என் தீராத காதல் நீயே 9

என் தீராத காதல் நீயே 9

“அழகாக காலைப் பொழுதில் கண்விழித்த ஷரவனின் மனது இன்று மிகுந்த உற்சாகத்தில் துள்ளிகுதித்தது.. மித்துவுடன் இனைந்து ஆடப்போவதை நினைத்து நெஞ்சில் பட்டாம்பூச்சி பறக்க.. சீக்கிரம் எழுந்து குளித்து ரெடியாகி காலேஜ் வந்தான்.. பாவம் அவன் கெட்ட நேரம் காலேஜ் வாசலில் நின்றது அவன் நண்பர்கள் உருவில்..”

பரத் “டேய் கொஞ்ச நாள் முந்தி இங்க ஷரவன்னு ஒரு மனஸ்தான் இருந்தானே உனக்கு தெரியுமா?? என்று நக்கலாக விஷ்வாவை பாரத்து கேட்க.”

விஷ்வா ” யாரு டா.?? ஓஓஓ இங்க கெத்த.. நா எந்த பொண்ணுக்கிட்டையும் விழமாட்டேன்.. நான் மொரட்டு சிங்கிள்னு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தானே அவனை தானே சொல்ற என்று விஷ்வா பங்கிற்கு எடுத்து குடுக்க..”

பரத் ” ஆமா டா அவனே தான்..பாவம் எப்புடி இருந்தவன்.. இன்னைக்கு எப்புடி ஆகிட்டான் தெரியுமா..?? என்று ஷரவனை ஒரு குறும்பு பார்வை பார்த்தவன்..”

“ஏன் டா என்ன ஆச்சு என்று?? விஷ்வா அடுத்த பீட்டை போட..”

பரத் “அத ஏன்டா கேக்குற.. பாவம் நல்ல இருந்த புள்ள ஒரு அமுல்பேபி பார்த்த பார்வையிலேயே பொத்துனு விழுந்துட்டான்.. விழுந்த நாள்ல இருந்து பய எந்திரிக்கவே இல்ல.. அந்த அமுல்பேபிக்கு வாட்ச்மேனாவே மறிட்டான்.. கெத்தாக இருந்தவன் இப்ப வெத்தாகிட்டான் என்று சிரிக்காமல் சொல்ல.. அங்கிருந்த நிலவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..”

ஷரவன் “டேய் என்னாங்கடா கொழுப்ப?? மகனே வந்தேன்னு வை துக்கிபோட்டு மிதிக்கிற மிதியில இந்த ஜென்மத்துல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமே பண்ணமுடியாதபடி செஞ்சுடுவேன் ஜாக்கிரதை.?!

விஷ்வா “டேய் நீ எங்களை எதுவும் பண்ண.?? நான் நேர போய் என் பாசமலர் மொளகாதூள்கிட்ட உன்ன பத்தி வத்தி வச்சுடுவேன் பாத்துக்க என்று மிரட்ட..”

ஷரவன் “டேய் டேய் ஏன்டா இந்த கொலவெறி.. குதூகலமா இல்லனாலும் ஏதோ குத்துமதிப்ப என் லவ்சு போய்டிருக்கு.. அதுல புந்து கும்மி அடிச்சிட்டு போய்டாதா டா உனக்கு புண்ணியமா போகும் என்று கையெடுத்து கும்மிட..”

“அது..!! அந்த பயமிருக்கட்டும்.. இனி எங்ககிட்ட எதாவது லந்து விட்டேன்னு வை.. அடுத்த நிமிஷம் மிளகாதூள் தான் பேசும் என்று விஷ்வா எச்சரிக்கை விட.. (மகனே இருடா.. மித்து மட்டும் எனக்கு ஓகே சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு உனக்கு ரிவீட்டு.. என் சிந்துகுட்டி கிட்ட சொல்லி உன்ன சல்லி சல்லியா பிரிக்கல என் பேரு ஷரவன் இல்லடா என்று மைண்ட் வாய்ஸ் போட..) விஷ்வா “டேய் எரும அங்க என்ன டா மைண்ட் வாய்ஸ்ச??

