1
“நாஞ்சொல்றத மொதல்ல நீ கேளு. பத்து நாளுக்கு பொட்டிய கட்டிக்கோ. நல்லதா துணிமணி எடுத்து வச்சிக்கோ. இங்க போடுற மாதிரி அரைச்சட்டை, கால்சட்டைலாம் வேண்டாம். வீடு வாசல் தோட்டம் தொறவெல்லாம் நான் பார்த்துக்கறேன். கடையை கூடுதல் வேலைதான்னாலும் திருமலை பார்த்துக்குவார். கன்ஸ்ட்ரக்சன் வேலையை பத்துநாள் பாலு பாத்துக்கட்டும். நீயும் அப்பப்போ செல்போனுல பேசிக்கோ. அப்புறம் இந்த வாட்ஸ்அப், மெயில கியிலு இதெல்லாம் எதுக்கு இருக்கு? எல்லாம் பாத்துக்கலாம். மொதல்ல நீ கிளம்புற வழியப் பாரு.” மொத்த திட்டத்தையும் வகுத்து, கூட்டி, பெருக்கி கடைசியாக அவனை கழித்து முடித்தார் ‘மில்காரர்;’ என்று மரியாதையோடு அவ்வூர்காரர்களால் அழைக்கப்படும் சண்முகம்.
சண்முகம் – ஐம்பது வயதான அரசியல் செல்வாக்கு, பரம்பரை சொத்து, தோட்டம், துறவுகள், வண்டி வாகனங்கள் அனைத்தும் கொண்ட நல்லவர். மனைவி இல்லை. திருமணமான பத்தாம் வருடம் விஷக்காய்சசலில் இறந்துவிட்டார். ஆவர் எறகட்டியது அவரது சொந்த மகன் கதிரவன். அவருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் கழித்துப் பிறந்தவன். அதனால் அவருக்கு அவன் மேல் எப்போதும் கூடுதல் பாசம் உண்டு. கூடவே தாயில்லாப் பிள்ளை என்பது வேறு. மொத்தத்தில் அவன்தான் அவர் உயிர்.
கதிரவன் சிவில் இன்சினியர்… கான்டிராக்ட் எடுத்து கட்டிடங்கள் கட்டுவது, கட்டிடங்கள் கட்டி விற்பது அவன் தொழிலாகும். அப்பாவின் செல்வமும், செல்வாக்கும் அவனுக்கு ஆரம்ப கட்டத்தில் உதவின.
ஒரு நிலைக்கு வந்த பின் தந்தையின் உதவியை அவன் விரும்புவதில்லை. ஆனால் அவன் அப்பாவின் தோப்புகளில் அவன் செய்யும் வேலைகளுக்கு ஈடு, இணை கிடையாதாகையால், அப்பாவிடம் பெற்ற உதவிகளுக்காக அவன் குற்ற உணர்வு கொண்டதில்லை… ‘எல்லாம் உன் சொத்து. நீ எடுக்கறதுதான் முடிவு’ என்று சண்முகம் எப்போதோ கூறிவிட்டார். கதிரவனும் நல்ல பையன். அவரது சொத்துக்களை பத்தரமாக கௌரவமாக பாதுகாத்து வளர்தது வருகிறான்.
சுற்றி சூழ மரம் செடி நான்கு மனையளவு வீட்டில் வேலைக்காரர்கள் மற்றும் உதவியாளர்களுடன் கிட்டத்தட்ட இருவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள்.
பெண் இல்லாத வீடு. ஆனால் சண்முகம் குடும்பத்தில் வழி வழியாக வந்த வேலைக்காரர்கள் கம் வெகுதூரத்து உறவுக்காரர்களில் முக்கியமானவரான கமலம் பாட்டி வீட்டின் சுற்று வேலைகளை கன கச்சிதமாக முடித்து, காலையிலும் மாலையிலும் சண்முகத்தின் மனைவி ஆனந்தியின் ஆளுயர புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வீட்டை பழுது சொல்ல முடியாமல் வைத்திருக்கிறார். அவர்களுக்கு தனித் தொழில் அமைத்துக் கொடுக்கத்தான் சண்முகம் முதலில் நினைத்தார்.
ஆனால் “உங்க கிட்ட இருக்கறதுதான் எங்களுக்குப் பெருமை தவிர நிம்மதி. எதையும் நீங்க பார்த்துக்குவீங்கங்கற நம்பிக்கை” எனறவர்களை தன்னுடனே வைத்துக் கொண்டார்.
அவர்களில் முக்கியமானவர் திருமலையின் தந்தை மருதன். திருமலை தன் மனைவியையும் அவரது தாயாரையும் ‘மில்காரரிடம்’ வீட்டு வேலை செய்யக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களும் முழு மனதோடு பணி புரிகின்றனர்.
