கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 10

 

“என்ன வழி அரவிந்த் அது?” என்று சூர்யா ஆர்வமாக கேட்க

 

“நம்ம பேசாம அவ ப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் இருக்காங்க, தேன்மொழி,தேவின்னு அந்த பொண்ணுங்க கிட்ட, இத பத்தி பேசி பாப்போம். அவங்க நமக்கு ஹெல்ப் பண்ண ஒத்துக்கிட்ட, நமக்கு நிலா வீட்ல பேச உதவிய இருக்கும். அதோட நிலாக்கு அந்த ரெண்டு பேரும் உயிர். அவங்க என்ன சொன்னாலும் அவ கேப்பா… சோ நம்ம முதல்ல அவ ஃப்ரண்ஸ்சை அட்டாக் பண்ணுவோம்” என்றதும் சூர்யா, “ஓகேடா இதுவும் நல்ல ஐடியா தான்” என்றவன் உடனே, “அது சரி நிலானி ப்ரண்ட்ஸ் பத்தி உனக்கு எப்டி தெரியும்? பேர் வரை சரியா சொல்றா? என்ற தன் அதி முக்கியமான சந்தேகத்தை கேட்க. 

 

அரவிந்த் கடுப்பாக, ” இது இப்ப ரொம்ப முக்கியம்?” என்று கத்த “சும்மா சொல்லு டா” என்றான் சூர்யா.

 

“நான் தான் அவளை பொண்ணு பாக்க போறதுக்கு முன்னயே அவளை பத்தி முழுக்க விசாரிச்சேன்னு, உனக்கு தெரியும் இல்ல.?? அப்ப அவ ஃப்ரண்ஸ் பத்தி தெரிஞ்சுட்டு இருக்க மாட்டேனாடா கூறுகெட்ட குக்கரு.” என்று அரவிந்த் திட்ட, சூர்யா, “ஓஓஓ ஆமாம்ம்ல்ல…” என்று தலையில் அடித்துக்கொள்ள. 

 

அரவிந்த், “இல்ல இல்ல… ஆமா மட்டும் தான்.”

 

“சரி அரவிந்த், அப்ப நாளைக்கு நம்ம அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண போலாம்” என்று சூர்யா சொல்ல.

 

“சாருக்கு அவ்ளோ அவசரமக்கும்?” என்று அரவிந்த் கிண்டல் செய்ய சூர்யா அழகாய் அசடு வழிந்தான்.. 

 

“அது என்னடா தீடிர்னு நீ இப்டி காதல்ல விழுந்துட்ட?, நீ காலேஜில் படிக்கும் போதும் சரி, லண்டன்ல இருந்த இரண்டு வருஷமும் சரி எவ்வளவு பொண்ணுங்க உன் பின்னாடி சுத்துச்சிங்க. அதுங்க ஒன்னை கூட நீ பாத்தது கெடயாது.. ஆனா, இப்ப நேர்லயே பார்க்காத நிலா கிட்ட விழுந்துட்டியே? அது எப்டிடா?” என்று தன் பெரிய டவுட்டை அரவிந்த் கேட்க…

 

“டேய் அவங்க எல்லாருக்கும் வந்த காதல் சூர்யா மேல இல்ல… சூர்யா சன் ஆப் குமரேசன் மேல தான். இன் ஷாட் என்னோட பணம், வசதி மேல தான் அவங்க காதல். அப்டி பட்ட பொண்ணுங்களை நா எப்டிடா காதலிப்பேன்.. நீ நிலானி பத்தி சொல்லும் போதே அவளோட நல்ல மனசு எனக்கு தெரிஞ்சது. அந்த பையன் மேல அவளுக்கு இருக்கிறது காதல் இல்ல அது தூய்மையான அன்பு, நம்பிகையின்னு புரிஞ்சுது. அந்த அன்பு, நம்பிக்கையோட சேர்ந்து அவ காதலும் எனக்கு மட்டும் கிடைக்கன்னு பேரரசை என் மனசுல வந்துடுச்சுடா!” என்றான் அழகிய புன்னகையுடன்… 

 

“உன் விருப்பம் நிறைவேறும் மகனே” என்று அரவிந்த் கையை காட்ட இருவரும் தங்கள் அடுத்த வேலையில் முழ்கினார்.

