கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 21

 

இங்கு தேனு தேவியை நினைத்து தவித்துக் கொண்டிருக்க..

கீழே வந்த தேவி மற்றவர்கள் இருந்த அறைக்கு செல்ல. அங்கே அனைவரும் கன்னத்தில் கை வைத்து கவலையாக உட்கார்ந்து இருப்பதை பார்த்தவள். ” என்ன எல்லாரும் நா முழுச வருவேனா இல்லயான்னு யோசிட்டு இருக்கீங்க போல?’ என்றபடி அறைக்குள் நுழைய. 

 

“க்கா…! அக்கா…! உங்களுக்கு ஒன்னு இல்லயே? அந்த பிடாரி உங்களை ஒன்னும் பண்ணலயே?” என்று சந்தியா பதற,

 

 “தேவிமா என்னடா ஆச்சு.?” என்ற தேனு தேவியின் முகத்தை திருப்பி திருப்பி பார்த்தவள். “மூஞ்சியெல்லாம் நல்லா தான் இருக்கு, காயம் எதுவும் இல்லயே..?? என்ன தேவி வெளிய தெரிய கூடாதுன்னு உள்குத்த குத்தி விட்டாலா என்ன?? என்று கேட்க..

சந்தியா, “இருக்கும் கா…?? தேவி அக்கா நீங்க பாவம் அக்கா” என்று கண்ணீர் விட.

 

“அடியேய் நடிக்காதடி… எனக்கு பள்ளம் தோண்டுனது மட்டும் இல்லாம, அந்த பள்ளத்தில் என்னை தள்ளி விட்டுட்டு ஓடி வந்துட்டு… இப்ப வந்து கலர் கலர்ல படமா ஓட்டுற நீ… உனக்கு அக்காவா இருக்க பாவத்திற்கு உன்னால என்ன என்ன செய்ய முடியுமோ, அதெல்லாம் ஒழுங்க வஞ்சனையில்லாம செய்றடி. ஆனா, ஒன்னுடி… நீ எனக்கு எப்பவும் ஆப்பு மட்டும் தான் வைப்பன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, இதோ இருக்காங்களே இந்த மூனு பேரு… அடா… அடா… அடா!! என்ன ஒரு பாசம். ஒரு பச்சபுள்ளைய சிங்க குகைக்குள் தனியா போகுதே. அத போய் காப்பாத்துவோம்னு யாராச்சும்.? யாராச்சும்?? ஒருத்தர் வந்தீங்களா? துரோகிகளா?” என்று தேவி அனைவரையும் இடுப்பில் கை வைத்து கொண்டு முறைக்க.

 

“இல்ல தேவிம்மா, நாங்க ஹெல்ப் பண்ண தான் நெனச்சோம்.” 

 

“ஆனா… வந்த உங்களுக்கும் அடி விழும்னு வர்ல அப்டி தானா அண்ணா?” என்று தேவி சூய்யாவை முறைக்க.

 

“இல்லமா அது வந்து.” என்று சூர்யா இழுக்க… “அண்ணா ப்ளீஸ் நீங்க பேசாதீங்க.. அப்புறம் நான் டென்ஷன் ஆகிடுவேன்.”

 

“சரி டி… அத விடு மேல என்ன ஆச்சு? அடி பலமா? நாம ஹாஸ்பிடல் போலாமா? என்ற தேனுவை தீ பார்வை பார்த்தவள்.

 

“அடி போடி… ரொம்ப அக்கறை தான். அவ கிட்ட தனியா மாட்டி விடும் போது எங்க போச்சாம் இந்த அக்கறை, சர்க்கரை எல்லாம். போடி அங்குட்டு” என்று முறுக்கிக்கொள்ள.

 

“ஏய் ப்ளீஸ்டி. சாரி… தெரியாம பண்ணிட்டேன் சாரி” என்று தேனு தன் காதுகளை பிடித்துக்கொண்டு சொல்ல. எல்லோரும் அதையே செய்ய மென்மையாக சிரித்த தேவி. “சரி சரி மூஞ்சிய ஒழுங்கா வைங்க பாக்க சகிக்கல” என்றவள் அவர்கள் அருகில் சென்று உட்கார.