கமலம் பாட்டிக்கு தற்போது துணையாக இருப்பது அவரது மகள் வேம்பு. வேம்புவின் கணவர் திருமலை, சண்முகத்தின் தென்னந்தோப்பில் வேலை பார்க்கிறார். சண்முகத்தின் அனைத்து தென்னந்தோப்புகளும் திருமலையின் மேற்பார்வையில்தான் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாதாமாதம் முதல் தேதி கணக்கு வழக்கு கதிரவனுக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்காக முதல்நாள் எந்நேரமானாலும் கணக்கு வழக்குகளை முடித்து வைத்ததுவிடுவார் திருமலை. ‘எல்லாம் கணக்குதான்’ என்பது எல்லா தொழில்களுக்கும் பொது விதி அல்லவா? கதிரவன் சந்தேகப்பட்டு கேள்வி கேட்பதில்லை. ஆனால் கேள்வி கேட்காமலும் இருக்க மாட்டான்.
புடித்தவன் அல்லவா? அவன் கேள்வி கேட்கிறான் என்பதும் அதற்கு நாம் பதில் சொல்கிறோம் என்பதும் திருமலைக்கு புரியாமலே அவனுக்குரிய பதில்களைச் சொலலிக் கொண்டிருப்பார்.
அதே போலத்தான் பயந்தும் நயந்தும் பிற்காலத்தில் அவர் மகளிடம் நாம் பதில் சொல்லப் போகிறோம் என்பது தெரியாமல் புன் சிரிப்புடன் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பான் கதிரவன்.
2
“பத்து நாளெல்லாம் முடியாதுப்பா. மேக்சிமம் த்ரீ டேய்ஸ். அதுக்கு மேலல்லாம் முடியாது” என்று ஊரே பயப்படும் ‘மில்காரர்’ சண்முகத்திடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தான் கதிரவன்.
“இதப்பாருய்யா, எத்தனை தரம் சொன்னாலும் இப்படி கோபப்பட்டா அப்பா என்னதான் செய்யறது? நீ போறது கல்யாண விசயமாப்பா. கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் பக்கம் நம்ம கிராமம் ‘கள்ளிப்பட்டி’யில உன் தாய் மாமா பொண்ணு யுவராணியைப் போய் பார்த்துட்டு வந்தியானா மேற்கொண்டு நானும் கஜாவும் இது பத்தி பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.” ஏன்றவர் சற்று நிதானித்தார்.
ஒரேடியா ‘போ ன்னு’ சொன்னா பய திருப்பிக்குவான் என்பதை உணர்ந்திருந்ததால் சற்று அடைவெளி விட்டு “உனக்கும் வயசாகிட்டே போகுது. ராணியும் படிப்பபை முடிச்சு மூணு மாசமாகுது. கஜா எனக்கு சம்பந்தியா வந்தா எல்லா விதத்தலயும் எனக்கு உதவியா இருக்கும்.” என்று ‘தம’ கட்டிப் பேசினார்.
மகன் முகத்தில் இருந்த அசுவாரசியத்தைப் பார்த்து விட்டு “ராணிக்கும் உன்னைப் பிடிச்சிருக்குய்யா” என்றார்.
இந்த கடைசி விசயத்தை அவர் இதுவரை கூறவில்லை. பெண் பிள்ளைகள் காரியம், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் பேசக்கூடாது என்று இதுவரை இதுபற்றிக் கூறாமல் இருந்தவர் அவனது அசட்டையைப் பார்த்து வேறு வழியின்றிதான் தன் கடைசி முயற்சியாகக் கூறினார்.
அவர் இதுபோன்ற விசயங்கள் பற்றி பேசுவது கிடையாதாகையால் கதிரவன் சற்று நிதானித்தான்.
“அப்பா?”
ஒரு வார்த்தைதான்.
ஆதியிலிருந்து அந்தம் வரை ஒப்பித்திருந்தார்.
“பெரியவங்க பார்த்து எது செஞ்சாலும் சரின்னு சொலிலிடுச்சுப்பா ராணி” என்றார் சணமுகம்
“சரிப்பா. நான் கிளம்பறேன். ஊங்க விருப்பம்தான் என் விருப்பமும்.” என்றவன் பயண ஆயத்தங்களில் இறங்கினான்…
கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்ததும் அவன் முதலில் அழைத்தது கமலத்தைதான்.
“கமலாம்மா, உங்க கதிர் மூணு நாள்…ம்… ஒரு ஒரு வாரம் வெளியூர் போறேன். பேக் பண்ணி குடுங்கம்மா” என்றான்.
