என் மனது தாமரை பூ 18

18
நாட்கள் சில கழிந்திருந்தன……
இந்த மல்லிக மனச
ஏம் மாமன் பறிக்க
என்று ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தாள் யுவராணி.
மோட்டுவளையை முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் தாமரை செல்வன். இப்போது துளசி ராஜ்கமல் யுவராணி மூவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். தாமரை செல்வனுக்கு கோவையில் தான் இனி வருங்காலம். அங்கே இவன் தங்க வசதியான வாடகை வீடெல்லாம் தயார். பண வரவிற்கு குறைச்சல் இருக்காது என்பதை ஆனந்தி ஸ்டோர்ஸை நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டான். நிர்வாகத்திலும் அவனுக்கு உதவ நம்பிக்கையும் திறமையுமான பணியாளர்கள் இருந்தனர்.
சொல்லப் போனால் மேற்பார்வை வேலைதான் இவனுக்கு. ஆனால் அவன் சிறந்த மேற்பாhவையாளனாக இருந்து தொழிலை மேம்படுத்த வேண்டியது தான் அவனுக்கு எதிரே உள்ள சவால். அதை எளிதாக நிறைவேற்றி விடுவான் என்பதால் இவை எல்லாவற்றுக்கும் காரணமான கதிரவனை மன நிம்மதியுடன்  மனதார வாழ்த்தினான்.
ஆனால் அவனுக்காக இவனால் தொழிலை சிறப்பாக நடத்துவது தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதே? என்று ஒரு பக்கம் சுணக்கமாகவும் இருந்தது. அவனுக்கு அவன் மனம் மகிழும்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தான். அதை அவன தனது கடமையாகவும் நினைத்தான்.
யுவராணிக்கு உடல் நிலை தேறியதும் கோவைக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்து இருந்தான்.. இல்லை என்றால் அவனுக்குப் பைத்தியமே  பிடித்து விடுமே?
அந்த நேரத்திலதான் கதிரவன் அவனது செந்தாமரை விஷயம் கிடப்பில் போட்ட கல்லாக இருப்பதை சொல்லிப் புலம்பி இருந்தான்.
இது விஷயத்தில் அவனால் என்ன செய்ய முடியும்?
செந்தாமரை அவனுக்கும்  தங்கைதான் அல்லவா? அவள் அவனது கதிரவனை மணப்பது அவனுக்கு பேருவகை அளித்தது.
ஆனால் அவள் சின்ன வயதில் இருந்து தாமரை செல்வன் ஒருவனைத் தவிர பிறரிடம் அதிகம் பேச மாட்டாள். எப்போதும் ஒரு ஒதுக்கம் அவளிடம் இருந்து வந்திருக்கிறது.
முதன் முதலாக திருநெல்வேலிக்கு வந்த அவள் ஆர்ப்பரித்ததையும் ‘இனி இங்கேதான் தன் தாய் தன்னை விட்டு விட்டு இவர்களுடன் வசிக்க வேண்டும்’ என்று தெரிந்ததும் அடம் பிடித்ததையும் பின் அடங்கி ஒடுங்கிப் போனதையும்  நினைத்துப் பெருமூச்சு விட்டான்.
செந்தாமரை தங்கள் வீட்டில் ஏன் வளருகிறாள் என்ற காரணம் அவனுக்குத் தெரியாது. ஆனால் அவளை குட்டித் தங்கையாக மிகவும் பிடித்து விட்டது. அவனும் ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்து  வந்து கொண்டு இருந்தான் அல்லவா அப்போது?.
அவள் பதினெட்டாவது வயதில் மீண்டும் ஊருக்கு அழைத்துச் சென்று விட்டனர். அவர்களுடன் அவள் கொஞ்சம் ஆர்வமாகக் கிளம்பியதாகவே அவனுக்குத் தோன்றியதாலும் அவனது தாயார் அப்போது இயற்கை எய்தி விட்ட காரணத்தாலும் அவன் அவளைத் தடுக்கவில்லை. ஆனாலும் அவளை ‘போ’ என்பதற்ககோ ‘போகாதே’ என்பதற்கோ தனக்கு எவ்வித பாத்யதையும் இல்லை என்பதையும் அவன் உணர்ந்துதான் இருந்தான்.
அவனும் அக்காவுடன் வந்து விட்டான். அதன் பிறகு இருவருக்கும் எவ்வித பேச்சுத் தொடர்புகளும் கூட இருக்கவில்லை.