 

மாறுநாள் அரவிந்த் பேயாக அலைந்து திரிந்து தேவி ஃபோன் நம்பரை கண்டுபிடித்து அவளுக்கு ஃபோன் செய்து நிலாவை பற்றி பேச வேண்டும் என்று சொல்லி தேனுவையும் அழைத்து வர சொல்ல… தோழிகள் இருவரும் இந்த அரவிந்த் எதுக்கு நம்ம கிட்ட பேசணும்னு சொன்னான். அதுவும் நிலாவை வேணான்னு சொன்னா அப்புறம் என்று குழம்ப.

 

தேனு, “நீ எதுக்குடி இப்ப குழம்புற? என்ன ஏதுன்னு போய் தான் பார்ப்போமே..!!” என்று சொல்ல தேனும்,தேவியும் அரவிந்தை பார்க்க சென்றனர்.

 

சூர்யாவும், அரவிந்த்தும் காபி ஷாப்பில் தேவி, தேனுக்காக காத்திருக்க. அரவிந்த் எதையே யோசித்துக் கொண்டு இருந்தான். “என்ன மச்சி பிளாஷ்பேக் கா?” என்று சூர்யா கேட்க… 

 

“என்னடா திடீர்னு உலர்ர..?? என்ன பிளாஷ்பேக்.??” என்று தெரியாத மாதிரி கேட்க…

 

“டேய்..!! நடிக்காத டா? நா எதை பத்தி சொல்றேன்னு உனக்கு நல்லவே தெரியும். சும்மா ஒன்னும் தெரியாத மாதிரி மூஞ்சிய வச்ச, நா நம்பிடுவேனா? இந்த காபி ஷாப்பில் தானா நிலா உன்னை நல்லா கழுவி உத்தி, மந்திரிச்சு வேப்பில அடிச்சு. நீ பல்பு வாங்குன.. அதுக்குள்ள நீ அதை மறந்துட்டதா சொல்லுவ, நா அதை நம்பனுமா? ஏன்டா என்னையே ஏமாத்த பாக்குறியா நீ…’ என்று சூர்யா கலாய்க்க.

 

“டேய்… நீ வேற மானத்தை வாங்கிட்டு,சும்மா இருடா” என்று தலையில் அடித்து கொள்ள. சூர்யா சத்தமாக சிரித்தவன். “ஏன்டா இங்க வந்த மானம் போகும்னு தெரிஞ்சும் நீ எதுக்கு இங்க மீட்டிங் பிக்ஸ் பண்ண” என்று விடாது சிரிக்க.. 

 

“நா எங்கடா பிக்ஸ் பண்ணேன். அந்த ரெண்டு பொண்ணுங்க தான் இங்க வர சொல்லுச்சு.. நா வேணாம் வேற எங்கேயாவது மீட் பண்ணலாம்னு சொன்ன… அந்த தேன்மொழி,

நீங்க சொல்ற இடத்துக்கெல்லாம் எங்களால் வர முடியாது. உங்களுக்கு வேணும்னா, நாங்க சொன்ன இடத்துக்கு வாங்க.. முடியாதுன்ன போங்கன்றா டா அவ, சரியான திமிரு புடிச்சவ…” என்று அரவிந்த் புலம்ப

 

“ஏன்டா, நிலா ஃப்ரண்ட் நிலா மாதிரி தானே இருப்பா, வேற எப்டி இருப்பா…?”

 

 “ஆமா டா சூர்யா. நீ சொல்றது கரெக்ட் டா. நிலா பிசாசுன்னா, இந்த தேன்மொழி கொள்ளிவாய் பிசாசா இருப்பா போல” என்று சொல்லி முடிக்கவில்லை… “யார பார்த்து நீ கொள்ளிவாய் பிசாசுன்னா…?” என்று கோபமாக வந்த குரலில் நண்பர்கள் டக்கென்று திரும்பி பார்க்க, அங்கு தேன்மொழி அனு உலை போல் கொதித்துக் கொண்டிருந்ததாள்.

 

அரவிந்த் அருகே வந்த தேன்மொழி, “ஏன்டா டேய்… உனக்கு எவ்ளோ திமிரு இருந்த என்னை கொள்ளிவாய் பிசாசுன்னு சொல்லுவா?” என்று கண்டபடி திட்ட, அரவிந்தும், சூர்யாவும் செய்வதறியாது முழித்தனர். தேவி, தேனுவை சமாதானப்படுத்த முயல.. தேனு எதையும் காதில் வாங்காமல் திட்டுவதை தொடர.. அரவிந்த் பேயை பார்த்த குழந்தை போல் பயந்து தேனுவை பார்க்க. சூர்யா தேனுவிடம் “ப்ளீஸ் மா, எல்லாரும் பாக்குறாங்க ப்ளீஸ் கொஞ்சம் உக்காந்து பேசும்மா” என்று கெஞ்ச. தேனு சுற்றி முற்றி பார்த்தவள் அரவிந்தை முறைத்தபடி அமர்ந்தாள்.