அவனது உடைகள் மட்டும் எடுத்துக் கொடுப்பான். இதர அத்தியாவசியப் பொருட்களை அவனுக்காக எடுத்து வைப்பது கமலம்தான். கதிரவனின் தாய் இறந்த போது அவன் ஏழு வயது சிறுவன். அது வரையிலும் கூட அவன் அம்மாவின் செல்லப் பிள்ளை. எந்த பொறுப்பும்; எடுத்துக் கொள்ளவில்லை. எல்லாமே அவன் கைகளுக்கு வரும். அவனை உளளங்கையில் வைத்து தாங்குவார் ஆனந்தி. கதிரவனுக்குப் பிறகு ஆனந்திக்கு குழந்தை தங்கவில்லை. இயற்கையாகவே அவருக்கு ஒரு குழந்தைக்கு மேல் பாக்கியமில்லை.
அவர் அதற்காக கவலைப்படவில்லை. அவருக்கு கிடைத்த செல்வத்தை அப்படிப் போற்றினார். கதிரவனும் நல்ல பிள்ளைதான். தேவையற்ற சேட்டைகள் செய்யமாட்டான். அவனது செயல்கள் அனைத்தும் அனைவரும் ரசிக்கும் வண்ணமே இருந்தது.
அழகாகப் பேக் செய்யப்பட்ட டிராவல் பேக்கைப் பாத்து வழக்கம் போல் விழி விரித்தான் கதிரவன்.” வாவ்! ஏப்படி கமலாம்மா இவ்வளவு பெர்பக்ட்டா பேக் செய்யறீங்க?. என்னால இதுல்லாம் செய்யவே முடியாதும்மா. யூ ஆர் சோ ஸ்வீட் கமலாம்மா.” ஏன்று வார்த்தைக்கு வார்த்தை ‘கமலாம்மா’வைப் போட்டுத் தாக்கினான்.
‘எலி ஏன் ஏரோப்ளேன் ஓட்டுது?’ என்று யோசித்தவர்” என்னய்யா, ஐஸ் எல்ல மீறி போவுது? ஏன்ன விசயம்?” என்று நாடியைப் பிடித்தார்.
கமலம்; சண்முகத்தை அவர் அம்மா கலாவதி அழைப்பது போல்” சாமி” என்று அழைப்பார். கதிரை” சின்ன சாமி” என்று அழைக்க பிளான் செய்தார். அதைக் கேள்விப்பட்ட ஆனந்தி அலறிவிட்டார்.
“இவனை சின்ன சாமின்னு கூப்ட்டா இவன் பையனை சின்ன சின்ன சாமின்னு கூப்பிடுவீங்களா? நீங்க அவனை ‘கதிர்’னு கூப்ட்டாலே போதும் கமலாம்மா.” என்று ஒரு வழியாக அவரை அவன் பெயர் சொலலி அழைக்க வைத்திருந்தார்.
அவனது வட்டாரத்தில் அவனை மரியதையாக ‘கதிரவன் சார்’ என்றே அழைப்பார்கள். அவன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ‘கதிர்’ தான்.
அவனை ‘கவின்’ என்று அழைப்பவள் ஒருத்தி உண்டு. பார்த்துப் பல வருடங்கள் ஆகியிருந்தாலும் அந்த அழைப்பு அவனுக்கு ஸ்பெஷல்தான்.
“ஹி ஹி கமலாம்மா. தனியா போய் பொண்ணு பார்க்க சங்கடமா இருக்கு. நீங்களும் வந்தா…”
வீட்டு உள் விவகாரங்கள் ஓரளவு தெரிந்த கமலாம்மா” நானும் வந்தா எஞ்சாமி என்னைத் தேடிப்புடும் கண்ணு. நீ சந்தோஷமாப் போய் ராணிப் பொண்ணைப் பார்த்துட்டு வாய்யா. அவளை சின்னதுல பார்ததது. பொம்மையாட்டமிருப்பா. சாமி சொன்னதுல இருந்து அவளை எப்ப பார்ப்பபோமின்னு இருக்குது” என்று அங்கலாய்த்தார்.
‘ஏன்தான் இவ வந்தாளோ?’ என்று தான் தலையில் அடித்துக் கொள்ளப் போவது தெரியாமல்!
3
“ராணிம்மா, அப்பா வெளியக் கிளம்பறேன்டா. கொஞ்சம் எந்திரிச்சு வந்து ‘டாடா’ சொல்லு கண்ணு” என்று தன் மகளிடம் கெஞ்சிக் கொண்டிருநதார் கஜேந்திரன் என்கிற கஜா.
சினிமாவில் சொல்கிற மாதிரி சொல்ல வேண்டுமென்றால் ‘டெர்ரர் பீஸ்’. ஒரே மகள் யுவராணியிடம் மட்டும் அத்தனை செல்லம். அவள் எது கேட்டாலும் செய்வார். அவள் Nகுட்டு அவர் செய்யாமல் விட்டது ஒன்று உண்டு. அதை அவளே உணராத வண்ணம.; செய்திருந்தார் அதிலிருந்து அவள்மீது கூடுதல் பாசம் அவருக்கு.