“ச்சே ச்சே அதெல்லாம் ஒன்னு இல்ல மச்சி என்று ஷரவன் சமாளிக்க.. டேய் டேய் புழுகாத டா.. நீ என்ன நெனச்சுருப்பேன்னு எனக்கு நல்ல தெரியும்.. என் சிந்து பேபிகிட்ட சொல்லி என்ன சல்லி சல்லியா பிரிக்கிறேன்னு தானே யோச்ச என்று கரெக்டாக சொல்ல..

ஷரவன் ” அதெப்படி டா அவ்வளவு கரெக்ட்டா ஒரு வார்த்த கூட மாறாம அப்டியே நான் நெனச்சைதை சொல்ற.. வாட் டா மிரக்கில்.. எப்புடி டா?? என்று ஷாக் ஆவதுபோல் நடிக்க..

விஷ்வா ” ஆமா பெரிய சிதம்பர ரகசியம்.. மொச புடிக்கிற நாய் மூஞ்ச பார்த்த தெரியாது.. நான் உன் ஆளை வச்சு மிரட்டுனா.. நீ என் ஆளைவச்சு தான்
ரிவெஞ்ச் யோசிப்பே.. இத என்னால கண்டுபுடக்க முடியாது பாரு.. போடா டேய் போடா.. ஷாக்கை கொறச்சிட்டு காலேஜ் வந்த வேலையை போய் பாரு டா.. என்க.. உடனே நிலவன் ஆமா வாங்க வாங்க எல்லாம் க்ளாசுக்கு போய் ஒழுங்க படிப்போம் என்று நல்ல பிள்ளைபோல் முஞ்சை வைத்துக்கொண்டு சொல்ல..”

“விஷ்வா பதறியவன் எதுதுது….. காலேஜ் வந்து படிக்கிறாத.. என் அக்கிரமம் டா இது.. அதெல்லாம் படிக்க இங்க வந்த பசங்களுக்கு டா நமக்கு இல்ல.. இன்னொரு முறை படிப்போனு சொல்லாதே.. அபச்சாரம் அபச்சாரம் வாய்ல அடிச்சுக்கே என்று விஷ்வா பயபக்தியாய் சொல்ல..”

பரத் “டேய் படிக்க இல்லன்னா, அப்ப நாம எதுக்கு டா இங்க வந்தோம்??

“ம்ம்ம்ம் நான் வந்தது என் சிந்துபேபியை சைட் அடிக்க.. இதோ இருக்கானே இந்த நல்லவன் அமுல்பேபியை கரெக்ட் பண்ண வந்தான்..

பரத் ” அப்போ நிலவன்??

விஷ்வா ” ம்ம்ம்ம் இந்த வருஷமாச்சும் அவனோட சிங்கில் ஸ்டேட்டஸை கமிட்டாஆ மாத்த முடியுமான்னு பாக்க வந்திருக்கான்.. (அதெல்லாம் அவன் கமிட் ஆகி ரொம்ப நாள் ஆச்சு பயபுள்ள ஒத்துக்க தான் மாட்டேங்குது.. இருக்கட்டும் இந்த கல்சுரல்ஸில் இவ தனுகூட சேர்த்து வைக்குறேன்.. அதுக்கு இவன் சரிபட்டு வரால.. தனுவுக்கு வேற நல்ல பையான பார்த்து கோர்த்து விடுறேன்.. பாவம் அந்த புள்ளையும் எவ்வளவு நாள் தான் சிங்கிலாவே சுத்தும்… By விதி)..

பரத் “ஓஓஓஓ அப்புடியா.. ஆமா மச்சி அப்ப நான் எதுக்கு டா இங்க வந்திருக்பேன் என்று கேட்க..? மூதேவி அத நீ தான் யோசிக்கணும் என்னை கேக்குற?”

பரத் “நானும் யோசிக்குறேன் டா ஒன்னு வரமாட்டிங்கு நான் என்ன செய்ய என்று பாவமாய் கேட்க..”

