கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 11

அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் தேவியும், தேனுவும் யாருக்கோ காத்துக்கொண்டு இருக்க… “ஏய் தேவி என்னடி இன்னும் காணும்…?”

“தெரியலயே தேனு, ஒருவேளை அட்ரஸ் தெரியாம எங்கையும் சுத்திட்டு இருக்குமோ?” என்ற தேவியை பார்த்த தேனு, “யாரு அவ?! அட்ரஸ் தெரியாம?? அடி போடி… அவ எல்லாம் விட்ட ஊரையே வித்துடுவா. நீ வேற..?? என்று சொல்லி முடிக்க… “என்னக்கா என்னை பத்தி தான் ரொம்ப பெருமையா பேசிட்டு இருக்கீங்க போல?” என்று குரல் வந்த திசையில் நின்று கொண்டு இருந்தாள் சந்தியா(சின்ன சூர்ப்பனகை).

“வாடி பிடாரி நம்பர் டூ” என்று தேவி அவளை கிண்டல் செய்ய..?? “அக்காஆஆஆஆ!!” என்று பற்களை கடித்த சந்தியா தேவியின் தலையில் ஒரு கொட்டு வைக்க.. தேவி, “ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ” என்று தலையை தடவிக்கொண்டே, “ஏன்டி பிடாரி என்னை கொட்டுனா? என்று கத்த, 

“நீங்க எதுக்கு என்னை பிடாரின்னு சொன்னீங்க?” என்று இருவரும் மறிமறி சண்டையிட.. 

“அடச்சீ… நிறுத்துங்க உங்க சண்டைய, சின்ன புள்ளைங்க மாதிரி அடிச்சிக்கிட்டு” என்று தேனு அதட்ட…

“நா என்னக்கா செஞ்சேன்.. இதோ இந்த தேவி அக்கா தான் முதல்ல ஆரம்பிச்சிது, அத கேளுங்க” என்று சந்தியா சொல்ல..

“ஒஒஒ பேசனா? அதுக்கு நீ என்னை கொட்டுவிய..?? அக்கான்னு ஒரு மரியாதை வேணாம்” என்று தேவி குதிக்க… 

“அய்யோ… இப்ப ரெண்டு பேரும் நிறுத்த போறீங்களா? இல்ல நா எந்திரிச்சு போக வா” என்ற தேன்மொழியின் வார்த்தையில் சந்தியா, தேவி இருவரும் அடங்கினார்.

“சாரி தேனுக்கா’ என்று திரும்பி தேவியை பார்த்த சந்தியா, “உங்களா நா அப்றம் டீல் பண்ணிக்கிறேன்’ என்று உதட்டை சுருங்கி ஒழுங்கு காட்ட.. தேவி அலட்சியமாக “ஐ ஆம் வெயிட்டிங்” என்று விஜய் ஸ்டைலில் சொல்ல, தேனு தலையில் அடித்துக்கொண்டவள். “ப்ளீஸ் சந்தியா, நீயாது கொஞ்சம் என்று கெஞ்ச…

“ஓகே கா சாரி, நீங்க எதுக்கு என்ன வர சொன்னிங்க, அதை சொல்லுங்க” என்று கேட்க… 

தேன்மொழி நேற்று சூர்யாவை பார்த்தது முதல் அவனை பற்றி அவர்கள் விசாரித்தது வரை அனைத்தையும் சொல்லி முடிக்க.. சந்தியா அப்படியே யோசனையில் ஆழ்ந்து விட்டாள். 

அவளை உலுக்கிய தேவி, “ஏய் சந்தியா, என்னடா ஆச்சு? அப்படியே ‌சிலையாகிட்ட? ஏதாவது சொல்லு மா” என்று கேட்க.. 

“இல்ல தேவிக்கா, நீங்க சொன்னத பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்” என்றவள். “எப்ப நீங்க ரெண்டு பேரும் அவரை நல்லவருன்னு சொன்னீங்களோ, அப்பவே அவர் மேல எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. இருந்தாலும் இது நிலா அக்காவோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது க்கா. சோ எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்” என்றாள் சந்தியா.