கல்லூரி படிப்பு முடித்து மூன்று மாதங்கள் ;ஆகிறது… எப்போதும் செல்போனும், ஹெட்போனுமாகத் திரிவாள். இப்போதைய இளசுகள் அப்படித்தானே அலைகிறார்கள். மகளுக்குப் பாடல்களில் விருப்பம் என்பது அவருககு ஏதோ ஒரு நிம்மதியைத் தரும். அது…
கண்களைக் கசக்கிக் கொண்டு தூங்கி எழுந்ததால் கசங்கிய சுடிதாரில் அவர் முன்னே வந்து சிரித்துக் கொண்டே ‘டாடா’ காட்டினாள் யுவராணி.
வெளிNயு கிளம்பும் போது மகள் முகத்தைப் பார்த்துவிட்டுப் போனால்தான் அவருக்கு ‘போன வேலை உருப்படியாய்’ முடியும். ஏன்பது அவரது நம்பிக்கை. அதை ‘நாம ஏன் குறை சொல்லிகிட்டு?’ என்ற ரீதியில் தன்போக்கில் தண்டு;ம் காணாமல் இருப்பார் துளசி – அவரது மனைவி.
அவர் வெளியே கிளம்பியபின் யுவராணிக்கு ‘பெண்பிள்ளைகள் விடியற்காலையில் எழ Nவுண்டும், தொழ வேண்டும்’ என்ற தன் பிரசங்கத்தை ஆரம்பிப்பார். அதுகேட்டு டென்ஷன் ஆகும் யுவராணி அப்பா வந்ததும் போட்டுக் கொடுத்தால் இருவருக்கும் சண்டையாகும் என்பதை அறிந்திருந்ததால் அவள் அப்பாவிடம் ஏதும் சொல்வதில்லை. முடிந்தவரை சீக்கிரமாக எழுபவள்தான்… நேற்றிரவு அதிகநேரம் செல்போனில் பேசிக்கொணடிருந்ததால் எழ தாமதமாகிவிட்டது.
“டாடா காட்டி குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பி வச்சாச்சா ராணிம்மா? வுந்து பல் வெளக்கிறீங்களா? நேரமாயிருச்சு, குளிச்சிட்டு நேரா டிபனே சாப்பிட்டிருங்க.” என்று மூச்சுக்கு முன்னூறு ‘ங்க’ போட்டு கலாய்த்தார் துளசி.
“ம்மா…” என்று செல்லமாக சிணுங்கியவாறே தாய் சொல்லை நிறைNவுற்றச் சென்றாhள் யுவராணி.
போகும் வழியில் அணிச்சை செயலாய் அவளது கண்கள் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டரை வருடிச் சென்றது.
அதற்கு சொந்தக்காரன் வண்டியை இங்கே நிறுத்திவிட்டு அவள் தகப்பனுடன் சென்றிருப்பான். அவ்வப்Nபுhது நடப்பதுதான் இது. அவன் தாமரைச் செல்வன்… தாமரைச் செல்வன் பி.ஏ.
அவள்” யுவராணி பி.காம், சி.ஏ” என்று சொல்லும் வரையில் அவன் அப்படித்தான் பெருமையில் பீற்றிக் கொண்டிருந்தான்.
கஜேந்திரன் அவள் படிப்பு பற்றி தெளிவாக அவனிடம் சொல்லியிருக்கவில்லை. நம்மிடம் வேலை செய்பவனிடம் அதுவும் திருமணமாகாத இளைஞனிடம் வயதுப் பெண்ணைப் பற்றிப் பேசப் பிடிக்கவிலலை. இப்படித்தானே பெண் பிள்ளையைப் பெற்ற ஒவ்வவொருவருக்கும் இருக்கும் என்று காலங்கடந்து சிந்திக்கிறார்.
“ராணிம்மா, குளிச்சாசின்னா சீக்கிரம் வா கண்ணு”, துளசி கொஞ்சிக் கூப்பிட்டார் மகளை.
“தோ வந்திட்டேன்மா” பாய்ந்தோடி வந்தாள் யுவராணி. அம்மாவின் கொஞ்சல் அரிது. அதை அவ்வப்பொழுது பயன்படுத்தி காரிய் சாதித்துக் கொள்வது புத்திசாலித்தனம் என்பதை இநத இருபத்து மூன்று வயதிற்குள் அறிந்திருந்தாள் அவள்.
வாஞ்சையோடு தனக்குப் பரிமாறிய தாயைப் பார்த்து பயத்தில் எச்;சில் விழுங்கினாள். அது இட்டிலியோடு சேர்ந்து உள்ளே போனதால் துளசி அதை அறியவில்லை பாவம்.