விஷ்வா “இதுக்கு ஒரே வழிதான் மச்சி இருக்கு…”

“பரத் ஆர்வமாய் என்ன வழி டா..?? என்ன வழி என்று ஆர்வமாக கேட்க.. பேசாம சொத்துடு மச்சி கூடவே அந்த பிரேம் பரதேசியையும் கூட்டி போ பிரச்சினை ஓவர்.. நாங்களும் நிம்மதியா இருப்போம்..”

பரத் “பரதேசி நாயே.!! ஏன் டா உனக்கு இந்த நல்ல எண்ணம் எரும எரும..”

விஷ்வா “பின்ன காலேஜ் வந்து இத்தனை நாள் ஆச்சு நீயும் சரி அந்த பிரேம் பரதேசியும் சரி ஒரு பொண்ணையாச்சு லவ் பண்ணிங்களா டா.. இப்படி மொட்டையாவே சுத்திட்டு இருக்கீங்க.. பேசாம ரெண்டு பேரும் தூக்குபோட்டு தொங்கிடுங்க.. சனியன் ஒழிஞ்சுதுன்னு உங்க வீட்டிலயாவது நிம்மதியா இருப்பாங்க என்று பரத் காலை வார..

பரத் “டேய் நாங்க ரெண்டு பேரும் பொண்ணை பாத்தா மண்ண பாத்து நடக்குற சங்கத்தை சேர்ந்த கட்டை பிரம்மச்சாரிகள் என்று கெத்தாக சொல்ல..”

“டேய் டேய் எங்களுக்கே விபூதி அடிக்க பாக்குறீயே டா நீ.. நீங்க ரெண்டு பேரும் கட்டபிரம்மச்சாரிய இல்ல கெட்ட பிரம்மச்சாரியன்னு எங்களுக்கு நல்லவே தெரியும் டா.. ஆல் டீடெல்ஸ் ஐ னே மேன் என்க.. அசடு வழிந்த பரத் பப்ளிக் பப்ளிக்.!! ஐ ஆம் யூ பெஸ்ட் ப்ரண்ட் என்று சொல்ல.. அடாத்து என்று பரத்தை காறிதுப்பிய விஷ்வா.. ஷரவனிடம் நீ ஏன் டா இன்னு இங்க இருக்க?? போய் நீ வந்த வேலையை பாரு போ மிளகா வெய்டிங் என்று சொல்லி முடிக்கும் முன் ஷரவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான் மித்துவை தேடி..”

“மிருதுளாவை க்ளாஸ் ரூமில் தேடியவன் அவள் அங்கு இல்லாமல் போக.. இவ எங்க போய் இருப்பா என்று யோசிக்க அங்கு கேட்ட பேச்சு குரலில் மிருது என்ற பெயர் அடிபட ஷரவன் அதை கவனித்தான்..”

“ஏய் மிருது இன்னைக்கு காலேஜ் லீவ் டி.. இன்னைக்கு அவ வரமாட்ட அவளோட நோட்ஸை நீ தனுகிட்ட கொடுத்திடு என்று ஒருத்தி சொல்ல.. ஷரவனுக்கு மித்துவுக்கு உடம்பு எதுவும் சரியில்லையே என்று உள்ளம் பதற.. அதற்கு பின் அந்த பெண்கள் பேசியதை கேட்டவன் கோபத்தின் உச்சத்திற்கே சென்றான் அவன்..”

“ஏன் டி மிருது வரமாட்ட உடம்புக்கு எதும் சரியில்லைய என்று அடுத்தவள் கேட்க.. ம்ம்ம்ம் கால்ல அடிப்பட்டிருக்குன்னு சொன்னா.. ஆனா அதெல்லாம் ஒன்னு இருக்காது.. நேத்து அந்த ஷரவன் வரப்போற நம்ம காலேஜ் கல்சுரல்ஸில் அவர் கூட சேர்ந்து ஆடனும்னு இவகிட்ட சொல்லி இருக்காரு.. அவர் கூட சேர்ந்து ஆட புடிக்காம தான் அவ கால்ல அடிப்பட்டு இருக்குன்னு பொய் சொல்லி லீவ் போட்டுட்டு ஹாஸ்ட்டல்லயே இருக்கபோல..