“அதுவும் சரிதான் சந்தியா. இது கல்யாண விஷயம் எதையும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய முடியாது. நீ நல்லா யோசி” என்று தேனு சொல்ல தேவியும் தலை ஆமாம் என்று தலை ஆட்டினாள்.

“சரி சந்தியா அப்ப நம்ம கிளம்பலாமா? என்ற தேவியை முறைத்த சந்தியா, “துரோகிகளா… நீங்க எல்லாம் ஒரு அக்காவா?” என்று பொறிய தேவிக்கு அதற்கான காரணம் புரிந்தும் புரியாதது போல் “என்ன சந்தியா ம்மா? என்ன ஆச்சு?” என்று கேட்க.

“ம்ம்ம்… என்ன ஆச்சா? நொன்னா ஆச்சு… இவ்வளவு தூரம் என்னை வர வச்சுட்டு, ஒரு ஐஸ்கிரீம் கூட கண்ணுல காட்டாம விரட்ட பாக்குறீங்களே இது நியாயமா? இது அடுக்குமா?” என்று அவள் கண்களை கசக்க.. தோழிகள் இருவரும் சிரித்து விட்டு. _ஒகே டா செல்லக்குட்டி. உனக்கு இல்லாததா, உனக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்க” என்று தேனு சொல்ல.. மூன்று முழு ஃபேமிலி பேக் ஐஸ் கிரீமை காலி செய்து விட்டு புறப்பட்டாள் சந்தியா.

அவள் போவதயே பார்த்து கொண்டு இருந்த தேவி, “சின்ன பொண்ணா இருந்தாலும் எவ்ளோ தெளிவா யோசிக்கிற பாரு தேனு. நிலா மேல இவளுக்கு அவ்ளோ பாசம். நீ வேணும்னா பாரு, அந்த சூர்யா பத்தி அக்குவேறு ஆணிவேரா விசாரிச்சுட்டு தான் இவ மறுவேலை பாப்பா” என்று தேவி சிரிக்க.

“உண்மை தான்டி, சில சமயம் நா நிலாவை பார்த்து பொறாமை பட்டிருக்கேன், சந்தியா அவளுக்கு தங்கச்சிய இருக்குறதை நெனச்சு… நமக்கு இப்டி ஒரு தங்கச்சி இல்லையோன்னு” என்று சொல்ல. தேவியும் “சேம் ஃபீலிங்” என்று சொல்ல இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

சந்தியாவை தேனுவும்,தேவியும் சந்தித்து இரண்டு நாட்கள் கழித்திருந்தது. 

அன்று தேன்மொழியின் ஃபோன் அடிக்க, தேனு ஃபோன் எடுத்தவள் “சொல்லு டா சந்தியா” என்றது தான்

சந்தியா படபடவென “தேனு அக்கா நிலா இன்னைக்கு ஒரு ஃபரண்ட் கல்யாணத்துக்கு வெளிய போற, வர லேட் ஆகும். சோ நீங்க ரெண்டு பேரும் அந்த சூர்யா, அரவிந்த் ரெண்டு பேரையும் கூட்டிட்டு சாயந்திரம் வீட்டுக்கு வாந்துடுங்க.. அப்பா ,அம்மா கிட்ட பேசிடாலாம்” என்று மூச்சு விடாமல் சொல்ல…

“நீ அம்மா ,அப்பா கிட்ட விஷயத்தை சொல்லிட்டுய சந்தியா” என்று தேனு கேட்ட. 

“இன்னும் இல்லக்கா.. இப்ப தான் சொல்லப் போறேன். அதெல்லாம் நா பாத்துகிறேன். நீங்க சாயந்திரம் கரெக்டா வந்துடுங்க” என்றவள் ஃபோனை கட் பண்ணி விட்டு.

அம்மா,அப்பாவிடம் சென்றவள்… தேனு,தேவியை சந்தித்தது முதல் இன்று சூர்யா,அரவிந்தை வீட்டிற்கு அழைத்தது வர சொல்லியது வரை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

கலை, “ஏய் என்னடி இது திடீர்ன்னு இப்டி சொல்ற?. தேனு, தேவி சொன்னாங்க சரி… இருந்தாலும் அந்த பையன் யாரு என்னனு எங்களுக்கு தெரிய வேணாமா? நீ பாட்டுக்கு வீட்டுக்கு வர சொல்லி இருக்க. உனக்கென்ன இதெல்லாம் வெளையாட்ட போச்ச?”.