முயன்றிருந்தால் இவளிடம் பேசி இருக்கலாம். ஆனால் அம்மா அப்பாவைக் கண்டதும் நம்மை மறந்து விட்டாளே? என்று ஒரு சின்னக் கோபம். அவள் நன்றாகத்தானே இருக்கப் போகிறாள்? எனும் போது இவன் இவனது  வேலையான கஜாவை கார்னர் செய்யும் திட்டத்தைத் துவங்கி இருந்தான்.
அப்படியே விட்டது தப்போ? என்று மனம் குமைந்தான்.
கஜா இப்போது அந்தப் பெரிய வீட்டில் இல்லை. காலி செய்து அவரது இன்னொரு லைன் வீடுகளில் ஒன்றில் இருப்பதாகத் தகவல். அவ்வளவு பெரிய வீடடில் கோலோச்சியவர் அந்த சிறிய வீட்டிற்கு குடி போய் விட்டார் என்ற போது கொஞ்சம் ஆச்சரியமாகவும் கூட இருந்தது.
‘ரோஷம் குறையுதான்னு பாரு. வந்து மன்னிச்சிருன்னு கூட சொல்ல வேண்டாம். புள்ளையைப் பார்த்துட்டாவது போகலாமுல்ல?” என்ற அக்காவை முறைத்தான்.
துளசியின் முக பாவனையில்  இருந்த ஏதோ ஒன்று தாமரை செல்வனைக் குழப்பியது.
“மாமா…” என்று  பலவீனமான குரலில் யுவராணி அழைப்பது கேட்கவும் துள்ளி எழுந்தான் தாமரை செல்வன். ஓரக் கண்ணில் ராஜ்கமல் வீட்டிற்குள் வந்து கொண்டு இருப்பது விழவும் அவனை நோக்கிப் புன்னகைத்தவாறே யுவராணியின் அறையை நோக்கி நடந்தான்.
துளசி சமையலறையில் இருநு;தார். இருப்பினும் எதையாவது எடுப்பதும் வைப்பதுமாக வீட்டை ரவுண்ட் வந்து கொண்டுதான் இருந்தார்.
துளசி தன் மகள் தன் தம்பிக்குத்தான் என்று சொல்லி விட்டதில் கொஞச்ம் இறுக்கம் தளர்ந்து இருந்தது அந்தக் குடும்பத்தில். அதே நேரம்  தம்பி அவன் மீது அவர் வைத்த வைக்காத எல்லா நம்பிக்கைகளையும் காப்பாற்றி விடுவான் என்று அவருக்குத் தெரியும்.
“என்னம்மா?” என்று பதறினான் தாமரை செல்வன்.
“காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு மாமா” என்று சொன்னதுடன் நிறுத்தாமல் அவனது கையை எடுத்து தன் நெற்றியில் குழந்தையாக அவள் வைத்துக் காட்டவும் ஒரே அடியாக உருகிப் போன தாமரை செல்வன்
உடனடியாக கையை உருவிக் கொண்டு”காய்ச்சல் அடிக்கிற மாதிரி தெரியல ராணிம்மா. இரு தெர்மோ மீட்டர் வச்சிப் பாத்திரலாம்” என்று எதற்கும் இருக்கட்டும் என்று மருத்துவமனையில் இருந்து வரும் போது கேட்டு வாங்கி வந்திருந்த புதிய கிளினிக்கல் தெர்மோ மீட்டரை எடுக்கவும் சிக்னல் தெரியாத இந்த சிம்பன்சியை நினைத்து யுவராணி காலைத் தரையில் உதைக்க அரவம் கேட்டுத் திரும்பிய தாமரை செல்வன்
“இன்னும் பலம் வரல. காலும்தான் வீக்கா இருக்கும்.  இப்படிப் பண்ணா தொண்டை வலிக்கப் போகுது”  எனவும் அங்கே வந்த ராஜ் கமல் “என்னக் கொடுமை சார் இது” என்று சுவற்றில் முட்டிக் கொண்டான்.
; “என்னாச்சு ராசுக்குட்டி?” எனவும் அவனது சீற்றம் அதிகமானது.
“எலிக் குஞ்சு மாதிரி இருக்கா? அவ ராணிம்மா. …” என்று அவன் பேச இடையிட்ட யுவராணி “எருமை மாடு மாதிரி இருக்கான். இவன் ராசுக்குட்டியா?” என்று சொல்லி முடித்தவள் “இதைத்தானே கேக்க வந்த ப்ரோ?” என்றாள்.
