிருதுவின் மனம் புரிய.. அவள் மன நிம்மதிக்காக லட்சுமி அனைத்து உண்மைகளையும் அவளிடம் சொன்ன விஷயத்தை மிருதுவிடம் மறைத்தவள்.. இனி உன்னோட வாழ்க்கையை சரி பண்றது தான் டி என் முதல் வேலை என்று உறுதி எடுத்தாள்..”

“மிருதுவின் காலில் போட்டிருந்த கட்டை மெதுவாக தடவி பார்த்தவள்.. “ஏய் மிருது உன் கால்ல கட்டை பாக்கும்போது.. நம்ம காலேஜ் டைம்மில் இதே மாதிரி உன்னோட கால்ல அடிபட்டீருந்தப்பா ஷரவன் அண்ணா பண்ண கூத்து உனக்கு ஞாபகம் இருக்காடி என்ற தனுவின் வார்த்தைகளில் உண்மையில் மிருது அதிர்ந்துவிட்டாள்.. தனு சொன்னது சரியாக தான் தன் காதில் விழுந்தத என்ற சந்தேகம் கூட வந்தது.. ஷரவனும், மிருதுளாவும் பிரிந்த இவ்வளவு நாளில் தனு தவறி கூட ஷரவன் பெயரை மிருதுளா முன்பு சொன்னதில்லை.. இன்று அவள் ஷரவனை பற்றி பேசியது மட்டுமில்லாமல் ஷரவனை மறுபடியும் அண்ணா என்றழைப்பது அவளுக்கு சுத்தமாக விளங்கவில்லை.. தன்னையே வெறித்து பார்த்து கொண்டிருந்த மிருதுவின் பார்வை அவள் மன ஓட்டத்தை சொல்ல.. அத கண்டும் காணமல் தனு பேசிக்கொண்டே இருக்க.. மிருதுவுக்கும் அந்த நாள் நினைவு வந்தது.. தன் காலில் ஒரு சின்ன அடிபட்டதற்கு அன்று ஷரவன் பதறியதும், துடியாய் துடித்தது அவள் கண்முன் வர.. விழிமூடி அந்த நாட்களில் பக்கங்களை தன்
நினைவடுக்கள் தேட தொடங்கினாள். அதேநேரம் தனுவும் அந்த நாட்களை தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கும் நிலவனுக்குமான கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு முடிவுக்கு வந்து இருவரும் ஒரு அழகிய காதல் உறவில் இணைந்த காலம் அது..

“அழகாக காதல், ஆழமான நட்பு என்று ஒரு பக்கம், மாணவர்களின் அடிதடி சண்டை, கலாட்டா ஒரு பக்கம் என்று காலேஜ் லைப் கலைகட்டியது.. ஷரவன் மிருதுவின் நிழல்போல் மித்து மித்து என்று சுற்றிக் கொண்டிருந்தாலும், அவனுடைய காதல் மித்து படிப்பையும், தன் படிப்பையும் எந்த வகையிலும் பதிக்காமல் பார்த்துக் கொண்டான்.. மிருதுவும், தனுவும் ஹாஸ்டலில் இருந்ததை விட சிந்து வீட்டில் இருந்த நேரம் தான் அதிகம்.. முக்கியமாக எக்ஸாம் டைமில் முழு நேரமும் சிந்து வீடே கதி என்று இருப்பார்.. எப்போதும் எக்ஸாம் டைமில் ஷரவன் தான் சிந்துவிற்கு டீச்சர்.. இப்போது மித்துவும், தனுவும் அந்த லிஸ்டில் சேர்ந்து கொண்டனர்..

” முதலில் ஷரவனிடம் படிக்க மித்து தயங்கினாள்.. எங்கே ஷரவன் தான் சேட்டையை இங்கையும் தொடர்வானோ என்று பயந்தாள்.. ஆனால் மற்ற நேரங்களில் மித்துவை பார்க்கும் ஷரவனுக்கும், படிப்பு சொல்லி தரும்போது இருக்கும் ஷரவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.. எப்போது மித்துவை கொஞ்சி, சீண்டி, சேட்டை செய்யும் அவன்.. படிக்கும் சமயங்களில் அவனின் பார்வையில் கூட தவறிருக்காது.. ஷரவன் படிப்பில் செம்ம ஷார்ப்.. ஸ்கூல் இருந்து காலேஜ் வரை படிப்பு, ஸ்போர்ட்ஸ் என்று அனைத்திலும் ஷரவன் தான் பஸ்ட் என்று தெரிய மித்துவுக்கு பெரிய ஷாக்.. அவனின் இந்த முகம் மித்துவுக்கு மிகவும் புதிது..”