“அம்மா நீ ஒன்னும் பயப்பட வேணாம். நா இந்த ரெண்டு நாள்ல, அந்த சூர்யா பத்தி நல்ல விசாரிச்சுட்டேன். நிலா அக்காக்கு பாத்து இருக்க, மாப்பிள்ளை பத்தி விசாரிக்கனுன்னு சொன்னதும் தான், என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாரும் எனக்கு ஹெல்ப் பண்ணாங்க தெரியுமா மா… நா அந்த சூர்யா வீடு, ஆபீஸ் எல்லா இடத்துலயும் அலசிட்டேன். அவர் ரொம்ப நல்லவர்.. நல்ல குடும்பம், அம்மா, அப்பாவோட இங்க சென்னையில் தான் இருக்காரு.

லாஸ்ட் வீக் ஒரு ஹாஸ்பிடல்ல ஹெல்த் செக்கப் பண்ணி இருக்காரு, என் ஃபரண்டோட அண்ணன் அங்க வேலை பாக்றாரு.. அவரை வச்சு ஹாஸ்பிடல்ல இருந்து ரிப்போர்ட் டை தூக்கிட்டேன். அந்த சூர்யாக்கு எந்த நோயும் இல்லை நல்லா ஹெல்திய தான் இருக்காரு. அதோட பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப நல்லவர். இதுவரை எந்த பொண்ணையும் ஏறெடுத்து கூட பாத்தது இல்லயாம். பாவம் இப்ப இந்த பிடாரி கிட்ட விழுந்துட்டாரு” என்று தான் சூர்யா பற்றி தெரிந்து வைத்து இருந்த அனைத்தையும் சொல்லி முடிக்க… கலையும், ராம்குமாரும் அவளை வாய்பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“ஹலோ நா இங்க கத்திட்டு இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் என் மூஞ்ஜையே பாத்துட்டு இருக்கீங்க?”

“அடியோ எப்டிடி? ரெண்டே நாள்ல எப்டிடி இவ்ளோ விஷயம் தெரிஞ்சுகிட்ட?” என்று கலை வியந்து கேட்க.

“பின்ன..!! என் நிலா அக்கா வாழ்க்கை ஆச்சே.! சும்மா விட முடியுமா என்ன?? எல்லா இடமும் சுத்து சுத்துன்னு சுத்தி அவரை பத்தி முழு ஜாதகத்தையும் எடுத்துட்டோம் இல்ல!! என்று இல்லாத காலரை தூக்கி விட. ராம்குமார் தன் மகள்களின் பாசத்தை எண்ணி கண்கலங்க. கலை அப்படியே சந்தியாவை கட்டிப்பிடித்துக் கொண்டவர், “உன்ன நினச்ச எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடி” என்று அவள் நெற்றியில் முத்தம் வைக்க.

“உங்க எருமை எல்லாம் இருக்கட்டும். இப்ப அந்த சூர்யா பத்தி என்ன சொல்றீங்க?” என்று கேட்க. 

ராம்குமார், கலையை பார்த்து தலையாட்ட.. ‘கலை இதுல நாங்க சொல்ல என்னடி இருக்கு நீ, தேனு, தேவி, சொல்லும் போது நாங்க மாட்டோம்னு சொல்லுவோமா என்ன?? என் நாலு பொண்ணுங்களும் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியா தான் இருக்கும்” என்று சொல்ல சந்தியா கலையை கட்டிப்பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து விட்டு, ‘ஓகே கலை எல்லாம் நல்லபடியா முடியும் வரை அந்த பிடாரி கிட்ட எதையும் ஒலாரி வைக்காத” என்று சொன்னவள். இன்னும் இங்கு இருந்தால் கலை என்று பேர் சொல்லி அழைத்ததற்கு அடி விழும் என்று அங்கிருந்து சிட்டாய் பறந்து விட… கலை சிரித்து கொண்டே ராம்குமாரை பார்த்தவர். “ஒரு அண்ணன், தம்பி இருந்து செய்ய வேண்டிய எல்லாத்தையும் இவ ஒருத்தியே தனியா செஞ்சு இருக்க பாருங்க” என்று பெருமையாக சொல்ல.. ராம்குமார், “பின்ன அவ என் பொண்ணு ஆச்சே.!! என்று சொல்லி கலையின் முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டார்.