அதற்கு அடுத்தவள் ஆமா டி அப்படியும் இருக்கும்.. பின்ன சும்மாவே அவர் மிருதுவை முழுங்குற மாதிரி பாப்பான். இதுல சேர்த்து ஆட சான்ஸ் கிடச்சா சும்மாவ இருப்பான்.. ஒரு வழியாக்கிட மாட்டான்.. அதெல்லாம் மிருது யோச்சிருப்பா அதான் உஷாரா காலேஜுக்கு கட் அடிச்சு எஸ்கேப் ஆகிட்ட போல என்று சொல்லி சிரிக்க.. அதை கேட்ட ஷரவன் உள்ளம் உலைகலன் போல் கொதிக்க அடுத்த நிமிடம் தான் காரில் ஏறி பறந்தான் மிருதுளாவை பார்க்க..”

“காரை ஒட்டிக்கொண்டு இருந்தவன் மன கொதித்துக் கொண்டு இருந்தது.. அவ எப்புடி அப்படி நெனச்ச.. டான்ஸை சக்கா வச்சு நா அவகிட்ட மிஸ்பிகேவ் பண்ணுவேண்னு நெனச்சிட்டால.. என்னை அவ அவ்வளவு கேவலமாவ நெனச்சிட்டிருக்க மித்து… இவ்வளவு நாள் பழகியும் என்ன அவ புரிஞ்சிக்கவே இல்லயா என்று நினைக்கும் போதே ஷரவன் மனதில் அடிபட்டதுபோல் அப்படி ஒரு வலி.. அந்த வலியின் வேகம் அவன் கைகளில் தெரிய மின்னல் வேகத்தில் பறந்த கார் மிருதுளாவின் ஹாஸ்ட்டல் வாசலில் வந்து நின்றது…”

“இங்கு மித்து ஆனந்தமாக சேரில் உட்கார்ந்து கொண்டு கையில் வழிந்து கொண்டிருந்த dairy milk chocolate டை kiss me close ur eyes என்று படிக் கொண்டே ரசித்து சப்புகொட்டி சாப்பிட்டு கொண்டிருந்ததில் ஷரவன் அறைக்குள் நுழைந்ததை கூட அவள் கவனிக்கவில்லை.. ஏற்கனவே கடும் கோபத்தில் வந்த ஷரவனுக்கு மித்து இருந்த நிலையை பார்த்து எரியும் கொள்ளியில் எண்ணெய் உற்றியது போல் ஆக கோபத்தின் உச்சிக்கு சென்றவன் மிருதுளாவின் கையை பிடித்து இழுக்க..!! தீடிரென நடந்த இந்த நிகழ்வில் மிரண்ட போன மித்து கத்த ஆரம்பிக்கும் முன் .. ஷரவன் மித்துவை தன்னோடு சேர்த்து காற்று கூட நுழைய முடியாதபடி இறுக்கி அணைத்தவன் தன் இதழ் கொண்டு அவள் இதழை மூடியிருந்தான்..”

“மிருதுளாவிற்கு ஒரு நிமிஷம் என்ன நடந்ததென்றே புரியவில்லை.. உலகமே நின்று விட்ட உணர்வு.. ஷரவன் பலமுறை அவள் கன்னத்தில் முத்தமிட்டீருக்கிறான் தான்.. ஆனால் அப்போதெல்லாம் அந்த முத்தத்தில் ஒருவித மென்மையையும், ஒரு மாதிரி தவிப்பையும் தான் மிருதுளா உணர்ந்திருக்கிறாளே தவிர.. இதுபோல் வன்மையாக அவன் அவளை தீண்டியதில்லை.. முதல் முதலில் ஒரு ஆண்னின் இதழ் தீண்டால்.. அதுவும் இத்தனை வன்மையாய் நிகழ மிருதுளாவிற்கு கண்கள் இருன்டு விட்டது.. இதயம் அதிவேகமாக துடிக்க.. பயத்தில் மொத்த உடலும் அதிர கண்கள் படபடக்க கால்கள் தரையில் நிற்காமல் நடிங்கி கொண்டிருக்க.. ஷரவனோ தன் மொத்த கோபத்தையும் அவளின் இதழில் காட்டிக் கொண்டிருந்தன்.. தன் மனதில் இன்று மிருதுளா மூலம் ஏற்பட்ட காயத்திற்கான மருந்தை அவள் இதழிலேயே தேடிக் கொண்டிருந்தான்..”