“மா…”
“சொல்லு பாப்பா” – அவளுக்கு இட்டிலிக்கு சட்டினி, சாம்பார் பரிமாறியபடியே கேட்டார் துளசி.
‘பாப்பாவா? அப்பிடியே ஒரு பிட்டைப் போட்டு வைப்போம்’ என்று முடிவெடுத்தவள்
“அம்மா…” என்று இழுத்தாள்
அவள் இழுவையில் சுதாரித்தவர்,” சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்லு. இல்லைனா பேசாம சாப்பிடு” என்று தெளிவாக (?) எடுத்துரைத்தார்…
‘ஆஹா! இப்ப விட்டா சான்ஸ் எப்ப கிடைக்குமோ? ஏதாவது சொல்லி ஆரம்பிச்சு வப்போம்’ எனறு முடிவெடுத்தவள்,
“அம்மா…வந்து கதிர் எதுக்கும்மா வர்றான்?” என்று சொல்லி வாய் மூடுவதற்குள்
“உன்ன விட அஞ்சு வருஷம் பெரியவன். அவனை அவன் இவன் ன்னு சொல்ற? இதான் நீ படிச்ச லட்சணமா?” என்ற சிடு சிடுப்புடன் அவள் வலது கையில் சாம்பார் கரண்டியால் மெல்ல அடித்தார் துளசி.
‘இதுக்கேவா? வெளங்கிரும்!’ நொந்து கொண்டே கையைக் கழுவினாள் யுவராணி.
4
அந்த அடுக்கு மாடிக் கடையிலிருந்து வெளியே வந்தாள் செந்தாமரை. அங்கே அவள் தற்காலிகமாக டிரைனியாக பணியாற்றுகிறாள். அரை நாள் கல்லூரிக்குப் பிறகு மாலை ஏழு வரை அங்கே அவள் ‘ஆல் இன் ஆல்’ சுருக்கமாக எடுபிடி. அவளது தந்தையின் சிபாரிசில் இந்த வேலை அவளுக்குக் கிடைத்தது.
வேலை பார்கக வேண்டும் என்பது அவளுக்குக் கட்டாயமிலலை. இருந்தாலும் இந்த வேலையை பார்ட் டைமாக செய்யச் சொன்னது அவள் அப்பா திருமலைதான்…
“இந்தக் கடை நம்ம ஐயாவோடது. இப்ப இதை மெயின்டைன் செய்யறது நான்தான். கதிர் தம்பி கணக்கு வழக்கு பார்க்கும். கொள்முதலுக்கு நாங்க ரெண்டு பேரும் போவோம். இருந்தாலும் தம்பிக்கு கன்ஸ்ட்ரக்ஷன் தான் இஷ்டம். அதனால அவருக்;கு பிற்காலத்துல தொழில்ல நீ உதவியா இருக்கனும்ங்றது என் விருப்பம்.”
ஏன்று தன் விருப்பம் உரைத்தவர் தன் போக்கில் சொன்னதுதான் அவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
“கதிர் தம்பி ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால இந்த கடையோட இன் அன்ட் அவுட் உனக்குத் தெரிஞ்கிருக்கணும்.” ஏனறவர் அதன் தொடர்ச்சியாக செப்பியது,
“நீ கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா இங்கேதான் வேலை பார்க்கணும். அதனால அவர் மச்சான்கிட்ட வேலை பார்க்கிற பையனைத்தான் உனக்குப் பாத்து வச்சிருக்கேன்” என்றதுதான் அவளுக்கு திகிலைக் கொடுத்தது.
“எனக்கு அப்புறம் இந்த வேலையை நீதான் செய்யணும் பாப்பா” என்று உருகி விட்டுச் சென்றிருந்தார்.
செந்தாமரை பி.பி.ஏ இறுதியாண்டு படிக்கிறாள். அடுத்த மாதம் செமஸ்டர் வந்தால் எழுதிவிட்டு வீடு போய்ச் சேர வேண்டியதுதான். அவளும் அவள் தோழி வந்தனாவும் சிறியதாக வீடு எடுத்துத்தங்கியிருக்கிறார்கள். வந்தனாவும் அவள் வகுப்புதான்.
வந்தனாவின் சொந்த ஊர் அவர்கள் இருப்பிடத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில்தான் உள்ளது. வாரா வாரம் சொந்த ஊருக்குப் போய் வருவாள் வந்தனா.
செந்தாமரையின் அம்மாவும் அப்பாவும் சேர்ந்தோ யாராவது ஒருவரோ விடுமுறைக்கு ஒரு வாரம் விட்டு வருவார்கள். அவள் பெரும்பாலும் சொந்த ஊருக்குச் செல்வதில்லை.