மாலை நேரம் தேவி, தேனு, சூர்யா, அரவிந்த் நிலா வீட்டில் ஆஜராகி இருந்தனர்.

ராம்குமார் சூர்யாவிடம் அவனைப்பற்றி அனைத்து விவரங்களையும் கேட்க.?? அவனும் அத்தனைக்கும் பதில் சொல்லி கொண்டிருந்தான். அனைத்தையும் கேட்டு திருப்தி அடைந்த ராம்குமார் சூர்யாவிடம், “தம்பி உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.!! இத பத்தி நிலாகிட்டையும் ஒரு வார்த்தை கேட்ட பிறகு. நாம முறைப்படி எல்லாம் பேசி முடிவு பண்ணலாம்” என்று சொன்னவரை இடைமறித்த அரவிந்த்.

“இல்ல சார் அது சரிப்பட்டு வராது” என்றவனை கேள்வியோடு பார்த்தனர் ராம்குமார், கலை, சந்தியா மூவரும். தேனு, தேவிக்கு விஷயம் தெரியும் என்பதால் அமைதியா இருக்க… 

சந்தியா, “ஏன் அப்டி சொல்றீங்க?’ என்று கேட்க.. அதற்கு அரவிந்த், “நீங்க நிலா கிட்ட சொன்னீங்கன்னா, அவங்க என் கிட்ட பண்ண மாதிரி எதுவும் தகுடுதத்தம் பண்ணி, இந்த கல்யாணத்தை நடக்க விடாம பண்ணிடுவாங்க” என்று சொல்ல. 

ராம்குமார், “என்ன தம்பி சொல்றீங்க? நீங்க தானே நிலாவ பிடிக்கலைன்னு சொன்னீங்க..?? இப்ப வேற மாதிரி பேசுறீங்க? என்று புரியாமல் கேட்க.

“நான் அவங்களை பிடிக்கலைன்னு சொல்லல சார், அவங்க தான் என்ன அப்டி சொல்ல சொன்னாங்க” என்று சொல்ல.. அவர் கலையை திரும்பி பார்க்க.. கலை கண்களால். ‘நான் தான் அப்பவே சொன்னேனே’ என்று பார்க்க ராம்குமார் எதுவும் பேசாது அமைதியாக இருந்தார்.

 “எதுக்கு அவ அப்படி சொன்ன? உங்களுக்கு காரணம் தெரியுமா அரவிந்த் சார்?” என்று சந்தியா கேட்க. 

அரவிந்த் திரும்பி தேனு,தேவியை பார்க்க தோழிகள் இருவரும் தலையாட்ட… அரவிந்த் அன்று நிலா சொன்ன அனைத்து விஷயங்களையும் சொல்லி முடித்தான். அத்தனையும் கேட்டு கொண்டு இருந்த மூவரும் சொல்ல முடியாத வேதனை கொண்டனர்.

“இவ்ளோ நாள் இத்தனையையும் நம்ம கிட்ட சொல்லாம… அவ மட்டும் தனியா மனசுல வச்சு புழுங்கி கிட்டு இருந்திருக்காளே” என்று நிலாவை நினைத்து கலை கண்ணீர் விட. தேனு அவரை சமாதானம் செய்ய. ராம்குமார் முழுவதும் உடைந்திருக்க. சந்தியா தான் அக்காவின் நிலையை நினைத்து வருந்தி நிற்க… 

‘இப்படியே விட்ட சரி வராது’ என்று நினைத்த சூர்யா, “ப்ளீஸ் நடந்தது நடந்து போச்சு. இப்ப அதை நினச்சு வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது. இனி அடுத்து நடக்க வேண்டியது பத்தி யோசிப்போம்” என்று சொல்ல.