“தனு வந்ததும் கெமிக்கல் ரியாக்ஷன் நிலவனும் நல்ல பிள்ளை போல் இவர்களுடன் படிக்க வந்துவிட, (டேய் நீ படிக்க தான் அங்க வந்த..?? இத நாங்க நம்பணும்.. ம்ம்ம்ம் எல்லாம் காலக் கொடுமை டா சாமி..) விஷ்வாவும், பிரேம், பரத்தும் கூட இந்த குரூப் ஸ்டடியில் சேர்த்து கொண்டனர்.. படிக்கும் நேரம் போக மத்த நேரத்தில் இவங்க செய்யும் சேட்டையில் வீடே அதகளப்படும்.. நிலவனின் அம்மாவும் இதை பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை.. ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அன்பு மட்டுமே ஆதாரம் என்று உருவான இவர்கள் உறவில் அவருக்கு பெருமை தான்.. இளையவர்களும் தங்களின் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல், அவர்களின் எல்லை புரிந்து நடந்து கொண்டனர்..”

“நாட்கள் வேகமாக நகர அந்த காலேஜின் கல்சுரல்ஸ் நெருங்கி வந்தது.. இதில் பல்வேறு கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்வதுண்டு.. ஷரவன் வருஷ வருஷம் டான்ஸ் கம்படிஷனில் கலந்து கொள்வது வழக்கம்…”

நிலவன் ” டேய் மச்சி நம்ம காலேஜ் கல்சுரல்ஸ் வருது டா.. வழக்கம்போல இந்த வருஷமும் நீ சோலோ டான்ஸ் பண்ணப்போறா தானே என்று கேட்க.. அவனை மூக்கு முட்ட முறைத்த ஷரவன்.. போ டா டேய்.. போய் ஆசிட் ஊத்தி வாய கழுவு டா.. நான் ஏன் டா தனிய ஆடணும்.. கண்ணுக்கு அழகா, கைக்கு அடக்கமா, கொழு கொழுன்னு என் மித்து பேபி இருக்கும் போது தனியா ஆட நான் என்ன லூசா.. இந்த வருஷம் நானும் என் மித்துகுட்டியும் சேர்ந்து ஆடப்போறோம்.. நாங்க ஆடப்போற ஆட்டத்தை பாத்து அத்தனை பேரும் தெறிச்சு ஓடப்போறாங்க பாரு என்று கெத்தாக சொல்ல..”

“ஏன் டா கூட்டத்துல பாம்பு எதும் விடப் போறீயா என்ன..?? எல்லாரும் தெறிச்சு ஓட என்று விஷ்வா சொல்லி முடிக்கும் முன் ஷரவன் விட்ட உதையில் கீழே விழுந்து கிடந்தவன்.. அய்யோ…. அம்மா…. என்று இடுப்பை பிடித்துக்கொண்டு ஏன்டா எரும என்ன ஏத்துனா என்று கடுப்பாக கேட்க..??”

ஷரவன் “ம்ம்ம்ம் வேண்டுதல்.. பரதேசி.. நா எவ்ளோ பீலிங்கா மித்து கூட ஆடப்போறேன்னு சந்தோஷமா சொல்லிடு இருக்கேன்.. நீ என்னான்ன காலய்ச்சுட்டா இருக்க என்று இன்னொரு மிதி மிதிக்க..”

“டேய் டேய் போதும் டா.. அவனை விடு.. நீ மிதிச்ச மிதியில அவன் இப்பவே பேரழகன் சூர்யா மாதிரி வளஞ்சிட்டான்.. மறுபடியும் மிதிச்ச அவ்ளோ தான்.. அப்புறம் சிந்து தான் இவனை கட்டிக்கிட்டு கஷ்டப்படனும் என்று விஷ்வாவுக்கு கை கொடுத்து தூக்கி விட.. தேங்க் யூ டா மச்சான்.. மலையேற மச்சான் தயவு வேணும்னு சொல்லுவாங்க அத நீ நிருபிச்சிட்ட டா வாழ்க என் மச்சான் என்று சொல்ல.. அவன் தலையில் நங்கென கொட்டிய நிலவன்.. டேய் பேச்சை குறை டா.. வாய இது வாய்க்கால் அளவு நீலுது.. வாய் மட்டும் இல்ல உன்னயெல்லாம் நாய் கவ்விட்டு போய்டும்.. மூடிட்டு போ டா.. மறுபடி அவன்ட்ட மிதி வாங்காத என்றவன்.. ஷரவனிடம் திரும்பி ஏன் டா நீ பாட்டுக்கு அமுல்பேபி கூட ஆடபோறேன்னு சொல்லிட்ட..?? அதுக்கு அவ ஒத்துக்கணுமே.. முதல்ல அவளுக்கு ஆட தெரியுமான்னு உனக்கு தெரியுமா டா.??”