 

“சரி தேவி இப்ப சொல்லு என்ன ஆச்சுன்னு. ரொம்ப அடிச்சிட்டால?” 

 

“அவ அடிச்சிருந்த கூட பரவாயில்ல தேனு. ஆனா, அவ கேட்ட கேள்வி இருக்கே.? சத்தியமா நா ரொம்ப கலங்கி போயிட்டேன்டி.”

 

“ஏன்.. என்ன ஆச்சு தேவ” என்று அரவிந்த் கேட்க. 

 

தேவி நடந்த அனைத்தையும் கூற… கொஞ்ச நேரம் அந்த அறை முழுவதும் அமைதி நிலவியது.

 

பின் தேவியே பேச்சை தொடங்கினாள். “அவ அப்டி ஒரு வார்த்தை கேப்பான்னு, நா எதிர்பார்க்கல தேனு!! எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. நம்ம தான் அவ மனச சரியா புரிஞ்சிக்காம தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு ரொம்ப கவலையா இருக்கு” என்று அழ../ இதை கேட்ட மற்ற அனைவரும் கூட அதே மனநிலையில் தான் இருந்தனர். 

 

“ம்ம்ம்ம் கோவத்தை மட்டுமே காட்ட தெரிஞ்ச நிலாக்குள்ளையும் பூ மாதிரி மனசு இருந்து இருக்கு… அது புரியாம நம்ம தான் தப்பு பண்ணிட்டோம். ம்ம்ம் என்ன பண்றது. இப்ப அதைப்பற்றி யோசிச்சு ஒரு யூஸ்சும் இல்ல.”

 

“எல்லாம் என்னால தான்” என்று சந்தியா தன் பங்கிற்கு அழ. “அய்யோ ப்ளீஸ் சந்தியா தயவு செஞ்சு அழத… நீ அழுகிறதால இங்க எதுவும் மாறப் போறது இல்ல ப்ளீஸ். ஸ்டாப் இட்” என்று அரவிந்த் அதட்ட.. 

 

“ஆமா அரவிந்த் அண்ணா. இனி எதையும் மாத்தமுடியாது. ஆனா, இப்ப பிரச்சினை நடந்த இந்த கல்யாணம் இல்லை. இது வேறொரு பிரச்சனை” என்று தேனுவை பாக்க. தேனுக்கு அவள் சொல்ல வருவது என்ன என்று புரிய பாவமாக அரவிந்தை பார்த்தாள்.

 

சூர்யா, “எனக்கு புரியல தேவி? என்ன பிரச்சனை” என்று கேட்க. 

 

“அத நா சொல்றேன் சூர்யா. இதோ அழுதுட்டு இருக்காளே. இவளும் நானும் லவ் பண்றது தான் அந்த பிரச்சனை, சரியா தேவி” என்று தேனுவை அழுத்தமாக பார்த்துக் கொண்டே கேட்க. தேனு முகத்தில் வேதனை பரவி இருந்தது.

 

“ஆமா அண்ணா. அதே தான். என்னோட லவ் மேட்டர் நெரிஞ்சதுக்கே நிலா இப்டி வருத்தப்பட்டு பேசிட்டா… இன்னு இவங்க லவ் மேட்டர் தெரிஞ்சு அதுக்கு நாமெல்லாம் சப்போட்ர்டுன்னு தெரிஞ்ச? நிலா எப்டி ரியாக்ட் பண்ணுவனோ தெரியல. அதோட இவ நிலாக்கு சத்தியம் வேற பண்ணி குடுத்திருக்கா. நிலாவுக்கு அரவிந்த் அண்ணா மேல அப்டி ஒரு கொலைவெறி. என்னென்ன நடக்கப்போகுதோ நினைக்கவே பயமா” இருக்கு என்று புலம்ப.. தேனுவும் அதையே நினைத்து தான் அழுது கொண்டிருந்தாள்.

 

“ஏய் தேனு… என்னம்மா இது. நீ ஏன் இப்டி அழுகுற… இப்ப என்ன ஆயிடுச்சு.. எல்லாம் சரியாகிடும்.. நீ அழுகாத.”