“நொடிகளில் தொடங்கிய இந்த இதழ் தீண்டால் நிமிடம் கடந்து செல்ல.. மிருதுளா மூச்சுவிட சிரமப்பட்டு திணறி தவிக்க.. ஷரவன் வேகமாக அவளை தன்னைவிட்டு விலக்க.. ஷரவன் கொடுத்த அதிர்ச்சியில் மிருதுளா கால்கள் நடுங்க, நிற்கமுடியாமல் அப்படியே கால்களை மடக்கி தரையில் அமர்ந்தவள்.. என்ன நடக்கிறது என்று புரியாமல் கண்ணீரில் நனைந்து இருந்த கண்களால் ஷரவன் பயத்தோடு பார்க்க.. ஷரவனின் முகம் கொதிக்கும் இரும்பைபோல் கோபத்தில் சிவந்திருக்க பயத்தில் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டாள்..”

“ஷரவன் கோபமாக அவள் அருகில் சென்றவன்.. அவள் தடையை பிடித்து உயர்த்தி தன் முகத்தை நேராக பார்க்கும்படி அவள் முகத்தை நிமிர்தியவன்.. ஏன் டி?? ஏன் டி இப்புடி பண்ண..?? என்னை எப்டி டி உன்னால அப்படி நெனக்க முடிஞ்சுது..?? இவ்வளவு நாள் பழக்கத்துல நீ என்னை கொஞ்சம் கூட புரிஞ்சிக்கவே இல்லயா டி..?? நம்ம பழகுன இத்தனை நாள்ல என்னைக்காவது நான் உன்கிட்ட தப்ப நடந்திருக்கேனா டி.?? சொல்லு டி நடந்திருக்கேனா அப்புறம் ஏன் டி.?? ஏன்டி இப்படி என்ன சாவடிக்கிற..?? நீ என்ன அவ்ளோ கேவலமாவ நெனச்சிட்டிருக்க மித்து என்று சொல்லும்போதே அவன் குரல் உடைந்து விட.. மிருதுளா அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் மலங்க மலங்க முழித்தாள்..”

“ஷரவன் அவளை விட்டு விலகியவன் கண்களை இறுக்கி மூடி தன் கோபத்தை அடக்க முயன்றவன்.. தலையை அழுத்தி கோதி ஏதோ சொல்ல மித்துவிடம் திரும்ப அப்போது தான் அங்கு தரையில் இருந்த ரத்த கறையை கவனித்தன்.. சட்டென திரும்பி மித்துவை பார்க்க.. அவள் காலில் போடப்பட்டிருந்த கட்டு விலகி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது..”

“ஷரவனுக்கு ஒரு நொடி இதயம் பதறி விட மிருதுளா அருகில் சென்றவன்… மித்து குட்டி என்ன டா இது.?? என்ன ஆச்சு உனக்கு கால்ல ஏன் இவ்ளோ ரத்த வருது என்றவன்.. எப்புடி அடிப்பட்டுச்சு? ஏன்டி ஏ கிட்ட சொல்லால.?? (நீ எங்க டா அவளா பேச விட்ட வந்ததும் வாயோட வாய் வச்சு மூடிட்டு கேக்குறான் பாரு கேள்வி) நா வேற உன் நிலைமை புரியாம ச்சே என்று தன் கையை சுவற்றில் ஓங்கி குத்தி.. தன் செயலை எண்ணி தன்னை தானே நொந்தவன்.. அடுத்த நொடி மிருதுளா தன் கைகளில் ஏந்தி அவளை காரில் பத்திரமாக உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஹாஸ்பிடலில் இருந்தான்..”