‘இப்ப சத்தம் நல்லா வருதே?’ என்று யோசித்த தாமரை செல்வனைப் பார்த்து பம்மியவள் “எனக்கு காய்ச்சல் இருக்கானு பாருங்க மாமா?” என்று மீண்டும் பலவீனமான குரலில் கேட்டுக் கொண்டாள்.
“இந்தக் கொடுமையைத்தான் என்னால தாங்க முடியல. வீட்டுல வயசுப் பையன் இருக்கேன்? கிழடுங்க நீங்க ரெண்டு பேரும் துள்ளி விளையாடுறீங்களா மாமா?” என்றான்
 மெலிதாக சிரித்துக் கொண்டே பற்களை வெளிப்படையாக கடித்த யுவராணியைக் கண்டு மாமன் மச்சான் இருவருக்கும் சிரிப்பு வர “அவ உன் தங்கச்சிடா” என்றான் தாமரை செல்வன்
“ஆனா நீங்க எனக்கு மாமா தானே மாமா? மாமா ஒய்ஃப் அத்தை தானே மாமா?” என்று ராஜ்கமல் அப்hவியாகக் கூறவும் யுவராணி சிரித்துக் கொண்டே கிச்சனுக்குள் ஓடி மறைந்து விட்டாள்.
அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்த தாமரை செல்வன் அவள் அவர்களின் கண்ணுக்கு மறைந்ததும் ராஜ்கமல் புறம் திரும்பினான்.
அவனது சட்டைக் காலரை சரி செய்தவன் “அப்புறம் சந்தனாவை   சந்திச்சியாடா?” என்றான்
இப்போதெல்லாம் இருவருக்கும் இடையே இறுக்கமான தோழமை ஏற்ப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் ராஜ்கமல் அவனைக் கண்டு கொண்டதில்லை. ஆனால் தன்னைத் தொடரும் அந்தப் பாசமான பார்வையை புரியாமல் பார்த்திருப்பான். அதனாலயே அவன் யார் என்று துளசியைத் துருவி அறிந்து கொண்டான். ஆனால் கஜாவின் அட்ராசிட்டி காரணமாக  எதற்கு வம்பு என்று மேம்போக்காக இருந்தாலும் தனக்கும் தன் தங்கைக்குமான வட்டத்தில்  அவனையும் சேர்த்துக் கொண்டான்.
அதனால்தான் ஒன்றாக மூவரும் உணவு உண்ண முடிந்தது. சில மணித்துளிகளாவது ஒன்றாக செலவிட முடிந்தது.
இபபோது அத்தைகைய நாசூக்கு வேலைகள் எதுவும் தேவையில்லை அல்லவா?
“சந்தனா இல்ல மாமா. வந்தனா” என்று திருத்தினான் ராஜ்கமல்.
“அப்படி போடு அருவாளை! அப்போ அந்த வந்தனா பொண்ணுக்கும் உனக்கும் ஏதோ  …” என்று அவன் இழுக்க “ வாயில அடிங்க மாமா. அவ ஒண்ணும் அப்டிப்பட்ட பொண்ணு கிடையாது” என்று கோபமாக பேசுவதாக நினைத்துப் பல்லைக் காட்டினான்
“எப்படிப்பட்ட பொண்ணு கிடையாது?  ராசுக்குட்டி உங்க ரெண்டு பேருக்;கும் ஏதோ சண்டையாமேன்னு கேட்க வந்தேன். சரி. அப்போ உனக்கும் அந்த வந்தனா பொண்ணுக்கும் ….”
இந்த வீட்டிற்கு வந்த நாள் முதல் ராஜ்கமலிடம் தென்பட்ட தங்கையின் உடல்நிலையைப் பற்றிய கவலையை மீறிய மலர்ச்சியை தாமரை செல்வன் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.
தாமரை செல்வன் இருக்கும் போது யுவராணியை; பற்றி அவனுக்கு என்ன கவலை?
வீட்டுப்பக்கம் வருவதை கடமையாக நினைத்து சலிப்பவன் இப்போதெல்லாம் வீட்டிலேயே சுற்றிக் கொண்டு இருப்பதாக ஒரு பிரமை ஏற்பட்ட போது திடீரென்று மறுபடியும் கடையில் போய் உட்கார்ந்து கொண்டான்.