 

“ஹலோ மாம்ஸ் என்ன எல்லாம் சரியாகிடும். நீங்க தான் எல்லாத்தையும் சரி பண்ணணும். நாங்க எல்லாம் சேர்ந்து உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்ச மாதிரி நீங்க தான் உங்க பொண்டாட்டி மனசை மாத்தி. இவங்க ரெண்டு பேர் லவ்வுக்கும் கிரீன் சிக்னல் வாங்கி கொடுக்கணும்.. அது உங்க கடமை” என்று சந்தியா சொல்ல. 

 

“நீ சொல்றது சரி தான் சந்தியா. தேனு, அரவிந்த் நீங்க எதை பாத்தியும் கவலைப்படாம இருங்க. நா நிலாவை கரெக்ட் பண்ணி உங்க லவ்வுக்கு அவளை சம்மதிக்க வைக்கிறேன்” என்று சொன்ன பிறகு தான் தேனு முகத்தில் சிரிப்பே வந்தது. அந்த சிரிப்பு அரவிந்தையும் தொற்றிக்கொண்டது. தேனுவிற்கு தெரியும் நிலா மனதில் சூர்யாவிற்கு ஒரு தனி இடம் இருக்கிறது என்று, அதனால் சூர்யா சொன்னால் நிலா தன் காதலுக்கு சம்மதிப்பாள் என்று அவள் மனதில் நம்பிக்கை வர. அனைவரும் அடுத்து நிலாவை எப்டி சமாளிப்பது என்று பிளான் போட தொடங்கினார். 

 

அந்த அறைக்கு வந்த தனலட்சுமி தேவி, தேனுவை தனியாக அழைத்து ஒரு அழகிய சந்தான நிற, மெல்லிய சரிகை போட்ட பட்டு புடவையை கொடுத்து நிலாவை 

சாந்திமுகூர்த்தத்திற்கு தயார் செய்ய சொன்னவர். அரவிந்தை விட்டு சூர்யாவை ரெடியாக சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க சென்றார்.

 

தேனுவும், தேவியும் கிண்டல் செய்தபடியே நிலாவை தேவதை போல் அலங்கரித்து முடித்து சூர்யாவின் அறையில் விட்டு செல்ல. சூர்யா பட்டுவேட்டி சட்டையில் தான் எப்டி இருக்கிறோம் என்று கண்ணாடியில் திரும்பி திரும்பி பார்க்க.

 

“அடி வாங்க போறதுக்கு, எதுக்கு டா இவ்வளவு பில்டப்பு” என்று அரவிந்த் அவன் காலை வாரா. “அடியேய் ரொம்ப ஆணவத்தில் ஆடாதடா… நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகும். நீயும் தேனு கையில அடி படுவா, சோ அடக்கி வாசி” என்று எச்சரிக்க. 

 

அரவிந்த், “ஆமா இவரு பெரிய ஆம்பள கண்ணகி சாபம் விட்டுட்டு போறாரு. போடா டேய். போடா… போய் அடி வாங்கு போ” என்றவனை முறைத்தபடி சூர்யா சென்று விட.

 

சூர்யா சென்றவுடன் அரவிந்த் இருக்கும் அறைக்கு வந்த சந்தியாவும்,தேவியும் “என்ன அரவிந்த் அண்ணா, மாமஸ் போயிட்டாரா? நம்ம போலாமா” என்க.

 

அரவிந்த் தலையில் அடித்துக்கொண்டவன், “ஏய் பிசாசுகல.?? இந்த பொழப்பு நமக்கு தேவையா? என்றவன் சந்தியாவை பார்த்து, “அடியேய் குட்டி பிசாசு நிலா உன் அக்காடி கொஞ்சம் யோசி? தேனுக்கு மட்டும் இது தெரிஞ்ச அவ்ளோவ தான்” என்று சொல்ல.. 

 

“அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம் அண்ணா… யூ டோன்ட் வொரி.” 

 

“ஏதோ பண்ணுங்க நான் இந்த ஆட்டத்துக்கு வர்ல என்றதும் தேவியும் சந்தியாவும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

 

சூர்யா அனைத்து கடவுளையும் வேண்டிக்கொண்டே தன் அறைக்குள் கால் எடுத்து வைத்தவன். அறை முழுவதும் பூக்கள் கொண்டு அழகாய் அலங்கரித்து இருப்பதை பார்த்துபடியே திரும்பியவன் தலையில் பறந்து வந்து அவன் நடு மண்டையில் விழுந்தது ஒரு ஆப்பிள். 