“சூர்யா சார் நான் கேக்குறேன்னு தப்ப நினைக்காதீங்க… இவ்ளோ தெரிஞ்ச பிறகும். நிலாவே தான் இன்னொருத்தனை காதலிக்கிறேன்னு சொல்லியிருந்தும், நீங்க அவளை கல்யாணம் பண்ண விரும்புறேன் சொல்றீங்க… இதுக்கு என்ன அர்த்தம்? நிலாவை உங்களுக்கு புடிச்சிருக்கிறது மட்டும் தான் காரணமா? இல்ல வேற எதுவும் இருக்க? என்று சந்தியா, சூர்யாவை துளைக்கும் பார்வை பார்த்தபடி கேட்ட. 

அவள் கேட்கும் கேள்வியின் உள்நோக்கம் புரிந்த சூர்யா. அன்று அரவிந்த் இதே கேள்வியை கேட்ட போது அவனுக்கு சொன்ன, அதே விளக்கத்தை சொல்ல.. கலை, ராம்குமார், சந்தியா மூவரின் மனமும் நிறைந்தது. அனைவரும் சூர்யாவிற்கு நிலாவை கல்யாணம் செய்ய சம்மதிக்க.. 

“எல்லாம் சரி தான். ஆனா, நிலாவோட பிடிவாதம் குணம் நமக்கெல்லாம் தெரியுமே.. அவகிட்ட இதை பத்தி யாரு பேசி சம்மதம் வாங்குறது?” என்று கலை சோகமாக கேட்க. 

தேனு, “ஏம்மா, அப்பா சொன்ன, அவ மறுபேச்சு பேசமாட்ட. பேசாம அவரை விட்டு சொல்ல சொல்லுவோம்” என்று சொல்லி விட்டு, “நீ என்ன சொல்ற சந்தியா?” என்று திரும்பி சந்தியாவை பார்க்க.. அவள் எதையோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள்.

“ஏய் சந்தியா… இங்க நா பேசிட்டு இருக்கேன். நீ என்ன அங்க சிந்திச்சுட்டு இருக்க?” என்று கேட்க. 

அதில் நிகழ்வுலகிற்கு வந்த சந்தியா. “என்னக்கா? என்ன சொன்னீங்க?” என்று கேட்க.

தேன்மொழி, “சரியா போச்சு என்று தன் தலையில் அடித்துக் கொண்டு தன் ஐடியாவை சொல்ல. 

“இல்லக்கா… இது ஒர்க் அவுட் ஆகாது” என்று சொல்ல. சூர்யா “ஏன் அப்டி சொல்ற சந்தியா?” என்று கேட்க…

“தேனு அக்கா சொல்றது உண்மை தான். அப்பா சொன்னா அக்கா கேப்ப தான். ஆனா,?” என்று சந்தியா நிறுத்த அனைவரும் அவளையே பார்க்க, 

“ஆமாங்க சூர்யா, அவ இப்ப அப்பாவுக்காக இதுக்கு ஒத்துக்கிட்டு. பின்னாடி இந்த கல்யாணம் தன்னாலே நிக்கிற மாதிரி ஏதாவது பிளான் பண்ண? நம்ம என்ன பண்றது?” என்று கேட்க. அனைவரும் “அதுவும் சரிதான்” என்று ஆமோதிக்க.. 

“அப்ப இதுக்கு. என்னதான் பண்றது சந்தியா?” என்று தேவி தலையை செறிய.

 “அதுக்கு ஒரே வழிதான் இருக்கு..??” என்று சொல்ல… “அது என்ன சந்தியா?” என்று ஆர்வமாக அரவிந்த் கேட்க.

“தேனு அக்கா சொன்னது தான். அப்பாவை வச்சு தான் அவளை சம்மதிக்க வைக்கணும்.”

“ஏன்டி நீதான அது சரிப்பட்டு வராதுனு சொன்ன..?? இப்ப இப்டி சொல்ற?” என்று தேவி குழம்ப. 