சில நாட்கள் கழித்து மறுடியும் குட்டி போட்ட பூனையானான். என்னவா இருக்கும்? என்று இவன் யோசித்த போதுதான் வந்தனா அவர்கள் இங்கிருந்த நாட்களில் இவனும் வீட்டைச் சுற்றியதும் கோவைக்கு சென்ற நாட்களில் கடையில் தஞ்சமடைந்ததும் தெரிய வந்தது.
ஆகவே முறைப்படி வந்தனாவைப் பற்றி விசாரித்து விட்டான். அவள் தந்தையிடம் மெதுவாகப் பேசிப் பார்த்ததில் அவரும் ‘ஜாதி பேதம் தடையில்லை. ஆனால் குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க வேண்டும். உள்ளுர்க்காரன் மாப்பிள்ளையாக வந்தால் போதும்’ என்றவர் மறக்காமல் மாப்பிள்ளை கவர்ன்மென்ட் உத்தியோகம் பார்ப்பவராக இருக்க வேண்டும்   என்று முடித்து விட ‘சரிதான். மற்றவற்றை விட்டு விட்டாலும் இத்தனைப் பிரச்சனைகள் இருக்கும் தங்கள் குடும்பத்தை ஒத்துக் கொள்வார்களா?’ என்று கொஞ்சம் சுணக்கமாகவே இருந்தது.
 எதாக இருந்தாலும் வந்தனா சம்மதித்து விட்டால் சமாளித்து விடலாம். அது என்ன நிலையில் இருக்கிறது என்று ராஜ்கமலிடம் கேட்டுத் தானே தீர வேண்டி இருந்தது அவனுக்கு?
 “அட நீங்க வேற மாமா! இவ்வளவு நாள் ஸ்டடி ஹாலிடேய்ஸ்ல இருந்தா. அப்புறம் கோயம்புத்தூர் போய் தங்கி எக்ஸாம் எழுதிட்டு வந்தா. அதுக்கடுத்து எதாவது வேலை சோலிக்குப் போகலாமில்ல? இப்படி வீட்டோட அடைஞ்சி கிடந்தா எப்படியாம்?” என்று குறைபட்டுக் கொண்டான்.
“அவ வேலைக்குப் போறது போகாதது பத்தி உனக்கு என்னப்பா?” என்று அவன் லுலுலாய்க்கு அதட்டவும்
“சும்மா குதிக்காதீங்க மாமா! அவ வேலைக்குப் போனாத் தானே நாலு இடத்துல வச்சி மீட் பண்ண முடியும்? நானும் கடையைப் போட்டுட்டு எத்தனை நாள்தான் இங்கயே சுத்துறது? என்று போட்டு உடைத்தான்.
அவனும்தான் யாரிடம் தன் மனக்குமுறலைச் சொல்லுவான் பாவம்?
இனி ஆக்ஷன் எடுக்கலைன்னா நம்மை மாமான்னு மதிக்க மாட்டான் என்று தெளிவாக உணர்ந்த தாமரை செல்வன் “ அந்தப் பொண்ணு சம்மதிச்சா  மாமா உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன் “ என்று வாக்கு கொடுத்தவன்
“ சரி தெரிஞ்சுக்கலாம்னுதான் கேட்கறேன்? இதே ஊர்லதான் அவளும் இருந்திருக்கா. இத்தனை நாள் எப்படிப் பார்;க்காம இருந்தே? அப்படியே இருந்தாலும் முதல்லப்  பார்த்ததும் எப்படிப் பிடிச்சிருச்சு?. இதை நம்பி நான் பெரிய வேலை எல்லாம் செய்யனும். அதனால கொஞ்ம் வெளிப்படையாவே பேசு?” என்று ஆரம்பித்து வைத்தவன் நிதானமாக ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவனுக்கும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டான்.
இதுதான் ராஜ்கமலுக்கு இவனை ரொம்பப் பிடிக்கும். நான் உனக்கு மாமன் எனக்கு நீ மரியாதை தரவேண்டும் என்று நினைக்க மாட்டான். அதே நேரம் சில்லுண்டி வேலைகளிலும் ஈடுபட மாட்டான். அதற்கு இவ்வளவு தூரம் நடந்த பிறகும் யுவராணியிடம் அவன் காட்டும் கண்ணியமே சான்று.