“ஆஆஆஆ” என்று தன் தலையை தடவிக் கொண்டவன், அரவிந்த் அப்பவே சொன்னான். எதுக்கும் ஹெல்மெட் போட்டு போடா, சேதாரம் கம்மியா இருக்கும்னு. நான் தான் கேக்கல” என்று தலையில் கை வைத்தபடி உள்ளே வர, நிலா அவன் அருகில் சென்றவள். அவன் தலையில் நங்கென் கொட்டி, தன் தளிர் கரங்களால் அவன் மார்பு, முதுகு என்று மாறி மாறி குத்த, சூர்யாவிற்கு அவளின் அந்த அடிகள் அனைத்தும் சிறுகுழந்தையின் தீண்டால் போல் அவ்வளவு இதமாக இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல், பட்டு புடவையில் மேக்கப் இல்லாமல் இயற்கை அழகில் ஜொலித்த தன்னவளை இமைக்காமல் பார்த்தவன். “ஏய் ராட்சசி எதுக்குடி இப்டி அடிக்கிற?” என்று அவள் அடிப்பதை தடுத்துக்கொண்டே (தடுப்பது போல் நடித்துக் கொண்டே) கேட்க.

 

‘நடிக்காதீங்க… நா எதுக்கு அடிக்கிறேன்னு உங்களுக்கு தெரியாது?” என்றவள் மீண்டும் அவன் தலையில் கொட்டி விட்டு அவன் காதை திருகி கொண்டே கேட்க.

 

“அதெப்டி தெரியாம இருக்கும்.?? அத உன் வாயல கேக்க தான்டி நான் வெட்டிங்” என்று நினைத்தவன். ” தெரியலடி. என்ன பண்ணேன்னு நீயே சொல்லிட்டு அடிடி. அப்ப தான் அடிவங்குறதுல ஒரு அர்த்தம் இருக்கும்” எனீறவனை முறைத்த நிலா, “எதுக்கு கல்யாணத்துல அப்டி பண்ண? என்று ஒருமையில் ஆரம்பித்து “பண்ணீங்க.?” என்று மரியாதையில் முடிக்க??. சூர்யா வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளை பார்த்து “நான் என்ன பண்ணேன்.??” நிலானி என்று அப்பாவியாக கேட்க. 

 

“இத பாரு… நானும் நல்ல பொண்ணா, அடக்க ஒடுக்கமா இருக்க முயற்சி பண்ணி ரொம்ப மரியாதையா பேசிட்டிருக்கேன். என்ன வெறுப்பேத்தினா? அப்றம் ஒரிஜினல் நிலாவை நீ பாக்க வேண்டி இருக்கும் சொல்லிட்டேன்” என்று தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அவள் கணவனை முறைக்க.

 

“அடியேய் நீ முதல்ல நா என்ன தப்பு பண்ணேன்னு சொல்லுடி. அப்றம் நா பதில் சொல்றேன்” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல.

 

மூக்கு சிவக்க அவனை முறைத்தவள். மீண்டும் அவனை அடிக்க ஆரம்பிக்க. அவள் கைகளை தன் இரு கைகளில் அடக்கிகொண்டவன். “இப்ப சொல்லுடி.?? அப்டி நா என்னாடி செஞ்சேன்?” என்று அவள் கண்களை நேராய் பார்த்து கேட்க.. அவனின் அந்த பார்வையில் அப்டி எதை கண்டாளோ. அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலையை திருப்பிக் கொண்டவள், கல்யாண மேடையில கையை வச்சிட்டு சும்மா இல்லாம என்னோட சடையை பிடிச்சி இழுத்தீங்க, சரி போகுதுன்னு விட்ட, இடுப்பை புடிச்சு கிள்றீங்க. எங்க இருந்து வந்துது அவ்ளோ தைரியம்” என்று கோபமாக கேட்க. 