ஷரவன் ” அதெல்லாம் அவளுக்கு நல்லவே ஆடத் தெரியும்.. அவ ஸ்கூல்ல எந்த பங்ஷன்னாலும் இவளும் தனுவும் தான் ஆடுவாங்க..!! மித்துக்கு சுப்பரா ஆட வருமாம்..

நிலவன் ” அது உனக்கு எப்புடி டா தெரியும்.?? அமுல்பேபி சொல்லுச்சா..??”

“ம்க்கும் அவ சொல்லிட்டாலும்.. அப்படியே மேகம் பொத்துக்கிட்டு ஊத்தி மூப்போகம் வெளஞ்சிடும்.. அடா போடா.. அவ ஒன்னும் சொல்லல தனு தான் சொன்னா..

நிலவன் “ஓஓஓ.. சரி டா மிருதுக்கு ஆட தெரியும் ஓகே.. ஆனா அது உன் கூட ஆட ஒத்துக்கணுமே..?? அது தான் உன்ன பார்த்தாலே தெறிச்சு ஓடுமே..?? அப்புறம் எப்புடி??”

“மிளகாதூள் ஆடாது, ஆட மாட்ட.. அது நடக்காது, நடக்க முடியாது, நடக்க வாய்ப்பே இல்ல என்று சொன்ன விஷ்வா, ஷரவன் திரும்பி மிதிக்கும் முன் மின்னலாய் ஓடி மறைந்து விட..”

“பயபுள்ளைக்கு சேட்டையை பாத்திய டா.. கையில மாட்டுவன் இல்ல, அப்ப கவனிச்சுக்குறேன் என்று ஷரவன் சட்டை கையை முறுக்கி மேலே ஏற்றி விட..”

நிலவன் “அவன் சொன்னதுல என்ன டா தப்பு இருக்கு.?? மிருது கண்டிப்பா உன் கூட ஆட ஒத்துக்கவே மாட்ட..?? அது உனக்கே தெரியும்..”

ஷரவன் “ம்ம்ம்ம் அதுவும் உண்மை தான்.. ஒழுங்க சொன்னா அவ கேக்க மாட்ட.. வழக்கம் போல உருட்டி மிரட்டி தான் அவளா ஒத்துக்கவைக்கணும்.. ” டேய் ஏன் டா..?? எப்ப பாரு அந்த புள்ளையை மெரட்டிட்டு.. கொஞ்சம் அன்பா முயற்சி பண்ணி தான் பாரேன்..”

“ஆமா அன்பா மூவ் பண்ணிட்டாலும் என்று பெரு மூச்சு விட்டவன்.. நான் என்னதான் அன்பா நடந்துக்கிட்டாலும் அவளுக்கு அது புரியாது டா என்ற ஷரவன் இயலாமையோடு நிலவனை பார்க்க..”