“டாக்டர் மிருதுளாவின் காலில் மருந்து போட்டு கட்டு கட்டுவதற்குள் ஷரவன் தான் டாக்டர் ப்ரண்ட் ரவியை ஒரு வழியாக்கிவிட்டன்.. டேய் இவ்ளோ பெரிய அடி பட்டிருக்கு, ரத்த வேற இவ்ளோ வந்திருக்கு.. நம்ம பேசாம எக்ஸ்ரே.?? இல்ல இல்ல வேணாம் ஸ்கேன் எடுத்து பாத்துடுவோம் என்று ரவியை பாடாய் படுத்தியெடுக்க, வெறியான ரவி..”

“டேய் நிறுத்து டா நானும் பாக்குறேன்.. பொண்டாட்டிய பிரசவத்துக்கு அனுப்பிட்டு தவிக்கிற புருஷன் மாதிரி இல்ல கிடந்து அலையுற.. ஒரு சின்ன அடி அதுக்கு போய் எக்ஸ்ரேவாம், ஸ்கேனாம் ஏன் டா ஆப்ரேஷனை விட்டுட்ட அதையும் சொல்ல வேண்டியது தானே.. ஒரு சின்ன காயம்.. நீயே டெட்டால் போட்டு கிளீன் பண்ணி ஆயின்மென்ட் போட்டிருந்த ஈவ்னிங்குள்ள காயம் ஆறி இருக்கும்.. இல்ல வெளிய நர்ஸ் கிட்ட மருந்து போட சொல்லி இருந்த அவங்க மருந்து போட்டிருபாங்க.. அதவிட்டு இவ்வளவு தூரம் தூக்கி வந்தது இல்லாம ஒரு ஃபேமஸ் ஹார்ட் சர்ஜனை இப்புடி தம்மதுண்டு காயத்துக்கு மருந்து போட வச்சிட்டியே டா என்று கொதிக்க.. (மிருதுளாவும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.. ஒரு சின்ன காயம்.. அதுக்கு போய் ஏன் இந்த கடுவம்பூணை இப்புடி குதிக்கிது என்று மனதில் நினைக்க அதை ஷரவனிடம் சொல்ல பயந்து வாயை மூடிக்கொண்டாள்.. ஆனால் அவளுக்கு புரியவில்லை.. அவள் காலில் பட்ட அந்த சின்ன காயம் ஷரவனின் இதயத்தையே குத்தி கிழித்ததென்று..) இன்னும் ஒரு மணிநேரம் தான் உனக்கு டைம் அதுக்குள்ள மரியாதையா ஒழுங்க ஹாஸ்பிடல் பீல்ல கட்டிட்டு இந்த பாப்பாவை தூக்கிட்டு ஓடிரு என்று ஷரவனை மிரட்டிய ரவி மிருதுவிடம் திரும்பி சின்ன காயம் தான் மா.. ஒன்னு ரெண்டு நாள்ல சரியாகிடும் மருந்த ஒழுங்க சாப்பிடு என்றவன் ஷரவனை திரும்பி பார்க்க கலங்கிய கண்களும், வாடி இருந்த ஷரவனின் முகமுமே சொன்னது இங்கு காயம் கண்டிருப்பவள் தான் அவனின் உயிர் மூச்சென்று.. சிறுவயதில் இருந்து தைரியமாக, திமிரோடு கெத்தாக திரியும் ஷரவனையே பார்த்து பழக்கப்பட்ட ரவிக்கு.. இன்று இந்த பொண்ணுக்கு பட்ட ஒரு சின்ன காயத்திற்கு இப்படி பயந்து துடிக்கும் அளவு அவனை மாற்றிய மிருதுளா மீதான அவன் காதலை நினைத்து வியந்தவன்.. அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி அந்த அறையை விட்டு வெளியேறினான்.”

“ஷரவனின் கலங்கிய கண்கள் மிருதுவை என்னவோ செய்ய.. அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.. ஷரவன் அவள் படுத்திருந்த கட்டில் அருகில் வந்து அமர்ந்தவன்.. அவள் காலை எடுத்து தன் மடியில் வைத்து மெதுவாக அவள் காயத்தின் மீது போட்டிருந்த கட்டை தொட்டுப் பார்த்தவன்.. ரொம்ப வலிக்குதா மித்துக்குட்டி?? என்று கேட்டவன் குரலில் அப்படி ஒரு வேதனை.. ஏற்கனவே காயப்பட்டு இருந்தவளை தன் செயல் மீண்டும் காயப்படுத்தியிருக்கும் என்ற வேதனை அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிய.??