 

“ம்ம்ம்ம் எல்லாம் சுத்தி ஆளுங்க இருந்தாங்க.? நீ அடிக்க மாட்டேன்றா தைரியம்” தான் என்று நினைத்தவன். “அடியேய் எனக்கு எல்லாம் ரைட்சும் இருக்குடி.. நீ என் பொண்டாட்டி கிள்றது மட்டும் இல்ல. என்னா வேணா பண்ணுவேன்” என்று திமிராக சொல்ல. கண்களை இடுக்கி அவனை முறைத்தவள். அடிங்கு..‌ என்ன வேணா பண்ணுவியா நீ?? இன்னொரு தடவை என் பக்கத்துல வந்து பாரு, அப்ப தெரியும் இந்த நிலா யாருன்னு?” என்று மிரட்டும் தொனியில் சொல்ல.

 

சூர்யா அவளை ஏற இறங்க பார்த்தவன். “அடியோ லூசு பொண்டாட்டி இப்ப என்ன நான் பத்து கிலோமீட்டர் தள்ளியாடி இருக்கேன். என் மூச்சு காத்து உன் மேல படுற அளவுக்கு கிட்டத்தட்ட உன்னை கட்டிபுடுச்சுட்டு இருக்கேன். பாருடி என்று குறும்பு கெஞ்சும் குரலில் சொல்ல.

 

அப்போது தான் நிலாவும் உணர்ந்தாள். அவள் சூர்யாவின் அணைப்பில் இருந்ததை, சட்டென்று அவனை விட்டு விலகி நின்றவள்.. கண்களை இறுக்கி மூடி. உதடுகளை பற்களால் கடித்துக் கொண்டு “அய்யோ” என்று தலையில் அடித்துக் கொள்ள. “ஹலோ நிலானி மேடம் என்ன?? பேச்சையே காணோம்?” என்று அவனும் வம்பிழுக்க.??

 

நிலா உள்ளுக்குள் தடுமாறினாலும், “நிலா கெத்த விடாத நிலா, அப்றம் இவரு உன்னை  

ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிடுவாரு” என்று நினைத்தவள். “ஹலோ… இப்ப என்னங்குறீங்க..?? கோவத்துல பேசும்போது கவனிக்கல, அதுக்கென்ன இப்போ சும்மா போங்க அங்கிட்டு” என்று நழுவ பார்க்க. 

 

” சமாளிபிகேஷன்னா…!” என்று சூர்யா அழகாய் சிரிக்க. அவன் சிரிப்பில் கடுப்பானவள். “டேய் உன்னை” என்று தலையணை எடுத்து அவனை அடிக்க. அவனும் சளைக்காமல் அவளுடன் சண்டையிட, நிலா சுற்றி பார்த்தவள். அருகில் இருந்த பூ ஜாடியில் இருந்த காகித பூக்கள், சின்ன சின்ன பொம்மை என்று அடித்தால் வலிக்காத பொருட்களை தேடி பிடித்து அவனை அடிக்க… (அம்மாடி நிலா பாத்தும்மா அவனுக்கு வலிக்க போகுது இன்னும் சின்னதா ஏதாவது இருந்த எடுத்து வீசு… அடச்சீ பக்கிகளா போங்க அங்கிட்டு)

 

“அடியேய்… நீ போலீஸ் ட்ரைனிங் எடுத்தியா என்ன?? குறிபார்த்து அடிக்கிற” என்று அவள் தூக்கி எறிந்த பொருட்களை லாவகமாக பிடித்த படி சூர்யா கேட்க. 

 

“ஹலோ என்ன யாருன்னு நினைச்சீங்க.. கலைவாணி பொண்ணு நானு. எங்க வீட்ல சமையல் கட்டுக்கும் என்னோட பெட் ரூமுக்கும் எவ்ளோ தூரம். ஆனா. எங்க அம்மா டம்ளரை அங்கிருந்து கரெக்டா ரூம்ல தூக்குற என் தலையில குறிபார்த்து கரெக்ட்டா அடிப்பாங்க தெரியுமா!! அவங்க பொண்ணு நானு. இதெல்லாம் எனக்கு ஜூஜூபி” என்று பெருமையாக சொல்ல. சூர்யா விழுந்து விழுந்து சிரித்தவன், “அடாடே என்னோட மாமியாருக்கு இப்படி ஒரு திறமை இருக்க..?? எனக்கு இவ்ளோ நாள் தெரியாம போச்சே. இது முன்னையே தெரிஞ்சிருந்த அப்பவே எஸ்கேப் ஆகி ஓடி இருப்பேனே. இவ்வளவு பெரிய உன்மையை மறைச்சு என்னை ஏமாத்தி உன்னை என் தலையில கட்டிட்டாங்களே… இது அநியாயம். ஒரு பச்ச புள்ளை வாழ்கையை கெடுத்திட்டீங்களே.” என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு அழுவது போல் நடிக்க. 