” என்ன டா.?? ஏன் அப்படி சொல்ற?? என்று கேட்ட நிலவனை வலியோடு பார்த்த ஷரவன்.. ஆமா டா அது தான் உண்மை.. உனக்கு மித்து பத்தி முழுசா தெரியாது டா.. அவ ரொம்ப பாவம்.. அன்பு , பாசம்னா என்னான்னு தெரியாமலே வளர்ந்தவா டா என் மித்து என்று மித்துவை பற்றி அவ குடும்பத்தை பற்றி தான் தெரிந்துகொண்ட அனைத்தையும் சொல்லிய ஷரவன்.. பாவம் டா அவ.. பெத்தவாங்க, கூட பொறந்தவாங்கன்னு எல்லாரும் இருந்தும்.. அனாதை மாதிரி வளர்ந்து இருக்க டா.. அவளுக்கு இருக்க ஒரே ஆறுதல் தனுவும், அவ அம்மா, அப்பாவும் தான்.. பெத்தவாங்க அன்பு இல்லாம வளர்ந்தாலேயே என்னமே.. அவளுக்கு அன்பு , பாசம்ன்னா என்னன்னே தெரியல.. நான் அவகிட்ட காட்டுற அன்பை கூட அவளால உணர முடியல.. அவளுக்கு நான் காட்டுற பாசத்துக்கு அவமேல நான் வச்சிருக்க காதல் மட்டும் தான் காரணம்னு நெனச்சிட்டீருக்க என்று சொல்லும் போதே ஷரவனின் குரல் கம்மி விட்டது.. அவனை தோளோடு சேர்த்து நிலவன் அணைத்து ஆறுதல் படுத்த.. “பாவம் டா அவ உண்மையான அன்பை கூட புரிஞ்சிக்க முடியாத அவ மனசு வரண்டு போய் இருக்கு டா… என்றவன் கண்கள் கலங்கிவிட.. நிலவனுக்கும் கூட மனம் கணத்துவிட்டது.. இவ்வளவு ஏன் டா.!! உன் பார்த்தவுடனே அவ அண்ணா அண்ணான்னு உன்கிட்ட ஒட்டிக்கிட்டதுக்கு காரணம் கூட.. அவ தம்பி, தங்கச்சிகிட்ட அவ எதிர்பார்த்த, “உனக்கு நான் இருக்கேன்” என்ற உணர்வை உன்கிட்ட பார்த்தால தான்.. அவ உன்ன பார்த்த முதல் நாளே நீ அவளுக்கு அத கொடுத்தே என்ற ஷரவனின் வார்த்தை நிலவனை குழப்ப.. ஷரவன் மென்மையாக சிரித்தவன் .. நீ அவளை முதல்ல பார்த்த அன்னைக்கு அவ லேசா முகம் வடினாதும்.. அதை தாங்க முடியாமல் அவளை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டியே அது தான் டா.. அந்த அக்கறை தான் அவ உன்கிட்ட இவ்வளவு பாசமா இருக்க காரணம்.. அவ மனசு அன்புக்கு ஏங்குது.. ஆனா ஏன்னு தெரியல என்னோட அன்பையும், காதலையும் மட்டும் புரிஞ்சிக்க விடாமல் ஏதோ ஒன்னு அவளை தடுக்குது.. அது ஏன்னு எனக்கும் புரியல என்று தன்னிலை நினைத்து வருந்த..

நிலவன் “விடு டா சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் மிருது சீக்கிரம் உன்னை புரிஞ்சிக்குவ டா என்ற நிலவன் வார்த்தை பலிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஷரவன் செல்ல நிலவனும் அங்கிருந்து கிளம்பினான்..

“மறுநாள் மிருதுவிடம் டான்ஸ் பத்தி பேசா ஷரவனும், நிலவனும் மிருது க்ளாஸ் ரூமுக்கு வர.. அங்கே மிருது, சிந்து, தனு மற்றும் இன்னும் இரு ப்ரண்ட்ஸ்யுடன் சேர்த்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க.. ஷரவன் என்ற தன் பேர் அங்கு அடிபடவும் க்ளாஸ் ரூம் வாசலிலேயே நின்று அவர்கள் பேசுவதை கவனித்தனர் ஷரவனும், நிலவனும்..”

“சிந்து அவள் ஸ்கூல் படிக்கும் போது தன்னிடம் வம்பு பண்ண ஒரு பையனை நடுரோட்டில் புரட்டி எடுத்ததை பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க.. தனுவும் தன் பங்கிற்கு அவள் ஸ்கூல் லைப் பத்தி சொன்னவள்.. ஒருமுறை எங்க ப்ரண்ட்டு ஒருத்தியை பக்கத்து க்ளாஸ் பையன் கிண்டல் பண்ணான்.. நானும் மிருதுவும் அவன் க்ளாஸ்சுக்கே போய் அவனை உண்டு இல்லன்னு பண்ணிட்டு வந்துட்டோம்.. அன்னைக்கு இருந்து நாங்க ரெண்டு பேர் இருக்கும் திசை பக்கம் கூட ஒரு பையா வரமாட்டான்.. எங்களை பாத்தாலே தெறிச்சு ஒடுவனுங்க என்று கெத்தாக சொல்ல..