துளசியும் ஓரளவு நடப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தார். சிலவற்றை கண்டும் காணாமல் விடுவதுதான் அவர் வயதுக்கு மரியாதை. என்ன? என்ன? என்று குடைந்து அவர்கள் கொடுக்கும் மரியாதையைக் குறைத்துக்; கொள்வதில் அவருக்கு சம்மதமில்லை. அது அவரது இயல்பும் அல்ல.
தாமரை செல்வன்  இந்தக் குடும்பத்தின் தலைவனாக அல்ல விசுவாசியாக தன்னை நினைப்பவன். அவனை நம்பி காட்டாற்று வெள்ளத்தில் கூட குதிக்கலாம்.
அவன் செய்த ஒரே தவறு கஜாவின் கடந்த கால பிரதாபங்கள் தெரியாத காரணத்தால் ஊருக்குப் போவதற்கு முன் யுவராணிக்கும் அவனுக்குமான மணம் பற்றிப் பேசியதுதான்.
எப்படியும் அவர்கள் திருமணம்  பற்றிப் பேச வேண்டும். அதைப் பற்றி பேசி விட்டு அவன் அங்கேயே இருந்தால் கஜா எதாவது அர்ச்சனைகளை வழங்குவார். அவன் அதைக் கேட்டுக் கொண்டாலும்  மறறவர்களுக்கு சங்கடமாக இருக்கும். ஏதோ பேசி முடித்து ஒரு வழி காணட்டும் என்று நினைத்தான்.
ஒரு வேளை முடியாது என்றாலும் தன் வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக தன்னைப் பிரித்து விட்டான் என்று அவனது அக்காவைப் போல யுவராணி காலம் முழுவதும் கவலைப் பட நேராது என்றுதான் நினைத்தான்.
சரி குரங்கு பிடிக்கப் பிள்ளையாராகி விட்டது!ஏதோ அதிலும் ஒரு நன்மையாக இதுவரை தன் கனவனை கிஞ்சிற்றும் விட்டுத் தராத துளசி தன் குழந்தைகளின் முன் அவர் தனக்கு பெரிதில்லை என்று சொன்னதே போதும்.
துளசியைப் பொறுத்த வரை கஜா வெளியே எப்படி இருந்தாலும் அவருக்கும் அவரது குழநதைகளுக்கும் உண்மையாக இருந்தார். எடுத்தெறிந்து பேசுவதும் கேடு கெட்ட வார்த்தைகளைப் பேசுவதுமாக இருந்ததைக் கழித்து விட்டால்  அவர் ஒரு பொறுப்பான தகப்பனாகவே இருந்தார்.
ஏன்? புடிப்பை ராணி எறக்கட்டியதும் அவளுக்கு ஒரு வேலையே அவர் வாங்கித் தரவில்லையா? ‘பொம்பளப் புள்ள படிச்சு என்ன சாதிக்கப் போவுது ? என்றோ ‘படிச்ச வரைக்கும் போதும் வீட்டுல கிட’ என்றோ சொல்லவில்லையே?’ அதேப் போல ராஜ்கமலையும் தோப்பைப் பாரு’ என்று விரட்டாமல் அவனுக்குப் பிடித்தத் துறையில் வேலை பார்க்க விட்டு விட்டாரே? என்பதுதான் துளசிக்கு. ஆனால் இதையும் அவர் கௌரவம் கருதி செய்து இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம்
எல்லாவற்றையும் விட மகளுக்குப் பாட்டு கேட்பதில் உள்ள ஆர்வத்தைப் பெருமிதமாகத்தான் பார்ப்பார்.
என்னத்தைச் சொல்ல? கஜாவை வளர்த்த விதம் சரியில்லை என்று செத்த கிழவி மேல் பாரத்தைப் போட்டு விட்டு காலத்தைக் கடத்தி வந்தார் துளசி.
ஆனால் மகளுக்கே விஷம் கொடுக்கத் துணிந்த பின் அவரை சகிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
நாற்காலியில் அமர்ந்த ராஜ்கமல் “சொல்லுங்க மாமா” என்றான் கொஞ்சம் படபடப்புடன்.
“சரி. அப்போ நான் கேட்டதுக்கு பதில்?”