“ஆமா கா… நிலாகிட்ட அப்பா பேசும் போது, அந்த கல்யாணந்தை தடுத்து நிறுத்துறதுக்கு, அவளுக்கு டைம் இருக்கக்கூடாது” என்றவளை அனைவரும் புரியாமல் பார்க்க… 

“அப்ப அவகிட்ட எப்ப சொல்லனும்னு சொல்ற நீ?” என்று கலை கேட்க. சந்தியா மிக சாதாரணமாக அவளோட கல்யாணத்தன்னைக்கு” என்று சொல்ல அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

“ஏய்! என்னடி சொல்ற நீ? அது எப்படி முடியும். அவ கல்யாணம் அவளுக்கே தெரியாம எப்டிடி நடத்த முடியும். கல்யாண ஏற்பாடு செய்யும் போது அவளுக்கு தெரிஞ்சுடுமே? அப்றம் எப்டி?_ என்று கலை கேட்க. அனைவரும் அதையே தான் நினைத்தனர்.

“நம்ம கிராண்ட்ட கல்யாணம் பண்ண தானா அவளுக்கு தெரியும். பேசாம சிம்பிள்ல ரிஜிஸ்டர் மேரேஜ் ஏற்பாடு பண்ணிட்டு கடைசி நிமிஷத்துல அவகிட்ட சொல்வோம்” என்று சொல்ல அனைவரும் அவளை வியந்து பார்த்தனர்.

“அது எப்டி சந்துமா?” என்று ராம்குமார் கேட்க… 

“இல்லப்பா… சந்தியா சொல்றது தான் சரின்று என்க்கும் தோணுது. நமக்கு வேற வழி இல்ல. உங்களுக்கு தான் அவ பிடிவாதம் தெரியும் இல்ல. அப்றம் நம்ம வேற என்ன செய்ய முடியும்.. நமக்கு புடிச்சவங்களுக்கு புடிச்சதை செய்யற மாதிரி. அவங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம், அவங்களுக்கு நல்லதுன்னு தொரிஞ்ச, அவங்களை கட்டாயப்படுத்தி அதை ஏத்துக்க வைக்கவும் நமக்கு தெரியணும். அது தான் உண்மையான அன்பு” என்று தேன்மொழி சொல்ல.

அரவிந்த், “சரியா சொன்னீங்க… செம்ம” என்று கை தட்ட, தேனு அவனை தீயாய் முறைக்க… அரவிந்த் வாயை மூடிக்கொண்டு சூர்யாவை பார்க்க… அவன் “ஏன்டா, உனக்கு இது தேவைய?” என்று தலையில் அடித்துக்கொண்டான்.

தேன்மொழி சொன்னது ராம்குமாருக்கும் சரி என்று பட அவரும் எதுவும் பேசவில்லை.

அனைவருக்கும் அதுவே சரி என்று பட அனைவரும் அதற்கு சம்மதித்தனர்.. அதன் பின் அடுத்த செய்ய வேண்டியதை பேசி விட்டு அனைவரும் கிளம்ப.. சூர்யா கலை, ராம்குமார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன். நா போட்டு வரேன் ப்பா, வரேன் ம்மா” என்று சொல்ல சூர்யாவின் அந்த வார்த்தையில் இருவரும் உருகி விட.. சூர்யா, அரவிந்த் புறப்பட சந்தியா வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்க.

சூர்யா, சந்தியாவை பாசமாக பார்த்தவன், “உன்னை மாதிரி ஒரு தங்கச்சி கிடைக்க, நிலா ரொம்ப குடுத்து வச்சிருக்கனும் டா” என்று அவள் தலையை அன்பாக வருட… சந்தியா கண் கலங்கியவள், உடனே தன் இயல்புக்கு திரும்பி, “ஹலோ மாம்ஸ்… இப்டி ஐஸ் வச்சு என்னை ஏமாத்த பாக்குறீங்களா? அதெல்லாம் நடக்காது. உங்க கல்யாணத்தப்ப எனக்கு நல்லா பெரிய கிப்ட் கொடுக்கணும்” என்று சொல்லி சிரிக்க… 

சூர்யா, “கண்டிப்பா சந்தியா” என்றவன், தன் காரில் ஏறி சென்றுவிட, தேனுவும், தேவி கூட அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!