 

“இப்ப எதுக்கு எங்களை இங்க வரசொன்னீங்க?” என்று தேனு கோபமாக கேட்க. அரவிந்த் ஏதோ பேச ஆரம்பிக்க… தேனு உடனே ‘நீ பேசாத, நான் ஆல்ரெடி உன் மேல செம்ம கடுப்புல இருக்கேன். இப்ப நீ என்னை பிசாசுன்னு வேற சொல்லிட்ட” என்று கடுப்பாக சொல்ல. அவளை இடைமறித்த தேவி, “பிசாசு இல்ல தேனு… கொள்ளிவாய்பிசாசுன்னு சொன்னாரு” என்று சொல்ல, அவளை முறைத்த தேன்மொழி, “அது இப்ப ரொம்ப முக்கியமா டி, நீ வாயை மூடு’ என்று கத்த. 

 

” ஆமாங்க… நீங்க மறுபடியும் ஆரம்பிக்காதீங்க” என்று அரவிந்த் அப்பாவியாக சொல்ல… அவனை பார்த்து, “நீ வாய மூடு டா. அவ என் ஃபரண்டு, என்ன வேணுன்னா சொல்லுவா… உனக்கு என்ன..?? என்று அதற்க்கும் கத்த, சூர்யா அரவிந்தை பாவமாக பார்த்தான். 

 

தேனு “நீங்க முதல்ல எங்களை ஏன் வர சொன்னீங்க? அதை சொல்லுங்க” என்றாள் கடுப்புடன்…

 

“அது வந்து…” என்று அரவிந்த் ஆரம்பிக்க, “டேய்… உன்னை பேசாதன்னு சொன்னேன் இல்ல” என்ற கண்களை உருட்டி முறைக்க… 

 

“ஏங்க இப்ப நீங்க தானா. எதுக்கு கூப்டிங்கன்னு கேட்டீங்க?” என்று சொல்ல.. அரவிந்தை முறைத்த தேன்மொழி, “நா ஒன்னும் உன்னை சொல்ல சொல்லல… ஹலோ சார் நீங்க இதோட ஃபரண்டு தானா.?? இது எங்களை எதுக்கு வர சொல்லுச்சுன்னு உங்களுக்கு தெரியும்னா, நீ சொல்லுங்க இல்ல நாங்க கிளம்புறோம்…” 

 

“ஹலோ என்னங்க..?? அது இதுன்னு எதோ ஆடு,மாடா சொல்ற மாதிரி சொல்றீங்க. இது நல்ல இல்ல ஆமாம்…”

 

“நீ என்ன பிசாசுன்னு சொல்லும் போது..?? என்று தொடங்கியவள், தேவி வாயை திறக்க அவளை பார்த்தவள், “சரி டி கொள்ளிவாய் பிசாசு போதுமா?” என்றவள், திரும்பி அரவிந்தை பார்த்து “அப்டி சொல்லும் போது… எனக்கு மட்டும் நல்லா இருக்குமாக்கும்.” என்று பதிலுக்கு பதில் பேச…

 

“அய்யோ… போதும் கொஞ்சம் நிறுத்துங்க ப்ளீஸ்” என்று சூர்யா கத்தியே விட்டான்.

 

‘மிஸ்.தேன்மொழி அண்ட் தேவி. நான் தான் உங்களை இங்க வர வச்சேன். நிலானி பத்தி பேச…” 

 

“நீங்க யாரு..?? நீங்க எதுக்கு நிலாவை பத்தி பேசானும்?” என்று தேவி கேட்க.

 

“என் பேரு சூர்யா” என்று தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டவன்.. நிலாவை கல்யாணம் செய்யவிரும்புவதையும், நேற்று அரவிந்த், சூர்யா இடையே நடந்த பேச்சுவார்த்தையும் சொன்னவன். “அதை பத்தி பேச தான் உங்க ரெண்டு பேரையும், இங்க வர வச்சோம்” என்று அனைத்தையும் சொல்லி முடித்தான்.