“மிருதுவிற்கு ஷரவனின் முகத்தை பார்க்கவே பாவமாக இருக்க.. உடனே, “இல்ல சீனியர் எனக்கு வலிக்கல.. சுத்தாம வலிக்கவே இல்ல என்று தான் மழலைக்குரலில் சொன்னவள்.. கொஞ்ச நேரம் முன் இவன் தான் தன் பெண்மையை அத்துமீறி தீண்டினான் என்பதையும் மறந்து அவனின் வாடிய முகத்தை பார்க்க முடியாமல் தன் வலியை மறைத்துக் கொண்டு சொல்ல.. ஷரவன் முகத்தில் சற்று நிம்மதி வந்தது..”

“சாரி டா மித்து காலேஜில் ரெண்டு பொண்ணுங்க.. நீ என்னோட டான்ஸ் ஆட இஷ்டம் இல்லாம தான் கால்ல அடிப்பட்டிருக்குன்னு பொய் சொல்லி லீவ் போட்டிருக்கேன்னு சொன்னாங்க என்றவன் அந்த பெண்கள் பேசியதை சொல்லி.. அதை நானும் உண்மைனு நெனச்சு தான் நான் உ … உன் …. உன்கிட்ட அ.. அ… அப்புடி நடந்துகிட்டேன் என்று தயங்கி தயங்கி தலைகுனிந்து கொண்டு சொல்ல.. அப்போது தான் மித்துவுக்கு ஹாஸ்ட்டலில் நடந்தது நினைவு வந்தது.. ஷரவன் தன்னை இருக்கி அணைத்து முத்தம் தந்தது கண்முன் தோன்ற, ஒரு பக்கம் கோபம் மறுபக்கம் சொல்லமுடியாத ஒரு உணர்வு அவளை தாக்க, அவள் முழு உடலும் குறுகுறுக்க.. ஷரவனை நேருக்குநேர் பார்க்க முடியாது தலையை குனிந்து கொண்டாள்..”

“ஷரவன் மெதுவாக அவள் காலை கட்டிலில் வைத்தவன்.. அவள் முகம் பார்த்து மெதுவாக மித்து என்றழைக்க.. அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முடியாமல். ‘ம்ம்ம்ம்’ என்று பதில் குரல் மட்டும் வந்தது அவளிடம்..”

“மித்து உனக்கு இன்னைக்கு கால்ல அடிப்படாம இருந்திருந்த நீ.. நீ… இன்னைக்கு டான்ஸ் ரிகர்சலுக்கு வந்திருப்ப தானே..?? ஆமா தானா?? சொல்லு மித்து என்று கேட்டவன் குரலில் அவள் ஆமாம் என்று சொல்ல வேண்டும் என்று அப்படி ஒரு ஏக்கம்.?? மித்து மெதுவாக நிமிர்ந்து கேள்வியாய் அவனை பார்த்தவள் மீண்டும் தலையை குனிந்து கொள்ள.??

“இ…. இல்ல… அந்த…அந்த… பொண்ணுங்க சொன்னா மாதிரி நான் உன்கிட்ட மிஸ் பிகேவ் பண்ணுவேனு நீயும் நெனைக்கிறீய என்று முழுவதும் கேட்டு முடிக்கும் முன்னே ஷரவன் கண்கள் கலங்கி விட்டது.. ஏங்கே மிருதுளா அந்த பெண்கள் சொன்னது போல் தன்னை தவறாக எண்ணி இருப்பாளோ என்ற பயம் அவனை கொல்லாமல் கொல்ல.. பாதி ஜீவனாக ஒலித்தது அவன் குரல்..”