 

“டேய் உன்னை.?? என்றபடி சூர்யாவை நெருங்கிய நிலா. யாரு.?? யாரு.?? நாங்க உன்னை ஏமாத்திட்டோம்… பிராடு பிராடு… எனக்கே தெரியாம என்னை கல்யாணம் பண்ணவன் நீ. இதுல நா உன்னை ஏமாத்திட்டேன் இல்ல.. உலகத்திலேயே கல்யாணத்திற்கு ஐஞ்சு நிமிஷம் முந்தி தனக்கு கல்யாணம்னு தெரிஞ்சுகிட்ட ஒரே பொண்ணு நானாதான் இருப்பேன். பாவிகளா, ஒரு வார்த்தையாவது என்கிட்ட இந்த கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டிங்களா பிராடுகளா??” என்று அவன் மார்பில் அடிக்க. 

 

ஒரு நிமிடம் அவள் சொன்னதை கேட்டவன்..?? அவள் நிலையை நினைத்து வருந்தினாலும், அதை மறைத்தவன். அவளை தன் புறம் இழுத்தவன். “நீ சொல்றது சரி தான் நிலானி. ஒருவேள நா உன்கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்க ப்ரொபோஸ் பண்ணி இருந்தா? நீ என்ன பண்ணி இருப்பா? என்று கேட்க. நிலா அவன் பிடித்திருந்த தன் கைகளை இழுத்தவள். “ம்ம்ம் எதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன்” என்று உதட்டை சுழித்துக்கொண்டு சொல்ல. 

 

“அதனால தான்டி செல்லம், உன்கிட்ட சொல்லாம இந்த வேலையை பார்த்தோம்” என்று அவள் கன்னத்தை பிடித்து ஆட்டிய படி சொல்ல… “ஓஓஓ அப்ப என்னோட விருப்பம் பத்தி உங்களுக்கு கவலையில்ல அப்டி தானே?” என்று மீண்டும் முறுக்கிக்கொள்ள.

 

“அடியேய் லூசு பொண்டாட்டி, ஆயுசு முழுக்க உன் விருப்பத்தை நிறைவேத்தி வைக்க தான்டி இவ்ளோ அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்து கஷ்டப்பட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இனி உன்னோட ஒவ்வொரு ஆசையையும் நிறைவேத்த வேண்டியது என் பொறுப்புடி செல்லம்” என்று சொல்ல

 

அவன் சொன்ன வார்த்தைகளில் நிலா முகம் பூவாய் மலர. அதை அவனிடம் காட்டாமல் மறைத்தவள். திரும்பி, “ஓஓஓ இப்டி எல்லாம் சென்டிமென்ட்டா பேசினா, நா உங்களை சும்மா விட்டுடுவேன்னு நினைப்பாக்கும்… நெவர். என் கூட இருக்க எல்லாரையும் கூட்டு சேர்ந்து என்னை ஏமாத்துனதுக்கு

உன் பழிக்குப் பழி வாங்குறேனா, இல்லயான்னு பாரு” என்று கோபமாக சொல்ல நினைத்து, அது முடியாமல் போய் சிரிப்பு வர?? திரும்பி நின்று கொண்டாள். அவளின் இந்த குழந்தை தனத்தை ரசித்தவன். “யூ ஆர் மோஸ்ட் வெல்கம் டியர். ஐம் வெட்டிங்” என்று சொல்ல.

 

“ஏய்!!! நா ஒன்னும் காமெடிக்கு சொல்லல நிஜமா உன்னை என்ன பண்றேன்னு பாரு” என்ற அவன் முகத்திற்கு முன் விரல் நீட்டி சொல்ல. 