சொந்த ஊர் பொள்ளாச்சி அருகே உள்ளது. ஏனோ அங்கிருக்கும்; கல்லூரிகளில் அவளைப் படிக்க வைக்கவில்லை. ஊருக்குப் போனாலும் தாய், தந்தை மற்றும் பாட்டியின் வேலை விசுவாசத்தின் முன் அவள் சற்று மட்டுதான் அவர்களுக்கு என்பது அவள் எண்ணம்.
அந்த கோபத்தில்தான் ‘”சனி, ஞாயிறு வீட்டுக்கு வரமுடியாது. வேணும்னா வந்து பாருங்க” என்று தெனாவெட்டாகச் சொல்லியிருந்தாள்…செமஸ்டர் ஸ்டடி ஹாலிடேய்ஸ், மற்றும் விடுமுறைகளில் வேறு வழியின்றி போவாள். ஆனால் ஊரின் அழகு அவளை மனம் மாற்றி விடும்.
தன் தந்தையின் முதலாளியின் தோட்டத்தில் சுற்றுவது அவளுக்குப் பிடிக்கும் ஆனால் அங்கே திடீரென்று பாம்புகள் வநதுவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில ;அவள் அப்பா திருமலையாகப் பார்த்து அவருடன் அழைத்துச் செல்லும் சமயங்களுக்குக் காத்திருப்பாள்.
இந்த மூன்று வருடத்தில் குடும்பம், படிப்பு, பகுதி நேர வேலை, தோழியர் என்று சுற்றிக் கொண்டிருந்தாளே தவிர தன்னைச் சுற்றிலும் ஒரு வலை பின்னப் பட்டிருப்பதை அறியவில்லை.
கடையை விட்டு வெளியே வந்து அக்கடையின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தான் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றாள் செந்தாமரை.
“செந்தாமரையே
செந்தேன் இதழே
பொன்னோவியமே
கண்ணே வருக
கண்ணே வருக”
என்று அவளை வாசலில் வைத்தே வரவேற்றாள் வந்தனா.
“கண்றாவி. எங்கப்பாதான் ஒரு வில்லன் ஆக்டர் பேரை எனக்கு வச்சார்னா நீ அதைவிடப் பாடாவதி பாட்டைப் பாடி என் உயிரை வாங்கறே.” என்று படபடத்தவாறே வண்டியை பார்க் செய்தவள், சாவியை வலது கை சுட்டு விரலில் சுழற்றியவாறே வீட்டினுள் சென்றாள்.
அதே விரலில் இன்னொருவனையும் சுழல வைக்கப் போவது தெரியமல்.
5
வொயிட் நிற ஆடி காரில் கள்ளிப்பட்டி கிராமத்தை வந்தடைந்தான் கதிரவன்.
‘என்ன கிராமமோ என்னவோ? ஒரு வாரம் எப்படி காலங் கடத்தறது?, இந்த ஊர்ல ஒரு மால் இல்ல, தியேட்டர் இல்ல, அந்த காஞ்ச காட்டையும் பொட்டி கடையையும் எத்தன தடவபாhர்க்கறது’ என்று கதிர் நொந்து கொண்டான்.
கஜா அவனுக்குத் தாய்மாமனாக இருந்த போதும் கடந்த இருபது வருடங்களாக அவன் இந்த ஊருக்கு வந்ததில்லை. யுவராணியும் பொள்ளாச்சிக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது.
சண்முகத்தின் குலசாமி வேறு, கஜாவின் குலசாமி வேறு என்பதால் குலசாமி வழிபாட்டிலும் சிறியவர்கள் சந்தித்துக் கொண்டதில்லை.
ஏன்ன நேரமோ, இப்போதுதான் ஆளாளுக்கு அங்கேயும் இங்கேயும் அலைகிறார்கள்.
“கஜேந்திரன் சார் வீடு எங்கேனு தெரியுமாண்ணா?”
ஏன்று பவ்வியமாக இருந்த ஒரே பெட்டிக்கடைக்காரரிடம் கேட்க, அவர் அவனை ஏற இறங்க பார்த்து விட்டு,
“ஊருக்குள்ள மூணு கஜேந்திரன் இருக்காங்க. ஒருத்தர் டெய்லர். இன்னொருத்தர் பக்கத்து டவுன்ல வேலைக்குப் போறார்… நீங்க தறிக்காரர் கஜேந்திரனைத் தேடி வந்திருப்பீங்கனு நினைக்கிறேன்.” என்றார்
“தறிக்காரார்னா?”
“அவருக்கு சொந்தமா எட்டு தறி ஓடுது. மல்லிகைத் தோப்பு, கறிவேப்பிலை தோட்டம் எல்லாம் இருக்குது. அவரைத்தான் தேடி வந்தீங்களா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, பொலிரோ ஜீப் ஒன்றுஅவனருகில் வந்து நின்றது. அதிலிருந்து” வாங்க மாப்ள” என்று வாய் நிறைய அழைத்தவாறு அதிலிருந்து இறங்கினார் கஜா. அவருடன் தாமரைச் செல்வனும்.