“ அது… அவளை நான் இது வரை பார்த்ததில்லைனு நினைக்கிறேன். அவளும் மேக்சிமம் ஹாஸ்டல்லதான் இருந்திருக்கா. “ என்றான். தோடர்ந்து அவளது கல்லுரி வாழ்க்கை பற்றிக் கூறி
ஹாஸ்டல்… கோவை எனவும் அவனுக்கு செந்தாமரை நினைவு வந்தது.
அட ஆமாம்! கதிரவன் சொன்னதும் சுந்தரம் சொன்னதும் ஒரே இடத்தைப் பற்றிப போல அல்லவா இருக்கிறது? ருhஜ்கமலும் அப்படித்தான் சொல்கிறான். அப்படி என்றால் செந்தாமரையும் வந்தனாவும் அறைத் தோழிகளா?
இப்போதுதான் எல்லாம் செல்போன் மயமாகி விட்டதே? இந்த யுவராணி வேறு வந்தனாவின் தோழி என்றாள். அதை விசாரித்து விடலாம் என்று முடிவெடுத்து “ ராணிம்மா” என்று குரல் கொடுக்கு முன்னரே அவள் அங்கே ஆஜர் ஆகி இருந்தாள்.
“எப்போ எப்போனு இருப்பா போல” என்று கடு கடுத்தான் ராஜ்கமல்
“அவகிட்ட அப்புறமாப் பேசுங்க மாமா. “ என்று கெத்து மெயின்டெயின் செய்தான்.
“ஒண்ணும் பிரச்சனை இல்ல. ராணிம்மா உனக்கு செந்தாமரைனு யாரையாவது தெரியுமா” என்று கேட்டான்.
முதலில் இல்லை என்று தலை அசைத்தவள் நெற்றியைத் தட்டி “ வந்தனா அடிக்கடி புலம்புவா. ரெண்டு பேரும் கோயம்புத்தூர்ல ஒரே வீட்ல தங்கி இருந்தாங்க. இப்ப அவங்க அவங்க வீட்டுக்கு வந்திருப்பாங்க. ” எனவும் அது அவள்தான் என்ற கிட்டத்தட்ட உறுதி  ஆனது.
அது வேறு செந்தாமரையாகவும் இருக்கலாம். ஆனால் அவள் குறித்த இணையவழித் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
“சரி நீ போய் ஹெல்த்தி ட்ரிங்க் குடிடாம்மா. ரொம்ப டயர்ட் ஆகிட்ட” என்று பரிவுடன் தாமரை செல்வன் அக்கா மகளை அனுப்பி வைத்தான்.
“உங்களுக்கு மாமா?” என்று அவனிடம் விசாரித்தவள் ராஜ்கமலை திரும்பியும் பார்க்கவிலை.ஆனால் வரும்போது கண்டிப்பாக அவனுக்கும் சேர்த்துதான் கொண்டு வருவாள் என்பது தெரியம் ஆதலால் ராஜ்கமல் சும்மாவாச்சும் முறைத்து வைத்தான்.
“இப்ப என்ன உங்க பிரச்சனை மாமா? வந்தனா பத்திப் பேசறதா இருந்தா பேசலாம். என் இன்னொரு தங்கச்சிப் பத்தி அவங்க என் மச்சான் கதிரவனைக்  கட்டிக்கிட்டதுக்கு அப்புறம் பேசலாம்;” என்றவன் பிறதொரு பெண் பற்றிப் பேசுவது தனக்குப் பிரியமில்லை என்று காட்டினான்.
“சரி. சாரி. நீ கண்டினியூ பண்ணு”
“அவளைக் கோவில்ல வச்சுப் பார்த்தேன். அவளோட யாசின் பெரியம்மா வந்து அவளைக் கூட்டிட்டுப் போனாங்க. இந்த காலத்துல வண்டி ஓட்டத் தெரியாம ஒரு பொண்ணானு ஆச்சரியமா இருந்துச்சு.
நெறைய வாட்டிப் போராடி அவளை மீட் பண்ணிப் பேசுனதுல சிலரைப் போல அவகிட்ட அலட்டல் இல்ல. என்னவோ அவளைப் பிடிச்சிருச்சு. காதலுக்கு காரணம் இருக்க முடியாது. காரணம் இருந்தா அது காதலா இருக்க முடியாதுன்னு ஒரு படத்துல டயலாக் வரும். அது ஷேக்ஸ்பியர் சொன்னார்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன். ஆனா அந்த வார்த்தை என்னைப் பொறுத்தவரை நிஜம்தான்.