“இங்கு நிலவன்.. இங்க பாரு டா..!! இந்த அப்ராணி புள்ளை கூட ஒரு காலத்துல டான்ஆஆஆ இருந்திருக்கும் போலயே.. ம்ம்ம்ம் இந்த புள்ளைகுள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்.. “ஆனா ஷரவன் எதுக்கும் நீ கொஞ்சம் உஷாரா இரு.. ஏன்னா நீ காதலிக்கிறது ஒரு லேடி டானை என்று ஷரவனை ஓட்ட.. ஏன் டா நீ வேற.. அவளை போய் டான் அது இதுன்னிட்டு.. அவ நம்ம வடிவேலு சொல்வரே நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான்னு.. என் மித்து அந்த மாதிரி டா.. இதுக்கு நீ தனுவை சொன்னாலும் தகும்.. சரியான சண்டகோழி.. அவளுக்கு வாய் மட்டுமே காதுவரை இருக்கு.. அவளுக்கு வரப்போறவனை நெனச்ச தான் நெஞ்சு பதறுது பாவம் அந்த அப்பாவி ஜீவன் என்று சொல்.. நிலவன் பார்வை தனு மேல் விழ அவன் மனசாட்சியும் அதையே தான் சொன்னது பாவம் இந்த நிலவன்.. அப்பாவி ஜீவன்.. நிலவா உன் எதிர்காலம் உஉஊஊஊ…”

“தனு சொன்னதை கேட்ட சிந்து.. யாரு இவ… இவ.… இவளுக்கு… பயந்து பசங்க ஓடுனங்க என்று வாய்விட்டு சிரத்தவள்.. ஏன் டி.. சும்மா காமெடி பண்ணிட்டு என்று திரும்பி தனுவை பார்த்தவள்.. உன்ன சொல்லு ஓகே நான் ஒத்துக்குறேன்.. உன்ன பார்த்த எங்கண்ணனே ஒரு நிமிஷம் ஜெர்க்கவான்.. நீ ஒரு ராவான ரவுடின்னு நான் ஒத்துக்குறேன்.. ஆனா மிருதுவுக்கு இவ்வளவு பில்டப் ஆகாது டி இவ ஒரு காமெடி பீஸ் டி என்க.. மிருது மூக்கில் புகைவரும் அளவு சிந்துவை முறைத்தவள்.. “ஏய் யாரா பார்த்து காமெடி பீஸ்னு சொன்னா என்று கத்த.. ஏன் டி காது ரெண்டும் ஆவுட் டா.. உன்ன தான் டி சொன்னேன்..”

மிருது “ஏய் வேணாம் டி என் கோபத்தை கெளறாத அப்புறம் நீ என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும் என்று பல்லை கடிக்க..”

சிந்து “அசல்ட்டாய் எங்க அந்த இன்னொரு முகத்தை காட்டு அந்த முகமச்சு பயப்படுற மாதிரி இருக்கான்னு பாப்போம் என்று மீண்டும் அவள் காலை வார.. மிருது கொலைவெறியுடன் சிந்துவை முறைக்க.. ஹலோ என்னடி மொறைப்பு.. இல்ல என்ன மொறைப்புன்னு கேக்குறேன்.. “சரி டி நீ தைரியசாலின்னு நான் ஒத்துக்குறேன்.. நீ பெண்புலி தான்.. ஆனா இந்த பெண்புலி என்னோட ஷரவன் மாம்ஸ் பக்கத்துல வரும்போது மட்டும் மியாவ் மியாவ்னு ஆகிடுதே அதென்ன மேட்டர் டி என்று மிருதுவின் வீக் பய்ன்ட்டில் கை வைக்க..”