 

சூர்யா.. அழகாய் தலை சாய்த்து அவளை ஒரு முறை பார்த்தவன். அவள் அசந்த நேரம் அவள் இடுப்பை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தவன். அவள் கன்னத்தில் தன் முதல் முத்தத்தை பதிக்க. சட்டென்று கிடைத்த முத்தத்தில் விழி இரண்டும் விரிய அப்டியே திகைத்து அழகு சிலை போல் நின்ற தன்னவள் கோலத்தை ரசித்தவன். அவள் காதருகே குனிந்து, “ஏன்டி ஒரு கிஸ் கே நீ ஆஃப் ஆகிட்ட, இதுல நீ என்ன பழிவாங்க போற. அடிபோடி” என்று கிசுகிசுப்பாய் சொல்ல. தன்நிலை அடைந்தவள் “டேய் எவ்ளோ தைரியம் இருந்தா என்னை கிஸ் பண்ணு வா?” என்று அவனை அடிக்க துறத்த, “கிஸ் பண்ண லிப்ஸ் இருத்தா போதும்டி.. தைரியம் எதுக்கு” என்று அவளிடம் இருந்து தப்பி ஓடியவன்.. 

 

“என்னை அடிச்சு அடிச்சு நீ ரொம்ப டையர்டா இருக்க நிலானி. போய் பேசாம படுத்து தூங்கு” என்று ஓடிக்கொண்டே சொல்ல. நிலா முகம் சட்டென்று வாடிவிட்டது. அவள் அருகில் வந்தவன். “நீ என்ன நினைக்கிறேன்னு புரியுதுடா. எப்ப நீ என்னை விரும்பி, மனசார ஏத்துக்கிட்டு என் கூட வாழ சம்மதிக்கிறியோ… அப்ப தான் நம்ம ரெண்டு பேரும் புருஷன், பொண்டாட்டி ஓகேவா” என்றவன் அவள் கன்னத்தில் தான் இரண்டாவது முத்தத்தை பதிக்க. நிலா அவனை முறைத்தவள்.

 

“அப்ப இதுக்கு என்ன அர்த்தம்?’ என்று கேட்க. “இது என்னோட இஷ்டம். எனக்கு எப்ப எல்லாம் உன்னை கிஸ் பண்ண தோணுதோ அப்ப எல்லாம் நான் கிஸ் பண்ணுவேன்.. இவ்ளோ அழகான பொண்டாட்டி வச்சுட்டு ஒரு கிஸ் கூட பண்ணாம… அய்யோ!! என்னால முடியாதுப்பா” என்று குறும்பாக சொல்ல. “ச்சீ போடா” என்றவள். கட்டிலுக்கு சென்று ஓரமாக படுத்துக்கொள்ள. அவளை பார்த்து சிரித்தபடியே அவளுக்கு சற்று அருகில் படுத்தவன். தன்னவள் தனக்கு கிடைத்த மகிழ்ச்சியில் நிம்மதியாக உறங்கிப்போனான். நிலா அவனின் முத்தம் தந்த அதிர்ச்சியில் உறங்க முடியாமல் தவித்தவள். “கடவுளே என்ன இது? நா எதுக்கு பயப்படாத ஆளு. எந்த பிரச்சனையும் தைரியமா போஸ் பண்ணுவேன். ஆனா, சூர்யா பக்கத்தில் வரும்போது மட்டும் எனக்கு என்ன ஆகுதுன்னு தெரியல… மொத்தமா என் கண்ட்ரோல் போய்டுது. இவரை பத்தி தப்பாவும் யோசிக்க முடியல. இவரு எனக்கு முத்தம் கூடுத்தப்பா கூட நா பெருசா எதும் ரியாக்ட் பண்ணல. இதே வேற யாராவது இப்டி நடந்திருந்த இந்நேரம் அவங்க மூஞ்சி மொகரைய பேத்திருப்பேன். ஆனா இப்ப..?? அய்யோ நான் ஏன் இப்டி இருக்கேன்னு எனக்கே புரியலயே. ஒருவேள எனக்கும் இவரை புடிச்சிருக்கே..?? அய்யோ ஒன்னும் புரியலயே” என்று குழம்பியவள். அப்படியே தூங்கிவிட்டாள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!