ஆம். யுவராணி விஷம் சாப்பிட அன்று கூட அவள் ஃபோன் மூலம் யாசின் பெரியம்மாவை அழைத்து மீண்டும் போய்ச் சேர்ந்திருந்;தாள். “இதுக்கு நான் உன்னை அந்தக் கோயில்லயே விட்டுக் கூட்டிட்டு வந்திருபு;பேன். ஃபிரண்டைப் பார்க்கறேன்னு என் இடுப்பைப் பதம் பார்க்கற” என்று யாசின் தலையில் அடித்துக் கொண்டதும் வந்தனா பல்லைக் காட்டி சமாளித்ததும் தனிக் கதை.
“ஓகே. “ என்று நாற்காலியை விட்டு எழுந்தான் தாமரை செல்வன்.
“நான் உங்க தாய்மாமாங்கறதால மட்டும்தான் யுவராணிக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சு. இது…இது… என்ன?” என்ற போது அவன் குரல் தடுமாறியது. பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
உள்ளே  நின்று கொண்டு ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருந்த யுவராணிக்கு விக்கியது.
நின்ற இடத்தில் இருந்தே அவள் “மாமா” என்று கேவினாள்
உன் மீது நான் வைத்த மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
“உன் மனசை நீ நல்லா விசாரிச்சுப் பாரு. அது என்ன சொன்னாலும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனா நீ உன்னைப் பத்தி உன் மனசு என்ன நினைக்குதுங்கறதைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்”
“அதுக்கு” என்ற துளசி ராஜ்கமல் ஆகியோருக்கு பதில் யுவராணிக்கு சொன்னான்.
“உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸேஷனுக்கு பொள்ளாச்சிக்கு அனுப்பலாம்னு இருக்கேன். நம்ம கதிரவன் வீட்டுக்குத்தான். இங்க நடந்த விவகாரம் பூரா அவனுக்குத் தெரியும். அதுவும் உனக்கு அத்தை மாமா வீடுதான். சண்முகம் சாரும் சரின்னு சொல்லி இருக்காராம். “ எனவும்
“உளறாதீங்க மாமா. அவன் இங்க நம்மை ராணியைப் பார்த்து பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லி வச்சிருப்பான். அவன் டிராக் வேற தனியாப் போகுதே. இதுல இவளை எங்க அங்க அனுப்பறீங்க?” என்று தன் விருப்பமின்மையைக் காட்டினான் அண்ணன்காரன்.
“அதெல்லாம் பேசி சரி பண்ணியாச்சு. இப்ப அவளுக்கு அங்க எந்தத் தொந்தரவும் இருக்காது. கொஞ்சம் அமைதியா தனியா இருந்து யோசிச்சு எனக்கு பதில் சொல்லட்டும். அக்காவும் கூடப் போகனும்னாலும் சரிதான்” என்றான்
‘ஆஹா! இவளைப் பேக் செய்றதுக்குத்தான் மோட்டு வளையை முறைச்சுப் பார்த்துகிட்டு இருந்தானா?’ என்று முறைத்தார் துளசி.
பின்னே தம்பியின் மனம் அவளுக்குத்தான் தற்போது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து விட்டதே. இந்தக் கதை எல்லாம் எதற்கோ அவன் பூச் சுற்றுவது என்பது புரியாமலா இருக்கும்? இருந்தாலும் நடப்பது நடக்கட்டும் என்று பாரத்தை தாமரை செல்வன் தலையில் போட்டு விட்டு
“ராசுக்குட்டிக்கு வெளி சாப்பாடு ஒத்துக்காது. அதனால நானும் போய் ரெண்டு நாள் தங்கி நிலவரம் எப்படின்னு பார்த்துட்டு வந்திhறேன். அவளை ஒரு பத்து நாள் அங்க தங்க சொல்லலாம். எதுக்கும் அவங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையேன்னு இன்னொரு தரம் கேட்டிடு. “ என்று முடித்துக் கொண்டார் துளசி.
பல வருடங்கள் கழித்து தனது திருமலை அண்ணனைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடுவாரா என்ன?
திருமலை அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாய் கேள்விப்பட்டது. அதன் பிறகு பொள்ளாச்சியில் வைத்து ஒரு தடவை வேம்பு மதனியைப் பார்த்தது. அவர் மகளைப பார்க்கவில்லையே? அவளைப் பார்க்கும் ஆவல் பொங்கிப் பெருகியது அவருக்கு.