“மிருது உள்ளே ச்சே.?? பயபுள்ள கரெக்டா நம்ம வீக் பய்ன்ட் பாத்து அடிக்குதே.. எல்லாம் அந்த கடுவம்பூணையால வந்தது ச்சே என்று சலித்துக் கொண்டவள்.. மிருது இவளுங்க முன்னாடி கெத்த விட்றத.. சமாளி சமாளி என்று தனக்கு தானே சொல்லிக்க கொண்டவள்.. “ஏய் யாரு உன் மாம்ஸை பாத்து பயந்தது.. நானெல்லாம் யாரை பார்த்தும் பயப்பட மட்டேன்.. என்ன பத்தி உனக்கு தெரியாது.. நீ வேணும்ன பாரு இன்னொரு முறை உன்றா மாமன். என்கிட்ட எதாவது சேட்டை பண்ணட்டும் அப்ப இருக்கு அந்த கடுவம்பூணைக்கு சில்லு சில்ல பிரிச்சுடுறேன் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்க ஷரவன் மெதுவாக க்ளாஸ் ரூம் உள்ளே வர தனுவும், சிந்துவும் அவனை பார்த்துவிட, ஷரவன் வாய்மேல் கை வைத்து அமைதியாக இருக்கும்படி செய்கை செய்ய இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாகி விட.. மிருதுளா அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்து இருந்ததால் அவளுக்கு ஷரவன் வந்தது தெரியவில்லை.. அவள் பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி ஷரவன் தீட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள்.. தனு மிருதுவை உஷார் படுத்த எவ்வளவு முயன்றும் மிருது அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தவள் முன் வந்த ஷரவன் கைகாட்டி, புருவத்தை தூக்கி ஒரு மாதிரி மிருதுளாவை கூர்ந்து பார்த்துக்கொண்டு நிற்க.. மிருது திறந்த வாய்முடாமல்.. கண் இமைகள் மட்டும் நொடிக்கு நூறுமுறை துடித்துக் கொண்டிருந்தது..

“ஸ்டைலாக கைகாட்டி, அனைவரையும் காந்தம் போல் ஈர்க்கும் தான் விழிகள் இரண்டையும் மிருதுளா மேல் மையமிட்டு நங்கூரம் போட்டு நிருத்தியவன் மூடிய இதழ்களில் கூட புன்னகை தவழ.. விழி இமைக்காமல் நடுங்கும் அவளின் இதழ்களையும், தப்பு செய்து மாட்டிக் கொண்ட குழந்தையின் பயத்தை அவள் கண்களிளும் கண்டவன்.. மீண்டும் ஒருமுறை தன்னை முழுவதும் அவளிடம் தொலைத்தான்…”

“சிந்து தோழிகளை பார்த்து சிக்னல் செய்ய.. அவர்களும் மிருதுளாவை தனியாக விட்டு எஸ்ஸாகினர்..”