கதிர் வரவர தன் மாமாவிடம் வழி கேட்டுக் கொண்டும், கூகுள் மேப் பார்த்துக் கொண்டும்தான் வந்திருந்தான். மெயின் ரோட்டிற்கு கஜா தன் ஆள் ரங்கனை அனுப்பியிருந்தார். ரங்கன் இவனைப் பார்தது வழி சொல்லிவிட்டு வீட்டில் கதிரின் தங்கலுக்கு ஏற்பாடு செய்வதில் உதவுவதற்கு ஓடி விட்டான்.
வரும் வழியெல்லாம் கதிர் கார் கண்ணாடியை இறக்கி விட்டு வியூ பார்த்துக் கொண்டேதான் வந்திருந்தான். சிறு குன்றுகள், அதில் குமரன் கோவில்கள் ஏரிகள்,குளங்கள் வயற்காடுகள்,கறிவேப்பிலை மற்றும் மல்லித் தோட்டங்கள் எல்லலாமே அவன் மனதைக் கவர்ந்தன. ஆனால் அவ்வப்போது தெரிந்த வறட்சி பக்கங்கள் அவனுக்கு முக வாட்டத்தை தந்தது.
அவனது கன்ஸ்ட்ரக்ஷன் மூளை எங்கேயெல்லாம் கட்டிடம் கட்டலாம் என்ன மாதிரி கட்டிடங்கள் கட்டலாம் என்று யோசிக்க தவறவில்லை.
“பயணம்லாம் எப்டி மாப்ள? வழியில சரியா சாப்ட்டீங்களா? ரங்கன் வந்திருந்தானா?” என்று கேள்வி மேல் கேட்ட கஜாவின் கண்கள் மட்டும் அவன் முகத்திலேயே பதிந்திருந்தது.
‘அப்டியே ஆனந்திதான். ஏன்ன மூக்கு மட்டும் அத்தான் மாதிரி. இதப் பாருய்யா நெத்தி என்னை மாதிரி இருக்கு’ என்று அதிசயித்துக் கொண்டிருந்தவர், அவனது” எல்லாம் ஓகே மாமா. சார் யாரு?” என்ற கேள்வியில் நடப்பிற்கு வந்தார்;
“தம்பி பேரு தாமரைச் செல்வன். நாம ‘செல்வா’ னு கூப்பிடறது. நமக்கு ரைட்ஹேன்ட் தம்பிதான்.: என்றவர் செல்வாவிடம் திரும்பி” இதுதாம்பா நான் சொல்லிகிட்டே வந்தேனே? ஏன் தங்கச்சிமகன் கதிரவன்.” என்று இருவருக்கும் அறிமுகம் செய்வித்தார்.
ஏதைச் செய்தாலும் பிளான் பண்ணி செய்யும் விதி தன் அடுத்த பிளானில் இறங்கியது.
6
‘ஸ்டுடீ ஹாலிடேய்ஸ் விட்டாச்சு. ஊருக்கு மூட்டையைக் கட்ட வேண்டியதுதான்’ என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் செந்தாமரை.
“செந்தா என் நிலா
நிலா நிலா
நாயகன் மடியில்” என்று தன் அடுத்த பாடலை ஆரம்பித்தாள் வந்தனா.
வெடுக்கென்று தலையை உயர்த்திய செந்தாமரை தலையசைத்து வாய்மூடி” டோர் லாக்” என்றாள்.
“இதப்பாரு லோட்டஸ், உன்னை வித விதமா பேர் வச்சி கூப்பிட்டாச்சு. என்னதான் உன் கணக்கு?”
“நீ என்னை செந்தாமரை, லோட்டஸ், செந்தா, தமா, பேபி அப்டீனு பல பேர்கள்ல கூப்பிட்டிருக்கே. ஆனா ‘தாமரை’ னு கூப்ட்டதில்லையே செல்லம்”
“என்னவோ தோணலை. இதை சொல்ல நல்ல நாள் பார்த்துகிட்டு இருந்தியா? சொல்லியிருந்தா கூப்பிட்டுருப்பேன்ல?”
“நீயா கண்டுபிடிக்கிறியானு பார்த்தேன்”
“இப்ப மட்டும் எப்டி சொன்னியாம்?”
“ஸ்டடி ஹாலிடேய்ஸ் முடிஞ்சு செமஸ்டர் அப்போ அதுபத்தி பேசற அளவுக்கு மீ புத்திசாலி இல்ல. நெக்ஸ்ட் ஹாலிடேய்ஸ். ஆப்புறம் எப்பப்பா பேசறது?”
செந்தாமரையை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் வந்தனா.
“என்னைத் தேடுவியா?”