“அவன் கேட்ட கேள்வியில் பட்டென்று நிமிர்ந்து ஷரவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்த மிருதுளா வேக வேகமாக இல்லை என்பது போல் தலையாட்டயவள்.. இல்ல சீனியர் அப்படியெல்லாம் ஒன்னு இல்ல… நான் உங்களை அப்படி தப்பா நெனைக்க மாட்டேன் சீனியர்.. எப்பவும் அப்படி நெனைக்க மாட்டேன் என்று சொல்லவும் தான் ஷரவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.. ஆம் இன்று வரை ஷரவன் பலமுறை மிருதுளா சீண்டி விளையாடி இருக்கிறான் தான். ஆனால் அதில் துளியும் காமம் இருந்ததில்லை.. அவன் செயல் அனைத்து தனக்கு பிடித்த குழந்தையை நாம் எப்படி கொஞ்சி விளையாடுவோமே அப்படி தான் இருக்கும்… மிருதுளா ஷரவனின் காதலையும், அன்பையும் தான் உணரவில்லையே தவிர அவன் மீது அவளுக்கு பெரிய நம்பிக்கை இருந்தது.. அது ஏனென்று கேட்டால் அவளுக்கே அது புரியாத புதிர் தான்..

“மிருதுளாவின் பதில் ஷரவனின் மனதை லேசாக்க.. அவன் முகத்தில் நிம்மதி புன்னகை படர்ந்தது.. மிருதுளாவின் தலையை வருடி நெற்றியில் முத்தமிட.. அந்த முத்தம் மிருதுவை உயிர் வரை சென்று தீண்டியது..”

“ஆமா எப்படி மித்து உன் கால்ல அடிப்பட்டுச்சு, பெரிய கிளாஸ் பீஸ் குத்தி இருக்குனு ரவி சொன்னான்.. அப்படி என்ன பண்ண நீ என்று ஷரவன் கேட்க..”

“மிருதுளா தன் கருப்பு திராட்சை கண்ணை உருட்டி திரு திருவென்று முழிக்க.. ஷரவனுக்கு புரிந்து விட்டது.. இவ ஏதோ வால்தனம் செஞ்சிருக்கா.. அதான் இப்படி முட்டகண்ண உருட்டி உருட்டி முழிக்கிற.. ஏய் குட்டி பிசாசு..?? மரியாதையா சொல்லிடு?? என்ன ப்ராடு வேலை செஞ்ச?? எப்புடி அடிப்பட்டுச்சு என்று சின்ன சிரிப்போடு கேட்க..

மிருதுளா ” அது… அது… அது வந்து சீனியர் என்று ராகம் இழுக்க..

“ஏய் ராகம் இழுத்து டியூன் போடாம விஷயத்தை சொல்லு டி.??

“அது சீனியர் என்று ஆரம்பிக்க.. ஏய் முதல்ல சீனியர், சீனியர்னு கூப்பிட்டு கழுத்தறுக்குறத நிறுத்து டி.. காது வலிக்குது என்ற ஷரவனை, மிருதுளா சோகமாக பார்க்க.. “அதில் பின்ன நான் எப்பிடி தான் கூப்புடுறாதாம்?? என்ற கேள்வி இருக்க.. அது புரிந்தவன்.. உனக்கு எப்ப என்ன மாமா னு சொல்ல தோனுதோ அப்ப நீ அப்படி கூப்பிடு.. அதுவரை நீ என்ன ஷரவன்னு பேர் சொல்லியது கூப்புட்டு தொல.. சீனியர்னு கூப்பிட்டு உயிரை வாங்காத என்க.. மிருது சரி என்று தலையை ஆட்ட.. “சரி இப்ப சொல்லு எப்படி காயம் பட்டுச்சு..

“அது வந்து சீனியர் என்று ஆரம்பிக்க ஷரவன் அவளை முறைக்கவும்.. ஷ.. ஷரவன் என்று திக்கி திக்கி அவள் சொல்ல.. முதல் முதலில் அவள் தேனூறும் இதழ் வழி தன் பெயரை அவள் சொல்ல கேட்ட ஷரவன் மனது.. அந்த தேனைவிட அதிகமாக இனித்தது.. அதையெல்லாம் உணராத மிருதுளா தன் பேச்சை தொடர்ந்தாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!