 

தேனும், தேவியும் சூர்யாவையே பார்த்து கொண்டு இருந்தனர். பின் தேவி “நீங்க சொல்றதெல்லாம் ஓகே தான். ஆனா, இத பத்தி எங்க கிட்ட ஏன் பேசுறீங்க? நீங்க நியாயமா நிலா வீட்ல இல்ல பேசணும்”

 

“கரெக்ட் தாங்க. ஆனா, இத பத்தி உங்க கிட்ட பேசி நீங்க எங்களுக்கு உதவிய வந்து நிலா அப்பா, அம்மா கிட்ட பேசினா. நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதோட நிலா அரவிந்த்கிட்ட அவங்க பார்த்து பேசினது எல்லாத்தையும் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்?” என்றவன் பெண்கள் இருவரையும் பார்க்க, தோழிகள் இருவரும் “ஆமாம்” என்று தலை ஆட்ட. 

 

“ம்ம்ம் அப்றம் எப்டிங்க? நான் நிலா வீட்டுக்கு போய் பொண்ணு கேக்க முடியும்? நிலானி மறுபடியும் ஏதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்த தான் பாப்பாங்க” என்று சூர்யா சொல்ல. 

 

தேவி “ஆமா” என்று தலை ஆட்ட, தேனு, “அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?’ என்று கேட்க… 

 

“அத சொல்றதுக்கு முன்னாடி, நா ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்றீங்கள? என்ற அரவிந்தை‌ பார்த்து. தேனு ஏதே சொல்ல வாயெடுக்க தேவி அவளை அடக்கியவள்..! “நீங்க சொல்லுங்க சார்” என்றாள்.

 

“தாங்ஸ் தேவி” என்றவன், ” நிலா எப்பவோ பாத்த ஒருத்தனுக்காக கடைசி வரை கல்யாணம் பண்ணாமல், இப்டியே இருக்குறது உங்களுக்கு ஓகே வா?” என்று கேட்டது தான்… உடனே தேனு மறுபடியும் ஆக்சன் மோடுக்கு போனவள், “ஹலோ நாங்க எப்ப அப்டி சொன்னோம். அவ கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும்னு தான் நாங்களும் ஆசைபடுறோம். ஆனா, அவ எதையே மனசுல வச்சிட்டு கல்யாணமே வேணாம்னு ஒத்த கால்ல நிக்குற.. நாங்களும் எவ்ளவோ பேசிப் பார்த்துட்டோம்.. அவ பிடி கொடுக்க மாட்டோங்குற… அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?” என்று சொல்ல..

 

சூர்யா உடனே, “வெரிகுட் அப்ப நீங்க ரெண்டு பேரும், நிலானி வீட்டுக்கு நாங்க பேசப் போகும் போது. எங்களுக்கு சப்போட்டா வாங்க. அப்றம் நடக்கவேண்டியத நம்ம அப்றம் யோசிப்போம்…”

 

“என்னங்க விளையாடுறீங்க? நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது இதுல நாங்க எப்டி உங்க கூட வருவோம்னு எதிர் பாக்குறிங்க?” என்றாள் தேனு.

 

சூர்யா சின்னதாய் சிரித்தவன், ‘நீங்க என்னை பத்தி எங்க வேணும்னாலும் விசாரிங்க. அதுக்கு அப்றம் எனக்கு ஹெல்ப் பண்றதா? வேணாம்னு முடிவு பண்ணுங்க” என்று எழுந்தவன். “எனக்கு தெரியும் நீங்க கண்டிப்பா எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்க… ஏன்னா? உங்களுக்கு நிலானி மேல பாசம் அதிகம். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னா, நீங்க ரெண்டு பேரும் என்ன வேணும்னாலும் செய்வீங்க” என்றவன் தன் ஃபோன் நம்பரை அவர்களிடம் கொடுத்து விட்டு அரவிந்தை அழைத்து கொண்டு சென்றுவிட்ட. இங்கு தோழிகள் இருவரும் திரு திரு என முழித்து கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டனர்.

 

சூர்யா சென்ற பிறகு தேவி, ‘இப்ப என்ன பண்றது தேனு? இவரு பாட்டுக்கு நம்ம சப்போர்ட் வேணும்னு சொல்லிட்டு போறாரு… இப்ப நம்ம என்ன பண்றது? என்று புலம்ப… 

 

தேனு “நீ எதுக்குடி புலம்புற? அந்த அரவிந்தை பார்த்த தான், பிராடு மாதிரி தெரியுதே தவிர, அந்த சூர்யாவை பாத்த நல்ல மாதிரி தான் தெரியுது. நம்ம நமக்கு தெரிஞ்ச கான்டாக்ட் வச்சு அவரை பத்தி விசாரிப்போம். அவரு நம்ம நிலாக்கு பொருத்தமா, இருந்த அவருக்கு ஹெல்ப் பண்ணுவோம்.”