“நான் கண்டிப்பா உன்னை தேடுவேன். ஆனா மேடம்தான் கல்யாணம் செஞ்சு செட்டில் ஆகி இருப்பீங்களே? ஏன்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ? என்னவோ?”
“ஓ! தாங்கள் அப்படியே இமயமலை செல்லப் போகிறீர்களாக்கும்? உனக்கும்தான் ஒரு அடியாள் ரெடியா இருக்கானே?”
“மொதல்ல இந்த பில்லோஸை படிச்சு முடிப்போம்.’ஆனந்தி ஸ்டோர்ஸ்’ பத்தி கம்ளீட்டா தெரிஞ்சிருச்சு. அதுக்கு அங்க நான் பார்த்த டிரைனிங் தான் காரணம். அப்பாவும் நிறைய ஸ்டேட்மென்ட்ஸ் ஸ்டடி பண்ணக் குடுத்திருந்தாங்க.” என்றவளிடம்
“அப்போ உன் நெக்ஸ்ட் ப்ராஜக்ட் ‘ஆனந்தி ஸ்டோர்ஸ்’ அட்மினிஸ்ட்ரேஷனா?”
“’ஆனந்தி ஸ்டோர் அட்மினிஸ்ட்ரேஷன்?’ கவித கவித” என்று கிண்டலடித்த தாமரை மூட்டை கட்டும் வேலையில் முழு மூச்சாக இஙற்கினாள்.
“தாமர ஹி…ஹி” என்று ஆவாரம்பூ வினீத் ரேஞ்சில் அசடு வழிந்தாள் வந்தனா.
“அடியேய்!!! மை நேமை டேமேஜ் பண்றதுதான் உன் லைப்டைம் எய்மா?”
“இல்லப்பா சும்மா கூப்ட்டு பார்த்தேன். “
“நீ என்னை உனக்குப் பிடிச்ச மாதிரியே கூப்பிடுப்பா நான் உன்னை ‘வனி, முனி, சனி, குனி’ ன்னு கூப்பிடற மாதிரி”
“ஓகே லோட்டஸ்” என்றவாறு தன் மூட்டை முடிச்சை கட்ட ஆரம்பித்தாள் வந்தனா.
ஷோல்டர் பேக்கில் துணிமணிகளை செட் செட்டாக மடித்து வைத்தவள் ஹேன்ட் பேக்கில் ஒரு பக்கம் மேக்கப் சாதனங்கள், மறுபக்கம் சோப்பு, டுத்பிரஷ்,டும் பேஸ்ட் என்று எடுத்து வைத்தாள். அதன் உள்பக்கத்தில் கூடுதல் பணம் வைத்துக் கொண்டாள்.
பேருந்துக்குரிய பணத்தை மூன்று நான்கு இடங்களில் பிரித்து வைத்தாள்.
அவள் முழுதும் பேக் செய்து முடீத்துவிட்டு வந்தனாவைப் பார்க்க அவளோ இவளை பராக்கு பார்ததுக் கொண்டிருந்தாள்.
“என்னடி?”
“எப்படி இவ்ளோ பெர்பகட்டா பேக் பண்ற? இதுமட்டுமில்ல, எதைச் செய்தாலும் பெர்பக்டா செய்றடி” என்று அதிசயித்தாள்.
“நீ வேற. வீட்ல இன்னும் நம்மகிட்ட எதிர்பாக்கிறாங்க”
“அடிப்பாவி! இன்னும் என்னதான் செய்யனுமாம்? நல்லா படிக்கிறே. பார்ட் டைம் ஜாப்னு சொல்லி பத்து கோடி ரூபாய் கடையை கட்டி மேய்கிற. நல்லா பாடற. லீவுக்கு ஊருக்கு போயிட்டு வரும்போது நீயே செஞ்சு கொண்டு வர்ற ஸ்னாக்ஸை வச்சி பாhக்கும் போதும் உன் டேர்ன் நீ சமைக்கும் போதும் நல்லா சமைப்பேனும் தெரியுது. சூப்பர் பிகர் வேற? இன்னும் என்னதான் வேணுமாம் உங்க அப்பா அம்மாவுக்கு?” என்று தன் தோழியின் பெருமைகளை கடை பரப்பினாள் வந்தனா.
வுpழி உயர்த்தி பார்த்த தாமரை” இதுல்லாம் எல்லாருக்கும் இருக்கற குவாலிட்டீஸ்தானேப்பா? அவங்க நான் அவங்க சாமி குடும்பத்துக்கு மட்டும் வேலை செய்யனும்னு எதிர்பாக்கிறாங்க. அது எனக்கு பிராப்ளம் இல்ல. பட் ஒரு கம்பல்சன்ல வேலை பார்க்றதுதான் இரிடேடிங்கா இருக்கு.” என்றாள்.
அவர்கள்தான் இவளைக் கண்டு அலறப் போகிறார்கள் என்பதை அறியாமல்!