“இங்கு மிருதுளாவிற்கு இதயம் மேலே ஏறி வாய்வழியாக வந்துவிட்டும் போல் இருந்தது.. ஐய்யோ கடவுளே இவன் எப்பா இங்க வந்தான்.. நாம பேசினது எல்லாம் கேட்டிருப்பனோ.. ஐய்யோ இப்ப என்ன பண்றது என்று எதிரே பார்க்க தனுவும், சிந்துவும் மிஸ்சிங்.. அடிப்பாவிகளா கூட தானே இருந்தளுங்க.?? தீடிர்னு எங்க மறஞ்சு போச்சுங்கா.. அய்யோ போனது போச்சுங்கா என்னையும் இழுத்துட்டு போய் இருக்கக்கூடாது.. இப்படி சோலோவ விட்டு போய்டுச்சுங்களே இப்ப என்ன செய்ய.. கடவுளே காலையிலையே தனு சொன்ன இன்னைக்கு உனக்கு சந்திராஷ்டமம்.. உன் நாக்கை பூட்டு போட்டு பூட்டிவைன்னு.. நா கேட்டனா.. அதுக்கு தான் இப்ப அனுபவிக்கிறேன் என்று புலம்பியவள்.. அங்கிருந்து ஓட பார்க்க முடியவில்லை.. அவளின் வாழைத்தண்டு கை ஷரவனின் இரும்பு பிடியில் சிக்கி இருந்தது.. ஷரவன் மிருதுளா கையை இழுக்க.. அந்த இழுப்பில் தடுமாறியவள் அவன் மார்பின் மீதே மோதி தஞ்சம் புகுந்தாள்.. ஷரவன் நெஞ்சுக்குள் லட்சம் பட்டாம்பூச்சிகள் ரெக்கை விரித்து பறந்தது.. இதுவரை அவளிடம் செல்ல சேட்டைகள், சின்ன சின்ன சீண்டல்கள் செய்திருக்கிறனே தவிர.. ஒருமுறை கூட மிருதுளாவிடம் ஷரவன் அத்துமீறி நடந்ததில்லை.. இருவரும் தனியாக இருக்கும் நேரத்தில் கூட அவன் அன்பை மட்டும் தான் அவளிடம் பொழிவன் .. அன்பு , காதல் தாண்டி அவன் கண்களில் ஒரு சதவீதம் கூட காமம் இருக்காது.. ஒரு குழந்தையை போல் தான் மிருதுளாவை தாங்குவான்.. ஆனால் இன்று மலர்கொத்தாய் தன் மீது மோதி நிற்கும் தன்
கண்ணுக்கினியாளை பார்த்தவன் கண்களிள் காதலையும் தாண்டி வேறொரு உணர்வு… ஒரு ஆணுக்கு பிடிந்த பொண்ணிடம் மட்டுமே ஏற்படும் இயல்பான உணர்வு.. அந்த நிமிடம் ஷரவன் அந்த உணர்வுக்கு கட்டுபட்டு மிருதுளாவை இடையோடு சேர்த்து இறுக்கி காற்று கூட நுழைய முடியாதபடி அணைத்துக் கொண்டான்.. மிருதுளாவுக்கு அங்க என்ன நடக்கிறது என்று புரியாவே சில நிமிடங்கள் ஆனது.. ஷரவனின் அணைப்பு மேலும் மேலும் இறுக.. பொண்ணவளின் தேகம் அந்த அணைப்பில் வலி தாங்காமல் நெளிய.. அவள் இதயம் வேகமாக துடிப்பது ஷரவனுக்கு நன்றாக கேட்டது.. தன் பிடியை தளர்த்தியவன்.. அவள் காதின் அருகில் சென்று இந்த வருஷ கல்சுரல்ஸில் நீ என்னோட டான்ஸ் பண்ற.. நாளைக்கு காலையில ரிகர்சலுக்கு வந்துடு என்று சொல்ல.. அவளின் ஸ்பரிசம் தந்த மயக்கத்தில் கிறக்கி நின்றவன் குரல் அவனுக்கே கேட்டிருக்குமா என்பது டவுட்டு தான்.. இதற்கு மேல் இங்கிருந்தால் சரிபட்டு வராது ஷரவன், கிளம்பு முதல்ல என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவன்.. வெளியே போக நகர்ந்தவன் ஒரு நிமிடம் திரும்பி மிருதுளாவை பார்த்து.. நீ எப்படி என்ன மாமான்னு கூப்பிடுவ.?? என்று ஏக்கமாக கேட்க.. அவன் அணைப்பில் தன்னை மறந்திருந்தவள் அந்த வார்த்தை உணர்வு வந்து ஷரவனை நிமிர்ந்து பார்க்க.. அவன் கண்களில் இதுநாள் வரை பார்க்காத ஏதோ ஒன்று அவளை தாக்கியது.. பட்டென தலை குனிந்து கொண்டாள்..

ஷரவன், ” ம்ம்ம்ம் தலையை தொங்கபோட்டுட்டா இனி ஒன்னும் வேலைக்ககாகது என்று நினைத்தவன் அவள் அசந்த நேரம் அவள் பட்டு கன்னத்தில் தன் முத்தத்தை பதித்தவன் வெளியே சென்றுவிட..”

“மிருதுளா பொத்தென இருக்கையில் அமர்ந்து விட்டாள்.. ஷரவனோடு பழகிய இத்தனை நாட்களில் ஒரு நாளும் அவன் இப்படி நடந்ததில்லை.. அதோடு எப்போதும் என்ன மாமா கூப்பிடு டி என்று மித்துவிடம் வம்பிழுப்பான் ஆனால் மித்து முடியவே முடியாது, சொல்லமாட்டேன் என்று ஒரே ஓட்டமாக ஓடிவிடுவாள்.. ஆனால் இன்று அவன் எப்போ டி என்னை மாமான்னு கூப்பிவ என்று கேட்ட போது.. இதுவரை போல் இல்லாமல் இன்று அந்த வார்த்தைகள் அவளுக்குள் என்னவோ செய்தது.. அது அவன் கண்ணில் தெரிந்த ஏக்கமா, இல்லை கூழாங்கலை உரசி வரும் தென்றல்போல் மென்மையாக வந்த அவன் குரலா, இல்லை அவன் ஸ்பரிசம் தந்த குறுகுறுப்ப, இல்லை அவன் முத்தமா எதுவென்று அவளுக்கு புரியவில்லை.. ஆனால் அவளை உள்ளுக்குள் ஏதோ செய்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!