 

“அது சரி தேனு, ஆனா, இந்த விஷயம் நிலாவுக்கு தெரிஞ்சா நம்ம அவ்ளோ தான். நம்ம உரிச்சு உப்பு தடவி வெயிலில் காய போட்டுடுவா அவ…”

 

“அதுக்கு பாத்த… அவளை அப்டியே விட முடியுமா தேவி.? அவளுக்கும் கல்யாணம் ஆகணுமில்ல. எப்பவோ நடந்ததை நினைச்சு அவ முழு வாழ்க்கையையும் அழிச்சுக்க நெனைக்குற… அதை பார்த்துட்டு நம்ம சும்மா இருந்தா. அப்றம் நம்ம என்னடி ப்ரண்ட்ஸ்?”

 

“அதுவும் சரிதான். நம்மால முடிஞ்ச அளவு முயற்சி செய்து பாப்போம். என்ன? மிஞ்சு போன ஒரு லைப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டி வரும், அவ்ளோ தான்” என்ற தேவியை பார்த்து “எதுக்குடி இன்சூரன்ஸ்?” என்று தேனு கேட்க. 

 

“பின்ன இந்த விஷயம் நிலாக்கு தெரிஞ்ச நம்ம கதி அதோகதி தானா… அதுக்கு தான் ஒரு சேப்டிக்கு இன்சூரன்ஸ்” என்று இருவரும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

 

மறுநாள் வீட்டிற்குள் நுழைந்த தேனுவிடம் வந்த தேவி, “நீ போன விஷயம் என்னடி ஆச்சு?” என்று ஆர்வமாக கேட்க… 

 

“அடியேய் முதல்ல என்னை உட்கார விடுடி” என்று கால்களை நீட்டி உட்கார்ந்தவளை உலுக்கிய தேவி. “அதான் உக்காந்துட்டா இல்ல, இப்ப சொல்லு” என்று நச்சரிக்க.. 

 

“அடியேய் பிரண்டாதடி, சொல்றேன்” என்றவள். “சூர்யா பற்றி விசாரிச்சேன். எல்லாருமே நல்ல விதமாக தான் சொன்னாங்க. நல்ல பையன், நல்ல குடும்பம், எந்த கெட்ட பழக்கமும் இல்ல, அந்த அரவிந்த் பிரெண்ட்ஷிப் தவிர” என்றவளை செல்லமாக முறைத்த தேவி, “ஏன்டி… என்னதான் உனக்கு அவர புடிக்காட்டியும், இப்படியா பேசுறது? இது நல்லா இல்ல தேனு” என்றவளை முறைத்த தேன்மொழி, “அடியேய்… என்னடி? அவனுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுது? என்ன மேட்டர்?” என்று முறைக்க…

 

“ஏய் ச்சீ… அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, நீ சும்மா என்ன முறைக்காத” என்றவளை, “அது” என்று விரால் நிட்டி மிரட்டிய தேன்மொழி, “சரி நீ போன விஷயம் என்ன ஆச்சு? அத சொல்லு தேவி? சூர்யா பத்தி என்ன சொன்னாங்க?” 

 

“நீ சொன்னது தான் தேனு… சூர்யாவை பத்தி எல்லாரும் நல்லபடியாக தான் சொன்னாங்க. அதோடு யாரை பத்தியும் நல்லபடி ஒரு வார்த்தை கூட பேசாத நம்ம பாஸ் கூட அவரை பத்தி ரொம்ப நல்லவிதமா சொன்னாருன்னா பாத்துக்க!…”

 

“அப்டியா.!!! அந்த கடுவன்பூனையே நல்லவிதமா, சொல்லுதுன்னா கண்டிப்பா அவர் நல்லவர் தான்” என்றாள் தேனு.

 

“சரி தேனு, இப்ப நாம என்ன பண்றது? அந்த சூர்யா நல்லவர்னு தெரிஞ்சு போச்சு. அடுத்த ஸ்டெப்?” என்று தேவி கேட்க இருவரும் யோசனையில் முழ்கினார். 

 

இருவரும் ஒரே நேரத்தில் “ஐடியா” என்று கத்த. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க.

 

தேவியை பார்த்த தேனு “ஏய் நா நெனைக்குறதை தானே நீயும் நெனச்சே?” என்று கேட்க…

 

“அப்ப நீயும் அதை தான் நெனச்சியா?’ எனறாள் தேன்மொழி.

 

“ஆமாடி இந்த விஷயத்துக்கு அவ தான் சரியான் ஆளு” என்று தேவி சொல்ல இருவரும் hify அடித்துக்கொண்டு கிளம்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!